Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8475
  • Joined

  • Days Won

    41

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. இலங்கையில் ஆறு மாதங்கள் 

     

    நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என்  நண்பியுடன்  கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று  அவளுக்குக் கூறினேன்.  நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். 

     

    எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது.

     

    இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது  பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே.  அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம்.  

     

    இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத்  தங்கையின்  வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது  என்பதும் ஒரு நண்பியுடன்  அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும்  என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள்

     

    இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம்  என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண்  செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும்  வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். 

     

    உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம்  அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை.  அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள்  எண்ணிக்கொள்கிறேன்.

     

    பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது.  

    அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 

     

    2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை  உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும்  இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். 

     

    கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. 

     

    ஒன்று

    • Like 16
    • Thanks 2
  2. அடடா இத்தனை விறுவிறுப்புடன் கைதேர்ந்த எழுத்தாளர்போல் இக்கதையை நகர்த்தியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் கோஷான்.

     

     

  3. எம் நாட்டுக்கும் மற்றவர்களுக்கும் எமது பயணம் பயன்படவேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன் பல புலம்பெயர்ந்த உறவுகள் அனுப்பும் பணத்தில் எவ்வித கூச்சமும் இன்றி வாழ்ந்துகொண்டு அந்தப் பணத்தை விரயமாக்கி, எம்மை முட்டாள்கள் என எண்ணிச் சிரித்தபடி வாழ்கின்ற பலரை நேரில் கண்டும் எதுவும் செய்ய முடியாக் கையாலாகாத நிலையில் நாட்டில் நிற்கிறேன். எனிமேல் யாருக்குமே பண உதவி செய்வதில்லை என்ற தீர்மானத்துடனும் வெறுவழியின்றி நின்றுகொண்டிருக்கிறேன். இனிமேல் எவரையும் நம்ப முடியுமா என்றும் தெரியவில்லை.

    • Like 2
  4. 6 hours ago, vasee said:

    அவுஸில் இருக்கும் எம்மவர்கள் நிலை வேற மாதிரி, பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள், படிக்க்காதவர்கள் ( அவுஸில் என்னை மாதிரி படிக்காதவர்களும் இருக்கிறார்கள் அந்த விடயத்தில் அவர்களுக்கு கொஞ்சமல்ல நிறைய அதிருப்தி உள்ளது🤣).

    அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

  5. On 6/7/2022 at 03:41, பிரபா சிதம்பரநாதன் said:

    எனக்கு  🥑 sushi பிடித்த ஒன்று.. teriyaki chickenம் பரவாயில்லை.

    இலகுவான செய்முறைதான் ஆனாலும் வீட்டில் செய்யும் அளவிற்கு பிடித்த உணவாக இது இல்லை.. 

    இதை செய்து ஃபிரிஜ் இல் வைத்து ஒருவாரம் வரை  உண்ண முடியும். அதற்காக முழு உணவாக அல்ல. உண்ணும்போதுதான் ஸோஸ் அல்லது ரைஸ் வினிகர் விட்டு உண்ண வேண்டும்

    • Thanks 1
  6. On 5/7/2022 at 13:05, goshan_che said:

    புழுங்கல் அரிசி சோறு...

    ஆட்டுக்கறி...

    கீரி மீன் பொரியல்...

    # சூசி எல்லாம் கால் தூசி

    சூசியை எப்பவாவது உண்ணலாமே தவிர எங்கள் உணவின் சுவை தனிதான். நாங்கள் ஆட்டையும் மீனையும் கலப்பதில்லை. 

    On 5/7/2022 at 16:17, இணையவன் said:

    படத்தில் இருப்பது Maki அல்லவா ?
    Sushi யில் மீன் துண்டு சோறுக்கு மேல் இருக்கும்.

    Maki என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்?? சுவைக்காக விடும் சோசயா ??

  7. On 5/7/2022 at 00:16, Nathamuni said:

    இதன் சுவை என்ன?

    உறைப்பு இல்லை. ஆனாலும் நீங்கள் சொன்னது போல, உச்சியில் அடிக்கும்..... மனம் தொடாதே என்று சொல்லும், நா ஒரு சிறு துண்டை சுவை என்று சொல்லும்.

    உச்சியில் உதறும் அந்த கணத்தில், ஏன்டா வாயில் வைத்தோம் என்று இருக்கும்... சிறிது நேரத்தில், இன்னோரு முறை ட்ரை பண்ணினால் என்ன என்று இருக்கும்?

    293016377_10218431652216201_132493807196

    இந்தக் கிழங்கில் தான் அரைப்பது.

