Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8475
  • Joined

  • Days Won

    41

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. 21 hours ago, suvy said:

    நன்றாகப் போகிறது கதை, தொடருங்கள்........!  👍

    நன்றி அண்ணா

    20 hours ago, ஏராளன் said:

    முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ.

     வாகனச் சாரதிகளுக்குத் தெரியும் நல்ல உணவகங்களில் ஓரளவு சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கும், அங்கே நிறுத்தினால் இரண்டு நன்மைகள். ஒன்று தரமான உணவு மற்றது கழிப்பறை வசதி.

    யாரும் அதுபற்றி ஒருவரிடமும் முறைப்பாடு செய்வதில்லை.

    14 hours ago, Sabesh said:

    உண்மை தான் கட்டணம் அறவிடுகிறார்கள் ஆனால் துளியும் துப்பரவு இல்லை

    முன்பு சென்றபோது இடையில் கிளிநொச்சியில்  ஒரு இடம். இருவர் வெளியே இருக்கின்றனர். 100 ரூபாய் தரும்படி கேட்க எதுவும் கதைக்காமல் காசைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் வயிற்றைக் குமட்டிக்கொண்டுவர வெளியே வந்ததும் இவ்வளவு காசை வாங்கிக்கொண்டு இதில சும்மா இருக்கிறியள். தண்ணி அடித்துக் கழுவினால் என்ன என்று திட்டிவிட்டுத்தான் வந்தது.

    7 hours ago, குமாரசாமி said:

    யூகே எண்டவுடனை பொலிஸ்காரன் பயந்து போனான்? :beaming_face_with_smiling_eyes:

    வெளிநாட்டுக் காரருடன் பெரிதாகப் பிரச்சனைப் படுவதில்லை.

  2. ஐந்து

     

     

    கணவர் சொல்லிவைத்த வான் வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருக்க நானும் மகளும் இரு வண்டில்களில் பொதிகளை வைத்தபடி இருக்கிறோம். செப்டெம்பர் மாதமாகையால் பெரிதாக வெய்யிலின் உக்கிரம் இருக்கவில்லை. ஆனாலும் ஒருவித புழுக்கம் வந்து அப்பிக்கொள்கிறது. பலரும் வந்து எங்கே மடம் போகணும். எங்கள் வண்டியில் வாருங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்க இவ்வளவு தூரம் வருகிறோம். வாகனம் ஒழுங்கு செய்யாமலா வருவோம் என்னும் எரிச்சல் எழுகிறது. சிறிது நேரத்தில் எமக்குரிய வான் வர ஏறி அமர்ந்தபின் தான் அப்பாடா என்று இருக்கிறது. 

     

    கணவர் முன்னால் இருந்து சாரதியுடன் கதைத்தபடி வருகிறார். நானும் மகளும் இரு மருங்கும் புதினம் பார்த்தபடி வருகிறோம். அப்படியே தூங்கியும் விட்டோம். நிவேதா நிவேதா என்று அன்பொழுக கணவரின் அழைப்பு மெதுவாகக் கேட்க கண்விழித்தால் வாகனம் ஒரு உணவகத்துக்கு முன்னால் நிற்கிறது. இது நல்ல உணவகமாம். உனக்குத்தான் அடிக்கடி பசிக்குமே. இங்கேயே சாப்பிட்டிட்டுப் போவம் என்கிறார். அவர் சொன்னவுடன் எனக்கும் பசிப்பது போல இருக்க சரி சாப்பிடுவம் என்றுவிட்டுக் கீழே இறங்குகிறேன்.  இது எந்த இடமென்று சாரதியிடம் கேட்க மாதம்பை முருகன் கோவில் இது என்கிறார். கோயிலின் கோபுரத்தின் முன் பெரிய பெரிய தலைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. 

     

