Jump to content

tulpen

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4150
  • Joined

  • Last visited

  • Days Won

    9

Posts posted by tulpen

  1. யாழ் நகர் அழகுறுவது மிக்க மகிழ்ச்சி. மிக நீண்ட காலத்திற்கு பிறகு நகர வளர்சசியில் அக்கறை  கொண்ட ஒரு மேயர் கிடைத்ததையிட்டு யாழ் நகர மக்கள் மகிழ்சசியடையலாம். 👍👍

  2. On 22/10/2021 at 14:40, நிழலி said:

    பின்னால் ஓடியவர்கள், நின்றவர்களைத் தான் திரும்பி பார்க்க முடியவில்லை, முன்னுக்கு ஒயிலாக ஓடுகின்றவ மயிலின் பெயர், விலாசம் அல்லது ஆகக் குறைந்தது தொலைபேசி இலக்கமாவது வாங்கினீர்களா? 😄

    நிழலி, பின்னால் ஓடியவர்களிடம் Start Point ல் பெயர், விலாசம், தொலைபேசி எண் கேட்க போய் தான் இவ்வளவு வேகமாக ஓட முடிந்தது இணையவனுக்கு.😀 அதற்கும் முன்னே ஓடும் மயிலிடம் கேட்க போனால் சுற்றி வளைத்து கும்மிவிடுவார்களே. 🤣

  3. 7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

    கழிவு மணமகனுக்கா மணமகளுக்கா ...? குழப்பமாயிருக்கே ....?
    கொஞ்சம் வெயிற் பண்ணியிருந்திருக்கலாமோ ...?

    அதில போன் நம்பபர் இருக்கு. வீட்டுக்கு தெரியாமல் போன் போட்டு கேட்க வேண்டியது தானே. 😂

  4. 28 minutes ago, முதல்வன் said:

    அழகான ஆணித்தரமான கேள்வி. 

    அரசியல்வாதிகளால் தமிழ் இளைஞர்கள் உணர்வூட்டப்பட்டார்கள். அரசியல்வாதிகள் அதை வாக்குகளாக மாற்றி தம்மை வெற்றியடையச்செய்வதோடு அந்த தமிழ் இளைஞர்களை தம்மால் அடக்கி ஆளலாம் என்று நினைத்தார்கள். 

    அது அப்படியே எதிர்மறையாகி புலிகள் ஆயுதத்தால் அரசியல்வாதிகளை அடக்கலாம் என்று நினைத்தார்கள். தம்மைத்தூண்டி போராட அழைத்துவிட்டு அற்ப சலுகைகளுக்காக விலைபோவதாக எண்ணினார்கள். அரசியல் நேர்மையற்றவர்களுக்கு புகட்டும் பாடம் பின்னர் வரும் அரசியல்வாதிகளை புடம்போடுவதோடு தங்கள் சொற்படி நடப்பார்கள் என நினைத்தார்கள். 

    ஒரு சில இராணுவ வெற்றிகளும் தமிழ் அரசியவாதிகளின் கையகலாத்தன்மையினால் ஏற்பட்ட அரசியல் தோல்விகளும் புலிகளை தாம் நடாத்தும் போராட்டம் தான் தமிழருக்கான ஒரே தீர்வு என்று நினைத்தார்கள். எண்பதுகளில் புரட்சி / நாடுகளின் விடுதலை அவர்கள் அப்படி எண்ணி இருக்க இலகுவாக வழிவகுத்து இருக்கலாம். 

    அதேவேளை இந்தியாவை அதன் பூகோள நலனுக்காக இலங்கையில் நடாத்தும் விளையாட்டுகளை புலிகள் புரிந்துகொண்ட அளவுக்கு வேறு யாரும் புரிந்தார்களா தெரியவில்லை. திலீபனின் பன்னிருவேங்கைகளின் உயிரைக்கொடுத்து மக்களுக்கு புரியவைத்தார்கள் அதை இன்றுவரை மக்களின் மனதில் ஆழமாக பதித்துவிட்டு சென்றார்கள். 

    அவ்வாறே இந்திய இராணுவம் நடாத்திய கொலைவெறி ஆட்டத்துக்கு ராணுவ ரீதியாக உதவியவர்களுக்கு நிகரனாவர்கள் அரசியல் ரீதியாக உதவியவர்களும் தான். 

    தங்களால் தூண்டப்பட்டு தங்களை மீறி செயற்படும் தங்களின் இடைவெளியை நிரப்பும் எவரையும் அவர்களுக்கு பிடிக்காது.  கருணாநிதி அமிர்தலிங்கம் போன்றவர்கள் அந்த வகையறாவுக்குள் தான் வருவார்கள். 

