Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8173
 • Joined

 • Days Won

  37

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. என்ன வருத்தம் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லைத்தான் என்னினும் என் வைத்தியர் கான்சர் என்று கூறியது மீண்டும் நினைவில் வந்து தொலைக்குது. எத்தினை பேருக்குத் திட்டியிருப்பன். சண்டைபிடிச்சிருப்பன். இப்பிடி அற்ப ஆயுளில் போகத்தானோ என்று மனம் எண்ண, எல்லாம் அனுபவிச்சிட்டாய் தானே என்று மனச்சாட்சி கேட்குது. எனக்குத் 80,90 வயதுவரை இருக்கிற ஆசை என்றுமே இருந்ததில்லை. ஆனால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளாவது வருத்த துன்பம் இல்லாமல் இருக்கவிட்டிருக்கலாம்தானே அந்தக் கடவுள் எண்டு மனம் திட்டுது. எதுக்கும் வீட்டை போனபிறகு டயரியில என்ன என்ன ஆசை இன்னும் தீராமல் இருக்கு எண்டு லிஸ்ட் போட்டால்த்தான் தெரியும். கீமோ செய்யாமல் எங்காவது முக்கியமாய் பார்க்கவேண்டிய இடத்துக்கு மனிசனையும் கூட்டிக்கொண்டுபோய் வந்தால் என்ன என்ற எண்ணம் எழுந்ததுமே கோதாரிவிழுந்த கொரோனாவால ஒரு இடமும் போக ஏலாது என்ற நினைப்பு வர அப்பத்தான் இதுக்குள்ள அந்தக் கொரோனா தொற்றினால் என் நிலை இன்னும் மோசமாகும் என்ற நினைப்புடன் என் பையைத் திறக்க மகள் உள்ளே வைத்திருந்த சிறிய Hand sanitizer கண்ணில் பட எடுத்து கைகளில் பூசிக்கொள்கிறேன்.

  மேலும் இரண்டு மணிநேரம் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு இருக்க நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. எனக்கு ஸ்கானிங்க் இருக்கு என்று ஒருவர் வந்து அழைத்துப் போகிறார். அங்கும் அரை மணிநேரக் காத்திருப்பின்பின் உள்ளே என்னை அழைத்தவர் தன்னை வைத்தியர் மார்க் என்று அறிமுகம் செய்கிறார். ஒரு ஐந்து நிமிடங்கள் என் வயிற்றைக் கருவி மூலம் ஸ்கான் செய்துவிட்டு, நான் நினைக்கிறேன் உன் பித்தப் பையில்தான் எதோ பிரச்சனை இருக்கிறது என்கிறார். "அதில் கான்சரோ என்கிறேன்". "எனக்கு வடிவாகத் தெரியவில்லை. இதற்கென்று இருக்கும் வைத்தியர்கள் தான் சொல்ல வேண்டும்" என்றபடி அவரென்னை வெளியே அனுப்புகிறார். திரும்ப வைத்தியர்கள் என்னை அழைப்பார்கள் என்று எண்ணியபடி ஒரு மணிநேரம் காத்திருக்கிறேன். அது பலரும் வந்து போகும் இடமாக இருப்பதனால் அடிக்கடி கதவைத் திறக்க குளிர்கிறது. இரண்டு மணி நேரம் போனபின் ஒரு தாதி வந்து வேறு ஒரு பகுதிக்கு அழைத்துப் போய் அமரவைக்கிறார். மேலும் ஒரு மணி நேரத்தில் உள்ளே அழைக்க ஒரு வெளிநாட்டுக்கார வைத்தியர் இருக்கிறார்.

  "வணக்கம் எப்படி இருக்கிறாய்"

  " சரியான தண்ணீர்த் தாகம்"

  " இப்ப தலை சுற்றலில்லையா"

  " இல்லை. எனக்கு என்ன நோய்"

  " உனக்கு liver இல் தான் பிரச்சனை"

  "அதிலா கான்சர்"

  " உனக்கு கான்சர் இல்லை. ஆனால் உன் ஈரல் சரியாகப் பாதிக்கப் பட்டிருக்கு"

  " எனது வைத்தியர் சிறுநீர்ப் பையில் கான்சர் என்கிறாரே"

  "உன் வைத்தியர் உன்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறு. ஒன்றை நிட்சயம் செய்யும் முன்னர் எப்படி அவர் ஒருவரிடம் அப்படிக் கூறலாம்"

  " இப்பதான் எனக்கு நின்மதியாக இருக்கு"

  " நீ அல்ககோல் குடிப்பாயா"

  " இல்லை "

  எப்பவாவது மனிசன் குடிக்கும்போது ஒருவாய் சுவைத்துப் பார்த்ததையம் சுவையான இனிப்பான வைன்களை ஒரு கொங்சம் குடித்ததை கூறுவதா விடுவதா என்று மனம் பதைத்து பின் வேண்டாம் என்று முடிவெடுக்கிறது.

  " சிகரெட் பிடிக்கிறனியா"

  " எங்கள் குடும்பத்திலேயே யாரும் அதைத் தொட்டுப் பார்ப்பதில்லை"

  " கணவர் குழந்தைகளுடன் தானே வாழ்கிறாய்"

  " ஓமோம் மூன்று குழந்தைகள்"

  " வேலை செய்கிறாயா"

  " ஒரு ஆண்டின்பின் கடந்த வாரம் தான் வேலை கிடைத்தது"

  " கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதே. உன் கணவருடன் மட்டும் தானே உறவு கொள்கிறாய் "

  " ஓம் ஏன் அப்பிடி ஒரு கேள்வி கேட்கிறாய் "

  " ஏனென்றால் தொடர்ந்து குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள், பல ஆண்களுடன் உறவில் ஈடுபடுபவர்கள் இவர்களுக்குத்தான் கலீரலில் இப்படி தாக்கமேற்படும்"

  " நான் இதற்குள் அடங்கவில்லையே. எப்படி எனக்கு இதுவந்திருக்கும் "

  " இன்னும் ஒன்றும் உண்டு. அது நீ உண்ணும் உணவு. நீ வழக்கமாக என்ன உணவுகளை உண்கிறாய் "

  " காலையில் ஓட்ஸ், சிறுதானியக் கஞ்சி அல்லது பாண். மதியம் சோறு கறிவகைகள். இரவு இடியப்பம், பிட்டு ...."

