Jump to content

சகானா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    117
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Female

சகானா's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

7

Reputation

  1. தமிழ்நாட்டு மாணவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமா Updated 2 minutes ago தமிழ்நாட்டு மாணவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக Montreal மாணவர்களால் நடத்தப்படும் 24 மணித்தியால உண்ணாவிரதப் போராட்ட நிகழ்விலிருந்து -முகநூல்- தமிழ் ஈழத்தை உருவாக்கிடு ! இலங்கை மீது போர் தோடு ! கோவையில் உண்ணா நோன்பு [படங்கள்] பிரிவு: தமிழ் நாடு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் இனவெறி கொலைகளுக்கு எதிராகவும் கோவை மாவட்ட ஆன்மீக சமய சமுதாய கலை இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைத்து ஆதினங்கள் -சான்றோர்கள் முன்னிலையில் ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு அறப்போரட்டதில் ஈடுபட்டுள்ளனர். நன்றி: http://dinaithal.com
  2. தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு , கடலூர் மாவட்டம் சார்பாக வருகின்ற 08.04.2013, திங்கள் கிழமை மாலை 5.00 அளவில் விருத்தாசலம் வானொலி திடலில் மாணவர்கள் பங்கேற்கும் ------ "மாபெரும் பொதுக்கூட்டம் " , -------- வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல படைப்பதற்கும் தான் , நமது ஈழ உறவுகளை காப்பாற்ற அணி திரள்வீர்! தமிழ் எங்கள் குருதி, ஈழம் அது உறுதி . தொடர்பிற்கு மாறன் : 99522 24112 பிரவின் : 95000 78349
  3. ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்ற நிலையை உலகம் எடுக்கும் வரை , அதற்கான அழுத்தங்களை திட்டமிட்டு போராடும் பணியை, குணத்தை மானமுள்ள தமிழன் தன் வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதை உலகிற்கு உறுதியாக தெரிவித்து வருகிறது தமிழக மாணவர்களின் இன மீட்சிக்கான போராட்டம் . அதை தொடர்ந்த உலகம் முழுவதும் நடக்கும் எழுச்சி போராட்டங்கள் , ஈழ நாட்டிற்கான முழு நம்பிக்கையை கொடுக்கிறது. தமிழனுக்கு என்று தனியே ஒரு நாடு இல்லை என்றால் அவனது மொழியை , அவனது மிச்ச சொச்ச கலாசாரத்தை அவனது பண்பாட்டை , அவனது அடையாளத்தை எக்காலத்திற்கும், பிற அரசாங்க நடைமுறைகளை கொண்ட அரசியளிர்க்குள் காக்க முடியாது. இங்கே தமிழன் என்று சொன்னது ஈழ தமிழனை மட்டும் அல்ல . ஒட்டு மொத்த உலக தமிழனையும்தான் ; உலகில் அப்படி ஒரு தனி நாடு உருவாக வாய்ப்பு உள்ள இடம் ஈழம் மட்டுமே . எனவே ஈழம் என்பது ஈழ தமிழனுக்கு மட்டும் அன்று அது ஒட்டு மொத்த தமிழனுக்கும் மொழி அடையாளமாக, கலாசார அடையாளமாக இருக்கும் . தமிழரின் தனி நாடு, தமிழ் மொழியை காப்பாற்றும் ; தமிழர் கலாசாரத்தை வாழ்வு முறைகளை உயிர்பித்து எப்போதும் நிற்கும். அதையே பிரதானமாக கொண்டு நிற்கும். தமிழ் இனம் , தமிழ் மொழி காக்க படவேண்டும் என்றால் வாய்ப்பு உள்ள தமிழ் ஈழம் நாடு தமிழருக்கு என்று நிச்சயம் வேண்டும். அதற்குண்டான பணிகளை நாம் நாளும் நம் சிந்தனையில் திட்டமிடுவோம் -முகநூல்-
  4. இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு! இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது . முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் . மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர் - தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்ள வேண்டும் . - இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள இலங்கை தூதரகத்தை உடனே மூட வேண்டும் - இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வர வேண்டும் . - தமிழக முதல்வர் கூறியது போல் இந்தியா , இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் . - ஐ.நா வின் மூலமாக இலங்கை மீது சர்வதேச இனப்படுகொலை விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பிற்கு இந்தியா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் . - இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு கொடுக்கும் ராணுவ , கடற்படை பயிற்சிகள் யாவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் . இலங்கை அரசுக்கு தொலை தொடர்பு ராடர் போன்ற சாதனங்களை கொடுத்து உதவுவதை நிறுத்த வேண்டும் . - பாகிஸ்தான் உடனாக விளையாட்டு உறவை முறித்து போல் இலங்கை உடனாட விளையாட்டு உறவையும் முறித்துக் கொண்டு , இந்தியாவில் எங்கும் இலங்கை ஆட்டக் கார்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது . இவ்வாறான கோரிக்கைகளை இன்று மாணவர்கள் இந்திய அரசுக்கு முன்வைத்தனர் ஒருங்கிணைப்பாளர்கள் கை கோர்க்கிறார்கள் ! ஐ.