Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8475
  • Joined

  • Days Won

    41

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. 17 hours ago, ஈழப்பிரியன் said:

    எமது வீட்டடியிலும் இதே பிரச்சனை.

    சிற்ரிக்கு அடித்து சொல்லியும் நடவடிக்கை ஏதுமில்லை.

    நாங்கள் மறந்தும் அணைப்பதில்லை.

    அனேகமான நேரங்களில் எமது பின் வளவுக்குள் இரண்டுக்கு போக வருகிறது.

    என மகள் இப்ப கைவிட்டுட்டா ஏனெனில் பூனையைத் தடவி கையில் அலர்ஜி உண்டாக்கிவிட்டதும் பயந்துவிட்டா. எனக்கும் மகிழ்ச்சி. 

  2. 49 minutes ago, பெருமாள் said:

    இதெல்லாம் சோம்பேறி சிங்களவனால் வந்த வினை .

     

    சிங்களவனை சோம்பேறிஎனருசொல்லிக்க சொல்லி இப்ப தமிழர்தான் வெளிநாட்டுக் காசால் சோம்பேறிக்களாகி விட்டார்கள். 

  3. பிள்ளைக்களாய் இருந்தாலும் அவர்கள் கல்வியை நிறைவுசெய்தபின்னர் சுயமாக வேலை தேடிக்கொண்டு வீட்டுப் பொறுப்புக்களை தாமும் பகிர்ந்து பெற்றோருக்கு உதவி செய்துகொண்டு ஒழுங்கக்காக இருந்தால் மட்டுமே அவர்களை தம்முடன் வைத்திருக்க வேண்டும். பல பொறுப்பற்ற பிள்ளைகள் படித்து முடித்தபின்னரும் பெற்றோருடன்  வாழ்ந்துகொண்டு  வேலைக்கும் போகாமல் பெற்றோர் பணத்தில் உண்டு கொண்டு இருக்கின்றனர். பெண் பிள்ளைகள் எப்படியோ கூட்டுவது துடைப்பது, சமைப்பது போன்ற வேலைகளில் பெற்றோருக்கு உதவினாலும் பல ஆண் பிள்ளைகள் இவற்றைச் செய்வதில்லை. பெற்றோர் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கும் போது பிள்ளைகள் தம் அறையையோ வரவேற்பறையையோ சுத்தமின்றி தம் ஆடைகளைப் பொருட்களை கண்டபடி வைத்திருந்தால் கூட பெற்றோருக்கு அது மன  உளைச்சலைத் தரக்கூடியது. உணவு விடயம் கூட அப்படித்தான். சாதாரண உணவை உண்ணும் ஒருவர் பிள்ளைக்காக மேலதிகமாக அவர்களுக்கு விரும்பியதை சமைக்கும்போது அதுவும் அவர்களுக்குக் கடினமாகவும் செலவாகவும் இருக்கலாம். ஆகவே அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகியதில் தவறில்லை.

    • Like 4
  4. 13 hours ago, பையன்26 said:

    அக்கா அவ‌ர் இர‌ண்டு மூன்று ப‌டம் எடுத்தாலே அந்த‌க் கால‌த்தில் காசோட‌ மித‌ந்து இருப்பார்............எம‌க்காக‌ குர‌ல் கொடுக்க‌ தொட‌ங்கி அந்த‌ ம‌னுஷ‌ன் ப‌டும் அவ‌மான‌ம் இருக்கே அதை ச‌கித்துகொள்ள‌ ஏலாது.............2009க‌ளில் கொள்ளை கூட்ட‌ம் அடிச்ச‌தை விட‌ அவ‌ர் மாவீர‌ நாளுக்கு வெளிப்ப‌டையாய் கேக்கிறார்..........விருப்ப‌ம் இருக்கிற‌வ‌ர்க‌ள் கொடுக்க‌ட்டுமேன் அக்கா.............ஆனால் மேல‌ நாதாமுனி எழுதி இருக்கிறார்.........இந்த‌ முறை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளே மாவீர‌ நாள் செய்ய‌ காசு கொடுத்தார்க‌ளாம்..............

    தம்பியா உங்களைப் போன்ற வஞ்சனை இல்லாத ஆட்களால்தான் சீமான் வாழ்கிறார். ரதி சொன்னதுபோல இதில் எழுதி பயன் இல்லை என்பதானாலேயே நான் பலதுக்கும் எழுதுவதில்லை.  படம் எடுப்பாதையே இத்தனை சுலபமான காரியமாக எண்ணும் உங்களுக்கு எதை எழுதினாலும் விளங்காது.

    On 3/12/2023 at 23:54, குமாரசாமி said:

     அன்று நானும் என்னைப்போன்றவர்களும் எமது விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்பு செய்த போது அதையும் அரச உத்தியோகத்தர்களுக்கும்/ கிரிமினல் பொலிசாருக்கும் காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கின்றார்கள்.

    விடுதலைப் போராட்டத்துக்குக்கொடுப்பது வேறு. அந்நிய நாட்டில் உள்ள ஒருவருக்குக் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர். சீமானால் தனியாக எமக்கு எதையுமே செய்ய முடியாது. இங்குள்ள ஒருவருக்கு ஏசியபோது "அவர் எதுவும் செய்ய முடியாதுதான் அக்கா. ஆனால் அவர் அப்பப்பா அப்படிக் கத்திக்கொண்டிராவிட்டால் எமது பிரச்சனையை எங்கள் ஆட்களே மறந்திடுவார்கள். அதனாலேதான் அவருக்குப் பணம் அனுப்புகிறோம்" என்றார்.  

    • Like 2
  5. 17 minutes ago, பையன்26 said:

    அது ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் அன்ரி.............இப்ப‌ வெளி நாட்டில் இருந்து நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ப‌ண‌ம் அனுப்ப‌ ஏலாது..........இந்த‌ ச‌ட்ட‌ம் தேர்த‌ல் நேர‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து இப்ப‌வும் ந‌டைமுறையில் இருக்கு..........இந்திய‌ குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அனுப்ப‌ முடியும்............நீங்க‌ள் எத்த‌னையாம் ஆண்டு அனுப்பி நீங்க‌ள்.............

