colomban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,089
 • Joined

 • Last visited

Community Reputation

290 ஒளி

About colomban

 • Rank
  Advanced Member
 • Birthday 03/23/1972

Profile Information

 • Gender
  Male
 • Location
  Doha, Qatar
 1. இந்த கொலையை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. இது மிகவும் காட்டு மிராண்டித்தனமான செயல். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ரோட்டில் ஒட ஓட விரட்டி ஒர் பெண்ணை கொல்வதில் எந்த வீரமும் இல்லை. இவர் என்ன மனநிலையில்? ஏன் இந்த கொலைசெய்தார்? என்று இவரை தீர விசாரித்து உண்மையை அறிவதே சால சிறந்தது. இக்காணோலியை பார்த்தால் ஏதோ ஓர் இந்தோசமான நிகழ்வில் எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. இதில் பெண்கள் / ஆண்கள் ஆடிப் பாடி மகிழ்வது வழமை. இதை வைத்து ஒருவரது குணவியைபுகளை தீர்மானிப்பது தவறு.
 2. நேற்று ஸ்காபரோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுட்டுக் சம்பவமொன்றில் 25 வயதுடைய சாரங்கன் சந்திரகாந்தன் என்ற தமிழ் இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். சீ .ரி.வி. செய்தியின் தொடுப்பு மிடில்பீ ல்ட் / மக்நிக்கல் சந்திப்பிலுள்ள வாகனத்தரிப்பொன்றில் வியாழன் இரவு 10 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவசரகால சேவகர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது இரண்டு துப்பாக்கிச் சூடுகளுடன் வாகனமொன்றினுள் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட இவ்விளைஞர் அவ்விடத்திலேயே உயிர் துறந்தார் என அவ்விடத்திலிருந்து காவல்துறை அதிகாரி ஜிம் கொடேல் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அருகிலுள்ள அச்சுத் தொழிலகத்தில் சாரங்கன் சந்திரகாந்தன் பணிபுரிந்ததாகவும், அமைதியான, நட்பை விரும்பும் அன்பான சுபாவமுள்ளவர் எனவும் அவரது நண்பர்கள் விபரித்ததாக அறிய முடிகிறது. கொலைத் துப்பறியும் மற்றும் தடையவியல் ஆய்வு நிபுணர்களும் வெள்ளி காலை வரை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்கள். சம்பவம் நடைபெற்ற வாகனத்தரிப்பி டத்தில் ‘கொண்டாட்டம்’ ஏதும் நடைபெற்றிருக்கலாம் எனக் காவல்துறை கருதுகின்றது. அவசர சேவைகள் வண்டி சம்பவ இடத்திற்கு வந்தபோது பலர் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுவிட்டதாகவும் அவர்களில் சாட்சிக்கள் யாருமிருந்தால் ரொறொண்டோ காவல்துறையின் 42 வது பிரிவிற்குத் தகவல் தருமாறும் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. http://marumoli.com/கனடா-ஸ்காபரோவில்-துப்பா/செய்திகள்/news/
 3. நிச்சயமாக இந்த கிழவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கபட வேண்டும். மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இப்படி இரண்டு அடி அடிப்பதனாலே எதோ எமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். ஆத்திரத்திற்கு வடிகாலாக அமையும். ஆனால் இது தீர்வல்ல. பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு நீதி / ந‌ட்டயீடு கிடைக்க வேண்டும். எதிர்காலம் பாதுகாக்க பட வேண்டும். இப்படி சட்டத்ததை நீங்கள் கையில் எடுப்பது தவறு. கிழவனுக்கு படாத இடத்தில் பட்டு ஏதும் நடந்து இருந்தால் நீங்கள் இருவரும் சட்டத்தினால் தண்டிக்கப்ப்டுவீர்கள்.
