Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8,117
 • Joined

 • Days Won

  36

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. 3 hours ago, உடையார் said:

  நீங்க வடிவாக கவனிக்கவில்லை அல்லது கருத்தை வாசிக்க வில்லை🤔  

  இவை கோழிகறியின் சுவையிலிருக்கு அதுதான் Vege Soya Chicken👍 ; இவை நீங்கள் சமைத்த Soya Chunks அல்ல

  இதேபோல் இறால், மீன் சுவையுள்ள சோயாக்களுமிருக்கு

   

  சிங்கபூர் போனால் பாருங்கள் சோயாவுக்கு என்று ஒரு தனிக்கடையே இருக்கு;

  விதம் விதமாக செய்து வைத்திருப்பார்கள் ,  நல்ல சத்துள்ள உணவு👍. இந்த Soya Chunks விட்டுவிட்டு, இதை வாங்கி சமைத்துபாருங்கள், பிறகு தெரியும் இதன் சுவை

   நான் வாங்கியதில் soya Nuggets என்று போட்டிருக்கு

  சிங்கப்பூரில் விதவிதமான கடலுணவுகள், மற்ற உணவுகள் இருக்க அதைவிட்டிட்டு சோயாவைத்  தேடிப் போவினமே 😃

  3 hours ago, suvy said:

  எனக்கும் வீட்டில இந்த சோயாவில் குழம்பும் பொரியலும் இருந்தால் எனக்கு வடிவாதெரியும் இண்டைக்கு மனிசி தனக்கும் பிள்ளைகளுக்கும் தனியாக சிக்கன், மட்டன் வகை வகையாய் செய்து விழுங்கப் போகினம் என்று......!   😢

   நீங்கள் பாவம் தான் அதுக்காக நாங்கள் பட்டினி கிடக்கேலுமே அண்ணா. நல்ல அநியாயம் உது.

  😃🤣

 2. 4 hours ago, உடையார் said:

  இலகுவான செய்முறை, Vegetarian Soya  சிக்கன் வாங்குவதில்லையா? நல்ல சுவை கறிமாதிரி வைத்து சாப்பிட

  VMAS Vegetarian Soya Chicken 500g from Buy Asian Food 4U

  எங்கள் வீட்டில் சோயாவை யாரும் ஆதரிப்பதில்லை. என் முகநூல் உறவு ஒருவர் சோயாவில் கறிதான் வைக்கத்  தெரியும். வேறு ஏதும் செய்து போடுங்கள் என்கிறார். அவருக்காக கடையில் சோயா வாங்கியது. சோயா என்றால் சோயா தானே? அதில் என்ன veg /non veg???? புரியவில்லை.

  நான் அந்த வடிவத்தைப் பார்த்து வாங்கியது.

  🤣😂

 3. 10 hours ago, விசுகு said:

  உங்களது கருத்தோடு முரண்பாடு இல்லை ஆனால் நாம் குற்றங்கள் சார்ந்து கேள்விகளை எழுப்புவதில்லை. அதேநேரத்தில் இதன் அடுத்த பரிமானங்களுக்கு சென்றுவிட்ட வெள்ளைகளுடன் எம்மை ஒப்பிட தயங்குவதில்லை???

  நீங்கள் சொல்வது சரிதான்

 4. 37 minutes ago, பையன்26 said:

  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை சும்மா சீண்டுவ‌தில் ஒரு சுக‌ம் என‌க்கு தாயே ,

  அவ‌ர‌ எப்ப‌டி தான் ந‌க்க‌ல் அடித்தாலும் கோவ‌ப் ப‌ட‌ மாட்டார் , நாங்க‌ள் ஒரு கோட்டில் ஒன்னா ப‌யணிக்கிறோம் 😁😀 ,

  நீங்க‌ளும் எங்க‌ள் குருப்பில் இணைய‌ விரும்பினால் , எங்க‌ள் ச‌ங்க‌ த‌லைவ‌ர் ( குசா தாத்தா முன் உறுதிமொழி எடுக்க‌னும் லொல் 😁😀

  நீங்களும் வேண்டாம் உங்கட சங்கமும் வேண்டாம். ஆளை விடுங்கோ.😎

 5. On 29/7/2020 at 19:01, suvy said:

  உங்களது நேர்காணல் சிறப்பாக இருந்தது.....பாராட்டுக்கள் சகோதரி......!

