Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8475
  • Joined

  • Days Won

    41

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. 13 hours ago, nedukkalapoovan said:

    காப்பிலி தமிழில் உரையாடுபவர்கள் பாவிப்பத்தால்.. அதன் தாக்கம் சரியாக அந்த நிறத்தவரால் விளங்கிக் கொள்ளப்படவில்லை.

    ஆனால்.. நீக்குரோ என்பது எப்படி இனரீதியான அவமானச் சொல்லாகப் பார்க்கப்படுகிறதோ.. அதே காப்பிலிக்கும் இருக்கிறது எனலாம். 

    அந்த நிறத்தவர் முன்னாலோ அன்றி அவர் வாசிக்கக் கூடிய ஆங்கிலத்திலோ நான் இந்தக் கதையை எழுதவில்லை. அப்படியிருக்க எப்படி தவறாகும்???அப்படிப் பார்க்கப் போனால்  கருப்பு இனத்தவர்கள் எனறு பல இடங்களில் பயன்படுத்துகின்றனரே?

    11 hours ago, goshan_che said:

    நானறிந்த வரை:

    காப்பிலி என்பது அரபிச்சொல்லான காபிர் இன் திரிபு.

    ஆசியாவில் இருந்து வட ஆபிரிக்கா நோக்கி நகர்ந்த அரபிகள், நம்பிக்கையற்றவன் என்ற பொருளில் காபிர் என அப்போ முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்த கறுப்பின மக்களை அழைத்தனர்.

    அதுவே பின்னர் திரிபடைந்து காப்பிரி, காபிரிஸ், தமிழில் காப்பிலி என வழங்கப்படுகிறது.

    தமிழில் காப்பிலி என்பது நிகர், பக்கி, போன்ற ஒரு வசைபு சொல்லா? அல்லது பிளக், வையிட் போன்ற ஒரு அடையாளச்சொல்லா?

    என்னை பொறுத்தவரை இது ஒரு அடையாளச்சொல் என்றே கருதுகிறேன். ஆனால் slang எனப்படும் வழக்குத்தொடர். Formal எழுத்தில் கறுப்பினத்தவர் என்பதை பாவிக்கலாம். ஆனால் கதைகளில் பேச்சு வழக்காக எழுதும் போது காப்பிலி என எழுதலாம் என்றே நினைக்கிறேன்.

    தொட்டதை எல்லாம் தடை செய்யும் cancel culture இன் ஒரு நீட்சியாக இந்த சொல்லையும் தடை செய்வதாகவே எனக்குப்படுகிறது.

    ————

    இது சம்பந்தமான கட்டுரை ஒன்று

    ———————

     

    மிக்க நன்றி கோஷான் உங்கள் கருத்துக்கு. நீங்கள் போட்டுள்ள கட்டுரையை இன்று வாசிக்க நேரம் இல்லை. வாசித்தபின் கூறுகிறேன். 

    10 hours ago, புலவர் said:

    மேற்கு நாட்டவர் குறிப்பாக இங்கிலாந்தில் கறுப்பு இனத்தவர் என்று பொருள்படblack என்ற சொல்லைபாவிக்கிறார்கள் . ஆனால் நீக்கிரோ என்ற சொல்லைப் பாவிப்பதை இனத்துவேசத்தில் பார்க்கிறார்கள்.
    தமிழில் ஆபிரிக்க இனத்தவர் என்ற பொருளில் காப்பிலி என்று பாவிக்கிறார்கள் இனத்துவேசத்துடன் அதைப்பாவிப்பதாகத் தெரியவில்லை.ஆனால்கறுப்பர்கள் என்று பாவிப்பதை இங்கு பிறந்த பிள்ளைகள் விருமபவில்லை என்று உணர முடிகிறது.

    நான் எழுதியதற்கான பதில் உங்களிடம் இல்லையே ???

  2. 13 hours ago, நிழலி said:

    வணக்கம் சுமே,

    ஆம் இது மிகவும் தவறான அவச் சொல் தான். கருப்பின மக்களை தரம் தாழ்த்த எம்மவர்களால் பயப்படுத்தப்படும் நிறவெறி கொண்ட ஒரு சொல்.

    யாழ் விதிகளின் படி, இச் சொல்லை யாழில் எங்கும் பயன்படுத்தவும் முடியாது - தலைப்பில் உட்பட.

    நன்றி

    எம்மவர்கள் வாக்குக்கண், பல் மிதப்பு என்றும் வெள்ளைச்சி என்றும் பயன்படுத்துவதுதானே ??? அச்சொற்களை அந்த நபர்களுக்கு முண் அல்லது அவர்கள் காதுபடக் கூறுவதுதான் தவறு.

    13 hours ago, நன்னிச் சோழன் said:

    இந்தக் காப்பிலி என்ற சொல்லானது அவர்களது தலைமையிரை வைத்து குறிப்பிடும் ஒரு சொல் என்பது என்னுடைய கருத்து.

    இச்சொல் இன்றளவும் என்னுடைய வீட்டில் எனது/ என் போன்ற இளையோர்/ஆண்கள் தலைமையிர் ஒழுங்கீனமாக இருந்தால் அதைக் குறிப்பிட என்னுடைய உறவினர்களால் பாவிக்கப்படுகிறது.

    ஆபிரிக்க இனத்தவரின் தலைமுடியைக் குறிக்கும் சொல்தான் அது. உங்கள் கருத்தை நேரடியாகக் கூறவில்லை. அப்படி நான் குறிப்பிட்டது தவறா???

    12 hours ago, நிலாமதி said:

      பாது காப்பு இல்லாதவன்    காப்பு +இலி (இல் )  காப்பிலி .

    இப்படியும் சொல்லலாம்.   

    அதுவல்ல என்  பதிவின் நோக்கம். நான் எழுதியது சரியா ??? தவறா /// என்பதுதான்

  3. 10 hours ago, suvy said:

    சிறப்பான கருத்துக்கள் கோஷான்-சே ...........எனக்குத் தெரிந்ததெல்லாம் முன்பு ஆச்சிமார் பிள்ளைகளை வெருட்ட அந்தச் சொல்லைப் பாவிப்பார்கள்.......!  👍

    இதில் நீங்கக்கள் எந்தக் கருத்தையும் வைக்கவில்லையே நான் எழுதியது தொடர்பாக????

    11 hours ago, யாயினி said:

     

    நான் எழுதியிருப்பது இதல்ல. நான் எழுதியது தொடர்பான உங்கள் கருத்தை முன்வையுங்கள்

  4. 10 hours ago, suvy said:

    இன்னும் வருமா....... இவ்வளவுதானா .......!   😁

    இவ்வளவுதான்

    3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

    விலகி போனாலும் விட மாட்டியள் போல  தொடரட்டும் 
    மார்ட்டீன் எங்க போனான்

    அவனுக்குத்தான் தெரியும் 😀

  5. இன்றுதான் திமிர் வரி என்ற சொல்லிக் கேள்விப்படுகிறேன். பிரிட்டிசாரின் அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல. 

