யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Siva Sinnapodi

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9
 • Joined

 • Last visited

Community Reputation

16 Neutral

About Siva Sinnapodi

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. Arunthavam Janojan 21 மணி நேரம் · நினைவழியா வடுக்கள் - சிவா சின்னப்பொடி நான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி யாழ்ப்பாணம் செல்லும் வரை எனக்கு யாழ்ப்பாணத் தமிழ் சாத்தியக்கூறுகள் பற்றிய எந்த அறிவும் கிடையாது. சாதியத்தின் தீவிரத்தன்மை, மற்றும் அதன் தாக்கங்கள் பற்றியும் தெரியாது. நான் அதுவரை வாழ்ந்த சமூகத்தில் வர்க்கம் சார்ந்த ஒடுக்கு முறைகளைப் பார்த்திருக்கிறேன் நேரடியாகவும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் தமிழர் வாழ்வியலில் சாதியம் பெரும் பங்கு வகிக்கின்றதென்பதை யாழ்ப்பாணம் வந்த பின்பே உணரத் தொடங்கியிருந்தேன். ஆனால் சாதியம் சமூகத்தில் எவ்வாறு வேறூன்றியிருக்கிறது அது இன்னும் தலைமுறைகளாக கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை யாழ்ப்பாணத்தில் அனுபவமாகவே உணர்ந்து கொண்டேன் இது தவிர விதை குழுமத்தால் மாதாந்தம் இடம்பெற்ற இலங்கை இன முரண்பாடு தொடர்பான கலந்துரையாடல்கள் பல விடயங்களை அறிந்துகொள்ளவும், விவாதிக்கவும் வாய்ப்பாக அமைந்தது. ‘நினைவழியா வடுக்கள்’ எனும் இப்புத்தகம் இவற்றுக்கெல்லாம் மேலாகவொரு புதிய தரிசனத்தையும் கூடவே மன உழைச்சலையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தையும் மிகச் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. சாதியத்தின் அடிப்படையில் நடந்த கொடூரங்களின் சாட்சிகளாய் சிவா சின்னப்பொடி அவர்கள் இருக்கிறார். சாதியப் பிரச்சினைகளுக்கு ஈழத்தில் இப்படியொரு வரலாறு இருந்திருக்குமென்பதை இதற்கு முன் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தின் முற்பகுதியில் நடந்த சம்பவங்கள் மற்றும் எழுபதுகளில் நடந்தவை தொடர்பில் படித்தும் கேட்டும் இருக்கிறேன். அதற்கு முன்பான காலங்கள் குறித்த மிக முக்கிய பதிவுசெய்தலாக ‘நினைவழியா வடுக்கள்’ இருக்கிறது. நாம் காலம் காலமாக பேசிவரும் பெருமைமிகு தமிழர் வாழ்வியலும் வரலாறுகளும் வெட்கி நிற்கும் மிக மோசமான வரலாற்றுப் பக்கங்களும் நமக்குள்ளே நம் அண்மிய காலத்தில்தான் நடந்ததேறியிருக்கின்றது. அதன் வேறொரு பரிணாமமாக இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய எட்டு வயது ஞாபங்களை நினைவுறுத்தும் போது முதல்நாள் பள்ளிக்கூடம் போனது அந்த வகுப்பறை கொஞ்சம் இருளாக இருந்ததால் பயந்து அழுதது மாதிரி மிகச் சொற்ப சம்பவங்களே நினைவிருக்கின்றன. ஆனால் வெறும் எட்டு வயதில் ஒரு சிறுவனுக்கு நடந்த விடயங்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இத்தனை தெளிவாய் நினைவிருக்கிறதென்பது அந்த வயதில் இந்த சமூகம் அந்தச்சிறுவனுக்கு எவ்வளவு ஆறா வடுக்களை அளித்திருக்கின்றதென்பதை ஊகிக்க முடிகின்றது. அதிலிருந்து விடுபட்டு இன்று ஓரளவுக்கேனும் சமுக விடுதலை பெற்றதன் பின்னால் இருந்த வலிகளையும் அதற்காக அயராத போராட்டங்களையும் அவரது ஞாபக அடுக்களிலிருந்து விவரிக்கின்ற போது பெரும் ஆற்றமை எழுகிறது. அதற்காக அவரின் தந்தையின் போராட்டமும், வலிகளும், முனைப்புக்களுடனும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வீரியத்துடன் அசராது