Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3060
 • Joined

 • Last visited

Everything posted by colomban

 1. மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் (25) இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது. மதுபானம் வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய மதியம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. Facebook https://www.madawalaenews.com/2022/09/i_169.html
 2. அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு வருவோரை இது பாதிப்பதாகவும் நாட்டில் இரவு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மன்னாரை பொழுது போக்கு வலயமாக மாற்றலாம் என்றும் மேலும் சில சர்சை கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மன்னார் குறித்த அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எவ்வித அருகதையும் இல்லை என்றும் அவரது கருத்தை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன், இன்று (14) தெரிவித்தார். புதிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மன்னார் மாவட்டம் தொடர்பாக கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தை ஊடகங்கள் மூலம் அவர் தெரிவித்துள்ளதாக, சாள்ஸ் எம்பி குறிப்பிட்டார். மன்னார் மாவட்டத்தை ஒரு களியாட்ட இடமாக மாற்றவுள்ளதாகவும் குறிப்பாக தன்னை கருவாடு காய வைப்பதற்கு மன்னாருக்கு அனுப்ப உள்ளதாக சிறு வயதில் தன்னை பயமுறுத்தி வளர்த்ததாகவும் டயானா கமககே வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் எம்.பி தெரிவித்தார். மன்னார் மாவட்டம் மிகவும் கலை, கலாசார பண்புகள், கடல் வளம், விவசாய வளம் அனைத்தோடு பொருந்திது என்றும் தற்போது கல்வியில் தலை சிறந்து விளங்கி காணப்படுகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம், மடு திருத்தலம் ஆகிய இரு பழமை வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன என்றும் மன்னாரின் கலை, கலாசார பண்புகள் தெரியாமல், ஊடகங்கள் முன் அவர் பேசியமை கண்டிக்கத்தக்கது என்று என்றார். நாட்டில் கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கொழும்பை இரவு நேர களியாட்ட வலயமாக மாற்ற வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் டயானா கமகே பேசியதாகவும் சாள்ஸ் எம்.பி சுட்டிக்காட்டினார். அவருடைய செயல்பாடுகள் தொடர்ச்சியாக இவ்வாறு இருக்கும் போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கியமை குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எஸ்.றொசேரியன் லெம்பேட் https://www.madawalaenews.com/2022/09/i_30.html
 3. உண்மைதான் விசுகு ஐயா. இவர் பிறப்பல் ஒரு தமிழர். கொழும்பு செட்டி இனத்தை சேர்ந்தவர். மேட்டுக்குடி வாழ்க்கை வாழும் இவர்களுக்கு சாதரண மக்களின் கஷ்டம் புரியாது.
 4. பீட்டர் என்னுடைய‌ முன்னால் பொஸ். தைரியமான மனிதர். 30 வருடங்களுக்கு முன் கொள்ளுப்பிட்டியில் ஆபீசில் இவருடன் வேலை செய்த அந்த நாட்களை மறக்க முடியாது.
 5. சீக்கிரம் குணமடைய பிரார்திகின்றேன். எவ்வ‌ளவுதான் நாம் மன உறுதி படைத்தவர் என்றாலும். நோயுறும்போது நாம் மனம் உடைந்து போய் விடுவேம். அந்த நேரத்தில் ஆறுதலான வார்த்தைகளே எம்மை திடப்படுத்தும். கடந்த மே மாதத்தில் நான் சத்திர சிகிச்சைக்குட்பட்டு நீண்ட நாள் மருத்துவலீவில் இருக்கும்போது இதை உணர்தேன்.