  கேள்வி (😎 : பொன்னியின் செல்வன் நாவல் அரசியல் சாராத இலக்கியமா?.

  பொன்னியின் செல்வன் அக்காலத்து அரசவாழ்வு, போர் என்பவற்றினூடாக அழகாக நகர்த்தப்பட்ட ஒரு சிறந்த பெருங்கதை. எமக்குத் தெரியாத, எம் கண்முன் நடைபெறாத,  ஒரு விடயத்தை, ஒரு வாழ்வியலை, தன் எழுத்தாற்றல் மூலம் எம்முன்னே கொண்டுவந்த கல்கி அவர்களின் சிறந்த படைப்பது. ஆனாலும் அதை அரசியல் சார்ந்த இலக்கியம் எனக் கொள்ள முடியாது.

   

  --- இந்தப் பதிலில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு......!

  அமரர் கல்கியின் "பொன்னியின்செல்வன்" முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த சரித்திர நாவலாகும். அதில் கற்பனை என்பது மிகச் சொற்பமே. அதில் வரும்  முக்கிய பாத்திரங்கள் எல்லோரும்  நிஜமாக வாழ்ந்து மறைந்த அரசர்களே.....!

  ---- பேரரசர்  சுந்தரசோழன் ..... அவரின் குமாரர்கள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன் (பின்னாளில் இராஜஇராஜசோழன் ), மகள் இளவரசி குந்தவை, அவள் கணவன் வாணர்குல வீரன் வந்தியத்தேவன்.... செம்பியன்மாதேவி , சேந்தன் அமுதன் என்னும் மதுராந்தகன், வானதி , பாண்டிய உளவாளி ரவிதாசன், நந்தினி, பழுவேட்டரையர்கள், சம்புவரையர்......என்று பலர் நிஜமானவர்களே.....!

  --- நாவலை தொய்வில்லாமல் நகர்த்தவும் சுவை கூட்டவும் ஓரிரு  பாத்திரங்கள் உதாரணமாக ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, ராக்காயி போன்றவர்கள் கற்பனை பாத்திரங்களாக இருக்கலாம்.....!

  --- எம் கண்முன் நடைபெறாத என்று சொல்லும்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன், பண்டாரவன்னியன், சங்கிலியன், எல்லாளன் போன்றவர்களின் காலங்களும்தான் எமக்குத் தெரியாது. அதற்காக இல்லையென்று ஆகிவிடாதே.....!

  நான் இதை எழுதும்முன் நிறைய யோசித்தேன். நீங்களும் முடிந்தால் மேலோட்டமாகவாவது  "பொன்னியின்செல்வனை"படித்து பார்க்கவும். நீங்கள் சமூகத்தில் அறியப்பட்ட எழுத்தாளர்.தவறான தகவல்களைத் தரக்கூடாது என்றுதான்......!

  இந்தக் கதையை வாசித்த கனபேர் களத்தில் இருப்பீர்கள், உங்கள் கருத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும்......! 

   

  அண்ணா உங்கள் புரிதல் தவறானது. இந்தப் பொன்னியின் செல்வன் வரலாற்றில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை வைத்து மிகச் சொற்பமான உண்மையான தகவல்களை வாசிப்பினூடாகப் பெற்றுக்கொண்டு கல்கி அவர்களால் தமிழரின் எழுச்சிமிக்க காலத்தை புனைவுகளினூடாகக் கண்முன்  கொண்டுவந்த ஒரு வரலாறு சார்ந்த படைப்பேயன்றி அது அரசியல் சார்ந்த நாவலே அல்ல.