 4. அல்லாவை தவிர ஒருவரும் கடவுளில்லை என முஸ்லீம்கள் கூறுகின்றார்கள் “There is not God but Allah”, in Arabic, “La ilaha ill-Allah”,
 5. இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது என்பதை, பஷீரின் பதிவுக்கு எழுதப்பட்ட கருத்துக்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டம் ஏறா வூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த இயக்கம் சார்பில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பயணத்தை ஆரம்பித்தவருமாவார். அதனால், தமிழ் ஆயுத இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட தனது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் பெரிதும் அறிந்திருந்தார். சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை முஹம்மட் நஸார் என்பவர், 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர் என்றும், அதற்காகவே அவர் கொல்லப்பட்டதாகவும், பஷீர் சேகுதாவூத் தனது பதிவில் விவரித்திருந்தார். இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பிபிசி தமிழ் பலரைச் சந்தித்தது. ஆசாத் - நடந்த கதை அதற்கு முன்னர், ஆசாத் பற்றிய தகவல்களை அறிந்திருந்தல், இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதால், அவர் தொடர்பில் சுருக்கமாக சில தகவல்களை இங்கு வழங்குகின்றோம். மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 34 வயது. அவரின் தயாரின் பெயர் லத்திபா பீவி, தந்தை நஸார். இருவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். அம்பாறை மாவட்டம் கல்முனை - இஸ்லாமாபாத் பகுதியில் ஆசாத் திருமணம் முடித்திருந்தார். அவரின் மனைவியின் பெயர் பைறூஸா. இவரும் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் உறவினர்களுடன் சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலியாகி விட்டார். சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்த பின்னர், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆசாத்தின் தலை உள்ளிட்ட உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றினை அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இதனையடுத்து, மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஆசாத்தின் உடற்பாகங்களை ஆகஸ்ட் 26ஆம் தேதி போலீஸார் அடக்கம் செய்தனர். ஆனால் அந்தப் பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, குறித்த உடற்பாகங்களை அங்கிருந்து அகற்றுமாறு கூறி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆசாத்தின் உடற்பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைவாக கடந்த 2ஆம் தேதி, கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடற்பாகங்களை போலீஸார் தோண்டியெடுத்தனர். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்கொலைக் குண்டுதாரி ஆசாத்தின் உடற்பாகங்கள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த உடற்பாகங்களை எதிர்வரும் 26ஆம் தேதிக்குள் அடக்கம் செய்யுமாறு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு காத்தான்குடியில் நாம் சந்தித்த அநேகர் தயக்கம் காட்டினர். சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர் இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை எம்மிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர். ஆசாத்தின் தந்தை நஸார், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு வந்ததாக, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் பிபிசி தமிழ் இடம் தெரிவித்தார். அவ்வாறு புலிகள் இயக்க உறுப்பினராகச் செயற்பட்டமைக்காகவே, 1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் வைத்து, அப்போது ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால் நஸார் கொல்லப்பட்டதாகவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் கூறினார். இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் சுமார் 10 வருடங்கள் அஸ்பர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு காத்தான்குடி 5ஆம் பிரிவு - கிளினிக் வீதியில் அமைந்துள்ள தன்னுடைய மூத்த சகோதரியின் வீட்டில் வைத்து, நஸார் மீது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. "நானும், எனது தாயாரும், என்னுடைய சிறிய வயது பிள்ளைகளும் வீட்டில் இருந்த போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. எங்கள் வீட்டுக்குப் பின் பக்கம் நஸார் கத்தும் சத்தம் கேட்டது. நாங்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் கடுமையான வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்தார். யாரோ சிலர், அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றிருந்தார்கள்". "காயப்பட்ட அவரை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினோம். அப்போது அங்கு திடீரென வந்த ஒருவர், வெட்டுக் காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஸாரை, துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடினார். நஸாரின் உயிர் பிரிந்து விட்டது" என்று, 29 வருடங்களுக்கு