Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  8,098
 • Joined

 • Last visited

 • Days Won

  36

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. Just now, உடையார் said:

  சமையலைவிட்டுவிட்டு தொடர்களை வாசிக்க தொடங்கி விட்டீர்கள் போல் உள்ளது,😀

  உங்கள் தோட்ட வேலைகள் எப்படி போகின்றது இப்ப

   வீட்டுபின் சிறிய பயன் தரு காட்டை உருவாக்கிவிட்டேன், இரண்டு வருடத்தில் தெரியும்

  இது தொடர்ந்து வாசித்த தொடர். இடையில் நிறுத்திவிட்டதாக நினைத்தேன். அதுதான்தேடி எடுத்துக் போடுகிறேன். இப்ப இங்கு குளிர் காலம். அதனால் கோவா, பூசணி வெங்காயம் என்பன இருக்கின்றன. ஆனால் மற்றவை எதுவும் நட முடியாதே. இன்னும் நான்கு மாதங்கள் பொறுக்க வேண்டும். அதன்பின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

  உங்கள் பயிர்களைப் படம் பிடித்துப் போடுங்கள்

 2. ரத்த மகுடம்-124

  பிரமாண்டமான சரித்திரத் தொடர்

  மதுரை தச்சர்கள் வீதிக்குள் நுழைந்த சீனனின் முகத்தில் புன்முறுவல் விரிந்தது. எதிர்பார்த்தது போலவே நான்கு பாண்டிய வீரர்கள் வீதியின் முனையில் காவலுக்கு நின்றிருந்தார்கள்.தயக்கமேதுமின்றி அவர்களை சீனன் நெருங்கினான். சற்று இடைவெளிவிட்டு மூன்று வீரர்கள் மரியாதையுடன் நிற்க... நடுவில் அலட்சியமாக நின்றிருந்த... பார்த்ததுமே தலைவன் போல் தென்பட்டவனின் அருகில் சென்று சீன பாணியில் வணங்கினான். ‘‘இது தச்சர்கள் வீதிதானே..?’’
  http://kungumam.co.in/kungumam_images/2020/20201120/20.jpg
  தலைவனின் முகத்தில் வியப்பு விரிந்தது. பிசிறில்லாமல் ஒரு சீனன் தமிழில் பேசுகிறானே... ‘‘ஆம்...’’ உதடுகளும் உச்சரித்தன. தலையும் அசைந்தன.
  ‘‘செல்லலாம் அல்லவா..?’’ பவ்யமாக சீனன் வினவினான்.‘‘செல்லக் கூடாது என நாங்கள் தடுக்கவில்லையே...’’ மீசை அதிர தலைவன் சிரித்தான். ‘‘செல்வதற்குத்தானே வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன..?’’

  ‘‘காவலுக்கு நிற்கிறீர்களே... ஒருவேளை செல்ல அனுமதியில்லையோ என்று நினைத்தேன்...’’ மீண்டும் தலைவனை வணங்கிய சீனன், வீதியில் நடக்கத் தொடங்கினான்.‘‘யாரைப் பார்க்க வேண்டும்..?’’
  நின்று திரும்பி தலைவனை ஏறிட்டான் சீனன். ‘‘வீரபாண்டிய தச்சரை...’’
  ‘‘என்ன விஷயமாக..?’’

  ‘‘கடல் பயணத்தில் அராபியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள சில பொறிகளை புதிதாக உருவாக்கி கலத்தில் பதிக்க வேண்டும்...’’
  காவலர் தலைவனின் கண்கள் இடுங்கின. ‘‘உங்கள் மரக் கலத்தை எங்கு நிறுத்தியிருக்கிறீர்கள்..?’’‘‘கொற்கையில்! அங்குள்ள துறைமுகக் காவலர்களுக்கு சின் மங் சின் என்றால் தெரியும்... அதுதான் எனது பெயர். மரக்கலத்தின் அடிப்பகுதியில் படிந்த பாசிகளை அங்கு அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். பழுதடைந்த மரப் பலகைகளை நீக்கிவிட்டு புதிய பலகைகளை பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இந்தப் பணிகள் முடிய எப்படியும் ஒரு திங்களாகும். அதற்குள் வீரபாண்டிய தச்சரை சந்தித்து புதிய பொறிகளை வாங்கிச் செல்லலாம் என்று மதுரைக்கு வந்தேன்... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கொற்கைக்கு ஆள் அனுப்பி நீங்கள் விசாரிக்கலாம்...’’

  சீனனை ஏற இறங்கப் பார்த்த தலைவன், பதிலேதும் சொல்லவில்லை. மாறாக கேள்வி ஒன்றைக் கேட்டான். ‘‘கொற்கையில் தச்சர்களே இல்லையா..?’’
  ‘‘இருக்கிறார்கள்... ஆனால், தமிழகத்தில் இருக்கும் தச்சர்களில் யாருமே வீரபாண்டிய தச்சருக்கு ஈடாக மாட்டார்கள்...’’
  ‘‘... என்று யார் சொன்னது..?’’ வீரர் தலைவன் இடைவெட்டினான்.

  ‘‘எங்கள் மன்னர்!’’ கம்பீரமாக பதில் அளித்தான் சீனன்.‘‘சீன மன்னரா..?’’
  ‘‘ஆம்... தாங் வம்சத்து மன்னர்!’’தலைவனின் கண்கள் நகைத்தன. ‘‘வீரபாண்டிய தச்சரின் இல்லம் தெரியுமல்லவா..? இல்லையெனில் அடையாளம் காட்ட வீரன் ஒருவனை அனுப்புகிறேன்...’’

  ‘‘தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இடதுபுறம் ஏழாவதாக இருக்கும் இல்லம்தான் வீரபாண்டிய தச்சரின் வசிப்பிடம். இந்த நேரத்தில் என்னை வரச் சொன்னதே அவர்தான். தவிர...’’‘‘தவிர..?’’‘‘இதற்கு முன்பும் ஒருமுறை வந்திருக்கிறேன்...’’
  ‘‘எப்பொழுது..?’’

  ‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறந்தபோது!’’ சொன்ன சீனன், வீரர் தலைவனை பழையபடி வணங்கிவிட்டு வீர பாண்டிய தச்சரின் இல்லம் நோக்கி நடக்கத் தொடங்கினான்.எட்டு கண்கள் தன்னை சல்லடையிட்டு சலிப்பதை உணர்ந்தபோதும் சீனன் திரும்பவில்லை. அதே கம்பீர நடையுடன் இடதுபுறம் ஏழாவதாக இருந்த இல்லத்தை நெருங்கினான். வீட்டைச் சுற்றிலும் மூங்கில் படல் அமைக்கப்பட்டிருந்தது. ஒற்றை ஆள் நுழையும் அளவுக்கு வழியுமிருந்தது.

  அதனுள் நுழைந்தவனை சின்னஞ் சிறிய நந்தவனம் வரவேற்றது. மலர்களின் மணத்தை ஆழ்ந்து நுகர்ந்தபடியே நடந்தவன், வாயிலை அடைந்தான். கதவைத் தட்டினான்.நான்காவது முறை தட்ட கையை ஓங்கியபோது கதவு திறந்தது.கண்களால் தன்னைப் பின்தொடரும்படி சைகை செய்த பணியாளன், உட்புறமாக நடந்தான். அவனைத் தொடர்ந்த சீனன், முதலிரண்டு அறைகளைக் கடந்து தாழ்வாரத்தை அடைந்ததும் அதிர்ந்தான்.
  சீனனை வரவேற்க அங்கு காத்திருந்தவர் வீரபாண்டிய தச்சரல்ல.

  சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்!சீனனை உச்சி முதல் உள்ளங்கால் வரை தன் கண்களால் ஆராய்ந்த விக்கிரமாதித்தர், தன் கரத்தை நீட்டினார். ‘‘கச்சையைக் கொடு...’’
  ‘‘...’’
  புன்னகையுடன் தன் உதடுகளைத் திறந்து அந்தச் சொல்லைத் தனித்தனியாக சாளுக்கிய மன்னர் உச்சரித்தார்... ‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’நங்கை இதை உச்சரித்ததுமே காஞ்சியில் இருந்த புலவர் தண்டியின் மாளிகைக் கதவுகள் அகலமாகத் திறந்தன.‘‘புலவர் பூஜை அறையில் தங்களுக்காக காத்திருக்கிறார்...’’ என்றபடி நங்கையை வணங்கினாள் பணிப்பெண்.

  தலையசைத்த நங்கை பழக்கப்பட்ட பாதையில் நடந்து மாளிகையின் கொல்லைப் புறத்தை அடைந்தாள். சுமந்து வந்த மூங்கில் கூடையை இறக்கி வைத்துவிட்டு கிணற்றை அடைந்தவள் தண்ணீரை இறைத்து தன் முகம் கை கால்களைக் கழுவினாள். நங்கையின் மனம் முழுக்க ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ...’ என்ற சொல்லுக்கு இருந்த மகிமையைக் குறித்தே சுற்றிச் சுற்றி வந்தது.

  செ-லி என்றால். நா-லோ-செங்-கியா என்றால் நரசிம்ம. பா-தோ-பா-மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் நரசிம்ம போத்தவர்மன். பல்லவ இளவரசரான ராஜசிம்மரை சீனர்கள் தங்கள் மொழியில் இப்படித்தான் அழைத்தார்கள். இந்த அழைப்பே பல்லவ ஒற்றர்களுக்கான அடையாளச் சொல்லாகவும் அமைந்துவிட்டது.

  பரவசத்துடன் முந்தானையால் தன் முகத்தைத் துடைத்த நங்கை, தான் இறக்கி வைத்த மூங்கில் கூடையைத் திறந்தாள். பாரிஜாதமும் நந்தியாவட்டையும் தாமரைகளும் கூடை முழுக்க நிரம்பியிருந்தன.அவற்றைத் தனித்தனியாக பணிப்பெண் கொண்டு வந்து கொடுத்த மூன்று பூஜைத் தட்டிலும் வைத்த நங்கை, தாமரை மலர்கள் இருந்த தட்டை மட்டும், தான் எடுத்துக் கொண்டாள்.

  மற்ற இரண்டையும் இரு பணிப்பெண்கள் ஏந்த பூஜை அறைக்குள் நங்கை நுழைந்தாள்.சாம்பிராணி புகைக்கு நடுவே பஞ்சமுக விளக்கில் நெய் தீபம் எரிய... சுடரென ஒளிர்ந்தபடி மகா மேருவுக்கு புலவர் தண்டி சந்தன அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.கண்களால் பணிப்பெண்களுக்கு நங்கை ஜாடை காட்டினாள். ஓசை எழுப்பாமல் தாங்கள் சுமந்து வந்த தட்டை வைத்துவிட்டு பணிப்பெண்கள் பூஜை அறையைவிட்டு வெளியேறினார்கள்.

  அபிஷேகம் முடிந்து அஸ்திரத்தால் மகாமேருவைத் துடைத்து புலவர் பொட்டிட்டார். மகாமேரு கம்பீரமாக அமரும் அளவுக்கு இருந்த சின்னஞ்சிறிய தங்க சிம்மாசனத்தின் மீது அதை பக்தியுடன் வைத்த புலவர் தண்டி, திரும்பிப் பார்க்காமல் தன் கையை நீட்டினார்.தாமரைப் பூக்கள் இருந்த பூஜைத் தட்டை எடுத்து பயபக்தியுடன் நங்கை கொடுத்தாள்.தாமரைப் பூக்களின் இதழ்களை பக்தியோடு விரித்த புலவர், அவற்றை ஒவ்வொன்றாக மகாமேருவைச் சுற்றிலும் வைத்தார்; அலங்கரித்தார்.

  பின்னர் பாரிஜாதப்  பூக்களாலும் நந்தியாவட்டை மலர்களாலும் மகாமேருவுக்கு அர்ச்சனை செய்தார். தீபாராதனை காண்பித்து முடித்ததும் திரும்பி நங்கையைப் பார்த்து புன்னகைத்தார்.வணங்கிய நங்கை, தாம்பாளத் தட்டை எடுத்து அவரிடம் கொடுத்தாள். தட்டின் மீது கச்சை இருந்தது!
  ‘‘பல்லவ இளவல் இருக்கும் இடத்துக்கு கரிகாலனும் சிவகாமியும் சென்று விட்டார்களா..?’’ கேட்டபடியே தட்டில் இருந்து கச்சையை எடுத்தார் புலவர்.
  பதில் சொல்லாமல் நங்கை தலையைக் குனிந்தாள்.

  நங்கையை இமைக்காமல் பார்த்த புலவர் தண்டியின் கண்கள் சுருங்கின. ‘‘எதிர்பார்த்ததுதான். என் கட்டளையை அவர்கள் மதித்திருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்...’’ பூமி பிளந்து தன்னை விழுங்கிவிட வேண்டுமென்று அம்பாளிடம் பிரார்த்தனை செய்தாள் நங்கை.
  ‘‘தனிமையில் உன்னிடம் கரிகாலன் என்ன சொன்னான்..?’’புலவரை நிமிர்ந்து பார்த்த நங்கையின் கண்கள் கலங்கியிருந்தன.
  ‘‘வெட்டுப்படுவதற்காகவே, தான் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் காயை நகர்த்தியிருப்பதாக சொன்னானா..?’’
  உதடுகள் துடிக்க ஆம் என நங்கை தலையசைத்தாள்.

  ‘‘சிவகாமி வெட்டுப்படப் போகிறாள்... அதற்காகவே கரிகாலன் அவளை அனுப்பியிருக்கிறான்...’’ முணுமுணுத்த புலவரின் பார்வை சட்டென தன் கையில் இருந்த கச்சையின் மீது படிந்தது. அதை உயர்த்தி விளக்கின் ஒளியில் பார்த்தார். முன்னும் பின்னு மாக வரையப்பட்டிருந்த கோடுகளைக் காணக் காண அவரது கண்கள் விரிந்தன.‘‘இந்தக் கச்சையை உன்னிடம் யார் கொடுத்தது..? கரிகாலனா சிவகாமியா..?’’ புலவரின் கண்கள் கூர்மையடைந்தன.‘‘கரிகாலர்...’’‘‘அப்பொழுது சிவகாமி எங்கிருந்தாள்..?’’
  ‘‘கரிகாலருக்கு அருகில்...’’
  ‘‘இதில் இருக்கும் கோடுகள்..?’’

  ‘‘என் கண் முன்னால் கரிகாலர் தீட்டியது... புத்தம் புதிதான கச்சையில் அவர் தீட்டினார்...’’
  ‘‘அப்பொழுது சிவகாமி எங்கிருந்தாள்..?’’
  ‘‘கரிகாலருக்கு அருகில்...’’புலவரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘அதாவது இந்தக் கச்சை சிவகாமி அணிந்திருந்தது அல்ல... சரியா..?’’
  ‘‘ஆம்... அவள் அணிந்திருந்ததை உங்களிடம் கொடுத்திருப்பேனா..? அந்த பாவ காரியத்தை நான் செய்திருப்பேனா..?’’
  உற்சாகத்துடன் அவளை ஏறிட்டார். ‘‘நங்கை...’’
  ‘‘சொல்லுங்கள் புலவரே...’’