    ஓரளவு பெரிய உணவகம் தான். இருந்தாலும் உணவு எப்படி இருக்குமோ என்னும் யோசனையும் எழுகிறது. சாரதியும் கணவரும் இடியப்பம்  சொல்ல நானும் மகளும் தோசையும் உழுந்து வடையும் ஓடர் செய்ய எல்லாருக்கும் உழுந்துவடை கொண்டுவாங்கோ என்கிறார் மனிசன். சாப்பிட முதல் டீ குடிப்பம் என்று அதற்கும் சொல்கிறார். ஒரு ஐந்து நிமிடங்களில் மசாலா போட்ட தேநீர் வர, இத்தனை விரைவாக வந்துவிட்டதே சூடாய் இருக்கோ என நான் வாயில் வைத்துப் பார்க்க கடும் சூடு. வாயில் தேனீர் சுட்டுவிட, என்ன அவதி கொஞ்சம் ஆறட்டுமன் என்றுவிட்டு, தான் எடுத்துக் குடிக்கிறார். சிறிது நேரத்தில் வடைகள் வருகின்றன. நல்ல பெரிதாக பார்ப்பதற்கு நன்றாக இருக்க எடுத்து உண்கிறேன். அந்த நேரப் பசிக்கோ  என்னவோ மிகவும் சுவையாக இருக்கிறது. தோசையும் யாழ்ப்பாணச் சம்பலும் வரும் என்று பார்க்க சட்னியும் சாம்பாரும் வருகிறது. இடியப்பத்துக்கு அந்தச் சம்பல் வர எனக்கும் கேட்போமா என ஒரு செக்கன் எண்ணிவிட்டு இதுவும் சுவையாக இருக்குத் தானே என்று எண்ணியபடி உண்கிறேன். 

     

    அப்போதுதான் பார்க்கிறேன். சில்வர் தட்டின் மேல் ஒரு மெல்லிய பொலிதீன் போடப்பட்டு அதில் உணவு வைக்கப்பட்டிருக்கு. என்ன இவங்கள் ஏன் பொலிதீன் போட்டிருக்கிறார்கள். பார்க்க அரியண்டமாக இருக்கு என்று கூற, இங்கு எல்லாக் கடையிலும்  இப்ப இதுதான் என்கிறார் சாரதி. வாழையிலைக்குத் தட்டுபாடோ என்கிறார் மனிசன். கழுவிற பஞ்சிக்காண்டி இதுதான். ஆனால் வேளைக்கு உக்கிப்போயிடுமாம் என்கிறார். உண்டு முடிய கணவர் எனக்கு இன்னொரு தேநீர் குடிக்கவேணும். வேற யாருக்கும் வேணுமோ என்று கேட்க நான் எனக்கும் என்கிறேன். சாரதியும் மகளும் தமக்கு வேண்டாம் என்கின்றனர். நான் வானுக்குள் இருக்கிறேன். வாங்கோ என்றுவிட்டு சாரதி செல்ல எம் தேநீர் வருகிறது. நல்ல சாயமும் சீனியும் போட்டு நல்ல சுவையாக இருக்கு. வடை ஏதும் கட்டிக்கொண்டு போவமோ என்கிறேன் நான். இவ்வளவு சாப்பிட்டது பத்தாதே. இன்னும் நாலு மணித்தியாலத்தில வீட்டை போயிடலாம். தங்கச்சி சமைச்சு வச்சிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பாள். அதுக்கிடையில எங்காவது கடைகள் வரும்தானே என்கிறார். 

     

    நாங்கள் சென்று அமர்ந்ததும் பிரயாணம் தொடங்குகிறது. பார்க்கும் இடம் எங்கும் சிற்றோடைகள், ஆறுகள். சிங்களப் பகுதி நல்ல செழிப்பானதுதான் என நான் எண்ணிக் கொள்கிறேன். ஒரு ஒருமணிநேரம் ஓடியதும் வீதியில் இளநீர் வித்துக்கொண்டிருப்பது தெரிய இளநீர் குடிப்பம் என்றவுடன் கணவர் சாரதியை நிறுத்தச் சொல்கிறார். சாரதி வேண்டாம் என்று மறுக்க குடியுங்கோ என்று அவரிடம் நீட்டுகிறார். கன காலத்தின் பின் இளநீர் சுவையாக இருக்கிறது. இங்க 50 ரூபா. யாழ்ப்பாணத்தில 100 ரூபா என்கிறார் சாரதி. வானுக்குள்ள இடம் இருக்குத் தானே. ஒரு குலையை இங்கேயே வாங்கிக் கொண்டு போவம் என்கிறேன். சரி என்று கணவர் கூற குலை வானுக்குள் ஏறுகிறது. 