  "என்ன குளிசைகள் பாவிக்கிறாய்"

  "பிரஷர் தான் ஒரு மாதத்துக்கு முன் சரியான உச்சத்துக்குப் போய் ஐந்து நாட்கள் இங்குதான் இருந்தேன்"

  " எத்தனை குளிசை எடுக்கிறாய் தினமும் "

  "கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு இரண்டு எடுக்கிறேன்"

  " உன் கணவனுடன் உனக்குப் பிரச்சனையா"

  " என் கணவர் பாவம் நல்லவர். என் நண்பர்கள் சிலருடன் தான் பிரச்சனை. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் தொலைபேசி இணைப்பையும்   துண்டித்து விட்டதனால் ஒரே டென்ஷன். அதனால் ஈரல் பாதித்திருக்குமா"

  "இல்லை இல்லை. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நல்ல காலம் இப்ப நீ மருத்துவமனைக்கு வந்தது. இன்னும் காலம் தாழ்த்தியிருந்தால் லிவர் இன்னும் பாதிப்படைந்திருக்கும்"

  "முதல் ஸ்கான் செய்த வைத்தியர் ஏன் பித்தப்பையில் பிரச்சனை என்கிறார்"

  அவர் சந்தேகப்பட்டார். மற்றப்படி நாம் இரண்டு வைத்தியர்கள் சேர்ந்து பார்த்தபின் தான் உனக்கு மஞ்சள்  காமாளை நோய் இருப்பது தெரிந்தது"

  "மஞ்சள் காமாளையா"

  "ஓம் நீ காலையில் என்ன குடிப்பாய்"

  "கோப்பி குடிப்பேன்"

  " வேறு என்ன என்ன உண்பாய் குடிப்பாய் என்று கூறு"

  "ஒரு தடவை மட்டும் தான் கோப்பி. அதன்பின் வெறும் தேநீர் பலதடவை குடிப்பேன். பழங்கள் நிறைய உண்பேன். ஆனால் முன்னர் வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தையம் உண்பேன். இப்ப ஒரு மாத காலமாக வெறும்  வயிற்றில் இன்னொரு மூலிகைத் தேநீர் அருந்திவிட்டு அதன் பின்னர் வெந்தயம் உண்டு காலை உணவும் எடுத்துக் கொள்ளுவேன்"

  "மூலிகைத் தேனீரா? என்ன மூலிகை"

  "அதுவா பொறு எனக்குப் பெயர் பாடம் இல்லை"

  எனது வாற்சப் குழுமத்தில் போய்த் தேடியெடுத்து அந்த you tube வீடியோவில் இருந்த பெயர்களைக் கூறுகிறேன்.

  " வேப்பிலைப் பொடி - Neem leaf Powder, வெள்ளை மிளகு - White Pepper , கார்போக அரிசி- Babchi seeds , பறங்கிப்பட்டைச் சூரணம் - China Root Powder "

  " இதை யார் உனக்குப் பரிந்துரை செய்தது"

  " யாரும் எனக்குச் செய்யவில்லை. You Tube இல் பார்த்துவிட்டு நானாக இலங்கையிலிருந்து எடுப்பித்து அரைத்துப் பவுடராக்கிக் குடிக்கிறேன்"

  " எந்தளவு குடித்தாய்"

  " இரு மேசைக்கரண்டியளவு சுடுநீரில் போட்டு அவித்துக்குடித்தேன்"

  "உன் வைத்தியரிடம் கலந்தாலோசிக்கவில்லையா"

  " மூலிகைகள் உடலுக்கு நல்லதுதானே. அதனால் வைத்தியரிடம் கேட்கவில்லை"

  " நான் நினைக்கிறேன் இந்த மூலிகைத்தேநீர் தான் உன் ஈரலைப் பாதிப்படையச்செய்திருக்கிறது. உன் வீட்டிலிருந்து  அதில் கொஞ்சம் எடுத்து வரச் சொல்கிறாயா "   

  " அதற்கென்ன. இப்பவே கொண்டுவரச் சொல்கிறேன் " 

  " இன்று நீ இங்குதான் தங்கவேண்டும். நாளை இன்னொரு ஸ்கான் இருக்கு"

  "சரி இனி நான் ஏதாவது குடிக்கலாம் தானே"

  "ஓம். வெளியே போய் இரு. உன்னை அழைத்துப் போவார்கள்.    

  பவுடருக்கை china வேற இருக்கு. இவங்கள் வேறு காரணத்தால வருத்தம் வந்தாலும் இப்ப சைனாக் காரனைச் சாட்டப் போறாங்களே என்ற யோசனையோடு அமர்ந்திருக்க தாதி என்னை அழைத்துச்சென்று முன்பு இருத்திய கட்டிலடியில் கொண்டு சென்று விட்டுவிட்டு உனக்கு கோப்பியா? தேனீரா? என்கிறாள். தேநீரைத் தெரிவு செய்ததும் இன்னொரு உணவு பரிமாறும் பெண் ஒரு பெட்டியில் விதவிதமான sandwich ஐ கொண்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு என்னிடம் வருகிறாள். என்னிடம் வரும்போது இரண்டே இரண்டுதான் எஞ்சிஇருக்கு. ஒன்று Tuna sandwich. மற்றையது சீஸ் மற்றும் பிக்கிள் வைத்தது என்று சொல்ல இரண்டாவதைத்தெரிவு செய்கிறேன். சாதாரணமாகவே வெளியே எங்கேயும் நான் sandwich உண்பதே இல்லை. tuna வைத்தது உண்டு லண்டனிலும் பாரிஸில் கார்டினோரிலும் ஏற்பட்ட ஒவ்வாமையின் பின் நான் உண்பதே இல்லை. இன்று வேறு வழியின்றி அதன் பெட்டியைப் பிரித்தால் சில்லிட்டுப் போய் இருக்கிறது அது.

   

   வரும் இன்னும்

   

  • Like 12
 2. கருத்துக்களை எழுதியிருக்கும் உறவுகள் சுவி அண்ணா, சுவைப்பிரியன்,விசுகு அண்ணா, புரட்சிகரத் தமிழ்த் தேசியன், உடையார், ராசவன்னியன் அண்ணா, குமாரசாமி,யாயினி,மருதங்கேணி ஏராளன், ஜெகதா துரை, நிகே, அபராஜிதன்,இணையவன், கண்மணி அக்கா, தனிக்காட்டு ராஜா,சசிவண்ணம், வாதவூரன், கிருபன், துல் ப்பன், தமிழினி,கோசான் ஆகியோர்க்கு மிக்க நன்றி. நான் நோயிலிருந்து மீண்டுவிட்டேன். 

  Just now, குமாரசாமி said:

  அது இரத்தத்திலை ஊறினது....கொத்தாரும் லொள்ளுக்கு குறைஞ்ச ஆள் இல்லைப்போலை கிடக்கு 😁

  அத்தாரை லொள்ளுக்குக் குறைவில்லை. ஆனாலும் சிலநேரம் எரிச்சல் தான் வரும்.🤣

 3. என்னைத் தேடிய, தொலைபேசியில் விசாரித்த, unknown இல் அழைத்து எனக்கு விளங்காது என்று தன்  பெயரைக் கூறாது வைத்த உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

  நன்றி உடையார். வந்திட்டன். என் வருத்தம் பற்றிய பதிவோடு வருவோமென்று இத்தனை நாட்கள் வரவில்லை.  