    On 5/7/2022 at 10:49, குமாரசாமி said:

    இப்ப நான் என்ரை ஆளுட்டை சுசி எண்ட சாப்பாட்டை இண்டைக்கு செய்து சாப்பிடுவமோ எண்டு கேட்டன்....
    அதுக்கான பதில்...
    பசுமதியை நல்லாய் குழைய விடுறன்
    நல்லாய் ஆற விடுறன்
    நாலு கரட் துண்டை கீலம் கீலமாய் வெட்டி போடுறன்
    அவக்கோடாவையும் கீலம் கீலமாய் வெட்டி போடுறன்
    ரின் மீனை அப்பிடியே தூவி விடுறன்
    திரணை திரணையாய் உருட்டி வைக்கிறன்......
    பருப்புக்கறியை தண்ணியாய் வைக்கிறன்(சோயா சோஸ்க்கு பதிலாய்) 
    மத்தியான சாப்பாடு இதுதான்.


    எங்கடை சாம்பார் புத்தி எப்பதான் மாறுமோ என மனதுக்குள் புறுபுறுத்தபடி குமாரசாமி வேலைக்கு நடந்தே சென்றார் 🚶🏾‍♂️:cool:

    பசுமதியைக் குழைய விட்டாலும் அந்தச் சோற்றின் சுவை வருமா என்று தெரியவில்லை. செய்து பாக்கிறதில நாட்டமா என்ன

    நீங்கள் செய்து மனிசிக்குக் குடுக்கிறதை விட்டு உப்பிடிக்க கேட்டால்

    😀😂

  8. On 4/7/2022 at 22:47, Nathamuni said:

    ம்..ம்ம்... சூசியத்தை தான் ஸ்டைலா சூசி எண்டு சொல்லுறியள் எண்டு ஓடி வந்து பார்த்தேன்.

    ஜப்பானிய சுசி என்று தலைப்பைப்போடிருக்கலாமே...

    சரி... உந்த சுசி ஒரு வில்லங்கம் பிடிச்ச சாமான். பச்சை மீன், பிடிப்பதில்லை.

    ஜப்பான்காரர், கற்பனையே  எல்லை என்று கடஞ்ச சொன்ன மாதிரி, உத மாதிரி கண அயிட்டம் செய்து, ஒரு கன்வேயர் பெல்டில சுத்த வைச்சு, பரவசப்படுத்தி, கூடின காசுக்கு வித்துப்போடுவினம்.

    நான் மீனை கொஞ்சம் வேக வைத்து ட்ரை பண்ணப்போறன். செய்முறைக்கு நன்றி. 🙏

    இது ஒரு tray £10, £12 என்று விக்கிறாங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் அவ்வளவு வராது போல இருக்குது. இந்த பொருட்களை எங்கே வாங்கலாம். பாசி என்று நீங்கள் சொல்வது, seaweed என்பதா ?

    ****

    அது சரி அத்தார் சரியான கசவாராம் போலை கிடக்குது.

    இப்படி தேடி, தேடி, சமைச்சு கொடுக்கிற உங்களுக்கு, இன்னும் ஆறு விரலில மோதிரத்தை போட்டிருக்கலாமே, சா... என்ன அத்தார்...? 😭

    கொடுமை என்ன  என்றால் வீட்டில் அத்தாருக்கு மட்டும் இது பிடிக்காது. வேப்பெண்ணை குடிக்கக் கொடுத்ததுபோல் வேண்டா வெறுப்பாய் உண்ணும் மனிசன் ஒரு மோதிரமே போடார். இதுக்குள்ள எல்லா வீரலுக்குமா.. 

    On 4/7/2022 at 23:02, குமாரசாமி said:

    சத்தியமாய் நானும் யோசிச்சனான்.பிறகு எனக்கு இப்ப காலம் கூடாது எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் இருந்திட்டன்.பத்து விரலுக்கு மோதிரமும் இரண்டு கைக்கும் நாலு சோடி காப்பும் கிலுங்கியிருக்க வேணும் 😂

    கருவாடு வைச்சு சுத்திப்பாருங்கோ. அந்த மாதிரி இருக்குமெண்டு நினைக்கிறன்.🤔

    கருவாயாட்டைப் பொரித்துப்போட்டு வைத்தால் அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.

    On 5/7/2022 at 00:00, நிலாமதி said:

     செய்முறைக்கு நன்றி

    எங்கள் வீட்டிலும்  மக்களுக்கு பிறந்த நாள் என்றால் வாங்குவது. நான் பச்சை மீன் இறைச்சி சாப்பிடமாட்டேன். இதோடு ஒரு பச்சை நிறத்தில் பச்சை சட்னி போல ஒன்று ..ச் .சா பேர் வருகுதில்லை. அதை சோயா சாஸ் உடன் கலந்து  தொட்டு சாப்பிடடால் உச்சியில் அடிக்கும்.  என்னை தவிர மற்றவர்கள் சாப்பிடுவார்கள்  நான் வெஜி   மட்டும் சாப்பிடுவேன்.  ஆ ..நினைவு ..வந்திட்டுது  வஸாபி ..wasabi

    அவர்களின் உணவுகள் எல்லாம் சத்தானது. நாங்கள் தான் அவிச்சு சக்கையை உண்பது.

