Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8242
 • Joined

 • Days Won

  37

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. On 29/10/2021 at 17:57, ரதி said:

  விவசாய குடும்பம் என்கிறீர்கள் சம்பா அரிசி வகை பற்றி தெரியாதா ?... நான் மட்டுக்கு போய் தான் சாப்பிட்டுப் பழகினான்...அங்கு இந்த வித அரிசி வகைகள் பேமஸ் ...அண்மையில் கிரீச் சம்பா அரிசி தமிழ் கடையில் வாங்கி வந்து சமைத்தேன் ...மட்டுவை நினைவு படுத்தியது . அதன் சுவை சொல்லி வேலையில்லை 
   

  எந்த கடையில் வாங்கினீர்கள் ?...என்ன விலை 

   

  இங்குள்ள சைனீஸ் கடை ஒன்றில். 1 kg - £4. 99. இந்தியன் கடைகள் ஒன்றிலும் இல்லை. onlin இல் வாங்கலாம்.   

  23 hours ago, குமாரசாமி said:

  உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு மருந்திற்கு மாற்றீடாக இதை சாப்பிடலாம் அதை சாப்பிடலாம் என வைத்தியர்கள் பரிந்துரை செய்வார்கள். உதாரணத்திற்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பால் உணவுகள் நல்லதென கூறுவார்கள்.அதே போல் இன்சுலின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உணவுவகைகள் ஏதாவது உள்ளதா? குறிப்பாக மெற்fபோமினுக்கு ஈடாக  உணவு/பதார்த்தங்கள் ஏதாவது உள்ளதா?

  மருந்து தயாரிக்கும் கொம்பனிகள் இயற்கை மருத்துவங்களை மூடி மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே பொது வெளியில் உலாவுகின்றது. இது எந்தளவிற்கு உண்மை?

   

  கடந்த ஆண்டு ஒரு வன்னியில் இருக்கும் ஒரு வைத்தியர் உணவு முறையால் மருந்தின்றி இதை மாற்றலாம் என்று ஒரு காணொளியில் பேசியிருந்தார். எனக்கு வற்சப்பில் வந்திருந்தது. ஆனால் தேடுகிறேன் காணவில்லை.

 2. தினேசின் படத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜீவா. பார்க்கப் பார்க்க உணர்வுகள் கட்டுக்கடங்காமல் ஓடின. இன்னும் பத்தே பத்து நாட்களில் அவளுக்கும் தினேசுக்கும் திருமணம். இரண்டு நாட்களில் தினேசின் குடும்பத்தவர் வெளிநாட்டிலிருந்து வருகின்றனர். இவள் பெற்றோருக்கு அளவில்லாத மகிழ்சிதான். வெளிநாட்டில் பிறந்த பெடியன். பொருத்தம் பாக்கிற விநாசித்தம்பியர் தான் இவரைக் கோவிலில் கண்டபோது கேட்டது. கொக்குவில் மாப்பிளை ஒண்டு வந்திருக்கு. தாய் தகப்பன் வெளிநாட்டில. ஒரேயொரு தங்கச்சி. அதுவும் கலியாணம் கட்டீட்டுதாம். நல்ல ஆக்கள். பெடிக்கு முப்பது வயது. சோலி சுரட்டில்லை என்றதும் கணபதிப்பிள்ளைக்கும் ஆசை எட்டிப்பார்த்ததுதான்.