   

   

  • Thanks 1
  • Haha 1
 4. ஒரு ஆண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த எனக்கு இரண்டு நாள் வேலை அப்பத்தான் கிடைச்சிருந்தது. நானாகத் தேடித் போகாமல் தானாகக் கிடைச்ச வேலை என்பதும் மிகவும் சந்தோசமாக இருக்க முதல் நாள் வேலைக்குப் போய் வந்த சந்தோசத்தில் இருக்க, இரவு முழுதும் வயிற்றில் ஒருவித அவஸ்த்தை. என்னடா இது நாளை காலை வெள்ளண எழும்ப வேணுமே! இரவு தூங்க முடியாமல் இருக்கே என்று கவலைப்பட்டபடியே சாமம் தாண்டி இரண்டு மணிக்குக் கண்ணயர்ந்து காலை ஆறு மணிக்கு எலாம் சத்தம் கேட்டு எழும்பி இரண்டு கறி வைத்து சோறும் போட்டு மனுசனுக்கும் எனக்கும் சாப்பாட்டைக் கட்டி முடித்து குளித்து வெளிக்கிட்டு நானும் வெறும் வயிற்றுடன் போகக் கூடாது என்று தானியங்கள் சேர்ந்த கஞ்சி ஒன்றுடன் வேலைக்குப் போய்ச் சேர மீண்டும் அந்த வயிற்று வலி ஆரம்பித்தது. என்னடா இது வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாளே இப்பிடி என்று எண்ணி ஒருவாறு சமாளித்துக்கொண்டு வேலை செய்தால் மதியத்துக்குப் பிறகும் உண்டபின் வலி அதிகரிக்க ஒரு பரசிற்றாமல் போட்டுக்கொண்டு மாலை ஆறு மணிவரை சமாளிச்சு முடிஞ்சு வீட்டுக்கு வந்தால் அப்பத்தான் வேலையால வந்த மனிசன் ஒரு நல்ல டீ போடு என்கிறார்.

  வாயில வந்ததை அடக்கிக்கொண்டு பால்த் தேனீர் போட்டுக்கொண்டு போய் அவருக்கும் குடுத்து நானும் இருந்து குடிக்கிறன்.

  ஒரு வருஷம் சும்மா இருந்து சாப்பிட்டுட்டு வேலைக்குப் போனது களைப்பாக்கும்

  வழமையான மனிசனின் எள்ளல் கதைக்கு எரிச்சல் வந்தாலும் ஏனோ அடக்கிக்கொண்டு சரியான வயிற்று நோ என்கிறேன்.

  கடையில ஏதும் வாங்கிச் சாப்பிட்டிருப்பாய்

  சொல்லி மனிசன் சிரிக்க வந்த கடுப்பில் நான் கடையில சாப்பிட்டிட்டன். இரவுக்கும் சோறுதான் சாப்பாடு. நான் படுக்கப் போறன் என்றபடி ஏழு மணிக்கே போய்ப் படுத்தாச்சு.

  அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு எழும்பினால் சாடையான தலை சுற்றல். என்னடா இது நல்ல காலம் இன்று வேலை இல்லை என்று எண்ணியபடி பல்விளக்கச் சென்றால் சிறுநீர் ஒரேஞ் நிறத்தில் போகுது. நான் வேலை செய்யும் இடம் கடையுடன் சேர்ந்த அஞ்சல் நிலையம். ஆதலால் ஏதும் சிறுநீர் தொற்று அங்கு ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ணத்துடன் சரி இண்டைக்கு முழுதும் பாப்பம் என்றபடி மற்ற வேலைகளைப் பார்க்கிறேன். சாப்பிடட பிறகு மீண்டும் மேல் வயிற்றுப்பக்கம் நோ அதிகமாக வயிற்றினுள் வாயுத் தொல்லையோ என்று எண்ணியபடி ன்னிடம் இருந்த Omeprazole என்னும் மாத்திரையைப் போடுகிறேன். அன்று மதியம் சிறிது குணமானதுபோல் இருந்தாலும் சிறுநீரின் நிறம் மாறிக்கொண்டே வர நாளை கட்டாயம் வைத்தியருக்குக் கதைக்கவேண்டும் என்று எண்ணியபடி வேலை ஒன்றும் செய்யாது படுத்தே இருக்கிறேன்.

  காலை எட்டு மணிவரை காத்திருந்து வைத்தியருடன் கதைக்கவேண்டும் என்கிறேன். 10 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வைத்தியர் போன் செய்வார் என்று கூறுகிறார் அங்கிருக்கும் பெண். சரி என்று கூறிவிட்டு காலை உணவாகப் பானை உண்டு சிறிது நேரத்தில் மீண்டும் தலை சுற்றலுடன் வயிற்றையும் பிரட்டுவதுபோலும் இருக்கிறது. அதற்குள்ளும் அந்த மனிசன் இந்த வயதில வயித்தில பிள்ளை எண்டு குண்டைத்தூக்கிப் போட்டுடாதை என்றுவிட்டுப் போக நேரகாலம் தெரியாத எழிய மனிசன் என்று வாய்விட்டே திட்டுகிறேன்.

  பிள்ளைகள் எல்லாரும் வீட்டில் என்பதுடன் பெரியவர்கள் என்பதால் மனிசனைத் தவிர ஆலவட்டம் பிடிக்கவேண்டிய தேவை இல்லை என்பதால் போய் மீண்டும் கட்டிலில் படுக்கிறேன். தமிழ் வைத்தியர் ஒரு மணிக்கு போன் செய்கிறார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிலவேளை யூரின் தொற்றாக இருக்கலாம். எதுக்கும் இண்டைக்கு வந்து டியூப் வாங்கிக்கொண்டு போய் நாளைக்கு காலையில சிறுநீர் எடுத்துக்கொண்டு வந்து தாங்கோ. நானே டெஸ்ட் செய்து பாக்கிறேன் என்கிறார். மகள் அவரிடம் சென்று டியூப் வாங்கி வர அடுத்த நாள் காலை வரை வேறு வழியின்றி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மாத்திரை போட்டு சிறிது தணிந்ததாக எண்ணிக்கொண்டு கட்டிலே கதியாகக் கிடக்க, உணவு தேநீர் எல்லாம் கட்டிலுக்கே வர நீண்ட நாட்களின் பின்னர் ஒரு மகிழ்வும் எட்டிப் பார்க்கிறது.  