  6. நான் 2019 இல் வெளியீடு செய்த சிறுகதைகளில் "ரயில் பயணம்" என்னும் தலைப்பில் ஒரு கதை வருகிறது. நீங்கள் எல்லாம் வாசித்ததுதான்.  புரியாதவர்களுக்காக அதிலிருந்து சில வரிகளை மீண்டும் எழுதுகிறேன்.

    எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்தத் திருப்பத்தில் திரும்ப எதுவோ என்னில் வேகமாக மோத ,கைப்பை ஒருபுறமும் காலனியில் ஒன்று ஒருபுறமும் போக, விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான்.

    இதுவே அந்தப் பந்தி. எனது சிறுகதையில் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியது தவறு என்று சிலர் கடுமையாகத் தங்கள் கருத்தை முன்வைத்தனர். நாம் சாதாரணமாக எம்மவருடன் கதைக்கும்போது சப்பட்டை என்று சைனீஸ் இனத்தவரையும் காப்பிலி என்று ஆபிரிக்க இனத்தவரையும் அடையார் என்று பிரான்சில் வாழும் மொறோக்கோ இனத்தவரையும் குறிப்பிடுவது சாதாரண ஒன்றாகவே நான் பார்க்கிறேன். இது சாதியைச் சொல்லிக் கதைப்பது போன்றது என்றும் ஒருவர் குறிப்பிட்டார். சாதீயம் என்பது வேறு. ஒரு இனக்குழுமத்துக்கான சொல்லாடல்தான் இப்படியான சொற்கள் என்பதனால் காப்பிலி என்னும் சொல்லை நான் அதுவும் நேர்மறையான "காப்பிலி என்னை விழாது காப்பாற்றினான்" என்று குறிப்பிட்டது தவறல்ல என்கிறேன். அந்த இனத்தவரின் முகத்துக்கு நேரில் அல்லது அவர்கள் காதில் படும்படி நாம் அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதுதான் தவறு. 

    நீங்கள் இக்கருத்துபற்றி என்ன எண்ணுகிறீர்களோ உங்கள்  கருத்தைத் தயங்காமல் கூறுங்கள்.

     

    எனக்கு ஞாபக மறதி வந்துவிட்டதனால் முன்னரும் யாழ் களத்தில் இதுபற்றி எழுதினேனா தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தால் அந்த லிங்க்கை இதில் இணையுங்கள்.

  7. 1 hour ago, ஈழப்பிரியன் said:

    உங்களைப் போலத் தான்.

    இப்ப பிரச்சனை இதை வாசித்தாச்சு.முன்னுக்கு என்ன தான் எழுதியிருப்பீர்கள்.

    கொஞ்சம் மவுசை உருட்டினீர்கள் என்றால் பழையது வரும் 😂

  8. On 27/3/2022 at 15:53, தனிக்காட்டு ராஜா said:

    பகுதி ரெண்டு இருக்கா இல்லையா சொல்லுங்க

    வரிசையில் நிற்க இடத்த பிடிக்கணும் சாமானுகள் வாங்க 

    பகுதி 2 எழுதிப் போட்டாச்சு😀

  9.  

     

    அவன் தூரத்தில் வரும்போதே துர்நாற்றம் ஒன்று வீச அந்தப் பெரிய கண்ணாடியை மீறி சிறிய கடிதங்கள் மட்டுமே போகக்கூடிய இடைவெளியூடாக அந்த நாற்றம் என் மூக்கில் அறைய நான் என்னை அறியாமலேயே கைகளால் மூக்கைப் பொத்திவிட்டு ஒரு வாடிக்கையாளருக்கு முன்  அப்படிச் செய்வது அழகல்ல எனறு எண்ணி கைகளைக் கீழே விட, அவன் அந்த இடைவெளியால் தாளைத் தருகிறான். அவனுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட வழமைபோல் நன்றி கிருஷ்ணா என்றபடி திரும்புகிறான். அவன் கைகளில் வைத்திருந்த பொருட்கள் அப்போதுதான் என் கண்ணில் தெரிகின்றன.

    "உன் பெயர் என்ன"

    "மார்ட்டீன்"

    "எதற்கு இந்த வண்ணக் கட்டிகளையும் பென்சில்களையும் வாங்கிக்கொண்டு செல்கிறாய்"

    "நான் ஆர்ட் கீறுவதில் மாஸ்ரேஸ் முடித்திருக்கிறேன். எனக்குத் தோன்றும் நேரங்களில் படங்கள் கீறுவேன்"

    "உனக்குக் குடும்பம் இருக்கிறதா"

    "யாரும் இப்போ இல்லை"

    "வீடு கூட கவுன்சில் தரவில்லையா"

    "எனக்கு வீடு இருக்கிறது. இரவில் மட்டும் அங்கு சென்று தூங்குவேன்"

    "என்னைத் தவறாக நினைக்காதே. உன்னில் ஒரு கூடாத மணம் வருகிறது. இத்தனை படித்த நீ ஏன் சுத்தமாக இருக்கக் கூடாது."

    "ஓகே"

    என்றுவிட்டு அவன் செல்ல, வெளியே கடையில் தட்டுக்களில் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்த ஒருவர்

    "என்ன அக்கா. ஏன் இப்பிடி மணக்குது என்று அவனுக்குச் சொன்னீர்கள்"

    "அப்பவாவது அவன் குளித்து உடைமாற்றிக்கொண்டு வருக்கிறானா என்று பார்ப்போம். எத்தனை நாட்கள்தான் அவனின் நாற்றத்தைத் தாங்குவது"

    "நீக்கள் சொன்னது போலத்தான் எங்கட முதலாளியும் அவனுக்கு ஒருநாள் சொன்னவர். அவன் அதைக் கேட்டிட்டு "ஜோன் எனக்கு ஒண்டும் சொல்லாதை. நான் இப்பிடித்தான் இருப்பன். எனக்கு மில்லியன் வியூவேர்ஸ் இன்ஸ்ரகிறாமில் இருக்கினம். உனக்குப் பிடிக்காட்டில் நான் எதிர்ப்பக்கம் இருக்கிற கடையில போய் இருக்கிறன்" என்றானாம். அதன்பின் முதலாளி வாயே திறக்கிறேல்லை. ஆனால் நீங்கள் பொம்பிளை எண்டதால ஒண்டும் சொல்லாமல் போறான்.

    நான் சிரித்துவிட்டு என் அழுவலைப் பார்க்கிறேன்.

    அடுத்த நாள் வேலையை ஆரம்பித்து பத்து நிமிடம் செல்ல மார்ட்டீன் என்னை நோக்கி வந்து குட் மோர்னிங் கிருஷ்ணா என்கிறான்.

