-
Posts
4150 -
Joined
-
Last visited
-
Days Won
9
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by tulpen
-
சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் !
tulpen replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
@Nathamuni எமக்கு இழக்க ஒன்றுமில்லை என்று எப்படிக் கூறுவீர்கள்? கெளரவமான அரசியல் தீர்வும், ஒரே நிலப்பிரதேசத்தில் ஒன்றாக வாழப்போகும் சிங்கள, முல்லீம் மக்களுடனான இன நல்லுறவும் சிதைந்தால் அது முள்ளிவாய்காலை விட பாரிய அழிவை எமது தலைமுறைக்கு தொடர்சசியாக கொடுக்கும் அல்லவா? அதைத்தடுக்க விருப்பு வெறுப்புகள் எமோஷன்ஸ ஆகியவற்றை கடந்து ஒரு தநிரோபாயதமை எமது தரப்பு கைக்கொள்ள வேண்டுமல்லவா? -
சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் !
tulpen replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
கோஷான், நீங்கள் யாழ்களத்தின் பொறுமையின் சிகரம். தெளிவாக புரியும்படி Kinder Garten பிள்ளைகளுக்கு படிப்பிப்பது போல் விளங்கப்படுத்த பிறகும், “அ” என்பது தமிழ் எழுத்தா ஆங்கில எழுத்தா என்பது போன்ற கேள்விகளுக்கு கூட பொறுமையுடன் பதிலளிக்கும் உங்கள் கற்பித்தற் திறமையை ரசிக்கிறேன். ரசிக்க மட்டும் தான் என்னால் முடியும். அதைக் கற்றுக்கொள்ளும் பொறுமையோ திறமையோ எனக்கில்லை. Schade -
உங்கள் நினைப்பு தான் அப்படி . தமிழ் தேசியம் என்பது, ஒரு அமைப்பு, கட்சி, இயக்கம் சார்நத ஒற்றைப்போக்காக மாற்றி பரந்து பட்ட தமிழ்மக்களை புறந்தள்ளிவதே உங்களைப் போன்றவர்கள் தான். இலங்கைத் தீவில் பல் வேறு பிரதேசங்களிலும் வாழும் பல்வேறு திறமையுடைய எமது தமிழ் இளைய தலைமுறையினர் பரவலாக சகோதர இனத்துக்கு நிகராக தமது சாதனைகளை நிகழ்ததுவதும் தமிழ் தேசியத்தை அங்கு நிலைநிறுத்தும் செயல் தான். அதை சகித்து கொள்ள முடியாமல் வாழ்ததுவதற்கு பதிலாக, ஒரு பெண் என்பதால் பண்பற்ற கொச்சையான பாலியல் வசவு சொற்களை பாவித்ததும் இவ்வாறான தீவிர ஒற்றைத் தேசியம் பேசுபவரே. அது தான், அப்படியானவர்களிடம் இருந்து தப்பிவிட்டோம் என்று எதிர்மறையில் சம்பந்தப்பட்டவருக்கு உறைக்கும்படி பாவிக்கப்பட்டதே அந்த வசனம் என்பது, தமிழ் மொழி அறிவு உடையவர்களுக்கு புரியும். உங்களுக்கு அது புரியாததே இந்த விவாதம் இவ்வளவு நீண்டதற்கான காரணம். கருத்தாடலுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்ததுகள்.
