தமிழ்ப்பொடியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  89
 • Joined

 • Last visited

 • Days Won

  5

தமிழ்ப்பொடியன் last won the day on November 19 2014

தமிழ்ப்பொடியன் had the most liked content!

Community Reputation

156 Excellent

About தமிழ்ப்பொடியன்

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday 03/27/1981

Profile Information

 • Gender
  Male
 • Interests
  கவிதை எழுதுவது(?)

Contact Methods

 • Skype
  tamilpodiyan

Recent Profile Visitors

 1. ஐயே! கவதாவத் மங் அமத்தக்கறண்ட பா! இந்த கவிதை என்பது “ வலி சுமந்த மே மாதத்தில்” போர்வெற்றி கழியாட்டங்களில் கிளிநொச்சியில் குதுகலித்த ஒரு சிங்கள நண்பனை நோக்கி எழுதப்பட்டது. நீங்கள் சொன்ன விடயங்களை உள்ளடக்கி ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன். புரிதலுக்கு நன்றி சகோதரா
 2. சிங்கள நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை! உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்! உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்! முடியவில்லை என்னால்; காரணம் இதே போல ஒரு மாதத்தில்த்தான் அவற்றை நீ வெட்டிவிட்டாயே! நீ மறந்திருப்பாய். என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! நினைவிருக்கிறதா உனக்கு.. நீ மறந்திருப்பாய். நீ கொலைவெறியோடு விரட்டும் போது; ஒரு கையில் குழந்தையும் இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம். நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா? ஆனால்; மன்னித்துவிடு சகோதரா... இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை! நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய் நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்! நாளை இந்த வெள்ளம் வற்றி நீ நலம் பெறுவாய்! உனக்காய் உலகமே வரும்! குற்றுயிராய் நந்திக்கடலில் மூழ்கியபோது; எனக்காய் யாரும் வரவும் இல்லை இனியும் வரவும் மாட்டார்கள். இனி வரவும் தேவையில்லை! சிங்கள சகோதரா! உனக்காக நான் அழுவதற்கு தயார் ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை. கொத்துக்கொத்தாய்.. பூவும் பிஞ்சுமாய்... குஞ்சு குருமனாய்... குடல் கிழிந்து... சதை கிழிந்து... வயிறொட்டி... உயிரற்ற பிண்டங்களையாய்... உணர்வற்ற பூச்சிகளாய்... இதே ஒரு மாதத்தில்தான் .... வானம் அதிர குழறினோம்!! உண்மையை சொல்லு உனக்கு கேட்டதா? இல்லையா?? எனக்காய் நீ ஒரு கரம் கூட நீட்டவில்லையே! எனக்காய் ஒரு துளி கண்ணீர் கூட விடவில்லையே! எனக்காய் ஒரு குரல் கூட தெற்கில் கேட்கவேயில்லையே!!! உனக்கும் எனக்குமா போர் நடந்தது? இல்லையே!!! எதற்காக மெளனமாக இருந்தாய்? ஏன் திரும்பி நடந்தாய்? போர் உங்கள் முன்னால்... எங்களை; கடித்துக்குதறி... கைகளை பின்னே கட்டி.. கறுப்புத்துணியால் கண்களை மூடி.. முதுகில் உதைத்து பிடரியில் அடித்து... சப்பித்துப்பி... தின்று... கைகழுவிப்போனபோது... அம்பாந்தோட்டையிலும்... அழுத்கமவிலும்... நீங்கள் வெடி கொழுத்தி கொண்டாடிக்கொண்டிருந்தீர்கள். பின்னர் ஒரு நாளில் முட்கம்பி வேலிக்குள்... நாங்கள் வானம் அதிர.. தொண்டை கிழிய... குழறிக்கொண்டிருந்தோம். நீங்கள் கொழுத்தி கொண்டாடிய "சீனா வெடிகளில்" ... எங்களின் கூக்குரல்... உங்களுக்கு கேக்கவேயில்லை! இன்று உனக்காக நான் அழுவதற்கு எனக்கு விருப்பம். ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை! போன கிழமைதான்.. நந்திக்கடலோரம்... நான் என் அண்ணாவுக்காய் அழுதுகொண்டிருந்தேன். முள்ளிவாய்க்காலில் தொலைத்த தன் மகனை ... தாயொருத்தி தேடிக்கொண்டிருந்தாள்! நீயோ! கிளிநொச்சியின் வீதிகளில் "சிங்கலே" கொடி கட்டுவதிலும்... யாழில் விகாரைக்கு அடிக்கல் நாட்டுவதிலும் மும்முரமாக இருந்தாய். கொழும்பு வீதிகளில்... வெடி கொழுத்துவதிலும்; வெற்றிக்கொண்டாட்டங்களில் "கிரிபத்" தின்பதிலும்... ஆரவாரமாய் இருந்தாய்! நீ மறந்திருப்பாய். ஆனால் நான் மறக்கவில்லை. மறக்கவும் முடியாது! மறக்கவும் கூடாது! உனக்காய் நான் அழவும்.. உனக்காய் என் கரம் நீழவும்.. உனக்காய் நான் ஓடிவரவும்... என்னால் முடியாது. ஏனெனில்; என் கால்களை... என் கைகளை இதே போல ஒரு மாதத்தில்தான் நீ வெட்டி எறிந்தாய். நீ மறந்திருப்பாய்.. ஆனால் நான் மறக்கவில்லை! ஏனெலில் என்னால் நடக்கமுடியவில்லை! சிங்கள நண்பா! உனக்காய் நான் அழ விருப்பம்தான்.. என்னிடம் கண்ணீர் இல்லையே! ஆனால்; உன் துன்பத்தில் நானும் துணையாக வர இனியாவது உன் கரங்களை நீட்டு... காத்திருக்கிறேன்.. வாற வருடம் முள்ளிவாய்க்காலில் என்னோடு "தீப்பந்தம்" ஏத்தவருவாய் என நம்பி... ஆரியகுளத்து புத்தனிடம் உனக்காய் வேண்டுகிறேன். என்னைக்காப்பாற்றாத போதிமரத்தான் உன்னைக்காப்பாற்றக்கூடும்!! அன்புடன் #தமிழ்ப்பொடியன் 27/05/2017 குறிப்பு: எனக்கு சிங்களத்தில் எழுத தெரியாது. முடிந்தால் யாராவது சிங்களத்தில் மொழிபெயர்த்து அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். My dear Sinhalese Friend! I want to cry for you. But I have no tears to shed! I could have extended my hands to save you .. I could have rushed to save you But I couldn't, I couldn't come to save you as it is in this month you severed my legs You may have forgotten. But I couldn't Because I can't walk anymore! Do you remember my friend? You may have forgotten When you were pursuing us with murderous intent. We were running with an infant in one hand and a puppy in another. We cried for our puppy. Wouldn't we cry for you my friend? However, Forgive me my friend We don't have any more tears to shed ! You are swaying in water, but We swayed in tears my friend. Tomorrow the floods will recede and you shall recover, The whole world will come to your aid! When we were bleeding to death in "Mullivaikal", No one came to our rescue. They won't come anymore. We don't need them either! My dear Sinhalese Friend! I want to cry for you... But I have no tears to shed. We lost thousands of our Young and old... Babies and infants, Torn intestinal and Bleeding wounds... Starved stomachs... Lifeless bodies ... We are Senseless insects! We are cursed slaughters! It is in this month Our cries shaking the skies! Be honest my dear friend Didn't you hear our pleas? There was no arm... extended towards me! No tear shed for me ! No voice raised for me! from South. Was the war between you and me? No it wasn't. Why were you silent my friend? Why did you walk away? When War Teared... Handcuffed... Blindfolded... Kicked and Destroyed us... Right in front of your eyes! You were lightening fire crackers in "Hambantota" and "Aluthgama" Celebrating its victory !! Days later We were lamenting Behind barbed wires ... You couldn't hear our lament. In the midst of the sound from fire crackers!! My dear Sinhalese Friend! I want to cry for you... But I have no tears to shed! Last week In "Mullivaikal" I was mourning my Brother, Who died in this shores. A mother was Searching for her son... She lost in the "Mullivaikal" coast. However you were busy Raising the "Singha le" flags in the street of "Killinochi"! And... Laying foundation for a "vihara" in jaffna ! You were celebrating the victory By lightening crackers And eating "kiri buth" in the streets of Colombo! You may have forgotten. But I haven't. I shouldn't forget, I can't forget either !! I can't cry for you I can't