 6. க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்றே இல்லாத‌ நிலையில் அத‌ன் பெய‌ர் உள்நாட்டு அலுவ‌ல்க‌ள் அமைச்சின் இணைய‌த்த‌ள‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌ட்ட‌மை நியாய‌மான‌தே என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார். அண்மையில் இது ப‌ற்றி க‌ல்முனை தமிழ் ம‌க்க‌ள் த‌ர‌ப்பிலிருந்து எழுப்ப‌ப்ப‌ட்டுள்ள‌ பிர‌சுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தின் கீழ் இய‌ங்க‌க்கூடிய‌ வ‌கையில் உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் 1989ம் ஆண்டு உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இது ஒரு த‌னியான‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் அல்ல‌, மாறாக‌ உப‌ செய‌ல‌க‌மாகும். ஆனால் யுத்த‌ கால‌த்தில் இத‌ற்கான‌ பெய‌ர் க‌ல்முனை த‌மிழ் செய‌ல‌க‌ம் என்றும், க‌ல்முனை த‌மிழ் வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்றும் சில‌ரால் அழைக்க‌ப்ப‌ட்ட‌து. இவ்வாறு அழைப்ப‌த‌ற்கான‌ எந்த‌வொரு அர‌ச‌ வ‌ர்த்த‌மாணி அறிவித்த‌லும் இல்லை. மேலும் 1993.09.03 ஆம் திகதி கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்ததாகவும் அதையும் அரசியல்வாதிகள் தடுத்ததாக தமிழர் தரப்பில் உன்மைக்குப் புறம்பாக கூறப்படுகின்றது. 1993.09.03 ல் 28 உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 27 வது இடத்தில் க‌ல்முனை (த‌மிழ் பிரிவு) உப‌ செய‌ல‌க‌ம் என அரசியலமைப்புக்கு மாற்றமாக‌ இனரீதியான பெயரும், நிர்ணயம் செய்யப்பட்ட எல்லையும் இல்லாததால் இது அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டது. ஏனைய 27 உப பிரதேச செயலகங்களும், பிரதேச செயலகங்களாக அங்கிகரிக்கப்பட்டன. இதை விளங்காமல் முஸ்லிம்கள் மீது பழி போடுவது அறிவீனமாகும். அன்றைய‌ அர‌சாங்க‌ங்க‌ளுக்கு யுத்த‌மே பெரிய‌ விச‌ய‌மாக‌ இருந்த‌தால் இத‌னை பெரிதாக‌ எடுத்துக்கொள்ள‌வில்லை. யுத்த‌ம் முடிந்த‌தும் சிங்க‌ள‌ அர‌சுட‌ன் சான்டை பிடித்து தோற்ற‌ சில‌ இன‌வாத‌ த‌மிழ‌ர்க‌ளுக்கும், த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றி அர‌சிய‌ல் செய்யும் த‌மிழ் க‌ட்சிக‌ளுக்கும் யாராவ‌து புதிய‌ எதிரி தேவைப்ப‌ட்ட‌து. அத்த‌கைய‌ எதிரிக‌ளாக‌ க‌ல்முனை முஸ்லிம்க‌ள் சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டு க‌ட‌ந்த‌ ந‌ல்லாட்சிக்கால‌த்தில் இது விட‌ய‌ம் பெரிதாக்க‌ப்ப‌ட்டு ஒற்றுமையாக‌ வாழும் க‌ல்முனைத்தொகுதி முஸ்லிம், த‌மிழ் ம‌க்க‌ளுக்கிடையில் இன‌ முறுக‌ல் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் ஒரு க‌ட்ட‌மாக‌ க‌ல்முனையில் பௌத்த‌ ச‌ம‌ய‌ குருவுட‌ன் சேர்ந்து த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளும் உண்ணாவிர‌த‌ம் இருந்த‌ன‌ர். அதே போல் இந்நிக‌ழ்வுக்கு இன‌வாத‌ ஞான‌சார‌, ர‌த‌ன‌ தேர‌ர் ஆகியோர் வ‌ந்த‌த‌ன் மூல‌ம் க‌ல்முனையை குழ‌ப்பி இங்கு முஸ்லிம், த‌மிழ் முறுக‌லை ஏற்ப‌டுத்த‌ முய‌ற்சிக்கும் பேரின‌வாதிக‌ளின் தூண்டுத‌லே இந்த‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ பிர‌ச்சினை என்ப‌து தெளிவாகிய‌து. இப்போது நாடு ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ த‌லைமையில் பொருளாதார‌ நெருக்க‌டியிலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ மீண்டு கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் நாட்டை குழ‌ப்புவ‌த‌ற்காக‌ க‌ல்முனையில் உள்ள‌ சில‌ த‌மிழ் இன‌வாதிக‌ள் மீண்டும் இப்பிர‌ச்சினையை தூக்கி இன‌வாத‌மான‌ பிர‌சுர‌ங்க‌ளை வெளியிடுகின்ற‌ன‌ர். க‌ல்முனையில் முஸ்லிம்க‌ள் 70 வீத‌மும் த‌மிழ‌ர்க‌ள் 30 வீத‌மும் உள்ள‌ன‌ர். ஆனாலும் 70 வீத‌ முஸ்லிம்க‌ளுக்கும் 29 கிராம‌ சேவ‌க‌ர் பிரிவும், 30 வீத‌ த‌மிழ‌ர்க‌ளுக்கும் 29 கிராம‌ சேவ‌க‌ர் பிரிவும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌ அநியாய‌ம் ந‌ட‌ந்தேறியுள்ள‌து. இத‌னை த‌டுக்க‌ முடியாத‌ கைய‌று நிலையில் தூங்கிக்கொண்டிருந்த‌து க‌ல்முனையை ஆளும் முஸ்லிம் காங்கிர‌சும் அத‌ன் எம் பி ஹ‌ரீசும், க‌ட்சி