-
என்னை குவாட் செய்து என்னை முதல் கேள்வி கேட்டவர் நீங்களே. அதற்கு பதில் நான் கூறினேன். பிறகு இது கருத்துக்களம் யாரும் கருத்து வைக்கலாம் என்றீர்கள். அது உண்மை தான். ஏற்றுக் கொள்கிறேன். அதன் பிறகு உங்களது அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் கூறிய பின்னர், ஏன் யாழ்களத்தில் கருத்து வைக்கிறீர்கள் என்று களத்தின் கருத்துவைக்கும் எனது உரிமையை கேள்விக்குட்படுத்தினீர்கள். அதற்கும் தகுந்த பதில் கொடுத்தேன் பிறகு உங்கள் ஆற்றாமையால், அநாகரிக தனிமனித தாக்குதலை விசுகுவின் பாணியில் நடத்தினீர்கள். கருத்து பஞ்சம் வரும் போது உங்களைப் போன்றவர்கள் பண்பற்ற கருத்துகளை/ சொற்களை பொதுவெளியில் எழுதுவது சர்வ சாதாரணம் என்பதால் அதை சட்டை செய்ய தேவையில்லை. தமிழ் தேசியம் என்பது இலங்கை தீவில் பண்புள்ள தமிழ் மக்களால் இலங்கை தீவில் நிறுவப்பட வேண்டிய விடயம். நிரஞ்சினி, தர்சிகா போன்ற தாயகத்தில் வாழும் பல ஆயிரம் மக்கள் தமது திறமைகளால்சிங்களத் தேசியவாதிகளுக்கு நிகராக அவர்களுக்கு சவால் விடும் வகையில் தமிழர தேசியத்தை பலம் பெறச் செய்வர். அவர்களால் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்துவர். லச்சப்பலில் பேசப்படும் பண்பற்ற தமிழ் தேசியம் இலங்கை தீவுக்கு தேவையில்லை என்பது எனது கருத்து.
-
எனது முன்னய கருத்து சுயமாக தாயக தமிழ்மக்களின் உரிமை தொடர்பாக மட்டும் சிந்திப்பவர்களுக்கானது காங்கேசந்துறை என்று மக்களை உசுபேற்றிக்கொண்டு பிராங்பேட் தாயகத்தில் இருந்து கட்சி/ இயக்க விசுவாசத்தை மட்டும் வைத்து அந்தமனப்பாங்கில் சிந்திப்பவர்களுக்கானதல்ல. நீங்கள் அப்படி சிந்திப்பது உங்கள் உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விடயம் தாயக மக்களின் உரிமை தொடர்பானது மட்டும்.
-
நடைமுறைத் தமிழ் தேசியத்தின் இயங்கு நிலை தொடர்பான எனது கருத்துக்களை நீங்கள் பொய்யாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அது எதிர்காலத்தில் பொய்யாகவேண்டும் என்பதற்காகவே எனது கருத்துகளை பூசி மெழுகாமல் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். ஆனால் மூர்ககத்துடன் என்னை கடிந்து கொள்வதில் நீங்கள் காட்டிய வேகத்தை ஒரு தமிழ் பெண்ணின் மீது மனித நாகரீகமற்ற கொச்சை வசன வசவுகளை வீசிய, மற்றும் அதனை ஆதரித்து நிற்பவர்கள் மீது, காட்டாதது வெட்கக்கேடு. அவமானகரமானது.
-
ஒரு தமிழ் பெண் உயர் விருதை பெற்றதை கூட சகித்து கொள்ள முடியாமல் அவர் மீது கொச்சையான நாகரீகமற்ற வசவுகள் வீசும் நீங்கள் பேசும் தமிழ் தேசியம் இந்தளவு மலினமானதா? இதுவே உங்கள் வீட்டு உறவுகள் என்றால் நீங்கள் கூறிய கொச்சையான வசனத்தை கூற முடியுமா? அதற்கு வேறொருவர் விளக்கம் வேறு கேட்கிறார். நல்ல காலம் தப்பித்தோம்.
-
பெண்களின் உள்ளாடைகளை திருடும் பூனை: ஒரு சுவாரஸ்ய சம்பவம்!
tulpen replied to ஈழப்பிரியன்'s topic in செய்தி திரட்டி
இந்த திரியின் தலைப்புடன் புத்தம் புதிய திரைப்படம் ஒன்றின் பெயரும் ஒத்துப்போகுறது. Underpants thief என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. -
நானும் டிசம்பர் மாத சம்பளத்துடன் மேலதிக போனஸ் 13. மாத சம்பளத்துடன் எனது வங்கி இருப்பை அதிகரித்துள்ளேன். எனது வருட இறுதி மலையளவு Rechnung கட்டி முடியும் வரை அதை தக்க வைத்துக் கொள்வேன். நாளை 30 ம் திகதி எல்லா Rechnung தொகையும் கழியும் வரை E-Bank site ஐ திறந்து balance ஐப்பார்தது மகிழ்வேன். இலங்கைமத்திய வங்கி ஆளுனர் போல.