  அரசியல் சார்ந்த என்னும்போது எழுதப்படும் ஒரு நாவலோ கட்டுரையோ கவிதையோ அக்கால அரசியலிலோ, மக்களிடையேயோ ஒரு தாக்கத்தை, அல்லது பிரதிபலிப்பை ஏற்படுத்த வேண்டும். கடந்த 2009 வரையான ஈழத்து இலக்கியங்களை வேண்டுமானால் அரசியல் சார்ந்தது எனக் கொள்ளலாம்.

  சாண்டில்யன், அகிலன் இன்னும் பலர்கூட கல்கியைப் போன்று வரலாற்று நாவல்களை எழுதியுள்ளனர் 

 6. On 2/7/2020 at 22:07, MEERA said:

  பிரித்தானியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இவ்வாறான பொருட்கள் பெரும்பாலும் port health இனால் பரிசோதனை செய்யப்பட்டே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

  யேர்மனியில் தம்பி வீட்டில் ஒருமுறை சமையலுக்கு மஞ்சள் போடஎடுத்தால் நிறமே ஒரு மாதிரியாக இருந்தது. கறிக்கு எவ்வளவு போட்டும் நிறம் நன்றாக வரவில்லை. நிதிசயமாக அது கலப்படம்தான். ஆனால் லண்டனில் நல்ல மஞ்சள் தான் வருகிறது. நான் இலங்கை போனபோது மஞ்சள் கூட அங்கு தான் அரைத்துக்கொண்டு வந்தேன். கலப்படம் அற்ற மஞ்சளில் ஒரு வாசம் இருக்கும்.

 7. On 23/7/2020 at 21:34, பையன்26 said:

  என்ன‌ இங்கால‌ த‌மிழ்பொக்கிஸ்ச‌த்தின் ச‌த்த‌த‌ காணும் , பொக்கிஸ்ச‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை விட்டுட்டு ஓடி விட்டாரோ 😁😀

  அண்ணாவை நின்மதியா இருக்க விடமாட்டியள் 😃

 8. 7 hours ago, விசுகு said:

  உங்களது கேள்வி நியாயமானதே?

  இதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்வதும்

  குற்றத்துக்கு இத்துடன் மூட்டை  கட்டியாச்சு என்பதும் தீர்வைத்தராது

  இதற்கு மனநிலை  மற்றும் வக்கிரமான  சிந்தனைகள் என நாம்  முடிவுக்கு  வந்தாலும்

  எமது  இறுக்கமான  வாழ்க்கை  முறையும்

  வயதாக  வயதாக ஒரு  தரப்பினரின்  ஈடுபாடின்மையும்

  அதற்கான  மாற்றுவழிகள்  அடைக்கப்படுதலும் கூட  காரணம் தான்.

  நான் பல  முதிய தம்பதியினரிடம்  இந்த இழுபாடும்

  அதனால்  எழும் சந்தேகங்களையும் கண்டிருக்கின்றேன்

  மனைவியோ கணவனோ இறந்து  விட்டால் கூட

  எம்மவரிடம் மாற்று  சிந்தனைகள் இது  சார்ந்து துளி  கூட இல்லையே???

   

  வயது ஆக ஆக இரு பாலாருக்குமே ஒரு அமைதி, தெளிவு, புரிந்துணர்வு, புலனடக்கம் என்பது வரவேண்டுமே அண்ணா. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மனைவியால் முடியவில்லை என்றால் அவர் வேறு வழிகளை நாடத்தான் வேண்டும் என்கிறீர்களா. அதைக்கூட விட்டுவிடலாம். ஆனால் உறவுமுறை, வயது,குடும்பம் சமூகம்   என்பவற்றைத்தாண்டி ஒரு ஆணுக்கு தன இச்சைகளை அடக்கவே முடியாதா????
  நான் எழுதிய கதையில் வரும் வக்கிரம் பிடித்தவர்களுக்கு கடுமையான தண்டனை ஒன்றுதான் வழி.