    நேற்று அவனுடன் கதைத்த பின் எனக்கு அவன்மேல் ஒரு மதிப்புக் கூடியிருந்தது. அதற்குக் காரணம் அவன் படித்திருக்கிறான் என்பது மட்டுமல்லாமல் நான் வேலை முடிந்து செல்லும்போது அவன் மட்டையில் வரைந்து முடித்திருந்த அந்த அழகிய அர்த்தம்பொதிந்த ஓவியமும்தான்.

    இன்று நான் சுத்தமாக வந்திருக்கிறேன் என்று தன் ஆடையையும் தொட்டுக் காட்ட அப்பதான் அட இவனில் இன்று எந்தத் துர்நாற்றமும் வீசாததை நான் கவனிக்கவில்லையே என வியந்தபடி மிக்க நன்றி மார்ட்டீன். என் பேச்சு உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள் என்கிறேன்.

    இல்லை இல்லை. நான் ஒன்றும் நினைக்கவில்லை. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்றபடி திரும்பிச் செல்ல என் மனம் நிம்மதி அடைகிறது.

    கடைக்கு வரும் பலரும் அவனுக்கு பணம் கொடுப்பது மட்டுமன்றி அவனைக் கூட்டிவந்து அவனுக்குத் தேவையான உணவுகளைக்கூட வாங்கிக் கொடுப்பார்கள். அங்கு மெசினில் கோப்பி அல்லது தேநீர் கூட அவனாகவே வாங்குவதுமுண்டு. மற்றவர்களும் வாங்கிக் கொடுப்பதும் உண்டு. சில நேரங்களில் கையில் பணம் இல்லாதபோது கடையில் நிற்போரிடம் கடன் சொல்லி வாங்கிவிட்டுப் பணம் சேரும்போது கொடுத்தும்விடுவான்.  

    இப்ப இரண்டு வாரங்களாக அவனைக் கடைக்கு முன் காணவில்லை. அவன் மன அழுத்தம் காரணமாக மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டானோ? காலையில் எழுந்து பல்விளக்கி முகம் கழுவுகிறானோ என்று கூடத் தெரியாது. குடும்பம் இல்லை. வேறு தொந்தரவுகள் இல்லை. வீதியிலேயே இருப்பதால் வீடு இருந்தாலும் கரண்ட் காசுகூடக் கட்டும் தேவை இல்லாத அவனுக்கே மன அழுத்தம் என்றால் இத்தனை சுமைகளைத் தாங்கி இத்தனைகாலம் குடும்பமாய் வாழும் எனக்கு எத்தனை மனஅழுத்தம் இருக்கவேண்டும். அதனைக்கும் அசையாது இத்தனை மனத்திடத்துடன் நான் இருக்கிறேன் என்னும் பெருமிதமும் எனக்குள் ஏற்படாமல் இல்லை.

    இருவாரம் ஒரு மாதமாகி ஆறு ஏழு மாதங்களாகியும் அவன் மீண்டும் வரவேயில்லை. அவன் தொடர்ந்தும் மருத்துவமனையில் தான் இருக்கிறானா?? அன்றி அவனுக்கு எதுவும் நேர்ந்துவிட்டதா என்னும் பதைப்பும் என்னுள் எழுந்து மடிய பலரிடம் விசாரித்தும் அவனைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவேயில்லை. அவன் இருக்கும் இடத்தில் அவன் வைத்துவிட்டுப் போன அந்த மட்டையும் சில நிறம் தீட்டும் பென்சில்களும் கேட்பாரற்று அங்கேயே இன்றுவரை கிடக்கின்றன.              

     

     

    • Like 3
  10. On 6/4/2022 at 04:00, யாயினி said:

    எப்போ வரும்...punctuality, கொஞ்சமாவது கடைப் பிடித்தால் நன்று..✍️🖐️

    சத்தியமாய் நான் இதை மறந்தே போனன். 

    On 31/3/2022 at 14:19, P.S.பிரபா said:

    அடுத்த பகுதி வரும் வரைக்கும் அந்த மனிதன் ஒரு புரியாத புதிர் தான்

    மன்னியுங்கள் மறந்துவிட்டேன்

    On 31/3/2022 at 20:39, ரதி said:

    உங்களிடமுள்ள குறையே அதிக இடைவெளி விடுவது தான் 

    உண்மையை ஒத்துக்கொள்ளத்தானே வேணும்.

  11. “எனக்கு சந்திராவைப் பேசித்தான் செய்தது. நான் முதல்முதல் அவவைப் பார்க்கப் போகேக்குள்ள அவ சாதாரணமாத்தான் இருந்தவ. இரண்டு ஆண்டுகள் தான் சந்தோஷமான வாழ்க்கை. கொஞ்சநாள் போகத்தான் தன்பாட்டில கதைக்கிறதும் வெறிக்கவெறிக்கப் பாக்கிறதும் ஏதோ தன்னுக்குள்ள பேசுறதும்...........நானும் குணமாகிவிடும் எண்டுதான் பொறுத்துக்கொண்டு இருந்தன். சமையல் சாப்பாடெல்லாம் மாமிதான். இந்தியாவுக்குக் கொண்டு போய்கூட வைத்தியம் பார்த்தும் சரிவரேல்லை. கடைசியில நோய் முத்திப்போய் உடுப்புகளை கழட்டி எறிஞ்சிட்டு  அம்மணமா நிக்கத் தொடங்க, மாமா மாமிதான் நீங்கள் இவ்வளவு காலம் துன்பப்பட்டது போதும் எண்டு சொல்லி விவாகரத்தும் எடுத்துத் தந்தவை. பாவம் நல்ல ஜீவன்கள். அதுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் ஓடிப் போச்சு. நானும் இப்பிடியே இருந்திட்டன். அப்பப்ப அம்மாவைப் பார்க்க இங்க வருவன்” என்று தயாளன் சொல்ல எனக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருக்கிறதோட மட்டுமில்லாமல் நெஞ்சுக்கையும் ஏதோ செய்ய எப்பிடி ஆறுதல் சொல்லுறது எண்டு தெரியாமல் அவர் சொல்லுறதைக் கேட்டுக்கொண்டிருக்கிறன்.

    அதன்பின் நாங்கள் இருவரும் அடிக்கடி பொது இடங்களில் சந்திக்கவும் மணிக்கணக்கில் கதைக்கவும் தொடங்கி அவர் கனடா போனபின்னும் தொடர்ந்து போனில வற்சப்பில எண்டு ஒருநாள் விடாமல் விவாகரத்து கிடைக்கும் வரைக்கும் கதைத்துக்கொண்டே இருந்தம். அதுக்குப் பிறகுதான் என்  வாழ்க்கையில் மீண்டும் வசந்தகாலம் ஆரம்பிச்சது. 