முன்னர், நஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார் அவரின் மூத்த சகோதரி சுபைதா உம்மா. ஆனாலும், நஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்கிறார் அவர். நஸாரின் மூத்த சகோதரியை காத்தான்குடியிலுள்ள அவரின் வீட்டில்தான் நாம் சந்தித்துப் பேசினோம். அது உயரம் குறைந்த - ஒரு சிறிய வீடு. நாங்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் தரையை கையால் சுட்டிக்காட்டி, "இந்த இடத்தில் நஸாரை கிடத்தியிருந்த போதுதான் அவரின் உயிர் பிரிந்தது" என்றார். நஸாரின் பெற்றோருக்கு 7 பிள்ளைகள். அவர்களில் நால்வர் ஆண்கள். நஸார் எப்போது பிறந்தார் என சுபைதா உம்மாவுக்கு நினைவில்லை. ஆனாலும் அவர் கூறிய சில தகவல்களை வைத்து 1957ஆம் ஆண்டு நஸார் பிறந்திருக்கலாம் என அனுமானிக்க முடிந்தது நஸார் கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபரொருவரும் 'அந்த சம்பவம்' பற்றி பிபிசி தமிழ் இடம் பேசினார். ஆயினும், தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். "1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், எங்கள் வீதியில் போலீஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இரவு வேளைகளில்தான் அங்கு போலீஸார் வருவார்கள். நஸார் மீது காலை 11.00 மணியளவில் அந்தத் தாக்குதல் நடந்தது. புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தமைக்காகத்தான் அவர் கொல்லப்பட்டார்" என்றார் அந்த அயல்வீட்டுக்காரர். நஸாரின் ஜனாஸாவுக்கு காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தது என்றும், அந்தப் பள்ளிவாசலுக்குரிய மையவாடியில்தான் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார். ஆரம்பத்தில் நஸார் கைத்தறியில் நெசவு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத். http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_793.html
 6. (ரெ.கிறிஷ்ணகாந்) இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம் மதத்தை தழுவி உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலை ஒத்ததான தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறப்படும் விடயத்தை முற்றாக மறுப்பதாகவும், இது தொடர்பில் இராணுவ மட்டத்தில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் கடந்த 16 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய, மக்கள் சேவை அமைப்பு என்ற அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் ரிஷாம் மரூஷ் என்ற நபர், கொமாண்டோ படையணியைச் சேர்ந்த அசங்க பிரியந்த என்பவரின் அறிவுறுத்தலுக்கமைய, பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் இஸ்லாம் மதத்தைத் தழுவி தாக்குதல் ஒன்றை நடத்த தயாராவதாக கூறியிருந்தார். இது தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் மெட்ரோ நியூஸ் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்போது, அவர் மேலும் கூறுகையில், குறித்த நபர் தெரிவித்துள்ளதாக கூறப்படும் விடயங்கள் எவ்வித அடிப்படையுமற்றது எனவும், தன்னை பிரபல்யப்படுத்துவதற்காக இவ்வாறாக கூறப்படும் தகவல்களால் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றார். அத்துடன், இந்த ஊடக சந்திப்பை நடத்திய நபர் தொடர்பிலும், அவரால் கூறப்பட்ட கொமாண்டோ படையணியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுபவர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கவு ள்ளதாகவும் விரைவில் குறித்த நபர்களை அழைத்து வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, சந்தேகநபர் எனக்கூறப்படும் இராணுவத்தின் உறுப்பினர் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறியுள்ளதாக ரிஷாம் மரூஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் அவருடன் ஸ்கைப்பில் உரையாடியதாக புகைப்பட ஸ்க்ரீன் ஷொட் ஒன்றையும் மரூஸ் காண்பித்திருந்தார். இந்நிலையில், பேஸ்புக் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மேற்படி வெளிப்படுத்தல் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/09/45.html
 7. 48 மணித்தியாலங்களுக்குள் எழுத்து மூலமாக, தமக்கான நிரந்தர தீர்வை அறிவிக்காத பட்சத்தில் தீக்குளிப்போமென, அரசாங்கத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (19) நிரந்தர நியமனம் கோரி, உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, பட்டதாரிகள் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தனர். https://www.madawalaenews.com/2019/09/blog-post_959.html
 8. எனக்கு என்டால் இது பிடிக்கல்லே. என்னடப்பா இது. இங்கு இலங்கையில நம்மட குடும்பப்பெண்கள் எங்கும் வெளியில் புறப்ப‌டும்போது, ட்ரெஸிங் ரூம்பில் கண்ணாடி முன் நின்று, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும் தன் கணவனை, "அப்பா இங்க‌ ஒருக்க வாங்க, இந்த பிரா கொக்கியை கொஞ்சம் சரிய போட்டு விடுங்கள், என்று கேட்கும் போது, ஓடி சென்று தொட்டு தடவி, பிரா கொக்கியை சரியாக பூட்டி விட்டு ஒரு அணைப்பு கொடுத்து விட்டு போகும் போது கிடைக்கும் சந்தோசம் / அன்பு எல்லாம் இல்லாமல் போகின்றதே.