  • Thanks 1
 9. 7 hours ago, யாயினி said:

  அக்கா இவற்றை படித்ததும் மொழி பெயர்ப்பு பணியில் கூட நாட்டமில்லாது வருகிறது.... எனக்கு மிகவும் பிடித்தது ஆனால் , அண்மையில் அறிந்து கொண்ட விடையம் எங்கள் நாட்டுப் மக்கள் பொதுவாக பெண்கள் குடும்ப வன்முறைகள் காரணமாக(செல்ரர்கள்) இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காவும் பணி செய்ய நேரும் என்றும் அறியக் கூடியதாக இருக்கிறது..இப்போ எழுவது போல் சுதந்திரம் இல்லாமல் போய் விடும்...

  இவற்றை எல்லாம் எதிர்கொள்ளத் நாம் பழகிக்கொள்ளத்தான் வேண்டும். பெண்களுக்கு முக்கியமாக விழிப்புணர்வுதான் வேண்டும்.

 10. 4 hours ago, Eppothum Thamizhan said:

  இவர் போன்றவர்கள் கொல்லப்பட  வேண்டியவர்களே. கதிரையால் அடித்து அல்ல, கத்தியால் அறுத்து!😡

  சரி சரி கோபத்தைக் குறையுங்கோ

  • Like 1
 11. https://akkinikkunchu.com/?p=121613

  அக்கினிக்குஞ்சு இணையத்தில் என் நேர்காணலுக்காக லிங்க் வேலை செய்யவில்லை என்று கேட்டால் வேறொரு லிங்கில் இப்ப போட்டிருக்கு என்கின்றனர். என்ன நடக்குது என்றே புரியவில்லை. யாழ்களம் யாழ்களம் தான்.

 12. 3 hours ago, colomban said:

  கதையை வாசித்த‌போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

  இதேபோல் ஒருசம்பவத்தை நான் சில வருட‌ங்களுக்கு முன் இலங்கையில் நடந்ததாக கேள்விப்ப்டேன் . 

  இத்தகைய pedophilia காடையர்க‌ கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.

  அந்தப் பெண் தன் மாமனைக் கதிரையால்  அடித்தே கொன்றுவிட்டார். மேற்கத்தைய நாடுகளில் தண்டனைகள் இருக்கும் தான். ஆனால் வெளியே தெரிந்தால்த்தானே.

 13. 11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

  ஆயிரத்தில் ஒருவர் மனநிலை பிறழ்ந்து முறைகேடாக செயற்படக்கூடும். ஆனால் அதற்காக எமது சமுதாயத்தின் அடிப்படை குடும்ப அமைப்பு, வாழ்க்கையை சந்தேகக்கண்ணுடன் நோக்குவது தவறு. 

  ஆண்கள்; அப்பா, பேரன், பாட்டன், தாத்தா, மாமா என ஆண் வர்க்கத்தில் தவறுகள் நடப்பதாக பல கதைகள் எழுதப்பட்டுள்ளன, சொல்லப்பட்டுள்ளன.

  பெண்கள் பகுதி முறைகேடு செய்வது இல்லையா என்பது ஒரு வினா.

  மற்றைய வினா இப்படியான கதைகள் ஆண் வர்க்கம் மீது பெண் எழுத்தாளர்களினால் குற்றம்சாட்டி வெறுப்பில் சொல்லப்படும் கதைகளோ? 

  நீங்களே ஆயிரத்தில் ஒன்று என்று கூறிவிட்டு அத்தனை ஆண்களையும் வகைப்படுத்தியுள்ளீர்களே! இதில் நான் சந்தேகக் கண்ணுடன் பாருங்கள் என்று கூறவில்லை. கவனமாகக் கண்காணியுங்கள். பிள்ளைகளைப் பாதுகாப்பாகப் பராமரியுங்கள் என்றே சொல்கிறேன். நாம் எம்மை சில வரையறைக்குள் மறைத்து வைத்துள்ளோம். அதை மீறி கேள்விப்படுபவை கேள்விகளாகின்றன.