  ‘‘மதுரை பாதாளச் சிறைக்கு சிவகாமி ஏன் சென்றாள்..?’’
  ‘‘அசுரப் போர் வியூகத்தை பிரதி எடுக்க...’’
  ‘‘மொத்தம் எத்தனை அசுரப் போர் வியூகம்..?’’
  ‘‘இரண்டு...’’

  ‘‘இரண்டையும் தன் கச்சையில் பிரதி எடுத்தது சிவகாமிதானே..?’’
  ‘‘ஆம்...’’‘‘அதை தனித்தனியாக இரு கச்சைகளில் வரைந்து உன்னிடம் சேர்த்தது யார்..?’’
  நங்கையின் புருவங்கள் விரிந்தன.

  ‘‘சொல் நங்கை...’’
  ‘‘க...ரி...கா...ல...ர்...’’
  ‘‘இதற்கு முன் கடிகை பாலகன் வழியாக உன்னிடம் வந்து சேர்ந்த கச்சை எங்கிருக்கிறது..?’’
  ‘‘அதை கரிகாலர் பதினாறு துண்டுகளாக வெட்டி நெசவாளர்
  களிடம் ஆளுக்கு ஒரு துண்டாகக் கொடுத்திருக்கிறார்...’’‘‘இந்தக் கச்சையையும் பதினாறு துண்டுகளாக வெட்டி நெசவாளர்களிடம் கொடுக்கும்படி சொன்னார்களா..?’’  ‘‘ஆம்... சிவகாமி அப்படிச் சொன்னாள்...’’‘‘இதேபோன்று இரு கச்சைகளை கரிகாலனும் சிவகாமியும் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் கொடுத்திருக்கிறார்களா..?’’‘‘புலவரே...’’
  ‘‘அதிர்ச்சியடையாமல் பதில் சொல் நங்கை...’’

  ‘‘ஆம்...’’
  ‘‘இந்தத் தகவலை சிவகாமி இல்லாதபோது தனிமையில் உன்னிடம் கரிகாலன் சொன்னானா..?’’
  ‘‘ஆ...ம்...’’தாடியை நீவியபடி சில கணங்கள் மவுனமாக இருந்த புலவர், ஒரு முடிவுடன் தன் கரத்தில் இருந்த கச்சையை உயர்த்தினார். ஆராய்ந்தார்.
  பின் நிதானமாக அந்தக் கச்சையை அருகில் இருந்த விளக்கில் காண்பித்தார்.கச்சையின் நுனியில் தீப் பிடித்தது.
   

  (தொடரும்)

  கே.என்.சிவராமன்

  ஓவியம்: ஸ்யாம்
   

  ரத்த மகுடம்-125

  பிரமாண்டமான சரித்திரத் தொடர்
   

  ‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’ அழுத்தமாக உச்சரித்த சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், தன் முன்னால் பிரமை பிடித்து நின்ற சீனனை உற்றுப் பார்த்தார். ‘‘நீ தேடி வந்தது வீரபாண்டிய தச்சரையா அல்லது பல்லவ இளவல் ராஜசிம்மனையா என்பது முக்கியமல்ல...

  http://kungumam.co.in/kungumam_images/2020/20201127/21.jpg

  அடையாளச் சொல்தான் பிரதானம்! அதை பிசிறில்லாமல் உச்சரிப்பவருக்கு கட்டுப்பட வேண்டியது உன் கடமை! உனது தாங் வம்சத்து சீன மன்னர் இதைச் சொல்லித்தானே உன்னை தமிழகத்துக்கு அனுப்பினார்..? பிறகென்ன தயக்கம்..?!’’அளவுக்கு அதிகமாக சீனனின் கண்கள் சுருங்கின.

   

  ‘‘தெள்ளத் தெளிவாக உச்சரித்துவிட்டேன்! கச்சையை எடு!’’ நிதானமாகச் சொன்னார் விக்கிரமாதித்தர்.சீனன் அசையவில்லை.சாளுக்கிய மன்னர் அவனைப் பொருட்படுத்தவும் இல்லை. அடி மேல் அடி எடுத்து வைத்து சீனனை நெருங்கினார். அவனது இடுப்பில் இருந்து கச்சையை எடுத்தார்.
   
  இரு நுனிகளையும் தன் இரு கைகளிலும் பிடித்தார். அறையில் இருந்த அகல் விளக்கின் ஒளி வழியே அதை ஆராய்ந்தார். தலையசைத்தார். சீனனைப் பார்த்தார். தன் புருவத்தை உயர்த்தினார். கருவிழிகளால் நகைத்தார்.


  அடுத்த கணம் கச்சையின் ஒரு நுனியை விளக்கில் காண்பித்தார்.கச்சை தீப்பிடித்து எரியத் தொடங்கியது!அதிர்ச்சியும் ஆச்சர்யமும் திகைப்புமாக... விவரிக்க இயலாத உணர்வுகளுடன் கச்சை எரிவதை நங்கை பார்த்துக் கொண்டிருந்தாள்; பார்த்தபடியே சிலையாக நின்றாள்.இதற்காகத்தானே சிவகாமி தன் உயிரையும் பணயம் வைத்தாள்... மதுரை பாதாளச் சிறையில் இருளில் அடைந்து கிடந்தாள்... இதற்காகத்தானே கரிகாலர்...

  நங்கையின் நாசியும் உதடுகளும் துடித்தன. புகைமூட்டமாக கரிகாலனும் சிவகாமியும் மாறி மாறி அவள் மனக்கண்முன்னால் தோன்றினார்கள்; ஏதேதோ உரையாடினார்கள். ‘‘நங்கை...’’புலவர் தண்டியின் அழைப்பு அவளை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. ‘‘புலவரே...’’
  ‘‘இந்த சாம்பலைத் திரட்டி அந்த சிறிய வாழை இலையில் வை...’’வைத்தாள்.

  ‘‘அதை மடித்து நாரினால் லேசாகக் கட்டு...’’கட்டினாள்.‘‘எடுத்து இந்த வெள்ளித் தாம்பாளத் தட்டில் வை...’’வைத்தாள்.திருப்தியுடன் தலையசைத்த புலவர், மகாமேருவுக்கு அர்ச்சனை செய்திருந்த பாரிஜாத மலர்களையும் நந்தியாவட்டை பூக்களையும் கொஞ்சமாக எடுத்து அதே தட்டில் வைத்தார். நிமிர்ந்து நங்கையைப் பார்த்து கண்சிமிட்டினார். விக்கிரமாதித்தர் கனைத்ததும் பத்துக்கும் மேற்பட்ட தச்சர்கள் நுழைந்தார்கள்.

  அவர்கள் தச்சர் வேடத்தில் இருக்கும் சாளுக்கிய வீரர்கள் என்பதைப் புரிந்துகொள்ள சீனனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
  ‘‘இதைத் திரட்டுங்கள்...’’ தன் காலடியில் இருந்த சாம்பலை சாளுக்கிய மன்னர் சுட்டிக் காட்டினார்.

  திரட்டினார்கள்.‘‘இந்த சிறிய வாழையிலையில் சாம்பலைக் குவியுங்கள்...’’குவித்தார்கள்.‘‘இதை மடித்து நாரினால் லேசாகக் கட்டுங்கள்...’’
  கட்டினார்கள்.திருப்தியுடன் தலையசைத்த விக்கிரமாதித்தர், நிமிர்ந்து சீனனைப் பார்த்து கண்சிமிட்டினார். ‘‘நங்கை... அடிவயிற்றில் உனக்கு வலிக்கிறதல்லவா..?’’இமைக்காமல் புலவரைப் பார்த்தாள். அவர் கண்கள் சொன்ன செய்தியை உள்வாங்கினாள். ‘‘ஆம் புலவரே... எதை
  உண்டாலும் அது ஜீரணமாகாமல் வெளியில் வந்து விடுகிறது...’’

  ‘‘அடடா... இதனால் மயக்கம் வருமே...’’
  நங்கையின் முகம் தெளிந்தது. ‘‘சரியாகச் சொன்னீர்கள்... நடக்கும்போது கண்கள் இருளடைகின்றன...’’
  ‘‘அப்படியானால் உன் இடத்துக்குச் செல்வதற்கு முன் ஆதுரச் சாலைக்குச் செல்வாய் அல்லவா..?’’
  ‘‘ஆம் புலவரே... தலைமை மருத்துவரைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன்...’’

  ‘‘அப்படியானால் அவரிடம் ‘நான் கொடுத்ததாக’ச் சொல்லி இந்த பிரசாதத்தை கொடுத்து விடுகிறாயா..?’’ வெள்ளித் தாம்பாளத் தட்டை எடுத்து நங்கையிடம் கொடுத்தார். ‘‘அவசியம் அளிக்கிறேன் புலவரே...’’ சொன்ன நங்கை குனிந்து தாம்பாளத் தட்டில் இருந்த புஷ்பங்களையும் வாழையிலைப் பொட்டலத்தையும் எடுத்து தன் முந்தானையில் முடிச்சிட்டாள்.

  ‘‘வருகிறேன் புலவரே...’’ முழந்தாளிட்டு அவரை நமஸ்கரித்தவள், எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
  ‘‘நடை தள்ளாடும்... அடிக்கடி பசியால் மயக்கம் வரும்... எச்சரிக்கையுடன் காஞ்சி ஆதுரச் சாலைக்கு செல்...’’‘‘வீரனே... அடிவயிற்றில் உனக்கு வலிக்கிறதல்லவா..?’’ தச்சனின் வேடத்தில் இருந்தவனைப் பார்த்து விக்கிரமாதித்தர் அக்கறையுடன் கேட்டார்.

  இமைக்காமல் மன்னரைப் பார்த்தான் அந்த வீரன். அவர் கண்கள் சொன்ன செய்தியை உள்வாங்கினான். ‘‘ஆம் மன்னா... எதை உண்டாலும் அது ஜீரணமாகாமல் வெளியில் வந்து விடுகிறது...’’‘‘அடடா... இதனால் மயக்கம் வருமே...’’வீரனின் முகம் தெளிந்தது. ‘‘சரியாகச் சொன்னீர்கள்... நடக்கும்போது கண்கள் இருளடைகின்றன...’’‘‘அப்படியானால் உன் இல்லத்துக்குச் செல்வதற்கு முன் ஆதுரச் சாலைக்குச் செல்வாய் அல்லவா..?’’
  ‘‘ஆம் மன்னா... தலைமை மருத்துவரைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன்...’’‘‘அப்படியானால்  அவரிடம் ‘நான் கொடுத்ததாக’ச் சொல்லி இந்த பிரசாதத்தை கொடுத்து  விடுகிறாயா..?’’ வாழையிலைப் பொட்டலத்தை எடுத்து அந்த வீரனிடம் கொடுத்தார் விக்கிரமாதித்தர்.  

  ‘‘அவசியம்  அளிக்கிறேன் மன்னா...’’ சொன்ன வீரன், மரியாதையுடன் அதைப் பெற்றுக் கொண்டு விக்கிரமாதித்தரை வணங்கினான்.
  ‘‘வருகிறேன் மன்னா...’’ ‘‘நடை தள்ளாடும்... அடிக்கடி பசியால் மயக்கம் வரும்... எச்சரிக்கையுடன் மதுரை ஆதுரச் சாலைக்கு செல்...’’
  புலவர் தண்டியின் சொற்களில் புதைந்திருந்த கட்டளையை நங்கை பூரணமாக உள்வாங்கினாள். புரிந்து கொண்டதற்கு
  அறிகுறியாக தலையசைத்தாள்.

  பூஜையறையை விட்டு வெளியே வந்தவள், நிதானமாக மாளிகையைவிட்டு வெளியே வந்தாள். சாலையில் கால் வைத்ததும் நடக்கவே சிரமப்பட்டாள். அவ்வப்போது மயக்கம் வந்ததால் தள்ளாடினாள். நின்றாள். சமாளித்தாள். நடந்தாள். தள்ளாடினாள். நின்றாள். சமாளித்தாள். நடந்தாள்.
  இப்படியே ஒரு நாழிகை நடந்து காஞ்சியின் ஆதுரச் சாலைக்கு வந்து சேர்ந்தாள்.

  நோயாளிகளின் நாடியைப் பார்த்து பரிசோதித்தபடி அவர்களுக்கு பச்சிலையை மருத்துவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
  அனைத்தையும் கவனிக்காதது போல் தலைமை மருத்துவரின் அறைக்குள் நங்கை நுழைந்தாள். ஆசனத்தில் அமர்ந்திருந்த
  தலைமை மருத்துவரைப் பார்த்து புன்னகைத்தாள்.அவரை நெருங்கி எதையோ சொல்வதற்காக வாயைத் திறந்தாள்.

  நங்கை என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தாளோ... எந்த சொற்களை உச்சரிக்க வேண்டும் என எண்ணினாளோ... அதே சொல்லை... சொற்களை... யாரோ அவளுக்குப் பின்புறமிருந்து உச்சரித்தார்கள்!‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’திகைப்புடன் திரும்பிய நங்கை, தனக்குப் பின்னால் கைகளைக் கட்டியபடி நின்றிருந்த மனிதரைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தாள்.

  சாளுக்கிய மன்னரின் சொற்களில் புதைந்திருந்த கட்டளையை அந்த வீரன் முழுமையாக உள்வாங்கினான். புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்தான்.அந்த அறையிலிருந்து வெளியே வந்தவன், நிதானமாக வீரபாண்டிய தச்சரின் இல்லத்தை விட்டு வெளியே வந்தான். வீதியில்  கால் வைத்ததும் நடக்கவே சிரமப்பட்டான். அவ்வப்போது மயக்கம் வந்ததால்  தள்ளாடினான். நின்றான். சமாளித்தான். நடந்தான். தள்ளாடினான். நின்றான்.  சமாளித்தான். நடந்தான்.

  இப்படியே ஒரு நாழிகை நடந்து மதுரையின் ஆதுரச் சாலைக்கு வந்து சேர்ந்தான். நோயாளிகளின் நாடியைப் பார்த்து பரிசோதித்தபடி அவர்களுக்கு பச்சிலையை மருத்துவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.அனைத்தையும்  கவனிக்காதது போல் தலைமை மருத்துவரின் அறைக்குள் அந்த வீரன் நுழைந்தான்.  ஆசனத்தில் அமர்ந்திருந்த தலைமை மருத்துவரைப் பார்த்து புன்னகைத்தான்.
   

  அவரை நெருங்கி எதையோ சொல்வதற்காக வாயைத் திறந்தான்.அவன் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ... எந்த சொற்களை உச்சரிக்க வேண்டும்  என எண்ணினானோ... அதே சொல்லை... சொற்களை... யாரோ அவனுக்குப் பின்புறமிருந்து  உச்சரித்தார்கள்!
   

  ‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’திகைப்புடன் திரும்பிய அந்த வீரன், தனக்குப் பின்னால் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தவனைக் கண்டதும் உறைந்தான்.
   

  ‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ! அடையாளச் சொல் சரிதானே நங்கை!’’ கண்களில் குரூரம் படர நகைத்த அந்த மனிதர், தன் வலது கையை நீட்டினார். ‘‘கொடு...’’‘‘எ...தை... நான்... நான்... சிகிச்சைக்காக வந்தேன்...’’ நங்கை தடுமாறினாள்.‘‘அடிவயிறு வலிப்பதற்காகவா..! எதை உண்டாலும் ஜீரணமாகாமல் இருப்பதற்காகவா..!
   