extend my arm to help you I can't rush to be with you. Because; It is in this month You severed my legs! It is in this month You severed my hands ! You may have forgotten. But I haven't. Because I can't walk ! My dear Sinhalese friend! I want to cry for you ... But I have no tears left ! However, I am waiting for you to extend your arm towards me, So that I can solace you in future! I hope and pray to the Lord Buddha! Next year you will Join me in lightening a flame of remembrance In "Mullivaikal". Again i pray to the Lord Buddha ! Who failed to save me May rescue you !!! Your dearest; Tamilfriend. (Vimale) https://www.facebook.com/podiyanpage/ "சிங்கள நண்பா” எனும் கவிதைக்கு பலவிதமான கருத்துக்கள் எல்லா ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படுவதை காணமுடிகிறது. முதலில் அதை எழுதியவன் என்ற அடிப்படியில் ஒரு சில கருத்துக்களை பகிரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இது வெறும் தன்னினலை விளக்கமோ அல்லது நியாயப்படுத்தலோ அல்ல என்பதை முதலில் பதிவு செய்கிறேன். இந்த கவிதை எழுதியதன் முதல் நோக்கம் என்னை நான் பிரபலப்படுத்துவதோ அல்லது முகப்புத்தகத்தில் அதிக விருப்புகளையும் பகிர்வுகளையும் பெறுவது அல்ல. மேலும் முகம் தெரியாமல் என்னை ஒழித்து “புனைபெயரில்” எழுதப்பட்ட கவிதையும் அல்ல. ஒரு சாதாரண தமிழனாக முப்பது வருட வலிகளை அனுபவித்தவனாக ,எனக்குள் ஆறாத வடுக்களாக இருக்கும் வலிகளை மொழிபெயர்த்துள்ளேன். இந்த கவிதையை எழுதும் போது ஒரு சிங்கள சகோதரனின் கைகளுக்காவது போய்ச்சேராதா என்ற ஆதங்கத்துடன் தான் எழுதினேன். ஆனால் இந்தக்கவிதை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கையின் சிங்கள ஊடகங்களில் வந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் சிங்கள ஊடகங்கள் எப்போதும் எங்களின் வலிகளை எப்போதுமே மொழிபெயர்த்தது இல்லை. ஆனால் இன்று இந்த கவிதையை அவர்கள் பிரசுரித்துள்ளார்கள் என்பது என்னைப்பொறுத்தவரையில் ஆச்சரியமாகவே உள்ளது. சரி கவிதையின் உள்ளடக்கத்துக்கு வாறன். கவிதையின் எந்த ஒரு இடத்திலும் காழ்ப்புணர்ச்சியை அல்லது பழிவாங்கலை தூண்டும் சொற்களை நான் கவனமாக தவிர்த்திருக்கிறேன். ஒரு கவிஞனுக்கு நியாயமாக வரும் “ அறச்சீற்றத்தை” மென்மையான வார்த்தைகளால் சொல்வது மிக மிக கடினம். அப்பிடி இருந்தும் என்னால் ஒரு சில இடங்களில் மறைமுகமாக “ நியாயமான கோபத்தை” என்னால் அடக்கிவைக்க முடியாமல் வெளிப்படுத்தியிருக்கிறேன். கடந்த காலத்தில் குறிப்பாக 2009 களின் பிறகு “ தமிழர்களின் தீராத சோகம் , வலிகள்” என்பவற்றை தென்னிலங்கை சமூகம் புரிந்துகொள்ளவேயில்லை எனும் கோபம் எனக்குள் இருக்கிறது. ஒரு இனம் அழிக்கப்பட்டு போரின் வடுக்களை சுமந்து நாளாந்தம் கண்ணீர் சிந்திநிற்கிறது. போரை நடத்தியது அரசின் ராணுவ எந்திரங்களாக இருந்தபோதும் போரின் பின்னரான காலப்பகுதிகளில் சாதாரண தென்னிலங்கை மக்கள் “தமிழர்களின் வலிகளை”மனதார புரிந்துகொள்ளவேயில்லை. ஆகக்குறைந்தது புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்ற கசப்பான உண்மையை ; நாம் கண்ணுக்கு முன்னே நடந்த “மே மாத போர்வெற்றிக்கொண்டாட்டங்கள்” கன்னத்தில் அறைந்து சொல்கின்றன. 2009 களின் பின் தமிழர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அவலத்திலும் தென்னிலங்கை சமூகம் பாராமுகமாகவே இருந்தது. இருக்கிறது. உதாரணத்துக்கு பல விடயங்களை சுட்டிக்காட்டலாம். 