  அடுத்தநாட் காலை சிறுநீரைச் சேகரித்துக் கொடுக்க மகள் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வருகிறாள். எனக்கோ தலை சுற்றலும் வாந்தி வருவதுபோன்ற நிலையம் வயிற்று நோவும் அதிகரிக்கிறது. மதியம் வரை வைத்தியர் தொடர்புகொள்ளவில்லை. நானே போன் செய்து பார்க்கிறேன். அவர் மாலை மூன்றுக்குத்தான் வருவார். அதன் பின் தொடர்பு கொள்வார் என்கிறார் அங்குள்ள பெண். நான் மீண்டும் படுத்துத் தூங்கிவிடுகிறேன். தொடர்ந்து போன் அடிக்கும் சத்தத்தில் எழுந்தால் வைத்தியர் தான்.

  நடந்ததை அவருக்கு விபரித்தவுடன் சிறுநீர் கழிக்கும்போது எரிகிறதா என்கிறார். இல்லை என்றவுடன் நான் வீடியோவில் உங்களை பார்க்கலாமா என்றவுடன் நான் பதைபதைத்து இப்பவோ??? நான் நேற்றுத்தொடக்கம் தலைகூட இழுக்கவில்லை ..... என்கிறேன். சரி நான் ஐந்து நிமிடத்தில் திரும்ப வீடியோ கோலுக்கு வாறன். பவுடர் பூசி லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு ரெடியா இருங்கோ என்றுவிட்டு வைத்துவிட. நான் எழுந்து தலையை மட்டும் இழுத்துவிட்டு மீண்டு கட்டிலில் வசதியாக அமர்ந்துகொள்கிறேன்.

  வைத்தியர் மீண்டும் வீடியோ கோலில் வந்து நான் உங்கள் வயிற்றை வீடியோவில் பார்க்கலாமா என்று கேட்கிறார். வீடியோவில் பார்த்து எதைக் கண்டுபிடிக்கப் போகிறார் என்று மனதுக்குள் எண்ணிக்கொள்கிறேன். பிள்ளைகள் யாரையும் கூப்பிடுங்கள் என்கிறார். எதற்கு என்றுநான் கேட்க உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும் என்று கேட்டனான் என்கிறார். எனக்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஒருமாதிரி இருக்கோ என்று நான் கேட்க இல்லை இல்லை என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, நான் உங்கள் வயிற்றைப் பார்க்கலாமா என்கிறார். சரியென்று நான் மேலாடையை சிறிது உயர்த்துகிறேன்.

  "என்ன உங்கள் வயிறு வீங்கி இருக்கா"

  "இல்லையே. எனக்கு கொஞ்சம் வயிறு இருக்குத்தான்"

  "நல்லாச் சாப்பிடுவீங்களா"

  "இல்லை மூன்றுநேரம் மட்டும் சாப்பிடுவன்"

  "உங்களுக்கு எரிச்சல் இல்லை எண்டபடியா நான் உது வேறை வருத்தம் எண்டுதான் யோசிக்கிறன்."

  "என்ன வருத்தம்"

  "வயிற்றிலே எந்தப்பக்கம் நோ உங்களுக்கு "

  "மேல் வயிறும் வலப்பக்கமும் அதிக நோ"

  "தொடர்ந்தும் சத்தி, வயிறு நோகுது ஏண்டா உடனடியா கொஸ்பிற்றல் போங்கோ"

  "என்ன வருத்தமாய் இருக்கும் எண்டு நீங்கள் சொல்லவேயில்லையே"

  "நான் ஒரு கிழமைக்கு அன்டிபயோரிக் எழுதிவிடுறன். பிள்ளையள் வந்து எடுப்பினம் தானே"

  "ஓம். நான் பயப்பிட மாட்டன். என்ன வருத்தம் எண்டாலும் சொல்லுங்கோ"

  "உங்கள் அறிகுறிகளைப் பார்த்தால் நான் நினைக்கிறன் உங்களுக்கு Bladder Cancer ஆய் இருக்கலாம். பயப்பிடாதேங்கோ"

  "நான் பயப்பிடேல்லை"

  "ஒரு ஸ்பெஷல் ஸ்கானிங்குக்கு போட்டிருக்கிறன். மூண்டு கிழமைக்குல்ல கூப்பிடுவாங்கள்"

  " அதுக்குள்ளே ஒண்டும் சீரியசா நடக்காதே"

  " சீச் சீ. அப்பிடி ஏதும் வலி அதிகமானா உடன ஹாஸ்பிட்டல் போயிடுங்கோ"

  " சரி "

  வைத்தியர் போனை வைத்தவுடன் மனதெல்லாம் எதோ வெறிச்சோடியது போல் இருக்கு. "இந்த உலகத்தில இத்தனை நாள் வாழ்ந்தது போதும்தான். என் நோய் பற்றி மனிசனுக்கோ பிள்ளையளுக்கோ சொல்லக் கூடாது. 2 லட்சம் பவுண்ட்ஸ் என் பேரில் life இன்சூரன்ஸ் இருக்கு. ஒவ்வொருத்தரும் 50 ஆயிரம் படி எடுங்கோ எண்டு எழுதி வைப்பமோ? சீச்சீ மனிசன் எல்லாம் பாத்துக்கொள்ளுவார். என்ன இன்னும் சில நாடுகள் பாக்கவேணும் எண்ட ஆசைதான் நிறைவேறாமல் போகப்போகுது" என்று எண்ணியபடி மகளைக் கூப்பிட்டு மருந்தைப் போய் எடுத்து வரும்படி சொல்லிவிட்டு மீண்டும் கட்டிலில் படுக்கிறேன்.

  எனக்கு ஒருநாளும் உடல் சூடாக்கிக் காச்சல் வருவதில்லை. குளிர் காச்சல் தான் வரும். அந்த நேரங்களில் இரண்டு போர்வையை போர்த்துக்கொண்டு படுத்தால் ஒரு மணி நேரத்தில் வேர்த்து ஒழுக மீண்டும் போர்வையை உதறிவிட்டுப் படுக்க வருத்தம் அதோட நின்றுவிடும்.

  இன்று சரியான குளிர் குளிர இரண்டு போர்வையுடன் படுத்தால் குளிர் குறைவதாய்க் காணவில்லை. கடைசி மகளைக் கூப்பிட்டு என் முதுகுடன் ஒட்டியபடி படுக்கச் சொல்கிறேன். அவள் அரை மணிநேரம் படுத்தபின் தனக்கு zoom வகுப்பு ஆரம்பிக்கப்போகுது என்று எழ குளிர் சரியாக அதிகரிக்கிறது. இதற்குமுன்னர் இத்தனை அதிகமாக சினோவுக்குள் நடக்கும்போது கூடக் குளிரவில்லை என்பதும் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. மூத்தவள் இரண்டு பரசிர்ராமலைக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் படுக்கும்படி கூட அதையும் போட்டுக்கொண்டு அவள் இன்னும் இரண்டு போர்வைகளைக் கொண்டுவந்து  போர்த்துவிட நான்கு போர்வைகளும் பாரமாக இருந்தாலும் குளிர் குறைந்ததுபோல் உணர அப்படியே தூங்கிப்போகிறேன். மூன்றரை மணிநேரம் நல்ல தூக்கம். அத்தனை போர்வை போர்த்தும் எனக்கு இம்முறை வியர்க்கவே இல்லை என்பது மனதில் வந்து கான்சர் வந்தால் இப்பிடித்தான் இருக்குமோ என்று எண்ணுகிறது மனம்.