  பசி மயக்கத்தால் தடுமாறித் தடுமாறி நீ நடப்பதற்காகவா!’’ ஆதுரச் சாலையே இடிந்து விழும் அளவுக்கு வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதர், நங்கையை நெருங்கினார். ‘‘புலவர் தண்டியின் பூஜை பிரசாதத்தைக் கொடு!’’கணத்துக்கும் குறைவான நேரம் தயங்கியவள், பிறகு தன் முந்தானையில் சுருட்டி வைத்திருந்த பூக்களை எடுத்து அந்த மனிதரிடம் கொடுத்தாள்.‘‘வாழையிலைப் பொட்டலம்..?’’ அந்த மனிதரின் கண்களில் இருந்து ஜ்வாலை வீசியது.  

   

  உதட்டைக் கடித்தபடி அதையும் எடுத்துக் கொடுத்தாள்.பூக்களைத் தரையில் உதறிய அந்த மனிதர், வாழையிலைப் பொட்டலத்தை எடுத்து தன் நாசிக்கு அருகில் கொண்டு சென்றார். ஆழமாக முகர்ந்தார். ‘‘சாம்பல் மணக்கிறது! எரிந்தது கச்சையல்லவா!’’ சொன்னவர் நங்கையை நிமிர்ந்து பார்த்தார்.
   
  ‘‘கெட்டிக்காரன்தான்... இந்தக் கணத்தில் வாழையிலைப் பொட்டலத்துடன் இங்கு நீ வந்து நிற்பாய் என்று சரியாகவே கணித்துச் சொன்னான்... பல்லவ உபசேனாதிபதியும் பல்லவ இளவலின் ஆருயிர் நண்பனும் புலவர் தண்டியின் அணுக்க சீடனுமான கரிகாலன்!’’ கருவிழிகள் மின்ன நகைத்தார்.

  அவர் சாளுக்கிய போர் அமைச்சரான ராம புண்ய வல்லபர்!
   

  ‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ! அடையாளச் சொல் சரிதானே வீரனே!’’  கண்களில் குரூரம் படர நகைத்த அந்த மனிதன், தன் வலது கையை நீட்டினான்.  ‘‘கொடு...’’‘‘எ...தை... நான்... நான்... சிகிச்சைக்காக வந்தேன்...’’ வீரன் தடுமாறினான்.‘‘அடிவயிறு  வலிப்பதற்காகவா..! எதை உண்டாலும் ஜீரணமாகாமல் இருப்பதற்காகவா..!
   
  பசி  மயக்கத்தால் தடுமாறித் தடுமாறி நீ நடப்பதற்காகவா!’’ ஆதுரச் சாலையே இடிந்து  விழும் அளவுக்கு வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதன், அச்சத்துடன் நின்றிருந்த வீரனை நெருங்கினான். ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் கொடுத்து அனுப்பிய பிரசாதத்தைக் கொடு!’’கணத்துக்கும் குறைவான நேரம் தயங்கிய அந்த வீரன், பிறகு இடுப்பிலிருந்து வாழையிலைப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தான்.

   

  அதை வாங்கிய அந்த மனிதன் தன் நாசிக்கு  அருகில் கொண்டு சென்றான். ஆழமாக முகர்ந்தான். ‘‘சாம்பல் மணக்கிறது! எரிந்தது கச்சையல்லவா!’’ சொன்னவன் வீரனை உற்றுப் பார்த்தான்.  ‘‘கெட்டிக்காரிதான்... இந்தக் கணத்தில் வாழையிலைப் பொட்டலத்துடன் இங்கு நீ  வந்து நிற்பாய் என்று சரியாகவே கணித்துச் சொன்னாள்... சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியான சிவகாமி!’’ என்றபடி கருவிழிகள் மின்ன நகைத்தான்.
   
  அவன் பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன்!சிவகாமி நிமிர்ந்தாள். மலை உச்சியில் இருந்த கோட்டை நிலவொளியில் பளபளத்தது. தன் முன்னால் இருந்த கொடியை இழுத்தாள். பலமாக இருந்தது. சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கொடியைப் பிடித்தபடி ஏறத் தொடங்கினாள்!

   

  (தொடரும்)

  கே.என்.சிவராமன்

  ஓவியம்: ஸ்யாம்
   
 3. ரத்த மகுடம்-122

  பிரமாண்டமான சரித்திரத் தொடர்

  ‘‘இதையும் நான் மிகைப்படுத்திச் சொல்வதாக நினைக்காதே ரணதீரா! நம் வணிகர்கள் தெரிவித்த கருத்துகளைத்தான் மாலை கோர்ப்பது போல் கோர்த்துச் சொல்கிறேன்...’’ பாண்டிய இளவரசனின் கண்களை சில கணங்கள் உற்றுப் பார்த்துவிட்டு சாளரத்தின் வழியே தன் பார்வையைச் செலுத்தினார் பாண்டிய மன்னர்.
  http://kungumam.co.in/kungumam_images/2020/20201106/14.jpg
  ‘‘கடலுக்குப் பெயரில்லை... ஆனால், அந்தந்த தேசத்தில் இருக்கும் முக்கியமான துறைமுகங்கள் சார்ந்து அப்பக்கத்து கடலுக்கு ஒரு பெயர் உண்டு. இப்பெயரை அந்தந்த தேசத்தவர்கள் சூட்டினாலும் வந்து செல்லும் பிற தேசத்து வணிகர்களே சம்பந்தப்பட்ட கடலுக்கும் கரையில் இருக்கும் துறைமுகத்துக்கும் நிலையான பெயரை வழங்குகிறார்கள். வரலாற்றிலும் அதுவே பதிவாகிறது...’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர் திரும்பி தன் மகன் கோச்சடையன் இரணதீரனை ஏறிட்டார்.

  ‘‘சரித்திரம் எழுதப்பட ஆரம்பித்த காலம் முதலே நம் பாண்டிய தேசத்தைச் சார்ந்த கொற்கைத் துறைமுகம் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. யவனர்களும், சோனர்களும், அராபியர்களும், சீனர்களும் கடாரத்தைச் சேர்ந்தவர்களும் நாள்தோறும் சாரி சாரியாக நம் துறைமுகத்துக்கு வருகிறார்கள்; முத்துக்களை வாங்கிக் கொண்டு கலங்களில் ஏறி தத்தம் நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

  சொல்லப்போனால் பாண்டிய நாட்டின் வருவாயே கொற்கையை நம்பித்தான் இருக்கிறது. அதனால்தான் சங்க காலம் முதலே பாண்டிய இளவரசர்கள் கொற்கைக்கு அனுப்பப்படுகிறார்கள். தென் தமிழகத்தை ஆளும் பொறுப்பும் இளவரசர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் அனுபவமே பிற்காலத்தில் அவர்கள் பாண்டிய அரியணையில் அமரும்போது இந்த மண்ணை ஆட்சி செய்ய உதவுகிறது.

  சங்க காலம் முதலே தொடரும் இந்த வழக்கம்... பழக்கம்... இன்றும் தொடர்கிறது. இத்தனைக்கும் நடுவில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம் பாண்டிய நாட்டை களப்பிரர்கள் ஆண்டார்கள். நம் மூதாதையரான கடுங்கோன் மன்னர் களப்பிரர்களுடன் போரிட்டு பாண்டிய நாட்டை மீட்டதும் மீண்டும் அந்த வழக்கமே தொடர்ந்தது... அதாவது இளவரசு பட்டம் சூட்டப்பட்டதும் பாண்டிய அரச குடும்பத்தினர் கொற்கைக்கு செல்லும் மரபு.
  ஏன்... உனது அரண்மனை கூட கொற்கையில்தானே இருக்கிறது..? சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் மதுரைக்கு விருந்தினர்களாக வந்ததை ஒட்டித்தானே மதுரைக்கே நீயும் வருகை தந்தாய்..?’’

  இரணதீரன் இமைக்காமல் தன் தந்தையையே பார்த்தான். சகலரும் அறிந்த விஷயத்தை எதற்காக இவ்வளவு விரிவாக விளக்குகிறார் என்ற வினா அவனுக்கும் எழவே செய்தது. ஆனால், காரணமில்லாமல் பாண்டிய மன்னர் எதையும் பேசமாட்டார் என்பதால் காரணத்தை அறியும் பொருட்டு அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்தான்.

  அதற்கேற்ப அரிகேசரி மாறவர்மரும் அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த காரணத்துக்கு வந்தார். ‘‘கொற்கை... முத்துக் குளிப்புக்கு பெயர் பெற்ற கொற்கை... நம் தேசத்தில் இருக்கிறது... பாண்டியர்களின் துறைமுகமாக கம்பீரமாக உலக மகுடத்தில் திகழ்கிறது... இன்று நேற்றல்ல... கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்றால்... மூத்த துறைமுகம் நம் கொற்கை... நம் பகுதியில் கிடைக்கும் முத்துக்களை வாங்குவதற்காகவே உலக அரச குடும்பத்தினர் தத்தம் நாடுகளில் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வசூல் செய்கிறார்கள். அந்தளவுக்கு நம் முத்துக்களும் நம் கொற்கைத் துறைமுகமும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்று விளங்குகிறது...

  ஆனால், ரணதீரா... உலகின் முக்கியமான பெரும் துறைமுகங்களில் ஒன்றாக கொற்கையை எவரும் கருதுவதில்லை... ஏன் என்று எப்பொழுதாவது யோசித்தாயா..?’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மரின் வதனத்தில் சோகத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘கொற்கைக்கு நிகராக சங்ககாலத்தில் சோழர்களின் காவிரிப்பூம்பட்டினம் புகழ்பெற்று விளங்கியது. ஆனால், கடற்கோளால் அத்துறைமுகப் பட்டினம் அழிந்தது. கொற்கை அப்படியே கம்பீரத்துடன் இப்பொழுது வரை இருக்கிறது.

  என்றாலும் பல்லவர்களின் எழுச்சிக்குப் பிறகு புகழ்பெற ஆரம்பித்த மல்லைத் துறைமுகம்தான் இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கியமான துறைமுகக்  கேந்திரம். இதைச் சொல்வது பாண்டியர்களான நாம் அல்ல... யவனர்கள், சீனர்கள், அராபியர்கள் போன்ற வெளிநாட்டவர்கள்.
  காரணம், பூகோள ரீதியாக மல்லைத் துறைமுகமே அந்த நாடுகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தப் பக்கம் இருக்கும் கடாரம் உள்ளிட்ட தேசங்களுக்கும் மல்லையே மலர் மாலை சூட்டுகிறது.

  கொற்கை..? சிங்களத்துடன் கூப்பிடும் தொலைவில் இருப்பதால் சிங்களத் துறைமுகங்களுக்கு தரும் புகழில் பாதியையே இந்த தேசங்கள் கொற்கைக்கு வழங்குகின்றன. அதேநேரம் கொற்கையின் முத்துக்களை மட்டும் பாய்ந்து வந்து வாங்குகின்றன.இதையெல்லாம் இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறாயா..? மீன் தன்னைத் தற்காத்துக்கொண்டு நழுவவேண்டும் என்றுதான்.

  ரணதீரா... அராபியர்கள் காலம் காலமாக வணிகப் பொருட்களைக் கைமாற்றும் வேலையைத்தான் செய்து வருகிறார்கள். இதன் வழியாகவே கடல் பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தேசத்தில்... அவர்களது பகுதிகளில் எப்பொருளும் விளைவதில்லை... எப்பொருளுக்கும் நம் கொற்கை முத்துக்கள் போல் அவர்கள் தனி உரிமை கொண்டாடுவதில்லை.

  ஆனால், நம் கொற்கை முத்துக்களை மொத்தமாக அராபியர்களே கொள்முதல் செய்து அதை மற்ற நாடுகளுக்கு விற்கிறார்கள். ஒருவகையில் மற்ற தேசங்கள் இதை தங்களுக்கு சாதகமாகவே பார்க்கின்றன. ஏனெனில் கடல் பகுதிகளில் கொள்ளையர்கள் அதிகம். அவர்களுடன் போர் புரிய தங்கள் நாட்டு மரக்கலங்களுடன் வீரர்களை அனுப்ப வேண்டும்... அந்த வீரர்களுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் அராபியர்களிடம் இருந்து விலை கொடுத்து பொருட்களை வாங்க மற்ற தேசங்களும் அந்நாட்டு வணிகர்களும் தயாராக இருக்கின்றனர்.

  இதை அராபியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் பொருட்டே தங்கள் பிரதேசத்தில் மிகப்பெரிய வணிக சாத்தை ஜித்தாவில் அராபியர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில் மெக்கா இருக்கிறது. மதீனாவுக்கு செல்ல ஜித்தாவைக் கடக்க வேண்டும்.

  செங்கடலில் இருந்து மரக்கலங்களில் வரும் பொருட்கள் மட்டுமல்ல... வட பாரதத்தின் பகுதியில் இருந்து சீனம் வழியாக நிலவழியில் - பட்டுச் சாலையில் - கொண்டு செல்லப்படும் பொருட்களும் ஜித்தாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய வணிக சாத்துகளில்தான் மற்ற தேசத்து வணிகர்களுக்குக் கை மாறுகின்றன.

  இப்படி கை மாற்றி விடுவதன் வழியாகவே அராபிய தேசம் சீரும் சிறப்புமாக வாழ்கிறது. அளவுக்கு மீறி கொழிக்கும் இந்த வருவாய், அவர்களை அதர்மத்தின் பக்கம் மெல்ல மெல்ல திருப்ப ஆரம்பித்திருக்கிறது...’’நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், மெல்ல நடந்து வந்து தன் மகனின் தோளில் கைவைத்தார். ‘‘ஆம் ரணதீரா... நம் வணிகர்களிடம் இருந்து கிடைத்திருக்கும் செய்திகள் இதைத்தான் உணர்த்துகின்றன. திபெத்தியர்களுடன் கூட்டணி வைத்து அராபியர்கள் கடல் பகுதிகளில் அராஜகம் புரியத் தொடங்கியிருக்கிறார்கள். வேறு நாட்டு வணிக மரக்கலங்கள் தங்கள் அனுமதியில்லாமல் கடலில் பயணிக்கவே கூடாது என்ற நிலையை சிருஷ்டித்திருக்கிறார்கள்.

  இதனால் தமிழக வணிகர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அதே அளவுக்கு சீனர்களும் அல்லல்படுகிறார்கள். எப்படி நம் கொற்கை முத்துக்களுக்கு தனிச் சிறப்பு இருக்கிறதோ அப்படி சீனத்தில் உருவாகும் பட்டுக்கும் உலக நாடுகள் மத்தியில் தனிச் சிறப்பு உண்டு. சீனப் பட்டை வைத்துதான் சீனர்கள் செல்வம் கொழிக்கிறார்கள்.