நின்றதெல்லாம் அசாத்தியமானதொன்று. மிகப் பிரதானமாக ஆதிக்க சாதிகளின் வெவ்வேறு வடிவங்களிலான ஒடுக்கு முறைகளையும், அவற்றுக்கெதிரான போராட்டங்களையும் சொல்லிச் சென்றாலும் அக்காலத்தில் இருந்த போலித் தமிழ்த் தலைவர்களின் உண்மை முகங்களையும் அவர்களின் போலி சமத்துவச் செயற்பாடுகள் பற்றியும் சொல்கிறார் மற்றும் ஆதிக்க சாதிகள் எவ்வாறெல்லாம் இந்த ஆண்டான் அடிமை முறையை தக்க வைக்கவும், தொடர்ந்தும் சாதி அடிப்படையில் ஒடுக்கப்படுகின்ற மக்களை சிந்திக்கவிடாமல், இவர்களின் அடக்குமுறை சரியானதே என எண்ணுமளவிற்கு வைத்திருக்க, அவர்களின் மூலதன உருவாக்கத்தை தடுக்க இன்னும் என்னவெல்லாமோ செய்து தமது மேட்டுக்குடி மனோபாவத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினார்கள் என்பதெல்லாம் வாசிக்கும் போது வியப்பேதுமெழவில்லை ஏனென்றால் அதன் வேறொரு வடிவ ஒடுக்கு முறையையும், மேட்டுக்குடி மனோபாவத்தையும் இப்போதும் பார்க்கிறோம் தானே. மனிதத் தன்மையற்ற மிக மோசமான இந்தச் சமூகங்களின் மத்தியில் தான் கந்த முருகேசனார், பசுபதி ஆசிரியர், மேரி ரீச்சர், நாகர்கோயில் கிராம மக்களென சக மனிதர்களைப் புரிந்து கொன்கின்ற சாதரண மனிதர்களும் இருந்தார்கள். தமிழ் மக்களிடையிலான இந்தப் பிரிவினைகளை வைத்து அதில் லாபமடைந்த இலங்கை அரசின் செயற்பாடுகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும் பௌத்த பேரினவாதச் சிந்தனையின் தோற்றம் பற்றியும் அங்கங்கு சொல்லிச் செல்கிறார். தோள்சீலைப் போராட்டம் எல்லாம் யாழ்ப்பாணத்தில் நடந்ததென்பது எனக்கு புதிய தகவலாயிருந்தது. இந்தச் சம்பவங்களின் தொகுப்பில் ஒரு விடயம் இன்னமும் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. பள்ளிக்கூடத்திற்கு புது சட்டை அணிந்து வந்த போது அதைப் பொறுக்காது வாழை மடலால் அடித்து ஆடையை கறை படச் செய்வதெல்லாம் எவ்வளவு வக்கிரம் அதுவும் ஒரு ஆசிரியர் அதைச் செய்வதெல்லாம் அபத்தத்தின் உச்சம் அல்லவா. இந்த தடித்தனம்தான் தங்களை ஆண்ட சாதிகளாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நம் காலத்தின் முன்னால் நடந்த இந்த மோசமான அடக்கு முறை பற்றியும் எம் வலாற்றில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதாகவிருக்கிறது. அந்த வரலாற்றின் மிகச் சிறியதொரு பகுதியை பதிவு செய்த வகையில் சிவா சின்னப்பொடி அவர்களின் ‘நினைவழியா வடுக்கள்’ முக்கியம் பெறுகிறது. இன்றைய புத்தக தினத்தில் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
 2. நன்றி கிருபன் விரைவில் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடுசெய்கிறேன் நன்றி ஈழப்பிரியன் நன்றி ராஜவன்னியன்
 3. Tholar 2 ஜனவரி · •சிவா சின்னபொடியின் “ நினைவழியா வடுக்கள்” கலை இலக்கியத்தின் பணி சதா சர்வகாலமும் அம்பலப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருப்பதுதான்.- தோழர் மாவோ சேதுங் சிவா சின்னபொடி அவர்கள் ஏழதிய “ நினைவழியா வடுக்கள்” நூல் 1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அம்பலப்படுத்தியுள்ளது. அவர் அதனை தன் சொந்த அனுபவங்களினூடாக விபரித்துள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள். சிவா சின்னபொடி அவர்களை நான் 1985ல் தஞ்சாவூரில் சந்தித்தேன். அப்போது அவர் புளட் இயக்கத்தில் இருந்தார். ஆனாலும் அவர் புரட்சிகர அமைப்புகளுடன் உறவுகளை கொண்டிருந்தார். என்;னை கேரளாவுக்கு அழைத்தச் சென்று