Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8173
 • Joined

 • Days Won

  37

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. 23 minutes ago, குமாரசாமி said:

  தேங்காய்ப்பால் கனக்க கூடாது எண்டுறாங்கள்.....நீங்கள் என்னடாவெண்டால் டெய்லி தேங்காய்ப்பால் பாவிக்கிறன் எண்டுறீங்கள்.tw_glasses:

  நான் இருப்பது ஆண்டுகளுக்கு மேலாக இதைப் பாவிக்கிறேன் குமாரசாமி. தேங்காய்ப் பாலின் கொழுப்பு உடலுக்கு நல்லது.

  6 minutes ago, சுவைப்பிரியன் said:

  இந்தக் காலத்தில் பெரிய காப்பிரேட்ட கொம்பனிகள் தான் ஆராச்சிகளின் முடிவுகளை தீர்மானிப்பது.எதுக்கும் நாங்களும் அளவோடு இருப்பது நல்லம்.

  எங்கள் ஊரில் தேங்காய்ப் பால் இல்லாத கறி  உண்டா ?? உப்பிடிப் பயந்து பயந்து ஆசைப்படத்தைச் சாப்பிடாமல்ப் பிறகு ஆவியா சாப்பாட்டுக்கு அலையக் கூடாது 😂

 2. 7 hours ago, ஈழப்பிரியன் said:

  செய்முறைக்கு நன்றி.

  சுமே தேங்காய்பால் பவுடர் என்று போடுகிறீர்களே இதுவரை பார்த்ததில்லை.இது உண்மையான பால் மாதிரி இருக்குமா?

  இங்கு தகரத்தில் அடைத்து வருவதையே பலரும் பாவிக்கிறார்கள்.
  நாங்கள் தேங்காய் வாங்கி துருவி அடித்து தான் போடுவது.
  முடிந்தால் பைக்கற்ரின் படம் ஒன்று போட்டுவிடவும்.
  ஏப்ரல் 25 இல் நாதம் எழுதியதைப் பார்த்தால் காணொளியில் என்ன தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டறியலாம்.

  கடைகளில் coconut மில்க் பவுடர் என்று விக்குதண்ணா. கிடடததடட ஒவ்வொருநாளும் பயன்படுத்துவேன். அப்பத்துக்குக்கூட இதைத்தான் நான் கரைத்து எடுப்பது.

  Image may contain: text that says 'Special Offer £6.49 REAL REAL POWDER COCONUT லிம T'

  • Thanks 1
 3. 7 hours ago, உடையார் said:

  வடகறியை உல்டா செய்து ஒரு கறி செய்துவீட்டீர்கள்😀; நன்றி பகிர்வுக்கு. ஒருக்கா செய்து பார்ப்போம்

  நான் இரண்டு மூன்று விதங்களில் செய்து பார்த்து வீட்டில் பெரிதாக ஓடவில்லை. இது உடனேயே முடிந்துவிட்டது. அதனாலதான் போட்டிருக்கிறன். எதையும் உல்டா செய்யவில்லை.😃

 4. Image may contain: tree, plant, sky, shoes, grass, outdoor and nature

   

  என் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் சென்றால் அந்தப் பெருவெளி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை  பரந்து விரிந்திருந்தது. அந்த வெளியின் நடுவே புற்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் சுற்றிவர பெரு மரங்கள் கிளைபரப்பி கோடையில் இலைகள் நிறைந்துபோய் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி.

  காலையில் நடப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விரும்பியோ விரும்பாமலோ செய்யவேண்டிய ஒரு கடனாக மாறியிருந்தது. எனக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதும் சரிவராது. ஏனெனில் எப்படியும் இருவர் அமைதியாக நடக்கவே முடியாது. ஏதாவது ஒரு கதையில் ஆரம்பித்து மற்றொன்றில் தாவித் தொடரும்.  நான் இரு கைகளையும் அரைவாசி தூக்கியபடி விசுக் விசுக்கென நடக்கத் தொடங்கி  இருப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும்.