  இப்பொழுது திபெத்தியர்களும் அராபியர்களும் சேர்ந்து சீனத்தின் பட்டு ஆதிக்கத்துக்கும் வேட்டு வைக்க முற்படுகிறார்கள்.இதை முறியடிக்க சீனத்தின் தாங் வம்ச அரசன் பல்லவர்களின் உதவியை நாடியிருக்கிறான்... புரிகிறதா ரணதீரா! பாண்டியர்களான நம் உதவியை சீன மன்னன் நாடவில்லை... சிங்களத்திடம் உதவி கேட்கவில்லை... வட பாரத தேசங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, பல்லவர்களின் கூட்டணியை விரும்புகிறான்... இதன் வழியாக திபெத்திய - அராபியர்களின் கடல் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறான்.

  இதன் காரணமாகவே தன் தளபதியை பல்லவ தேசத்துக்கு சீன மன்னன் அனுப்பியிருக்கிறான். அந்த சீன சேனாதிபதிதான் பல்லவ இளவல் ராஜசிம்மனுடனும் கரிகாலனுடனும் இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கிறான்.நம் ஒற்றர்கள் அந்த சீனனை... சீனத் தளபதியை... நம் மதுரை மாநகரத்தில் சில தினங்களாகப் பார்த்து வருகிறார்கள்; பின்தொடரவும் செய்கிறார்கள். சந்தேகப்படும் வகையில் எந்த நடவடிக்கையிலும் அவன் இறங்கவில்லை. என்றாலும் அந்த சீனன் மீது ஒரு கண் வைத்திருக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேன்.

  எதார்த்தம் இதுதான் ரணதீரா. பாண்டியர்களான நாம் சுதந்திர அரசமைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் பேரரசாகவில்லை. பொறு... நடைபெறவிருக்கும் சாளுக்கிய - பல்லவப் போரில் யார் பக்கம் பாண்டியர்கள் நின்றாலும் அது நம் தேசத்துக்கு எந்த வகையிலும் பயனளிக்காது... பாண்டியர்களைப் பேரரசு நிலைக்கும் உயர்த்தாது.

  பல்லவர்கள் தங்கள் நிலத்தை இன்று சாளுக்கியர்களிடம் பறிகொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிரந்தரமாக அல்ல. எதன் காரணமாகவோ வேண்டுமென்றே சாளுக்கியர்கள் வசம் தங்கள் தேசத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். இப்பொழுது மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
  எதற்காக சாளுக்கியர்களிடம் காஞ்சியை ஒப்படைத்தார்கள்... இப்பொழுது ஏன் அதை மீட்கும் போரில் இறங்குகிறார்கள்... ஆரம்பத்திலேயே ஏன் சாளுக்கியப் படைகளைத் தடுத்து நிறுத்தவில்லை..?

  விருட்சங்களாக வளரும் எந்தக் கேள்விக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. காரணமில்லாமல் பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் இப்படிச் செய்யமாட்டார்... ஆதாயம் இல்லாமல் கரிகாலன் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் இறங்க மாட்டான். ஆனால், என்ன காரணம்... என்ன ஆதாயம்..? தெரியவில்லை. தெரியாமல் காலை விடுவது ஆபத்தில் முடியும்.

  இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அமைதி காக்கச் சொல்கிறேன். இப்பொழுது நாம் நம் நிலப்பரப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதில் மட்டும் கவனம் செலுத்துவதே புத்திசாலித்தனம்...’’வாஞ்சையுடன் இரணதீரனின் கேசங்களை அரிகேசரி மாறவர்மர் தடவினார். ‘‘உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன் ரணதீரா! நிச்சயம் உன் காலத்தில் பாண்டிய நாடு மேலும் விரிவடையும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உனக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்காமல் அப்படியே பொத்திப் பொத்தி பாதுகாத்து வா. நம் சந்ததிகளிடமும் அதைக் கடத்து. பேரரசு நிலைக்கு பாண்டியர்கள் உயரவேண்டும் என்ற விதையை விதைத்துக்கொண்டே இரு. என்றேனும் ஒருநாள் அது நிறைவேறும்.

  இப்பொழுது... மனதை அலைபாய விடாமல் கொற்கைக்குச் சென்று உன் இளவரசு பணிகளைத் தொடரு. அதேநேரம் பல்லவ - சாளுக்கிய நிலைகளை நோட்டமிட்டபடியே இரு. குறிப்பாக சோழர்களை... அதுவும் கரிகாலனின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிரு... இது பாண்டிய மன்னனின் கட்டளையல்ல... உனது தந்தையின் வேண்டுகோள்!’’புரிந்ததற்கு அறிகுறியாக கோச்சடையன் இரணதீரன் தலையசைத்தான். குனிந்து தன் தந்தையின் கால்களைத் தொட்டு வணங்கினான்.

  அரிகேசரி மாறவர்மர் அவனை அள்ளி அணைத்தார். இரணதீரனின் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டார்.
  ‘‘கொற்கைக்கு இன்றே புறப்படுகிறேன் தந்தையே...’’‘‘சென்று வா... பாண்டியர்கள் வெல்லும் காலம் தொலைவில் இல்லை...’’ பாண்டிய மன்னர் ஆசீர்வதித்தார்.இரணதீரன் வெளியேறினான்.

  மதுரை மீனாட்சியம்மன் ஆலய மணி ஒலித்தது!
  ‘‘சிவகாமி...’’
  ‘‘ம்...’’
  ‘‘இது மார்கழி மாதம்...’’
  ‘‘ம்...’’
  ‘‘இது பின்னிரவு நேரம்...’’
  ‘‘ம்...’’
  ‘‘குளத்து நீர் ஜில்லிட்டிருக்கிறது... ஆனால், உன் மேனி கொதிக்கிறது... என்ன காரணம்..?’’
  ‘‘நீங்கள்தான்... என் தேகத்தில் அலைபாயும் உங்கள் கரங்கள்தான்... நீரும் புகாத வண்ணம் என் உடலோடு இழையும் உங்கள் உடல்தான்...’’ என சிவகாமியால் எப்படிச் சொல்ல முடியும்..?மவுனமாக குளத்து நீரில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி நீந்தினாள்.

  கரிகாலனும் அப்படித்தான் இருந்தான். ஆனால், நீருக்குள் மூழ்கியிருந்த அவன் உடல், அவளது தேகத்தை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
  எதிர்த்திட முற்பட்ட சிவகாமியின் உடல் ஒரு கட்டத்தில் குழைந்து குழைந்து சரணடைய ஆரம்பித்தது.ஆடைகள் விலகத் தொடங்க... இரு தேகங்களும் உரசி உரசி பற்றி எரியத் தொடங்கின.அதேநேரம் மதுரை தச்சர்கள் வீதிக்குள் சீனன் நுழைந்து கொண்டிருந்தான்!
   

  (தொடரும்)

  கே.என்.சிவராமன்

  ஓவியம்: ஸ்யாம்
   

  ரத்த மகுடம் - 123

  பிரமாண்டமான சரித்திரத் தொடர்

  சிவகாமி சட்டென நீருக்குள் மூழ்கினாள். புன்னகைத்த கரிகாலன், மறுகணம் தானும் மூழ்கினான்.நீருக்கு அடியில் இருவரது தேகங்களும் உராய்ந்தன. குழைந்தன. இழைந்தன. எரிந்தன.மற்ற சமயம் என்றால் நாழிகைக் கணக்கில் சிவகாமி தன் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி நீருக்குள் அமிழ்ந்திருப்பாள். இப்பொழுது அவளால் அது இயலவில்லை. காரணம் அவளோடு ஒட்டி உறவாடிய கரிகாலன் சட்டென தன் கரங்களால் அவளை நீருக்குள் அணைத்து இறுக்கினான்.
  http://kungumam.co.in/kungumam_images/2020/20201113/20.jpg
  சுதாரித்து அவள் மீள்வதற்குள் அவளது முதுகில் இருந்த அவன் கரங்கள், கச்சையின் முடிச்சை நெகிழ்த்தின. சுதாரிப்பதற்குள் இடுப்பு முடிச்சை நெகிழ்த்தி, பின்னோக்கித் தள்ளின.சிவகாமியின் தேகமும் அதற்கு ஏற்ப ஈடுகொடுக்கத் தொடங்கியதும் அவளது புத்தி விழித்துக் கொண்டது. சட்டென தன் தலையை குளத்து நீரில் இருந்து உயர்த்தினாள். வாயைத் திறந்து சுவாசித்தவள் தன் கரங்களால் கரிகாலனைத் தள்ள முற்பட்டாள். ‘‘இது நேரமல்ல...’’ கொங்கைகள் விம்ம முணுமுணுத்தாள்.

  ‘‘இதுதான் நேரம்...’’ தன் தலையையும் குளத்துக்கு மேலே கொண்டு வந்த கரிகாலன், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
  தன் கண்களுக்கு நேராக தென்பட்ட கரிகாலனின் கருவிழிகளுக்குள் சிவகாமி ஊடுருவினாள். ‘‘இதுதான் நேரமா..?’’
  ‘‘ஆம்...’’ தடையற்று பதிலளித்த கரிகாலன், அணைத்திருந்த அவளது பரந்த முதுகைத் தடவினான்.‘‘இங்கு யாரும் வரமாட்டார்களா..?’’ நெளிந்த தன் உடலைக் கட்டுப்படுத்தாமல் வினவினாள்.‘‘மாட்டார்கள்...’’
  ‘‘நங்கை கூடவா..?’’‘‘புலவர் தண்டி உட்பட ஒருவரும் வரமாட்டார்கள்...’’

  ‘‘அதனால்தான்... அந்த தைரியத்தில்தான்...’’ மேற்கொண்டு வாக்கியத்தைத் தொடராமல் சிவகாமி நிறுத்தினாள்.‘‘ஆம்...’’ சொன்ன கரிகாலனின் கரங்கள் அவளது பின்னெழுச்சியை கெட்டியாகப் பிடித்தன. இடுப்பில் இருந்த அவள் ஆடையின் முடிச்சை அவிழ்த்து சற்றே கீழ்நோக்கி நகர்த்தின.கண்கள் தெறித்துவிடுவதுபோல் அவனைப் பார்த்த சிவகாமியின் நயனங்களில் அச்சத்தின் ரேகைகள் படரத் தொடங்கின.

  ‘‘வேண்டாம்...’’ என்று சொல்ல வாயைத் திறந்த அவள் அதரங்களை தன் உதடுகளால் கரிகாலன் மூடினான். இருவரது உமிழ்நீர்களும் சங்கமிக்கத் தொடங்கியபோது தன் உதடுகளை அவளது செவியின் மடல் அருகே கரிகாலன் கொண்டு சென்றான்.
  ‘‘சிவகாமி...’’
  ‘‘ம்...’’

  அவள் நிலை அவனுக்குப் புரிந்தது. எனவே அவளது செவி மடலை தன் பற்களால் கடித்தான்.உதறிய அவளது தேகத்தில் இருந்து பிறந்த செய்தி, அவள் மயக்கத்தில் இருந்து விடுபடுவதை உணர்த்தியது. இதற்காகவே காத்திருந்ததுபோல் அவள் செவியில் முணுமுணுக்கத் தொடங்கினான். ‘‘சிவகாமி... நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது... அடுத்து நீ செல்ல வேண்டிய இடம் எது என்பதை அறிவாய் அல்லவா..?’’

  சிவகாமியின் புத்தி விழித்துக் கொண்டது. குளத்துக்குள் சரசமாட கரிகாலன் முற்படவில்லை என்பதையும், எதையோ ரகசியமாக சொல்வதற்காகவே இப்படி தன்னுடன் இழைகிறான் என்பதையும், யார் தங்களை இந்தக் கோலத்தில் கண்டாலும் ஜலக்கிரீடை செய்வது தோன்றும் என்பதையும் புரிந்து கொண்டாள்.

  எனவே அவனது இழுப்புக்கு ஏற்ப அவளும் செல்லத் தொடங்கினாள். ‘‘அறிவேன்...’’ நாடகத்தின் பாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடிக்கத் தொடங்கினாள். தன் நாவின் நுனியால் அவன் நாசியைத் தடவினாள். ‘‘இடம் மாறிவிட்டதா..?’’‘‘இல்லை...’’ சொன்னவன் அவள் நாவின் நுனியை கணத்துக்கும் குறைவான நேரம் தன் உதடுகளால் உறிந்துவிட்டு அவள் கன்னத்தில் தன் அதரங்களைப் பதித்தான். ‘‘பாதை நினைவில் இருக்கிறதல்லவா..?’’

  ‘‘இ...ரு...க்...கி...ற...து...’’ கொதிக்கத் தொடங்கிய உடல், தன் புத்தியை சிறைப் பிடிக்க முடியாதபடி பார்த்துக் கொள்ள அதிகம் மெனக்கெட்டாள்.
  ‘‘இருப்பதை உன் மனதில் கல்வெட்டாகப் பொறிக்கிறேன்...’’ அவள் மனம் இருந்த இடத்தில் தன் கரங்களை அழுத்தினான்.
  சுண்டி விட்டதுபோல் அவள் உடல் உதறியது. அணைத்து அதை சாந்தப்படுத்தியவன், அவள் முதுகை நீவினான்.
  மெல்ல மெல்ல அவள் உடல் சமநிலைக்கு வந்தது.

  ‘‘இப்போது நாம் மல்லைக் கடற்கரையில் இருக்கிறோம்...’’
  ‘‘இல்லை... இது உறையூருக்கு அருகில் இருக்கும் குளம்...’’

  சொன்ன சிவகாமியின் நயனங்களை உற்றுப் பார்த்த கரிகாலனின் கண்களின் சிவப்பு ஏறியது. ‘‘புத்தியைச் சிதறவிடாதே...’’ பற்களைக் கடித்தவன், அவளை மேலும் இறுக்கியபடி தன் கரங்களை அவள் முதுகில் பரப்பினான். ‘‘மல்லைக் கடற்கரையில் ரவிவர்மனைச் சந்தித்தோம்... பிறகு பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மரை... அவருடன் குகை ஒன்றுக்கு சென்றோம்...’’‘‘அங்கு சாளுக்கிய போர் அமைச்சர் ராம புண்ய வல்லபர் நம்மை வரவேற்றார்...’’ வாக்கியத்தை முடித்த சிவகாமியின் மனதுக்குள்
  ஆரம்பகாலக் காட்சிகள் விரிந்தன.

  கரிகாலன், தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். தன் போக்குக்கு அவள் வரத் தொடங்கிவிட்டது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ‘‘அங்கிருந்து தப்பி வனம் ஒன்றுக்குள் புகுந்தோம்... மரம் ஒன்றின் மீது அமர்ந்தோம்... உன் முதுகில் நான் சிலவற்றை எழுதினேன்...’’நிறுத்திய கரிகாலன் குளத்துக்குள் அவளை அணைத்தபடியே அவள் முதுகில் இப்பொழுதும் தன் ஆள்காட்டி விரல் நகத்தால் மெல்ல கோடு இழுக்கத் தொடங்கினான்.

  அதற்கு ஏற்ப சிவகாமியின் குரல் ஒலித்தது. ‘‘இதுதான் தொண்டை மண்டலம்... வடக்கில் இருப்பது வேங்கடம். கிழக்கில் உள்ளது கெடிலநதிக்கரை. இதைக் கடந்தால் நடுநாடு. அங்கிருந்து சோழநாடு. தென்பக்கத்து எல்லை வழியாக மட்டுமல்ல, மேற்குப் பக்கமாகவும் கொங்குப் பகுதிக்குள் நுழையலாம். பெரும்பாலும் குன்றுகளும் மலைகளும்தான்...’’ பிரமித்த கரிகாலன் தன் நக நுனியை அவள் பின்பக்க மேட்டின் அருகில் கொண்டு சென்றான்.

