Jump to content

tulpen

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4150
  • Joined

  • Last visited

  • Days Won

    9

Posts posted by tulpen

  1. 12 minutes ago, MEERA said:

    2-C59942-B-BE9-A-4540-82-E8-341-AA239-F2
     

    A3-C3-F227-0954-416-D-9-F3-A-35-CC6-AACA
     

    AFF554-DB-2-AF9-40-C3-B7-C1-FAF838-B77-E

    0-DFE0-BB7-80-E0-478-E-80-B1-1-DC613-EC8

    இங்கேயும் அதே..

    இதை தான் நானும் சொன்னேன். நீங்கள் அதை கொஞ்சம் விரிவாக சொல்லிவிட்டீர்கள்.  நான் கோடு போட்டால் நீங்கள் ரோட்டே போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி மீரா!  👍👍

  2. 2 hours ago, குமாரசாமி said:

    நீங்கள் இணைச்ச படம் சரிதான். நானும் பார்ப்பனியத்திற்கு எதிரானவன் தான்.
     ஆனால் நீங்கள்  புழுகித்தள்ளும் அறிவியலும் மருத்துவமும் இது வரைக்கும் கொரோனா விசயத்திலை என்னத்தை வெட்டிப்புடிங்கினது எண்டு எனக்கு தெரியேல்லை. முதலாவது அலை இரண்டாவது அலை எண்டு ஆக்களை கொண்டு போகுது.

    இதெல்லாம் திமிர் பிடிச்ச மனித குலத்துக்கு மேலே இருப்பவன் தான் இருக்கிறேன் என்பதை  ஞாபகபடுத்துவதற்கே.....
    கடவுள் இருக்கிறான் துல்பன். 💯

     

    குமாரசாமி உங்களுடன் சேர்ந்து வாழும் சக மனிதனை, திமிர் பிடித்தவன் என்று எபோதும்  திட்டி தீர்த்து கொண்டு மனிதன் கண்டுபிடித்த எல்லா அறிவியல் உபகரணங்களையும் வெட்கமில்லாமல் உபயோகித்து கொண்டு வாழும்  உங்களுக்கு இது  சமர்ப்பணம். 

    தனது இருப்பை நினைவு படுத்த கடவுள் கொரோனாவை கொண்டுவந்தான் என்பதை அடிமுட்டாள்களால் தான் நம்ப முடியும். மனிதர்களால் அல்ல.

    large.Unbenannt1.jpg.2d1660c312eecd762601e810ea163a1c.jpg

  3. வீர வணக்கங்கள். 

    பால்ராஜ் தமிழீழத்தின் மிகச்  சிறந்த தளபதி. ஶ்ரீலங்அக இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த அவரின் இழப்பு தமிழருக்கு பேரிழப்பு. 

    ஆனால் மேலே பிரசுரிக்கப்பட்ட படத்தில் உள்ள வசனங்கள் அந்த மாபெரும் தளபதியை வீரனை  அவமதிப்பது போல்  உள்ளது. ஶ்ரீலங்காவின் பாரிய இராணுவ தளத்தை வெற்றி கொண்டான் என்று சொல்வது தான் பால்ராஜ்ககு பெருமையே தவிர 40000 பேரை நாக்கு தள்ள வைத்தான் என்று கூறுவது கீழ்தரமான வசனம். 

  4. 5 hours ago, குமாரசாமி said:

    97746960_268472624276169_4456296803192537088_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=Nv3wR6RTyicAX8KiM-l&_nc_ht=scontent-ham3-1.xx&oh=eb4d70f8e6f35a0d042fc718e2df06ea&oe=5EE72A25

    Fotos, lizenzfreie Bilder, Grafiken, Vektoren und Videos von "no ...

    படத்தில் பைலோடு வருபவர் எம்மை ஏமாற்றுவதற்கு அடிதளம் இட்டவரே  முன்னே தடியோடு நிற்பவர் செய்த  அரசியல் தான். மொத்தத்தில் இருவருமே எம்மை ஏமாற்றியவர்கள் தான். 

  5. 22 hours ago, வாலி said:

    உங்கள் பொறுப்பான பதிலிற்கு நன்றி மோகன் அண்ணா. இது யாழிணையத்துக்காகவே எழுதியது அதனைக் கேட்காமலே பதிய யாழிணையத்துக்கு உரிமையுண்டு.!

    மிக அழகான கவிதை வாலி. இதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.  