  அம்மா அம்மா என்று மகள் அருட்டத்தான் எழுகிறேன்.

  "சாப்பிடேல்லையோ அம்மா"

  "சாப்பிடத்தான் வேணும். என்ன சமைச்சியள்"

  "இடியப்பம் இருக்கு.

  "சரி இரண்டு இடியப்பம் கொண்டு வாங்கோ. மருந்தையும் தாங்கோ"

  உண்டு முடியத் தேநீரும் வருது.

  "அப்பா வேலையால வந்திட்டாரா"

  "ஓம் டிவி பாக்கிறார் "

  "பாரன் வேலையால வந்தவர் என்னை ஒன்றுமே கேக்கேல்லை"

  "நீங்கள் நித்திரை எண்டதால எழுப்பேல்லை"

  மகள் கீழே செல்ல நான் சென்று கையைக் கழுவிவிட்டு மருந்தையும் உண்டுவிட்டுப் படுக்கிறன். உணவு உண்ட பிறகு மீண்டும் வயிற்று நோ ஆரம்பிக்கிறது. எதுக்கு மூன்று வாரங்கள் வரை பொறுக்க வேணும். கான்சர் இருக்கோ இல்லையோ எண்டுறது வேறை என்று எண்ணியபடி இரவு பதினோரு மணிபோல மனுஷனை எழுப்பி எனக்கு ஏலாமல் இருக்கு என்று சொல்ல அவரும் தயாராகி வருகிறார். சாமமென்பதனால் வீதிகள் வெறிச்சோடி இருக்க ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனைக்குச் சென்று இருவரும் A&E இக்குப் போகிறோம். கோவிட் என்பதனால் உள்ளே எல்லோரையும் அனுமதிக்கமுடியாது என்று வாசலில் கூற, "எதுக்கும் நீங்கள் வீட்டுக்குப் போங்கோ. எப்பிடியும் இரண்டு மணிநேரமாவது செல்லும். முடிஞ்சதும் போன் செய்கிறேன் என்றவுடன் கணவர் திரும்பிச் செல்ல நான் சென்று என் விபரங்களைக் கூறிவிட்டு வரவேற்பில் அமர்ந்துகொள்கிறேன். சாமம் என்றாலும் 20, முப்பதுபேர் இருக்கும் A & E  இல் ஐந்து பேர் மட்டுமே இருக்கின்றனர்.

  நான் போனை மட்டும் வைத்திருந்தாலும் அதை வெளியே எடுக்காமல் சும்மா இருக்கிறன். ஒரு அரை மணி நேரத்திலேயே என்னைக் கூப்பிடுகிறார்கள். நான் நடந்ததைக் கூறுகிறேன். முதலில் இரத்தப்பரிசோதனை செய்து பார்ப்போம் என்று கூறி ஆறு டியூப்பில் இரத்தம் எடுத்துவிட்டு என்னை அங்குள்ள ஒரு தற்காலிக இடத்தில் அமர வைக்கிறார்கள். பரிசோதனை முடிவு வர இரண்டுமணிநேரம் ஆகும் என்றுவிட்டுச் செல்கின்றனர். இரவு என்பதனாலும் அதிகப்பேர் இல்லை என்பதனாலும் எனக்கு ஒரு பயம் வருது. போனை எடுத்து முகநூலைப் பார்த்து நேரத்தைப் போக்குவோம் என்றால் உள்ளே போன் வேலை செய்யுதில்லை. கையைத் தலைக்கு முண்டு கொடுத்தபடி எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது. யாரோ வந்து எழுப்புகின்றனர்.

  ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் பெண்ணும் நிற்கின்றனர். என்னை வா என்று கூட்டிக்கொண்டு சென்று தாங்கள் படித்துக்கொண்டு இருக்கும் மருத்துவர்கள். உன்னை செக் பண்ணலாமா என்று கேட்க ஓம் என்று தலையாட்டுறன். அங்கு சென்றதும் என் நோய் பற்றி அவர்கள் கேள்விகளுக்கு பதில் கூறவே எனக்கு ஏலாமல் இருக்கு. நான் இதில் படுக்கட்டா என்று கேட்க ஓம் என்கின்றனர். நான் படுத்தபடி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன். இன்னொருதடவை இரத்தம் எடுக்கப்போகிறோம் என்கின்றனர். ஏற்கனவே எடுத்ததே. அதன் முடிவு என்ன என்று கேட்க, அதை வேறு ஒரு வைத்தியர் வந்து கூறுவார். அவர் இப்ப பிசியாக இருக்கிறார். இது நாங்கள் வேறு பகுதி என்கின்றனர்.

  இவர்கள் வேறு ஆறு டியூப்பில் எடுக்க, என் உருவத்தைப் பார்த்திட்டு எவ்வளவும் எடுக்கலாம் என்று எண்ணுகின்றனரோ என மனதில் எண்ணியபடி இருக்க, நீ இங்கேயே படுத்திரு. மற்ற வைத்தியர் வருவார் என்றபடி போய்விட நான் படுத்து நல்ல நித்திரை கொண்டிட்டன். யாரோ என்னைத் தொட்டு உலுப்பக் கண் விழிக்கிறேன். ஒரு தாதி என்னை எழுப்புகிறார். எழும்பு  உன்னை வேறு இடத்துக்கு அழைத்துப் போகிறேன் என்கிறார். நான் கீழே இறங்க " என்ன ஒன்றுமே விரிக்கவில்லை. இதிலா படுத்திருந்தாய் என்கிறார். அப்போதுதான் பார்த்தால் அது தற்காலிகமாக நோயாளிகளைப் பார்க்குமிடம். வெள்ளைத்தாள்களைத்தான் இழுத்து விரிப்பார்கள். அவர்களும் விரிக்கவில்லை. நானும் அதைக்கவனிக்காமல் தூங்கிவிட்டேன். எத்தனை நோயாளிகள் இதில் வந்து இருந்து, படுத்துச் சென்றார்களோ??? ஆருக்கு கொரோனா இருந்ததோ என்ற எண்ணம் மனதில் ஓடினாலும் அதைப் பற்றி மனம் பெரிதாகக் கவலை கொள்ளாது அவரைப் பின்தொடர்ந்து. இத்தனைக்கும் வின்டர் யக்கற் போட்டபடிதான் எல்லாம். 