     

       *******************************************************************************************************

    பார்க்கும் இடமெங்கும் வெள்ளைவெளேர் என்று பூம்பனி நிறைந்திருக்கு. சொல்வதற்கும் பார்ப்பதற்கும்தான் பூம்பனி அழகானது. ஆனால் கொடும்பனி என்றுதான் நான் சொல்வேன். பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பனித்துகள்கள் தாங்க முடியாத குளிரை ஏற்படுத்துகின்றன. பனி இறுகி எத்தனை விபத்துக்களை உண்டுபண்ணுகின்றன. என்னதான் குளிர் ஆடைகளை அணிந்து வெளியே சென்றாலும் கிடுக்கிடுத்து நடுங்க வைக்கின்றன. சில மனிதர்களும் இப்படித்தான். பார்க்க மிகவும் நல்லவர் போலத் தான் தெரிவார்கள். அவர்களோடு நெருங்கிப் பழகிய பின்னர்தான் அவர்களின் உண்மை மனநிலைகளை அறிந்துகொள்ள முடிகிறது. சாளரத்தினூடாக வெளியே பார்த்துக்கொண்டு நின்ற என்னால் பனிப்பொழி  வின் அழகை தொடர்ந்தும் இரசிக்க முடியவில்லை.

     நான் கனடா வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. எவ்வளவு விரைவாக ஓடிப்போகுது காலம். இப்பதான் என்னால என் பிள்ளைகளில் இருவரை கனடாவுக்கு எடுக்க முடிந்தது. மூத்தவனுக்கு பதினாறு வயதானபடியால் அவனை மட்டும் எடுக்க முடியவில்லை. அவன் இப்ப ரவியுடன்தான் இருக்கிறான். என்னதான் இருந்தாலும் பிள்ளைகளை விட்டுவிட்டு கனடா வரமுடியாதுதானே. அம்மாவும் எத்தனை நாள்தான் பிள்ளைகளைத் தனியாக வளர்க்க முடியும். நான் ரவியின் தமக்கையுடன் கதைத்ததும் எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது. அவவே தான் பிள்ளைகளை நான் பார்த்துக்கொள்ளுறன், நீர் போம் என்று சொன்னதால்தானே நான் நின்மதியாய் இங்கு வரவும் இருக்கவும் முடிந்தது. வருவதற்கு முன்னர் விவாகரத்தும் கிடைத்ததுதான் என் அதிட்டம்.

    எப்படியும் ஒரு ஆறு மாதங்களுள் மூத்தவனையும் கூப்பிட்டிடுவன். அதுவரை பொறுமையாய்த்தான் இருக்க வேணும். ரவிகூட இப்ப எவ்வளவு மாறிவிட்டார். முன்னர் என்னை எப்படி எல்லாம் சந்தேகப்பட்டார். இப்ப அதை உணர்ந்து அதுக்கெல்லாம் எத்தனைதரம் மன்னிப்புக் கேட்டிட்டார். மன்னிக்கிறதுதானே மனித மாண்பு. அதை விளங்கிக் கொள்ளாமல் “எதுக்கு ரவியோடை அடிக்கடி கதைக்கிறாய்” என்று ஏசும் தயாளனுக்கு எப்பிடி விளங்கப்படுத்திறது என்றே தெரியாமலிருக்கு. ஐந்து ஆண்டுகள் கணவனாய் வாழ்ந்தவர் என்று ஏன் தயாளனுக்குப்  புரியுதில்லை. வெளிநாடுகளில் பிரிந்த கணவனும் மனைவியும் சுமுகமாகப்பேசிக் கொள்வது இயல்புதானே என்று அவருக்குச் சொன்னாலும் நாங்கள் வெள்ளைக்காரர் இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

    எப்படியோ மன நின்மதியான இந்த வாழ்வு தயாளனால்தான் என நன்றியோடு எண்ணிப்பார் என உள்மனம் அடிக்கடி சொல்லும்போதெல்லாம் எனக்கு ஏற்படும் ஆயாசத்துக்கு அளவே இல்லை.

     

     

    நான் கனடா வந்தபின் வேலைக்குப் போகும்படி தயாளன் என்னை வற்புறுத்தவில்லை. என்றாலும் அவர் வேலைக்குப் போனபிறகு வீட்டில் எட்டு ஒன்பது மணிநேரம் தனிய இருக்கவும் பிடிக்கவில்லை. தயாளனின் முதல் மனைவி இருந்த நிலையால் யாரும் அவர் வீட்டுக்கு வருவதில்லை என்று சொல்வதைவிட இவர்களே யாரும் தப்பித்தவறிக்கூட வீட்டுக்கு வாராதவாறு பார்த்துக்கொண்டனராம் என்று வேதனையுடன் தயாளன் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியே ஒருவித மன அழுத்தத்துள்ளும் தயாளனும் இருந்தபடியால் யாரையும் நண்பர்கள் என்று வீட்டுக்கும் அழைத்ததில்லை. அது இப்போதும் தொடர்கிறது.

    இப்ப இருப்பது ஒரு படுக்கை அறை,ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை மட்டும்தான். எங்கள் இருவருக்கும் அது போதும்தான் என்றாலும் பிள்ளைகளைக் கூப்பிட்டால் இது போதாதுதானே என நான் மட்டுமல்ல தயாளனும் யோசித்து என் பிள்ளைகளைத் தன் பிள்ளைக்களாய் எண்ணித்தான் இந்த பெரிய வீட்டை வாங்கினவர். தயாளன் தொடர்ந்து வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார். அவருக்கு நல்ல சம்பளம். என்  உடல்வாகிற்கும் முகப் பொலிவுக்கும் நகை நட்டுகள் போடாமலே அழகாய் இருப்பதால் தங்கநகைகள் கூட நான் அதிகம் வாங்கிப் போடுவதில்லை.

    தயாளன் தொடர்ந்து வேலை செய்ததாலும் அவரின் முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை என்பதாலும் அவரிடம் சேமிப்பில் ஏற்கனவே இருந்த பணத்தைப் போட்டு இந்த வீடு வாங்கியது எத்தனை வசதியாக இருக்கு எங்களுக்கு .

    பெரியவனுக்கும் ஸ்பொன்சர் சரிவந்திடும் என்றுதான் நம்பிக்கையாய்ச் சொல்கிறார். நான் வேலை செய்யும் பணத்தைக் கூட அவர் கேட்பதில்லை. தன் வருமானத்திலேயேதான் என் இரு பிள்ளைகளையும் கூப்பிட்டவர். இவர் என்னைக் கலியாணம் கட்டினது என் அதிட்டம்தான். இருந்தாலும் என் அழகும் ஒரு காரணம் தானே என எண்ணியதில் ஏற்பட்ட பெருமிதத்தில் கண்ணாடியின் முன் சென்று என்னை நானே பார்க்கிறேன். என்னை அறியாது என் அழகில் நானே இலயித்து நிற்கிறேன்.  