  6. சிறந்த விடுதலைப்போராளிக்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக  திகழ்ந்த  தலைவர் பிரபாகரனுக்கும் அவருடன் சேர்ந்து தமது உயிரைத் தியாகம் செய்த தளபதிகள்  போராளிகளுக்கும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கும் வீர வணக்கங்கள். 

  7. 1 hour ago, Paanch said:

    மனித இனம் இயற்கையோடு ஒட்டிவாழ்வதை விட்டு வேறுபட்டு வாழ்வதற்கு முயன்றதால்தான் இன்று கொரோனாவந்து அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது. 

    அப்படியானால் 1800 காலப்பகுதியில் கொலரா போன்ற கொள்ளை நோய்கள் வந்து எமது தாயகத்தில் பெருமளவு மக்கள் இறக்க என்ன காரணம்?  போலியோவால் பெருமளவு சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அப்போது எமது தாயகத்தில் இயற்கைக்கு விரோதமாக மக்கள் வாழ்ந்தார்களா? 

    இரண்டாவது பகுதி  உங்களது பதிலில்  பூமி தாய், சக்தி என்பதெல்லாம் வெறும் வெட்டிப் பெருமைகள் மட்டுமே. இங்கு எனது பெண்பிள்ளை தனியே இரவு  கடைசித் தொடரூந்தில் பல முறை பாதுகாப்பாக வீடு திரும்பி உள்ளார். நீங்கள் கூறும் தாயாக சக்தியாக பெண்களை வழிபடும் நாடுகளில் எனது பெண் பிள்ளையை தனியே  செல்ல ஒரு  நாள் கூட விட முடியாத நிலை தான் அங்கு நிலவுகிறது. 

     ஆகவே தாயாக மதிக்கிறோம் சக்தியாக மதிக்கிறோம்  என்று வெறுமனே புலுடா விடுவதை நிறுத்தி சக மனிதராக நண்பியாக நினைத்தாலே போதும். 

    • Like 1
    • Thanks 1
  8. மானுட சமுதாயத்தின் வளர்சசியில் பெண்களும் ஆண்களும் சம பங்கு வகித்தனர் என்றே வரலாற்று  ஆய்வுகள் கூறுகின்றன. உடலளவில்  சற்று வலிமை கொண்டவரகள் என்பதை தவிர மற்றய விடயங்களில் வேறுபாடு இல்லை என்பதே ஜதார்த்தம். ஈழவிடுதலைப் போரிலும் அதனை துல்லியமாக அவதானிக்க முடிந்தது.விடுதலைப்புலிகளின் பல வெளியீடுகளில் மனித வாழ்வியலில் பெண்களின் சமத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டதை வாசித்துள்ளேன்.     அப்படி இருக்க இப்போதும்  சிலர் சமூகத்தில் சம பங்கானவர்களை பலவீனமானவர்களாக கருதுவது  அவர்களின் அறியாமையின்  வெளிப்பாடு. 

    பால்ய விவாகங்களை கடைப்பிடித்து கணவன் இறந்தவுடன் பெண்பிள்ளைகளை குழந்தைகள் என்று கூட பார்க்காமல் நெருப்பில் தூக்கி போட்ட கேடுகெட்ட கலாச்சாரத்தை புனித இந்து கலாச்சாரம்  என்று ஆங்கிலேயரிடம் வாதிட்ட அறிவிலிக் கூட்டமும் ஒருகாலத்தில் இருந்தது. அது முடியாமல் போன போது அவர்களை வெள்ளைப் புடவை கட்ட வைத்து  சமூகத்தில் இருந்து  குடும்்ப கொண்டாட்டங்களில் இருந்து ஒதுக்கி வைத்து  மனரீதியில் துன்புறுத்தும் அறிவிலிக் கலாச்சாரத்தை புனிதம் என்று கூறும் அறியாமை இன்றும் உள்ளது. 

    தாம் வகுத்த  கேடு கெட்ட கலாச்சார கோட்பாடுகளை பாதுகாக்கும் பொறுப்பை பெண்களுடம் மட்டும் ஒப்படைப்பது பண்பாடற்ற செயல். ஒரு விடயம் தவறு என்றால் யார் செய்தாலும் தவறு. சரி என்றால் யார் செய்தாலும் சரி.  

    விடுதலைப்புலிகளை ஆதரித்து கருத்து எழுதி சம்பந்தனை எப்போதும் திட்டும் சிலர் இந்த விடயத்தில் புலிகளின் கோட்பாடுகளை மறந்து  சம்பந்தன் கால கோட்பாடுகளை ஆதரிப்பது அவர்களின் புலிகளை ஆதரிப்பதாக கூறுவது வெறும் போலி என்பதை புலப்படுத்துகின்றது. 