  எப்போதுமே மற்றவர்களுக்காக பலதையும் விட்டுக்கொடுக்காத என் மனம் இதற்கும் இசைவதில்லை. அதனால் காலை ஆறுமணிக்கே எழுந்து தனியாகச் சென்று நடக்கவாரம்பித்துவிடுவேன். அநேகமாக அந்த நேரம் ஒரு இரண்டு மூன்றுபேர் தான் தூரத்தில் நடந்துகொண்டிருப்பார்கள். அது மனதுக்கு ஒரு துணிவையும் கொடுக்கும். மழைக்காலங்களில் சோம்பலில் வழிந்தபடி படுத்துக்கிடப்பதையே பலரும் விரும்புவதால் நானும் சிலநேரம் கடமை தவறாது  எழுப்பும் மணிக்கூட்டை நிறுத்திவிட்டுப் படுத்தாலும் என்கணவர் எழும்பு என்று அரியண்டப்படுத்தியே எழுப்பிவிடுவார்.

  அவர் ஒண்டும் என்னில உள்ள கரிசனையால் என்னை எழுப்புவதில்லை. நான் ஆறுக்கு எழும்பி அவருக்கு வேலைக்குச் சாப்பாடு கட்டிவைத்து, பாலைக் காய்ச்சி தண்ணி எதுவும் கலக்காமல் கோப்பி போட்டு வைத்துவிட்டு நடையைக் கட்டுவேன். முன்னர் எல்லாம் ஒருசில நாட்கள் நான் எழும்பாது விட்டால் மனிசன் தானாகத் தேநீரைப் போட்டுக் குடிக்காமல் போயிடுவார். அன்று முழுதும் எனக்கு எதோ குற்ற உணர்வாகவே இருக்கும். ஆனா இப்ப அதை எல்லாம் கடந்து வந்தாச்சு. எனக்கு காலையில் படுக்கவேணும் போல இருந்தால் யாரையும் பற்றிக் கவலை கொள்ளாமல் படுக்க முடிகிறது. நானும் மனிசிதானே. நெடுக எல்லாருக்கும் வேலை செய்துகொண்டு இருக்க ஏலுமே. சரி சொல்லவந்த விசயத்துக்கு வாறன்.

  கொரோனாக் காலத்தில ஆறு மணிக்கு எழும்பிப் போனால்த்தான் குறைவான ஆட்கள் நடந்துகொண்டிருப்பினம். ஒரு ஏழு மணிக்குப் போனால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று எக்கச்சக்கமான சனம். என்னடா இது என்று அடுத்தநாள் முகக் கவசம் அணிந்துகொண்டு போனால் என் வேக நடைக்கு முகக்கவசம் நனைந்து மூச்சும் அடைப்பதுபோல் இருக்க, அடுத்த நாளில் இருந்து ஆறுமணிக்கே எழுந்து நடப்பது. இல்லையென்றால் படுத்தே இருப்பது என்றாகிவிட மனிசனின் புறுபுறுப்பு அதைவிட அதிகமாகிப் போனது. வேலைவெட்டியும் இல்லை. உள்ள சாப்பாடெல்லாம் செய்து யூடியூப்பில் போடுறன் எண்டு சாப்பிட்டுத் தள்ளுறாய். உடம்பு வைக்கப் போகுது எழும்பு எழும்பு என்று ...... அந்தக் குத்தல் கதையைக் கேட்பதிலும் எழும்பி நடக்கிறதே மேல் என்று நடக்கப் போக புதிதாக எனக்கொரு பிரச்சனை அங்கேயும்.

  கூடுதலாக அங்கே நடப்பவர்கள் இடதுபக்கமாகவே நடந்து போக ஒரு சிலர்தான் எதிர்ப்பக்கமாக வருவினம். நான் யாரும் இடப் பக்கமாகத் தூரத்தில் வருவது தெரிந்தால் வலப்பக்கமாக மாறி நடக்கத் தொடங்குவன். என் கண்கள் பார்க்கின் தூரத்தை மனதால் அளந்து அவர்கள் அதிக தூரம் என்றால் நான் மாறி நடப்பன். நான் அதிக தூரம் நடந்திருந்தால் அதே பக்கமாக எள்ளளவும் நகராமல் நடந்துகொண்டிருப்பன். வாறவை என்னை விலத்தி நடக்க வேண்டியதுதான். அவள் ஒருத்தி இப்ப புதிதாக நடக்கவாரம்பித்து நான் போகும் நேரத்துக்கு வருவதுமில்லாமல் நான் நடக்கும் இடப்பக்கமாகவே எதிர்ப்புறம் நடந்து வருகிறாள்.