  அடுத்த பகுதிக்குள் போனால் அது அறைபோல் இருந்தாலும் நோயாளிகள் தங்கும் நிரந்தர அறையில்லை என்று தெரிகிறது. அங்கே ஒடுக்கமான கட்டில்களைப் போட்டு திரைச் சீலைகள் போட்டு மறைத்திருந்தார்கள். இங்கே இரு. மருத்துவர் வந்து பார்ப்பார் என்றுவிட்டுப் போக எத்தனிக்க, எனக்குச் சரியான தாகமாக இருக்கு குடிக்க ஏதும் தேநீர் அல்லது கோப்பி தருகிறாயா என்கிறேன். எனக்கே அப்படிக் கேட்டது ஒருமாதிரி இருந்தாலும் நான்கு ஐந்து மணிநேரம் எதுவும் குடிக்காமல் இருந்தது மட்டுமன்றி அங்கே குளிரவும் ஆரம்பித்துவிட்டது. தண்ணீர் கொண்டு வரவா என்கிறார் அந்தப் பெண். எனக்கு குளிர்கிறது சூடாக எதுவும் குடித்தால் நல்லது என்கிறேன்.

  சரி என்றுவிட்டுப் போன பெண்ணை அதன்பின் காணவே இல்லை. கட்டிலில் படுத்தால் திரும்பிப் படுக்க முடியாத சிறிய கட்டில். இங்கு சிலவேளை போன் வேலை செய்கிறதா என்று பாப்போம் என்று போனை எடுத்தால் கணவன் பிள்ளைகளிடம் இருந்து பல போன். சத்தம் கேட்காதவாறு நிறுத்திவைத்திருந்தபடியால்  எனக்குக்கேட்கவில்லை. காலை நான்கு மணி. போன் செய்து விபரத்தைக் கூறுகிறேன். எனக்கு மாற்று ஆடைகள் மற்றும் முக்கியமான பொருட்கள் அதைவிட முக்கியமான போன் சார்ஜர் எல்லாம் கொண்டுவரும்படி கூறுகிறேன்.

  மீண்டும் படுத்தாலும் நித்திரையில் கீழே விழுந்துவிடுவேனோ என்ற எண்ண த்தில் தூக்கம் வரவில்லை. முழங்கையில் உள்ளே ஊசி ஒன்றை நிரந்தரமாக ஏற்றிவிட்டிருந்தபடியால் கையையும் வசதியாக வைத்துக்கொள்ள முடியவில்லை. தாதிகள் அங்கும் இங்கும் போய்வந்தாலும் என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. காலை ஆறு மணியாகிவிட வேறு புதிய தாதியர்கள் வந்திருப்பதைக் கவனிக்கிறேன். ஒருவரை மறித்தது எனக்குத் தாமாக இருக்கு தேநீர் ஒன்று தர முடியுமா என்கிறேன் மீண்டும். பொறு உன் பைலைப் பார்க்கிறேன் என்றவர், உனக்கு ஸ்கானிங் இருக்கிறபடியால் நீ எதுவும் உண்ணவோ குடிக்கவோ கூடாது என்றுவிட்டுப் போய்விட மீண்டும் போனை எடுத்தால் மகளின் இலக்கத்திலிருந்து எட்டு போன் அழைப்புகள் வந்திருக்க மீண்டும் அவளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நானும் அப்பாவும் உங்கள் பொருட்களையும் கொண்டு வந்திருந்தோம். அவள் உங்கள் பெயரே அங்கு இல்லை என்கிறாள். ஒருவாறு கதைத்து உங்கள் பாக்கையும் விபரங்களையும் கொடுத்துவிட்டு இப்பதான் வீட்டை வந்தோம் என்கிறாள். 

  சரி என்று போனை வைத்துவிட்டு அங்கே நின்ற தாதியை அழைத்து விபரம் சொல்லிக்கொண்டிருக்க இன்னொரு பெண் எனது பொருட்கள் அடங்கிய பையைக் கொண்டு வருகிறார். இந்தக்கட்டிலில் படுக்க முடியாமல் இருக்கு என்கிறேன். இங்கு கட்டில்கள் எல்லாம் நிரம்பியிருக்கு. அதனால் நடக்கவே ஏலாதவர்களுக்குத்தான் முதலிடம். உனக்கு ஸ்கானிங்க் எல்லாம் முடிந்த பிறகுதான் அதுபற்றிமுடிவு செய்வார்கள் என்றுவிட்டுப் போய்விட நான் தூங்காமல் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்க்கிறேன். 

   

  தொடரும் இன்னும்........

    

  • Like 6
  • Sad 11
 5. 19 minutes ago, Nathamuni said:

  என்ன நடந்தது.... எல்லோரும் ஓகேயா?

  நாம கொஞ்சம், நஞ்ச கவலையா பட்டம் ... வந்தது நின்மதி. கொரோனா காலம் எல்லோ .... அதுதான்

  கொஞ்சம் உயர் இரத்த அழுத்தம். இப்ப ஓகே.

 6. 7 minutes ago, குமாரசாமி said:

  நான் பிறந்ததிலையிருந்தே  தேங்காய் சேர்க்காத சாப்பாடுகளே இல்லை எண்டு சொல்லலாம். இப்ப கொஞ்சக்காலமாய் வீட்டிலை  ஒராளின்ரை மூளையை யூரியூப்பிலை ஆரோ தேங்காய் கூடாதெண்டு கழுவி ஊத்திப்போட்டினம். அதிலையிருந்து நான் தேங்காய் கலந்த சாப்பாடுகளை எட்டி நிண்டு பார்க்கலாமே தவிர சாப்பிடுற நோக்கமே வரப்படாதாம்.🙃

  Bild

  உங்கள் வீட்டுக்காரிக்கு தேங்காய்ப் பாலில் செய்வினை செய்யவேணும் 😃

 7. 1 minute ago, யாயினி said:

  ஏன் நீங்கள் வேலைகள் என்று போகாதனீங்களோ.. அப்புறம் ஏன் வீட்டுக்குள் அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.. குடும்பம் என்றால் அதற்கு என்று ஒரு பழக்க வழக்கங்கள் பண்புகள் இருக்கிறது.. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீங்கள்.

  உங்களுக்கு வெளி உலகம் தெரியவில்லை யாயினி. போக பெண்கள் திருமணமான நாளிலிருந்து புருஷன் பிள்ளை என்று அவர்களுடனேயே வாழ்வு கழிகிறது. ஒரு மாற்றத்துக்காகவும் நண்பிகளுடன் விடுமுறை செல்வது மனதுக்கு மகிழ்வானது. கணவன் பிள்ளைகளுடன் விடுமுறை செல்வது ஒரு வித மகிழ்வென்றால் நண்பிகளுடன் செல்வது இன்னும் மகிழ்வானது. அதற்காக குடும்பம் என்று சொல்லிச் சொல்லி எத்தனைநாள் அவர்களுக்காகவே வாழ்வது?????