  தமிழ்ப் பெண்களால் பெற்ற பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு பாலியல் முறைகேடுகள் ஏற்படுவதில்லை என்று நான் எண்ணுகிறேன். அந்தத் துணிவும் பாலியல் தொடர்பான இச்சைகளும் பெண்களுக்கு ஏற்படுவதில்லை என்பது என் கருத்தும் போக பெண்களை எப்படி எல்லாமோ கேவலப்படுத்தும் ஆண்கள் இப்படியான குற்றச்சாட்டுக்களை எம் பெண்கள் மேல் வைத்ததில்லை என்று எண்ணுகிறேன். அப்படி ஏதும் இருந்தால் இத்திரியில் பகிருங்கள்.

  11 hours ago, நிலாமதி said:

    நேற்று கதையை வாசித்துவிட்டு  அதிர்ச்சியுறறேன் . என்ன எழுதுவதென்றே தெரியவில்லை . அவருக்கு முற்றிய  வக்கிர மன நோயாக இருக்கும் . குழந்தையோ  குமரியோ ..பெற்றோர் தான் அவதானமாய் இருக்க வேண்டும்.  .

  பெற்றோர் முக்கியமாய் தாய் தான் கவனமாகத் தன்  பிள்ளைகளைப் பார்க்கவேண்டும்.

 14. 14 hours ago, ஈழப்பிரியன் said:

  சுமே
  நினைக்கவே முடியாத ஒரு கருவை அமைதியாக எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.
  பாராட்டுக்கள்.

  நன்றி அண்ணா

  14 hours ago, தமிழினி said:

  எம்மவர்களுக்குள் இப்படியானவர்களா? அதுவும் 6 மாத பிஞ்சுக்குழந்தை????? நினைத்துபார்க்க முடியவில்லை :(

  நேற்றிரவு நித்திரை கொள்ளமுடியாமல் இந்த சம்பவம் அடிக்கடி நினைவில் வந்துபோனது. இவர்களையெல்லாம் மனிதர்களுக்குள் அடக்ககூடாது.

  தாரணி போன்று பெண்கள் துணிந்து செயல்பட்டால் இப்படியான குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு.

  இந்த சம்பவத்தை தைரியமாக எழுதியமைக்கு பாராட்டுக்கள் சுமே அக்கா!!

  இதுபோல் எத்தனையோ இருக்கு. எல்லாவற்றையும் கேட்டால் கொலை செய்யும் கோபம் தான் வரும். 

  13 hours ago, பகலவன் said:

  சொல்லத்தயங்கும் கதை கருவை துணிவாக தனக்கே உரித்தான பாணியில் எழுதிய சுமேயை பாராட்டியே ஆக வேண்டும்.

  இன்னும் எங்கள் சமூகத்தில் ஒளிந்திருக்கும் கயவர்களை கதைகள் மூலம் அடையாளப்படுத்துங்கள்.

  நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

  13 hours ago, ஈழப்பிரியன் said:

  நானும் நேரடியாக இந்தக் கதையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் உங்களைப் போலவே இதை ஏன் வாசித்தேன் என்றிருக்கிறது.

  எல்லோரையும் அப்படி எண்ணுவதில்லையே அண்ணா.

 15. 19 hours ago, Kavallur Kanmani said:

  இன்றைய காலத்தில் பெற்றவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு நடக்கும் இப்படியான அநியாயங்கள் பல மெளனிக்து விடுகின்றன.இப்படியான சில வக்கிர புத்தியுள்ளவர்களால் நல்லவர்களையும் சந்தேகிக்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது. சுமே சமுதாய விழிப்புணர்வுடன் தந்த ஆக்கத்திற்கு நன்றிகள்.

  வருகைக்கு நன்றி அக்கா.

  16 hours ago, யாயினி said:

  இதற்குள் இணைத்துக் கொண்ட படத்தை நீக்கி விட்டு வேறு ஏதாவது ஓவியம் மாதிரியான வற்றை இணைத்தால் நன்றாக இருக்கும் சுமே அக்கா.உங்கள் விருப்பம்.நேற்றுப் பார்த்ததில் இருந்து சாப்பிட,தண்ணி குடிக்க கூட முடியவில்லை.. 