    எல்லாம் சட்டப்படியா இந்தியாவில் நடக்கிறது. பணப் பரிமாற்றம் என்பது எத்தனை வழிகளில் நடக்கின்றது உலகில். நீங்கள் அதுபற்றித் தெரியாமல் இருக்கிறீர்கள்.  

    • Like 1
    • Thanks 1
  6. On 24/11/2023 at 15:06, ஈழப்பிரியன் said:

    வெளிநாடுகளில் முன்னெப்போதும் இல்லரத அளவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு நிறையவே ஆதரவு பெருகி வருகிறது.

    எம்மவர்களும் ஆதரவு கொடுக்கிறார்கள்.

    ஆனாலும் பண உதவி என்று யாருமே செய்யதாக தெரியவில்லை.

    லண்டனில் மாதாமதம் அவருக்குப் பணம் அனுப்புகின்றனர். எத்தனையோ வருடங்களாக. நான் சில ஆண்டுகள் பணமாற்றுச் வேலை ஒன்றில் வேலை செய்யும்  போது அவர்கள் தரும் பணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்.

    • Thanks 4
  7. 11 hours ago, வாலி said:

    விரும்பிய எவரும் டிவாளியைக் கொண்டாடட்டும்.  யாழ்ப்பாணத்தில்  இந்து சமயிகள் தீபாவளியை கொண்டாடுகின்றார்கள். எங்களுக்கு ஆண்டாண்டு காலமாக கொடியவன் நரகாசுரனை கிருஶ்ண பரமாத்மா கொன்றதாகவும் சாகும் தருவாயில் நரன் தான் இறந்த இந்த நாளை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் என கிருஶ்ண பரமாத்மாவிடம் வேண்டுகொண்டதாகவும் அந்நாளே தீபாவளி என படிப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதுதான் உண்மையும் கூட 😜.  இதை விட்டிட்டு புதுக்கதை சொல்லப்போனால் சிக்கல்தான்.

    உண்மையை நீங்கள் பக்கத்திலிருந்து கேட்டீர்கள் போல

  8. On 6/11/2023 at 18:15, Nathamuni said:

    @மெசொபொத்தேமியா சுமேரியர்

    இந்தியாவில் அச்சிடுவதே சரியான அல்லது மலிவானது என்று கருதுகிறீர்களா?

    விபரம் அறியவே கேட்கிறேன் நன்றி!

     

    நாதமுனி! இந்தியாவில் அச்சிடுவது மலிவுதான் எனினும் அங்கு நாம் நினைத்ததை செயலாக்க முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. சில சொற்களின் பொருள் விளங்காது எம்மைக் கேட்காது மாற்றி அச்சிடுவதும் நடைபெறும். ஆனால் பார்சலில் நூல்களை அனுப்பும் செலவும் அதிகம். எமது நாட்டில் நாமே எமக்குத் தெரிந்தவரை கதைத்துப் பேசித் திருத்தங்கள் செய்வது இலகுவானது.  ஆனால் தற்போது அங்கு விலை அதிகம். ஆனாலும் பவுண்டஸ் இன் பெறுமதி அதிகரித்திருப்பதால் எமக்கு இலங்கையில்  அடிப்பது பெரிதாகத் தோற்றாது.

    இலங்கையிலும் இந்தியாவிலும் தரமாக நூல்களை அடிக்க முடியும் தான். உயிர்மை, காலச்சுவடு போன்றவை தரமான நூல்களை தாமே அச்சிட்டு வெளியிடுகின்றன. ஆனால் நீங்கக்கள் அவர்களுக்கு உங்கள் ஆக்கணக்களை அனுப்பிவிட்டு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

    வடலி, பூவரசி போன்றவையும் மலிவாக அடிக்கக்கூடியாவை. இந்தியாவில் எம்மவர்களது.  இலங்கையில் நான் இருதடவைகள் ஜீவநதி ஊடாக அடித்திருந்தேன்.

    நீங்களே எல்லாவற்றையும் வடிவமைத்து - அட்டைப்படம், தலைப்பு, பின்னட்டை, எழுத்துப்பிழை என்பவற்றைச் சரிசெய்து வேண்டுமானால் நீங்களே புதிய ஒரு நிறுவனதின் பெயரில் வெளியீட்டையும் செய்யலாம். முக்கியமாக  ISBN,  வெளியீட்டு உரிமம் எடுப்பது அவசியம். மிகமுக்கியம் எழுத்துக்களின் அளவை சரிபார்க்க வேண்டும்.

    நான் முதல்முறை லண்டனில் நூல் வெளியீடு செய்தபோது கிட்டத்தட்ட 100 பேர் வந்திருந்தனர். எனக்கு அதில் செலவு போக 400 பவுண்டஸ் மிஞ்சியது. இரண்டாவது நூலை இலங்கையில் வெளியீடு செய்தபோது நான் யாரிடமும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை.  அதில் எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் இலாபமாகக் கிடத்தது. என் ஊரவர்க்கு என்னைப் பற்றித் தெரிவதே எத்தனை பெரிது. 

    ஆனால் இந்தியாவில் வெளியிட்டால் எதுவும் இல்லை. யாருக்கும் எம்மைத் தெரியப் போவதில்லை.

    நீங்கள் பணம் செலுத்தி அமேசனில் ஏற்றிவிடலாம் தான். ஆனால் ஒரு நூல் வெளியீடு செய்யப்பட்டு விமர்சிக்கப்படும்போது  ஏற்படும் திருப்தி பதிவேற்றிவிட்டு வருமானம் பார்ப்பதில் வராது.

    இலங்கையில் அடிப்பதானால் எம் உறவுகள் நான்குபேர் பயனடைவார்கள்.

     

    வேண்டுமானால் இலத்திரணியல் நூலாகவும் நூலாகவும் வெளியிடுவது இன்னும் சிறந்தது.

  9. Just now, Nathamuni said:

    வணக்கம் அக்கா,

    உங்களிடம் இன்னோரு திரியில் ஒரு கேள்வி கேட்டு, எங்கே உங்களை காணமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பதில் தர முடியுமா? நன்றி

    என்ன கேள்வி ?