  நண்பிகளுடன் விடுமுறையில் சென்றால் எந்தப் பண்பு கெடும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் ???????

 8. நான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே தேங்காய்ப் பால் பவுடர் தான் கறிக்குப் பயன்படுத்துவது. அதைவிட வாரம் மூன்றுநாட்களாவது பிட்டுக்கு தேங்காய்ப்பூ பயன்படுத்துவேன். எனக்கு கொலஸ்ரோல் மனதில் மட்டும்தானேயன்றி உடலில் இல்லை😎 

 9. Just now, குமாரசாமி said:

  அதென்ன சும்மா குடிப்பார்.தண்ணியடி தானே பிறகென்ன...😁

  தண்ணி அடித்தல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது அளவுக்கதிகமான, மூக்குமுட்ட அடிப்பது.  😃

 10. Just now, யாயினி said:

  இப்போ இப்படி ஒரு கூட்டம் வெளிக்கிட்டு இருக்கிறது.. இங்கும் சிலர்..ஒரு குழுவாக கரிபியன் போறது சிங்கப்பூர் மற்றும் யூறோப் ..ஆடு மாடு மாதிரி கட்டாக் காலிகள் மாதிரி விரியத் தொடங்கினால் வீடு வாசல் என்னத்துக்கு.
   

  ஆடு மாடுபோல சுதந்திரமாய்த் திரிந்த மனிதர்களைத்தான் குடும்பம் என்னும் கூட்டுக்குள் அடைத்து வச்சிருக்கினம் உந்த ஆண்கள். ஆண்கள் சேர்ந்து நண்பர்களுடன் போகலாம்.பெண்கள் போனால் தப்பா???? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் ?????

 11. On 31/8/2020 at 17:01, nedukkalapoovan said:

  இப்படியே சும்மா வாயடிச்சிட்டு இருங்கோ. கடைசியில் பிள்ளையும் கவனிக்காது.. உங்கட புறுபுறுப்பு தாங்கேலாது கணவனும் தனிமையை தேடத்தொடங்கிடுவார்.. இல்ல நாய்க் குட்டிகள் வாங்கி விளையாடுவார்.. நீங்கள்.. தனிமையில் வெறுமையில் தவிக்க வேண்டியான்.

  இதையே கணவனுக்கு ஒத்தாசையாக இருந்து.. அவரின் துணையோடு உலகம் சுற்றுவது பற்றி யோசிச்சுப் பாருங்கள்... எவ்வளவு அழகாக இருக்கும். 

   நண்பிகளுடன் கூட உலகம் சுற்றிப்பார்க்கலாம். 😃

 12. 13 hours ago, குமாரசாமி said:

  வணக்கம் சகோதரி! 

  நானும் கனகாலமாய்  நீங்கள் சொன்னதைத்தான் இந்த திரியிலை சொல்லிக்கொண்டு வாறன்.....ஒருத்தரும் கவனத்திலை எடுத்ததாய் தெரியேல்லை...:cool:

  செய்து சாப்பிட்டு பாத்திட்டு சொல்லுங்கோ......வயித்தாலை அடிக்காட்டில் நானும்.......😎

  உப்பிடிப் பயந்துகொண்டிருந்தால் சோறோடையும் கறியோடையும் கடைசிவரை இருக்கவேண்டியதுதான்

  😀😀

  Just now, Nathamuni said:

  சாப்பாடை பத்தி கதைக்கேல்ல.... ஒரு கிலோ சொல்லி இருப்பியல். அரைகிலோ வாங்கி போட்டு.... மிச்சதுக்கு போத்தல் வாங்கியிருப்பார் எண்டு சொல்ல வந்தனான்.

  உந்த இறைச்சி மீன் வாங்க மனுசனை விடுறேல்லை. போக அந்தாள் சனி மாத்திரம் ஒரேயொரு கிளாஸ் சும்மா குடிப்பார்.

 13. 13 hours ago, Nathamuni said:

  உங்களுக்கு தெரியாது.... அத்தான் பெரிய கில்லாடி....  😎

  மிச்ச அரை கிலோ றாலுக்கு, ஒரு போத்திலை மடக்கி இரகசியமாய் கொண்டாந்திருப்பர்... 😁

  பாவம் என்ர மனிசன் கூடுத்தாலும் சாப்பிடத் தெரியாது. 😃

  1 minute ago, Nathamuni said:

  அட, நான் இப்பதானே கவனிச்சன்.... நன்றி அக்கோய்.

  ஒரு மூன்று  நிமிடங்கள் பொரித்துச் செய்யுங்கோ நன்றாக இருக்கும்

 14. 18 hours ago, nige said:

  பார்க்கவே அழகாய் இருக்கு

  நன்றி

  17 hours ago, Nathamuni said:

  றால் ஒரு கிலோ எண்டுறியள். அரை கிலோ மாதிரி தான் தெரியுது.

  எதுக்கும் அத்தாரை கொஞ்சம் விசாரியுங்கோ. பயம் விட்டு போட்டுது போலை கிடக்குது. 

  அந்த மாதிரி இருக்குது. பெயரை இறால் வறுவல் சோறு என்று மாத்துங்கோ

  மாத்தியாச்சு. உப்பிடியெல்லாம் நிறுத்துக் கணக்கு கேட்கப்படாது 😀

  16 hours ago, ரதி said:

  அவ இரண்டாய் பிரித்து செய்திருப்பா🤔

  சீச்சீ அது 1 கிலோதான். நம்புங்கோ 😀

 15. 12 hours ago, உடையார் said:

  சுவைப்பிரியன் வந்து கலாய்க்க முதல்😂

  1) சுமே வீட்டுக்கு இந்த சனி வரனும் அந்த பாத்திரத்தை தூக்கிட்டு வரு, இங்கு தேடிப்பார்த்தேன் அதே மாதிரி காணவில்லை

  2) சுவை வந்து வேற மாதிரி போனல் ஏன் சோயா சோஸை விடனும்?

  உங்கள் செய்முறையைப்பார்க்க நாவுறுகின்றது, இந்த ஞாயிறு இதுதான் செய்யனும்

  இங்கிருந்து வேண்டுமானால் பாத்திரம் இலவசமாக அனுப்பிவைக்கலாம். அனால் பார்சல் செலவு உங்களோடதான்.
  சோய் சோஸ் ஒரு வித்தியாசமான சுவையையும் மணத்தையும் தரும். உங்களுக்குப் பிடிக்காவிட்டால் விடலாம். 😃

  12 hours ago, ஈழப்பிரியன் said:

  எனக்கு பிடித்த உணவு.
  செய்முறைக்கு நன்றி.