த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீமுமாகும். க‌ல்முனையை இன‌ரீதியாக‌ பிரிக்க‌ கூடாது என்ப‌தே எம‌து க‌ட்சியின் கோரிக்கையாகும். க‌ல்முனையில் 99 வீத‌ம் த‌மிழ‌ர்க‌ள் வாழும் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து " பாண்டிருப்பு செய‌ல‌க‌ம்" வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ப‌தே எம‌து க‌ட்சி முன் வைக்கும் தீர்வாகும். இந்த‌த்தீர்வை த‌மிழ் த‌ர‌ப்பு ஏற்று க‌ல்முனையை இன‌, ம‌த‌ ரீதியில் பிரிக்காம‌ல் பாண்டிருப்பு என்ற‌ பிர‌தேச‌ ரீதியில் பிரித்து த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் ஒரு செய‌ல‌க‌ம் கிடைக்க‌ப்பெற்று த‌மிழ், முஸ்லிம் ஒற்றுமையை வ‌லுப்ப‌டுத்த‌ முன் வ‌ர‌வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி (ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி) கேட்டுக்கொள்கிற‌து. https://www.madawalaenews.com/2022/08/i_850.html
 7. பட/வீடியோ ஆதாரம் இன்றி இப்படி அபாண்டமாக ஒரு பெண்ணை குற்றம் சொல்லக்கூடாது.
 8. மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்றது. அன்று கோயிலுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டது. போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார். கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏலத்தில் கிடைக்கப்பெற்ற பணம், ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். https://www.madawalaenews.com/2022/08/i_822.html
 9. அந்தர் உள்ளே. உப்பர் மேலே நீச்சே கீழே அமாரா என்னுடையா துமாரா உன்னுடைய‌ போலோ பேசு 70கள் ஆரம்பத்தில் மேரே மித்துவா/ ருப்பிதெரா மஸ்தானா என்று படினோம் அல்லவா? இப்போ சாருகான் பாடியதுபோல் குச்சி குச்சி ஒஹ்த்தாயே என்று யாழில் இளைஞர்கள் பாடப்போகின்றார்கள். இந்தியா ஒரு சூத்தியா நாடு அனாலும் இந்தி மொழிதான் ஆட்சி செய்கின்றது. அவர்களாது கடவுச்சீட்டில் கூட இந்தியில் தான் எழுதப்பட்டுள்ளது..
 10. யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். தற்போது நாடு வறுமைகோட்டின் கீழ் உள்ளது அனைவரும் அறிந்த விடயமே இதனால் பல்வேறு நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவும் தங்களால் முடிந்த உதவியை இலங்கைக்கு நிவாரணபொதி அனுப்புதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதைனைத்தொடர்ந்து யாழில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை யாழிற்கு வந்து பிரபல பாடசாலையான யாழ். இந்துக்கல்லூரியில் ஹிந்து மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பை பல தமிழர்கள் ஏற்ப மறுத்து அதற்கெதிரக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. https://www.todayjaffna.com/312224
 11. நூருல் ஹுதா உமர் புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்த நீண்டகால அரசியல் வரலாற்றை கொண்ட கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்களை மீண்டும் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கி முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் இலங்கை நாட்டுக்கு பல கோடி ரூபாய் பணங்களை அரபு நாடுகளில் இருந்தும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்தும் உதவியாக பெற்றுக்கொள்ள முடியும். கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் தான் அரசியல் அதிகாரத்திலிருந்த காலங்களில் பல கோடிக்கணக்கான பணங்களை இலங்கை நாட்டுக்கு உதவியாக பெற்று கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் தனது சேவையை வழங்கியுள்ளார். இனவாத, பிரதேசவாத அரக்கர்களை கொன்ற ஆட்சியாக மலரவிருக்கும் ஜனாதிபதி ரணிலை தலைமையாக கொண்ட இந்த அரசாங்கத்தில் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்ற மொழியாற்றல், திறமை, நாட்டுப்பற்று மிக்கவர்கள் அமைச்சர்களாக அல்லது அதிகாரம் பொருந்தியர்வர்களாக இருக்கவேண்டியது நாட்டின் காலத்தின் தேவையாக அமைந்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.madawalaenews.com/2022/07/blog-post_685.html