     

    சாரதி மிக நிதானமாக வாகனத்தை ஓட்டுகிறார். அப்பப்ப அங்கே நிக்கிறாங்கள். இங்கே நிக்கிறாங்கள் என்று போனில் கதைத்தபடி வர, யார் நிக்கிறாங்கள் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன். உவங்கள்தான் என்று அவர் கூற, போலீஸ் காரர் ஒருவர் கைகாட்டி எமது வானை நிறுத்துகிறார். சாரதி போலீசைக் கடந்து வந்து வானை நிப்பாட்டிவிட்டு நிற்கிறார். லைசென்சைப் பார்ப்பான்களோ என்று கணவர் கேட்க இன்சூரன்ஸ் இருக்கோ என்றும் பார்ப்பினம் என்றுவிட்டு தொடர்ந்து இறங்காமல் இருக்க, எல்லாம் இருக்குத்தானே? கெதியா இறங்கிப்போய் காட்டிப்போட்டு வாங்ககோவன் என்கிறார் மனிசன். அவர் தானே மறிச்சவர். அவரே வரட்டும் . நான் என்ன களவே எடுத்தனான் உவைக்குப் பயப்பட என்று சாரதி கூற எனக்கு சிறிது பயமாக இருக்க நான் கண்ணாடியில் பார்க்கிறேன் அந்தப் போலீஸ் எம்மை நோக்கி நடந்து வருவது தெரிகிறது. வரும்போதே யன்னலால் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ கேட்க சாரதியும் தன் ஆவணங்களை எடுத்துக் காட்டிவிட்டு உள்ளே வைக்க நானும் எமது கடவுச் சீட்டுகளை வெளியே எடுக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கணவரைப் பார்த்துக் கேட்க யூக்கே என்றுவிட்டு உடனேயே லண்டன் என்கிறார். அவன் பாஸ்போட்டைக் கேட்காமல் அப்பால் நகர நான் அவற்றை மீண்டும் கைப்பையுள் வைக்கிறேன். 

     

    இன்னும் கொஞ்ச நேரத்தில் புத்தளம் வந்துவிடும் என்கிறார் சாரதி. அதற்குள் என்மகள் அதன்பின் அனுராடபுரவோ என்று கேட்க, என்னடா எனக்கே தெரியாது இவள் எப்படிச் சொல்கிறாள் என எண்ணியபடி அனுராதபுரமோ என்று அவளைத் திருப்பிக் கேட்க தன் போனைத் தூக்கிக் காட்ட அதில் இலங்கை மப் தெரிகிறது. நான் மீண்டும் கண்ணசந்துவிட்டேன். நல்ல தூக்கம். இம்முறை மகள் என்னை எழுப்புகிறாள்.  இது எந்த இடம் என்று கேட்க முறிகண்டி வந்திட்டுது, கும்பிட்டிடிட்டுப் போவம் என்று கணவர் கூற நான் இறங்குகிறேன்.  

     

    கால்களையும் முகத்தையும்  கழுவிவிட்டு செருப்புகளைக் கழற்றி வைத்து விட்டு வெறும் காலில் நடக்க நிலம் பயங்கரச் சூடு. குறுணிக் கற்களும் குத்துகின்றன. ஏதோ சுற்றிக் கும்பிட்டுவிட்டு வந்தால் ஏதும் சாப்பிடுவோமா என்கிறார் கணவர். ஒரு கடைக்குள் சென்றால் இரண்டு மேசையும் வாங்குகளும்  போடப்பட்டிருக்கு. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் தேநீருக்காக இருக்கிறேன்.  கணவர் ரோள்சும் வடையும் சொல்ல ஒரு தட்டில் உழுந்துவடை, கடலைவடை, சமோசா, றோள்ஸ் எல்லாம் கொண்டுவந்து வைக்க நாம் இவ்வளவும் கேட்கவில்லையே என்கிறேன். நீங்கள் சாப்பிடுவதற்கு மட்டும்தான் காசு எடுப்ம் என்றபடி வேலையாள் நகர்கிறார். 

     

    நான் ஒரு றோள்ஸ் எடுத்து உண்கிறேன். சரியான எண்ணையாக இருக்கிறது. அரைவாசி கடித்தபடி கணவரிடம் கொடுக்கிறேன். மேற்கொண்டு எதுவும் உண்ணப் பிடிக்கவில்லை. தேநீரை மட்டும் அருந்திவிட்டு வெளியே வந்து மற்றக்  கடைகளை வேடிக்கை பார்க்கிறேன்.  எதற்கும் டாய்லெட் போவோம் என எண்ணியபடி பையை மகளிடம் கொடுத்துவிட்டுப் போய்  நின்றால் கட்டணம் 5 ரூபாய்கள் என்று கூறுகிறார் வாசலில் நிர்ப்பவர். மீண்டும் வந்து கணவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் மணம் தாங்க முடியவில்லை. யாழ்ப்பாணம் போகுமட்டும் அடக்கேலாது என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்து வந்தாயிற்று. நானும் போட்டு வரட்டோ என்கிறாள் மகள். நீர் சமாளிப்பீரோ தெரியேல்லை. போய்ப் பாரும் என்கிறேன்.   