    • Like 2
  9.  

    ஆண்களுக் பெண்களும் இயற்கையிலே வேறுபட்டவர்களாம். அதனால் சம உரிமை இல்லையாம். ஒரு சில பித்தர்களின் வாதம் இது. 

    ஆண்களின் அணிந்த அதே சீருடைகளுடன் அதே ஆயுதங்களுடன்  ஆணுக்கு நிகராக சில சமயங்களில் ஆண்களை விட திறமையாக  மாதக்கணக்காக வருடக்கணக்காக காட்டிலுலும் கடலிலும் இராபகலாக கண்விழித்து  போரிடும் போது பெண்கள் சம‍மானவரார்களாக தெரிந்தார்கள். ஆண்களை விட ஆக்ரோசமாக போரிட்டு வெற்றிகளை குவித்த போது அவர்கள்  வேறுபாடு தெரியவில்லை. கடலுக்கு அடியில் வெடிகுண்டான வெடித்த போது சம‍மாக தெரிந்தார்கள். இலக்குகளை தேடி கரும்புலிகளாக சென்ற போது அவர்கள் பலவீனமானவர்களாக தெரியவில்லை. ஏனென்றால் சுயநலம். அவர்களின் உழைப்பில் நாம் வாழலாம் என்ற சுலநலம். அவர்கள் உயிரைக்கொடுத்து போராடிய போது, தமது அவயங்களை இழந்து போராடியதால் கிடைத்த வெற்றியை தாம் தண்ணியடித்து கொண்டாடாலாம்.

    ஆனால் பெண்கள் மதுபானம் வாங்கினால் மட்டும் ஐயோ கலாச்சாரம் போய்விட்டது  அவர்கள் இயற்கையில் பலவீனமானவர்கள் என்று புலம்பல். மதுவுக்கு அடிமையானால் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது பாதிப்பு தான். அடிமையாகமல் சந்தோசத்திற்காக அளவுடன் பாவித்தால் ஆணுக்கோ பெண்ணுக்கோ அது சந்தோசம் தான் . இதுவே இயற்கை.  அது அவரவர் விருப்ப‍ம். 

     

  10. 22 minutes ago, ராசவன்னியன் said:

    திரு.துல்பன்,

    அப்படியே புலம்பெயர் தமிழர்கள், அங்கிருக்கும் சமூக சூழலால் வலிந்து ஏற்று அல்லது சகித்துக்கொண்டாலும், தாயகத்திலும், தென்னிந்தியாவிலும் அவ்வாறே எல்லா பெண்களும் இருப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது இல்லையே..?

    ராசவன்னியன் நான் அவ்வாறு கூறவில்லையே. அது அவரவர் விருப்பம். குடிப்பது தவறு என்று வரையறுப்பீர்கள் என்றால் அதை ஆண்கள் செய்தாலும் தவறு, பெண்கள் செய்தாலும் தவறு. அதைத்தான் குறிப்பிட்டேன். 

  11. 24 minutes ago, ராசவன்னியன் said:

    சார், அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில், உரிமை என வாய்மொழியாக சொல்வது வேறு,
    நடைமுறையில் அப்படி நடந்தால் சகித்து தாங்கிக்கொள்வீர்களா..?

     

    ராச வன்னியன் நான் அவதானித்த அளவில் இங்கு வாழும் இரண்டாம் தலைமுறை பிள்ளைகளில்  கணிசமாக அவ்வாறு நடைபெறுகிறது. அவர்களின் கணவன்மார் அதை சகித்து கொள்ளுகின்றனர் என்பதை விட அதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தான் நிஜம். 

  12. 9 minutes ago, Paanch said:

    ஏன் ஈழப்பியன் அவர்களே! பெண்கள் செய்வதை ஆண்களும் செய்யலாமே..... குழந்தையையும் ஆண்களே பெற்றுக்கொள்ளலாமே.?? 🤪 

    பாஞ்ச் உங்களால் அது  முடிந்தால் நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம். யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை. 

    • Like 1
  13. 1 hour ago, தமிழ் சிறி said:

     

    பெண் அழகு எப்போது ? Arrack, the Spirit of Sri Lanka! | Impressions

    ஈழப்பிரியன் & ருல்பன்  ..... இந்தியா, இலங்கை போன்ற... 
    நாடுகளில்... பெண்கள், குடிக்கக் கூடாது. 
    அது, எமது  கலாச்சாரத்துக்கு... ஒத்து வராது. 

