Jump to content

tulpen

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  4150
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Posts posted by tulpen

 1. @Nathamuni எமக்கு இழக்க ஒன்றுமில்லை என்று எப்படிக் கூறுவீர்கள்?   

  கெளரவமான அரசியல் தீர்வும், ஒரே நிலப்பிரதேசத்தில் ஒன்றாக வாழப்போகும்  சிங்கள, முல்லீம் மக்களுடனான இன நல்லுறவும் சிதைந்தால் அது முள்ளிவாய்காலை விட பாரிய அழிவை எமது தலைமுறைக்கு  தொடர்சசியாக கொடுக்கும் அல்லவா? அதைத்தடுக்க விருப்பு வெறுப்புகள் எமோஷன்ஸ ஆகியவற்றை கடந்து ஒரு தநிரோபாயதமை எமது தரப்பு கைக்கொள்ள வேண்டுமல்லவா? 

   

 2. 14 minutes ago, goshan_che said:

  ஹா..ஹா… நம்பிக்கை…

  கடவுளையே இருக்கோ இல்லையோ எண்டு யோசிக்கும் நான் இந்தியாவையா நம்ப போகிறேன்😜.

  ஜே ஆர் எப்போதாவது இந்தியாவை நம்பினாரா? இல்லை.

  ஜே ஆர் இந்தியாவை தனது நலனுக்கு ஏற்பபாவித்தாரா? ஆம் மிக திறமையாக.

  இதே போல் தமிழராலும் முடியுமா ? ஆம் என நம்புகிறேன்.

  நான் தமிழரால் இப்படி வெட்டி ஆட முடியும் என நம்புகிறேன்.

  தமிழரின் ஒன்றுபட்ட ஆற்றலை நம்புகிறேன்.

  நீங்கள் எப்படி ? 

   

  கோஷான், நீங்கள் யாழ்களத்தின் பொறுமையின் சிகரம். தெளிவாக புரியும்படி Kinder Garten பிள்ளைகளுக்கு படிப்பிப்பது போல் விளங்கப்படுத்த பிறகும், “அ” என்பது  தமிழ் எழுத்தா ஆங்கில எழுத்தா என்பது போன்ற கேள்விகளுக்கு கூட பொறுமையுடன் பதிலளிக்கும் உங்கள் கற்பித்தற் திறமையை ரசிக்கிறேன்.🙏🏻 ரசிக்க மட்டும் தான் என்னால் முடியும். அதைக் கற்றுக்கொள்ளும் பொறுமையோ திறமையோ எனக்கில்லை. Schade 

  • Haha 1
 3. 50 minutes ago, விசுகு said:

  தமிழ்த்தேசியம் என்பது  தமிழை பேசகின்ற  ஒவ்வொருவருடைய உரிமையும் தேவையும்  கடமையும் கூட

  அதையே யாழும்  யாழ்  கள கருத்தாளர்களும்  செய்கிறார்கள்

  ஆனால் உங்களைப்பொறுத்தவரை

  தமிழ்த்தேசியம்  என்பது  புலிகளுடையது

  அல்லது  அவர்களின் ஆதரவாளர்களின் தேவை  கடமை

  அதனால்  தான் தமிழ்த்தேசியவாதத்திலிருந்த  தப்பித்தோம் என  யாழ்  களத்தில்  எழுதினீர்கள்

  அதன்பின்  மாற்றி மாற்றி புலுடா  விட இது  சிறீலங்காவின் ஏரிக்கரை  பத்திரிகை   அல்ல

  யாழ் களம் 

   

   

  உங்கள் நினைப்பு தான் அப்படி . தமிழ் தேசியம் என்பது,  ஒரு அமைப்பு, கட்சி, இயக்கம் சார்நத ஒற்றைப்போக்காக  மாற்றி பரந்து பட்ட தமிழ்மக்களை புறந்தள்ளிவதே உங்களைப் போன்றவர்கள் தான்.   இலங்கைத் தீவில் பல் வேறு பிரதேசங்களிலும் வாழும்   பல்வேறு திறமையுடைய எமது  தமிழ் இளைய தலைமுறையினர் பரவலாக சகோதர இனத்துக்கு நிகராக தமது சாதனைகளை நிகழ்ததுவதும் தமிழ் தேசியத்தை அங்கு நிலைநிறுத்தும் செயல் தான்.  அதை சகித்து கொள்ள முடியாமல்  வாழ்ததுவதற்கு பதிலாக, ஒரு பெண் என்பதால் பண்பற்ற கொச்சையான பாலியல் வசவு சொற்களை பாவித்ததும் இவ்வாறான தீவிர ஒற்றைத் தேசியம் பேசுபவரே. அது தான், அப்படியானவர்களிடம் இருந்து  தப்பிவிட்டோம் என்று எதிர்மறையில் சம்பந்தப்பட்டவருக்கு   உறைக்கும்படி பாவிக்கப்பட்டதே அந்த வசனம் என்பது, தமிழ் மொழி அறிவு உடையவர்களுக்கு புரியும்.  உங்களுக்கு அது புரியாததே இந்த விவாதம் இவ்வளவு  நீண்டதற்கான காரணம். 