  9. On 4/7/2022 at 21:50, suvy said:

    லேற்றா வந்தாலும் ஒரு லேற்றஸ்ட்  செய்முறையுடன் வந்திருக்கிறீர்கள்......!  👍

    நல்லா இருக்கு நன்றி......!   

    நன்றி அண்ணா

    On 4/7/2022 at 21:57, ஈழப்பிரியன் said:

    பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பச்சை மீனாக இருப்பதால் எனக்கு பிடிப்பதில்லை.

    கட்டாயம் மீன்தான் வைக்கவேண்டும் என்றில்லை. தனிய மரக்கறிக்கூட வைக்கலாம் அண்ணா. ஸோஸ் சரியானதாக இருந்தால் சரி.

    On 4/7/2022 at 22:14, Kadancha said:

    sushi என்பது செய்யும் முறை.

    smoked  salmon, இறால், கணவாய், roasted meats, பக்குவமாக அரியப்பட்ட சீவல்கள் என்று, sushi க்கு கற்பனையே  எல்லை.

    உண்மைதான். விதவிதமாய் வைத்து உண்ணலாம். 

    On 4/7/2022 at 22:21, குமாரசாமி said:

    நான் இவ்வளவுநாளும் கடையிலைதான் வாங்கி சாப்பிட்டு இருக்கிறன். பாப்பம் நேரமிருந்தால் செய்து பாக்கத்தான் இருக்கு...
    செய்முறைக்கு நன்றி👍🏾

    கட்டாயம் செய்து பாருங்கோ

  10. 34 minutes ago, ஈழப்பிரியன் said:

    செய்முறை மிகவும் இலகுவாக உள்ளதே.

    ஆனாலும் இதை வெட்டுவது கொஞ்சம் சிரமம் போல.
    மெல்லிய கூரான சின்ன கத்தி தான் பாவிக்க வேண்டும்.

    நான் இத்தனை நாட்கள் இது எதோ பெரிய சமையல் என்று நினைத்தேன். செய்து பார்த்தபோதுதான் மிக விரைவாகச் செய்யக்கூடியது என்று தெரிந்தது.

  11. On 21/6/2022 at 14:30, ராசவன்னியன் said:

    காலங்காலமாய் ஆண்களிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை ஒப்பிட்டால் பெண்களின் வீட்டு வன்முறை மிகக் மிகக்குறைவு.

    ஆப்கானில் இப்போதிருக்கும் தலீபான்களின் மனநிலையிலேயே இன்னமும் ஆண்கள் பல நாடுகளில் இருப்பது கண்கூடு.

    பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே உருவகபடுத்தியிருக்கும் நமது பழங்கால சமூக கட்டமைப்பின் தூண்டுதலாக ஆண்களின் வக்கிர குணமும் அப்படி அமைந்துள்ளது வெட்கக்கேடு..!

    ஆண்களை வளர்க்கும் தாய்மாரும் கூட ஆண்களின் இந்த மனோநிலைக்கு ஒரு காரணம் அண்ணா. கட்டமைப்பே இல்லாத வெளிநாடுகளில் வளர்ந்த தமிழ் பிள்ளைகளிடம் ஏன் இந்த மனோநிலை வருகிறது ??

  12. On 22/6/2022 at 22:41, பிரபா சிதம்பரநாதன் said:

    கடவுள் பெண்களை ஒழுங்காகத்தான் படைத்துள்ளார்.. ஆனால் மனிதர்களில் பெரும்பாலும் ஆண்களின் மனதிலும் கண்களிலும்தான் ஏதோ தவறாக பதிந்துவிட்டார்.. 🧐

    மீண்டும் கண்டது சந்தோஷம் சுமோ அக்கா😊

    நான் குறிப்பிட்டது உடலமைப்பையோ அலகையோ அல்ல. பெண்களுக்கு மட்டும் இயற்கை கொடுத்த உபாதைகளைச் சொன்னேன். 😀

    On 22/6/2022 at 22:40, Nathamuni said:

    இல்லாவிட்டால், பார்வதியும் அங்கை போடுவா எண்டு தான், ஐடியாவோடை, படைத்திருக்கிறார் போல கிடக்குது...