  சிவகாமி சிரித்தாள். ‘‘தொண்டை மண்டலத்தின் வடக்குப் பாகம் குன்றுகள் அடர்ந்தது. அழகானது. கிழக்கு, தெற்குப் பாகங்கள் தட்டையானவை. சாரமுள்ள பூமி. அதனாலேயே வேளாண்மை நடைபெற்று வருகிறது. குன்றுகள் அடர்ந்திருந்தாலும் இயற்கையாகவே பள்ளத்தாக்குகள் அனேக இடங்களில் இருப்பதால் ஏரி, குளங்களை வெட்டி பல்லவர்கள் நீர்ப்பாசனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காவேரிப்பாக்கமும், மாமண்டூரும் எப்போதும் நீருள்ள ஏரிகள். தொண்டை மண்டலத்தில் பாயும் நதிகளில் முக்கியமானது பாலாறு. இதன் வடக்குப் பாகம் வடசுபா. தெற்குப் பாகம் தென்சுபா.

  இங்குள்ள மலைகள் தென்மேற்கிலுள்ள கங்குந்தியில் நுழைந்து வடக்கு நோக்கிச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக வேங்கடம் வரை கிழக்கு நோக்கிச் செல்கின்றன. கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கி கடப்பைக்கு போகும் ஒரு நீண்ட பள்ளத்தாக்கினால் இம்மலைத்தொடர்ச்சி பிளக்கப்பட்டு, மாமண்டூர் பள்ளத்தாக்கில் மறுபடியும் மேலெழும்பி காளஹஸ்தி என்கிற காயலா ஸ்தலத்தில் இருந்து வடகிழக்காகச்
  செல்கிறது...’’ ‘‘பிரமாதம் சிவகாமி...’’ தன் உதடுகளால் அவளது அதரங்களை மூடி முத்தமிட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.

  அவன் நகங்கள் அவள் பின்பக்கம் நகர்ந்தபடி இருக்க... சிவகாமி அதற்கு ஏற்ப சொற்களைச் சிந்தினாள். ‘‘இங்கு கீழிருந்து மேலாகச் செல்ல ஏராளமான கணவாய்கள் உண்டு. ஆனால், வண்டிகள் போகக் கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா ஆகிய மூன்று கணவாய்களே! சந்திரகிரியிலுள்ள கல்லூர் கணவாய், கடப்பைப் பியலூருக்குள் நுழைந்து தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. செய்னகுந்தா கணவாய் பழமானேரிக்குச் சென்று மொகிலியிலிருந்து வரும் செங்குத்தான பாதையுடன் இணைகிறது...’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.

  ‘‘பலே...’’ என்றபடியே தன் நகத்தை மேலும் கீழுமாக அவள் முதுகில் கீறினான்.‘‘தொண்டை மண்டலத்தின் சிறப்பு என ஜவ்வாது குன்றுகளைச் சொல்லலாம்...’’ நிறுத்திய சிவகாமி, ‘‘கரத்தை முன்னோக்கிக் கொண்டு வராதீர்கள்!’’ நாசி அதிர சிரித்தவள், தொடர்ந்தாள். ‘‘பல்லவ நாட்டின் தென் மேற்கில் ஜவ்வாது குன்றுகள் இருக்கின்றன.

  இவற்றை பள்ளத்தாக்கு ஒன்று பிரிக்கிறது. இப்பள்ளத்தாக்கு பின்னர் குறுகி மலையுடன் இணைந்து கொங்குப் பகுதியில் பெரிதாகிறது. வேங்கட மலை வழியே பல சிறு மலைத் தொடர்கள் வடக்கு, மேற்கு என தனித்தனியே நகர்கின்றன. வடக்கில் இருக்கும் சிறுமலையின் அகன்ற பள்ளத்தாக்குக்குக் கிழக்கே காளஹஸ்தியில் வடக்கு நோக்கி நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட்டிருக்கின்றன...’’  ‘‘நன்றி சிவகாமி...’’ அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தினான்.

  ‘‘அன்று சொன்னதை இன்றும் நினைவில் வைத்திருக்கிறாய்... அந்தப் பாதையில்தான் நீ செல்ல வேண்டும்...’’  
  நான்கு உதடுகளும் இணைந்தன!மதுரை தச்சர்கள் வீதிக்குள் நுழைந்த சீனனின் இடுப்பில் பதினாறு துண்டுகளாக வெட்டப்பட்ட கச்சை ஒன்று இருந்தது!
   

  (தொடரும்)   

  கே.என்.சிவராமன்

  ஓவியம்: ஸ்யாம்
   
 4. 18 Oct 2020

  ரத்த மகுடம்-120

  பிரமாண்டமான சரித்திரத் தொடர்

  ‘‘இதுதானா..?’’ சிவகாமியின் செவியை தன் நாவினால் வருடியபடியே கரிகாலன் தன் கரங்களில் இருந்த கச்சையை முழுமையாக அலசினான்.
  அதிர்ந்த தன் உடலுக்கு அடைக்கலம் தேடி அவனது பரந்த மார்பில் சிவகாமி மேலும் ஒன்றினாள். ‘‘ஆம்...’’ அவளது செவித் துவாரத்தினுள் ஊதினான். ‘‘மற்றொன்று..?’’ சிவகாமியின் மேனி சிலிர்த்தது. ‘‘அதுதான் கடந்த முறை உங்கள் கண்களை எனது கச்சையினால் மூடிக் காண்பித்தேனே...’’
  ‘‘எதை..?’’ கரிகாலனின் வதனத்தில் அப்பாவித்தனம் அளவுக்கு அதிகமாக வழிந்தது.
  http://kungumam.co.in/kungumam_images/2020/20201023/23.jpg
  தன் தலையை உயர்த்தி அவனது நாசியைக் கவ்வினாள். ‘‘அன்று காண்பித்தேனே... அதை...’’‘‘எதை..?’’ மறுபடியும் கரிகாலன் அதே வினாவைத் தொடுத்தான்.பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்தாள். ‘‘கச்சையில் வரையப்பட்டிருந்த அசுரப் போர் முறையை...’’
  நந்தவனமே அதிரும்படி கரிகாலன் நகைத்தான்.சட்டென்று அவன் உதடுகளைத் தன் உதடுகளால் மூடினாள். ‘‘யாருக்காவது கேட்டுவிட்டால் ஆபத்து...’’
  ‘‘வாய்ப்பில்லை சிவகாமி...’’ அவளது கேசங்களை வருடினான்.

  ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..?’’ காற்றுப்புகாத வண்ணம் அவன் தேகத்தோடு குழைந்தாள். ‘‘இந்த நந்தவனம் அவ்வளவு ரகசியமானதா..?’’
  ‘‘ஆம்... இது சோழ அரச குடும்பத்தினர்களுக்கு மட்டுமே தெரிந்த நந்தவனம்... இப்படியொரு பகுதி இருப்பது சோழ வீரர்களுக்குக் கூடத் தெரியாது...’’
  கரிகாலன் இப்படிச் சொல்லி முடித்த மறுகணம் -‘‘மன்னிக்க வேண்டும் கரிகாலரே...’’ என்ற குரல் எழுந்தது.
  தன் தலையை உயர்த்தி கரிகாலனைப் பார்த்தாள் சிவகாமி.நான்கு நயனங்களும் கணங்களுக்கும் குறைவான நேரம் உறவாடின.
  ‘‘இந்த இடம் அடியேனுக்கும் தெரியும்...’’ மீண்டும் அதே குரல்.கரிகாலனும் சிவகாமியும் நகைத்தார்கள்.

  ‘‘வரலாமா..?’’ குரல் கேட்டது.‘‘பொறு...’’ சொன்ன கரிகாலன் தன் கையில் இருந்த கச்சையை விரித்து இமைக்கும் பொழுதில் சிவகாமியின் மார்பை மூடினான். முதுகில் முடிச்சிட்டான். ‘‘கரடியே... வா...’’‘‘நல்லவேளையாக நாகரீகமான சொற்களால் திட்டிவிட்டீர்கள்... எங்கே தேவி உபாசனை தடைப்பட்ட கோபத்தில் சொற்களைக் கொட்டிவிடுவீர்களோ என்று பயந்தேன்...’’ நகைத்தபடியே வந்தாள் நங்கை.

  ‘‘அதெல்லாம் கடிகை பாலகனின் கல்யாண குணங்கள்! உன்னை ஆராதிக்கும்போது யார் குறுக்கே வந்தாலும் அநாகரீகமான சொற்களை அவனே உதிர்ப்பான்...’’ நாசி அதிர சிவகாமி சிரித்தாள்.நங்கையின் வதனம் சிவந்தது. சமாளித்தபடி இருவரின் அருகில் அமர்ந்தாள்.

  ‘‘வேளிர்களின் தலைவனை சிறைச்சாலையாக மாறியிருக்கும் சத்திரத்துக்கு அனுப்பிவிட்டாயா..?’’ கேட்டபடியே தன் இடுப்பில் இருந்து புத்தம் புதிதான சிவப்பு நிற கச்சை ஒன்றை எடுத்த கரிகாலன் மடமடவென்று அதில் அரக்கினால் கோடுகளை முன்னும் பின்னும்... மேலும் கீழுமாகத் தீட்டினான்.

  சிவகாமி பிரமித்தாள். அவள் அணிந்திருந்த கச்சையில் இருக்கும் அசுரப் போர் வியூகத்தை அப்படியே பிரதி எடுத்துக் கொண்டிருந்தான்... எனில் பூரணமாக வெளிப்பட்ட தன் கொங்கைகளை அவன் காணவேயில்லை... வியூகத்தை மட்டுமே உள்வாங்கியிருக்கிறான்... அன்றைய தினம் போலவே...
  சிவகாமிக்குப் பொங்கியது. தன்னையும் அறியாமல் அவனை ஒட்டியபடி அமர்ந்தாள்.

  உள்ளுக்குள் நகைத்த நங்கை, வெளியில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. இதே உணர்வை அவளும்தானே கடிகை பாலகனிடம் அனுபவிக்கிறாள்...
  ‘‘என்ன நங்கை... விடையளிக்காமல் மவுனமாகி விட்டாய்..?’’ தலையை உயர்த்திக் கேட்ட கரிகாலன், தன் கரத்தில் இருந்த கச்சையை அவளிடம் கொடுத்தான்.   

  ‘‘வார்த்தைகளற்று சிவகாமியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்...’’ முத்துக்கள் கொட்டியது போல் கலகலத்த நங்கை, கரிகாலனிடம் இருந்து அந்தக் கச்சையைப் பெற்றுக் கொண்டாள். ‘‘புலவர் தண்டியின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்... வேளிர்களின் தலைவர் இப்பொழுது காபாலிகருடனும் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் சகோதரர் அனந்த வர்மருடனும் அச்சத்திரத்தில்தான் சிறைப்பட்டிருக்கிறார்...’’ ‘‘நல்லது... என்னை...’’‘‘நம்ப வேண்டாம் என புலவர் சொன்னதாக அவரிடம் தெரிவித்துவிட்டேன்... இந்த விவரங்களை என்னைக் காண நீங்கள் வந்த அன்றே தெரிவித்துவிட்டேன்...’’‘‘அதனால் என்ன... மறுமுறை உறுதிப்படுத்திக் கொள்வதில் தவறொன்றுமில்லையே... எனது கட்டளையை நிறைவேற்றி விட்டாய்... நன்றி நங்கை...’’ கரிகாலன் எழுந்து நின்றான். ‘‘இப்பொழுது உன்னிடம் கொடுத்த கச்சையையும் பதினாறு துண்டுகளாக வெட்டி, பதினாறு இடங்களில் நெய்யக் கொடுத்து விடு...’’‘‘ஆகட்டும் கரிகாலரே...’’ நங்கையும் எழுந்து நின்றாள். ‘‘மொத்தம் இரு கச்சைகள்... முப்பத்திரண்டு துண்டுகள்... கணக்கு சரிதானே..?’’‘‘உன் கணக்கு எப்பொழுது தவறியிருக்கிறது..?’’ நங்கையை அணைத்து சிவகாமி முத்தமிட்டாள்.
   
  ‘‘நானொன்றும் கரிகாலர் அல்ல...’’ நங்கை சிணுங்கினாள்.‘‘தெரியும்... அதனால்தான் உன்னை அனுப்பிவிட்டு கரிகாலருக்கு உரியதை
  அவருக்கு கொடுக்கப் போகிறேன்...’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘இவளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் கரிகாலரே..?’’ நங்கை தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள். ‘‘முடியவில்லை நங்கை... அதனால்தான் சிவகாமியை வேறொரு இடத்துக்கு அனுப்பப் போகிறேன்...’’சுண்டிவிட்டது போல் நங்கையும் சிவகாமி யும் நிமிர்ந்தார்கள். ஒருசேர கரிகாலனை ஏறிட்டார்கள். இருவரின் வதனங்களிலும் இப்பொழுது குறும்புகள் கொப்பளிக்கவில்லை. கம்பீரமே பூத்திருந்தது.

  கரிகாலன் இமைக்காமல் அவர்கள் இருவரையும் பார்த்தான்.‘‘வருகிறேன் நங்கை... சந்திப்போம்...’’ சட்டென விடைபெற்று நகர்ந்த சிவகாமி
  நான்கடி எடுத்து வைத்ததும் நின்று கரிகாலனைத் திரும்பிப் பார்த்தாள். நயனங்களால் உரையாடினாள். அகன்றாள்.
  ‘‘சிவகாமி எங்கு செல்கிறாள்..?’’ ஆச்சர்யத்துடன் நங்கை கேட்டாள்.‘‘நான் அனுப்ப நினைத்த இடத்துக்கு...’’ கரிகாலன் நிதானமாக பதில் அளித்தான்.
  ‘‘எந்த இடம் என்று நீங்கள் சொல்லவில்லையே..?’’‘‘சிவகாமியிடம் சொன்னேனே...’’
  ‘‘எப்பொழுது..?’’

  ‘‘இப்பொழுதுதான்!’’
  ‘‘நானிருக்கும்போதா..?’’
  ‘‘ஆம்...’’
  ‘‘எனக்கு எதுவும் கேட்கவில்லையே..?’’
  ‘‘சிவகாமிக்கு கேட்டால் போறாதா..!’’
  ‘‘கரிகாலரே...’’
  ‘‘நங்கையே...’’

  ‘‘அங்கு சென்று என்ன செய்யப் போகிறாள்..?’’
  ‘‘அசுரப் போர் வியூகத்தை நிறைவேற்றப் போகிறாள்!’’
  ‘‘வியூகங்கள் என்னிடம் அல்லவா இருக்கின்றன..?’’
  ‘‘அவளல்லவா அவற்றைச் சுமந்து செல்கிறாள்!’’
  ‘‘கரிகாலரே...’’
  ‘‘நங்கையே...’’
  ‘‘விளையாடுகிறீர்களா..?’’
  ‘‘ஆம்...’’