   கருத்தாடலுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்ததுகள். 

 4. 8 minutes ago, விசுகு said:

   

  இங்கே வாழ்த்து சொன்ன விடயத்தைப்பற்றி  முதலில்  கேள்வி  கேட்டவரும் நீங்க  தான்

  தேசியம்  என்ற  பொது விடயத்தை  எல்லா  திரிகளிலும்  காலைத்தூக்கி சலம் விடுபவரும்  நீங்க  தான்

  அப்போ நீங்க பேசலாம்  நாங்க  பேசக்கூடாதோ???

  மீண்டும்  மீண்டும்

  உங்களை  திருத்திக்கொள்ளுங்கள்  சமூகம்  தானாக  திருந்தும்

   

  என்னை குவாட் செய்து என்னை முதல் கேள்வி கேட்டவர் நீங்களே. அதற்கு பதில் நான் கூறினேன்.

  பிறகு இது கருத்துக்களம் யாரும் கருத்து வைக்கலாம் என்றீர்கள். அது உண்மை தான். ஏற்றுக் கொள்கிறேன். 

  அதன் பிறகு உங்களது அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் கூறிய பின்னர்,  ஏன்  யாழ்களத்தில் கருத்து வைக்கிறீர்கள் என்று களத்தின் கருத்துவைக்கும் எனது உரிமையை கேள்விக்குட்படுத்தினீர்கள். அதற்கும் தகுந்த பதில் கொடுத்தேன்

  பிறகு உங்கள்  ஆற்றாமையால்,  அநாகரிக தனிமனித தாக்குதலை விசுகுவின் பாணியில்  நடத்தினீர்கள்.   கருத்து பஞ்சம் வரும் போது உங்களைப் போன்றவர்கள் பண்பற்ற கருத்துகளை/ சொற்களை  பொதுவெளியில் எழுதுவது  சர்வ சாதாரணம் என்பதால் அதை சட்டை செய்ய தேவையில்லை.  

  தமிழ் தேசியம் என்பது இலங்கை தீவில் பண்புள்ள தமிழ் மக்களால் இலங்கை தீவில் நிறுவப்பட வேண்டிய விடயம். நிரஞ்சினி, தர்சிகா போன்ற தாயகத்தில் வாழும் பல ஆயிரம் மக்கள்  தமது திறமைகளால்சிங்களத் தேசியவாதிகளுக்கு நிகராக அவர்களுக்கு சவால் விடும் வகையில் தமிழர தேசியத்தை பலம் பெறச் செய்வர்.  அவர்களால் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்துவர். 

  லச்சப்பலில்  பேசப்படும் பண்பற்ற தமிழ் தேசியம் இலங்கை தீவுக்கு தேவையில்லை என்பது எனது கருத்து. 

 5. 41 minutes ago, Paanch said:

  முத்தையா முரளிதரனையும் தமிழ் மகன் என்று வாழ்த்திப் பின் துயரப்பட்டவர்கள் நாங்கள்.

   இப்போது சகோதரி நிரஞ்சனி சண்முகராசா அவர்களையும் தமிழ் மகள் என்று வாழ்த்துவோம். அவரது நடவடிக்கைகள்பற்றி நிச்சயம் வெளிவரும். அப்போது, மகிழ்வடைவோமா? துயர்படுவோமா?? பார்க்கலாம். 

  வாழ்த்துக்கள் சகோதரி!!.

  கவலை வேண்டாம் பாஞ்ச். தீவிர தமிழ் தேசியம் பேசியவர்கள் மற்றும் பேரினவாத அரசுகள்  தமிழ் மக்களுக்கு  தந்த துன்பங்களை விட இந்த தனிநபர்களால் மேலதிகமாக எந்த துன்பத்தையும் தர முடியாது. எமக்கு  துன்பங்களை தருவதற்கான வலு அவர்களிடம் இல்லை. 