அங்குள்ள நக்சலைட்டுகளுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்த சிவா சின்னபொடி அவர்களின் பங்களிப்பை என்னால் மற்க்க முடியாது. நானும் சிவா சின்னபொடி அவர்கள் நூலில் குறிப்பிட்ட வடமராட்சிப் பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதால் அவர் எழுதிய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அறிந்திருக்கிறேன். ஆனால் அக் கொடுமைகளை சிவா சின்னப்பொடி அனுபவித்திருக்கிறார் என்பதை அவரது இந்த நூலின் மூலமே அறிகிறேன். 1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் டானியல் போன்றவர்களினால் எற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 1980 களுக்கு பின்னர் இளைஞர்களின் ஆயதப் போராட்டங்களின் போதும் அதன் பின்னரும் சாதீய மற்றும் தீண்டாமை கொடுமைகள் எந்தளவில் உள்ளன என்பது பற்றி போதிய பதிவுகள் இல்லை. எனவே சிவா சின்னப்பொடி போன்றவர்கள் அவை குறித்து எழுத வேண்டும் என்பது என் போன்றவர்களின் விரும்பமும் வேண்டுகோளும் ஆகும். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் பெற்றிருக்கும் உரிமைகள் யாவும் போராடிப் பெற்றவை என்பதையும் இனியும் போராட வேண்டும் என்பதையும் இந் நூலில் சிவா சின்னபொடி அவர்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
 4. New Democratic People's Front 6 பிப்ரவரி, பிற்பகல் 9:52 · 2019 தை மாதம் தமிழகத்தில் நடந்த நூல் கண்காட்சியில் "நினைவழியா வடுக்கள்" நூல், விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, முழுப்பிரதியும் விற்றுவிட்ட நிலையில், இரண்டாவது பதிப்பு வெளிவர இருக்கின்றதை அறிய முடிகின்றது. இந்த நூல் குறித்து இரண்டு வருடத்துக்கு முன்பு டென்மார்க்கில் எமது தோழர் ஒருவரின் மரணச்சடங்குக்கு சென்று திரும்பிய போது, கடந்தகால சாதிய ஒடுக்குமுறையின் வரலாறு குறித்து சிவா சின்னப்பொடியுடன் விமான நிலையத்தில் நீண்ட நேரம் உரையாட முடிந்தது. நூலாக கொண்டு வருமாறு வேண்டினேன். நூல் வெளிவந்தவுடன், எனக்கு அதைக் கொண்டு வந்து தந்திருந்தார். நூலை வாசிக்க தொடங்கியவுடன், வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு, நூல் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலுடன் இணைந்;துவிடுகின்றது. "தமிழர்கள்" என்ற கூறிக் கொண்டவர்கள், தங்கள் தந்தையுடன் - தாயுடன் இணைந்து எமது இளமைக் காலத்தில் பிற மனிதர்களுக்கு இழைத்த கொடூரங்களையும், கொடுமைகளையும் இந்த நூல் பதிவாக்கி இருக்கின்றது. மறுக்க முடியாத ஆதாரங்களை, சாதிய சமூக அடிப்படையில் முன்வைத்து இருப்பதுடன், மனித மனச்சாட்சிக்கு முன் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. இன்றைய சாதிய சமூகம், அன்றைய சாதியத்தின் நீட்சியாக இருப்பதை புரிந்துகொள்ள, இந்த நூல் முக்கியமான வரலாற்று நூலாகும். நீ யார் எனின், நீயொரு மனிதன், ஆனால் மனித வரலாறு என்பது, மனித வரலாறாக இல்லை. மாறாக மனிதனை மனிதன் ஒடுக்கும் வரலாறாக இருக்கின்றது. இந்த வகையில் சிவா சின்னப்பொடியின் "நினைவழியா வடுக்கள்" நூல், தமிழ் சமூகத்தினால் வெறுக்கப்படும் என்பது உண்மை. தமிழ் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையை பற்றிப் பேசும், நூலாக இருப்பதே இதற்கான காரணமாகும். இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவை. இதன் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்க யாராலும் முடியாது.