  என்ர மகளுக்கு  23 தான் அண்ணை. வயது கொஞ்சம் கூடிப்போச்சுப் போல என்று  இழுக்க, நல்ல சம்பந்தம் எண்டதாலைதான் உனக்குச் சொன்னனான். வெளிநாட்டு மாப்பிளைக்கு உங்க கியூவில் நிக்கிது சனம். எனக்கும் மனிசிக்கும் 12  வயது வித்தியாசம். நாங்கள் சந்தோசமா வாழேல்லையே? ஏழு வயதெல்லாம் ஒரு பிரச்சனையே என்றார்.  விநாசித்தம்பியரின் முகத்தை முறிக்காமல் எதுக்கும் பிள்ளை ஓம் எண்டால் எனக்குப் பிரச்சனை இல்லை. நான் பிள்ளையிட்டையும் மனிசியிட்டையும் கதைச்சிட்டு நாளைக்கு முடிவைச் சொல்லட்டோ  என்று கேட்க, நாளைக்குச் சொல்லிப்போடு. தவறினால் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது சொல்லிப்போட்டன் என்றபடி விநாசித் தம்பியர் செல்செல்கிறார்.

  எதுக்கும் இதை விடக்கூடாது என்று மனதில் எண்ணியபடி வீட்டுக்கு வந்த கணபதி, மனைவியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்கிறார். வெளிநாட்டுச் சம்மந்தம் எண்டால் ஏன் விடுவானப்பா? சாதகத்தை உடன கொண்டுபோய் சாத்திரியிட்டைக் குடுங்கோ என்றவுடன், எனக்கும் உனக்கும் எட்டு வயது வித்தியாசம். உன்ர கொப்பர் ஏமாத்திக் கட்டி வச்சிட்டார் என்று நீ அப்பப்ப எனக்குச் சொல்லுறணியெல்லோ. அதுதான் இது ஏழு வயது வித்தியாசம். எதுக்கும் பிள்ளையிட்டைக் கேட்டிட்டு சாதகத்தைக் குடுப்பம்” என்கிறார். 

  எந்த நேரத்தில என்ன கதைக்கிறது எண்டில்லை. முதல்ல சாதகத்தைக் குடுங்கோ. பொருத்தம் எண்டால் பெடியின்ர படத்தைக் கேளுங்கோ. ஜீவான்ர படத்தையும் குடுப்பம். பெடியனும் ஓமெண்டால் பிறகு இவளிட்டைக் கதைச்சு சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு என்று கோமதி கூறியவுடன் எல்லாம் கடகடவென்று நடந்து முடிந்து, போனிலும் ஒரு மாதமாக இருவரும் பேசி, இன்னும் இரண்டுநாளில் தினேசை நேரில் பார்க்கலாம் என்றவரை வந்துநிற்க, எப்ப அந்த நாள் வரும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறாள் ஜீவா.

  இரண்டு நாட்களில் தினேசின் பெற்றோரும் தங்கையும் காரில் வந்திறங்க, இவள் கதவோரத்தில் நின்று துடிப்புடன் பார்க்கிறாள். அவனின் கண்களும் இவளைத் தேடிக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி மனதை நிறைக்க, அவர்களை உள்ளே வரும்படி பெற்றோர் அழைத்துவர, அவர்களின் இயல்பு எல்லோருக்கும் பிடித்துப் போகிறது. அதன்பின் திருமணம் வரையும் அவன் போனில் இவளுடன் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள, அவன் தன்னை வந்து பார்க்க ஆசை கொள்ள மாட்டானா என இவள் மனம் ஏங்குகிறது. மீண்டும் இவள் அவனைப் பார்த்தது திருமணத்தன்றுதான். இவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அவனின் பெற்றோர் திரும்ப வெளிநாடு போனபின்னர்தான் இவளால் இயல்பாக இருக்க முடிந்தது. அவனின் பெற்றோர் போனபின்னர் தான் இவனும் அவளுடன் கொஞ்சம் ஆசையாக இருந்தது.

  அந்த மூன்று மாதங்கள் இருவரும் சினிமா, கசோரினாக் கடற்கரை, காங்கேசன்துறைக் கடற்கரை, பூங்கா என்று போனதும் குளித்ததும், வீட்டுக்கு தொலைக்காட்சி, குளிரூட்டி எல்லாம் வாங்கிக்கொடுத்து இவளை மகிழ்வித்ததும் அவள் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்.