 12. (அஷ்ரப் ஏ சமத்) சுற்றாடல்த்துறை அமைச்சா் பொறியியலாளா் நசீர் அஹமட் இன்று (24) பத்தரமுல்லையில் உள்ள சுற்றாடல் அமைச்சில் வைத்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளா் வைத்தியா் அனில் ஜெயசிஙக், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்களான அலிசப்றி ரஹீம், காதா் மஸ்தான், முஸாரப் ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா. இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா். தனக்கு இந்த அமைச்சு ஏறகனவே 20 நாட்களுக்கு முன்பு தரப்பட்டது. தற்போதைய அமைசச்சரவையில் இளம் அமைச்சா்கள், பல கட்சி சாா்ந்தவா்கள் உள்ளனா். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தன்னால் எடுக்கக வேண்டிய சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவேன். நான் றியாத்தில உள்ள பெற்றோலியம் பல்கலைக்க்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றேன். என்னுடன் கல்விகற்ற ஒரு சிரேஸ்ட மாணவனே தற்போது சவுதி அரேபியாவில் பெற்றோலியத்துறை வள அமைச்சராக கடமையாற்றுகின்றாாா். என்னால் பல முயற்சிகளை எடுக்க முடியும். ஓமான் அரம்கோ பெற்றோலியம் கம்பனிகளுடன் என்னால் பேச்சுவாா்த்தை நடாத்த முடியும். நான் ஏற்கனவே கிழக்கு மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய அனுபவம் உண்டு அங்கு ஊழல் அற்ற சிறந்த நிர்வாக கட்டமைப்பினை கட்டியெழுபியது போன்று இ்ந்த அமைச்சின் ஊடாக பல்வேறு திட்டங்களை வகுத்து நாட்டுக்கு நன்மை கிடைக்க கூடிய திட்டங்களை வகுத்து சிறந்த அமைச்சு ஒன்றினை சுற்றாடல் அமைச்சினை கட்டியெழுப்ப முடியும். என நசீர் அஹமட் தெரிவித்தாா். https://www.madawalaenews.com/2022/05/i_968.html
 13. மிக்க மகிழ்ச்சி. இவர் அப்பாவி அனியாயமாக தன் இளமைகால‌த்தை சிறையில் கழித்தவர். புலிகளின் திட்டத்தில் இவர் அனியாயமாக மாட்டுப்படவர்.
 14. கொழும்பு-03 அலரிமாளிகைக்கு முன்பாக இருக்கும் பேரவாவிக்குள் தள்ளிவிடப்பட்ட உறுப்பினர்களில் மூவர், பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்துகொண்டு வீடுகளுக்குச் சென்றிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ கம”, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “ கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது, மே.9 ஆம் திகதியன்று தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல்களில் பலர் பேர வாவிக்குள் தள்ளிவிடப்பட்டனர். அதில்,கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்கியிருந்தவர்கள். அவர்களே, பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்திருந்து வீடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அந்த மூவருடன் மற்றுமொருவரையும் பிடித்து கடுமையாக தர்ம அடிக்கொடுத்தவர்கள், ஏனையோருடன் அந்த நால்வரையும் பேர வாவிக்குள் தள்ளிவிட்டனர். அவர்கள் வாவிக்குள் நீண்ட நேரம் தத்தளித்துகொண்டிருந்தனர். ஒருமாதிரி கரையேறிய அந்த நால்வரும், மறைவான இடமொன்றில் மூன்று நாட்களாக மறைந்திருந்துள்ளனர். அதன்பின்னர், பிரதேச சபை உறுப்பினர்களில் ஒருவர், கம்பஹா மாவட்டத்திலுள்ள சவப்பெட்டி தயாரிக்கும் தன்னுடைய நண்பனுக்கு அழைப்பை எடுத்து விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளனர். அத்துடன் பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்புவதற்காக பிரேத ஊர்தியொன்றை அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளார். தப்பிச் செல்வதற்கு மாற்று வழிகளே இல்லையென்றும் தெரிவித்துள்ளார். நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்க, நால்வரை ஏற்றிச்செல்லக்கூடிய பிரேத ஊர்தியை , அவர்கள் மறைந்திருந்த இடத்துக்கு அனுப்பிவைத்துள்ளார். அதில் ஏறிக்கொண்ட நால்வரும் கொழும்பிலிருந்து இரவு வேளையில் புறப்பட்டு, தங்களுடைய வீடுகளுக்கு இருட்டில் சென்றுள்ளனர். எனினும், தங்களுடைய வீடுகளுக்கு பிரேத ஊர்தி வருவதை கண்ட குடும்பஸ்தினர் அச்சத்தில் இருந்தனர். பிரதேச சபை உறுப்பினர்கள் மூவரும் பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்திருந்து வீடுகளுக்கு திரும்பிய விவகாரம் அக்கம் பக்கத்தினரின் காதுகளுக்குச் சென்றமையால் அந்த இரகசியம் அம்பலமானது. https://www.madawalaenews.com/2022/05/blog-post_63.html