 6. 36 minutes ago, விசுகு said:

   

  சரி ஐயா

  அப்போ எதுக்கு  யாழ்  களத்தில்  தமிழர்களுடன்  தமிழில் பேசிக்கொண்டு?????

  நீங்களே பேசலாம் எண்டா நாங்களும் பேசலாம் தானே! 

 7. 1 hour ago, விசுகு said:

   

  தேசியம் என்பது  உயிரினும்  மேலானது

  அதை  எவர்  தமது  அரிப்புக்கு  சொறிஞ்சாலும்  கோபம்  வரும்  உணர்வுள்ளவன்  எவனுக்கும்  வரணும்

  இப்படியே  வாய்சவடால் விட்டுக்கொண்டே நமது உயிரைக்காப்பாற்ற விமானமேறி காப்பாற்ற, நான் சுவிற்சர்லாண்டுக்கும், நீங்கள் பிரான்ஸிற்கும் வந்திட்டம்.  இருவரதும் கெட்டித்தனம் தான்.  

  “தேசியம் என்பது ஊரான் வீட்டு பிள்ளைகளின் உயிரினும் மேலானது”. 😂

  • Like 1
  • Haha 1
 8. 5 hours ago, குமாரசாமி said:

  தமிழர் தரப்பு இது வரைக்கும் எதை விட்டுக்கொடுக்கவில்லை?

  இனியும் விட்டுக்கொடுத்தால் ஈழத்தமிழினம் காங்கேசன் துறை கடல் வரைக்கும் சென்று விழுந்து சாக வேண்டியதுதான்.

  எனது  முன்னய கருத்து சுயமாக தாயக  தமிழ்மக்களின் உரிமை தொடர்பாக மட்டும் சிந்திப்பவர்களுக்கானது  காங்கேசந்துறை என்று மக்களை உசுபேற்றிக்கொண்டு  பிராங்பேட்  தாயகத்தில் இருந்து  கட்சி/ இயக்க விசுவாசத்தை மட்டும் வைத்து   அந்தமனப்பாங்கில்  சிந்திப்பவர்களுக்கானதல்ல.

  நீங்கள் அப்படி சிந்திப்பது உங்கள் உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.  ஆனால் நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விடயம் தாயக மக்களின் உரிமை தொடர்பானது மட்டும்.  

 9. 2 hours ago, nedukkalapoovan said:

  அண்ணே.. ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை மலினப்படுத்த முன் பின் யோசிக்காத நீங்கள்... கூத்தாடிகளுக்கும் காட்டிக்கொடுப்பாளர்களுக்கும் உருகிற உருக்கம் இருக்கே... சொல்லி வேலையில்ல. 

   

  2 hours ago, விசுகு said:

  அதே.....

  இருவருக்கும் நேர்மையாக கருத்துக்கு பதிலெழுத முடியவில்லை. ஆகவே தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து தப்பிக்கொள்கின்றீர்கள்.  இது வழமையாக  நடக்கும் விடயம் தானே. 😂

 10. 9 minutes ago, goshan_che said:

  இல்லை இது கள யதார்த்தம் விளங்கிய நிலை அல்ல. இது ஒருவகையான all or nothing மனநிலை.

  ஒன்றில் தனி நாடு அல்லது வடக்கை மட்டும்   ஒரு மாகாண சபையாகவேணும் தாங்கோ எனும் மனநிலை.

  இப்படி கிழக்கை சேர்க்க தயங்க காராணம் முஸ்லிம்களோடு சேர்ந்து வாழ/ஆள விரும்பாமை. இது நியாயமான நிலைப்பாடுதான். 

  ஆனால் முஸ்லீமோடு நாம் அதிகாரத்தை பகிர விரும்பவில்லை என்பதற்காக கிழக்கு தமிழனை அதே முஸ்லிம்+சிங்கள மேலாண்மைக்குள் பெட்டி கட்டி அனுப்பவும் முடியாது. அப்படி நடந்தால் இராசதுரை-கருணா சொன்னது அனைத்தும் உண்மை என்றாகி விடும்.

  Eastern Tamils are not expendables. They are not a bargaining chip. வடக்கு தமிழருக்கு வரும் அதே தீர்வு அவர்களுக்கும் வர வேண்டும்.  இழப்புகளில் அவர்களுக்கு சம பங்கை கொடுத்து விட்டு, பலனை வடக்கு மட்டும் அனுபவிக்க முடியாது.