    அவர்கள் கொல்லப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ஆனால் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். அப்போது புலிகளுக்கு இருந்த இலகுவான தெரிவாக கொலை இருந்திருக்கலாம்.

    நான் இந்த பதிவுகளை என் கண்ணோட்டத்தில் இருந்தே பதிகிறேன். வேறு சிலருக்கு வேறு கண்ணோட்டம் இருக்கலாம். நான் எந்த அமைப்பினதோ புலிகளினதோ பிரதிநிதி அல்லர். உங்களைபோன்ற தமிழர் விடுதலை மீது பற்றுக்கொண்ட தமிழன்.

    நீலன் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.  நான் எழுதுவதில் பிழை இருக்கலாம் எல்லாரும் எழுதுங்கள் வரும் சந்ததி சரியெனபடுவதை எடுக்கும் தெளிவுகொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

    ஆனால் எம்மனதில் சுழலும் கேள்விகளை பாரங்களையும் இறக்கும் இடமாக இந்த களத்தை பாவியுங்கள் அது நீங்கள் உட்பட அனைவருக்கும் அவசியமானதும் நன்மைபயக்கவைப்பதும் ஆகும்.

    முதல்வன், உங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால் நான் கூறியது அந்த அரசியல்வாதிகளின் தனிப்பட்ட, அரசியல் குணாம்சம்களை பற்றியதல்ல. அவர்கள் சரியானவர்கள் என்று கூட நான் கூறவில்லை. ஆனால் அவர்களை கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த நன்மை எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசின் பரப்புரைக்கு உதவி செய்ததாகவே அமைந்தது என்பதையையே குறிப்பிட்டேன். ஒரு நாட்டை ஸதாபிப்பதானால் உலக நாடுகளின் அங்கீகாரத்துடனேயே அதை செய்ய முடியும்.  எவரைப்பற்றியும்  எமக்கு கவலை இல்லை எமக்கு  சிறிதறவு ஒத்துவராவிட்டால் அல்லது முரண்பட்டால் அவரை கொலை செய்வேன் என்ற நிலைப்பாடு ஒரு நாட்டை ஸதாபிக்க உதவாது. அப்படி என்றால் ஏதாவதொரு பலமான நாட்டில் ஆதரவாவது இருந்திருக்க வேண்டும். அல்லது உலக நாடுகளை எதிர்த்து வெல்லக்கூடிய super power  எமக்கு இருந்திருக்க வேண்டும். 

    நீங்கள் கூறியது போல் புலிகள் எப்போதும் பிரச்சனைகளை தீர்க்க பின்இ விளைவுகளை சிந்திக்காது  இலகுவான தெரிவுகளாக கொலைகளையே நாடினார்கள்.  எவ்வளவு வீரத்துடன் போராடிய போதும் அவர்களின் பெரிய மைனஸ் பொயின்ற் அது தான். யாழ் முஸ்லீம் மக்கள் வேளியேற்றமும் அந்த வகையானதே. 

    • Like 1
  5. 8 hours ago, முதல்வன் said:

    இந்த திரியில் அதை ஆராய விரும்புகிறேன். உண்மையான தமிழ் மக்கள் மீதான அவர்களின் விடுதலை மீதான பற்றுக்கும் வெறுமனே புலி எதிர்ப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நான் வாசிப்பவர்களுக்கே விட்டுவிட விருப்பபடுகிறேன். 

    தொடர்சசியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகளால் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த இலாபம் என்ன?

    தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதல்களால் தமிழர் போராட்டம் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை கண்டது. தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக பிரச்சாரம் செய்ய ஶ்ரீலங்கா அரசுக்கு சிறந்த வாய்ப்பைக் கொடுத்தது. விடுதலைப்புலிகளால் கொல்லப்படாதவர்களையும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் சேர்தது ஶ்ரீலங்கா அரசாங்கம் பிரச்சாரம் செய்த போது அவற்றறை மறுக்க முடியாத கையறு நிலையில் புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் இருந்தார்கள். பெயர் குறிப்பிட்டு இவர்களை எல்லாம் நாம் கொலை செய்யவில்லை என்று கூறும் போது அப்படியானால் மற்றவைகளை நீங்கள்  தானே செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் மௌனமாக அரசின் பரப்புரையை எதிர் கொள்ள முடியாத நிலை இருந்ததை ஜெனிவாவில் தமிழர் தரப்புக்காக செயற்பட்ட பலர் அறிவார்கள். 