 5. நன்றி ஜஸ்டின் நன்றி சுவி எனது நூலுக்கு வந்தவிமர்சனங்கள் தங்களின் நூலை வாசித்தேன். ஏற்கெனவே வாசித்துள்ள 'அனார்யா'இ 'உச்சாலியா' முதலிய - மராத்திய தலித்துகளின் தன்வரலாற்று நூல்களைப்போல்இ சிறப்பான நூலாக உள்ளது. ஈழத்தின் வடபிரதேசத்தில் முன்னர் நடைபெற்ற சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிஇ அவ்வப்போது வாசித்தும் செவிவழி கேள்விப்பட்டும் அறிந்துள்ளேன். உங்கள் அனுபவங்களூடாக அக்காலச் சூழல் பதியப்பட்டிருப்பதில் புதியனவற்றை அறிய முடிந்தது. அவற்றுக்கு வரலாற்று ஆவணத்தன்மையையும் கொடுத்துள்ளீர்கள். எவ்வளவு கொடூரங்களைத் தமிழர்களே தம்மில் ஒருபிரிவினருக்குச் செய்துள்ளார்கள் என்பதுஇ வெட்கத்தையும் மனவலியையும் ஏற்படுத்துகின்றது! கதிர்காமர் ஆசிரியரின் சின்னத்தனங்கள்இ சிறுவனாக நீங்கள் கையில் பிழாவில் பாலை வைத்துக்கொண்டு பாண்துண்டைப் பெறப் பட்ட சிரமம்இ சின்னாச்சி என்ற கன்னிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அவமானமும் அதனால் ஏற்பட்ட தற்கொலையும்இ குடிசையுடன் மூவர் எரித்துக்கொல்லப்பட்டதுஇ நெல்லியடிச் சந்தியில் எம். சி. சுப்பிரமணியம் குழுவினருக்குச் செய்யப்பட்ட அவமரியாதைஇ இணுவில் சாப்பாட்டுக் கடையில் உங்களுக்கும் ஐயாவுக்கும் நடைபெற்ற கொடுமைகள்இ விறகுமலையைக் கொத்தி அடுக்கும் குரூரத் தண்டனை போன்றவை எல்லாம்இ மனத்தில் பதிந்தவை. அதுபோல் பொன் கந்தையாஇ கந்தமுருகேசனார்இ மேரி ரீச்சர்இ நாகர்கோவில் சம்மாட்டியார் போன்ற ஏனைய சமூகத்து நல்ல மனிதரின் ஆதரவான செயல்கள் பதியப்பட்டுள்ளமையும் முக்கியமானது! சாதிய மாற்றங்கள்இ சாதிக்குள் சாதி பார்த்தல் பற்றிய குறிப்புகளும் (கே. வி. நடராஜன் 'ஒன்றுக்குள் ஓராயிரம்' சிறுகதையை எழுதி 'மல்லிகை'க்குக் கொடுத்தபோதுஇ டொமினிக் ஜீவா அதனை வெளியிட மறுத்துவிட்டாராம்!) முக்கியமானவை. இணுவில் சம்பவத்தில் மகனுக்கு முன்னால் தந்தை அடிவாங்கி அவமானமுறுவதன் வலிபற்றிய சித்திரிப்பு கவனத்துக்குரியது. இத்தாலிய நவயதார்த்தவாத திரைப்பட நெறியாளரான 'விற்றோறியோ டி சீக்கா'வின்இ 'பைசிக்கிள் தீவ்ஸ்' என்னும் புகழ்பெற்ற திரைப்படத்திலும்இ இவ்வாறான நிகழ்வும் துயரும் சித்திரிக்கப்படுகின்றன. தனது சைக்கிள் களவுபோனபின் – அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் – இன்னொருவரின் சைக்கிளைத் திருடும்போது பிடிபடும் ஒருவர்இ மகனான சிறுவனின் முன்னாலேயே