  1. இணைந்த வட-கிழக்கில் முஸ்லீம்களோடு அதிகாரத்தை பகிரல். இதை நாம் விரும்பவில்லை என்றால்.

  2. நிலத்தொடர்பற்ற முஸ்லீம் அலகை ஏற்றல். 

  இவைதான் தெரிவுகளாக இருக்க முடியும்.

  பாப்போம்….இப்பதானே காத்தான்குடியை விட்டு கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்கோம் (எப்ப கையில் வைத்திருந்தோம் விட்டு கொடுக்க🤣). போக, போக களயதார்த உறைப்பு கூடும் போது.   தெரிவு 2 ஐ ஏற்பது இலகுவாகலாம்.

   

  கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

 11. 1 hour ago, விசுகு said:

  வாழ்த்துகள்  சகோதரி

  சொறியாட்டி அரிப்படங்காது போல...😡

  நடைமுறைத் தமிழ் தேசியத்தின் இயங்கு நிலை தொடர்பான எனது கருத்துக்களை நீங்கள் பொய்யாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அது எதிர்காலத்தில் பொய்யாகவேண்டும் என்பதற்காகவே  எனது கருத்துகளை பூசி மெழுகாமல் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். 

  ஆனால் மூர்ககத்துடன் என்னை கடிந்து கொள்வதில் நீங்கள் காட்டிய  வேகத்தை  ஒரு தமிழ் பெண்ணின் மீது மனித நாகரீகமற்ற கொச்சை வசன வசவுகளை வீசிய, மற்றும் அதனை ஆதரித்து நிற்பவர்கள் மீது,  காட்டாதது  வெட்கக்கேடு. அவமானகரமானது. 

  • Like 1
 12. On 28/12/2021 at 23:10, nedukkalapoovan said:

  தமிழில சொறீலங்காவில் சினிமா வருதா..??! சிங்களத்தில் வருகுது.. இவா அங்கு மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கிற்கு.. கொடுக்கிறாய்ங்க. 

  ஒரு தமிழ் பெண் உயர் விருதை பெற்றதை கூட சகித்து கொள்ள முடியாமல் அவர் மீது கொச்சையான நாகரீகமற்ற வசவுகள் வீசும் நீங்கள் பேசும் தமிழ் தேசியம் இந்தளவு மலினமானதா? 😡 

   இதுவே உங்கள் வீட்டு உறவுகள் என்றால் நீங்கள் கூறிய கொச்சையான வசனத்தை கூற முடியுமா? அதற்கு வேறொருவர் விளக்கம் வேறு கேட்கிறார்.  

  நல்ல காலம் தப்பித்தோம். 

  • Like 7
  • Thanks 1
 13. வாழ்த்துகள் நிரஞ்சினி சண்முகராஜா. துணிச்சல், தன்னம்பிக்கை கொண்ட தமிழ் பெண்ணாக மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும். 👍👍👍

 14. 1 minute ago, வாலி said:

  உவனுகள் கடைசி வரைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டானுகள்.  51 % கேட்பானுகள். இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

  முடிந்தவரை எல்லைகளை மாற்றி தமிழர் அதிகமாக வாழும்  பகுதிகளை மட்டுமாவது ஒனரு அலகாகஇணைப்பது மற்றொரு ஒப்ஷன். அது சாத்தியமா என்று தெரியவில்லை. 

  ஆனால் அது சாத்தியமென்றாலும்,”பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்”,  என்று அடம் பிடித்து காலத்த கடத்திக் கொண்டு நிற்கேக்க மான்றில் உடைஞ்சிடும். 😂

  • Like 1
 15. இந்த திரியின் தலைப்புடன் புத்தம் புதிய திரைப்படம் ஒன்றின் பெயரும் ஒத்துப்போகுறது.  Underpants thief என்ற திரைப்படம் அண்மையில்  வெளியாகியுள்ளது. 

   

 16. 18 minutes ago, Nathamuni said:

  எனது விளக்கத்துக்காக கேட்கிறேன்.

  வருசம் நாலுகிழமை கொண்ட மாதங்களைக வகுத்து பதின்மூன்று என்கிறார்களா அல்லது, மேலதிகமாக ஒரு மாதம் போனசாக தருகிறார்களா?