2009 இல் எத்தனையோ தமிழர்கள் முள்வேலிக்குள் அனுபவித்த “ கொடுமைகளைகளை” “ மிகப்பெரிய அவலங்களை” யாரும் கண்டுகொள்ளவேயில்லை. மழைவெள்ளத்தில் தடுப்பு முகாம்களில் எத்தனையோ மக்கள் சொல்லொணா துன்பத்தை அனுபவித்தார்கள். அப்போது யாரும் வரவும் இல்லை. உதவிக்கரம் நீட்டவும் இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதே போல ஒரு வெள்ள அனர்த்தம் வன்னியில் வந்தது. அப்போது கூட தென்னிலங்கையின் பெரும்பாலான மக்கள் கண்டுகொள்ளவேயில்லை. கண்ணீர் சிந்தவும் இல்லை. உதவிக்கரம் நீட்டவும் இல்லை. ஒரு சிலர் செய்தார்கள். அதை மறக்கமுடியாது. போரின் பின்னர் கண்ணுக்கு முன்னே சரணடைந்த பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆயிரம் ஆயிரம் தாய்மார்கள் நாள்தோறும் கண்ணீரோடு கதறிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த வாரத்தோடு சுமார் 100 நாட்கள் அவர்கள் வெயிலிலும் மழையிலும் காய்ந்து கண்ணீரோடு வீதியோரங்களில் கேப்பாரற்ற அனாதைகளாக இருக்கிறார்கள். எம்மினத்தவர்களே அவர்களின் வலிகளை புரிந்துகொள்ளவில்லை என்பதற்கு அப்பால் லச்சக்கணக்காக நாள் தோறும் “புதினம்” பார்க்க வடக்குக்கு வரும் தென்னிலங்கை சமூகம் இந்த அவலத்தை ஒரு நிமிடம் கூட நின்று பார்க்கத்தவறிவிட்டது. போர் வெற்றிகளை கொண்டாடும் இடங்களில் குதுகலித்து மகிழ்ந்துவிட்டு போகும் அவர்கள் அதற்கு அப்பால் ஆயிரம் ஆயிரம் சக மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட இடத்தில் ஒரு துளி கண்ணீர் சிந்துவதற்கோ அல்லது அந்த இடத்தில் நின்று ஒரு நிமிடம் மனம் வருந்துவதற்கோ தயாராகவில்லை. வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் என்பது தமிழர்களை பொறுத்த வரை “ வலி சுமந்த கறுப்பு மாதம்”. அந்த மாதம் முழுவதும் எல்லாவீடுகளிலும் “ஒப்பாரிச்சத்தம்” மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் தெற்கில் அந்த மாதம் “ போர் வெற்றி மாதமாக” குதுகலத்துடனும் வெற்றிக்கொண்டாட்டங்களுடனும் கடந்து போகின்றன. ஒரு இனம் அழிக்கப்பட்டதை ... அழிந்துபோனதை அதே மண்ணில் வாழும் இன்னொரு இனம் மகிழ்ச்சியாய் கொண்டாடி மகிழ்வதை “மனிதாபிமான இதயம்” கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘எனக்காக நீ அழுதால் மட்டுமே நான் உனக்காக அழுவேன்” என்ற நியாயமற்ற கோரிக்கையை நான் எந்த இடத்திலும் கவிதையில் குறிப்பிடவில்லை. “ உனக்காக அழுவதற்கு எனக்கு விருப்பம்தான் ஆனால் கண்ணீர் என்னிடம் கைவசம் இல்லை சகோதரா” என்றே ஒன்றுக்கு மூன்றுமுறை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இதில் எங்கே “ காழ்ப்புணர்ச்சி” இருக்கிறது? இதில் எங்கே “ இனத்துவேசம்” இருக்கிறது? இதில் எங்கே “ பழிவாங்கும் உணர்ச்சி” இருக்கிறது? எனக்கு புரியவேயில்லை. “உனக்காக என் கரங்களை நீட்டுகிறேன். இறுக்கிப்பிடித்துக்கொள்” “உனக்காக புத்தனிடம் வேண்டுகிறேன்” என கவிதையை முடித்திருக்கிறேன். இதில் எங்கே “ இனத்துவேசம், காழ்ப்புணர்வு, பழிவாங்கும் உணர்ச்சி” இருக்கிறது? எனக்கு இன்னும் புரியவேயில்லை. ஒருவனின் வலிகளில் இன்பம் காணும் ஈனப்பிறவிகளா நாங்கள்? அல்லது சகமனிதன் சாவில் சந்தோசம் கொள்ளும் “உணர்வற்ற கல் நெஞ்சக்காரர்களா?” தமிழர்கள்! எனக்குப்புரியவேயில்லை. போன கிழமை மே 18 அன்று “கிளிநொச்சியில் வெடிகொழுத்தி கொண்டாடினாய்!” “சிங்க லே” என்ற தனிச்சிங்கள கொடிகளை கிளிநொச்சி வீதிகளில் ஏற்றி குதூகலித்தாய். “புதிய விகாரைகளை” அமைப்பதிலும் அதை கொண்டாடுவதிலும் மும்முரமாக நின்றாயே சிங்கள சகோதரா? ஏன் என் வலிகளை உணர மறந்தாய்? ஏன் இப்படி நியாயமற்று நடந்தாய்? என கேள்வி கேட்பதிலும் என்ன பிழை என எனக்கு தெரியவில்லை. “வெள்ள அனர்த்தத்தால் சனம் செத்துக்கொண்டிருக்கும் போது” இப்படி கேட்பது பிழை என ஒரு சிலர் ஆதங்கப்பட்டார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன்? “வெடி கொழுத்தி போர் வெற்றியை கொண்டாடும் தருணத்தில்” அவர்களுக்கு இந்த கவிதையை எழுதினால் கேட்டிருக்குமா? 