    நாற்பது வயதானாலும் என் அழகு கூடியிருக்கிறதேயன்றிக் குறையவில்லை. மாருதியின் ஓவியப் பெண்ணின் உடல்வாகும் நெற்றியும் அதற்கும் மேலே தனித்துவமான உதடுகளும் புருவமும் வெள்ளை வெளேர் அல்லாமல் பளிங்குபோன்ற அந்த நிறமும் என்னை நானே பார்த்துப் பொறாமை கொள்ளவைப்பதாய் இருக்க என்னுள் சிரித்துக் கொள்கிறேன். 

    திருமண வீடுகளுக்குப் போவதென்றாலோ அல்லது வேறு பொது நிகழ்வுகள் என்றாலோ எனக்குப் போவதற்கு ஒருமாதிரி இருக்கும். பெண்கள் பலரும் ஏதோ செய்யாத குற்றத்தைச் செய்ததுபோன்று என்னோடு பேசாமல் இருக்க பத்திக்கொண்டு வரும். தயாளனிடம் குறைப்பட்டுக்கொண்டபோது “அவர்களுக்கு உன் அழகின் மேல் பொறாமை. அதை இப்பிடித்தான் காட்டுவார்கள்” என்றதில் என மனமும் அமைதியானது. அதுமட்டுமன்றி பெண்கள் தான் கதைப்பதில்லையே தவிர ஆண்கள் பலரும் வைத்தகண் வாங்காமல் என்னைப் பார்ப்பதை நான் கண்டுவிட்டுத் தெரியாதமாதிரி இருப்பன்.

    நான் தயாளனைக் கட்டிக்கொண்டு வந்தபிறகு என் அண்ணன்மாரும் பிரச்சனை தீர்ந்ததாக எண்ணி என்னோட கதைக்கிறதை விட்டுவிட்டார்கள். எனக்கது கவலைதான் என்றாலும் அவை ஒருத்தரும் கனடாவில் இல்லை என்றதில் சிறிது நின்மதியாகவும் இருக்கு.

     

    வரும்

     

    • Like 6
  12. On 8/9/2023 at 01:39, யாயினி said:

    சரி கார் வாங்கியாச்சோ இல்லயோ எதுக்கும் பாத்து ஓட்டுங்கோ..தண்டவாளங்கள் யாக்கிரதை.🖐️

    காருக்கு நான்கு சில்லுக்கள் என்பதால் ஒண்டும் நடக்காது 😄

    On 8/9/2023 at 11:27, suvy said:

    அதுக்குப் பிறகு ஸ்ரீலங்காவிலேயே கார் வாங்கி ஓடியாச்சுது ஆனால் கதைதான் இன்னும் ஓடவில்லை......!   😂

    வாங்குவன். இன்னும்  வாங்கேல்லை.😄

    On 8/9/2023 at 19:39, தனிக்காட்டு ராஜா said:

    அப்ப கார் வாங்கல இன்னும் 

    இன்னும் இல்லை.😀

    • Haha 1
  13. 11 hours ago, புங்கையூரன் said:

    நீண்ட நாட்களின் பின்னர் உங்களிடமிருந்து ஒரு தொடர்…!

    தொடருங்கள், சுமே! ஆரம்பம் நன்றாக உள்ளது…!

    உங்கள் கருத்துக்கள் தானே எனக்கு ஊக்கம் தருவது. நன்றி வருகைக்கு.

    10 hours ago, ஈழப்பிரியன் said:

    கனநாட்களுக்குப் பின் தொடர்கதையுடன் வந்திருக்கிறீர்கள்.

    முன்னரெல்லாம் இப்படியான வாழ்வு எங்காவது ஓரிடத்தில்த் தான் நடக்கும்.இப்போது நிலமை மாறிவிட்டது.

    தொடருங்கள்.

    இப்பதான் கொஞ்சம் மனம் வந்திருக்கு அண்ணா. வருகைக்கு நன்றி அண்ணா. 

    9 hours ago, நிலாமதி said:

    மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

    ஊருக்கு போனீர்களா? தொடருங்கள்  . 

    இனித்தான் போகப்போறன் அக்கா. வருகைக்கு நன்றி.

    1 hour ago, suvy said:

    நல்ல ஆரம்பம்........!  😁

    தொடருங்கள் தொடர்கின்றோம்........!

    மிக்க நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  14. 1545633535-5446.jpg&w=&h=&outtype=webp

     

     

    அம்மன் கோவில் மணி அடிக்கத் தொடங்கீட்டுது. பின்னேரப் பூசை இப்ப. விதவிதமா சீலை உடுத்திக்கொண்டு பெண்கள் போவினம். எனக்கும் கோவிலுக்குப் போக ஆசைதான். ஆனால் உந்த விடுப்புக் கேட்கிற ஆட்களுக்குப் பதில் சொல்ல எரிசல் தான் வரும். ஏதோ உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்தமாதிரி கூடிக் கூடிக் குசுகுசுப்பினம்.  மூன்று பிள்ளைகளுடன் நான் அம்மா வீட்டுக்கு வந்து பதினொரு மாதங்களாகின்றன.

    நான்கு அண்ணன்களுடனும் ஒரு அக்காவுடனும் பிறந்த எனக்கு மட்டும் வாழ்வு ஏன் இப்பிடியானது. எல்லோருமே வெளிநாட்டில் இருக்க என் அவசர புக்தியால் வாழ்வு இப்பிடியாகிவிட்டதே. என்ன செய்வது? என் தலையில் இப்படி எழுதியிருக்கு என என்னை நானே தேற்றிக்கொண்டாலும் எதிர்காலம் கேள்விக்குறியோடு பூதமாய் என்னை பயமுறுத்தியபடி இருக்க வேறு வழிகள் எதுவும் தோன்றாமல் அந்த அந்திப் பொழுதின் அழகை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.

    முன்பொரு காலத்தில் இந்த இயற்கையை எப்படியெல்லாம் இரசித்திருப்பேன். மறையும் கதிரவனின் அழகை இதேபோன்றோரு மண்  கும்பியின் மேலிருந்து நானும் ரவியும் இரசித்திருக்கிறோம். அதன் பின்னரும் வானில் பறக்கும் வவ்வால்களை எண்ணியபடி, நட்சத்திரக் குவியல்களை இரசித்தபடி ...........ஒரு ஆண்டு எத்தனை மகிழ்வாய்க் கழிந்தது. காதலிக்கும்போது எமக்கு ஏற்றாற்போல் இருக்கும் ஆண்கள் திருமணத்தின் பின்னர் ஏன் முற்றிலுமாய் மாறிப்போகிறார்கள்?