  12 மாதமும் ஒரு நிறுவனத்தில் முழுமையாக வேலை செய்தால் மேலதிகமாக ஒரு மாத சம்பளத்தை போனஸாக கொடுப்பார்கள்.  அது குறையும் போது வருடத்தில் வேலை செய்ய வேண்டிய நாட்களை வைத்து அதன் வீதத்தில் கணக்கெடுப்பார்கள். வருடத்தில் உள்ள ஐந்து கிழமை விடுமுறை வேலை செய்த நாட்களாகவே கணக்கிடப்படும். 

  • Thanks 1
 17. 6 hours ago, poet said:

   எனது சுயசரிதையில் விரிவாக எழுதுவேன். யாழ் குழுமம் அங்கீகரித்தால் கேட்டால் பாலசிங்கம் அண்ணன் சொன்னதை சுருக்கமாக வெளியிடமுடியும். 

  நன்றி பொயட் ஐயா. நிச்சயம் வெளியிட வேண்டும். பொய்கள் தாண்டவமடி எமது எதிர்காலச் சந்ததியையும் அழிப்பதற்கு கங்கணம் கட்டி நிற்கையில்,   உண்மைகளை அறிந்து அவர்களாவது சரியான வழியில் செல்ல உங்களைப் போல் விவரம் அறிந்தவர்கள் உண்மைகளை வெளியிடுவது அடுத்த தலைமுறைக்கு செய்யும் சேவை. 

 18. 12 minutes ago, Nathamuni said:

  இந்த அரைக்கிறுக்கர் சம்பத்துக்கு போய்.... விளக்கம் கொடுத்து.....

  நாத முனி சொன்னது சம்பத்துக்கு கேட்டால் கோபிக்கப் போகிறார்.  நான் எவ்வளவு கஷ்ரப்பட்டு படிச்சு முழுக்கிறுக்கன் தேர்வில் நல்ல மாக்ஸ் வாங்கியிருந்தும் என்னை அரைகிறுக்கன்  என்று நாதமுனி அவமானப்படுத்துகிறார் என்று. 😂

  • Haha 1
 19. 10 minutes ago, goshan_che said:

  அதிஸ்டசாலி ஐயா நீங்கள். இந்த 13ம் மாத சம்பளத்தை போனசாக கொடுக்கும் வழக்கம் இலங்கையிலும் உண்டு.

  யூகேயில் கேட்டால் - உனக்கு வேலை தந்ததே போனஸ்தான், இதில போனஸ் வேற கேப்பியா என்கிறார்கள் யுவர் ஆனர்🤣.

  அதெல்லாம் சரி தான் கோஷான். அனால் இங்குள்ள வாழ்ககைச் செலவு 13 மாத சம்பளத்தை 13 ம் திருத்தம் போல் பறித்து விடுகிறதே.😂

  • Like 2
  • Haha 1
 20. 1 hour ago, கிருபன் said:

  அவர் தனது பதிவில்,ஏற்கனவே தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருத்திருக்கின்றது.அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  நானும் டிசம்பர் மாத சம்பளத்துடன் மேலதிக போனஸ் 13. மாத சம்பளத்துடன் எனது வங்கி இருப்பை அதிகரித்துள்ளேன். எனது வருட இறுதி மலையளவு Rechnung  கட்டி முடியும் வரை அதை தக்க வைத்துக் கொள்வேன். நாளை 30 ம் திகதி எல்லா Rechnung தொகையும் கழியும் வரை E-Bank site ஐ திறந்து  balance ஐப்பார்தது மகிழ்வேன். இலங்கைமத்திய வங்கி ஆளுனர் போல. 😂😂😂

  • Haha 1
 21. 5 hours ago, நன்னிச் சோழன் said:

  ஐயனே,
  என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாகத்தான் வினவுகிறேன். அதாவது,

  1. நான் முதலில் அந்த கதைத்தவர் கூறியவற்றை மேற்கோள்காட்டி '1000 வீதம் உண்மை' என்றேன்.
  2. நீங்கள் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்ற பொருள்பட கருத்தெளுதினீர்கள். 
  3. நான் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியுள்ளவர்களும் ஏன் தேசியத்தைக் கைவிட்டனர்' என்று வினவினேன்.

  மேலும் நான் தங்களிடம் 'தேசியத்தைக் கைவிட வேண்டும்' என்ற பொருள்படும் மறுப்பறுப்பினை முன்வைக்கவில்லை. நீங்கள் 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்றபோது, ஏன் வாழ வழியுள்ளவர்கள் விட்டார்கள் என்றே வினவுகிறேன்!

  தெளிவான கேள்வி, தாங்கள் கூறியதை வைத்து!