  • Like 4
 3. 10 hours ago, கிருபன் said:

  பெண்களின் வாழ்வை முன்னேற்ற இருக்கும் அமைப்புக்களின் போதாமைகளினால்தான் ஏதிலி வாழ்வு தொடர்கின்றது. அது தொழில், வருமானம் குறைந்த இக்காலத்தில் இன்னும் மோசமாக மாறியுள்ளது. சமூகச் சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து வேலை செய்யாமல் இருப்பதும் ஒரு காரணம்.

  பெண்களும் சரி ஆண்களும் சரி தாம் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இல்லாது சும்மா இருக்க ஆர் காசு தருவார்கள் என்று எண்ணுவது கூட பல பெண்களை இன்னும் வறுமை நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாம் வெளிநாட்டவர்களிடம் கற்றுக்கொண்ட சுறுசுறுப்பும் வீடா முயற்சியும் இருந்திருந்தாலே பலர் வாழ்வு இன்று மேம்பாட்டிருக்கும்.

  10 hours ago, suvy said:

  மிகவும் கனமான கவிதை, கவனமாக எழுதியிருக்கிறீர்கள் .......பாராட்டுக்கள்........!  👍

  நன்றி அண்ணா 

 4. 10 hours ago, suvy said:

  அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள் அசத்துங்கோ.......!  👍

  உங்களைப் போல உற்சாகம் தருபவர்கள் இருக்கும் போது ..

  8 hours ago, கிருபன் said:

  முக்கியமான விசயம் போல இருக்கு!

  அதில்லை. கன நாட்களாக எழுதவே இல்லை. எனது நூலும் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டது என்றதும் மீண்டும் எழுதவேண்டும் என்ற ஒரு வேகம் அவ்வளவே. 

  1 hour ago, ரதி said:

   

  அதிக இடைவெளி விடாமல் தொடருங்கோ 

   

  விடமாட்டேன் ரதி.

 5. வந்து கருத்துக்களைப் பகிர்ந்த புங்கையூரன், யாயினி, ஈழப்பிரியன் அண்ணா ஆகியோருக்கு நன்றி 

  7 hours ago, யாயினி said:

  கொஞ்சம் நீண்ட காலத்திற்கு பிறகு தொடருறீங்கள்.தொடருங்கள்..✍️👋

  அதனால் என்ன. இத்தனை காலம் எழுத மனமே வரவில்லை. சரி எழுதுவோம் என்று வலுக்காட்டாயமாக எழுதியது.

  7 hours ago, ஈழப்பிரியன் said:

  என்ன சுமே தோட்டம் எல்லாம் முடிந்துவிட்டது  போல.

  தொடருங்கள்.

  தோட்டம் வெளியே முடிந்துவிட்டது. conservertry தொடர்கிறது.

 6. வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம்  எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அப்பா, அயலட்டை எண்டு பார்ப்பது என் விசர்த்தனம்.

  இன்றே ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திடவேணும் என்று எண்ணியபடி கட்டிலை விட்டு எழுந்தாள் ஜீவா. 

  தாயார் சமையலறையில் சம்பல் செய்துகொண்டிருப்பது சம்பல் வாசத்திலேயே தெரிந்தது. தானும் வெள்ளண எழுந்து தாய்க்கு உதவி செய்யாததை இட்டு மனதிலொரு குற்ற உணர்வும் எட்டிப்பார்த்தது. ஆனாலும் அவளின் பிரச்சனை அதைவிடப் பெரிதே என்றும் திரும்பக் கேள்வி கேட்டது. அம்மாவிடம் விஷயத்தைக் கதைத்துப் பார்ப்போமா என்று எண்ணினாலும் ஒரு தயக்கமும் இருந்துகொண்டேதான் இருந்தது. எதற்கும் வாகீசனிடம் கதைத்துவிட்டே பெற்றோருடன் கதைக்கலாம் என்று எண்ணியபடி குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ஜீவா. வாகீசன் இவளிடம் அக்கறை கொண்ட ஒரு நல்ல நண்பன். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாகப் படித்ததில் உரிமையுடன் அவள் வீடுவரை வந்து கதைக்கும் உரிமையும் பெற்றவன்.