கும்பலால் தாக்கப்படுகிறார். அவர்படும் வேதனையும்இ மகனின் அழுகையும் மனத்தை உருக்குவன! நூலின் அட்டைப்படங்களை வரைந்த வீரக்கொடிகே வசந்த பெரேராவைப் பாராட்டவேண்டும்; அட்டையைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். பொதுவில் புத்தகம் நன்றாக வந்துள்ளது. மேலும்இ தங்களின் தந்தையார் வாசகர் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். நீங்கள் (நாங்களும்) மரியாதை கொடுக்கும் அவரின் ஒளிப்படம் கட்டாயம் இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டிருக்கும்; ஆயினும்இ 2000 இல் இறக்கும் அவர்இ பிந்திய காலத்தில் இடம்பெறும் ஒளிப்படம் ஒன்றாவது கிடைக்கவில்லையா! இரண்டாவது பதிப்பில்இ தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். சாதி வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் இடதுசாரிகளின் - குறிப்பாக சீனசார்பு கொம்யூனிஸ்டுகளின் பாத்திரம் முக்கியமானதே; ஆயினும்இ அதே காலகட்டங்களில் பொதுவான (ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் உட்பட) தமிழ் மக்கள் இனவன்முறைகளினாலும்இ மொழிப் பாரபட்சங்களினாலும்இ சிங்களக் குடியேற்றங்களினாலும் பாதிப்புற்றதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஸ்டாலினின் வரையறைகளில் ஒன்றான 'பொதுப் பொருளாதாரம்' ஈழத் தமிழருக்கு இல்லையெனஇ 'தேசிய இனம்' என்ற அடையாளத்தையே நீண்டகாலமாக மறுத்தார்கள். அதேபோலஇ பிழையான சமப்படுத்தல்களையும் பிரச்சாரம் செய்தனர். உ 10 ம் வெளிமடை நா. உ.இ கே. எம். பி. ராஜரத்தினாஇ 'தமிழரின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன்' என்று கூறியதைப் போல்இ அமிர்தலிங்கமும் சிங்களவரை வைத்துப் பேசியதாகப் பொய்யாய்ச் சமப்படுத்தினர். இரண்டு மாதங்களாக வடக்குக் கிழக்கில் அரசாங்க நிர்வாக அலுவல்களை முடக்கிய – வெகுஜனங்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற – சத்தியாக்கிரகப் போராட்டத்தை வெறுமனேஇ 'சப்பாணிப் போராட்டம்' என்று நக்கலடித்தார்கள்! இவைபோன்றவற்றை (விரிவாக இல்லாவிடினும்) கோடிகாட்டியாவது உங்கள் 'என்னுரை'யில் குறிப்பிட்டிருக்கவேண்டும் எனக் கருதுகிறேன்! இல்லையாயின்இ நமது கொம்யூனிஸ்டுகள் பற்றிஇ 'ஒருபக்க' - ஒளிவட்டத் தோற்றமே வாசகரின் மனதில் பதியும்! எவ்வாறாயினும் உங்களின் எழுத்துப் பணி முக்கியமானது; உங்கள் வெளிப்பாட்டு மொழிநடை தெளிவுடனும் எளிமையுடனும் உள்ளது. வாழ்த்துகள்! அ. யேசுராசா குருநகர்.