8ஆண்டுகளாக எத்தனை பேர் கண்ணீர் வடித்து கதறி அழுகிறோம் முள்ளிவாய்க்காலில்... எங்களின் அவலக்குரல் கேட்டதா அவர்களுக்கு? போர் முடிந்து 8 ஆண்டுகளில் இன்றுவரை ஒரு சிங்கள சகோதரன்.... அல்லது தென்னிலங்கை சமூகத்தில் ஒரு அரசியல் பிரதிநிதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வந்து மனதார எங்களின் அழுகுரல்களை கேட்டிருப்பார்களா? இல்லையே ஏன்??? ஏன் கனக்க? 2009 இல் போர் தின்ற மக்கள் அதன் பிறகு எத்தனை “அவலங்களை” சந்தித்து இருப்பார்கள். ஒரு உதவிக்கரமாவது தென்னிலங்கையில் இருந்து எமக்காக நீட்டப்பட்டதா? இல்லையே ஏன்??? அப்படியிருக்கும் போது; இப்போது எனக்கு வரும் கோபம் அல்லது கவலை நியாயமானதா? இல்லையா? அதுசரி எல்லாம் இருக்கட்டும். என்னதான் நாங்கள் கோபப்பட்டாலும் வடக்கில் இருந்து உதவிகள் இப்போது தென்னிலங்கை மக்களின் அவலத்தை துடைக்க நீள்கிறதா? இல்லையா? இதிலிருந்தே புரிந்துகொள்ளுங்கள் நாங்கள் எவ்வளவு பெரிய “உயிர்நேய வாதிகள்” என்று. மேலும்; இந்தக்கவிதையில் “இனத்துவேசம்” “காழ்ப்புணர்வு” “ பழிவாங்கும் உணர்ச்சி” ஒரு இடத்தில் கூட இருந்திருந்தாலும் இலங்கையின் சிங்கள ஊடகங்களோ அல்லது ஆங்கில ஊடகங்களோ இதை வெளியிட்டிருக்காது. அவர்கள் இந்த கவிதையை “திறந்த மனதோடும் ” பார்க்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். பல்கலைக்கழக சிங்கள மாணவ சகோதரன் ஒருவன் இந்த கவிதைக்கு பதில் எழுதும் போது “ நானும் என் நண்பர்களும் அடுத்த வருடம் நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வந்து உங்களின் துன்பத்தில் பங்குகொள்ள ஆயத்தமாய் இருக்கிறேன்” என்று சொல்லும் போதுதான் நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று முழுமையாக உணர்ந்தேன். மற்றப்படி இந்த கவிதை சிங்களவர்களை நோக்கி... “ இரங்கி கையேந்தி நிற்கிறது” “நல்லிணக்கமும் மண்ணாங்கட்டியும்” “சிங்களவன் திருந்தான்” “சாகட்டும் விடுங்கோ” போன்ற கடுமையான விமர்சனங்களுக்குக்கும் அதைப்போன்ற பின்னூட்டங்களுக்கும் நான் பொறுப்பாளி அல்ல! நன்றி #தமிழ்ப்பொடியன்
 3. பக்கத்துவீட்டுக்காரன் செத்து புழுத்து மணந்தாலும் எட்டிப்பார்த்து ஏன் எண்டு கேட்கா தேசத்தில் வாழ்ந்தாலும்... இப்போதும் ஈழத்தமிழராய்த்தான் வாழ்கிறோம். எனக்கொண்டெண்டால் பத்துமைலுக்கப்பால் வாழும் என் நண்பன் ஓடி வருவான் அவனுக்கு ஒண்டெண்டால் நான் ஓடிப்போவன் கிழமையில் ஒருநாள் எண்டாலும் அவன் வருவான் இல்லையெண்டால் நான் போவன் பிறந்தநாள் மண்டபத்தில் கதிரை காணாமல் வருது கொத்துரொட்டியும் பாணும் பருப்பும் ரோல்சும் வடையும் உடன் ஆட்டிறைச்சியும் புட்டும் இடியப்பமும் சொதியும் சம்பலும் ஒடியற்கூழும் இன்னும் தமிழ்க்கடைகளில் விற்பனைக்கு இருக்கு கோயில்களும் திருவிழாவும் தேரும் தீர்த்தமும் கும்பாபிசேகங்களும் மணிக்கடைகளும் அன்னதானமும் கொண்டக்கடலையும் கச்சானும் இங்கையும் இருக்கு... கோவில் நிருவாகச்சண்டையும் சங்க பொதுக்கூட்ட சண்டையும் திருவிழா ஆர் செய்யுறது எண்ட குழப்பமும் இப்பவும் இங்க இருக்கு... அடுத்த தலைமுறையோட புலம்பெயர்தமிழன் செத்துப்போவான் எண்டு எவன் சொன்னவன்? தமிழ்பள்ளிக்கூடம் இருக்கு விளையாட்டுப்போட்டி இருக்கு ஆடிப்பிறப்பு இருக்கு தமிழ்தின போட்டிகள் இருக்கு... சின்ன சின்ன பிள்ளைகள் தமிழ்ப்பேச்சும் இருக்கு... காத்தான் கூத்து இருக்குது நாடகம் இருக்குது வில்லுப்பாட்டு இருக்குது கூட்டு மேளம் இருக்குது பறையும் இருக்குது எந்த மடையன் சொன்னான் அடுத்த தலைமுறையோட வெளிநாட்டில் தமிழ் செத்துப்போகும் எண்டு? கொல்லும் குளிரிலும் வேட்டியும் சால்வையும் பட்டுச்சீலையும் கட்டியே இப்பவும் இங்க கோவிலுக்குப்போறம் ஜீன்சும் சேட்டும் போட்டு அங்கபிரதட்சணை செய்வதுமில்லை காவடி எடுப்பதும் இல்லை.. எந்த அறிவுக்கொழுந்து சொன்னான் எங்கள் கலாச்சாரம் வெளிநாட்டில் அழிந்துவிடும் எண்டு? இங்க இப்பவும் இரவு பத்துமணிக்கு பின் வந்தால் அம்மா ஏசும் அப்பா அடிக்கும் அண்ணா முறைப்பான்... தங்கச்சி மூஞ்சையை நீட்டுவாள்.. என் காச்சட்டை ஓட்டையை அம்மாதான் தைக்கிறா என் உடுப்புகளை தங்கச்சிதான் தோய்க்கிறாள் எவனடா சொன்னது அடுத்த தலைமுறையோடு பண்பாடு வெளிநாட்டில் அழிஞ்சுபோடும் எண்டு?? மாதாமாதம் அப்பம்மாவுக்கும் அம்மம்மாவுக்கும் அம்மாதான் காசு அனுப்புறா... பத்து