    என் கண்களின் வசீகரிப்பில் என்னிடம் வீழந்ததாகச் சொல்லிய ரவி அங்கை ஏன் பார்க்கிறாய்? அவனை ஏன் பார்க்கிறாய்? வாசல்ல ஏன் போய் நிக்கிறாய்? அவனோடை ஏன் பல்லைக் காட்டிக் கதைக்கிறாய் என்று............. அப்பப்பா நினைக்கவே அருவருக்கும்படி என்னைக் கேள்விகளால் துளைத்ததை இப்ப நினைத்தாலும் கோபம் தான் எனக்கு வருது. ரவியின் அக்கா கூட ‘’மதுமிதாவை ஏன் சந்தேகப்படுறாய். உந்தக் குணத்தை மாத்திக்கொள்’’ என்று எத்தனையோ தடவை சொல்லியும் அவர் திருந்திறமாதிரித் தெரியேல்லை. தனியாகக் கடைகளுக்குப் போகக் கூட அனுமதி இல்லை. எப்போதும் அவர் சொல்வதைக் கேட்டு, என்ன சொல்வாரோ என்று பயந்து பயந்து, அவர் விரும்பிறமாதிரி உடை உடுத்தி.......அவர் விரும்பிறதை மட்டும் செய்து ஒரு பவுடர் போட்டாலும் ஆரைப் பார்க்கப் பவுடர் போட்டுக்கொண்டு வெளிக்கிடுறாய் என்று.........ஒரு ஆடையைக் கூட ஆசைப்பட்டுக் கட்ட முடியாமல்......போதும்போதும் என்னுமளவு எல்லாக் கொடுமையும் அனுபவித்தாச்சு.

    அதுக்குப் பிறகுதான் இனியும் அவரை சகிச்சுக்கொண்டு சேர்ந்து இருக்கிறது முடியாது என்று தனிய வந்து விவாகரத்துக்குப் போட்டது. சின்னனில இருந்தே உனக்குப் பிடிவாதம் அதிகம். கொஞ்சம் அனுசரிச்சுப் போனால் என்ன என்னும் அம்மாவுக்குப் பதில் சொல்ல எனக்கு முடியேல்லைத்தான். “’எங்களைக் கேட்காமல் உன்ர எண்ணத்துக்கு புருசனை விட்டிட்டு வந்திட்டாய். மூண்டு பிள்ளையளை வச்சுக்கொண்டு என்ன செய்யப்போறாய்” என்று இரு அண்ணன்களும் கேட்டாச்சு. எனக்கு முதல் பிறந்த அண்ணாதான் என்னோடை ஒட்டு. மாதாமாதம் ஒரு ஐம்பதாயிரம் அண்ணிக்குத் தெரியாமல் அனுப்பிக்கொண்டிருக்கிறார். 

    அந்த பெண் வக்கீல் கூட”உமக்கு மூன்று பிள்ளைகளையும் வைத்திருக்க முடியுமா என்று கேட்டதுக்கு “என்னால் பிள்ளைகளைத் தனிய வளர்க்க முடியும்” என்று வீம்பாகக் கூறினாலும் அது எத்தனை பெரிய துன்பம் என்று எனக்கு போகப்போகத்தான் விளங்கத் தொடங்கிச்சிது. அதுக்காக திரும்ப ரவியோடை போய் சேர்ந்து வாழவே முடியாது. இன்னும் ஒரு வருடம் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கத்தான் வேணும் விவாகரத்துக் கிடைப்பதற்கு. அதுவரை அண்ணன் இருக்கிறார்தானே என்னைப் பார்த்துக்கொள்ள. நானே என்னைத் தேற்றிக்கொள்கிறேன்.

    பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள். அம்மா வெங்காயத்தை உரிச்சு வையுங்கோ என்று சொல்லிவிட்டு நான் கூடையை எடுத்துக்கொண்டு பிரான்சில் இருக்கும் அக்கா எனக்கு அனுப்பிய இரண்டரை இலட்சத்தில் வாங்கிய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சந்தைக்குக் கிளம்புகிறேன். போகும்போது தெரிஞ்ச சிலர் தலையாட்ட சிலர் பார்க்காதவாறு செல்வது மனதுக்குள் கோபத்தை வரவளைத்தாலும் அதை அடக்கியபடி நான் கடந்து செல்கிறேன்.

    பக்கத்தில் சில சிறிய கடைகள் இருக்குத்தான். அம்மா கூட “உதில பக்கத்தில வாங்கிறதுக்கு எதுக்கு இப்ப அங்கை போறாய்” என்று என்னை வீட்டில் நிறுத்தி வைக்கப் பார்த்தாலும் நான் கேட்பதில்லை. பல நேரங்களில் பெண்களுக்குப் பெண்களேதான் எதிரிகள். நான் எதுக்கு மற்றவைக்குப் பயந்து வீட்டிலையே கிடக்கவேணும். எந்தக் காலத்தில இருக்கிறா அம்மா என எனக்குள் எண்ணிக் கொள்வேனே தவிர அவவுக்குப் பதில் எதுவும் கூறுவதில்லை. சரியான அமசடக்கி என்று அம்மா முணுமுனுப்பதும் கேட்பதுதான். ஆனாலும் அதற்கும் பதில் சொல்லாது சிரித்துவிட்டு என் அலுவலில் கண்ணாய் இருப்பதை வழமையாக்கிக் கொண்டேன்.

    அன்று கொஞ்சம் பிந்திவிட்டது. சில மரக்கறிகள் முடிந்துபோய் இருக்கும். ஆனாலும் சிலது மலிவாயும் கிடைக்கும். நான் வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாய் முறித்துப் பார்த்துத் தட்டில் போட்டுவிட்டு நிமிர்ந்தால் என்னருகில் ஒருவர் என்னையே பார்த்துக்கொண்டு நிற்க எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை என்று புரிந்துகொண்டு “நான் தயாளன். சிதம்பரியின் மகன். கனடாவில இருக்கிறன்” என்று தானாகவே அறிமுகம் செய்கிறார். எனக்கோ பார்த்த முகமாய்ததான் இருந்தாலும் நினைவு வரவில்லை. அதை அவரிடமே சொல்கிறேன்.

    “நீங்கள் முந்தியும் எங்களைக் கணக்கில எடுக்கிறேல்லை. அப்ப எப்படித் தெரியும்” என்கிறார். “இதென்ன தேவையற்ற குற்றச்சாட்டு” என்றபடி வெண்டைக்காய்க்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவருடன் கூடவே  நடக்கிறேன். “நீங்கள் பள்ளிக்கூடம் போகேக்குள்ள நான் எத்தினை நாள் உங்களுக்குப் பின்னால திரிஞ்சனான்” என்று ஒருவித மனத்தாக்கலுடன் சொல்ல எனக்கு நினைவு வருகிறது. யாரை மறந்தாலும் எமக்குப் பின்னால் திரிஞ்சவர்களை மறக்காதுதானே.

    லேடீஸ் கொலிச்சில் படித்த எனக்கு அப்போதெல்லாம் எம்மூரவர்கள் பெரிதாய்க் கண்ணுக்குத் தெரிவதில்லை.

    நீங்கள் எங்க படிச்சனீங்கள்?