    அது சரி... அத்தார்... உங்கை லண்டனிலை தானே... 😜

    எதுக்கும்... எண்டு சும்மா கேட்டு வைச்சேன்... கோவிக்கிறேல்ல... 😁

    அத்தார் லண்டனை விட்டு எங்க போறது ??? இங்கையேதான்.😀

  13. On 21/6/2022 at 13:14, பிரபா சிதம்பரநாதன் said:

    சரியான போட்டி.. கடவுள் என்ன சொல்வாரோ🤣🤣🤣

    ஆனாலும் இவர்களுடைய துணிவை பாராட்டத்தான் வேண்டும்.. 

    சரியாகச் சொன்னீர்கள். இனிமேல் முழுப் பட்டினிதான் அவர்களுக்கு 😂

    5 hours ago, ஈழப்பிரியன் said:

    ஏன் சார்

    பெண்களும் இப்படிப் போவாங்களா சார்?

    ஏன் பெண்களுக்கும் போக ஆசைதான். ஆனால் அந்தக் கேடுகெட்ட கடவுள் எங்களைப் பல சிக்கல்களுடன் படைச்சிட்டாரே😀

    • Haha 2
  14. எங்கள் ஊரவர்கள் தான் இவர்கள். 

    On 20/4/2022 at 20:50, குமாரசாமி said:

    என்னைப்பொறுத்தவரைக்கும் இதெல்லாம் ரூமச்.

    வீட்டுக்கு இரண்டு கார்,அஞ்சு ஸ்கூட்டி எல்லாம் ஆர் வாங்கச்சொன்னது?
    ஏன் முந்தினைய மாதிரி சைக்கிள் ஓடலாம் தானே?

    ஐரோப்பாவிலை சைக்கிள் ஓடுறதுக்கெண்டே ரோட்டு போடுறாங்கள். .இவையளுக்கு என்னடாவெண்டால் பெற்றோல் விலை கூடிப்போச்சுதாம்...நீங்களெல்லாம் பள்ளிக்கூடத்திலை பிள்ளையளுக்கு என்னத்தை சொல்லிக்குடுக்கப்போறியளோ ஆருக்குத்தெரியும்.

    எங்கடையளுக்கு கொழுப்பு கூடிப்போச்சு

    போராட்டம் நடத்துறதெண்டால் மனித உரிமைகளுக்காக போராட்டம் நடத்துங்கள்.

    அது அவையின் பிரச்சனை. ஏதோ உங்களையும் மாட்டுவண்டியில ஏறச் சொன்ன மாதிரி .. ............😀

  15. கோவின் இழப்பு பெரியது. யாழ் இணையத்துடன் முரண்பாடுகள் இருந்தாலும் தன்னை ஆளாக்கியது யாழ் இணையம் தான் என்று பல இடங்களில் கூறியுள்ளார்.  யாழ்  இணையத்தின் ஊடாக அவருக்கு அறிமுகமான தமிழ்ப் பெடியன் ஒஸ்ரேலியாவிலிருந்து வந்த அன்றே கோவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவந்து "அண்ணை உங்களை உயிருடன் ஒருமுறைகூடப் பார்க்க முடியவில்லையே" என்று  கலங்கி அழுததாக சுசீலா கூறினார். வாத்தியாரும் யாழ் இணையசார்பில் மலர்வளையம் வைத்ததையும் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

    • Sad 1
  16. 1 minute ago, குமாரசாமி said:

    ஊரிலை எல்லாம் நுளம்பு ஆக்கினையளுக்கு சட்டியிலை கரி எரிச்சு வேப்பம் இலை புகை அடிக்கிற ஞாபகம் இருக்கோ?😁
    மூட்டைப்பூச்சி தொல்லை எண்டால் நல்ல வெய்யில் எறிக்கேக்கை மெத்தையளை வெய்யில்லை காயப்போடுங்கோ. நல்ல நிவாரணம் இருக்கு.....😄

    ஓ....உங்கை வெளியிலை ஒண்டையும் வைக்கேலாது என்ன அவ்வளவுக்கு கள்ளர் தொல்லை....இது வேற பெரிய றபிள் :cool:

    யோவ் குமாரசாமி! மூட்டை இல்லை என்று அப்பவே சொல்லியாச்சு😀 எலி கூட இல்லாத சுத்தமான வீடு 🙃

  17. 11 hours ago, Paanch said:

    12.jpg

    கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, , கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.

    கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.

    ‪#எலி
    எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.

    எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.

    ‪#பல்லி
    உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?

    அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள்.

    இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.

    ‪#
    சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும்.

    அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.

    இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்.

    இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

    ‪#கொசுக்கள்
    கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும்.

    மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

    எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.

    இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.

    ‪#கரப்பான்_பூச்சி
    கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.

    அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.

    ‪#மூட்டைப்பூச்சி
    மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.

    கூட்டிக் களிச்சுப் பார்த்தால் வீட்டை இலைகுழைகள் போட்டு குப்பையாக்கச் சொல்லுறியள் 😀

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.