  10. தந்திரமாக ஆரோ இவருக்குப் புதுக்கதை சொல்லி உருவேற்றியுள்ளனர்.

    https://www.facebook.com/maunaguru.sinniah

     
    இது ஓர் தீபாவளிக் கதை
    பாவம் நரகாசுரன்
    ----------------------------------------------------------------------
    இன்று தீபாவளி.அடிக்கடி நண்பர்களும்,மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவிக் கிறா ர்கள்.
    அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது
    கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே?
    ம்கிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம்
    மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில் 1940 களில் இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன்னர் தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை
    நாங்களும் வீட்டில் இதனைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை
    எமக்கு அன்று கொண்டாட்டம்,சித்திரைமாதப் புது வருடம்தான்.
    அன்றுதான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள்
    /முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகாரம் சுட்டு அதனைத் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள்
    குடும்பங்களின் விழா அது. கிராமங்களின் விழா அது
    புது உடுப்புகளை காலையில் முதலில் தென்னம் பிள்ளைகளுக்கு உடுத்திவிடச் சொல்லுவார் அம்மா
    தென்னம்பிள்ளைகள் அணிந்த உடுப்பைத்தான் நாம் பின்னர் அணிவோம்
    இயற்கையை நேசித்த மனிதர்கள் அன்று
    சித்திரை நாள் எஙக்ளுக்குப் பெரும் கொண்டாட்ட நாள்
    தைப் பொங்கலும் கொண்டாட்ட நாள்தான்
    .
    அதனை விவசாயிகள் கொண்டாடுவர்.ஏனையோரும் வீட்டில் பொங்கி மகிழ்வர்
    ஆனால் சித்திரை வருடமளவு அது அன்று பெரும் கொண்டாட்டமில்லை
    சின்ன வயதில் தமிழ் நாட்டிலிருந்து
    கல்கி தீபாவளி ஆண்டுமலர்,
    ஆனந்த விகடன் தீபாவளி ஆண்டுமலர்
    கலைமகள் தீபாவளி ஆண்டுமலர்
    அமுதசுரபி தீபாவளி ஆண்டுமலர்
    எனச் சில தீபாவளி மலர்கள் பள பளப்பான தாளில் கவர்ச்சிகரமான வர்ணப்படங்களுடன் பெரிய பெரிய அளவில் ஆண்டு தோறும் தீபாவளி நாளில் வெளிவரும்
    அவற்றின்மூலம்தான் தமிழகத் தீபாவளி எமக்கு அறிமுகமாகியதாக ஞாபகம்
    அதன்மூலம்தான்
    தலைதீபாவளி,என்ற சொற்றொடரை அறிந்தோம்
    கங்காஸ்னானம்.
    அத்திம்பேர்.
    தீபாவளிச் சீடை,முறுக்கு
    .விசிறியச் சுழட்டும் குடும்பிவைத்த பூணூல் போட்ட தத்தாமார்
    ,மடிசார்வைத்த பெண்கள்
    எனப் பல தீபாவளி சார்ந்த பிராமணச்சமாசாரங்கள் சிறுவயது மனதில் படிய ஆரம்பித்தன
    தீபாவளிச் சிறு கதைகள் வேறு அவற்றை மனதில் அழுத்தின
    இன்னொரு பண்பாடு எமக்குள் ஊடகங்கள் வாயிலாகப் புக ஆரம்பித்தன
    எம்மை ஆக்கிரமித்தும் கொண்டன நாம் மாறலாயினோம்
    நரகாசுரனை சத்தியபாமா துணையுடன் கிருஸ்ண பகவான் அழித்த கதையை திரும்பத் திரும்பச் சொன்னார்கள் அக்கதை எம்மனதில் ஆழமாக வேரூன்றியது
    நரகாசுரன் பூமியை மீட்க விஸ்ணு வராக அவதாரம் அதாவது பன்றி அவதாரம் எடுத்து பூமியை மீட்டகதையும்,
    தன்னைமீட்ட வராக அவதாரத்தின் மீது பூமாதேவி காதல் கொள்ள விஸ்ணுவு க்கும்,பூமாதே விக்கும் பிறந்தவனே நரகாசுரன் எனும் கதையும்
    அவன் கொடுமை பொறுக்க முடியாமல் தந்தையே பிள்ளை யைக்கொல்லும் நிலை உருவானது
    எனும் கதையும் உருவானது
    சற்று வளர்ந்த பின் எனது 15 ஆவது வயதில் திராவிடக் கழகக் கருத்துக்களுக்கு அறிமுகமானபோது நரகாசுரன் என்ற திராவிட குலத் தலைவனை ஆரியனாகிய கண்ணன் அழித்த கதை எமக்கு அறிமுகமானது.
    நரகாசுரன் என்பவன் நரன்
    அதாவது மனிதன்
    அசுரன என்பதன் அர்த்தம் சுரன் அல்லாதவன்.
    சுரர் என்றால் தேவர்
    தேவர்கள் என அழைக்கப்பட்ட ஆரியர்கள்.அவர்கள் சுரபானம் எனும் மதுவை அருந்தியதால் சுரர் என அழைகப்பட்டனர்.
    திராவிடர்கள் ஒழுக்க சீலர்கள்
    ,மது அருந்தாதோர். ஆகவே அசுரர் என்றால் சுரம் அருந்ததோர் என்பது அர்த்தம் என்ற கருத்துகள் கூறப்பட்டன
    (அ+ சுரம்) என்ற விளக்கங்களைத் திராவிடக் கழக நூல்கள் தந்தபோது இளைஞரான நாம் அதனால் ஈர்க்கப்பட்டோம்
    தீபாவளிக்கு அது ஓர் புது விளக்கமாக இருந்தது
    இந்தப் புதிய கதை எங்களுக்குள் புகுந்து கொண்டது
    இது தமிழர் விழாவல்ல என எங்களுக்குள் பேசிக் கொண்டோம்
    இவற்றையெல்லாம் தாண்டி மெல்ல மெல்ல தமிழகத் தீபாவளி மட்டக்களப்புத் தமிழ்ப்பண்பாட்டினுள் புகத் தொடங்கி சித்திரை வருடத்திற்கு அடுத்த பெரும் கொண்டாட்டமாக இடம் பெறலாயிற்று
    1960 களில் பேரதனைப் பல்கலைக்க்ழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எமக்கு
    சமணத் தமிழ் இலக்கியங்கள்,
    சமணர் எழுதிய இலக்கணங்கள்,
    சமணப்புலவர்களின் தனிப்பாடல்கள்
    என்பன அறிமுகமாகின.
    அவர்கள் பிராமண மதத்திற்கு,வைதீக மதத்திற்கு எதிரானவர்கள்
    .நால்வகை வருணப்பகுபாட்டை விரும்பாதவர்கள்.
    அற ஒழுக்கக் கருத்துகளை மிக அதிகமாக வற்புறுத்தியவர்கள்
    சாதாரண
    மக்கள் பால் நின்றவர்கள்.
    தமிழ் நாட்டின் பெரும் தாக்கத்தை அன்று எற்படுத்தியவர்கள்
    என்ற விபரங்களும்
    சமண தலைவரான மஹாவீரர்,என்பதும்
    அவர் ஸ்தபித்த சம்ணமதம் என்பதும்,அதன் தத்துவங்கள் என்பனவும்
    அறிமுகமாகின
    இவற்றை எமக்கு அறிமுகம் செய்தவர்கள்
    பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை,
    வித்தியானந்தன்,
    கைலாசபதி ,
    வேலுப்பிள்ளை
    ஆகியோராவர்