     

    • Like 8
  3. 11 hours ago, குமாரசாமி said:

    இங்கிலிசு ரி ராஜேந்தர் ஸ்ரைல்ல சும்மா தணல் பறந்திருக்கும் எண்டுறியள்?? :rolling_on_the_floor_laughing:

    சீச்சீ நான் அவனைத் திட்டவில்லையே. கதைச்சனான்  🤣

    8 hours ago, பெருமாள் said:

    எனக்கு அந்த மோட்டர் சைக்கிள் கதை மட்டும் சஸ்பென்ஸ் தாங்காது இருக்கிறன்சாமியார் கொஞ்சம் சொல்லிவிடுங்க அத்தரிடம் அவர் ரகசிமாய் படத்தை போடட்டும் .

    வேற வழியில்லை. நான் படம் போடுமட்டும் தலை வெடிக்காமல் பார்த்து கொள்ளுங்கோ 😂

  4. வாழ்த்துகள் இணையவன். என்னைக் கேட்டால் சரியானதொரு முடிவையே எடுத்துள்ளீர்கள். எமது நாடுபோல் எதுவும் எமக்கு மகிழ்வைத் தராது. நானும் கணவரும் எப்பவோ உந்த முடிவை எடுத்துவிட்டோம். மற்றவர்க்காக எமது வாழ்வை வாழவே கூடாது.

  5. 4 hours ago, Sabesh said:

    கையில் கொண்டு செல்ல நாங்கள் நினைத்திருக்கும் சிறிய luggage ஐ நான் கொடுப்பதில்லை காரணம் அதில் தான் முக்கியமான பொருட்களை வைத்திருபப்து.  சும்மா கைய விசுக்கி கொண்டு சிறிய பாக் பேக் உடன் போக விருப்பமென்றாலும், எது எங்கே வைத்திருக்கிறோம் என்றே தெரியாது என்பதால் கொடுக்க விரும்புவதில்லை.
    உங்களின் பதிவின் பின்னர், அதையும் செக்கின் பண்ண தயாராக செல்ல வேண்டும்

    அதையும் கொடுத்துவிட்டால் நின்மதியாய் செல்லலாம்

    4 hours ago, Sabesh said:

    பம்பாய் கொழும்பு  இல்  உங்கள் போன் ஐபாட் தப்பி வந்தது பெரிய விடையம் தான்

    அன்று காலை நான்கு மணி மட்டில் தான் விமானம் தரையிறங்கியது. மழை வேறு தூறிக்கொண்டு இருந்தது. அதனால்த்தான் தப்பியிருக்கும் என நினைக்கிறேன். இரண்டு மணிநேரம் என்பதானாலும் இருக்கலாம்.

    3 hours ago, Kandiah57 said:

    மொத்தமாக எத்தனை......🤣 கடுப்பாகமால். பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்......சும்மா ஒரு பொது அறிவுக்கு  தான் 🤣

    மொத்தம் மூன்று 😀

    2 hours ago, nunavilan said:

    யாருட்டை விடுகிறீர்கள் உங்கள் விளையாட்டை. சுமேவா கொக்காவா!!!

    😂🤣

  6.  

    On 11/4/2023 at 12:07, suvy said:

    சுமேயின் மைண்ட் வொய்ஸ்:

    Vadivelu Tamil GIFs | Tenor

    இது உங்கள் மைண்ட் வொய்ஸ் போலயல்லோ இருக்கு

    On 11/4/2023 at 17:05, சுவைப்பிரியன் said:

    ச்சா சப்பென்டு போட்டுது.😃

    நான்என்ன கதையா எழுதிறன். 😂

    On 11/4/2023 at 17:44, ஈழப்பிரியன் said:

    அத்தாரிடம் ஆட்டையை போட்டது எவ்வளவுங்கோ?

    உது எல்லாம் கேட்கப்படாது.

    21 hours ago, யாயினி said:

    எண்டாலும் கதை எழுத சுவியண்ணாட்ட வகுப்பு எடுக்க வேணும்..🤭.நாம்.😄👌

    அதெண்டா உண்மைதான்

  7. நான்கு ,

     

     