   

  முன்னர் பொதுக் கிணற்றடியில் இவர்கள் வளவுக்குள் கட்டியிருக்கும் தொட்டியில் மோட்டார் போட்டு நீர் நிரப்பிக் குளிப்பது. அறையுடன் சேர்ந்த இந்த பாத்ரூம் ரொய்லற் கட்டி எட்டு ஆண்டுகள் தான். அதுவும் இவள் திருமணம் நிட்சயமானதும் வெளிநாட்டிலிருந்து வரும் மாப்பிள்ளைக்கு வசதியாக இருக்கட்டும் என்று தந்தைதான் கட்டுவித்தது. அப்பவே 75 ஆயிரம் ரூபா முடிந்தது. அப்பாவுக்கு காசுப்  பிரச்சனை இருக்கேக்குள்ள இது தேவைதானா என இவளும் ஆரம்பத்தில் வேண்டாம் அப்பா என்று சொல்லிப் பார்த்தாள் தான். ஆனாலும் அது வெளிநாட்டில பிறந்த பிள்ளையாம். வந்து மூன்று மாதங்கள் நிக்கேக்குள்ள நின்மதியா மலசலம் கழிக்க வேணுமெல்லோ என்றவுடன் இவளுக்கும் சரி என்று பட பேசாமல் இருந்துவிட்டாள். இன்றுவரை அவள் அறையுடன் சேர்த்துக் காட்டியதை இவளைத் வேறு யாரும் பயன்படுத்தவில்லை.

  நினைவுகளைக் கலைத்துவிட்டு குளித்து முழுகி வேலைக்குப் போவதற்கான சேலையையும் கட்டிக்கொண்டு குசினிக்குள் எட்டிப்  பார்த்தாள். இவளின் குரல் கேட்குமுன்னரே இவள் வருகையை உணர்ந்த தாய் இடியப்பம் போட்ட தட்டை இவளுக்கு நீட்ட, இவள் வாங்கிக்கொண்டு மேசையில் போய் அமர்ந்து உண்ணவாரம்பித்தாள்.

  பின்னாலேயே இவளின் சாப்பாட்டுப் பெட்டியைக் கொண்டு வந்து இவளருகில் வைத்தபடி “உருளைக்கிழங்குப் பிரட்டலும் முட்டையும் பொரிச்சு வச்சிருக்கிறன்” என்கிறார். 

  “நீங்கள் கஷ்டப்படாதேங்கோ எண்டு எத்தனை தரம் சொல்லிப்போட்டன். பாங்குக்குப் பக்கத்தில எத்தினை சாப்பாட்டுக்கடை இருக்கம்மா. அங்க வாங்கிச் சாப்பிடுவன் தானே” என அலுத்துக்கொண்டாள். 

  இவள் வேலை செய்வது வங்கி ஒன்றில். ஒரு மணிநேர பிரேக்கில் அருணுடன் வெளியே சென்று உண்பது இப்போதெல்லாம் அவளுக்கு மனத்துக்குப் பிடித்ததொன்றாகி இருந்தது. அதற்குள் அம்மா சாப்பாடு தந்து அதை வீணாகக் கொட்டிவிட்டு சாப்பிட்டதாக அம்மாவுக்கு நடிக்கவேணும் என்று எண்ண உணவு விரயமாகிறதே என்பதுடன் அம்மாவை ஏமாற்றுகிறோம் என்னும் குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ள, தயவுசெய்து இனிமேல் எனக்குச் சாப்பாடு கட்ட வேண்டாம். கட்டினாலும் நான் கொண்டுபோக மாட்டன். ஆறின சாப்பாட்டைச் சாப்பிட ஏலாதம்மா என்று கூறுபவளை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு தாய் அகன்றாள். 