  ஒருநாள் இரு நாட்கள் புதியவள் என்பதனால் விட்டுக்கொடுத்து நான் விலகி நடந்தால் அவவுக்கு தான்பெரிய மகாராணி எண்ட நினைப்பு. தொடர்ந்து ஒரு வாரமா அந்தப் பக்கமிந்தப்பக்கம் போகாமல் அதே நடை.  நானும் எத்தனை நாள் தான் பொறுமையாய் நடப்பது ? இண்டைக்கு இவவை ஒருகை பார்ப்பதாக மனதில் எண்ணிக்கொண்டு குனிந்ததலை நிமிராமல் நடந்துகொண்டிருக்க, எனக்கு முன்னாள் அவள் வருவதை என் கண்கள் கண்டுகொண்டவுடன் அவள் என்னை இடித்துவிட்டுச் சென்ற இடியில் என் தேசம் குலுங்கிப் போக மனதில் கோபம் கோபுரம்கட்ட ஆரம்பிச்சிட்டுது.

  இரண்டாவது சுற்று நடக்கும்போதும் பார்த்தால் நான் அதே பக்கமாக அதிக தூரம் நடந்திருக்க இடையில் இருந்த சிறிய நடை பாதையில் வந்து நான் நான் நடந்துவந்துகொண்டிருந்த பாதையில் ஏறியவளுக்கு நான் நடந்துகொண்டிருப்பது தெரிந்ததுதானே இருக்கவேணும். ஆனால் அவவோ எதுவும் தெரியாததுபோல் நடந்து வர, நானும் மற்றப்பக்கம் மாறி நடக்காமல் தொடர்ந்து நடக்க இன்னும் ஒரு மூன்று மீற்றர் தூரம்தான் இருக்கு அவளுக்கும் எனக்கும். என் மனம் இம்முறை விட்டுக்கொடுக்க முடியவே முடியாது எண்டு அடம்பிடிக்க, அவள் இம் முறையும் இடித்துக்கொண்டு போனால் அவமானம்போக அவளை இடிக்கும் அளவு எனக்கும் வலுவில்லை என்பது அவள் முதல் சுற்றில் இடித்த அனுபவம் சொல்ல, மனம் ஒரு செக்கனில் முடிவெடுக்க நான் களராத காலனியின் நூலைக் கட்டுவதற்காய் குனிய அவள் வேறு வழியேயின்றி என்னை விலத்திக்கொண்டு மற்றப்பக்கமாகப் போக, மனதில் ஒரு நின்மதியும் மகிழ்வும் ஏற்பட அந்தப் பெருவெளியின் மரங்களினூடே கைவீசி முகம் கொள்ளாச் சிரிப்புடன் நடக்கிறேன் நான் .

  • Like 4
  • Haha 5
 5. எப்படியான உள்ளாடைகளை அணிவது ஆரோக்கியமானது  என்று தலைப்புப்போடாது நல்லதொரு விடயத்தை நகைச்சுவைப் பதிவாக்கிவிட்ட நுணாவுக்கு கண்டனங்கள் 🙁


   

 6. On 22/8/2020 at 23:50, குமாரசாமி said:

  செய்து காட்டினதுக்கு நன்றி.
  பிளேன்ரீக்கு சரிவருமோ இல்லாட்டி பியருக்கு?????