வருசம் கழிச்சும் மாமியின் மூத்த மச்சாளின் சாமத்தியவீடு அப்பாவின் இரண்டுமாத சம்பளத்தில்தான் நடந்தது.. அப்பப்பாவின் செத்தவீடு என்ர செலவு அம்மம்மா செத்தாலும் அதுவும் என்ர செலவுதான் ஊரில எத்தின பேரன் இருந்தாலும் ஆயிரம் மைல் கடந்து நான் இருந்தாலும் எனக்கும் உரிமை இருக்கு உரித்தும் இருக்கு எந்த லூசன் சொன்னவன் வெளிநாட்டுக்கு போனவங்கள் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேணும் எண்டு?? என்னதான் சம்போ போட்டு முழுகினாலும் என்ர தலையில வீட்டு முற்றத்து மண்ணும் என்னதான் கைகழுவினாலும் கரவலை மீன் கறி வாசமும் போகுதேயில்லை...!!! ஆயிரத்தில ஒண்டு வெள்ளைகள் போல மாறினாலும் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதும் தமிழனாத்தான் வாழுறம்..... -தமிழ்ப் பொடியன்-
 4. மே 18!!! குற்றுயிராய் ஒரு உயிர் குடல் கிழிந்து ஒரு உயிர் பாதி எரிந்தபடி ஒரு உயிர் உருக்குலைந்து ஒரு உயிர் அழுகுரலோடு ஒரு உயிர் அனாதையாய் ஒரு உயிர் நஞ்சுண்டபடி ஒரு உயிர் கடந்து ஓடினோம் உணர்வும் செத்து உயிரும் செத்து முள்ளிவாய்க்கால் வரை!!! எல்லாம் தின்று ஏப்பம் விட்டு நந்திக்கடலில் கறை படிந்த கை கழுவி ஒன்றுமில்லை என்றான் புத்தன்!! மே மாதம் நினைவழியா மாதம் இன்றும் பிண்வாடையும் கந்தகவாசமும் நாசில் அரிக்கும் மாதம்... சூட்சிகள் செய்து மனட்சாட்சிகள் இல்லா கொலைக்களம் சாட்சிகள் ஆனவர் நாக்குகள் அறுத்து ஊமைகள் ஆன சோகம் செங்குரிதி ஓடி வெந்தணல் ஆன எம்மவர் நினைவுகள் அழியா மாதம் இது ஊழிக்கூத்து நிகழ்ந்த மாதம்! அடி மனதோடு நெருப்பென எரியும் வலி சுமந்த மாதம்!!! ..................////....................... ஓலை குடிசை ஓட்டை வழியே மழைதுளிகள் உள்ளே ஊத்தும் குண்டுக்கோப்பை நிறைக்கும் ஒழுக்குத்தண்ணீர் நாய் குரைக்கும் காகம் கரையும் அம்மா அடிக்கடி எட்டிப்பாக்குறா காணாமல் போன அண்ணா வருவான் எண்டு... அம்மாக்கு தெரியாது அண்ணாவின் மரணச்சான்றிதழை விதானையார் அப்பாவிடம் போன மாதம் கொடுத்தது..!!! ...............////................ முள்ளிவாய்க்காலில் இறைச்சிக்கடை திறந்து தமிழனின் உடன் இறைச்சியும் இரத்தவறுவலும் செய்து கொடுத்தான் மகிந்த.... திண்டு ரசித்து ஏப்பம் விட்டு மகிந்தவின் சால்வையில் கை துடைத்தான் பான் கீன் மூன்... எங்களுக்கும் வேண்டும் பந்தியும் பரிமாறலும் என கேட்டு வாங்கித்திண்டார்கள் ஒபாமாவும் சோனியாவும்... கடைசிப்பந்தி மே18 இல்... பந்திக்கு பிந்தாமல் திண்டு தீர்த்தார்த்தார்கள் கோதபாயவும் பசிலும்... எங்களையும் .. பந்திக்கு அழைக்கவில்லையே என ஏங்கினார்கள் ரணிலும் சந்திரிக்காவும்... பந்திக்கு முந்தி கோதாபாயவின் கோப்பையில் திண்டதால் பொன்சேகா சிறையில்.. மகிந்த திண்ட கோப்பை நக்கி .. கைசூப்பி ருசித்தான் மைத்திரி... எல்லாரும் திண்ட எச்சில் கோப்பைகளை கழுவி அடுக்கிவைத்தார்கள் எட்டப்பர்கள்.... தன் இனம் தன் உறவு அரக்கர்களால் ருசிக்கப்படுவதை பார்த்து துடிதுடித்து உண்ணாமல் உறங்காமல் இருந்தான் புலம்பெயர் தமிழன்...!!! -------------////------------------------ தாயகத்தில் இருக்கும் எங்கள் உறவுகளே..!!! உங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது தீபங்கள் ஏற்றக்கூடாது என்பதற்காக... உங்கள் நாக்குகள் அறுக்கப்பட்டுள்ளன.. அழக்கூடாது என்பதற்காக.. உங்கள் கண்கள் பிடுங்கப்பட்டுள்ளன... கண்ணீர் சிந்தக்கூடாது என்பதற்காக... மோட்டு சிங்களவனுக்கு தெரியாது உங்கள் கைகள் உங்கள் கண்கள் உங்கள் உரிமைக்குரல்கள் புலம்பெயர்ந்து இன்னும் உயிரோடு இருப்பது... உங்களுக்காக நாங்கள் தீபங்கள் ஏற்றுவோம்... உங்களுக்காக நாங்கள் பேசுவோம்... உங்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்... உங்கள் கண்ணீரை நாங்கள் துடைப்போம்... உங்கள் துயரங்களில் நாங்கள துணையாவோம்... எங்கள் தலையில் வீட்டு முற்றத்து மணல் மண்ணும்.. எங்கள் பல் இடுக்கில் சூப்பிய பனம்பழத்தின் குந்தும் இப்போதும் இருக்கிறது.... காலம் வரும்... நாங்கள் எல்லோரும் ஒன்றாய் விளக்கேற்ற..!!! காலம் வரும்... நாங்கள் எல்லோரும் கட்டிப்பிடித்து கதறி அழுது எங்கள் கவலைகள் மறக்க.. புலம்பெயர்ந்தது ... எங்கள் உடல்கள் மட்டுமே உணர்வுகள் அல்ல.!!! -தமிழ்ப்பொடியன்- 18.05.2015