 6. 2019சென்னை புத்தகக் கண்காட்சியில் விடியல் பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு நேற்று பாரிசில் இடம்பெற்றது.நீண்டகால தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் முகுந்தன்,அரசியல் விமர்சகரும் பொதுவுடைமை செயற்பாட்டாளருமாகிய ரயாகரன்,நூலாசிரியரின் மகனும் அரசியல் தத்துவத்துறையை சோர்ந்தவருமான வசந்த ரூபன்,எழுத்தாளரும் இடதுசாரி செயற்பாட்டாளருமாகிய வி.ரி. இளங்கோவன் ஆகியோர் இந்த நூல் சார்ந்தும் ,இந்த நூலில் குறிப்பிடப்படும் சமூகப் பிரச்சனை சார்ந்தும் தமது மதிப்புரைகளைத் தெரித்தனர். வரலாற்றுப் பதிவுகளை நேர்மையுடனும் துணிச்சலுடனும் பதிவு செய்துள்ள இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிசம் என்று பாராட்டிய முகுந்தன் இந்த நூலின் 5 ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் கந்த முருகேசனாருடைய கல்வி முறையை நமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இலங்கைத் தமிழர்கள் எழுதியுள்ள நூல்களில் "நினைவாயா வடுக்கள்" என்ற சிவா சின்னப்பொடியின் நூல் தனித்துவமிக்கது. ஈழத்துச் சாதிய அனுபவத்தைப் பதிவாக்கியுள்ள முதல் நூல் என்று குறிப்பிட்ட ரயாகரன் தமிழ்ச் சமூகத்தின் அக ஒடுக்குமுறைகளை வரலாற்றுரீதியான அதன் பன்முகத்தன்மையைப் பற்றிப் பேசும், நூலாக இருக்கிறது என்றும் “இந்த நூல் சாதிய ஒடுக்குமுறையையொட்டிய பல புதிய தரவுகளைக் கொண்டு இருப்பதுடன், அவை வரலாற்றுக்கு புதியவை”. என்றும் கூறினார் இதன் உண்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க யாராலும் முடியாது. என்று குறிப்பிட்ட ரயாகரன் “இலங்கை வாழும் தமிழ் மக்களும், இலங்கை வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என்றும் . சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டமின்றி, இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் போராட்டமும் சரி, இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வெற்றி பெற முடியாது என்பதையும் வலியுறுத்தினார். 1981 ல் தனது தந்தை உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியாத நிலையில் வாழ்ந்த தான்,1983 ல் அவரது குரல் போராளிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழத்தின் குரல் வானொலியில் ஒலித்த போது, தன்னுடைய நண்பர்கள் தன்னை போராளியின் மகன் என்று தோளில் தூக்கிக் கொண்டாடியதை நினைவு கூர்ந்த நூலாசிரியரின் மகன் வசந்த ரூபன்1980 களின் நடுப்பகுதியில் தஞ்சாவூரிலிருந்த தனது தந்தையின் வீரியத்தையும் போர் குணத்தையும் ஆளுமையையும் அவர் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து வந்தபின்னர் பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.தனக்கு ஊர் மற்றும் சாதிய அடையாளங்கள் கிடையாதென்றும் தமிழ்த் தேசிய அடையாளம் என்ற ஒன்றுதான் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழீழத்தில் இப்போது சாதிக்கொரு கோவில்,சாதிக்கொரு திருமண மண்டபம், சாதிக்கொரு மயானம் கூட கட்டப்படும் நிலையை விரி.இளங்கோவன் எடுத்துரைத்தார். இறுதியாக ஏற்புரை வழங்கிய சிவா சின்னப்பொடி அவர்கள் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்ததுடன் தன்னுடைய மகனின் குற்றச்சாட்டைத் தான் ஏற்பதாகவும் புலத்தில் நேர்மையற்ற போலிகளை வெல்லமுடியாமல் போனது தனது தோல்வி என்பதையும் ஒத்துக்கொண்டார். இந்த நிகழ்வை முன்னாள் போராளி அமலன் தொகுத்து வழங்கினார். https://www.facebook.com/pg/நினைவழியா-வடுக்கள்-2122148908082914/photos/?ref=page_internal