    அவர் சொன்ன பள்ளிக்கூடம் எம்மூரில் தான் இருந்தது. அதனால் நான் அவரை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லைத்தானே என மனம் சமாதானம் சொல்ல “கனடாவில் இருந்து எப்ப வந்தீர்கள்? எத்தனை குழந்தைகள்” என்று கதையைத் திசை திருப்புகிறேன்.

     

    விரைவில் வரும் 

     

     

    • Like 10
  15. On 5/6/2023 at 21:56, Kandiah57 said:

    இதுவரை எழுதியது வெறும் இரண்டு மாதம்  நடந்தவை மட்டுமே   இன்னும் நான்கு மாதம் நடந்தவை எழுத இருக்கிறது.....அதனை புத்தகமாக எழுதி விற்பனை செய்தால்  ...இப்போதைய பணம் பிரச்சனை தீரும்.    என்ற யோசணையிருப்தால்.  யாழில் எழுத கொஞ்ச காலமெடுக்கும........

    குறிப்பு  ...யாவும் கற்பனை 🤣

    உண்மையில் எழுத எத்தனையோ இருக்கு. பார்ப்போம்

    • Like 1
  16. On 31/5/2023 at 16:58, ஏராளன் said:

    அக்காவை ஆரும் வெருட்டிப் போட்டினமோ?!

    ஆரவன் என்னை வெருட்டியதாகச் சொன்னது ??😃

    On 31/5/2023 at 18:12, Nathamuni said:

    அக்கா பயப்பிடுற ஆளில்லை.

    பஞ்சியாப் போனா!!

    அதேதான்

    On 5/6/2023 at 08:59, suvy said:

    சங்கதிகளையும் காணேல்ல சமையலையும் காணேல்ல என்ன நடந்திருக்கும்.......!

    RiAnsh pool date episode reaction : Welcome to my funny world | Ishq Mein  Marjawan 2

    எல்லாத்திலையும் ஒரு சலிப்பு வந்திட்டுது. 

    On 5/6/2023 at 21:06, சுவைப்பிரியன் said:

    அவவே முழுக நேரம் இல்லாமல் இருக்குறா.🙂

    கிழமையில இரண்டு தடவை கட்டாயம் முழுகுவமல்லோ 😃

    On 6/6/2023 at 00:43, பெருமாள் said:

    அப்படியா ? கூட வேலை செய்தவர்களின் உறவுகளின்  செத்த வீட்டுக்கு போய்வரவே நேரமில்லை இதுக்குள் .......................................................

    உங்களுக்குத் தெரியுது

    On 6/6/2023 at 01:00, Kandiah57 said:

    வாழ்த்துக்கள்...தமிழ் மக்களின் எண்ணிக்கை ஒன்றால்.   கூடுகிறது    😄🙏

    ஒண்டுதான் எண்டு நீங்களே எப்பிடி முடிவெடுப்பியள் 😀

    16 hours ago, ஈழப்பிரியன் said:

    இந்தப் பணம் வேலை செய்பவர்களுக்கு பகிரப்படுவதில்லை.

    அப்பிடியா ? எனக்குத் தெரியவில்லை

  17. On 25/5/2023 at 21:19, நிலாமதி said:

    இலங்கையில் ஆறுமாதங்கள் ......எழுதி முடித்து விடீர்களா ?   களைத்து விடடீர்களோ ? இன்னும் இருப்பின் தொடர்ந்து எழுதவும்.
     

    இன்னும் நிறைய இருக்கு அக்கா ஆனால் களைத்துவிட்டது எழுதி.

    On 25/5/2023 at 22:49, குமாரசாமி said:

    கடல் வற்றியதாக எங்கேயாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? :smiling_face:

    கடல் வற்றாதுதான். ஆனால் நாங்கள் நதி. ஆதலால் வற்றும்.😂

    13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

    எங்க மிச்ச சொச்சம்🤔🤔

    இதுக்கு மிஞ்சி எழுதி ஆர்வம் இல்லை.

    • Like 1
  18. 16 hours ago, Thumpalayan said:

    அவனே தான். யாழில முகத்தைக் காட்டி பல வரியமக்கா. 

    நான்தான் மறந்திட்டன் 😄

    16 hours ago, Thumpalayan said:

    நான் நினச்சன் கொன்ராக் எண்டா இரவு பகலா வேலை நடக்கும் எண்டு. ஊருக்க ரண்டு மூண்டு வீடு கொன்ராக்கில சிங்கள ஆக்களிட்ட குடுத்து கட்டுப்பட்டது. அவங்கள் வந்து ஒரு வீட்ட வாடைக்கு எடுத்து கட கட எண்டு கட்டி முடிச்சிட்டாங்கள்.

     

    வாகனத்த யோசிச்சு எடுங்கோ. காசு திரும்ப வராது எண்டு நினைச்சுப் போடுங்கோ. மற்றது மோட்டச்சைக்கிள் வாகனம் ஓடுறது வலு கவனம். றோட் றூல்ஸ் ஒருத்தருக்கும் வடிவா தெரியாது, தெரிஞ்சாலும் கடைப்பிடிக்கிறேல்ல. வாகனத்தால அடிச்சு ஆரும் செத்தால் கேம் ஓவர் றிமாண்டுக்க தூக்கிப் போட்டிடுவாங்கள். மற்றது பொலிஸ் மறிக்கேக்க என்ன தான் பிழை விடாட்டிக்கும் கொஞ்சம் இறங்கி வந்து கதைச்சா அலுப்படிக்காம விடுவாங்கள். அவங்கள் அலுப்பு குடுக்க வெளிக்கிடாங்களோ நோண்டிக்கொண்டு நிப்பாங்கள். 

    நான் இலங்கை IC இலங்கை லைசன்ஸ், அதுவும் இருவது வரியப் பழய சாமான், சோ படு லோக்கல், மற்றது சிங்களம் ஓரளவு தெரியும்.

    எனது பெறாமகன் கூட சித்தி பொலிஸ் மறிச்சால் வாய் காட்டிப்போடாதேங்கோ என்று. இரு தடவை மறித்துவிட்டு உடனே விட்டுவிட்டார்கள். இனி சிங்களம் படிக்கிற மூட்டும் இல்லை. என்ன விதிக்கப்பட்டிருக்கோ பார்ப்போம். 

    16 hours ago, நிலாமதி said:

    தோம்பு என்பது இலங்கையைப் போத்துக்கீசர் ஆண்டபோதும் பின்னர் ஒல்லாந்தர் ஆண்ட காலத்திலும், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நில உடைமைப் பட்டியலைக் குறிக்கும்.

    இத்தனை காலத்தில் இம்முறைதான் தோம்பு என்பதையே நான் கேள்விப்பட்டது.

  19. 1 hour ago, Thumpalayan said:

    ஒரு காலத்தில் குறிப்பாக 2018-19 காலப்பகுதியில் நான் கொழும்பில்/ஊரில் போய் இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் (எனது துறை அல்ல) வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து WSO2, Virtusa போன்ற பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் சந்தித்திருந்தேன். ஆனால் கொரோனோ வந்த பின்னர் எல்லாம் கிடப்பில் போட்டாச்சு. 