  தந்தை தோட்டத்து மரக்கறிகளைச் சந்தைக்கு கொண்டுபோய் விற்றுவிட்டு வீட்டுக்கு வரப் பத்துமணி ஆகும். தான் வெளிநாடு சென்றாலாவது அப்பாவைத்த தோட்டம் செய்யாதேங்கோ என்று சொல்லலாம் என்று இவள் எண்ணியிருந்ததெல்லாம் கனவாகவே போய்விட்டதே என எண்ணியவுடன் துக்கமும் வந்து நெஞ்சை அடைப்பதுபோல் இருக்க என்ன அக்கா கிளம்பீடியே” என்றபடி வந்த தங்கைக்கு “ஓம்” என்று மட்டும்சொல்லிக்கொண்டு தன் ஸ்கூட்டியை வெளியே எடுத்து அதைக் கிளப்பிவிட்டு ஏறி அமர்ந்தாள்.

   

  தொடரும் ..

  • Like 12
 7. இன்னும் அவர்கள் இசைந்தும் அசைந்தபடியும் தான் இருக்கின்றனர்.

  பெருங்குரலெடுத்து அழமுடியாத அவலம் கொண்டவர்கள்

  தினமும் மகிழ்வாய்க் கண்மூடித் தூங்கி அறியாதவர்கள்  

  சிலநாட்களேனும் பாரங்களின்றிப் பசியாற முடியாதவர்கள்

   

  பசிக்கும் வயிறைப் பானைத் தண்ணீரில் நிரப்பியபடி பிள்ளைகள்

  வயிற்றை நிரப்பத் துடிப்பவர்கள்

  கோடை வெயில் கொடுமழை கண்டும்

  கால்கடுக்கத் தினம் கனவு நெய்பவர்கள்

   

  கணவனின் அணைப்பின்றி மனது தகிக்கையில்

  கண்டவர் பார்வையில் கசங்கித் துடிப்பவர்கள்

  அடிமுடி தேடியும் அகப்படா அன்பின் அகலமும் நீளமும்

  ஆழமும் அறியாத எரிதளலின் எச்சமாய் இருப்பவர்கள்

   

  இடர்கள் கடந்தும் கடக்காததுவாய் தொடரும் துயரில்

  துவண்டிடாது துச்சமாய் துயரைக் கடப்பவர்கள்

  எச்சங்கள் பல எஞ்சி இருப்பினும் எள்ளளவேணும்

  எதிர்வினையற்று எல்லாம் கடந்தும் வாழ்பவர்கள்

   

  எரிகின்ற நெருப்பாய் மனம் இருந்தும்

  ஏகாந்த வெளிகளை எல்லைக்களற்றுத் கடக்கும் மனதினர்

  புகை படர்ந்த வாழ்வின் தூசிகளை துயருடன் கடந்தாலும்

  காலங்களை வசவுடன் கடக்காதவர்

   

  எதிர்கால இருளின் முன்னே ஏதுமறியாது ஏங்கித் தவித்தபடி

  எங்கோ இருக்கும் வெளிச்சம் வரக் கனவுகளே அற்றுக் காத்திருக்கின்றனர்

  காலத்தின் முன்னே கலைந்த வாழ்வை துவைத்துப்போட்டபடி

  புன்னகை தொலைத்த ஏதிலிகளான எம் பெண்கள்   

   

  • Like 5
 8. யேர்மனியில் துருக்கிக் கடைகளில் வாங்கி பஸ்மதியுடன் சிறிது கலந்து காய்ச்சுவோம் முன்னர். இங்கும் கடைகளில் சிறிய பக்கற் உள்ளது.