  ‘‘புலவர் தண்டி அதை அனுமதிக்கவில்லை...’’
  ‘‘தெரியும்...’’
  ‘‘என்ன தெரியும்..?’’
  ‘‘அவர் உன்னிடம் இட்ட கட்டளை!’’
  நங்கை கூர்மையுடன் கரிகாலனைப் பார்த்தாள். ‘‘தெரிந்துமா...’’

  ‘‘அறிந்தே சிவகாமியை அனுப்பியிருக்கிறேன்! என்னையும் சிவகாமியையும் பல்லவ இளவரசர் இருக்கும் இடத்துக்குச் செல்லும்படி புலவர் தண்டி கட்டளையிட்டிருக்கிறார் அல்லவா..?’’
  ‘‘ஆம்...’’
  ‘‘அப்படிச் சென்றால் பல்லவ இளவரசர் எங்கள் இருவரையும் கைது செய்ய மாட்டாரா?!’’
  நங்கை அதிர்ந்தாள். ‘‘கரிகாலரே... பல்லவ இளவரசர் ஏன் உங்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும்..?’’
  ‘‘தெரியாதது போல் கேட்கிறாயே நங்கை...’’ அருகில் வந்து அவளது தலைக் கேசத்தைத் தடவினான். ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரை காஞ்சிக்கு வரவழைத்ததே நான்தான் என்ற உண்மையை புலவர் தண்டி கண்டுபிடித்துவிட்டார் என்பதை அறியாமலா இப்பொழுது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்...’’

  ‘‘கரிகாலரே...’’
  ‘‘உன் வழியாக புலவரிடம் மட்டுமல்ல... சாளுக்கிய மன்னரிடமும் பரஞ்சோதி உருவாக்கிய... அதுவும் பயன்படுத்தப்படாத இரு அசுரப் போர் வியூகங்களின் வரைபடத்தைக் கொடுத்திருக்கிறேன்... ம்ஹூம்... சிவகாமியையும் இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்... எனவே கொடுத்திருக்கிறோம் என்று சொல்வதே சரி... இரு தரப்பினரிடமும் கொடுத்திருக்கும் அசுரப் போர் வியூகங்களில் எந்த மாற்றத்தையும் நாங்கள் செய்யவில்லை... இப்பொழுது பல்லவர்கள் வசம் இருப்பதும் சாளுக்கியர்களின் கையில் கொடுத்திருப்பதும் சாட்சாத் பரஞ்சோதியால் உருவாக்கப்பட்ட உண்மையான அசுரப் போர் வியூகங்கள்தான்... இரு தரப்பினருக்கும் விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறோம்... இவை எல்லாம் ராஜத் துரோகக் குற்றங்கள் அல்லவா..? எனக்கும் சிவகாமிக்கும் சிரச்சேதம்தானே இதற்கான ஒரே தண்டனை..?’’
  ‘‘கரிகாலரே...’’ நங்கை தழுதழுத்தாள்.

  ‘‘அரசியல் சதுரங்க ஆட்டத்தை மன்னர்களும் ராஜ தந்திரிகளும் மட்டுமல்ல... ஒற்றர்களும் உபசேனாதிபதிகளும் கூட ஆடுவார்கள்... காய்களை நகர்த்துவார்கள்... வெட்டுவதற்காக மட்டுமல்ல... வெட்டுப்படுவதற்காகவும்! அந்த வகையில் இப்பொழுது நான் வெட்டுப்படுவதற்காகவே ஒரு காயை நகர்த்தியிருக்கிறேன்! அதுவும் முக்கியமான ஒரு காயை! இதுதான் எனது ராஜ தந்திரம்! இதுதான் கரிகாலனின் ஆட்டம்! முடிந்தால் உனது ஆசானான புலவர் தண்டி யிடம் சொல்லி அந்தக் காயை வெட்டுப்படாமல் காப்பாற்றச் சொல்!’’ நிறுத்திய கரிகாலன் அலட்சியமாக நங்கையைப் பார்த்தான்.

  ‘‘ஏன் தெரியுமா..? வெட்டுப்படுவதற்காகவே நான் நகர்த்தியிருக்கும் காய் வேறு யாருமல்ல... சிவகாமிதான்! வெட்டுப்படத்தான்... வெட்டுப் பாறைக்குத்தான்... அவளை அனுப்பியிருக்கிறேன்! இதற்கான புள்ளியை மதுரையில் இட்டேன்... இந்நேரம் பாண்டிய மன்னரும் பாண்டிய இளவரசரும் அப்புள்ளியில் கோடு கிழித்திருப்பார்கள்! அது வலையாக மாறி விரைவில் காஞ்சியின் மீது விழும்!’’

  ‘‘மந்திராலோசனை முடிந்ததுமே என்னை வந்து சந்திப்பாய் என்று நினைத்தேன் ரணதீரா...’’ பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் தன் மகனை நிதானமாக ஏறிட்டார்.இரணதீரன் எதுவும் பேசவில்லை. தன் இடுப்பில் இருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து அரிகேசரி மாறவர்மரிடம் கொடுத்தான்.‘‘இப்பொழுது உனக்கு உண்மை புரிந்திருக்குமே..?’’ பாண்டிய மன்னரின் புருவங்கள் உயர்ந்தன.

  இரணதீரன் நிமிர்ந்து தன் தந்தையை உற்றுப் பார்த்தான். ‘‘இது சிங்களர்களின் முத்திரை மோதிரம். இதை உங்களிடம் கொடுத்தது கரிகாலன். எங்கு..? மதுரை பாதாளச் சிறையில். யாரிடமிருந்து இதைக் கைப்பற்றியதாகச் சொன்னான்..? சிவகாமியிடம் இருந்து. சிவகாமி யார்..? அவள் பல்லவ இளவரசியா அல்லது சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியா என்ற சர்ச்சை இன்னமும் பல்லவ, சாளுக்கியர்களுக்கு மத்தியில் நிலவுகிறது! சரி... கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் என்ன உறவு மன்னா..?’’

  ‘‘காதலர்களாகவும் அவர்களைப் பார்த்திருக்கிறார்கள்... பகைவர்களாகவும் கண்டிருக்கிறார்கள்...’’‘‘அதாவது யாருக்குமே இதுவரை அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன உறவு நிலவுகிறது என்று தெரியாது... அப்படித்தானே மன்னா..?’’அரிகேசரி மாறவர்மரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘ம்...’’‘‘உறவு முறையே தெரியாதவர்கள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவு முறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது மன்னா?!’’
   

  (தொடரும்)

  கே.என்.சிவராமன்

  ஓவியம்: ஸ்யாம்
   

   

  ரத்த மகுடம் 121

   

  பிரமாண்டமான சரித்திரத் தொடர்

  ‘‘அதுதானே ரணதீரா காலம்தோறும் எல்லா நிலப்பரப்புகளிலும் அரங்கேறி வருகிறது..?’’ சட்டென்று பதில் அளித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மன்.‘‘அடியேன், கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் இடையிலான உறவு முறை குறித்து வினவினேன் மன்னா...’’ பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘அதற்குத்தான் விடையளித்தேன் இளவரசே...’’ மன்னர் நகைத்தார்.
  ‘‘எப்படி... பிரபஞ்சம் தழுவியா..?’’
  http://kungumam.co.in/kungumam_images/2020/20201030/20.jpg
  ‘‘பூரணத்திலிருந்து கிள்ளப்பட்ட துளியும் பூரணம்தானே..!’’‘‘அதுபோல்தான் என்கிறீர்களா..?’’‘‘எதுபோலவும்தான் என்கிறேன்!’’ நெருங்கி வந்து இரணதீரனை தோளோடு அணைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘‘உறவு முறையே தெரியாதவர்கள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவு முறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது’ என்று கேட்டாய்... இதை வியந்தாய் என்றும் கொள்ளலாம். ஆனால், எல்லா காலங்களிலும் எல்லா தேசத்தின் நிலப்பரப்புகளையும் வடிவமைப்பவர்களும் உறவுமுறையை வகுத்துச் சொல்பவர்களும் வெளியில் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்துக்கு வருபவர்கள்தான்... இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்...’’

  ‘‘நீங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள் மன்னா...’’ மரியாதையுடன் தன் கைகளைக் கட்டியபடி இரணதீரன் வார்த்தைகளை உதிர்த்தான்.
  ‘‘எல்லா காலங்களும் நிகழ்காலம்தான் ரணதீரா... கடந்த காலத்தைப் பற்றி எப்பொழுது பேசினாலும் அதை நிகழ்காலமாகவே மனிதன் கருதுகிறான்... போலவே எதிர்காலக் கனவுகளை விவரிக்கும்போதும் நிகழ்காலத்துடனேயே அதை இணைக்கிறான்...

  எழுதப்பட்ட வரலாறுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் நாடோடி களாக அலைய ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கு சவுகரியமான இடத்தில் தங்க ஆரம்பித்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே ஒரு பரப்பில் வசிப்பவர்களுடன் இரண்டறக் கலப்பதும், மனிதனின் காலடி படாத நிலத்தை வசப்படுத்தி அங்கு வாழத் தொடங்குவதும்தான் மனிதனின் இயல்பு.  

  சற்றே சிந்தித்துப் பார்... தமிழகத்துடன் யவனர்கள் வணிகம் செய்யத் தொடங்கியது எப்போது..? அறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும் சங்க காலத்திலேயே இந்த வணிகப் போக்குவரத்து ஆரம்பித்து விட்டதல்லவா..? அப்படி இங்கு வந்த யவனர்களில் எத்தனை பேர் தங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள்..? தமிழகத்திலிருந்து யவனத்துக்குச் சென்ற வணிகர்களில் எத்தனை பேர் அந்தந்த தேசங்களிலேயே தங்கிவிட்டார்கள்..? அவர்கள் எல்லாம் அந்தந்த தேசங்களுடன் இரண்டறக் கலந்துவிடவில்லையா..? அந்தந்த நாட்டின் வரைபடங்களை வரையறுப்பதிலும் மாற்றி எழுதுவதிலும் தங்கள் உழைப்பைச் செலுத்தவில்லையா..?

  இதனால்தானே இம்மண்ணின் கவி ஒருவன் பல நூறாண்டுகளுக்கு முன்பேயே ‘யாதும் ஊரே... யாவரும் கேளிர்...’ என்றான்?! எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாசகம் இது...’’நிறுத்திய தன் தந்தையை இமைக்காமல் பார்த்தான் இரணதீரன்.‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய் மகனே..?’’ அரிகேசரி மாறவர்மரின் குரலில் வாஞ்சை வழிந்தது.‘‘எந்த விதத்தில் கரிகாலன் உங்களைக் கவர்ந்தான் என்று யோசிக்கிறேன் தந்தையே...’’
  ‘‘பொறாமைப்படுகிறாயா..?’’
  ‘‘அது தவறு என்கிறீர்களா..?’’
  ‘‘எதிரியாகவே இருந்தாலும் சக வீரனை வியப்பதும் அவனுக்கு மரியாதை செலுத்துவதும் பண்பல்லவா..?’’

  ‘‘அந்தப் பண்பினால் நமது வீரத்தையும் மானத்தையும் மரியாதையையும் பறிகொடுக்கும் விதமாக நடந்து கொள்வது தவறல்லவா..?’’
  ‘‘நடந்து கொள்வதைப் பற்றிப் பேசுவதைவிட அப்படி நடந்து கொள்வதால் பெறும் பலனைக் குறித்து ஆராய்வது சரியல்லவா..?’’
  ‘‘பாண்டியர்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்...’’

  ‘‘அதிகமாக எடை போடுவதால் ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறேன்...’’
  ‘‘ஆபத்துக்கு அஞ்சுபவன் நாட்டை ஆள முடியாது...’’
  ‘‘நாட்டை ஆள்பவன் தன் நிலப்பரப்பை ஒருபோதும் பறிகொடுக்கக் கூடாது...’’
  ‘‘பறிகொடுத்திருப்பவர்கள் பல்லவர்கள்... பாண்டியர்களல்ல...’’
  ‘‘பாண்டியர்களுக்கு அப்படியொரு நிலை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை...’’
  ‘‘அளவுக்கு மீறி மிகைப்படுத்துகிறீர்கள்...’’

  ‘‘அளவுக்கு அதிகமாக கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறேன்...’’
  ‘‘அதற்காக எப்பொழுதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..?’’
  ‘‘தற்காப்பு நடவடிக்கையில் மட்டும் இப்பொழுது இறங்கினால் போதும் என்கிறேன்...’’
  ‘‘உங்கள் அகராதியில் தற்காப்புக்கான அர்த்தம் என்ன மன்னா..?’’

  ‘‘எல்லா இலக்கண நூல்களிலும் அதற்கான பொருள் ஒன்றுதான்... விழிப்புடன் இருப்பது...’’
  ‘‘நாம் விழித்திருக்கிறோமா..?’’‘‘உறக்கத்தில் இல்லை என்பது மட்டும் உண்மை ரணதீரா...’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், சாளரத்தின் அருகில் சென்று மதுரை வீதிகளைப் பார்த்தார்.அவரே பேசட்டும் என கொந்தளிக்கும் மனதுடன் இரணதீரன் மவுனமாக நின்றான்.

  சில கணங்களுக்குப் பின் அரிகேசரி மாறவர்மர் திரும்பி தன் மகனைப் பார்த்தார். ‘‘நடக்கவிருக்கும் பல்லவ - சாளுக்கியப் போரில் பாண்டியர்களும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறாய்... அதன் வழியாக பாண்டியப் பரப்பை விஸ்தரிக்கலாம் என்பது உன் எண்ணம்... ஓர் இளவரசனின் கனவு இப்படித்தான் இருக்க வேண்டும்... ஆனால், எப்பொழுதும் நிகழ்காலத்தை இறந்த காலமாக்கும் வல்லமை கனவுக்கு இருப்பதால் எந்தவொரு மன்னனும் கனவு காணக் கூடாது ரணதீரா... அவன் பாதங்கள் பூமியிலேயே ஊன்றியிருக்க வேண்டும்...’’இரணதீரனின் உதடுகள் துடித்தன.

  ‘‘தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களை தெற்கே நாமும் வடக்கே பல்லவர்களும் வீழ்த்தினோம். தனித்தனியாக அதுவும் சுதந்திரமான ராஜ்ஜியங்கள் அமைத்தோம். இதன் வழியாக சங்க காலப் பேரரசு களில் ஒன்றான பாண்டிய வம்சம் மீண்டும் தலைநிமிர்ந்தது. ஆனால், பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் இருந்த சோழர்கள் மட்டும் இப்பொழுது வரை தலைதூக்கவே இல்லை. சிற்றரசர்களா அல்லது குறுநில மன்னர்களா என்று இனம் காண முடியாத அளவுக்கு இன்று சுருங்கியிருக்கிறார்கள்.

  காரணம், களப்பிரர்களுக்கு எதிராக பாண்டியர்களும் பல்லவர்களும் போரிட்டபோது சரியான நிலைப்பாட்டை சோழர்கள் எடுக்கவில்லை. வெற்றி பெறுபவர்களின் பக்கம் அவர்கள் இணையவில்லை. எனவேதான் இப்பொழுது அவர்களுக்கு இந்த நிலை.இதை மாற்ற இப்போதைய சோழக் குடிகள் முயற்சி எடுக்கிறார்கள். வெற்றி பெறுபவர்களின் பக்கம் நின்று சுதந்திரத்தை சுவாசிக்க நினைக்கிறார்கள்.