    கிட்டத்தட்ட முக்கால் மணிநேரமாகிவிட்டது நாம் இறங்கி. மீண்டும் எல்லாப் பொருட்களையும் பைகளில் வைத்து  எடுத்துக்கொண்டு செல்லத் தயாராக, கணவனைத் தள்ளுபவர் சர்க்கர நாற்காலியைத் தள்ள ஆரம்பிக்க, நாமும் பைகளைத் தோள்களிலும் கைகளிலும் காவியபடி நடக்க, கணவரை அவன் சிறிது வேகமாகத் தள்ளிக்கொண்டு செல்வதாகப் படுகிறது. நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்லத் தொடங்க “அம்மா மெதுவாகப் போங்கோ. அவர் வேகமாகப் போய் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிக்கட்டும்” என்கிறாள். எனக்கு மனம் கேட்கவில்லை. புதிய விமான நிலையம் வேறு. எதுக்கும் கொஞ்சம் வேகமாக நடப்பமென்று சொல்லி நடக்க ஒரு Lift இற்குள் இருந்து இங்க வாங்கோ என்ற கணவரின் அழைப்புக் கேட்க அதை நோக்கிச் செல்கிறோம்.

     அதற்குள் ஏறியவுடன் “இவன் ஐந்து டொலர் தரும்படி கேட்கிறான்” என்கிறார் மனிசன். “அவனுக்கு எதற்கு ஐந்து டொலர் ? அதுகும் அவனுக்கு எதற்குக் கொடுக்கவேண்டும். அப்பிடி அவன் கேட்கிறதே பிழை” என்கிறேன். அதுதான் விரைவாகத் தள்ளிக்கொண்டு வந்தவரோ என்றபடி அவனை ஒரு பார்வை பார்க்கிறேன். "ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள். அதற்குள் லிப்ட் கதவு திறக்க, கணவரைத் தள்ளியபடியே எனக்குக் காசு எதுவும் வேண்டாம் என்கிறான் அவன். 

     

    அவனுக்குத் தமிழில் நாம் கதைத்தது புரிந்துவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது. நானும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். நாம் எமது விமானத்துக்குரிய  இடத்தை அடைந்துவிட்டோம். கணவர் எழுந்து அமர்ந்துகொள்ள நானும் மகளும் அருகில் அமர்கிறோம். அழகான ஏயாபோர்ட். ஒருக்கால் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா என்று மகளைக் கேட்கிறேன். நானும் வரட்டோ என்கிறார் கணவர். இவ்வளவையும் காவிக்கொண்டு போக ஏலாது. நாங்கள் வந்து விடுறம். அதன்பின்  நீங்கள் போங்கோ என்கிறேன்.  திடுமென என் போடிங் பாசைக் காணவில்லை என்கிறாள் மகள். எங்கேயாவது மாறி வைத்திருப்பாய் பாரென்றுவிட்டு எமது பைகள் உட்பட எல்லா இடமும் தேடியும் அதைக் காணவில்லை. 

    அவர்கள் செக் பண்ணிய இடத்தில் தான்  தவறியிருக்கும். நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மகள் செல்ல எனக்குப் பதட்டமாகிறது. மகள் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகியும் வராததால் எனக்குப் பதட்டம் அதிகரிக்க, நான் கொஞ்சத் தூரம் சென்று பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவள் இல்லை. போன் செய்து பார்க்க அதுவும் நெட்வேக் பிரச்சனைபோல. போன் வேலை செய்யவில்லை. மாறி எங்காவது சென்றுவிட்டாளோ அல்லது வேறு என்னவோ என் மனம் போன போக்கில் என் கற்பனையும் செல்கிறது. 

     

    நீங்கள் இருங்கோ. நான் போய் தேடிக்கொண்டுவருக்கிறேன் என்று கூற, "பிறகு நீ துலைஞ்சு நாங்கள் தேட ஏலாது. அவள் வந்திடுவாள். நீ உதிலை இரு" என்கிறார். நான் வந்து அவருக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளுதில்லை. மறுபடியும் எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி வழிபார்த்து நிற்கிறேன். எமது விமானத்தில் ஏறுவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள்  என விமானச் சேவையினர் ஒலிபரப்புச் செய்கின்றனர்.  

     

    எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விடுவிடுவென அந்தக் gate இக்கு அருகில் இருக்கும் கவுண்டருக்குச் சென்று மகளின் பாஸ்போட்டைக் கொடுத்து விபரத்தைக் கூறி ஒருமுறை அவளின் பெயரைக் கூறி உடனே வருமாறு அழைக்கும்படி கேட்கிறேன். அவரோ உடனே இன்னொரு போடிங் பாசைத் தயார் செய்துவிட்டு மகளின் பெயரைக் கூறி வரும்படி அழைக்கிறார். நான் போடிங்பாசையும் பாஸ்போட்டையும் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். மகள் தூரத்தில் வருவது தெரிகிறது. என்னருகில் வந்தவுடன் “நீங்கள் தான் சொன்னீர்களா என்னைக் காணவில்லை என்று. நான் சின்னப் பிள்ளையா துலைய” என்கிறாள். போய் இவ்வளவு நேரம். எனக்குப் பயம் வரும் தானே என்று கூறியபடி பாஸ்போட்டையும்  போர்டிங் பாசையும் நீட்டுகிறேன். என்னுடையதை அங்கு எங்குமே காணவில்லை. அதனால் அங்கு கதைத்து நானும் எடுத்துக்கொண்டு தான் வந்தேன் என்றுகூற நின்மதிப் பெருமூச்சு விட்டபடி கணவர் இருக்குமிடம் செல்கிறோம். விமான நிலையத்தைச் சுற்றிப்பார்த்து ஒரு படம் கூட எடுக்கவில்லையே என்று கவலை ஏற்பட்டாலும் சரி திரும்பவும் இந்த வழியால் தானே வரவேண்டும். அப்போது வடிவாகப் படம் எடுத்துக்கொள்வோம் என மனதைத் தேற்றிக்கொள்கிறேன். அடுத்த மூன்று  மணி நேரத்தில் கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்குகிறது.   

     

    நான் 2019 இல் என் நூல் வெளியீட்டுக்காகச் சென்றிருந்தபடியால் பெரிதாக எனக்குப் பரபரப்பு ஏற்படவில்லை. ஆனாலும் படபடப்பு. போன் மற்றும் ஐபாட் என் சூட்கேசில் இருக்கிறதா ????இல்லையா ??? என்னும் படபடப்பு. குடிவரவுத் திணைக்களத்தில் எந்தக் கெடுபிடியும் இல்லை. நான் கணவர் பிள்ளைகளைக் கவனிக்காது என் கைப்பையையும் கொண்டு விரைவாக பயணப் பொதிகள் வரும் இடத்தை அடைகிறேன். அவை இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. என்ன இன்னும் சூட்கேசைக் காணவில்லை. என்ன செய்யிறாங்கள் என்று கணவனைப் பார்த்துச் சொல்கிறேன். எப்படியும் உங்கள் போன் கிடைக்கப்போவதில்லை அம்மா. அது எப்ப வந்தால் என்ன என எரிச்சலூட்டுகிறாள் மகள். 

    கடைக்குட்டி மூன்று வயதில் வந்தபின் இப்போதுதான் வருவதனால் அங்கும் இங்கும் புதினம் பார்த்தபடி இருக்கிறாள். ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என்  போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது. 


     

    • Like 6
  8. 25 minutes ago, நந்தன் said:

    வேணாம் சொல்லிப்போட்டன். 

    உங்களுக்குப் பொறாமை கண்டியளோ 😂

    5 minutes ago, ஏராளன் said:

    அக்கா நீங்கள் நல்லா கதை சொல்கிறீர்கள், காக்க வைக்ககாமல் தொடர்ந்தால் சுவியண்ணையின் தலை வெடிக்காது!

    காக்கவைக்க எனக்கு என்ன ஆசையா??? கணனியில குந்த எனக்கும் நேரம் வரவேணும் எல்லோ ?

  9. 21 hours ago, யாயினி said:

    ஆகா ஒரு மாதிரி வீட்டுக்காற அண்ணாட்ட வாங்கி கட்டத் தொடங்கிட்டாவே...🤭

    நல்ல சந்தோஷமாக்கும்.

    11 hours ago, suvy said:

    இப்ப யார் யாருடைய போன் மிஸ்ஸிங் அதை முதல்ல சொல்லுங்கோ.......தலை வெடிக்குது.......!   😂

    ஒருதற்றையும் துலையேல்லை அண்ணா. 

    9 hours ago, குமாரசாமி said:

    @மெசொபொத்தேமியா சுமேரியர்

    ஆர் உந்த சரவணார்? :cool:

    ஒரு பழைய யாழ் உறவுதான் இந்தப் பெயரில் வருகுது எண்டு உங்களுக்கும் விளங்கித்தானே இருக்கும் அண்ணா.

  10. மூன்று

     

    லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ  மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச்  செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். 

     

    போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். 

     

    ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். 

     

    ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு  ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும்  என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும்  யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன்.  

     

    உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என்  போன் துலையாது  என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். 

     

    மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய  பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். 

    சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது.  மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில்  அவங்களுக்கும்  தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை  இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். 

     

    :கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ?

     

    :அது என் கணனி 

     

    :மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? 