    கைலாசபதி வகுப்பில் தொடர்ச்சியாகச் சமண தத்துவத்தை எமக்கு விளக்கினார்
    வேலுப்பிள்ளையும் தமிழ்ச்சமணம்,த்மிழ்ப்பௌத்தம் பற்றி ஆராய்ந்து எமக்குக் கூறினார்
    சமண தீர்தங்கரரும் மஹா ஞானியுமான மகாவீரர் மீது ஓர் மதிப்பும் உண்டாயிற்று
    மூத்த பேராசிரியரான கணபதிப்பிளையின் வகுப்புகள் வெகு சுவராஸ்யமானவை.
    சிரித்துக்கொண்டு கதையோடு கதையாகப் பல ஆழமான விடயங்களை மிக எளிமையாகக் கூறிசெல்வார்
    ஒரு நாள் அவர் எங்களுக்குப் படிப்பித்துக்கொண்டிருக்கையில்
    "உந்தத் தீபாவளி எப்படி வந்தது என்று தெரியுமோடா'
    என்று கேட்டார் யாழ்ப்பாணத்தில் அன்றைய பேச்சு வழக்கில் இந்த என்பதை உந்த எனக் கூறுவர்)
    நாங்கள் நரகாசுரன் கதையைக் கூறினோம்
    "அதுவெல்ல்லாம் புழுகடா.சமண மதத்தின் தலைவரான மஹாவீரர் சமாதி அடைந்த நாளை நினைவுகூர பல தீபங்களை ஏற்றிவைத்து சமணர் கொண்டாடிய சமண விழாவை சைவர்கள் தம் வசப்படுத்திக் கொண்ட கதைதாண்டா தீபாவளி.அதற்காக உருவாக்கப்பட்ட கதைதானடா நரகாசுரன் கதை”
    என்றார்
    சைவம், சமண மததிலிருந்து பல விடயங்களைத் த்ம்வயப்படுத்திச் சைவமாக்கிக் கொண்டது என்பதற்கு நிறைய உதாரணங்கள் கூறினார்
    சமணரை அருகதர் என்பர் யாழப்பாணத்தில் இன்றும் சைவச்சாப்பாட்டை அருகதக் கறி என்பர் என்றெல்லாம் கூறி
    "இதுவும் அதில் ஒன்றடா"
    என்றார்
    எங்களுக்கு வியப்பு அதிகமாயிற்று
    தீபாவளின் மூலம் பற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளைகூட தனது நூலில் ஒரு கட்டுரை எழுதியமை ஞாபகம் வருகிறது
    ஆனால் வாமைபோல சனாதனிகளால் அது கண்டுகொள்ளப்படவில்லை
    காலங்கள் பல கடந்து விட்டன
    இன்று 2023 ஆம் ஆண்டு
    இன்று மட்டக்களப்பில் தீபாவளி பெரும் கொண்டாட்டம்
    காலையிலிருந்து அரசியல் தலைவர்கள தொடக்கம் சமயத் தலைவர்கள் சமயசொற்பொழிவார்ளூடாக சினிமாபிரபலங்கள் வரை
    இருளிலிருந்து ஒளிக்கு வரும் கதையையும்
    அக்கிரமக்காரன் அழிந்த கதையையும்
    திருப்பித் திருப்பிக் கூறி அலுப்பூட்டிக் கொண்டிருக்கிறார்கள்
    அறிவு பூர்வமாக எந்தக் கதையும் இல்லை
    அறிவு பூர்வமாகச் சிந்திக்கும் திறனை தமிழ்சமூகம் இழந்துவிடட்தோ என்று எண்ணத் தோன்றுகிறது
    ஆர்ப்பாட்டமான இன்றைய எலக்ரோனிக் உலகு தீபாவளியையும் ஆர்ப்பாட்டமாக்கி விட்டது
    .நரகாசுரனை அழித்த கதை பாடசாலகளிலும்,சமயச் சொற்பொழிவுகளிலும் சர்வசாதரணமாக சொல்லப்படுவதாயிற்று
    அரசியல் வாதிகளும்,
    ஆட்சியதிகாரத்தில் உள்ள பெரும்தலைவர்களும்
    சமயத் தலைவர்களும்
    இது நரகாசுரன் ஒழிந்த நாள் என்றே மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிகின்றனர்
    நரகாசுரன் அழிவு மக்கள் மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டது
    நரகாசுரனுடன் தீபாவளி இணைக்கப்பட்டுவிட்டது
    பெரும் சமயக் கொண்டாட்டமுமாகிவிட்டது
    இக்கொண்டாட்டத்தை இனி மக்களிடமிருந்து பிரிக்கமுடையாது
    காரணங்கள் பல
    ஒன்று
    இது ஓர் பெரும் சமய விழாவாகிவிட்டது
    இரண்டு
    இதுஓர்பெரும்கொண்டாடமாகிவிட்டது. கொண் டா ட்டமானமையினால் மக்கள் கூடுதல், அதனால் கிடை க்கும் பெரு மகிழ்ச்ச்சி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தல் என்ற மனித குலம் விரும்பும் அடிமன நல் இயல்புகள் இதில் உள்ளன
    மூன்று
    பெரும் வணிக நிறுவனங்களின் லாபம் இக் கொண் டாட்டத்தில் அடங்கியுள்ளது,சேலை உடுப்பு, பட்டாசு ,பலகர வகைகளுக்கான மூலப்பொருள் வியாபாரம் என்பன இதில் அடங்கும்
    .நான்கு
    கோயில் வருமானம், பூசகர் வருமானம் என்பன இன்னொருபுறம் உள்ளது
    ஐந்து
    பத்திரிகளைன் தீபாவளி மலர் வருமானம், மற்றொரு புறம் உள்ளது
    ஆறு
    தொலைக்காட்சி ,போன்ற ஊடகங்களின் இடைவிடாத கருத்தேற்றமும் அவை அவற்றால் அவை அடையும் பெரு வருமானமும் இன்னொருபுறம் உள்ளது
    ஏழு
    இவ்வூடகங்களின் அழைப்பை விரும்பி ஏற்றுக் காசிகளில் தோன்றிப் புகழ் பெறச்செல்லும் நமது கலைஞர்களும் அறிஞர்களும் இன்னொருபுறம் பெருவாரியாகக் காணப்படுகிறர்கள்
    எட்டு
    இது குழந்தைகலள மத்தாப்புக் கொழுத்தி விளையாடும் ஒரு பெரு விழாவாகவும்,அவர்கள் புத்துடை அணியும் விழாவாகவும் கட்டமைக்கப்பட்டு விட்டது.குழந்தைகளின் மகிழ்ச்சிக்காப் பெற்றோர் எதனையும் செய்வர்
    எனவே தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என எப்படி சொன்னாலும் அக்கொண்டாட்டத்தை இலகுவில் போக்கிவிட முடியாது
    அது இந்து மக்கள் கொண்டாட்டமாகிவிட்டது
    கொண்டாட்டங்களை மிகவும் வரவேற்கும் பின் நவீன சிந்தனையாளர்களை நாம் காண்கிறோம்
    மக்கள் இணைகிறார்கள்
    மகிழ்கிறார்கள்
    என அவர்கள் கொண்டாட்டங்களுக்கு ஓர் புது வியாக்கியானம் அளிக்கிறார்கள்
    ஆனால் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும்
    சுரண்டலையும்
    பேதங்களை மறக்க வைக்கும் போதை நிலையையும் அவர்கள் தோலுரித்துக்காட்டுவதில்லை
    தீபாவளியைக் கட்டுடைத்துப் பார்ர்க்கலாம்
    அதன் அதிகாரம் எங்கிருக்கிறது என்றுபார்க்கலாம்
    தீபாவளிக் கதை கூறும் நரகாசுரன் கதைப் பிரதியை கட்டுடைத்துப் பார்க்கலாம்
    இவையாவும் ஒரு புலமைத்துவ இன்பப் பயிற்சியுமாகும் (Intellectual pleasure exercise)
    தீபாவளி அன்றையபோல் இன்றில்லை
    .
    நிறைய மாறிவிட்டிருக்கிறது.
    இன்னும் மாறும்
    இடையில் வந்து மாட்டிக்கொண்டான் நரகாசுரன்
    பாவம் நரகாசுரன்
    அவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
     