  Black rice 1kg – BasketPayBlack Rice-Organic – Vintage FarmersChinese Black Rice - Ingredient - FineCooking

  இன்னும் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. இதில் எது நல்லது அல்லது எல்லாமே கவுனி அரிசியா ???? குமாரசாமி ???

 9. நானும் கண்ணை மூடிக்கொண்டு 4000 பவுண்சைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன். என்ன செய்வது நட்டப்பட்டுத்தான் அனுபவத்தைப் பெறவேண்டி இருக்கு .

  • Sad 1
 10. https://www.facebook.com/profile.php?id=100073156405565

  சேரமானின் ஆவி வல்ல முனி என்னும் பெயரில்  மீண்டும் வருகிறது .......😀

  10 hours ago, பையன்26 said:

  நீங்க‌ள் எதை ம‌ன‌சில் வைத்து இதை எழுதி இருக்கிறீங்க‌ள் என்று என‌க்கு ந‌ல்லாக‌ தெரியும் 😁😀

  நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ம‌ற்றும் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிப்ப‌தனால்.................க‌ள‌ நில‌வ‌ர‌ம் என்ன‌ என்றால் அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை செவி ம‌டுத்தி கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டுடுவேன்

  அதோட‌ உந்த‌ உண்டிய‌ல் வேலைக்கு நான் ஒரு போதும் இற‌ங்கின‌து கிடையாது...........................😁😀

  நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு
  எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறீங்க‌ளா................ஏதோ ஒரு விளையாட்டு திரியில் உங்க‌ளை தேடினான் ஆனால் நீங்க‌ள் அந்த‌ப் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................

   

  நான் நலம் பையா. கிரிக்கற்றைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாமல் போட்டியில் பங்குபற்றுவது நல்லதல்ல. கடந்த தடவை போல கேலிக்கூத்தாக்கிவிடும். 😀 எனக்கு அந்த விளையாட்டைக் கண்டாலே பிடிக்காது. 

  10 hours ago, மறுத்தான் said:

  நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு எனினும் தமிழ் தேசியம் பேசும் எல்லோரையும் இதில் அடக்க முடியாது.

   தமிழ்தேசியத்தையே மறுப்பவர்களையும் கிண்டலடிக்கும் தமிழர்களை எப்படி அழைப்பது.

  தமித் தேசியம் என்பது வேறு அதை மறுப்பவர் எதிர்ப்பவர் வேறு. இரண்டுக்கும் முடிசிச்சுப் போடக்கூடாது. மறுப்பவர்களைக் கிண்டலடிப்பவர்களை கடந்து போகும் துணிவு இருந்தால் மறுக்கலாம். அல்லது மௌனமாக இருப்பது தான் சிறந்தது.

  • Haha 1
 11. 13 hours ago, பையன்26 said:

  போக‌ போக‌ இல்லை எப்ப‌வே உண்மைக‌ள் வ‌ந்திட்டு

  2009ம் ஆண்டு நிறைய‌ க‌ம்பி சுத்துர‌ க‌தைய‌ சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றி பிழைப்பு ந‌ட‌த்தினார்க‌ள்

  ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு வ‌ந்த‌தும் கொள்ளை அடிப்ப‌தை நிறுத்தினார்க‌ள்...............

  எல்லாம் க‌ண் முன்னே அழிக்க‌ப் ப‌ட்டு இருந்த‌ இட‌ம் எது என்று தெரியாம‌ இருக்கு

  புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ளை ந‌ம்பி நான் இனி ஒரு போதும் ஏமாற‌ மாட்டேன்..............

  மாவீர‌ர்க‌ளின் வேர்வையில் அவ‌ர்க‌ள் சிந்தின‌ இர‌த்த‌தில் புல‌ம்பெய‌ர் எலிக‌ளுக்கு எப்ப‌டி தான் ம‌ன‌சு வ‌ருதோ தெரிய‌ல‌  ப‌ண‌த்தை கொள்ளை அடிக்க‌

  நேற்று நடந்த காயத்தை எண்ணி
  நியாயத்தை விடலாமா
  நியாயம் காயம் அவனே அறிவான்
  அவனிடம் அதை நீ விட்டுச் செல்....................