  படத்தை ஏற்கனவே நீக்கிவிட்டேன் யாயினி. பல பெற்றோர்க்கு இப்படி எல்லாம் நடக்கும் என்பதே தெரியாமல் இருக்கும். அதற்காகவே விழிப்புணர்வுக்கு இதை எழுதினேன்.

   

  15 hours ago, விசுகு said:

  நடக்கும்  சம்பவங்கள்  தான்

  ஆனால் பிள்ளையின் வயதை நம்பமுடியவில்லை

  அநேகமான வயதானவர்களே

  முதல்த்தவறை  ஆரம்பித்துவைக்கிறார்கள்  என்று  ஊரிலேயே கேள்விப்பட்டதாக  ஞாபகம்

  இது உண்மைச் சம்பவம் அண்ணா. தாய் மாமனாரைக் கொலை செய்துவிட்டார்.

  15 hours ago, நிழலி said:

  இவ்வாறான விடயங்களை தொடவே தயங்கும் அல்லது வேண்டும் என்றே தவிர்க்கும் தமிழர் மத்தியில், முக்கியமாக ஈழத்து தமிழர் மத்தியில் துணிவாக இதை எழுதிய சுமேக்கு பாராட்டுகள். 

  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் அரைவாசிக்கும் மேற்பட்டது நெருங்கிய உறவுகளாலும் நண்பர்களாலுமே ஏற்படுகின்ற என்ற உண்மையை கதை சொல்லி நிற்கின்றது.

  முடிவில் கணவனை நிராகரித்தது முற்றிலும் நியாயமானது. குற்றங்களை செய்தவர்களும் அதை மூடி மறைக்க நினைப்பவர்களும் ஒரே வகையானவர்கள் தான்.

  தம்மை எழுத்தாளராக அடையாளம் காட்டியுள்ள பல ஆண்களுக்கு இப்படி நான் எழுதுவதே உவப்பானதல்ல. நன்றி வரவுக்கும் கருத்தத்துக்கும்.

 16. 8 hours ago, யாயினி said:

  டின்னில் வரும் கடலைகளை தவிர்ப்பது நன்று..அதிகளவு ஊறி இருப்பதனால் எப்படித்தான் உப்பு போட்டாலும் சுவை தெரியாது.சப்பென்று இருக்கிறது என்று சொல்வார்களே அப்படித்தான்.

  நான் பெரும்பாலும் டின் பொருட்களைத் தவிர்ப்பதுதான்.

  10 hours ago, உடையார் said:

  உழுந்து வடை நேற்றுவிடிய செய்தனான், மகன் வந்து போனகிழமை செய்த வடையும் செய்து தாங்கோ என்றார், அவர் கேட்டது உங்கள் முறையில் செய்த மரவள்ளி வடை, நல்லகாலம் Frozen மரவள்ளி இருந்த படியால் உடனே ஓமென்று செய்து கொடுத்தேன்,

  அவர்களுக்கு மரவள்ளி வடை பிடித்துவிட்டது, கறி சாப்பிடமாட்டார்கள், இனி இப்படிதான் செய்யனும்

   சுமேயால் வீட்டில் கொஞ்சம் நல்ல பெயர் வர தொடங்கிவிட்டது😀

  மனைவி சமையலை உங்கள் தலையில் கட்டிவிட்டார் போல 😃

 17. 12 minutes ago, Kadancha said:

   

  இது எப்போதும் நடந்து கொண்டே இருந்தது. அப்படியான வக்கிர உணர்வு கொண்டவரகல் இருந்தனர், இருக்கின்றனர்.

  அங்கிருந்த குடும்ப மான கலாசாரத்தில், மற்றும் அரசின் கவமனமில்லாத போக்கினால், நடந்தவை, நடப்பவை வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும்.  

  ஏதோ தமிழரில், வெள்ளையர் செய்வதை போல, இல்லை என்பது வெறும்  வாய்ச் சவாடல்.

  இந்த திறந்த கலாசாரத்தில், அரசின் பாதுகாப்பும் இருப்பதால், வெளியில் தெரிகின்றது.

