-
Posts
8218 -
Joined
-
Last visited
-
Days Won
37
மெசொபொத்தேமியா சுமேரியர் last won the day on December 28 2021
மெசொபொத்தேமியா சுமேரியர் had the most liked content!
About மெசொபொத்தேமியா சுமேரியர்
- Birthday April 4
Contact Methods
-
Website URL
http://poongkaadu.blogspot.com
Profile Information
-
Gender
Female
-
Location
மெசொப்பொத்தேமியா
-
Interests
எதைச் சொல்லுறது
Recent Profile Visitors
மெசொபொத்தேமியா சுமேரியர்'s Achievements
-
மாட்டு வண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
எங்கள் ஊரவர்கள் தான் இவர்கள். அது அவையின் பிரச்சனை. ஏதோ உங்களையும் மாட்டுவண்டியில ஏறச் சொன்ன மாதிரி .. ............ -
கோமகன் இன்று காலமாகி விட்டார்.
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to நிழலி's topic in துயர் பகிர்வோம்
கோவின் இழப்பு பெரியது. யாழ் இணையத்துடன் முரண்பாடுகள் இருந்தாலும் தன்னை ஆளாக்கியது யாழ் இணையம் தான் என்று பல இடங்களில் கூறியுள்ளார். யாழ் இணையத்தின் ஊடாக அவருக்கு அறிமுகமான தமிழ்ப் பெடியன் ஒஸ்ரேலியாவிலிருந்து வந்த அன்றே கோவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவந்து "அண்ணை உங்களை உயிருடன் ஒருமுறைகூடப் பார்க்க முடியவில்லையே" என்று கலங்கி அழுததாக சுசீலா கூறினார். வாத்தியாரும் யாழ் இணையசார்பில் மலர்வளையம் வைத்ததையும் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார். -
மனமார்ந்த வாழ்த்துக்கள்
-
மனிதாபிமானப் பன்னாடை
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to புங்கையூரன்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
வித்தியாசமாக இருக்கின்றது கவிதை. -
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to நிழலி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
கன நாட்களின் பின் உங்கள் கவிதை .. .. .. நன்று -
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
வரும் வரும் பொறுங்கோ -
அதன்பின்னர் ஒருநாள் வைத்தியாரிடம் தொலைபேசியில் கதைப்பதற்கான நேரத்தை பதிவு செய்துவிட்டுக் காத்திருக்க அழைப்பு வருக்கிறது. அந்த வைத்தியர் மிக இயல்பாக என்னுடன் கதைப்பார். “உமக்கு என்ன பிரச்சனை? “எனக்கு கொஞ்ச நாட்களாக சரியான கடி” “சிறீலங்கா அல்லது இந்தியா போய் வந்தீரா? தலையெல்லாம் பேனோ?” “எனக்கு ஏன் பேன் வருது? அதோடை உந்தக் கோவிட்டுக்குள்ளை நான் ஏன் போகப்போறன் அங்கை எல்லாம்?” “பேன் இல்லை எண்டால் அப்ப எங்க கடி?” நான் 2019 கம்போடியா போனபோது ................................................. .......தொடங்கி எல்லாம் சொல்லி முடிச்சன். “உமக்கு ஏதும் ஒவ்வாமை இருக்கோ? “இல்லை” “இதுக்கு முதல் அதுக்கான டெஸ்ட் செய்தனீரே?” “எதுக்கும் ஒருக்கா அதையும் செய்து பார்ப்பம்.” “ஆனால் அவங்கள் வந்து போன பிறகு எனக்கு ஒரு கடியும் இல்லை.” “அப்ப என்னத்துக்கு எனக்கு அப்பொயின்ற்மென்ட் வச்சநீர்” “இவ்வளவு நாளும் ஏன் எனக்குக் கடி இருந்தது எண்டு தெரிய வேணுமெல்லோ” “இது வடிவாத் தெரியுதுதானே உம்மட நினைப்பு என்று. சிலநேரம் தற்காலிகமா ஏதாவது ஒவ்வாமை கூட உமக்கு வந்திருக்கலாம். உந்த சோப், வோசிங் பவுடர் இதுகளுக்கும் கடிக்கும். றால் நண்டு நல்லாச் சாப்பிடுறநீரோ?” “ஓம் அது நல்லாப் பிடிக்கும்” “சிலபேருக்கு அது கனக்கச் சாப்பிட்டாலும் கடிக்கும். “இரவில நித்திரை ஒழுங்கா வருதா? வேணுமெண்டா ஒரு கடிதம் தாறன். சைகாட்டிஸ்ற் ஒருவரைப் போய் பாருமன்.” “என்னைப் பயித்தியம் ஆக்கப் போறியளோ? எனக்கு நல்லா நித்திரை வருது. ஆளை விடுங்கோ” “நீரா வைத்தியத்துக்கு வந்திட்டு நீரே மருந்தையும் சொல்லுறீர். சரி அப்ப ஒரு மாதம் பாரும். கடிக்காட்டில் சரி. திரும்பவும் கடிக்கிறபோல இருந்தால் வாரும்.” அதோட எல்லாம் முடிஞ்சுது।
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்
-
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று யாரும் சொன்னால் நன்றி என்று கடந்து போய்விடும் எனக்கு கடவுளர்களின் பெயர் சொன்னால் மட்டும் கோபம் வந்துவிடுகிறது. அவன் சொல்வதும் ஒருவகைத் திணிப்புத்தானே. எனக்கு மத வெறி இல்லை. ஆனாலும் இப்படியான விடயங்களை ஆமோதிக்கவும் முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர பலரும் உங்களையும் என்னையும் போலத் தான் யாயினி. ஓ நான் அதிகம் அந்தப் பக்கம் போகாததானால் கவனிக்கவில்லை. ஆனாலும் அந்தத் தாய் இறந்துவிட்டார் என்றவுடன் மனதில் ஏதோ செய்ததுதான். இந்தக் குளிரில் நீட்டி நிமிர்ந்து படுக்காது எப்படித்தான் தொடர்ந்து கதிரையில் இருக்கிறார்களோ என்று அவர்களைக் கடந்து செல்லும் போது எண்ணியிருக்கிறேன். கட்டாயம் தொடருமாக்கும் உந்த உதாரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. -
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
என்ன செய்ய என தலைவிதி அது உது தானே கூடாது இது வேறு அண்ணா ...... சீச்சீ அவ்வளவு பெருந்தன்மை எல்லாம் எனக்கு இல்லை. அண்ணா