  இதன் ஒருபகுதியாகவே சோழ இளவரசனான கரிகாலன் காய்களை நகர்த்துகிறான். சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை காஞ்சிக்கு வரவழைத்தது கூட அவன்தான் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் அவன் சாளுக்கிய உளவாளியா அல்லது பல்லவர்களின் உபசேனாதிபதியா என்ற குழப்பம் இரு தேசத்திலும் நிலவுகிறது.

  இந்த ராஜதந்திரத்தை நான் ரசிக்கிறேன் ரணதீரா... அதற்குக் காரணம் கரிகாலன் என் மைத்துனரின் மகன் என்பதல்ல... அவன் சோழர்களின் வித்து என்பதால்! இந்த தமிழகத்தின் மைந்தன்தான் அவனும் என்பதால்! பாண்டியர்கள் போலவே சோழர்களுக்கும் சங்க காலம் தொட்டே வேர் இருப்பதால்!

  இதனால்தான் அவன்மீது அன்பு அதிகரிக்கிறது. அதற்காக பாண்டிய அரியணையை அவனுக்குக் கொடுத்துவிட மாட்டேன்! இந்த அரியணை... இந்த பாண்டிய நாடு... உனக்குத்தான் சொந்தம். இதில் அமர உனக்கு மட்டுமே வீரம், தீரம் உட்பட சகல தகுதிகளும் இருக்கின்றன.அதேநேரம் சோழர்கள் தலைதூக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறேன்... அது, நமக்கு எதிரியாக யார் இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிப்பதன் ஒரு பகுதிதான்!
   

  உன்னைப் போலவே எனக்கும் பல்லவர்களைப் பிடிக்காது. பல்லவர்களை வீழ்த்த வேண்டும் என்பதே எனது லட்சியம். அதனாலேயே பால்யத்தில் பல்லவர்கள் மீது நானும் போர் தொடுத்தேன். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. நம் பாண்டிய வீரர்களை கணிசமான அளவுக்கு பறிகொடுத்ததுதான் மிச்சம்.
   
  ஏனெனில் பல்லவர்கள் வலிமையாக இருக்கிறார்கள். ஆம். நாட்டைப் பறிகொடுத்த இந்த நேரத்திலும் பல்லவர்கள் அதே வலிமையுடன்தான் திகழ்கிறார்கள். இதையும் மிகைப்படுத்தி நான் சொல்வதாகக் கருதாதே! சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் காஞ்சியை போரிட்டுக் கைப்பற்றவில்லை என்பதை நினைவில் கொள்.


  எனவே, முன்பு பாண்டிய சேனை சேதப்பட்டது போல் இப்பொழுதும்... சாளுக்கியர்களுடன் பல்லவர்கள் போரிடப் போகும் இந்த சமயத்தில் மூக்கை நுழைத்து... சேதமடைய வேண்டாம்... அமைதியாக இருங்கள்... என சூட்சுமமாக கரிகாலன் அறிவுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறான். இதோ இருக்கிறதே சிங்கள மோதிரம்... இது உணர்த்தும் செய்தி அதுதான்.

  சிங்களவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக தொடர்பு இருக்கிறது. வேறு எந்த தமிழ் மன்னருக்கும் இல்லாத தொப்புள் கொடி உறவு அது. சிங்களர்களின் ‘மகாவம்சம்’ இந்த ஜென்மாந்திர தொடர்பைத்தான் விளக்குகிறது.ஆனால், நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் இது தலைகீழாக மாறியது. வாதாபியை எரித்தபின் தன்னிடம் அடைக்கலம் தேடிவந்த சிங்கள மன்னனான மானவர்மனை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தன் கப்பற்படையையே நரசிம்மவர்ம பல்லவன் அனுப்பினான்.

  லட்சக்கணக்கான பல்லவ வீரர்கள் சிங்களத்துக்கு சென்று போரிட்டார்கள். விளைவு... பல்லவர்களிடம் அடைக்கலம் தேடி வந்த மானவர்மன் மீண்டும் சிங்கள அரியணையில் அமர்ந்தான்.இப்பொழுது சிங்கள அரியணையில் அமர்ந்திருப்பவன் மானவர்மனின் மகன். பல்லவர்கள் மீதான நன்றி அவனுக்குள்ளும் தளும்புகிறது.இந்த வரலாற்றைத்தான் கரிகாலன் இந்த முத்திரை மோதிரத்தின் வழியே சுட்டிக் காட்டுகிறான்.

  அதாவது இப்பொழுது சிங்களமும் பல்லவர்களும் நட்பு நாடுகள்... எனவே, பல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்... அப்படி நீங்கள் செய்தால் தெற்கே சிங்களப் படை வந்து உங்களைத் தாக்கும். அதுமட்டுமல்ல... தென் தமிழகத்தில் பாண்டியர்களுக்கு எதிராக கலகங்கள் உருவாகக் காத்திருக்
  கின்றன. அதை அடக்குங்கள்... உங்கள் அரியணையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்... என குறிப்பால் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறான்...’’
  பெருமூச்சுடன் நிறுத்திய அரிகேசரி மாறவர்மர் தன் மகனை நெருங்கி வந்து அவனது இரு தோள்களையும் பற்றினார்.
   

  ‘‘பல்லவ இளவரசனான ராஜசிம்மனுடன் ஒரு சீனன் சுற்றுகிறானே... அவன் யார்... எதற்காக தமிழகம் வந்திருக்கிறான்... என்று உனக்குத் தெரியுமா ரணதீரா..? ‘உறவுமுறையே தெரியாத கரிகாலனும் சிவகாமியும் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவுமுறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது’ என்று கேட்டாயே...
   
  தமிழக கடல்பரப்பின் எல்லையை சீனர்களோடு சேர்ந்து வகுக்க முற்படுகிறானே ராஜசிம்மன்... அது குறித்து என்ன நினைக்கிறாய்..? நிலமென்னும் நல்லாளை போலவே சமுத்திரம் என்னும் அன்னையும் பல்லவர்களை அரவணைக்கிறாளே ரணதீரா... இந்த நேரத்தில் அல்லவா மீன் எச்சரிக்கையுடன் நழுவ வேண்டும்! அப்போதுதானே வலையில் சிக்காமல் இருக்க முடியும்!’’ அதிர்ச்சியுடன் தன் தந்தையை ஏறிட்டான் இரணதீரன்!

   

  (தொடரும்)  

  கே.என்.சிவராமன்

  ஓவியம்: ஸ்யாம்
   
  • Like 1
 5. 7 hours ago, ராசவன்னியன் said:

  எனக்கும் வருத்தம்  தான், இந்த திரி இவ்ளோஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ நீளத்துக்கு இழுக்கணுமான்னு..! 🤔😜

  Emoticon happy face are thinking and posing Vector Image

  7 hours ago, கறுப்பி said:

  சுகமாகி வந்தது ஆறுதல்.

  நன்றி கறுப்பி

 6. On 1/12/2020 at 10:24, பெருமாள் said:

  வெளிநாட்டு வாழ்க்கை பலரையும் மாத்தி உள்ளது தலைநிறைய பிரச்சனைகளுடன் எந்த நேரமும் ஓடிக்கொண்டு இருப்பவர்களால் பக்கத்தில் கடவுள் போனால் கூட கண்டுபிடிக்க முடியாது இவ்வளவுக்கும் நிவே அக்கா வீட்டில் வந்து புத்தகம் ஒன்றை பெற்று சென்றுள்ளா.

  அதிகாலையில் எழுந்து கோப்பியோ தேநீரோ எப்பவாவது அமைதியாக  ரஸித்து குடித்து இருக்கிறீர்களா இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் ?  சாராயக்கடை பப்  போல் எனக்கு அந்த கோப்பி கடை .கொரனோ வந்த பின் அநேகமா வீட்டில்தான் .

  உங்களுக்கு படிப்பித்த ஆசிரியரை யார் என்று சொல்லுங்க விழுந்து கும்பிடனும் .

  நல்லாக் கதை விடுவியள். உங்களிடம் நான் புத்தகம் ஒன்றும் வாங்கவில்லை. அந்த வீட்டிலோ நீங்கள் வாடகைக்கு இருக்கிறியள்???😀

  7 hours ago, Maruthankerny said:

  வணக்கம் அக்கா !
  சென்ற கிழமை வாசித்தபோது ஒரே சிரிப்பு 
  பின்பு வேலையில் போயிருந்து உங்களைப்பற்றி நிறைய யோசித்தேன் 
  இப்படி வெளிப்படையாக எழுதுவத்துக்கு  மிகுந்த முதிர்ச்சி வேண்டும் என்று எண்ணுகிறேன் 
  தந்தை சாகும்போது எனது மனைவியை நான் இழுத்துக்கொண்டு இருந்தேன் என்று 
  காந்தி தனது சுயசரிசையில் எழுதி இருப்பார் ......காந்தி நிலைக்கு நாங்கள் வளர்ந்தால் 
  ஏன் எங்கள் பெயரை நாமே கெடுக்கவேண்டும் என்றுதான் யோசிப்போம் 
  ஏன் யாருக்கும் தெரியாததை தானே எழுதி கொள்கிறார்கள் என்று யோசிப்பதுண்டு 
  அப்படியொரு பக்குவம் உங்களிடமும் காணக்கூடியதாக இருக்கிறது. 

  இவற்றை உண்மையில் பதிவு செய்யவேண்டும் 
  முகநூலில் இருக்கும் எமக்கு படிப்பித்த சில ஆசிரியர்களே 
  இவ்வாறான மொக்கு பதிவுகளை பகிருவதை பார்க்கும்போது 
  எரிச்சல் வரும் மரியாதை காரணமாக எதையும் சுட்டி காட்ட முடிவதில்லை. 

   

  இப்ப எனக்கே குழப்பமாய் போச்சு. நான் எழுதியது நல்லது என்கிறீர்களா??? மொக்கை என்கிறீர்களா ????

  Thinking Face Emoticon Images, Stock Photos & Vectors | Shutterstock

 7. On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

  பெருமாளுடன் கதைக்கிறேன் என்று வேறு யாருடனோ கதைத்துவிட்டு இங்கு அதற்கென ஒரு திரியும் துறந்து தலையில் போட்ட குட்டு இன்னும் நோ  மாறவில்லை கொரனோ  முடியட்டும் ஒன்றுகூடல் வைத்தால் போச்சு .

   

  விழுந்தாலும் மீசையில மண் படவில்லை என்ற கதைதான்.

  On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

  விடிகாலையில்  சைக்கிளில் கோப்பிக்கடை போக அந்த கிரவுண்டை கடப்பது உண்டு நிறைய சனம் அதுவும் இந்த கொரனோவுக்கு பிறகு எங்கள்  சனம்  கூட்டம் கூட்டமாய்  கதைத்தபடி  நடப்பதை பார்த்துள்ளேன் அதில் நீங்கள்  நடப்பது எனக்கு தெரியாது .

   

  நாங்கள் கூட்டத்தோட கூட்டமா நடக்கிற ஆக்களா??? சிங்கம் சிங்கிளாத்தான் நடக்கும்.😎

   

  On 29/11/2020 at 14:40, பெருமாள் said:

  நானும் நம்ப வில்லை Calorie Counter Watches களின் ஸ்கிரீன் சொட் வாட்சப்பில் அனுப்பி இருந்தார்கள் இப்படியான கலோரி அளவிடும் கடிகாரம்கள் ஆப்ஸ் களை கிராக் பண்ணும் அளவுக்கு நம்ம சனம்  வளரவில்லை .

  எங்கட சனம் நல்லா முன்னேறீட்டுது. ஆனால் உந்த 5 மணித்தியாலம் தான் ???? அதுகள் ஒரு வாரத்துக்கு 5 மணிநேரம் என்று போட்டதை நீங்கள் கவனிக்கேல்லைப்போல/. 

  On 30/11/2020 at 00:38, உடையார் said:

  Jaffna Herbal Tea😂😂😂

  Funny animals running GIF - Find on GIFER

  சிரிச்சு வயிறு நொந்து போச்சு உடையார். உதென்ன உங்கள் வீட்டு மாசாலாத் தேனீரோ 🤣

 8. On 23/11/2020 at 22:35, விளங்க நினைப்பவன் said:

  இனிமேல் சாப்பாட்டில் கட்டுபாடு தானே

  அப்பிடிச் சொல்லேலாது. கொஞ்சம் உறைப்புகள் குறைத்து மாமிசங்களில்லாமல் இப்போதைக்குப் போகுது. அதுக்காக அப்பிடியே இருந்திட முடியுமா ????😀

  22 hours ago, குமாரசாமி said:

  பாத்தியளே நான் சொன்னது சரியாப்போச்சு 😁

  உங்கட தங்கச்சியைப் பற்றி நல்லாத்தான் தெரிஞ்சு வச்சிருக்கிறியள்.😀

  22 hours ago, ரதி said:

  என்ன சரியாய் போச்சுது...அவ எழுதின மாதிரி அவவுக்கு போன் எடுத்தனான்...ஆனால் என்னுடைய நம்பரை மறைத்து தான் அடித்தேன் ...சுமோ டென்சன் ஆகி விட்டார்...ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் இப்படி வந்திருக்கும் போல 😉

  ரென்சன் ஆனதுக்கு இன்னொரு காரணம் யார் என்று சொல்லாமல் கதைச்சதுக்கும்  😀

  22 hours ago, ரதி said:

  மன்னிக்க வேண்டும் சுமோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் நேரடியாய் அழைக்க முடியவில்லை ...குரலை கேட்டவுடன் நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று தெரிந்தது...திரும்ப யாழில் காண்பது மகிழ்ச்சி 
  பி;கு; நான் தொலைபேசி எடுத்து நீங்கள் நிவேதா அக்காவோ கதைக்கிறீர்கள் என்று தான் கேட்டேன் ....வேலையில் இருப்பீர்கள் என்று கொஞ்சமும்  எதிர் பார்க்கவில்லை 🙂
   

  சுமேக்கு வருத்தம் இல்லை என்றும் நினைச்சிருப்பீங்களே 😂

 9. 21 hours ago, ரதி said:

  அது யாரது எனக்கு முதல் நம்பர் மறைத்து தொலைபேசி எடுத்தவர் 🙂 பெருமாளோ 😂

  பெருமாள் நேரில் கண்டாலே தெரியாதது போல் போகும் ஆள். எனக்கு ஏன் போன் செய்யப்போறார் ????🤣

  16 hours ago, பெருமாள் said:

  ஒரு பத்து நிமிட நடைதான் அவவின் வீடு  ஏன் போன் எடுப்பான் அவவின் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய தமிழ் சனம்  போனை விட செய்தி வேகமா  வந்திடும் அனுமதியில்லாமல் இங்கு அவ இல்லாத நேரம் கதைக்க கூடாது என்று இருந்துவிட்டேன் . யாழ் நெருங்கிய உறவு அதே கதையை சொன்னபோது அப்படியா என்று கேட்டு விட்டு அமைதியாக இருக்கவேண்டி இருந்தது .  எப்படியும் சுகமாகி வந்து கதை  எழுதுவா என்ற நம்பிக்கை இருந்தது அதனால் அலட்டிக்கொள்ளவில்லை .