    உலக ராஜதந்திரிகளால் நன்கு அறியப்பட்ட நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட போது ஜெனிவாவில் தமிழர் தரப்பில் பரப்புரை வேலைகளை மேற்கொண்ட நண்பர்கள் சில காலம் ஜெனிவா பக்கமே போக முடியாமல் இருந்தது. அதை தொடர்தது அதே ஆண்டில் சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல். என்னைப் பொறுத்தவரை இவை எல்லாம் தனியே வெறும்  உணர்சசி வசப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்களே.

    யாழ்பபாண எம். பியாக இருந்த யோகேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாலேயே 1981 ல் அவரது வீட்டை எரித்து அவர் மயிரிழையில் தப்பி இருந்தார். அப்படிப்பட்டவர்களை கொலை செய்து விட்டு இன்று எமக்காக அரசியல்வாதிகள் இல்லையே என்று அழுகிறோம். 

    இது போல் பல விடயங்களை குறிப்பிடலாம். இவற்றை கூறும் போது பழைய விடயங்களை கிளறுவதாக கூறுவார்கள். ஆனால் தாம் சிலாகிக்கும் பழைய விடயங்களை மட்டும் அசைபோட்டு  மணிக்கணக்கில் பேசுவார்கள். 

    • Like 2
  6. திரைப்பட விமர்சனத்திற்கு நன்றி கோஷான். ஆயுத போராட்டத்திற்கு முந்திய எமது வரலாற்று மிக சுருக்கமாக தொட்டு சென்ற படம் என்று இதை கூறலாம். போராட்ட வரலாற்றை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் பாரவையுடன் எடுத்துள்ளார்கள். படத்தை எடுத்த கலைஞர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் ஏற்கனவே கூறியது போல தமிழர் போராட்டத்தின் மிக முக்கியமான திருப்பு முனையான தமிழாராய்சசி மகாநாட்டு படு கொலைகளை  வரலாற்று திரிபுடன் காட்டியது இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பொயின்ற். நடந்த உண்மையை அப்படியே காட்டி இருக்கலாம். பொலிசார் நேரடியாக தாக்கி மகாநாட்டு ஏற்பாட்டாளர்களை கொன்றதாக மிக பெரிய பொய்யை கூறுவது   எமது போராட்டத்திற்கு மேலும் உதவும் என்று பட இயக்குனர் நினைத்திருக்கலாம்.

    இருந்தாலும்  ஒரு சிறந்த கலைப்படைப்பு என்ற ரீதியில் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். 

  7. 56 minutes ago, goshan_che said:

    இந்த தொடரை கூட்டமைத்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள். 

    இந்த உழைப்பு மெச்சதக்கது. மட்டும் இல்லை ஒரு திரியில் வரலாறு திரிக்கப்படும் போது - அதை அங்கே மட்டும் எதிர்காமல் - அதை ஒரு தொடராக்கி - ஆவணப்படுத்துவது செயற்கரிய செயல். 

    பலர் சுட்டியது போல இது ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தாங்கி நிற்கிறது. அதை ரஞ்சித்தும் ஏற்று கொண்டிருக்கிறார்.

    ஆனால் 2002க்கு பின்னான ரஞ்சித் இணைத்த தரவுகளில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு படவில்லை.

    அதே போல் முறிந்த பனைகள் யாழில் வளராது என்பதும் உண்மைதான். பலவருடங்களுக்கு முன்பே எனது ஒரு நீண்ட பதிவை நீக்கி விட்டு நிழலி ஒரு விளக்கம் கொடுத்தார் - யாழ் பக்கம் சாரா ஊடகம் இல்லை என்று. ஆகவே இதை வாசிக்கும் எதிர்கால சந்ததி இந்த பக்க பார்வையை இங்கும், மறுபக்க பார்வையை வேறு எங்கோவும் தேடி கண்டு, உண்மை அறியும். 

    ஆனால் வாழ்ந்த சாட்சியாக -உண்மை மிக அதிகமாக ரஞ்சித்திற்கு அருகேதான் இருக்கும் என்பதையும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பது என் துணிபு.

    ஆனால் ஒரு constructive feedback (அதானே குறை சொல்லாமல் கோஷனா🤣) - ரஞ்சித் எழுத தொடங்கிய பரப்பை விட்டு கொஞ்சம் mission creep பண்ணி, வேறு விடயங்களையும் தொட்டதால் கவனம் சிதறி விட்டது என நினைக்கிறேன்.