 9. எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி) உரலுக்கு ஒரு பக்கம் அடி தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி என்று கிராமங்களில் பழமொழியொன்றுகூறப்படுவது வழக்கம். தவிலைப் போன்று இரண்டு பக்கமும் மாறி மாறி அடி விழுவது இலங்கை முஸ்லிம் சமூகத்தின தொடர் கதையாக மாறிவிட்டது. இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயம் சிங்கள பேரினவாத சக்திகளாலும் தமிழ் குறுந்தேசியவாதிகளாலும் சுதந்திர வரலாற்றிலிருந்து இற்றைவரை இன நெருக்குவாரங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பது கண்கூடு. இலங்கையில் வரலாற்றுக் காலம் முதல் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்ந்து வந்துள்ளது. தற்போதைய இன முறுகல்கள் சுமார் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ஆரம்பித்துள்ளது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற கூற்றும், அதனைத் தொடர்ந்த முஸ்லிம் - சிங்கள இனக் கலவரம் என்பவற்றில் முஸ்லிம்களுக்கெதிரான அவரின் நிலைப்பாட்டுடன் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஆரம்பித்துள்ளமையும் எமது அவதானிப்புக்குறியது. தவிர, 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரம் அனைத்தும் தமிழ்-சிங்கள உறவை மாத்திரமன்றி தமிழ்-முஸ்லிம் உறவையும் பாதித்தது. இலங்கை முஸ்லிம்களை பொருத்தமட்டில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரந்து வாழ்கின்றனர். குறிப்பாக மூன்றில் இரண்டு பகுதியினர் வடகிழக்கில் வாழ்கின்றனர். சிங்களப் பேரினத்திற்கும் தமிழ் சமூகத்திற்குமிடையிலான சாத்வீக வழிப் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது முஸ்லிம்கள் இடையில் அகப்பட்டு நசுக்கப்பட்டனர். இவ்வாறு நீண்ட கால கசப்பான வரலாற்றைக் கொண்ட இரண்டு சமூகங்களின் உறவு மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம் இரண்டு தரப்புக்களாலும் இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது. இலங்கையில் மூன்று தாசாப்த காலமாக இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் இன நல்லுறவு என்ற எண்ணக்கரு அனைவரினதும் கரிசனை பெற்ற ஒரு பிரதான விடயமாக திகழ்கிறது. அந்தவகையில் இலங்கை சிறுபான்மை சமூகங்கள் என்றடிப்படையில் தமிழ் - முஸ்லிம் உறவு எவ்வாறு காணப்பட்டது என்பதை கண்டறிவது அவசியமாகும். தமிழ் - முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களிடையே அரசியல், பொருளாதார, சமூக, சமய, கலாசார, கல்வி போன்ற சகல துறைகளிலும் நல்லுறவு பேணப்பட்டுள்ளது. அந்நல்லுறவுக்கு இரு இனங்களின் தாய்மொழியாக தமிழ் மொழி காணப்பட்டமை, அயல் கிராம வாழ்க்கை முறைமை போன்றன அடிப்படை உறவுப் பாலமாக திகழ்ந்துள்ளன. இன்றைய சூழ்நிலையில் பழைய இன நல்லுறவை மீண்டும் நினைவுபடுத்துவதும், தமிழ் - முஸ்லிம் உறவில் புதியதொரு மாற்றத்தினை ஏற்படுத்துவதும் கட்டாயமாகும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை, தமிழர், முஸ்லிம்களின் உறவுக்குப் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’, ‘நகமும் சதையும்’ ஆகியவை உதாரணங்களாக எடுத்துக் காட்டப்படுவதுண்டு. அந்தளவுக்கு புவியியல், கலாசார, பண்பாட்டு அடிப்படையில் பின்னிப் பிணைந்த சமூகமாக, முஸ்லிம்களும் தமிழர்களும் வாழ்ந்துள்ளார்கள். தமிழ் முஸ்லிம்களுக்கிடையேயான உறவு என்பது பாரம்பரியமிக்கது. சிங்களச் சமூகம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தபோதெல்லாம் தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். தந்தை