• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அரிஞ்சயன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  32
 • Joined

 • Last visited

Community Reputation

12 Neutral

About அரிஞ்சயன்

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  தஞ்சம் புகுந்த தேசம்
 • Interests
  தேசியத்தலைவனின் கொள்கையை பின்பற்றல், எங்கும் தமிழன் எதிலும் தமிழன், இசை, கவிதை, கதை, இயற்கையை அழகை ரசித்தல்/படம் பிடித்தல் இன்னும் பல..
 1. யாழ்வாணன் உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள்...
 2. மைத்திரேயி நான் நாலு சித்திரையென்று எழுதியிருந்தேன், வன்னியில் எங்கள் இனம் நசுக்கப்பட்டு நாலு வருடங்கள், அதில் சிக்குண்ட காதலுக்கும் நாலு வருடங்கள் ஆகிவிட்டதென்று.... கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி.
 3. கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் உடையார்...
 4. எமது சிதைக்கப்பட்ட வாழ்வியலின் ஒரு துளியைத்தொட்டு எழுதிய வரிகள் உங்கள் மனதைத் தொட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே.
 5. கருத்துடன் சேர்த்து தமிழரின் ஏக்கத்தையும் கோடிட்டுக் காட்டிய புங்கையூரனுக்கு எனது நன்றிகள்.....
 6. சித்திரை நினைவுகள் சித்திரை நிலவில் நித்திரை நீக்கி - உன் முத்திரை விழி பார்த்திருந்தேன்... நிலவின் குளிர்ச்சி உந்தன் முகத்திலா..... உன் முகத்தில் குளிர்மை நிலவின் முகத்திலா - என்று குழம்பிய கணங்களைக் கடப்பதுதான் காதலின் சுகமா என்றிருந்தேன்.... என்னில் ஒட்டிய நினைவு நீயடி... உன் விழியால் எனை நனைத்தாயடி... உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி.... அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி.... வலிக்கும் நிலத்தில் தான் என் வாழ்வு.... மறுபடி நீ வந்து - என்னை மணக்கும் பொழுதில் தான் பலிக்கும் என் நினைவென்று... சிந்திய முத்துக்கள் கொண்டு என்னை வழியனுப்பியவள்.... குரல் கேட்டு நாலு சித்திரை கடந்துவிட்டது.... அவள் நினைவுகளோ - என்னை அகல மறுக்கிறது...... எங்களைக் காக்கவென்று - தன் இரும்புக் கரங்களால் பேரினவாதம் எங்களை நெரித்த போது சிக்கிய புறாக்களில் என் மனதை மயக்கிய மாடப்புறாவும் தானே மாட்டியிருக்கும்.... ஒன்றரை லட்சம் உயிர்களுக்கே இன்னும் பதிலில்லை..... இதில் என் ஒருசோடி விழிகளை நான் எங்கே தேடுவது...... களத்தில் துப்பாக்கிகள் மெளனித்து விட்டன...... ஆனாலும் புலத்தில் - மெளனிக்காத துப்பாக்கி நினைவுகளோடு தமிழர் குலமறுத்தவரின் கழுத்துக்களில் தூக்குக் கயிற்றின் சுருக்குக்கள் விழும் வரை எதிரியுடனான போரில் என் பங்கும் என்றும் இருக்கும் என் சித்திரை நிலவின் ஒருதுளி நினைவு என்னுள் இருக்கும் வரை...... அன்புடன் அரிஞ்சயன்....
 7. மற்றைய பகுதியில் அனுமதி கிடைக்கும் வரை எனது எந்தப் பதிவையும் இங்கே பதியலாமா?
 8. தமிழீழம் என்றும் மறக்க முடியாத ஓர் அற்புதக் கவிஞனின் தமிழீழத்தின் வரி(லி)களுக்கு எம் தமிழீழத்தின் பாடல்களை அன்று முதல் இன்றுவரை பாடும் ஓர் அற்புதக் கலைஞனின் குரல். இணைத்த சுபேஸ் அண்ணாவுக்கு எனது வணக்கங்கள்
 9. நீதி நான் உங்களுக்குப் பிறகு தான் யாழுக்கு வந்திருக்கிறேன். எனக்கும் இன்னமும் இதர பகுதிகளில் எழுத அனுமதி கிடைக்கவில்லை. நிர்வாகம் அனுமதிக்கும் வரை பொறுத்திருக்கவேண்டும்...
 10. ராஜா நானும் புதியவன்... தமிழீழத்தைச் சேர்ந்தவன், தமிழக தொப்புள் கொடி உறவான உங்களை நானும் வரவேற்கிறேன்...
 11. தகுந்த விளக்கம் அண்ணா, பதியும் அனுமதி கிடைத்ததும் பொருத்தமான இடத்தில் பதிய முயற்சிக்கிறேன்... மீண்டும் நன்றி
 12. அனுமதி கிடைத்ததும் நான் எனது அறிமுகப் படைப்பாக தமிழரின் வீர வரலாற்றை மிகவும் மேலோட்டமாக ஒரு சிறு கட்டுரை வடிவில் தர இருக்கிறேன். இப்படியான கட்டுரைகள் எழுதும் போது எந்தப் பகுதியில் பதியவேண்டும் என்பதை யாராவது அறியத்தருவீர்களா
 13. தகவலுக்கு நன்றி விசுகு அண்ணா, உங்கள் வரவேற்புக்கும் எனது நன்றி
 14. எனக்கு ஏன் வேறு பகுதியெதிலும் எழுதமுடியாமல் உள்ளது. புதிதாகச் சேர்பவர்களுக்கு எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அப்படியானால் அது எப்போ நீங்கும்.