     

    :அது அவர்கள் பிரச்சனை

     

    :இத்தனை பாரமாக இருக்கிறதே 

     

    :அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ?

     

    :நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். 

     

    அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.

    • Like 3
    • Haha 6
  11.  

    On 8/4/2023 at 00:35, புங்கையூரன் said:

    அனுபவங்கள் தொடரட்டும், சுமே...!

    இந்தப் பக்கம் வந்திருந்தால், எங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே..1

    அங்கு வந்திட்டு உங்களுக்குச் சொல்லாமல் இருப்பேனா.

    On 8/4/2023 at 09:20, suvy said:

    ம்.....நல்லா இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள்........!  👍

    நன்றி சுவி அண்ணா

    17 hours ago, saravanar said:

    அட பாவி. அவ இங்க களத்துக்கு வரட்டுக்கும். இருக்கிது சாத்து 😋

     

    அவவுக்கு யாழ் களமே தெரியாதபடியால்த்தானே இத்தனை துணிவா எழுதிறன்.

    13 hours ago, சுவைப்பிரியன் said:

    தொடர்ந்து எழுதுங்கள்.

    நன்றி சுவைப்பிரியன்

    5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

    சரி கொஞ்ச நாளைக்கு சண்டை அடிபிடி எண்டு யாழ்களை கட்டப்போகுது.. இனி நானும் அடிக்கடிவரோனும் சண்டை பாக்க.. தொடருங்கள்.. ஆவலுடன் 

    ஆர் சண்டை பிடிப்பினம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிறதுதான் வேலையாக்கும்.

  12. 12 minutes ago, குமாரசாமி said:

    உண்மையில் யாழ்களம் தமிழ் படைப்பாளிகளுக்கு பெரியதொரு தளம். அதை சீராக பயன்படுத்த தெரியாமல் பலர் விலகியே நிற்கின்றனர்.
    முகநூல் டிவிட்டர் போன்ற   ஊடகங்கள் அன்றாடத்திற்கு உதவுமே தவிர  படைப்புக்களுக்கு அல்ல.

    உண்மைதான். மற்றைய தளங்களில் எழுதும்போது ஏதோ அந்நிய நாட்டுக்குப் போவது போல் ஓர் உணர்வு. யாழ் இணையத்தில் எழுதும்போதுதான் கருத்துக்களத்தினூடாக வரும் விமர்சனங்கள் எழுதும் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிறைவையும் தருகின்றன குமாரசாமி.

    3 minutes ago, குமாரசாமி said:

    கொத்தாருக்கு அக்கினி நட்சத்திர  படத்திலை வாற ஜனகராஜ் பீலிங் 100 வீதம் இருந்திருக்கும்....:rolling_on_the_floor_laughing:

     

    அது அத்தாருக்கு மட்டும் இல்லை உங்கள் எல்லாருக்கும் வரும்தான். ஆனா உணக்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை 😂

    • Like 1
  13. 31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

    ஏலக்காய் வாங்கியதாக நீங்கள் எழுதிய போது கிருபன் அய்யா மாதிரி தான் இலங்கையில் இருந்து தானே ஏலக்காய் இங்கே வருகிறது என்று நானும் நினைத்தேன்.

    ஒரு ஆண்டுக்கு முன்னர் அரிசி உட்பட பல மளிகைப் பொருட்களை இங்கிருந்து  அனுப்பியவர்களும் உண்டு.

    32 minutes ago, நிலாமதி said:

    "முன் வைத்த காலை பின்   வைக்கமாட்டேன்" என்று  துணிந்து எண்ணிய படியே பயணம் தொடங்கியாச்சு ...தொடருங்கோ ...

    வேறவழி?

  14. அப்பாடா ஒருவாறு ஒரே மூச்சில் வாசித்து முடித்திட்டன். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நீங்கள் உங்கள் கதைகளை எல்லாம் தொகுப்பாகப் போடுங்கள் அண்ணா. எல்லாமே விறுவிறுப்பான கதைகள் தானே.

    ஆனாலும் வேலை வெட்டி இல்லாமல் எல்லாவற்றையும் இரசித்து அறிந்துகொள்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. லா செப்பலில் கடையும் கண்முன்னே விரிந்தது அண்ணா.

    • Like 1
  15. 2 minutes ago, கிருபன் said:

    புருஷன்மார் இந்த வயதிலும் கண்டிசன் போட்டுத்தான் வைச்சிருக்கினம்!

    நானும் வாசிக்கின்றேன்! சிறிலங்காவில் ஏலக்காயும் இல்லையோ!😉

    ஏலக்காய், மஞ்சள் போன்ற சில அங்கே  சரியான விலை.