    இதை “ஒரு” துரோகத்தின் நாட்குறிப்பு என்ற வரையறையில் 2002 க்கு பின்னான நிகழ்வுகளில் மட்டும் கவனத்தை செலுத்தி இருந்தால் - யாருக்கும் அவற்றில் முரண்பட ஏதும் இருக்காது என நினைக்கிறேன்.

    அதை விடுத்து ரஞ்சித், எது துரோகம், துரோகத்தின் பல்வேறு வடிவங்கள், என்று போகும் போது பார்வைகள் மாறுபடுவது தவிர்கவியலாதது.

    ரஞ்சித் தனியே தரவுகளின் மீள் பிரசுரம் என்பதோடு நின்று, தன் வர்ணனையை தவிர்த்திருந்தால் அவர் நோக்கம் இன்னும் சிறப்பாக இலக்கை அடைந்திருக்கும்.

    பலர் இதில் கருத்திட்டு, இந்த திரியை விவாததிரியாக மாற்றாமைக்கும் ரஞ்சித்தின் நோக்கத்தை புரிந்து வழி விட்டதே காரணம் எனவும் நான் நம்புகிறேன்.

    நான் கூறவந்த விடயத்தை உங்கள் மேம்பட்ட எழுத்து நடையால் முழுமையாக்கதற்கு நன்றி கோஷான். உங்கள் கருத்தின் பிரகாரம்,  இந்த பதிவை விவாதக் களமாக்காமல், ரஞ்சித்தின் பக்க பார்வையிலான தகவல்களை பதியும் களம் என்பதை உணர்ந்து ஒதுங்கி கொள்ளவே நானும் விரும்புகிறேன். அதனாலேயே இதில் கருத்திடுவதை தவிர்த்து வந்தேன்.  

  8. 13 hours ago, நன்னிச் சோழன் said:

     

    @ரஞ்சித்

    வணக்கம் அண்ணை, 

    தாங்கள் மிகவும் அளப்பரிய பணியினை செய்து வருகிறீர்கள்... தொடர்ந்து செய்யுங்கள்... எந்த இடையூறு வந்தாலும் செய்வதை நிறுத்தாதீர்கள். 

    என்னைப் போன்ற இளைய தலைமுறைக்கு(2k) தங்களின் ஆவணப்படுத்தலானது வரலாற்றை அறிந்து கொள்ளவும் எமக்கு எம்மினதின் புல்லுருவிகள், காட்டிக்கொடுப்போர், வஞ்சகர் போன்றவர்கள் ஆரார், எந்தெந்த வடிவத்தால் இருந்தார்கள், இனியும் எப்படியெல்லாம் பசுத்தோல் போர்த்தி வருவார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், படிப்பினையைச் செய்யவும் இத்தொடர் மிகவும் உதவி கரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

    இத்தொடரானது
    -->கூலிப் படைகளாகச் செயல்பட்ட மாற்று இயக்கத்தின் வால்களுக்கும்,
    -->சிங்கள அடிவருடிகளுக்கும்,
    -->புலிகளைப் பிடிக்காதோருக்கும், 
    -->தமிழீழம் கிடைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்போரிற்கும், 
    -->தவறுகளைச் சரிசெய்யப்போகிறோம் என்று கூறி இனத்தை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் பேர்வழிகளுக்கும்,  

    இத்தொடர் உறுத்தும்; உறுத்துகிறது. அதை பற்றியெல்லாம் தாம் சட்டை செய்ய வேண்டாம்.... தொடங்கியதை முற்றாக எழுதி இனிதே முடித்து வையுங்கள்... 

    நன்றி

    வரலாற்றை துறை ரீதியாக ஆய்வு  செய்ய விரும்பும் எமது எதிர்கால தலைமுறை மாணவர்கள் ஒரு போதும் ஸ்ரீலங்கா அரசின் தகவல்களில் மட்டுமோ அல்லது தமிழ் தரப்பின் தகவல்களில் மட்டுமோ தங்கி இருக்கப்போவதில்லை. எல்லா தரப்பின் தகவல்களையும் ஆய்வு செய்து எது உண்மை என்று கண்டறிய கூடிய அளவுக்கு தகவல்கள் இன்றைய தகவல் தொழில்நுட்பக்காலத்தில் இணையங்களில் குவிந்து கிடக்கின்றன. துறைசார்  வரலாற்று மாணவர்களிடன்  இவ்வாறாக  ஒருபக்க பார்வையான தகவல்களை சரிபார்த்து உண்மைகளை கண்டறியும்  திறமையும் இருக்கும். ஐரோப்பாவில் கல்விகற்றுக்கொண்டிருக்கும்  பல மாணவர்களிடன் நான் நேரில் பார்த்த நல்ல விடயம் எந்த விடயத்தையும் அப்படியே நம்பாமல் அதை உறுதிபடுத்த பல்வேறு கோணங்களில் கேள்வி கேட்பது. 