    சி.மௌனகுரு
    • Thanks 1
  11. 22 hours ago, goshan_che said:

    வன்னா வா வராங்காட்டி போ…

    எனவனங் எண்ட, யனவனங் யண்ட….

    கம் ஓ கோ, சிக்காகோ 🤣

     

    உங்கட பாட்டில இரண்டாவது வரி விளங்கேல்லை 😂

    16 hours ago, colomban said:

    நல்லதொரு ஆக்கம். 
    பொதுவாக தமிழ‌ர்கள் போருக்கு முந்தியே ஏஜன்சி மூலம் போகும் பழ‌க்கம் இருக்கின்ரது. 1978/79 களில் நான் அக்கால இளைஞர்களை கண்டுளேன். ஜெர்மனி போக கொழும்பில் வந்து நிற்பார்கள். இது ஒவ்வொருவரின் சூழ்னிலைக்கு ஏற்ப வேறூபடும்

     

    வருகைக்கு நன்றி

  12. 11 hours ago, நிலாமதி said:

    நடைமுறையிலிருக்கும் பிரச்சனைக்கான நல்லதொரு  பகிர்வு.
    யாம் பெற்ற இன்பம் (துன்பம்) யாவரும் பெறுக. நன்றி .

    வேறு என்னதான் செய்வது?

    10 hours ago, ஏராளன் said:

    நன்றி உங்கள் எண்ணப் பகிர்விற்கு அக்கா.

    வரவுக்கு நன்றி

    8 hours ago, Nathamuni said:

    வரமாட்டம், போங்கோ!! 🥹

    வராட்டிப் போங்கோ 😃

    8 hours ago, Justin said:

    நான் சிறிலங்கா போய் வாழப்போவதில்லை, எனவே அங்கே இருப்போர் வெளிநாடு வராதீர்கள் என்று சொல்லப் போவதில்லை. ஆனால்: சொந்தக் காசில்😎, குறைந்த பட்சம் உயிருக்குப் பாதுகாப்பான வழியில் வாருங்கள் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இருக்கிறது.

    "வளமான வாழ்வு தேடி வரும்" பயணத்தில் உயிரை இழப்பது ஏற்புடையதல்ல!