    ஊரிலே காணி வாங்கியதுக்கு வாழ்த்துகள். செலவோட செலவா மதிலக் கட்டி விடுங்கோ, இல்லாட்டிக்கு பிற்காலத்தில கன தலையிடி வரும். 

    காணி வேலைளுக்கு கொன்ராக் மாதிரி குடுத்து செய்விக்கேலாதோ? 

    ஸ்கூட்டி ஓடுறது கவனம். சின்னக் கார் நல்லது ஆனால் ஆரையும் நம்பி குடுத்தியளோ, அவளவுதான். 

    ஊரில் அப்பா அம்மா இருப்பதால் 2009 23 லச்சத்துக்கு இதை எடுத்து விட்டன். டீசல் வாகனம், றைவர் தவிர ஏழு பேர் சாமான்களோட வசதியா போகலாம். நான் போய் நிக்கும் ஒரு மாசத்துக்கு திறப்பு என்ட கையில என்டது வாங்கேக்க போட்ட கொன்டிசன். 

     

     

     

    கொன்றாக் குடுத்தால் இழுத்தடித்துத்தான் வேலை நடக்கும். தினக்கூலி அன்றே குடுப்பதானால் ஓரளவு வேலை நடக்கும். இந்த செப்டெம்பர் போய் ஸ்கூட்டியில தான் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி எல்லாம் போய் வரவேண்டும் என்று மனிசன் சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு அதை நினைக்கவே நெஞ்சு திக் திக் எண்ணுது இப்பவே. நாம் இருவரும் போய் இருக்கும்போது கட்டாயம் சிறிய கார் ஒன்று எடுப்போம்.

    1 hour ago, suvy said:

    "தோம்பு" இரண்டு மூன்று தலைமுறைக்கு முற்பட்ட காணி உறுதிகள்......உதாரணமாய் ஒரு கொள்ளுத்தாத்தா அவருக்கு 8/10 பிள்ளைகள் இருந்திருக்கும். அவர் தனது காணியை எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்து எழுதி வைத்திருப்பார். காலப்போக்கில் எல்லோரும் பிரிந்து எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்ப அந்தக் காணிக்குள் இருப்பவர் தனது பிள்ளைகளுக்கு குடுப்பதற்காக அந்தத் தோம்பை (பழைய உறுதி) தேடி எடுத்து மற்றவர்களிடம் கையொப்பம் பெறுவதற்கு அலைந்து திரிவார். அவர்களில் சிலர் கையொப்பம் இடுவார்கள் சிலர் இறந்திருப்பார்கள். சிலர் ஒப்பம் இட மறுப்பார்கள். இவர் அவர்களுக்கு பணம் குடுத்து ஒப்பம் வாங்குவார்.அதுவும் சரிவரவில்லையென்று கோட்டுக்கு (நீதிமன்றம்)போனால் இவற்ர கதை காலி, ஏனெனில் இவரது கொள்ளுப்பேரன் காலத்திலும் அந்த வழக்கு முடியாது. ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதியும் போய் சேர்ந்திருப்பார். இவரும் போய் சேர்ந்திருப்பர். அதன் பின் இவற்ர மகன் தொடர்ந்து வழக்காட விரும்பினால் முதலில் தான்தான் இவற்ர மகன் என்று "சத்தியகடதாசி" முடித்து (பிறகு சத்தியக்கடதாசி என்றால் என்ன என்று கேட்கப்படாது) நிரூபித்து இப்படியே ......இப்ப எனக்கே ஒன்றும் புரியவில்லை, உங்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது புரியுதா சாமானியன்.......!  😁

    எமக்குத் தந்த தோம்பில் யாரும் கையொப்பம் இட்டதுபோல் தெரியவில்லை அண்ணா.

    1 hour ago, உடையார் said:

    இந்த பாட்டை "மக்களெல்லாம் மக்களெல்லாம் - செல்லப்பா" 1988/4989 இந்திர விழாவில் பாடினார்கள். இன்று மனதில் ஓடும் பாடல் இதுதான், அதுதான் கடைசியாக பார்த்த இந்திர விழா

     

     

    என்ன சொன்னாலும் நாம் பிறந்த மண்ணில் எங்கள் ஆசைக்கு காணிகளை வாங்கும் உரிமை  வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு  உண்டு.👍

    உண்மையை உரத்துச் சொல்வோம் 😃

  20. 12 hours ago, சாமானியன் said:

    காணிப்பிரச்சினை பற்றி கதை வருவதால் தோன்றிற்று ..

    " தோம்பு " என்றால் என்ன ...

    தோம்பு என்பது கடந்த காலங்களில் யார் யார் காணியை வைத்திருந்தனர். யாரிடமிருந்து எப்ப வாங்கினர் திகதி உறுதி இலக்கம் உட்பட எல்லாம் இருக்கும். A3 அளவில் மடித்துத் தருவார்கள். கச்சேரியில் தான் இருக்கும். நாமே சென்று பணம் கட்டிப் பெற 160 ரூபாய்கள். அடுத்தநாள் எடுத்துத் தருவதற்கு லோயர் அறவிடும் பணம் பிரதி ஒன்றுக்கு 1500 ரூபாய்கள். நாம் புதிதாக சோலை வரியோ அல்லது காணி வாங்கும்போதோ அல்லது மின்சாரம் பெறவோ அது கட்டடாயம் தேவை. எனக்கு இவ்வளவுதான் தெரியும். வேறு யாருக்கும் இதுபற்றித் தெரிந்தால் குறிப்பிடுக.

     

    7 hours ago, Thumpalayan said:

    யாழ் வந்து கனகாலம். இடைக்கிடை வாசிப்பதோடு சரி. சுமே அக்காவின் தொடரை விடாமல் வாசிச்சு முடிச்சாச்சு. சுவாரசியம் குறையாமல் நேரம் மினக்கெட்டு எழுதுவது இலக்கு இல்லை

    பச்சை குத்தெலம கிடக்கு. நிர்வாகம் கொஞ்சம் உதவி செய்யுங்கப்பா.

     கன காலம்  வராவிட்டால் எல்லாருக்கும் உந்தக்கதிதான்.

    2 hours ago, Thumpalayan said:

    சகரா அக்கா செய்தது பாராட்ட வேண்டிய விசயம். செவிடைப் பொத்தி போட்டிருந்தால் இன்னும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும். கண்ட கண்ட காவாலியளிண்ட சேட்டை ஊரில கூடீட்டு. 

     

    A480-A96-C-13-F1-4-E32-ACE1-A6-C3-C5-AA5

    2018 அதை இந்திர விழா போன போது

     

    இதிலை நீக்கள் எது என்று சொல்லவே இல்லையே. அனேகமா அந்த நடுவில நிற்கும் கண்ணாடிதானே நீக்கள் ????😄

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.