  இரண்டுக்கும் நல்லா ஒத்துப்போகும் 😎

  On 23/8/2020 at 06:56, உடையார் said:

  செய்முறைக்கு நன்றி சுமே, ஒருமுறை செய்து சொதப்பிவிட்டேன்😂, பிறகு மனைவிதான் செய்வது வழக்கம். உங்கள் செய்முறையில் ஒருக்கா செய்து காட்டி அசத்தனும் 

  இலகுதான். அசத்துங்கோ. பிழைத்தால் அடுப்பை நிப்பாட்டிப்போட்டு zoom இலை வந்தால் சொல்லித்தருவன்.

  😂  😂

  On 23/8/2020 at 07:22, ஈழப்பிரியன் said:

  நாதம் சுமேயின் காணொளியில் ஏன் விளம்பரம் வருவதில்லை?
  அவவைக் கேட்டா தெரியலை என்கிறா?
  விளம்பரம் இல்லாமல் துட்டு வருமா?

  நாதம் இதி மட்டும் பாக்கார் 😃

  பச்சைகள் தந்த ரதி, சுவி அண்ணா, சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.

 7. On 21/8/2020 at 17:44, Nathamuni said:

  எல்லோரும் ஒரே குளிசை தான் போலை...கம்பவண்டர் அம்மா!

  நானும் துவரம் பருப்பு அவித்து வைச்ச கறி கேடடன்...

  இதே குளிசை தான். 😎

  எங்கள் வீட்டில் துவாம்பருப்புக் கறி யாரும் உண்பதில்லை. செய்து இரண்டு வாரங்கள் ஆச்சுத்தானே. மீண்டும் செய்கிறேன்.

 8. 4 hours ago, குமாரசாமி said:

  அவிங்க அங்கை பேஸ்புக்கிலை வலு பிசி....😎
  இஞ்சை லைக்கும் போடமாட்டியள்.கருத்தும் சொல்ல மாட்டியள்.அங்கை பேஸ்புக்கிலை சும்மா ஒரு பூவை வைச்சிட்டு வணக்கம் சொன்னாலே நூறு லைக் விழும்.அதை விட எக்கச்சக்கமான கொமன்ட்டும் வரும்.

  இஞ்சை யாழ்களத்திலை ஒரு மரியாதைக்கு வணக்கம் சொன்னாலே உன்னை நான் கேட்டனானோ எண்டு இப்பிடி ஒரு மாதிரித்தான் பாப்பினம்.🙃

  Gritty Witty Crew - Thread 8 # CLOSED New Thread Link Page 1(Page 68)

  சீச்சீ இங்கேயும் பாக்கினைதான் ஆனா வீடியோவைப் பாக்கினமில்லை. நாங்கள் என்ன எழுதறம் எண்டுதான் பாக்கினை😁

 9. On 20/8/2020 at 04:34, உடையார் said:

  என்ன படத்தை மாற்றிவிட்டீர்கள், முதல் யாழ்பாண படம் , இப்ப லண்டன் படம்👍,

  செய்முறை சுலபமாக, இருக்கு செய்து பார்க்கனும் இந்த ஞாயிறு

  ஏன் இந்தப்படம் நல்லாயல்லையா????😄

  On 20/8/2020 at 09:03, ரதி said:

  கரட்டோடு சேர்த்து லீக்ஸ்சும் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் 

  விருப்பமானது எது இருக்கோ போடலாம்

  On 20/8/2020 at 11:02, குமாரசாமி said:

   

  சோத்துக்கு மேலை ஒரு அவிச்ச கோழி முட்டையை வைச்சால் வடிவாய் இருக்கும்.:cool:

  அடுத்ததடவை வச்சிட்டாப் போச்சு

  23 hours ago, ஈழப்பிரியன் said:

  சுமே பிடிக் கொழுக்கட்டை செய்ய தெரிந்தால் ஒரு இணைப்பு போடவும்.
   

  செய்திட்டாப் போச்சு

  6 hours ago, சுவைப்பிரியன் said:

   

  சின்ன வெங்காயம் மெல்லிதாய் நறுக்கி போட்டால் இன்னும் நல்லாய் இருக்கும்.😛

  தோட்டத்தில விளைந்தது பெரிசுதான்😀

 10. 6 hours ago, யாயினி said:

  அக்கா கொஞ்சம் வித்தியாசமாக சமையுங்கள்..ஒரே மச்சம் அதுவும் கிட்டத் தட்ட ஒரே எல்லோருக்கும் தெரிந்த செய்முறைகள் தானே..தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..