   

  “வயிறு பசிக்கும் போது”, என்று @Kapithan கூறியது மக்களின் வாழ்வு நிலை சம்பந்தப்பட்டதாக கூறிய குறியீடு. அதை நேரடியாக பசி என்று  பொருள் கொள்ளக் கூடாது.

  தேசியம் தன்னாட்சி என்று தீவிர நிலை எடுத்தவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையை எந்த காலத்திலும் செலுத்தவில்லையென்பதுடன் இனியும்  செலுத்தமாட்டார்கள்,   என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 

  வாழ வேண்டிய வயதில் தமது பிள்ளைகளுக்கு விளக்கு வைக்கவேண்டிய நிலையை தீவிர தமிழ் தேசியர்கள் உருவாக்குவார்களே தவிர, தமது பிள்ளைகளின் தியாகத்தை பலமாக கொண்டு தமிழ் தேசியத்தை வலுப்படுத்தமாட்டார்கள்.  மாறாக அதை விழலுக்கிறைத்த நீராக்குவர். தமது( தமக்குள்) வெட்டி வீர கதைகள் கூறி/ எழுதி பொழுது போக்கவே  தமது பிள்ளைகளின் அர்பணிப்பை உபயோகிப்பரே தவிர, அவர்களின் அர்ப்பணிப்பை பொறுப்புடணச்சியுடன் உணர மாட்டார்கள்,  என்பதை மக்கள் தமது பட்டறிவு மூலம் புரிந்து கொண்டனர். 

  விட்டில் பூச்சிகள் போல் மீண்டும் விளக்கில் வந்து விழும் முட்டாள்களாக இருக்க மக்கள் தயாரில்லை என்பது தான் நிதர்சனம். 

  இன்று புலம் பெயர் நாடுகளில் ஓவராக சவுண்டு விடும் பல so call தமிழ் தேசியர்கள் கூட இப்படியான விடயங்களில் நேரத்தை செலவிட்டு தமது சொந்த பிள்ளைகள் கல்வியில் சிறிதளவு பின்னடைவைக் கூட சந்திக்கக் கூடாது,  என்பதில் மிக உறுதியாக இருப்பதை மக்கள் நேரடியாகக் காண்கிறார்கள். 

  ஆகவே தமிழ் தேசியத்தை விரும்பும் மக்கள் கூட தீவிர தமிழ் தேசியம் என்று வாய்சசவடால் விடுபவர்கள் குறித்து அச்சப்படுகிறார்கள் என்பதே உண்மை. 

  • Like 1
 22. மனமார்ந்த வாழ்ததுக்கள் சுமே. உங்கள்மு ன்னேற்றங்களை சகித்து கொள்ள முடியாதவர்கள் பற்றி கவலை வேண்டாம். உங்களை வாழ்தத பல நல்ல மனம் கொண்ட உறவுகள் உள்ளார்கள். 

  "You will never be criticized by someone who is doing more than you. You will only be criticized by someone doing less than you."

  • Like 1
 23. மனித தன்மைமையுடன் சிந்திக்கும் எவருக்கும் ஶ்ரீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றம் அவசியம் தேவை என்பது புரியும். அது நடைபெற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். 

  ஶ்ரீலங்காவில் ஒரு கொடுமையான ஆட்சியிருந்து மக்களை கொடுமைப்படுத்தும் போது, “ஐயோ, ஐயோ”,என்று ஒப்பாரி வைத்து உரிமைகளை பெறலாம், என்று பழைய இத்துப்போன அரசியல் ஆய்வுகளை எழுதித்  தமது வாழ்நாளை ஜாலியாக கழிப்பவர்களின்  சிந்தனை போல்  தாயகத்தில் வாழும் மக்கள் சிந்திக்க வேண்டியதில்லை.  ஜதார்தத வாழ்வில் தமக்கு நன்மையளிப்பனவற்றை தமது சொந்த அறிவுடன் சிந்தித்து தமக்கு நன்மையளிபதைத் தெரிவு செய்யவேண்டும். இதில் பழைய எமோஷனுக்கும் சென்றி மென்றுக்கும் இடமில்லை. 

 24. 3 hours ago, Kapithan said:

  வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

  இரத்தின சுருக்கமான,  குறியீட்டு வரிகள். நன்றி கபிதன். ஆனால்,  போதனை செய்பவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சுக போகத்துடன் வாழ்பவர்களாதலால் நீங்கள் சொன்ன ஜதார்த்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

   

  • Like 2
  • Thanks 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.