  வருகைக்கு நன்றி அண்ணா

 16. 18 hours ago, nedukkalapoovan said:

  சாகும் வரைக்கும் ஆண்களும் தானே வீட்டுக்கு மாடா உழைக்கினம். அவை ஏன் இப்படி சுயநலமாச் சிந்திக்கிறதில்லை.. அப்படின்னு பெண்கள் ஏன் சிந்திக்க மறுக்கினம். 

  உயிரியல் ரீதியிலும் பெண் தான் குழந்தைக்கு.. உணவூட்ட வசதி படைக்கப்பட்டிருக்கு.. ஆணுக்கில்லையே. 😃

  பிள்ளைக்கு உணவூட்டத்தானே. அதைவிட்டு பேரப்பிள்ளைகள் கண்டபின்னும் கணவன், பிள்ளைகளுக்கு ஆலவட்டம் பிடிக்கவேணுமோ???? 

 17. On 27/8/2020 at 16:28, குமாரசாமி said:

  நாலைஞ்சு திரிகளிலை தேங்காய் உடம்புக்கு நல்லது எண்டு நான் மற்ற ஆக்களோடை நிண்டு மல்லுக்கட்டேக்கை நீங்கள் வந்து எனக்கு பக்கபலமாய் நிண்டிருக்கலாமே...🙂

  என்னை தனிய வைச்செல்லே மொங்கு மொங்கெண்டு மொங்கினவையள்tw_glasses:

   

  அடடா எனக்கு தெரியாமல் போச்சே. வேணும் ஏண்டா இன்னொரு திரி திறவுங்கோ. எல்லாரையும் உண்டு இல்லை எண்டு பார்த்திடுவம்.

  On 27/8/2020 at 16:37, சுவைப்பிரியன் said:

  எனக்கு சன்டை என்டால் பீப் பயம்.

  நம்பிட்டம்

 18. 12 hours ago, விசுகு said:

  அது இரும்பு பெண்மணி தட்சரின் வாரிசாக தான் இருக்கும். பஞ்சு மூட்டைகளை கண்டு இரும்பு ஏன் விலத்தணும். (ஏதோ நம்மால முடிஞ்சது 😜)

  இதுக்காகவே கண்டும் காணாமல் உங்களை இடிச்சிட்டுப் போகவேணும் 😀

  11 hours ago, nedukkalapoovan said:

  அதுசரி.. இவா ஏன் இதுகளை.. இதுக்க திணிக்கிறது.. எத்தின மனுசன்மார்ர மனுசிமாரும்.. யாழை வாசிப்பினம் தானே. ஓசில ஐடியாக் கொடுக்கிறது.. பதட்டப்படுறது மனுசன்மாராச்சே. எதுக்கும் உசாராத்தான் இருக்கனும். 😃😃

  சிரிச்சு முடியேல்லை. சாகும் வரையும் பெண்களைக் கொண்டு வேலைவாங்கத்தான் உந்த ஆண்கள் கலியாணம் கட்டுறது.

  On 27/8/2020 at 17:09, goshan_che said:

  அன்ரி,

  வீண் வம்பு ஏன்?

  அவளுக்கு கொரோனா கிரோனா இருந்து உங்க மேல ஒரு இருமல் இருமிவிட்டால்!!!!

   

  அதையும் ஒரு எருமை செய்ததுதான். ஓடிக்கொண்டு இருந்தவன் எனக்கு கிட்ட வந்து தும்மின தும்மில மடையா எண்டு திட்டியும் போட்டன். ஆனா நாலுநாள் வரைக்கும் நெஞ்சிடிதான்.  😀

  • Haha 1
 19. On 27/8/2020 at 16:31, வல்வை சகாறா said:

  கொஞ்சம் இல்லை நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன். எதிராளியை இடிக்கும் வலு சுமேயிடம் இல்லையா? ஆமா நானுந்தான் ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் நடக்கிறேன் ஒரு போதும் யாரும் என்னை இடிப்பதும் இல்லை இடிப்படுவதும் இல்லை அது எப்படி உங்களுக்கு மட்டும் எங்கு போனாலும் இடர்பாடு????  உங்களில் அப்படி என்ன தான் வித்தியாசமாக உள்ளது?

  அறையைப் பூட்டிப்போட்டும் இருந்து  யோசிச்சும் விளங்கவே இல்லை 😎

  On 27/8/2020 at 16:41, நிலாமதி said:

  கையில் உள்ள தண்ணீர் போத்தலில் இருந்து அபிஷேகம்   செய்துவிடுங்கோ   😄

  நான் தண்ணீர் மட்டுமல்ல போனைக் கூடக் கொண்டு போவதில்லை நடக்கும்போது. அப்படியே நின்மதியா நடப்பன்.

  On 27/8/2020 at 17:32, வல்வை சகாறா said:

  சுவியண்ணா உங்கள் கருத்தை வாசித்தபின்னர் கவிமனம் கோணல்மானலாக யோசிக்குது.😁

  சுமே இடித்தவர் ஆணா? அல்லது பெண்ணா? அல்லது பெண்களில் ஆணா? இல்லையென்றால் ஆண்களில் பெண்ணா? இந்த வித்தியாசத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள். ஏன் இடித்தார் என்று சொல்கிறேன்.😎

  பெண்ணேதான் 😃

  On 27/8/2020 at 16:42, சுவைப்பிரியன் said:

  அது சரி இப்ப யார் இதிலை முட(வி)வன்.ஏதோ என்னால் முடிந்தது.

   எனக்கும் அதுதான் சந்தேகம் ????😀

  On 27/8/2020 at 17:36, முதல்வன் said:

  அக்கோய் உங்களைப்பற்றி அவவும் இப்போ இன்னொரு தளத்திலே கதை எழுதி இருப்பாவோ 🤣

  அட அதை யோசிக்காமல் அவசரப்பட்டிட்டனே 🤣

  On 28/8/2020 at 15:52, Sabesh said:

  design அப்பிடி  😉

  😀😀

 20. 22 hours ago, உடையார் said:

  சுமே கில்லாடிதான் 😀 கால்தடம் போடத்தெரியுமா, அடுத்த முறை பாவியுங்கள் 🤣

  "அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை " 🤔🤔🤔

   

  கால்த்தடம் நல்லாய் போடுவன். ஆனா சட்டச்சிக்கல் ஏதும் வந்தாலும் எண்டுதான் ........

  22 hours ago, suvy said:

  நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா, ஒருவேளை கண் தெரியாத பெண்ணாக இருக்கப் போறார்......அதெப்படி வீட்டில் இருந்து வீதி வரை எல்லோருக்கும் உங்களோடுதான் ஒரு தனகல் .....!   😁

  அதுதான் எனக்கும் விளங்கேல்லை அண்ணா

  பச்சைகள் தந்த சுபேஸ், சுவி அண்ணா, குமாரசாமி ஆகியோர்க்கு நன்றி.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.