  ஒரு நாளைக்கு இலகுவாக செய்யக் கூடிய காலை உணவு மற்ற நாளைக்கு  மதியம்  மற்றும இரவு உணவு என்று சற்று மாறுதல் பட்டால் நன்றாக இருக்கும்..மந்நப்படி உங்கள் விருப்பம்..

  நன்றி யாயினி. கருத்தில் எடுக்கிறேன்.

 11. அமேரிக்கா கனடா எல்லாம் மூன்று மாதங்கள் கடும் வெய்யில். எல்லாப் பயிர்களும் நன்கு விளைக்கின்றன. லண்டனில் இரண்டும் கெட்டான்  நிலை. 

 12. 23 hours ago, குமாரசாமி said:

  அப்பிடியில்லை..😁
  இவங்கடை சாப்பாடு,மரக்கறியளையும் வைச்சு கொஞ்சம் வித்தியாசமாய்  செய்தால் நல்லாயிருக்கும்.முதல் 2,3 சாப்பாடுகள் செய்தனீங்கள்.பிறகு கையை விட்டுட்டியள்.
  உதாரணத்துக்கு இந்த இரண்டு மரக்கறியை பாருங்கோ..சலாட்டும் போடலாம்,சமைக்கவும் நல்லது.விலையும் பெரிசாய் இல்லை. செய்ய நேரமும் கனக்க தேவையில்லை.உடம்புக்கு தேவையான சத்துக்களும் நிறைய இருக்கு.எங்கடை சனத்துக்கு வித்தியாசமாயும் இருக்குமெல்லோ.:cool:

  Letzebuerger Geméis Gemüse Staudensellerie | Letzshop

  Frische Kohlrabi aus Deutschland online bestellen | bei freshoado ...

   

  பெரிசாய் லைக் விழவில்லை எண்டுதான் புதியவற்றைப் போடாமல் விட்டேன். இனிமேல் போடுகிறேன்.

  16 hours ago, உடையார் said:

  நன்றி பகிர்வுக்கு, எனக்கு பிடித்த கடல் உணவு, ஊரில் பெடியளா பண்ணாடையில் சுட்டு சாப்பிடுவோம், நல்ல சுவை

  பனையோலையிலா பன்னாடையிலா ???

 13. 7 hours ago, குமாரசாமி said:

  சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கையே நிக்கிறியள் புதிசாய் ஏதாவது சமைச்சு காட்டுங்கோவன்.😁

  எல்லாம் தெரிஞ்சவையோட உதுதான் பிரச்சனை 😀

  நன்றி யாயினி, நிலா அக்கா

 14. 21 hours ago, பெருமாள் said:

  வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

  இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

  அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

  எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

 15. 16 hours ago, உடையார் said:

  எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

   தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

  அதுவரை காத்திருக்க வேண்டும், 😢

  நன்றி செய்முறைக்கு👍

  நானும் இரண்டு மாதங்கள் தேடி பின்னர் கடந்தவாரம் தான் வந்தது.

  15 hours ago, ஈழப்பிரியன் said:

  எனக்கும் மிகவும் பிடித்த சிற்றுணவு.
  செய்முறைக்கு நன்றி.

  சுமே ஏன் உங்கள் காணொளிகளில் விளம்பரங்கள் இல்லை.

  அப்படி என்றால் வருமானம் வராதே?

  அல்லது எங்காவது தவறு செய்கிறீர்களா?

  எனக்கு அதுபற்றித் தெரியவில்லை. நாதமுனி வரட்டும்.