  தமிழத் தேசியம் என்ற போர்வை போர்த்தியபடி பல  எலிகள் உலககெங்கும் இருக்கின்றன. நாமதான் சூதானமா இருக்கவனும் தம்பி 😀

 12. 13 hours ago, ரதி said:

  என்னுடைய கேள்விகள் ;
  1} யார் எஸ்ஓ அண்ணா?
  2} கருணாவின் பிரிவிற்கு பிறகு தானே சிவராம் புலிகளால் சேர்த்து கொள்ளப்பட்டார்...அவர் எப்படி தலைவருக்கு சொல்லி இருக்க முடியும்?
  3} யார் இவர் ?...தன்னை அம்மான் என்று வேற சொல்லிக் கொள்கிறார் .


  ஆனால் இவர் சொல்கின்ற பினாமிகளின்  புடுங்குப்பாடுகள் , அடு,பிடி சண்டைகள் எல்லாம் உண்மை 

  ரதி இவர் ரஞ்சித் என்ற பெயரில் IBC வானொலியில் செய்திக்குப் பொறுப்பாக இருந்தவர். அவரின் நம்பர் தரட்டுமா சந்தேகணக்களைத் தீர்த்துக்கொள்ள 😀

  12 hours ago, பெருமாள் said:

  எல்லாம் குழப்ப மயம் ஆள் ஆளுக்கு சரடு விட்டால் இப்படித்தான் .

  இவர் கூறிஇருப்பது பொய் என்கிறீர்களா ???

 13. காலக் கொடுமை இது. இலங்கைத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்விச் சீரழிவை எப்படித் தடுக்க முடியுமோ தெரியவில்லை.

 14. 12 hours ago, vanangaamudi said:

  மலை என்பதற்கு "அசலை"  அல்லது "அசலம்" என்றும் பெயர் உண்டு என அறிந்திருக்கிறேன் உண்மையா?  

  என்றுதான் கூகிள் சேர்ச் இல் சொல்லுது. 😀

 15. கம்பளிப் பூச்சிக்காக வீட்டை விட்டு வேறிடம் சென்றுள்ளனர் என்பது நம்பத் தகுந்ததாக இல்ல.

  சீனாக்காரன் கொண்டுவந்திருப்பானோ??? உணவுக்காக 😀

 16. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது அது அவர்கள் விருப்பம். ஆனாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சரி. ஆனால் இரு பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அந்தக் குழந்தை தாய் அல்லது தந்தை இன்றி வளரும்போது அந்தப் பிள்ளையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓரினச் சேர்க்கையாளர்களை நான் எதிர்க்காவிட்டாலும் அவர்கள் தமக்கான குழந்தையை உருவாக்குவதை நான் கண்டிக்கிறேன்.

  • Like 2
  • Thanks 1
 17. On 28/9/2021 at 16:44, Nathamuni said:

  என்னெண்டா.....

   

  …ஒண்டுமில்லை... 

  சொன்னாப்போல.... அய்யா, மோனோட வந்திட்டார் போலை கிடக்குது.....

  லண்டனிலும் இப்ப மகன் அல்லது தொட்டாட்டு வேலைக்கு இன்னொருவரோடுதான் ஐயர் வாறது.

  On 28/9/2021 at 17:07, valavan said:

  ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

   

  சந்நியாசந்தான். வேறென்ன.???

  😀😂

  • Haha 1
 18. On 14/9/2021 at 20:25, மோகன் said:

  Rank  ஆனது நிபந்தனைகள் பதிப்பு 4 வெளியிட்ட காலப்பகுதியில் இருக்கவில்லை. இது இவ்வருட நடுப்பகுதி அளவிலேயே இந்தக் களத்திற்குரிய Script உருவாக்கியவர்களால் இணைக்கப்பட்டது. அடுத்த விதிமுறைகள் பற்றிய விடயத்தில் இது பற்றிய விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.