 5. மரணம்! ஆண்டுத்திவசத்தோடு மறந்துவிடுகிறோம் விபத்து! காயத்துக்கு கட்டுப்போட்ட கையோடு மறந்துவிடுகிறோம் இழப்பு! நிவாரணம் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தேர்தல்! விரல் மை காயமுன் மறந்துவிடுகிறோம் விடுதலை! அற்ப சொற்ப சலுகைகள் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தியாகம்! நவம்பர் 27 இல் தீபங்கள் அணைத்ததும் மறந்துவிடுகிறோம் ஒற்றுமை! கூட்டம் முடித்து காரில் ஏறியதும் மறந்துவிடுகிறோம் துரோகம்! செய்தவனையே மறந்துவிடுகிறோம் மறதி!!! ஈழத்தமிழனுக்கு கிடைத்த வரமும்... சாபமும்...!!! -தமிழ்ப்பொடியன்-
 6. அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் இருந்து நம்மவர் பாடல்
 7. அன்பின் ...!!! வாத்தியார் அஞ்சரன் குமாரசாமி மந்தாகினி நிழலி அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் நன்றி...!!!
 8. எங்கே என் பிள்ளையென ஏங்கும் ஒரு தாயின் உள்ளம் எங்கே என் அண்ணா என விம்மும் ஒரு தங்கையின் மனசு எங்கே என் அக்கா என சத்தமாய்க்கேட்கிறான் ஒரு தம்பி இதையெல்லாம் பார்த்தும் ..... உள்ளுக்குள் மட்டுமே அழுகிறான் ஒரு தந்தை கந்தக சூட்டினில் சந்தண மேனிகள் கருகின குண்டுமழை நடுவினில் குருதியாற்றின் கரையினில் விதைக்கப்பட்டன காந்தள் விதைகள் கண்ணீரும் செந்நீரும் ஊற்றி தியாகங்கங்களையும் வெற்றிகளையும் உரமாக்கி நிமிர்ந்து வளர்ந்தன கார்த்திகைக்கொடிகள் வெட்டிப்போட்டாலும் புடுங்கி எறிந்தாலும் கார்த்திகை மாதமானால் மண்ணை விலக்கி மீண்டும் மீண்டும் வளர்ந்து பூப்பூக்கும் மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் சயணைட் குப்பிகள் துருஏறிப்போனாலும் கார்த்திகை கிழங்குகளாய் மீண்டும் மீண்டும் மண்கிழித்து முளைக்கும்.! எங்கள் அண்ணாக்கள் எங்களுக்காக வலி சுமந்தார்கள் எங்கள் அக்காக்கள் எங்களுக்காக முட்கிரீடம் அணிந்தார்கள் எங்கள் தம்பிகள் எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார்கள் எங்கள் நண்பர்கள் எங்களுக்காக உதிரம் சிந்தினார்கள் இறுதியில்...!!!! எங்களுக்காய் அவர்கள் எல்லோரும் விதைகுழிக்களுக்குள் விதையாகி விடுதலையின் உயிராகி புதைந்துபோனார்கள் யார் மறந்தாலும் கார்த்திகை பூக்கள் மறப்பதில்லை கார்த்திகை மாதத்தை..!!! எங்கள் ஊரில் பூத்துகுலுங்கும் காந்தள் மலர்கள் கண்ணீர் வடிக்கின்றன!!! எங்கே எங்களின் பிள்ளைகள்? எங்கே அவர்கள் துயிலும் கல்லறைகள்? ஆண்டுக்கொருமுறையேனும் மாவீரரின் மேனிதழுவி எங்கள் பிள்ளைகளின் பூமுகம் அதிலே பூத்துகிடந்தோமே எங்கே எங்கள் பிள்ளைகள் ?? காந்தள் மலர்கள் கண்ணீரோடு கேட்கின்றன ... தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விலகிப்போகாது துயரங்கள் அதிகமானாலும் பாசங்கள் குறைந்துபோகாது நாங்கள் வந்து உங்களின் கல்லறைகளில் விளக்கேற்றாவிட்டாலும் உயிர் வலித்து உள்ளம் துடித்து மனதினில் கசியும் குருதியும் சிவப்பேறி விழிகசிந்து சிந்தும் கண்ணீர் சொல்லும் எங்களின் நேசத்தை!!! எங்கே உங்களின் விழிகளைத்திறந்து மெல்ல எங்களைப்பாருங்கள் உங்களைக்காண உங்களின் உறவுகள் ஓடோடி வந்துள்ளோம்!!!! துயிலும் இல்லங்களை இடித்து தூளாக்கிய மோடையன்களுக்கு தெரியாது அவர்கள் தொடமுடியாத ஆழத்தில் "விதைகள்" விதைக்கப்பட்டது மேகம் சிந்தும் மழைத்துளிகள்-அது நீங்கள் புதைந்த மண்ணை நனைக்க ஊர்முழுதும் பரவும் "கந்தகவாசம்" அதுதான் மாவீரரின் "சந்தண மேனிவாசம்" மூசிவரும் உப்புக்காற்றும் ஆடிவரும் நீலக்கடலலையும் வெண்மணல்வெளியும் நிமிர்ந்து நிற்கும் நெடிய பனைமரமும் பச்சைவயல்வெளியும் நந்திக்கடலும் உள்ளவரை உங்களின் நினைவுகளும் சாகாமல் வாழும் கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும். அவர்களின் கனவும் இருக்கும். மாவீரர்களே எங்களின் மனம் கனக்குதே..!!! மறுபடியும் ஒரு நாள் உயிர்வலிக்குதே..!!! விடிகின்ற வேளையில் உங்களுக்கு விளக்கெரிப்போம் எல்லாம் கைகூடிவரும் வேளையில் மீண்டும் உம்மை விதைத்திடுவோம். எங்கே உங்களின் விழிகளைத்திறந்து மெல்ல எங்களைப்பாருங்கள் உங்களைக்காண உங்களின் உறவுகள் ஓடோடி வந்துள்ளோம்!!!! தமிழ்ப் பொடியன் 19/11/201