    அந்த ரீதியில் ரஞ்சித் பல்வேறு  இணையங்களில் இருந்து பெற்று இங்கு இணைக்கும் தகவல்களும்  நீங்கள் கூறிய எதிர்கால துறைசார் வரலாற்று மாணவர்களுக்கு ஆய்வுகள் செய்யவதற்கான தகவல் துளிகள் பெற நிச்ய்யமாக  உதவியாக இருக்கும். 

     தகவல்களை திரட்டி இங்கு யாழ்கள வாசகர்களுக்கு பகிரும் ரஞ்சித்தின் உழைப்பு பாராட்டத்தக்கது என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.  

    • Like 2
  9. 12 minutes ago, goshan_che said:

    அதை விட பெரிய கவனிப்பு அண்ணை. அத்தோட வியாபாரம் மற்றைய நாட்டவர் செய்யிறெண்ட்டால் ஒரு எமிரேட்டியயையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என நினைக்கிறன். சும்மா இருந்தே காசு பார்க்கலாம்.

    அதை விட பெரிய கவனிப்பு ஒரு தொடர்மாடி வீட்டு விற்பனையில் கூட அந்த வீட்டின் அழகை ரசிக்காது அடுத்த இன பெண்களிற்கு விலை பேசும் சமுதாயம்  தன் இனப் பெண்களின் கற்பையும், அறத்தையும் மட்டும் அடுத்தவன் பாராட்டி சீராட்ட வேண்டுமாம்.🤣

  10. ஈழப்பிரியன் உங்கள் இளமைகால நினைவுகள் அருமை.  சிறப்பாக அதை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நீராவியடி அதை சுற்றி வர இருக்கும் இடங்கள் யாழ் இந்துக்கல்லூரியின் சுற்றாடல் எனது பாடசாலை நினைவுகளையும் மீட்டிப்பார்க்க வைத்துவிட்டது. தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂

    • Haha 1
  11. நோய் பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி நெடுக்கஸ். உங்கள் அம்மாவின் இழப்பின் துயரம் மிக வலி மிகுந்தது.  உங்களின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன். 

  12. 2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    நன்றி உடையர் அண்ணா & துல்பேன் அண்ணா.. 

    நிலாந்தனின் இந்த தெளிவான பார்வையை எல்லோருக்கும் இருக்குமா தெரியவில்லை.. அவர் கூறுவது போல தற்போதைய அரசியல்தலைமைகளுக்கு(விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை தவிர) மக்களின் நலனில் அக்கறை என்பது துளியும் இல்லை.. 

    ஆனால் அவருடைய இந்த காணெளியில் வந்த Think Tank ஏன் எங்களால் இப்பொழுதும் கூட உருவாகவில்லை?

    சரி அப்படி ஒன்று உருவாகினால் கூட அது இனவாத அரசினால் அரும்பிலேயே கிள்ளியெறிப்படும் சாத்தியங்கள் அதிகமாகதானே இருக்கும்?

    ஏன் அரசியல்வாதிகளை அதிகளவு உள்ளடக்கித்தான் இந்த Think Tank உருவாக்கப்படவேண்டுமா? 

    புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியை/பலத்தை பற்றி பிறகு பார்த்துக்கொள்வோம் ஆனால் இந்த Think Tank கட்டியெழுப்ப ஏன் எங்களால் இப்பொழுது முடியாதுள்ளது.. 

    பிரபா, Think Tank என்பது, அரசியல்வாதிகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டியதில்லை. அப்படி இருந்தாலும், அது தமது அரசியல் நன்மைகளை நோக்கியதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. பலவேறு தரப்பிரைக் கொண்டதாக, அல்லது பலவேறு தரப்புக்களின் கருத்துக்களை விமர்சனங்களை காது கொடுத்து கேட்டு உள்வாங்கி ஒரு கருத்துருவாக்கத்தை அமைக்கும் குழுவாக, இருக்கலாம் என்பதுடன் உத்தியோகபூர்வ அமைப்பாக தம்மை வெளிப்படுத்துபவர்களாக இருக்கவேண்டிதில்லை என்று நினைக்கிறேன். 