  16. இரண்டு

     

    என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது  எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின்  பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன்  நான். 

    அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள்  அவள். சரி அவளுக்கும் என்ன  பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது  என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். 

     

    சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம்  சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. 

     

    நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று  மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது.  நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg  மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன  புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால்  அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு  சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது.  

     

    DMA  என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ்,    …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். 

     

    நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த,  கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன்.

    பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால்  மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது.  அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு.  நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன். 

    • Like 11
    • Haha 1
  17. இவர் பழைய ஆள் வேறு பெயரில் இப்ப என்றால் பார்த்துத்தானே இருப்பார் நந்தன் 😀

    1 minute ago, ஈழப்பிரியன் said:

    நானும் தான்.

    அவவின் இலக்கத்தை எடுத்தால் போட்டுக் கொடுக்கலாம்.

    நல்ல ஆசைதான்.

  18. 16 hours ago, saravanar said:

    எங்களுக்கும் இதே கனவு. வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எழுதுங்கள் சுமே. 

    உங்கள் நண்பி இந்த யாழ் பக்கம் வந்தால் என்ன நடக்குமோ என்று ஒரு ஆதங்கம் 😄

    நான் என்ன பொய்யாவா எழுதிறன்.????

    14 hours ago, Kavi arunasalam said:

    4-ACC3-EC8-E2-D6-467-C-AADC-5-B30163-BF6

    உங்கள் மகிழ்ச்சி நல்லாப் புரியுது அண்ணா 😀

    11 hours ago, விளங்க நினைப்பவன் said:

     😂

    நியாயமான பயம் தான்.

     

    வரவே மாட்டா எண்ட துணிவுதான்.😂

    9 hours ago, நந்தன் said:

    நீங்க எங்க அக்காவ பாத்தயில்லையே😎

    😂🤣

  19. On 6/4/2023 at 10:48, nunavilan said:

    தொடருங்கள் சுமே. 
     

    😆

     

    On 6/4/2023 at 10:49, யாயினி said:

    தாயகத்தில் ஆறுமாதம்,

    தொடரவும் ..😀👋

    ம் தொடரிறன் 😀

    On 6/4/2023 at 12:18, உடையார் said:

    நீங்கள் நியத்தை எப்பவுமே எழுதுவதால், இந்த தொடரை வாசிக்க ஆவலாக இருக்கு, தொடருங்கள்

    அப்பா நீங்கள் உண்மையை எழுதுவதில்லையா??

    On 6/4/2023 at 15:17, ஈழப்பிரியன் said:

    இத்தனை நாளுக்கு பின் சுதந்திரம் என்றால் விடவா போகிறார்கள்.

    தொடருங்கோ.

    😀

    On 6/4/2023 at 15:33, suvy said:

    ஆஹா .......வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க......இப்பதான் யாழுக்கு ஒரு மலர்ச்சி ஏற்பட்டதுபோல்  எமக்கு ஒரு பீலிங்......தொடருங்கள் சகோதரி.......!  👍  😁

    ம்கும் 😃

    On 6/4/2023 at 16:09, Nathamuni said:

    ஒரு கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லிப்போட்டு நீங்கள் கதையை தொடருங்கோ.

    நீங்கள் வந்தபிறகு, அத்தார் இப்ப சோகமா இருக்கிறாரோ அல்லது மகிழ்ச்சியா இருக்கிறாரோ? 😁

    எழுதி முடியத்தான் இதுக்குப் பதில் சொல்லலாம்.

    On 6/4/2023 at 17:54, Sabesh said:

    இதென்ன கேள்வி... ஆறு மாதமாய் எவ்வளவு சுதந்திரமாய் இருந்திருப்பினம்

    ஏன் நான் மட்டும் சுதந்திரமாய் இருக்கேல்லையோ?

    19 hours ago, பெருமாள் said:

    என்னத்தையாவது எழுதுங்க எனக்கும் நண்டுவருக்கும் நீங்கள் பழகிய அந்த மோட்டர் சைக்கிள் இப்ப உயிரோடு இருக்கா இல்லியா? இருந்தால் படம் போடவும் நன்றி .

    இப்ப படம் போடமுடியாது. எப்ப போடவேணுமோ அப்ப படம் வரும்.

    19 hours ago, குமாரசாமி said:

    எழுதுங்கள் வாசிக்கலாம்.
     

    இங்க விட்டா வேறெங்க எழுதுறது.

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.