பி.எல்லில் இலங்கை வீரர்களை தமிழகத்தை விட்டு விரட்டிய மாணவ வீரர்கள் அவர்களை இந்தியாவை விட்டே விரட்ட களமிறங்கி விட்டாரகள்! பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - சேப்பாக்கம் -முகநூல்-
  5. ------------------------------ இலங்கையில் நடந்த இனபடுகொலையை கண்டித்தும் மற்றும் தமிழகத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாக செய்து வரும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஜப்பான் தமிழர்களின் சார்பாக இந்திய தூதரகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணா நிலை போராட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற மாபெரும் மனிதாபிமான குற்றங்களை கண்டித்து நமது வருத்தங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மனிதாபிமானம் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களை கேட்டுக்கொள்கின்றோம். -முகநூல்-
  6. திருச்சி சட்டகல்லூரி மாணவர்கள் தாக்கபட்டத்தை கண்டித்து சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பகவன் எதிரில் உள்ள தமிழ் நாடு தேசிய காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
  7. வாழ்த்துகள்....................!!! மாணவர் போராட்டம் தொடரட்டும்............. தமிழ்நாட்டுத் தமிழர் ஒன்று திரளட்டும்................ தரணியெங்கும் தமிழீழ விடுதலைக் குரல் ஒலிக்கட்டும்............. பகைவர் புறமுதுகோட.............. நம் தமிழர் தாயகம் " தமிழீழம் மலரட்டும்.......................!!! -முகநூல்-
  8. தோழர்களே!!! சொன்னால் புரிந்து கொள்வதற்கு சூடு, சொரணை உள்ளவனா சிங்களவன்?!!! தமிழரின் உயிர் குடித்து, ரத்தவெறி பிடித்து, கொலைகாரக்கூத்தாடுகின்றான்!!! அவனிடம் போய் நீதியை எதிர்பார்க்கலாமா?!!! அறிவு, பண்பு உள்ளவனிடம் அஹிம்சையை பற்றி பேசலாம்!!! பினந்தின்னிக்கழுகுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?!!! பேசிப்பார்க்காமலா ஆயுதம் ஏந்தினார் எம் தலைவர்?!!! ஆயுதம் எடுத்த பின்னரும் அமைதி வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினாரே?!!! "காட்டுமிராண்டி" காடயனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா?!!! சிங்களவனைப்பற்றி என்ன சொல்வது, எங்களவனே எமக்கு துரோகம் செய்யும்போது?!!! தோழர்களே!!! உங்களை நம்பியே எமது ஈழத்தை விட்டுச்சென்றார் எம் தலைவர்!!! ஒவ்வொரு மாணவனும் அவரின் மறுபிறப்பு!!! ஒவ்வொரு குரலும் புலிகளின் போர்க்குரல்!!! ஒவ்வொரு கண்ணிலும் ஈழத்தின் தாகம்!!! ஒவ்வொரு இதயத்திலும் ஈழத்தின் வேர்கள்!!! கனவு கண்டேன் ஈழத்தின் விடுதலைக்காய்!!! கனவு மெய்ப்படவேண்டும்!!! தமிழரின் தாகம்!!! தமிழீழ தாயகம்!!! -முகநூல்- ------------------------------------------------------------------------------------------------------- சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தீர்மானம் மாணவர்களிற்கு கிடைத்த வெற்றி ; அவர்களின் போராட்ட அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் துளி அளவு கூட சந்தேகம் இல்லை ஆனால் மாணவர்கள் நாங்கள் , எங்களை பாராட்ட வேண்டும் என்று ஆசை கொள்ளவில்லை . எங்கள் அனைவரின் நோக்கம் தமிழர்கள் இனி மேலும் கண்ணீர் விட்டு அழாதபடிக்கு ஒரு நிம்மதியான, சுதந்திரமான, உரிமையான, அவர்களிர்க்குண்டான தேசம்; அது ஈழம் ; அதை பெரும் வரை எங்கள் அறவழி பணி தொடரும் . இப்போதைய தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு பரிசீலித்து , தமிழக சட்ட மன்றத்தை மதித்து , இலங்கையுடனான தமது வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் . அந்த மாற்றம் வேண்டும் அதுவே எங்களிற்கான வெற்றியாக இருக்கும். எங்களிற்கு தேவை வெற்று பாராட்டல்ல. -முகநூல்-
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.