    இப்போது விமானப் பயணம்தான்.

    8 hours ago, ஈழப்பிரியன் said:

    இது தான் உண்மை.

    உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் தானே நாம்

    8 hours ago, குமாரசாமி said:

    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது சரிதான்.....ஆனால்  இன்றைய சிறிலங்காவின் தமிழர்கள் மீதான அரசியல் நிலை  நம்மவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடுகின்றது. வீட்டுக்கு ஒருவர் வெளிநாடு வந்து உழைத்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லதென்பது என் அபிப்பிராயம்.

    இருக்கும் காணி வீடு நிலங்களை விட்டு குடும்பமாக குடிபெயர்வது   ஆபத்திலேயே முடியும்.

    அதை நாம் எப்படித் தடுக்க முடியும் சொல்லுங்கள் ???

    8 hours ago, Nathamuni said:

    வருவதில் தவறில்லை.

    ஆனால்குறைந்தபட்சம் தம்மைத் தயாராக்கிக் கொண்டு வரவேண்டும்.

    பிரான்ஸ் போவதாயிருந்தால், குறைந்த பட்சம் யூரியூபில் பிரெஞ்சு படித்து வரலாமே.

    அட ஒன்னுமே இல்லையா, சாரி பிளவுஸ் தைக்கப்பழகியாவது வாங்கப்பா 🤓

    யாழ் பல்கலைக்கழக பட்டம் வைத்திருப்பவர்கள் பலரை சுப்பர்மாக்கெற் பில்லிங் செய்பவர்களாக பார்த்திருக்கிறேன். தமக்கு ஆங்கிலம் வரவே வராது என்று தீவிரமாக நம்புபவர்கள்.

    தமிழகத்தில் இருந்து வருபவர்கள். இங்குள்ள வேலைகளை ஆராய்ந்து, அதுக்கேற்ப தம்மை தயாராக்கி ஒழுங்காக விசாவும் எடுத்தல்லவா வருகிறார்கள்.

    சும்மா ஊர் சுற்றியவர்களைப் பிடித்து, ஏத்தி அனுப்பிறம், அங்கவாவது பிழைச்சுப் போ என்பதிலும், முதலில் உதை படி, பிறகு அதற்கு தயாராகு. பின்னர் விசா எடுத்து ஒழுங்கா வா என்று அறிவுறுத்தலாமே.

    கனடா இந்திரன் பத்மநாதன் ஒரு IT படிப்பிக்கும் நிறுவனத்தை, SLIT உடன் சேர்ந்து ஆரம்பித்துள்ளார். North Lanka University என்று நிணைக்கிறேன்.

    ஏஜன்சிக்கு கொடுத்து துளைக்கும் பணத்தில் கொஞ்சத்தை கட்டி இதில சேர்த்து விடுங்க.

    வரும் போது, நம்பிக்கையுடன், விசாவுடன் வரமுடியுமே.

    தகுதி இல்லாமல் வந்து கஸ்டப்பட்டு ஐந்து வருடத்தில் உழைப்பதை (வந்த கடன் வேற) தகுதியுடன் வந்து ஒரே வருடத்தில் உழைக்கலாமே. (கடன் இல்லாமல்).

    கடந்த வருட பிரச்சணையால் பல கொழும்பு IT காரர் இடம் பெயர, அந்த வேலைகளை நிரப்ப இந்தியாவில் இருந்து தமிழகத்தில் இருந்து எடுக்கிறார்கள்.

    நம்மவர்கள்???

    ஊர் சுற்றலும், ஏஜன்சியும் தான் தலை எழுத்து!!

    பலர் லண்டனுக்கு படிக்க வரும் மனைவியுடன் சேர்ந்து வந்துள்ளனர்.

    7 hours ago, குமாரசாமி said:

    ஈரான்,சிரியா,மற்றும் வேறு நாடுகளிலிருந்து வருபவர்கள் ஜேர்மனிக்கு வருவதாயின் முதலில் மொழியையும் நாட்டின் சட்டதிட்டங்களையும் படித்துக்கொண்டுதான் வருகின்றார்கள்.வந்த அடுத்த நாளே வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றார்கள்.இவர்களுடன் முதலாளிமார் கூட சுத்துமாத்து விட முடியாது. அந்தளவிற்கு சட்டங்களை ஊரில் இருந்தே படித்து விட்டுத்தான் வருகின்றார்கள்.

    நம்மவர்களோ விமானநிலையத்தில் இறங்கி நின்று பெப்பே தான் 🤣

    இப்போ வருபவர்களில் சிலர் வந்ததும் பப்புக்கு கூடப் போகின்றனர். 😀

    4 hours ago, suvy said:

    மிகக் கச்சிதமான கனதியான கட்டுரை..........!  👍

    நன்றி சகோதரி........!  

    நன்றி அண்ணா

  13. முப்பதாண்டுகாலப் போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் நாம் அடிமைக்களாக்கப்பட்ட பின்னர் எம் சொத்துக்கள் சொந்தங்கள் அழித்தொழிக்கப்பட்டு நிலங்கள் சிறிது சிறிதாக அபகரிக்கப்பட்டு எம் இளஞ் சமுதாயம் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டு மறைமுகமாக தமிழர்களின் கல்வி வளமும் அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

    பொருளாதார வீழ்ச்சியின் பின் சாதாரண மக்கள் வாழ்வதற்குப் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்தான். ஆனாலும் புலம்பெயர் தேசங்களில் இருந்து அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தொகைப் பணம் பலரை முயற்சியற்றவர்கள் ஆக்கி ஆடம்பரமான வாழ்வுக்குள்ளும் தள்ளியுள்ளதை யாரும் மறுக்கவும் முடியாது.