    ஈழத்தமிழரில் இவ்வாறான அமைப்பு இல்லை என்றாலும் எமது போராட்டம் திசை மாறிப் போக தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அதன் போக்கு குறித்து காத்திரமான  எச்சரிக்கை செய்த சிறிய அளவிலான கலவியாளர்களும் தவறான கண்ணோட்டத்தில், அவர கள் மீதே  குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களும் அழித்தொழிக்கப்பட்டதும் எமது போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  13. On 17/1/2021 at 11:34, உடையார் said:

    இராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்? என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

     

     முதலில்  இவ்வாறான காணொளியை இணைத்தற்கு மிக்க  நன்றி உடையார்.

    நிலாந்தனின் இவ்வாறான அரசியல் தெளிவை நோக்கிய சிந்தனை வரவேற்கப்படவேண்டியது. சகிப்பு தன்மை அற்ற ஒற்றை கருத்துக்களை திணிக்கும் நடைமுறை தோல்வியையே தரும் என்றும், பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்த கூட்டு சி்ந்தனை முறை தான் எமக்கு தேவை என்பதை வலியுறுத்துகிறார். 

    எமது  மிதவாத தலைமைகளின் மட்டுமல்ல ஆயுத போராட்ட தலைமைகளிலும் அதே தவறுகள் இருந்த‍ததை சுட்டிக்காட்டுகிறார்.  எமது போராட்டத்தில், துரோகிக்கும் தியாகிக்கும் இடையே நூலிழை வித்தியாசமே இருந்த வரலாற்றை ஆதாரத்துடன்  சுட்டிக்காட்டுகிறார்.   தமிழீழத்தின் எல்லைகள் என்று நாம் கூறும் இடங்களுகு அப்பால் நடத்தப்பட ஆயுத நடவடிக்கைகள் எமக்கு பாரதூரமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய உண்மையை ஏற்றுக்கொள்கிறார். 

    போராடும் சிறிய இனமான நாம் உலகில் நண்பர்களை உருவாக்காமல் எதிரிகளை உருவாக்கிய தவறான வெளியுறவு பார்வையை எமது தரப்பு கொண்டிருக்காமல் விட்டிருந்தால் தனிமை படுத்தபட்டு தோற்கடிக்கபட்டிருக்க மாட்டாது என்பதை தர்க்க ரீதியாக  அலசுகிறார். 

    அறிவுபூர்வமாக முடிவுகளை உள்நாட்டு ஜதார்த்தம், சர்வதேச ஜதாரத்தம் ஆகவற்றை கணக்கெடுக்மாமல்  உணர்ச்சி வசப்பட்டு பாதிப்பகளின் அடிப்படை முடிவுகளை எடுத்தன் விளைவுகள் கசப்பானதாக  எமக்கு இருந்த  பட்டறிவை சீர்தூக்கி பார்க்க வலியுறுத்துகிறார். 

    கருத்து சொல்பவர்களை பார்த்து நீ என்ன செய்தாய் என்று கேட்கும் பாமரத்த‍னத்துக்கு சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார். தலைமைத்துவத்தில் உள்ளவர்களும் நிறுவனமயப்பட்டு இருப்பவர்களும் தான் ஒன்றை நடைமுறைப்படுத்தலாமே தவிர கருத்துக்கூறும் தனி நபர்களை இப்படி கேட்பது அறிவீனம்.

    தாயகத்தில் விடுதலை போராட்ட காலங்களில் போராட்டத்தோடு பயணித்தால் உண்மைக்கும், மாயைக்கும்  இடையிலான வித்தியாசத்தை இவரால் இன்று தெளிவாக புரிய முடிந்திருக்கிறது. இவரது இந்த அனுபவ பகிர்வு நிச்சயம் எமது போராட்டத்தை தலைமேற்று கொண்டிருக்கிற தலையேற்க போகின்றவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும்.

    இந்த காணொளியை இணைத்த உடையாருக்கு மீண்டும் எனது நன்றிகள்.

    • Like 1
    • Thanks 1
  14. தமிழரின் உரிமைப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருப்பெற்ற காலத்தில் இருந்து தமது இளமைக்கால இன்பங்களைத் துறந்து,  மக்களின்  விடுதலைக்காகவே விடுதலைப் போரில் இணைந்து வீழ்ந்த  அனைத்து வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் எமது கெளரவ வணக்கங்கள். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.