  ஆஸ்திரேலியாவில், ஓரளவு வளர்ந்த மகளிற்கு தந்தை செய்தது தெரிய வர, போலீஸ் வரை போய், இப்பொது அரசாங்கம் வேறு ஸ்டேட் இல் தாய்க்கும், பிள்ளைகளுக்கும் தஞ்சம் அளித்துள்ளது. அரசு வழக்கு தொடுத்து, வழக்கு நடக்கிறது.

  தந்தை இடம் கேட்டால், ஒரு விதமனா மூர்க்கமும் இல்லாமல்,  அதாவது தன்னை பிழையாக பழிக்குற்றம் சுமத்தியுள்ளனர் என்ற வெப்பியாரமும், மூர்க்கமும் இல்லாமல், அவர்கள் (தாயும், பிள்ளையும்) இப்படி  தனக்கு செய்து போட்டார்கள் என்று cool ஆக சொல்கிறார். 

  பல பெற்றோர்களே தம் பிள்ளைகள் பற்றிய விழிப்புணர்வு அற்று இருக்கின்றனர்.

 18. 2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  1.கிரேறிற் கார்டு

  2.போஸ்ற் பெயிற்

  3. பெர்சனல் லோன் .. இன்னும் பலப்பல ..

  திறந்தவெளி பொருளாதார சுத்துமாத்துகளை இரண்டாவது தலைமுறை மூன்றாம் தலைமுறைக்கு எடுத்து இயம்பிவிட்டே செல்லும் .. கதை ஆக்கத்திற்கு நன்றி சகோதரி..👍

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  1 hour ago, ஜெகதா துரை said:

  உண்மைச்சம்பவத்தை துணிந்து எழுதியிருக்கிறீர்கள்.  

  பலரும் தெரிந்தும் எழுதுவதில்லை. பெற்றோர்கள் இனியாவது கவனமாக இருக்கவேண்டும். எத்தனை நாளைக்குத்தான் எங்கள் கலாச்சாரம் பண்பாடு என்று எல்லாவற்றையும் மூடி மூடி வைப்பது.

  பச்சைக்கு நன்றி நந்தன்

 19. 4 hours ago, தோழி said:

  இலைமறை காயாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை துணிவுடன் எழுதியுள்ளீர்கள். அதிர்ச்சியாக இருந்தாலும் விழிப்புணர்வுகள் ஏற்படுவதற்கு இப்படியான சிறுகதைகள் அவசியம். சிறப்பான கதையோட்டம். வாழ்த்துக்கள் !

  நன்றி தோழி வரவுக்கு

  4 hours ago, உடையார் said:

  எனக்கும் தான், ஏதிர்பார்க்கவில்லை 

  எதிர்பார்க்கவே முடியாத பலதும் இப்போதெல்லாம் நடந்துகொண்டிருக்கு.

 20. நன்றாக இருக்கிறது கதை. ஆனாலும் நீங்கள் புதிய உறுப்பினர் போல் தெரியவில்லை. முன்னர் எழுதிய அனுபவம் கொண்டவராக இருக்கிறீர்கள். தொடருங்கள்.

 21. 23 minutes ago, யாயினி said:

  எனக்கு இதை ஏன் படித்தேன் என்றிருக்கிறது.. அனேகமாக பிள்ளைகள் பெற்றவர்களை நேர்சிங்கோம் அல்லது பெற்றோரின் விருப்பப்படி எங்கு போய் என்றாலும் இருக்கட்டும், என்று விடுவதற்கும் இவ்வாறான பிரச்சினைகளும் ஒரு காரணம் போலும்...

  இது உண்மைச் சம்பவத்தை அடிப்படியாக வைத்து எழுதியுள்ளேன். இப்படி எல்லாமா நடக்கும் என்று பலர் கேட்கலாம். இதை விட மோசமானவை எல்லாம் கூட இருக்கு யாயினி.

  அப்படி நாம் எல்லோரையும் சொல்ல முடியாது ஒன்று இரண்டு இப்படிக்கு கேடு கெட்டதுகள் இருக்குதுகள்.

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.