    வேணுமென்றால்... பிள்ளை பெத்தவர்களுக்கு மட்டும்,
     "மெண்டிஸ் ஸ்பெஷல்" குடிக்க... கணவனோ, தகப்பனோ.... 
    மருந்து மாதிரி... நினைத்துக் கொண்டு, வாங்கிக் கொடுக்கலாம். 

    மற்றைய பெண்கள்... விடியக் காலைமை, முழுகி....
    தலைக்கு மல்லிகைப் பூ... மாலை வைத்துக் கொண்டு, 
    வீட்டு  வாசலில்,  கோலம் போடுவது தான்... அழகோ... அழகு.  :)

    தமிழ் சிறி இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் பெண்கள் என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கும் தனி உரிமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள்  கற்பனையில் மிதக்க எத்தனை கிளாஸ் பியர் அல்லது விஸ்கி  🍻 உங்களுக்கு தேவைப்பட்டது. ஏனென்றால் நானும்  அப்படி கற்பனையில் மிதக்க ஆசையாக  உள்ளது.  எத்தனை கிளாஸ் அடிக்க வேண்டும் என்று உங்கள் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாமா? 

    • Haha 1
  14. மது பானம் வாங்குவது தப்பா?  அல்லது பெண்கள்்வாங்குவது தப்பா? யார்  யாரெல்லாம்  மதுபானம் வாங்கலாம் என்று வரையறுப்பதுக்கும் தீர்மானிப்பது யார்?    குடிப்பவர்கள்  எல்லோரும் குடிகாரரா? 

     

  15. 3 hours ago, மோகன் said:

     

    ஆங்கில மாதங்களையே அப்படியே தமிழுக்கு மாற்றியிருந்தேன். இது தவறாக அமையும் எனில் மீண்டும் ஆங்கிலத்திற்கே செல்ல வேண்டும்.

    தமிழ் வல்லுனர்கள் தான் ஆலோசனை தர வேண்டும்

     தை முதலாம் திகதி தைப்பொங்கல்   என்றால் அது நாம் நடைமுறையில்  பாவிக்கும் கலண்டர்ப்படி  ஜனவரி 14 ம் திகதி  வருகிறது.   ஆகவே திரி ஒன்றில் தை 1 என்று யாழில் காட்டுவது எதை என்ற குழப்பத்தையே குறிப்பிட்டேன். 

  16. 15 hours ago, ராசவன்னியன் said:

    அட, இதென்ன எல்லா திகதிகளும் தமிழ் மாதங்களுக்கு மாறிடிச்சி..? :shocked:

    நல்லாவே இருக்கு..! :)

    தமிழ் மாதங்களுக்கு மாறியது நல்லா  இருக்கு. ஆனால் தமிழ் மாதம் என்று கருதப்படும் முதலாம் திகதி சர்வதேச கலண்டரின் படி 14. அல்லது 15 திகதியே வரும். ஆகவே இத்திகதிகள் தமிழ் மாதத்தை கருதுகிறதா என்பதில் குழப்பம் உண்டு. மாவீரர் தினத்தை கார்ததிகை 27 என ஆரம்பத்தில் இருந்ததை நவம்பர் 27 என்று புலிகள் மாற்றியது இந்த குழப்பத்தை தவிர்பதற்காகவே. 

    நிர்வாகம் இதனைத் தெளிவு படுத்த வேண்டும் 

  17. 2 hours ago, தமிழ் சிறி said:

    Image may contain: 1 person, ocean, text, water and outdoor

    அவர் இப்போதா? அவர் மகான் ஆகியதே சிஷ்யைகளுடன் தனியே இருந்து அவர்களிடம் இருந்து பெற்ற இல்லை இல்லை பரிமாறிக்கொண்ட  “சக்தி” யினாலேயே. 

  18. 14 minutes ago, கிருபன் said:

    இது ருல்பனை குஷிப்படுத்த போட்டதா?😬

    லத்தியால அடிப்பதற்கு போலிஸுக்கு அதிகாரம் கொடுத்தவர்களை நாலு கேள்விகேட்கவேண்டும்.

     

    கிருபன் இதில் நான் குஷிப்ட என்ன இருக்கிறது. இதில் உள்ளவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள். இவர்களை ஏமாற்றி அவர்கள் மீது மூடத்தனங்களை திணித்த அந்த ஆவாள் களுக்கு இப்படி அடி விழுந்திருந்தால் உண்மையில் குஷி தான்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.