-
“வயிறு பசிக்கும் போது”, என்று @Kapithan கூறியது மக்களின் வாழ்வு நிலை சம்பந்தப்பட்டதாக கூறிய குறியீடு. அதை நேரடியாக பசி என்று பொருள் கொள்ளக் கூடாது. தேசியம் தன்னாட்சி என்று தீவிர நிலை எடுத்தவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையை எந்த காலத்திலும் செலுத்தவில்லையென்பதுடன் இனியும் செலுத்தமாட்டார்கள், என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். வாழ வேண்டிய வயதில் தமது பிள்ளைகளுக்கு விளக்கு வைக்கவேண்டிய நிலையை தீவிர தமிழ் தேசியர்கள் உருவாக்குவார்களே தவிர, தமது பிள்ளைகளின் தியாகத்தை பலமாக கொண்டு தமிழ் தேசியத்தை வலுப்படுத்தமாட்டார்கள். மாறாக அதை விழலுக்கிறைத்த நீராக்குவர். தமது( தமக்குள்) வெட்டி வீர கதைகள் கூறி/ எழுதி பொழுது போக்கவே தமது பிள்ளைகளின் அர்பணிப்பை உபயோகிப்பரே தவிர, அவர்களின் அர்ப்பணிப்பை பொறுப்புடணச்சியுடன் உணர மாட்டார்கள், என்பதை மக்கள் தமது பட்டறிவு மூலம் புரிந்து கொண்டனர். விட்டில் பூச்சிகள் போல் மீண்டும் விளக்கில் வந்து விழும் முட்டாள்களாக இருக்க மக்கள் தயாரில்லை என்பது தான் நிதர்சனம். இன்று புலம் பெயர் நாடுகளில் ஓவராக சவுண்டு விடும் பல so call தமிழ் தேசியர்கள் கூட இப்படியான விடயங்களில் நேரத்தை செலவிட்டு தமது சொந்த பிள்ளைகள் கல்வியில் சிறிதளவு பின்னடைவைக் கூட சந்திக்கக் கூடாது, என்பதில் மிக உறுதியாக இருப்பதை மக்கள் நேரடியாகக் காண்கிறார்கள். ஆகவே தமிழ் தேசியத்தை விரும்பும் மக்கள் கூட தீவிர தமிழ் தேசியம் என்று வாய்சசவடால் விடுபவர்கள் குறித்து அச்சப்படுகிறார்கள் என்பதே உண்மை.
-
மனமார்ந்த வாழ்ததுக்கள் சுமே. உங்கள்மு ன்னேற்றங்களை சகித்து கொள்ள முடியாதவர்கள் பற்றி கவலை வேண்டாம். உங்களை வாழ்தத பல நல்ல மனம் கொண்ட உறவுகள் உள்ளார்கள். "You will never be criticized by someone who is doing more than you. You will only be criticized by someone doing less than you."
-
ஆட்சிமாற்றம் ஒன்றிற்குத் தயாராகும் கூட்டமைப்பின் சுமந்திரன்
tulpen replied to ரஞ்சித்'s topic in அரசியல் அலசல்
மனித தன்மைமையுடன் சிந்திக்கும் எவருக்கும் ஶ்ரீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றம் அவசியம் தேவை என்பது புரியும். அது நடைபெற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். ஶ்ரீலங்காவில் ஒரு கொடுமையான ஆட்சியிருந்து மக்களை கொடுமைப்படுத்தும் போது, “ஐயோ, ஐயோ”,என்று ஒப்பாரி வைத்து உரிமைகளை பெறலாம், என்று பழைய இத்துப்போன அரசியல் ஆய்வுகளை எழுதித் தமது வாழ்நாளை ஜாலியாக கழிப்பவர்களின் சிந்தனை போல் தாயகத்தில் வாழும் மக்கள் சிந்திக்க வேண்டியதில்லை. ஜதார்தத வாழ்வில் தமக்கு நன்மையளிப்பனவற்றை தமது சொந்த அறிவுடன் சிந்தித்து தமக்கு நன்மையளிபதைத் தெரிவு செய்யவேண்டும். இதில் பழைய எமோஷனுக்கும் சென்றி மென்றுக்கும் இடமில்லை.