செல்வாவின் பெடரல் கட்சியுடன் முஸ்லிம்கள் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தனர். இலங்கை முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வட கிழக்கிற்கு வெளியே வாழ்ந்ததால் தேசிய சிங்களக் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என தேசிய அரசியலில் இணைந்து அவர்கள் ஈடுபட்ட போதும் வட கிழக்கில் தமிழ் கட்சிகளுடனே ஓரளவு புரிந்துணர்வுடன் முஸ்லிம்கள் இணைந்து செயல்பட்டனர். இன்னும் சொல்லப்போனால் சுயாட்சிக்கான போராட்டம் ஆரம்பமானபோது தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களோடு முஸ்லிம் இளைஞர்களும் தம்மை இணைத்துக் கொண்டனர். காலப்போக்கில் தமிழ்ப் போராளிகள் முஸ்லிம்களின் பக்கம் தங்களது துப்பாக்கிகளை திருப்பியபோதுதான் இரு சமூகத்திற்கிடையே இடைவெளி உருவானது. அந்த இடை வெளியை ஏற்படுத்தியது தமிழின போராட்ட ஆயுத குழுக்கள்தான். முஸ்லிம்களை "தமிழ் பேசும் சமூகம்' அல்லது "தமிழர்கள்' என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது என்று போராளி அமைப்புகளால் ஆயுத பாஷையில் முஸ்லிம்களுக்கு புரியவைத்து இடைவெளி ஏற்படுத்தப்பட்டது. தமிழ்த் தாயகத்தில் முஸ்லிம்கள் வந்தேறிகள் என்ற சொல்லாக்கம் வரலாறு நெடுகிலும் தமிழ் ஆயுத்தாரிகளால் சொல்லப்பட்டது. இதன் அடுத்தடுத்த கட்டங்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கிடையிலான இடைவெளியை அதிகப்படுத்தியது. வடகிழக்கில் முஸ்லிம்க்ள இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். ஒரே இரவில் 5 மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடியில் பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140 க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள் விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் , கொலை வெறியாட்டங்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று ஏற்பட்ட பாதிப்பு 30 வருடம் கடந்தும் இன்னமும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்பது துரதிஷ்டவசமாகும். இஸ்ரேலின் மொசாத் மற்றும் இந்தியாவின் "ரா' அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்ப் போராளிகள் முஸ்லிம் எதிர்ப்பாளர்களாக மாறிப்போயினர். இந்த இரு நாடுகளும் வட கிழக்கில் முஸ்லிம்கள் இருக்கும் வரை தமிழ்த் தாயகம் என்கிற இலட்சியத்திற்கு தடை என்பதை தமிழ்ப் போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்தன. இந்த இரு நாடுகளின் சுய நலன்களுக்காக முஸ்லிம்களை நோக்கி தமிழ் ஆயுததாரிகள் தங்களது துப்பாக்கிகளை திருப்பிய கசப்பான உண்மையை தமிழ் சமூகம் இன்றும் புரிந்ததாக தெரியவில்லை. தமிழ் இனத்தின் நியாயமான சுயாட்சிக்கான போராட்டம் யுத்தத்தின் மூலம் நசுக்கப்பட்ட தற்கான முக்கிய காரணம் முஸ்லிம்களின் தனித்துவத்தை, உரிமைகளை, தமிழினம் மறுத்து சிங்கள இனவாதத்தைப் போன்றே தமிழினவாதத்தை தமிழ்ப் போராளிகள் ஆயுத முனையில் முஸ்லிம்கள் மீது திணித்தமையை யாராலும் மறுக்கமுடியாது. இந்த சூழ்நிலையை உருவாக்கியதில் தமிழ்ப் போராளிகளின் பங்களிப்பு மிக அதிகம். அந்தவகையில் தமிழ்ப் போராளி அமைப்புகளால் முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை, அங்கீகாரத்தை தமிழ்க் கட்சிகள் தர முன்வர வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்று தமிழ் அரசியல்வாதிகள் சிலர் முஸ்லிம்களுக்கெதிரான அரசியல் இனவாத பிரசாரங்களை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம்கள் பாரபட்சம் காட்டுகின்றனர்; நிலத்தைப் பறிக்கின்றனர்; வியாபாரத்தைக் கைப்பற்றுகின்றனர்; மதம் மாற்றுகின்றனர்; தமிழ் கலாசாரத்தைக் கெடுக்கின்றனர்; அரசியல் அதிகாரத்தை