 15. விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள் கூச்சலிட்டவாறு ஒடி வந்து பயமுறுத்திய 7 பேர் கைது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பக்கிஎல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். “ புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூக்குரலிட்டவாறு சிலர் ஒடி வருவதை அவதானித்த மின் வேலியைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு தரப்பினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பக்கிஎல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் 119 என்ற அவசர பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர். இதற்கமைய, அம்பாறை மற்றும் அரன்தலாவ பொலிஸ் விசேட பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவொன்று என்பன அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகநபர்கள் 7 பேரும் திவுலான காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். https://www.madawalaenews.com/2022/05/i-7.html
 16. லங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. https://www.madawalaenews.com/2022/05/blog-post_751.html
 17. எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம். எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். எந்தவொரு விடயத்திலும் கவனயீனமாக இருந்துவிட்டு பின்னால் வருத்தப்பட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார் https://www.madawalaenews.com/2022/05/i1_17.html
 18. இவ்வளவு சிங்களவர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஏன் இந்த தமிழர்ககள் சென்று இந்த நோட்டிசை கொடுக்கின்றார்கள். இவர்கள் இன வெறியர்கள் என்று தெரியும்தானே. பிறகேன் இந்த சந்தர்ப்பத்தில் சென்று கொடுக்க வேண்டும். இது ஒரு புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. சிறிது கூட்டம் கலைந்தவுடன் கொடுத்திருக்கலாம்.
 19. நல்லூரில் காய்ச்சிய முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகிய விசேட அதிரடிப்படையினர்!! நல்லூரில் காய்ச்சிய முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகிய விசேட அதிரடிப்படையினர்!! May 12, 2022 newtamils1 0 Comments நல்லூரில் விசேட அதிரடிப்படையினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது. இறுதி யுத்த காலப் பகுதியில் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழர்களின் பேரவலமான நாட்களை நினைவுபடுத்தும் வகையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார ஆரம்பநாளான இன்று வியாழக்கிழமை(12.5.2022) காலை நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்குப் பரிமாறப்பட்டது. முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி நிறைவுற்ற பின் அவ்விடத்திற்கு ஜீப் வாகனம் ஒன்றில் துப்பாக்கிகளுடன் வருகை தந்த விசேட அதிரடிப்படையினருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான தாய்மார்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் கொண்டு சென்று வழங்கியதுடன் குறித்த கஞ்சி தொடர்பாகவும் விளக்கமளித்தனர். இதனை நன்கு செவிமடுத்த விசேட அதிரடிப் படையினர் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கிப் பருகிய பின்னர் குறித்த நிகழ்வுக்கு எந்தக் குறுக்கீடுகளும் செய்யாது அங்கிருந்து சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. https://vampan.net/36876/
 20. ஆழ்ந்த அனுதாபங்கள் வணக்கம் மருமக்களே, வணக்கம் மாமா என இலங்கை வானோயில் வார இறுதி நாட்களில் ஒலிக்கும் குரல்
 21. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. உடுத்தியுள்ள வேட்டியானது உடலில் இருந்து அவிழ்ந்து கீழே நழுவியபோது உடனே கை விரைந்து சென்று அதை சரிசெய்துவிடுகிறது. அதுபோல, ஒருவனுக்கு துன்பம் நேரிட்டபோது, உடனே சென்று அந்தத் துன்பத்தை நீக்கி விடுவதற்கு, உதவுவது சிறந்த நட்பாகும்.