   

  நீங்கள் நடைமுறையில் கொண்டுவந்த விடயம் பற்றி உங்களாலேயே தெளிவான பதிலைக் கூற முடியவில்லையா????? Script உருபாக்குபவர்கள் உங்கள் அனுமதியின்றி ஒன்றை உருவாக்குவார்களா???? இந்த  ராங்க் விடயம் பற்றி தெளிவாகக் கூறினால் நன்று மோகன்.

 19. On 29/9/2021 at 03:51, ஈழப்பிரியன் said:

  அடுத்த வருடம் வரை பொறுக்க மாட்டியளோ?

  அந்தப் பொறுமை இருந்தால் எங்கேயோ போயிருப்பனே.

  20 hours ago, பெருமாள் said:

  பனி நிறைந்த நாட்டில் வீட்டுத்தோட்டம் செய்து அசத்தும் புலம்பெயர் தம்பதியினர் !

   

  புலம்பெயர் தமிழ் மக்கள் நாட்டை ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து   சென்றாலும் தமது அடையாங்களையும்  தமது பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும்  வாழ்ந்து  வருகின்றனர்

   

  அவ்வாறே பனிமலை கொண்ட கனடா நாட்டில்  ரொறன்டோ  நகரில் வாழும் குறித்த தம்பதியினர்  அங்கு  நமது  ஊரைப்போன்றே வீட்டு தோட்டத்தில்  பாகற்காய்  செய்கையை செய்து பலரின்  கவனித்தினை ஈர்த்ததுள்ளதுடன்  இவர்களின் இந்த முயற்சி  சமூக வலைதளங்களில் தற்போது  பெரிதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது

  https://tamonews.com/news/46519/

  கனடாவில் நிலமை வேறு. அங்கு குளிர் போன்றே வெப்பமும் அதிகம். எனவே எல்லாம் செழிப்பாக வருகின்றன. லண்டனில் இரண்டும் கெட்டான் நிலை.

  22 hours ago, vanangaamudi said:

  சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும்  தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.

  கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.

  தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

  கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு  சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K  குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.

  பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும்  பெற்றுக் கொள்ள முடியும்.

  மிக்க நன்றி வணங்கா முடி. நான் வாங்கிய மின் விளக்குகள் சூரிய ஒளிக்கு ஒப்பானவை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் review வில் காண்பார்வைக்குச் சேதம் வரலாம் என்று போட்டிருந்தனர். அதுதான் .. .. ஒரே குழப்பம்.

 20. 7 hours ago, நிழலி said:

  தெரியவில்லை அண்ணா. ஆனால் என் வீட்டில் இருந்த சாதாரண மின்குமிழ்கள் அனைத்தையும் LED இற்கு மாற்றிக் கொண்டு வருகின்றேன். இதில் LED soft white இல் இருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு மிகவும் இதமாகவும் மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது. அத்துடன் மின்சார சக்தியை பெருமளவு சேமிக்க உதவுவதால் அரசும் இதை ஊக்குவிக்கின்றது.

  நாங்களும் வீட்டில் எல்லாம் LED தான். அதன் வெப்பம் கன்றுகளுக்கு அதிகம். அதனால் பாதிப்பு இல்லை என்றே கூறுகின்றனர்.

   

  21 hours ago, பெருமாள் said:

  https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

  போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

  நீங்கள் வாங்கியது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நான் கீழே உள்ளதை ஓடர் செய்து இன்றுதான் வந்திருக்கு.

   

  https://www.amazon.co.uk/Indoor-Plants-Spectrum-Inches-Greenhouse/dp/B07PKSG12N/ref=sr_1_54?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632948195&sr=8-54

   

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.