விட்டுத் தருகின்றார்கள் இல்லை; முஸ்லிம்களுக்குள் அடிப்படைவாதம் ஊடுருவி இருக்கின்றது என்ற பிரசாரங்களோடு தமது முஸ்லிம்களுக்கெதிரான இனவாத பிரசாரங்களை முடிக்கிவிட்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது. இந்தியாவில் இருந்து வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் ஊடுருவியுள்ள இந்துத்துவா அமைப்பும் இதன் பின்னணியில் செயற்படுவதாக கூறப்படுகிறது. பௌத்த- இந்து உறவுப்பாலம் என்று கூறிக் கொண்டு, தமிழ் மக்களுக்குள்ளேயே சமய முரண்பாடுகளை தோற்றுவிப்பதே இந்துத்துவா அமைப்பின் நோக்கம் என்று ஏலவே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. பௌத்த- இந்து என்ற அடிப்படையில் ஒற்றுமை ஒன்றைக் கட்டியெழுப்ப பௌத்த பிக்குமாரும் சில தமிழ் சைவக் குருக்களும் ஒன்றினைந்துள்ளனர். அதற்கு ஆதரவாக தமிழ்க் கிறிஸ்தவ குருமாரையும் இவர்கள் அழைத்துள்ளனர். தமிழ் மக்களுடன் தங்களுக்குப் பிரச்சினை இல்லையென்றும் போர்க்காலத்தில் சில தவறுகள் நடத்ததாகவும் ஆனாலும் அதனை மறந்து தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணி பௌத்த- இந்துசமய உறவை வளர்க்க வேண்டுமென்றும் கூறி பௌத்த பிக்குமார் சிலர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகள் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்டு, அங்கு பௌத்த பிக்குமார் விகாரைகளைக் நிர்மாணித்து வருகின்றனர். புத்தர் சிலைகளை வைக்கின்றனர். தமிழர் பகுதிகளில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்ற்ங்கள் இடம்பெருகின்றன. இவற்றை எதிர்க்காத பௌத்த பிக்குமார், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்காக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நகைப்புக்கிடமானதாகும். மீண்டுமொரு தமிழ் முஸ்லிம் மோதலை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே பௌத்த பேரினவாதிகளின் நோக்கமாக திகழ்கிறது. அதன் முதல் நடவடிக்கையே இந்த பெளத்த- தமிழ் உறவு காதல் பிரகடனம் என்பது வெள்ளிடமலை. வடகிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களின் சமூக உறவை திட்டமிட்ட ரீதியில் பிரிப்பதற்கு சில இனவாதிகள் அரசியல்ரீதியாக முயற்சி செய்கின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்துவதன் ஊடாக சிலர் தமது சொந்த தேவைகளை அடைந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்கு சில அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் – தமிழ் உறவு குறித்து அவ்வப்போது பலரும் சாதக பாதகமாக விவாதிப்பதுண்டு. இவ்வாறான விவாதங்களை எடுத்து நோக்கினால், இவ்வகை விவாதங்கள் அனைத்தும் அவ்வப்போது மேலேழும் அரசியல் போக்கில் நிலைகொண்டிருப்பதை காணலாம்.துரதிஷ்டவசமாக இலங்கையில் காணப்படும் அரசியல் கட்சிகள் அனேகமானவை இனச்சார்பு கட்சிகளாகவே காணப்படுகின்றன. இனங்களுக்கிடையிலான துவேசக் கருத்துக்கள் தேர்தல் காலங்களிலேயே அதிகம் பகிரப்படுகிறது. அதுவும் அரசியல் வாதிகளினாலேயே அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் சிறுபான்மை சமூக சிவில் அமைப்புக்கள், மத தலைவர்கள் அரசியல் இலாபங்களுக்கப்பால் பொதுவான இலக்குகளை வரையறுத்து இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது மிக முக்கியமானது. https://www.madawalaenews.com/2019/08/hh_7.html
 10. முதல் நாள் வைத்த மீன் குழம்பை ரோஸ் பாணுடன் கீரையயும் பருப்பையும் கலந்து அடிக்கும் போதுதானே ருசியே இருக்கு. செலவையும் குறைக்கலாம்
 11. வாழ்த்துக்கள் நீஷ் இவரது தாத்தா அல்பிரட் துரையப்பாவை யார் சுட்டது என்ற மர்மம் இன்னும் நீடிக்கின்றது?