 9. "நீயும்" பிழை செய்தாய் "நானும்" பிழை செய்தேன் இனி..!!! "நாங்கள்" பிழை செய்யவேண்டாம்!!!! காத்தான்குடிக்கும் காங்கேசன்துறைக்கும் "உறவும்பாலம்" கட்ட நான் "ரெடி" உன் கைகளில் இருக்கும் "வெண்பொங்கலையும்" "பொல்" சம்பலையும் களுவி விட்டு வா!!! ஒற்றுமையாய் கரம் பிடிப்போம்!!!!
 10. கடவுளே உனக்கு கண்ணில்லையோ? கடவுளுக்கும் கண்ணில்லையோ -அது கல்லாகிப்போய் கன காலமோ! குந்த ஒரு குடிநிலம் கேட்டது பிழையோ -அதுக்கு தமிழீழம் எண்டு பெயரிட்டதுதான் தவறோ? அடிச்சவனை திருப்பி அடிச்சால் குற்றமோ?-நாங்கள் அழுதுகொண்டே செத்துபோவதுதான் விதியோ? தமிழராய் பிறந்ததுதான் தவறோ?-தமிழன் கேக்குறதுக்கு நாதியற்ற இனமோ? இன்னும் எத்தின நாளுக்குதான் அழுவமோ?-இதை கேக்குறதுக்கு யாருமில்லா உலகமோ? நாடு நாடாய் அலைவதுதான் கதியோ? அகதியாய் செத்துப்போவதுதான் முடிவோ? நீதி என்ன ஒரு நிறத்துக்கு மட்டுமோ? -அது தமிழருக்கு ஒரு நாளும் கிடைக்காதோ? மனிதாபிமானம் செத்து கனகாலமோ? -அதை குழிதோண்டிப்புதைத்தவர்கள் தான் பெரிய ஆக்களோ? விடுதலை கேட்பது பயங்கரவாதமோ? -அதுக்கு உயிர் கொடுத்து போராடுறவன் தீவிரவாதியோ? முள்ளிவாய்க்காலோட எல்லாம் முடிஞ்சுபோட்டுதோ?-இல்லை போராடிப்பெறுவதற்கு இன்னும் இருக்குதோ? தனித்தனியா கத்திக்கொண்டு இருக்கப்போறமா? -இல்லை கைகோத்துஒண்டா நடக்கப்போறமா? ஊருக்குப் போறதுக்கா இத்தனை விலைகொடுத்தோம்? -எங்களின் உரிமை கிடைக்க கனதூரம் போகவேணுமோ? போராடிப்பெறுவதுதான் விடுதலையல்லவா? -அதை சும்மா பெற்றால் அதுக்குப்பேர் பிச்சையில்லையா????? கடவுளே உனக்கு கண்ணில்லையோ?-நீ கல்லாகிப்போய் கனகாலமோ???? -தமிழ்ப்பொடியன்-
 11. பின்னூட்டம் இட்ட என் கள உறவுகள் புங்கையூரான் ஹமீது விசுகு சாந்தி அக்கா யாழ் வாலி எல்லாருக்கும் நன்றி அஞ்சரன் உங்களுக்கும் நன்றி
 12. https://soundcloud.com/podiyan/i-want-my-brother-alive <iframe width="100%" height="450" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/139847703&amp;auto_play=false&amp;hide_related=false&amp;visual=true"></iframe>
 13. தமிழர்களும் மனிதர்கள் தான்!!! அண்ணாவை காணவில்லை என அழுதாள் "தங்கச்சி" அவளும் காணாமல் போனாள்..!!! என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என கதறினாள் ஒரு "தாய்" அவளும் காணாமல் போனாள்..!!! இதயமே இல்லாத இரும்புமனிதர்கள் தேசத்தில் கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"! மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில் விழி நீரின் "வலி" தெரியாது அழுபவனுக்கு மரண "தண்டனை"! நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில் கேள்வி கேட்பவன் "தீவிரவாதி" நீதியே இல்லாத "நிர்வாண" நாட்டில் கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"! கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால் நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"! விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம் வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீருக்குப் பயம்! இரத்தக்காட்டேறிகளின் தேசத்தில் இரத்தமே "குடிபானம்"!-தமிழனின் கண்ணீரே கறை கழுவும் தண்ணீர்! என் அண்ணா எங்கே? என கேட்டவளும் இல்லை... அவர்களை பெற்றவளும் இல்லை... உலக மனிதாபிமான கனவான்களே!!! மலேசியன் விமானத்தை தேடும்போது இவர்களையும் கொஞ்சம் தேடுங்கள்.... ஏனெனில்......... தமிழர்களும் "மனிதர்கள் தான்"!!! -தமிழ்ப்பொடியன்- 15/03/2014