    நிலங்கள் இருந்தாலும் அதில் சிறு பயிர் தன்னும் வைத்துப் பிழைப்பு நடத்தவோ அன்றாதத் தேவைக்கான வருமானத்தைச் சிறுதொழில் மூலம் ஈட்டவோ பலருக்கும் விருப்பம் இல்லை. வெற்று நிலங்கள் பல கேட்பாரற்று இன்றும் தரிசாகிக் கிடக்கின்றன. சுய தொழில் ஆரம்பிக்கிறோம் என்று வெளிநாட்டவரிடம் இருந்து பணம் பெற்றுக்கொள் வோரும் பணம் கைக்கு வரும்வரைதான் தொழில் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தம் நாற்காலிகளைக் காப்பாற்றவே அவர்களுக்கு நேரம் போதாது.

    பலர் முகநூல்களில் எல்லாரும் குடும்பங்குடும்பமாக வெளிநாடுகளுக்கு அதுவும் ஒன்றரைக் கோடி, இரண்டு கோடி கூடக் கொடுத்து வருகிறார்கள். அந்தப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் போட்டு வரும் வட்டியை எடுத்தே குடும்பத்தை நடத்தலாமே என்கின்றனர்.

    நாம் போரினால் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோம். ஆனால் எத்தனைபேர் போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்தோம்?? பலரும் போரைச் சாக்காக வைத்து பிழைப்புக்காகப் பஞ்சம் பிழைக்கத்தானே வந்தோம். வெளிநாடுகளுக்கு வந்ததில் உயிர்ப்பயம் அற்ற நிம்மதியான வாழ்வு, வசதியான வாழ்வு, பொருளாதார வளம், தரமான கல்வி இவை எல்லாவற்றுக்குமாகத்தானே ஓடி வந்தோம்.

    வெளிநாடுகளில் கடுங்குளிர், கடின வேலை, வருமானம் குறைந்த வேலைகள், வசதிகள் குறைந்த வீடுகள், புதிய வாழ்கைச்சூழல், புதிய மொழி என எத்தனையோ நெருக்குவாரங்களுக்கும் முகங்கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழர்கள் பலரும் தம் திறமைகளை வெளிக்காட்டித் தமக்கென ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இங்கும் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகமும் உண்டுதான். வெளிநாடு வந்தும் நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்ளாது வாழ்க்கையை வாழ முடியாமல், சரியான திட்டமிடல் இன்றி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்போரும் பலர் உள்ளனர்.

    எண்பதுகளின் பின்னர் இடம்பெயர்ந்தோர் பலர் கடும் குளிர், மேலதிக வேலை, காற்றோட்டமற்ற வீடுகள், மன அழுத்தம் போன்றவற்றால் உடல், உளரீதியாக பாதிக்கப்பட்டு பாதி நோயாளிக்களாகவும் இருக்கிறார்கள்.

    நாம் ஓடிவிளையாடியாதுபோல் விளையாட எமது பிள்ளைகளுக்கு இங்கு அயலோ நிலமோ இல்லை. கூடிக் கதைப்பதற்கு சுற்றமோ சொந்தமோ  அருகில் இல்லை. பெற்றோரின், உறவுகளின் மரணங்களுக்கோ போக வழியின்றி எத்தனைபேர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மனம் நொந்து அழுதிருப்பார்கள்.

    இப்போது பலருக்கு அங்கு வீடு வாசலோ சொந்தங்கள் யாருமே எமது நாட்டில் இல்லை. ஆனாலும் எமது நாட்டில் கடைசி காலத்திலாவது சென்று வாழவேண்டும் என்னும் அவா இருப்பினும் பயம் ஒருபுறம், அங்கு சென்று சும்மா இருந்து வாழ்வதற்கான பொருதாரவளம் அற்றவர்களாகவும் இருப்பதுடன் நோயாளர்களும் அங்கு சென்று இருப்பதற்கு அஞ்சி ஆண்டுக்கு ஒருதடவை நாட்டுக்குச் சென்று தம் ஆசையில் சிறிதையாவது நிறைவேற்றிக் கொள்வதுடன் திருப்திப்பட்டும் கொள்கின்றனர்.  

    இன்னும் சிலர் எமக்கு ஒரு நாடு இருப்பதையே மறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது அவர்கள் தப்பு மட்டுமன்று.

    எல்லோருக்கும் பாதுகாப்பான மகிழ்ச்சியான தன்நிறைவான வாழ்க்கை வாழவேண்டும் என்னும் ஆசை இருப்பது தவறல்லவே. ஆகவே எத்தனை கோடி கொடுத்தும் எம்மவர்கள் வெளிநாடு வரட்டும். நாம் அனுபவித்த இன்ப துன்பங்களை அவர்களும் அனுபவிக்கட்டும். அவர்களால் முடிந்த பொருளீட்டி அவர்களும் வளமாக வாழட்டும். வெளிநாட்டில் வசித்துக்கொண்டிருக்கும் நாம் வெளிநாடுகளுக்கு ஏன் வருகிறார்கள் என்று அவர்களைக் கேட்பதில் எந்த நியாயமுமில்லை. வேண்டுமானால் இங்கு வாழ்ந்து சலிப்படைந்து போனவர்கள் எல்லோரும் துணிந்து தாய்நாட்டில் சென்று மிகுதி நாட்களைக் கழிக்கப் பாருங்கள். அங்கு உங்கள் அறிவையும் திறமைகளையும் உழைப்பையும் போட்டு ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். எப்படியாவது எமது அடுத்த சந்ததி அங்கு நிலைத்து வாழ்வதற்கான வழிகளை உருவாக்க முடியுமா என்று பாருங்கள். அதை விட்டு எதை சொல்லியும் யாரையும் நிறுத்தமுடியாது.                

    • Like 9
    • Thanks 2
  14. On 8/10/2023 at 18:25, ரதி said:

    உங்களுக்கு இது பிழை என்று தெரிந்தும் ஒரு விதண்ட வாதத்திற்கு கேட்க்கிறீர்கள் என நினைக்கிறேன் ...பக்கத்து வீட்டில்  ஒரு பிளக் பமிலி  அல்லது கறுப்பினத்தவர் புதுசாய் குடி வந்திருக்கிறார்கள் என்று தான் சொல்லுவேன் 

    எனக்கு அது பிழையாகவே  தெரியவில்லை ரதி 😃

  15. 21 hours ago, Sabesh said:

    உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
    தொடரும் என்று இல்லாமல் முடித்ததில் மகிழ்ச்சி :)
    இரண்டாம் பகுதி இறுதியில் முடிவு தெரிந்தாலும் உங்களின் சுவாரசிய எழுத்தும், ஊர் விடுப்பு ஆர்வமும் தொடர்ந்து வாசிக்காத தூண்டியது.