 12. பாறுக் ஷிஹான் -FAROOK SIHAN- முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாதுஎன்பதே எமது நிலைப்பாடாகும் என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.முஸ்லீம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்முஸ்லீம்கள் இந்த நாட்டில் உயிர் வாழக்கூடிய சந்தர்ப்பம் இல்லாத மாபெரும் பிரச்சினை இருந்து வருகின்றது.திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என சில பெண்களும் படித்தவர்களும் முயன்று வருகின்றனர்.முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்றுவது தான் பிரச்சினையா? என்பதை கேட்க விரும்புகின்றேன்.இந்த நாட்டில் சுமார் 20 இலட்சம் முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.இதில் சிலரே திருமண சட்டத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்.ஆனால் இதுவரைக்கும் றூற்றாண்டு காலமாக முஸ்லீம்கள் இச்சட்டத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.நாம் முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற கூடாது அதில் கை வைக்க கூடாது என்பதை நீண்ட காலமாக எமது கட்சியின் நிலைப்பாடாகவே தெரிவித்து வருகின்றோம்.இச்சட்டத்தில் நாம் கை வைப்பதற்கு அனுமதிப்போம் ஆனால் அதை வலுவிழக்க செய்வதற்கு துணைபோவதற்கு ஆளாவோம்.1951 ஆண்டு இறுதியாக இச்சட்டம் இறுதியாக திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் பின்னர் இச்சட்டத்தை திருத்த முற்பட்டால் பல்வேறு காரணங்களை முன்வைத்து இறுதியாக முஸ்லீம் திருமண சட்டம் தேவையா என கேட்பார்கள்.இவையெல்லாம் இனவாதிகளின் நிகழ்ச்சி ஆகும்.இவ்வாறான இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த முஸ்லீமும் அடிபணிய வேண்டாம் என கூற விரும்புகின்றோம்.முஸ்லீம் திருமண சட்டத்தில் எவரும் குறிப்பான முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட கூடாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம்.இந்த சட்டத்தில் ஏதாவது சேர்ப்பதென்றாலோ மாற்றம் செய்வதென்றாலோ உலமாக்களுக்கு மாத்திரமே உரிமை உண்டு.உலமா சபைக்கு உரிமை உண்டு.ஆனால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட கூடாது என்பது தான் எமது நிலைப்பாடாகும்.எனவே தான் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எமது கட்சி ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்க கூடிய மிகப்பெரும் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.அது மட்டுமல்ல சிங்கள மக்களில் பெரும்பாலானோர் இக்கட்சியுடன் இணைந்துள்ளனர்.இதனால் முஸ்லீம் சமூகமாகிய நாம் பெரும்பான்மை 4மூகத்தோடு இணக்க அரசியலை மேற்கொள்ள வேண்டும்.இதனால் தான் எமது கட்சியும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளதை தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்.இக்கட்சியுடன் இணைகின்ற போது பல கோரிக்கைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.அதில் முஸ்லீம்களின் பாதுகாப்பு கல்முனை பிரச்சினை மௌலவி ஆசிரியர் நியமனம் முஸ்லீம் நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கின்ற போது பெரும்பாலாக முஸ்லீம்களை நியமித்தல் தேசிய மட்ட பிரச்சினைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.இதனை அவர்கள் பெரும்பாலும் ஏற்றுள்ளனர்.இதனை எழுத்து மூலம் எழுதி கொடுத்துள்ளோம்.முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைகளை அவர்கள் நிராகரிக்கவில்லை.அந்த அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி இணைந்துள்ளோம்.இது ஏனைய கட்சிகளுக்கு எடுத்து காட்டு.அவர்களும் இவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு இணைய வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைக்கின்றேன். என்றார். https://www.madawalaenews.com/2019/08/up.html