 22. எனக்கு முன்னாள் உட்கர்ந்திருக்கும் பிலிபினோ நண்பன் ரொனால்ட் இடம் கேட்டேன் இவன் சர்வாதிகாரி இல்லையாம் பல நல்ல திட்டங்களை நாட்டிற்கு கொண்டு வந்து முன்னேற்றியவராம். பொறாமயினால் இப்படி இவரை தூற்றுகின்றார்களாம்.
 23. ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தியும் கொடு என்றல்லவா பைபிள் போதிக்கின்றது
 24. ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ அர‌சினால் முஸ்லிம் ச‌மூகமோ எம‌து க‌ட்சியோ உருப்ப‌டியான‌ எந்த‌ ந‌ன்மையும் அடைய‌வில்லை என்பதுட‌ன் நாட்டை பொருளாதார‌ ரீதியில் க‌ட்டியெழுப்ப‌தில் அக்கட்சி பாரிய‌ த‌வ‌றுக‌ளை செய்து விட்ட‌தால் 2019ம் ஆண்டு முத‌ல் எம‌து க‌ட்சி பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் செய்து கொண்ட‌ புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்திலிருந்து வெளியேறி சுயாதீன‌மாக‌ செய‌ற்ப‌டும் என்ப‌தை மீண்டும் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி, உல‌மா க‌ட்சி அறிவித்துக்கொள்கிறது என‌ அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.. அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச நீண்ட‌ கால‌ அர‌சிய‌ல் அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ராக‌ இருந்த‌ போதும் த‌ன‌து அருகில் க‌ள்வ‌ர்க‌ளையும், கொள்ளைய‌ர்க‌ளையும் வைத்துக்கொண்டிருந்த‌தால் நாடு அத‌ள‌ பாதாள‌த்தில் விழுந்து விட்ட‌து. க‌ட‌ந்த‌ நல்லாட்சி என்ப‌து முஸ்லிம்க‌ளின் 99வீத‌ ஓட்டுக‌ளால் வ‌ந்தும் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அநியாய‌மே செய்த‌து. இந்த‌ நிலையில் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ பெர‌முன‌வுட‌ன் இணையும் ப‌டி எம‌க்கு வ‌ந்த‌ அழைப்பை ஏற்று நாம் இணைந்தோம். ஆனாலும் ஜ‌னாதிப‌தி தேர்த‌லை தொட‌ர்ந்து நாம் முற்றாக‌ கைவிட‌ப்ப‌ட்டோம். பெர‌முன‌வில் ஒட்டியிருந்த‌ க‌ள்ள‌ முஸ்லிம் த‌ர‌ப்புக்கே முன்னுரிமை கொடுத்த‌னர். 2019க்கு பின் இன்று வ‌ரை பெசில் ராஜ‌ப‌க்ஷ‌ எம்மோடு எந்த‌ ச‌ந்திப்பையும் மேற்கொள்ள‌வில்லை என்ப‌துட‌ன் நாம் செய்து கொண்ட‌ புரிந்துணர்வு ஒப்ப‌ந்த‌த்தின் ஒரு அம்ச‌ம் கூட‌ நிறைவேற்ற‌ப்ப‌ட‌வில்லை. ம‌ட்டுமன்றி முஸ்லிம் ச‌மூக‌ம் எதிர் நோக்கும் பிர‌ச்சினைக்ள் நாட்டின் பிர‌ச்சினைக‌ள் ப‌ற்றி ப‌ல‌ க‌டித‌ங்க‌ள் அனுப்பினோம். அவை உதாசீணம் செய்ய‌ப்ப‌ட்ட‌தோடு நாட்டை கொள்ளைய‌டிப்ப‌திலேயே ஈடுப‌ட்டார்கள். ஆனாலும் நாம் பொறுமை காத்தோம். எடுத்தோம் க‌விழ்த்தோம் என‌ முடிவெடுத்து தொப்பி பிர‌ட்டி என்ற‌ அவ்ப்பெய‌ர் ந‌ம் ச‌மூக‌த்துக்கு வ‌ந்துவிட‌க்கூடாது என்ப‌தை க‌ருத்தில் கொண்டு ச‌ந்த‌ர்ப்ப‌த்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். இப்போது முழு நாடும் இவ‌ர்க‌ளைப்ப‌ற்றி தெரிந்திருப்ப‌தால் ச‌ரியான நேர‌த்தில் ச‌ரியான‌ முடிவை எடுத்து ராஜ‌பக்ஷ‌ கூட்டிலிருந்து வில‌கி விட்டோம். https://www.jaffnamuslim.com/2022/05/blog-post_578.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.