  15 hours ago, suvy said:

  காரட் களி  கிடைக்குமே அதில் இப்படி செய்து பாருங்கள்......எனக்கும் பனங்களி கிடைப்பதில்லை அதனால் இப்படி செய்வதுண்டு. நல்லா இருக்கும். என்ன பெயரை மட்டும் காரட் பணியாரம் என்று வைக்க வேண்டும்..... "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை".......!  👍

  பாரீஸ் வரும் நேரங்களில் வாங்கலாமே அண்ணா

  13 hours ago, உடையார் said:

  காரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍

  கிடைக்காவிட்டாலும் நாமே அரைத்துக்கொள்ள வேண்டியதுதானே

 16. 11 minutes ago, nedukkalapoovan said:

  A-levels and GCSEs: Free exam appeals for schools in England

  https://www.bbc.co.uk/news/uk-53787938

   

  ஏதோ பரீட்சை வைச்சால் வெட்டி விழுத்தி இருப்பம் என்று கண்ணீர் வடிப்பவர்களுக்காக... அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருக்குது..

  சும்மா கப் இயர் எடுத்து வீணே காலத்தை கழிக்காமல்.. அடுத்த முறை தேர்வு எழுதலாம்.. அல்லது இடைக்கால தேர்வை நடத்தலாம்..  அப்ப தான் ஓவரா ரியாக்ட் பண்ணுற கொஞ்சப் பேரை கட்டுப்படுத்த முடியும்.

  வெள்ளை என்டாப் போல.. திங்கள் முதல் புதன் வரை லண்டனில் சாப்பாட்டுக்கடைக்கு குடும்பத்தோடு போகும் லண்டன் வாசிகள்.. அடுத்த 4 தினங்களும் கடைகளை காய வைச்சு விடுகிறார்கள்.

  அதிலும் நம்மவர்கள்... பிள்ளை குட்டிகளையும் இழுத்துக்கிட்டு.. சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கிட்டு வேற கிளம்புதுகளாம். ஐயோ.. கொரானாவும் அதுவுமா சனத்தினர அலப்பறை தாங்க முடியல்ல. 

  எங்க போனாலும்.. அதே லோனில.. தான் படிக்கனும். ஏதோ உங்கட சொந்தச் செலவில படிக்கிற கணக்கா...  எனி கொரானாவும் அதுவுமா வீட்டில் இருந்துதான் படிக்க வேண்டி வரும் போல கிடக்குது. இதில....................

  என் பிள்ளைகள் எப்பவோ யூனி போயாச்சு. 😎

  எதோ நீங்கள் மட்டும் உங்கட காசில படிச்சமாதிரி😀

  Masters Degree எங்கட காசிலதான் செய்தது 😀

   
  5 minutes ago, கிருபன் said:

  அப்படி இல்லை. தெற்கு லண்டனில் மிகவும் பிரபலமான கிரமர் ஸ்கூலில் 18 பேருக்கு மெடிசின் படிக்க offer இருந்தும் 4 பேருக்குத்தான் கிடைத்துள்ளதாம். Chemistry A* எடுக்கவேண்டும் சில பல்கலைக்கழகங்கள் நிபந்தனை விதித்தபோது ரிசல்ற் A ஆக வந்ததால் offer ஐ withdraw செய்துவிட்டார்களாம்.

  அதுபோல Oxbridge க்கும் பலர் போகக்கூடி இருந்தும் போகமுடியவில்லை என்று எனது நண்பனின் மகன் சொன்னார் (அவர் Cambridge இல் Natural Science படிக்கவுள்ளார்)

  இன்று, நாளை என்று ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 

  உந்த விபரம் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிய நான்குபேர் கேம்பிரிட்ஜ் இல் மெடிசினுக்கு இடம் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.

 17. 2 minutes ago, ரதி said:

  ஓ மை கோட் ஆசையை தூண்டி விட்டீர்கள்...ஏன் பச்சை மா போட கூடாதா ?....இந்த பிராண்ட் நல்லதா ?...நன்றி  
   

  பச்சை மா போட்டால்  நல்லா வராது. அது இலங்கையில் உடன் பனங்கழிக்கு நன்றாக இருக்கும்.

  இந்த பிராண்ட் பரவாயில்லை. ஆனால் வேறொரு யூஸ் போத்தல் மாதிரி ஒன்றிலும் இருந்தது. ஆனால் நான் அதை வாங்குவதில்லை.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.