 13. எனக்கு கால‌ நேரமின்றி இந்த நோய் திடீர் திடீர் என மலரும்
 14. தமிழ், முஸ்லிம் மக்களை சமமாக நடத்திய ஏ.ஆர்.எம். மன்சூர் பிறந்த கல்முனை மண்ணில், பிரிவினையை ஏற்படுத்துவது கவலைக்குரியதாகும். மன்சூருக்கு மரியாதை செலுத்துவதாக இருந்தால் கல்முனை விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து வாழ தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டுமென ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, கிழக்கு அரசியலின் மூன்று படிகளில் 1977ற்கு முன்னரான கட்டத்தில் தமிழ் தேசியத்துடன் இணைந்து, தமிழ் விடுதலை கூட்டணி சார்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் நிலைமை காணப்பட்டது.1977இன் பின்னர் பெரும்பான்மை தேசிய கட்சிகளில் போட்டியிட்டு தெரிவாகும் நிலைமை காணப்பட்டது. அடுத்து முஸ்லிம் கட்சிகளினூடாக பாராளுமன்றம் தெரிவாகும் நிலைமை உருவானது. தமது கட்சியில் போட்டியிடுமாறு தந்தை செல்வா கோரியபோது, அத னை நிராகரித்த மன்சூர் ஐ.தே.கவில் போட்டியிட்டார். தேசிய நாடு தொடர்பில் அவருக்கென ஒரு பார்வையிருந்த தால், அவர் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. ஐ.தேக.வில் போட்டியிட்ட அவர் சில நூறு வாக்குகளால் தோற்றார்.அவர் தந்தை செல்வாவின் கோரிக்கையை ஏற்று போட்டியிட்டி ருந்தால், தமிழ் வாக்குகளையும் பெற்று வென்றிருப்பார். 1977இல் நடந்த பொதுத் தேர்தலில் அவர் கல்முனை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கல்முனை அபிவிருத்தியில் பெரும் புரட்சி செய்த அவர், தமிழ் முஸ்லிம் ஐக்கியத்திற்கும் வித்திட்டார். தமிழ் முஸ்லிம் பகுதிகளை அவர் சம மாக அபிவிருத்தி செய்தார். தமிழ் எம்.பிக்களை விட அதிகமாக தமிழ் பிரதேச அபிவிருத்திக்கு அவர் பங்காற்றியிருந்தார். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களும் வழ ங்கப்பட்டது. இன ஐக்கியத்திற்கு அவர் ஆற்றிய சேவை முக்கியமானது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃபின் காலத்தில் முஸ்லிம் விடுதலை போராட்டத்திலும் அவர் ஒன்றாக பயணிக்க முன்வந்தார். தலைவர் அஷ்ரஃபின் கொள்கையுடன் முஸ்லிம் சமூகம் பயணிக்க வேண்டும் என்பதற்காக அவர் அஷ்ரஃபுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டார். அவரின் முடிவு முஸ்லிம் சமூகத்திற்கு பலமாக அமைந்தது. 2001இல் நான் கல்முனை தொகுதியில் போட்டியிட்ட போது எனக்கு அவர் தந்தை போன்று வழிகாட்டினார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் சேவையாற்றியுள்ள அவர், வர்த்தக வாணிப அமைச்சராக நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரும் சேவையாற்றினார். தமிழ் மக்களின் பிரச்சினைகளின் போது தமது மக்களை போன்று அவர் நடந்து கொண்டார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் பகுதி முஸ்லிம் பகுதி என பிரிய வேண்டும் என கோருவது கவலையளிக்கிறது.வேறு பகுதிகளில் இவர்கள் இவ்வாறு நடந்திருந்தால் பொறுத்திருக்கலாம். மன்சூர் பிறந்த மண்ணில் இவ்வாறு பிரிவினையை ஏற்படுத்துவது கவலைக்குரியதாகும். மன்சூருக்கு மரியாதை செலுத்துவதாக இருந்தால் கல்முனை விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து வாழ முன்வருமாறு கோருகிறோம் என்றார். ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் https://www.madawalaenews.com/2019/08/blog-post_17.html