    மிக்க நன்றி கருத்துக்கு சபேஸ் 

    On 19/10/2023 at 01:56, நிலாமதி said:

    என் கணனி  மக்கர் பண்ணியதால் சில நாட்கள் வர முடியவில்லை. ஒரே மூச்சில் வாசித்து   முடித்தேன். தொடரும் இல்லா மல்   எழுதியது மிகவும் வரவேற்க  தக்கது. வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்கள் குடும்பத்தை சீர்குலைகின்றன 

    உண்மைதான் அக்கா

     

    On 18/10/2023 at 14:06, ஈழப்பிரியன் said:

    கதையின் முடிவை இடையிலேயே ஊகிக்க முடிகிறது.

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    இடையிலேயே ஊகிக்க முடிவதால் நான் நன்றாக எழுதவில்லை 😀

    On 18/10/2023 at 07:27, தனிக்காட்டு ராஜா said:

    கன இடத்துல கதை இப்படித்தான் போகிறது  அநேகமாக பல விவகாரத்து வழக்குகள்  இந்த சமூக சீர்கேட்டாலே நடக்கிறது.  

    இலங்கையிலுமா ??? நான் நினைத்தேன் வெளிநாட்டில்தான் இப்படி என்று.

  16. 12 hours ago, ரதி said:

    கதையை முழுவதுமாய் எழுதிப் போட்டு இணைப்பது வாசிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாது ...நீங்கள் பாடசாலை வைத்திருப்பதால் ஊர் ,உலகத்தில் உள்ள அத்தனை கொசிப்புகளும் உங்களுக்கு தெரியுது😅

    அப்ப உங்களுக்கு நாட்டு மடப்பு ஒன்றுமே தெரியாதாக்கும் 😂

    5 hours ago, குமாரசாமி said:

    பொதுப்பணியிலை இருக்கிற ஆக்களுக்குத்தான் ஊர் உழவாரங்கள் முழுக்க தெரியுமாம்...🤣

    கதைய இன்னும் வாசிக்கேல்ல 😎

    முதல்ல கதையை வாசிச்சு அதுக்கு ஒரு கருத்துச் சொல்லுங்கோ 😀

    7 hours ago, யாயினி said:

    ரீச்சர்மாருக்கு கொசிப்பை விட்டால் வேற என்ன வேலை........😆👋

    உங்களுக்குத் தெரிஞ்ச ரீச்சர்மார் கொசிப் கதைக்கிறவையோ??

  17. 5 hours ago, suvy said:

    பொதுவா இங்கு பூனைகள் வளர்ப்பவர்கள் வீடு மாறும் போதோ அல்லது அதை வளர்ப்பவர் இல்லை என்றாலோ அவைகளை அநாதரவாக விட்டு விடுகிறார்கள் ஆனால் நாய்களை அப்படி விடுவதில்லை என்று நினைக்கிறேன்......எனது வீட்டு அருகிலும் அழகழகான பூனைகள் வேலிகளால் போய் வந்து கொண்டிருக்கும்........!  😁

    ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் சிலர் அவற்றைத் தரத்திவிட்டு சிறிய பூனைகளை வளர்க்க ஆரம்பிப்பார்களாம்.

    எனக்கு என்ன பிரச்சனை எனில் என கணவரும் மகளும் எனக்குத் தெரியாமல் உணவு போட அது என்  வீட்டுக்  குசினிக்குள் வந்து குப்பைக் கூடையைக் கிளறுமளவு வந்துவிட்டது.

  18. cats.jpg

     

    பூனைகள் விசித்திரமானவை

    என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன
    நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை
    பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள்

    வீட்டுப் பூனைகளும் சரி
    துரத்திவிடப்பட்டவைகளும் சரி
    நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை.

    பசி எடுக்கும் வேளைகளில்
    அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன

    பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட

    அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன

    அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு

    என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு.

    வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி
    போதுமானதாக இருப்பதில்லையோ???

    கட்டாக்காலி நாய்களைப்போல்தான்
    பூனைகளும் இப்போ பெருகிவிட்டன

    வேலியோ மதிலோ எங்கு ஏறிக் கடப்பதாயினும் 
    எல்லாமே அவற்றுக்குச் சாதகமாகவும் இலகுவாகவும் உள்ளன

    ஆனால் இவற்றுக்கெல்லாம் மூலகாரணம்

    தன் வீட்டு உணவு உருசியானது.

    அதனாலேயே எல்லாப் பூனைகளும் என்னிடம் வருகின்றன என எண்ணி,

    கத்தியபடி வரும் பூனைகளுக்கெல்லாம் உணவுபோடும் வீட்டுக்காரர்கள் தான்.
     

    • Like 3
  19. 24 minutes ago, Kavi arunasalam said:

    என்ன நடந்தது உங்களுக்கு? “வரும், விரைவில் வரும்” என்று போடாமல் ஒரே மூச்சில் கதை சொல்லி விட்டீர்கள்

    வயது வந்த (மூத்த) ஆணாக  இருப்பதால் இந்தப் பிரச்சினை எனக்கு இல்லை. வற்சப் கொஞ்சம் லேற்றாக வந்ததால் தப்பித்தேன். கண்ணதாசன் பாடல்வரி ஒன்று சொல்லட்டுமா?

    “பொல்லாத பெண்களடா புன்னகையில் வேசமடா

    நன்று கெட்ட மாதரடா நான் அறிந்த பாடமடா”

    (சென்ஸாரின் ஆட்சேபணையால் ‘மாதரை’ ‘மாந்தர்’ என்று மாற்றிப் போட்டார் கண்ணதாசன்)

    வருகைக்கு நன்றி அண்ணா. இனிமேல் எழுதி முடித்தபின் தான் போடுவதாக இருக்கிறேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.