  இவவின்  வீட்டுக்கு பக்கத்து மைதானத்தில்  காலை 5.30மணியளவில் இருந்து தமிழ் சனம்  கூட்டம் கூட்டமா நடைபயிற்சி போட்டிக்கு செய்யுதுகள் சிலதுகள் 35ஆயிரம் காலடி கவனிக்க பெண்கள்  சன்டே போன்ற நாட்களில்  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேலான  நடை நடந்து  உடம்பை கவனிக்குதுகள் இவ  என்னடா என்றால் பாலுமகேந்திரா நினைப்பில் அந்த கிரவுண்டை காலையிலும் மாலையிலும் விழுந்து விழுந்து  போனில் போட்டொ எடுத்து முகநூலில் போடுவதுடன் சரி பிறகு  வருத்தம் வராமல் என்ன செய்யிம் ?

   

  நாங்கள் எல்லாம் தினமும் விடியக்காலமை நடந்ததாலதான் இப்படியாவது இருக்கின்றம். நீஙகள் நான் போடுற படத்திலதான் நடக்கிறவையைப் பாக்கிறியள் எண்டு தெரியுது.

  😂😀

  செக்கில் பூட்டின மாடு கூட ஐந்து மணிநேரம் தொடர்ந்து நடக்காது. இதில ஐந்து மணிநேரம் நடக்கிறதா ........ ஆரோ உங்களூர்க் காரர் கதை விட்டிருக்கினம் உங்களுக்குத் பெருமாள் 😃

  • Like 1
 10.  

  128174241_10215757921254598_445111583299

   

   

  எங்களுக்காக  உங்களை உதிர்த்து

  எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து

  உயிர் என்னும் கொடை தந்து

  உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர்

   

  தாய் மண்ணின் தடையகற்றிட

  தணியா மனதின் துணிவு கொண்டு 

  மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி

  அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர்

   

  பதின்ம வயதில் பாசம் அடக்கினீர்

  பருவவயதில் புலன்கள் அடக்கினீர்

  பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி

  எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர்

   

  எங்கள் நிலத்தை எமதேயாக்க

  உங்கள் நிலங்கள் தான் துறந்தீர்

  சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து

  காடுமேடெல்லாம் கால் பதித்தீர்

   

  ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி

  வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர்

  தமிழர் பெயரை தரணியே போற்றிட 

  தானைத் தலைவனின் தலைமை ஏற்றீர்

   

  அத்தனையும் எத்தர்களாற் அழிந்துபோனதே

  எதிரிகள் கைபட்டுக் குலைந்துபோனதே

  காட்டிக் கொடுக்கும் கயவர் கொடுமையால்

  கட்டிய கூடும் சிதைந்தே போனதே

   

  அத்தனை உயிர்களும் அவலம் தாங்கி

  எத்தனை ஈனமாய் எருக்களாய் ஆகிட

  நித்தமும் நாம் நிமிர்வுடன் நின்றது

  இத்தனை தாண்டியும் இல்லாமற் போனதே

   

  ஆண்டுகள் பலவாய் அடுக்கிக் கட்டிய

  ஆசைகளெல்லாம் நூர்ந்து போனதே

  ஓசை கொண்டு ஒலித்த குரல்கள்

  ஒட்டுமொத்தமாய் ஓய்ந்துபோனதே

   

  ஆயினும் உங்கள் அளவிடமுடியா அகத்தீயில்

  கார்முகில் கரையொதுங்க காவலரே உங்கள்

  கனவு நிறைவேறும் கணப்பொழுது வந்திடும்

  போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்

   

  அந்தநாள் வரும்வரை அடங்கிடோம் நாம்

  எத்தனை தடைகள் எங்கு தாண்டியும்

  அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும்

  ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம்

   

  தோல்வி கண்டு துவண்டோமாயினும்

  தோள்கள் துடிக்க திருக்களமாடிய

  திண்ணிய வீரராய்ப் போர்க்களம் கண்ட

  துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம்

   

  மண்ணை இழந்து மறுகினோமாயினும்

  ஊரை இழந்து உருகினோம் ஆயினும் 

  மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம்

  மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம்

   

  வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன்

  வேங்கையானவர் வீரம் மறந்திடோம்

  கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய

  உங்களின் வீரம் என்றும் மறந்திடோம்

  படை நடத்திப் பகைவரை விரட்டித்  

  துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம்

  கார்த்திகை தோறும் காவலிருக்கிறோம்

  மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே

   

  • Like 4
 11. On 25/11/2020 at 19:41, கிருபன் said:

  யாழில் அன்பானவர்கள் பலர் தேடினார்கள். நானும் ஒரு கோல் எடுத்துப் பார்ப்போம் (சாத்திரியின் புண்ணியத்தில நம்பர் இருக்குத்தானே😁) என்று நினைத்தேன். எதுக்கும் கோல் எடுக்கமுதல் முகப்புத்தகத்தை செக் பண்ணுவம் என்று பார்த்தால் “என்னைப் பிடித்த பீடை தொலைந்தது” என்று சந்தோசமாக சுவரில் இருந்தது. ஏன் சந்தோசத்தைக் கெடுப்பான் என்று ஃபோன் பண்ணவில்லை!!!

  நன்றி நன்றி 😀

  23 hours ago, nedukkalapoovan said:

  மீண்டு மீண்டும் யாழுக்கு வந்தீங்க பாருங்க.. அங்க தான் இருக்கு உங்கள் மனத்தைரியம். மன உறுதியும் நல்ல மருந்தாகும். 

  அது நிறையவே இருக்கு. அல்லது உங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு யாழில் தொடர்ந்து இருக்கமுடியுமா??😂

  21 hours ago, Sabesh said:

  வாட்சப் , முகநூல் போன்றவற்றில் வரும் தகவல்களை ஆதாரமாக வைத்துக்  கதைப்பவர்களுடன் நான் பொதுவாக முரண்படுவந்துண்டு.
  நீங்கள் உரிய நேரத்தில் மருத்துவமனை சென்று மேலும் பாதிப்படையாமல் தப்பியதில் மகிழ்ச்சி

  நன்றி சபேஷ்

 12. 9 hours ago, colomban said:

  அப்படியென்றால் சித்த வைத்தியம் பொய்யா? சித்தர்கள் பல்வெறு பிணிதீர்க்கும் ரகசியங்களை விட்டு சென்றுள்ளார்களே? பலவ‌யேதிபர்கள் தங்கபஸ்பம், குங்முமபூ, செம்பருத்திபூ போன்றவவை  சாப்பிட்டு இன்றும் நிமிர்ந்து ஆரோக்கியமாக நிற்கின்றார்களே?

   

  9 hours ago, நந்தன் said:

  கறுப்பன் குசும்புக்காரன். அக்காவ போட்டுத்தள்ள முடிவெடுத்திட்டான். 

  உதுக்கெல்லாம் அசரமாட்டம் நாங்கள்

  😀🤣😎

  8 hours ago, puthalvan said:

  வைத்தியர் ஒருநாளும் உங்களிடம் கடன் கேட்க வரமாட்டார். 

  பாவம் மனுஷன். குற்றவாளியை கண்டவுடன் தண்டனையை நிறைவேற்றிப்போட்டுது! 🤣

  நோயிலிருந்து மீண்டது சந்தோசம். அதுவும் இந்த கொரோன காலத்தில்.

   

  வரவுக்கு நன்றி புதல்வா

 13. 13 hours ago, ராசவன்னியன் said:

  இந்த மாதிரி புதுபுது adventure களை செய்து, உங்கள் வீட்டுக்காரரையும், பிள்ளைகளையும் எப்போதும் ஒரு பரபரப்பில் வைத்திருப்பதால், உங்களால் வீட்டில் நல்லா பொழுதுபோகும் போலுள்ளது. 😛

  பல முனைகளிலிருந்து கேள்விகளும், பதில்களும் வருவதும் அதற்கு நீங்களும் சீரியஸாக பதில் சொல்வதையும் பார்க்கும்போது "பசங்க" படத்தில் வரும் இந்தக் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது..!

  மீண்டு வந்தீர்கள், (உங்களை கிண்டலடித்தாலும்) யாழ்களமும் கலகலப்பாகிவிட்டது. 🤪

  Stay blessed..

   

  சிரிச்சு முடியலை அண்ணா. மூத்த மகள் அடிக்கடி சொல்வாள் அம்மா graw up என்று. வீட்டில் பொழுதுபோக நிறைய இருக்கு. நன்றி அண்ணா 😀

 14. 16 hours ago, குமாரசாமி said:

  ஆனாலும் பாருங்கோ......
  உங்களுக்கு வந்த இந்த வருத்தமும்......நீங்கள் எழுதின இந்த அனுபவ பகிர்வும் யாழ்கள உறவுகளுக்கு மட்டுமில்லை .யாழ்களத்தை வாசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் நல்லதொரு பாடமும் படிப்பினையும். ஏனென்றால் இந்த அவசர உலகில் பலரும் இப்படி மாட்டுப்பட்டு அவதிப்படுவதை கண்ணெதிரே பாத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

  உங்கள் இந்த பகிர்வுக்கு நன்றிகள் பல...👍🏽

  நன்றி குமாரசாமி

  16 hours ago, nige said:

  இது எல்லோருக்கும் ஒரு நல்ல அனுபவம். கொறோனா தொடங்கியதில் இருந்து எல்லாவீடுகளிலும் YouTube வைத்தியம்தான். எங்கட வீட்டில நான் தேநீரில் தொடங்கி இரவு சாப்பாடுவரை இஞ்சி சேர்ப்பேன். இனி அதை குறைக்க வேண்டும் என்று எண்ணத்தொன்றுகிறது..நல்ல காலம் ஒரு ஆபத்தில் இருந்து தப்பி விட்டீர்கள் இனி கவனமாய் இருங்கள்..கடவுள் என்றும் துணை நிற்பாராக ...

  நானும் முன்னர் ஒவ்வொருநாளும் இஞ்சிச் தேநீர் குடிப்பேன். இப்போது எப்பவாவது தான். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள் 😀

  13 hours ago, Kadancha said:

  சுகமாகி வந்தது ஆறுதல்.

  நன்றி கண்டசா

  • Like 1
 15. 20 minutes ago, குமாரசாமி said:

   

  கண்டதையும் தேடித்தேடி அமுக்கிற அளவுக்கு என்ன பிரச்சனை?? 😁

  நான் வேலை செய்யுமிடத்துக்கு எத்தனையோ பேர் வருவார்கள். பணமும் வரும் போகும். கொரோனா எந்தக் காசோடு வருதோ? பார்சலோடு வருதோ? என்று யார் கண்டா. அதுதான் முன்னெச்சரிக்கையாக இருப்பம் என்று நோயெதிர்ப்பைக் கூட்டத்தான் உந்தக் கூத்தெல்லாம்

  1 hour ago, பிரபா said:

  பூரண நலமடைந்து, சுகதேகியாய் நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள். 

  நன்றி பிரபா

  40 minutes ago, யாயினி said:

   இனி உங்கள் பகுதியில் எழுதுவதில் எந்த வித பிரியோசனமும் நமக்கு இல்லை.நேர விரயம் மட்டுமே.. நன்றி.

  😂😎

  1 hour ago, goshan_che said:

  வாயில் புண் இதர பிரச்சனைகளுக்கு 1/2 கிலோ பாகற்காயை அரைத்து சோறு சாப்பிடுமாப்போல் பச்சையாக சாப்பிட வேணும் என்று இன்னொரு வீடியோ வந்ததே பார்க்கவில்லையா🤣

  அடடே இன்னும் என் கண்ணுக்குப் படவில்லையே  🤣😂

 16. 25 minutes ago, vaasi said:

  உங்களை குணமடைந்து   மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

  வருகைக்கு நன்றி

  வாசி

  44 minutes ago, Justin said:

  இந்தக் கை வைத்தியம்/வீட்டு வைத்தியம் பற்றி ஒரு சுவாரசியமான அனுபவம் எனக்கு: 

  தொண்டைக் கரகரப்பு வரும் போது வெறும் தேனிருடன் தேன் கலந்து குடித்தால் போய் விடும் என்று, சில காலங்கள் அதைச் செய்து வந்தேன்.

  ஒரு நாள் தேன் முடிந்து விட்டது. சரியென்று வெறும் தேனீரை மட்டும் சுடச் சுடக் குடித்தேன், கரகரப்புக் குறைந்தது. பிறகு கொஞ்ச நாள் தேனில்லாமல் தேனீர் மட்டும்.

  பிறகு தேயிலை இல்லாத ஒரு நாளில், போனாப் போகுதென்று சுடுதண்ணீரைக் குடித்தேன். முன்னர் போலவே தொண்டைக் கரகரப்புப் போய் விட்டது.

  இதில் மருத்துவ குணம் என்று எதுவும் இல்லை, தொண்டையை நீங்கள் சூடாக்கும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து அழற்சியுடன் தொடர்பான mediators அகற்றப்படுவதால் சுகம் கிடைக்கிறது.

  சைனஸ் அடைக்கும் பிரச்சினையுள்ளோர் காரமான குடிநீருக்குப் பதிலாக காரமான (super spicy) தாய் அல்லது சைனீஸ் உணவைச் சாப்பிட்டுப் பாருங்கள். மூக்கால் கண்ணால் எல்லாம் ஓடி கிளியராகி விடும்! Decongestants போல கார உணவு வேலை செய்வதே காரணம். 

  சின்ன வெங்காயத்தையும் உள்ளியையும் பச்சையாக உண்ணச்சொல்லி ஒரு வீடியோ பார்த்து வாய் வெந்துபோகாத குறை.

  • Haha 2
 17. வகைக்கும் போனில் விசாரித்ததுக்கும் நன்றி நிழலி

  3 hours ago, MEERA said:

  இல்லை என்டு நான் நினைக்கிறன்😀😀

  சுமோவை கண்டது மகிழ்ச்சி...

  முதலில் நீங்கள் தான் போன் செய்து கதைத்தது என்று நான் யாருக்கும் சொல்லவேமாட்டன்.நன்றி மீரா. 😀😂

   

  3 hours ago, அக்னியஷ்த்ரா said:

  சுமே அன்ரி 
  நலமோடு திரும்பியமையை இட்டு மகிழ்ச்சி ,அன்ரி   உந்த பதிமார்கள்  தரும் சூரணம், உருட்டித்தரும் தார் உருண்டைகள், மூலிகை கஷாயங்கள் உடன்   படுகவனம், இலங்கையில் ஒருகாலத்தில் பல அன்ரிமார்களின்  பாசமிகு தோழன் சித்தாலேப்பையால் காலை கழற்ற வேண்டி வந்த கேசும் உண்டு  

  வருகைக்கு நன்றி அக்னியஷ்த்ரா

 18. 7 hours ago, குமாரசாமி said:

  இது என்ரை லண்டன் தங்கச்சி 😎

  சரியாய் சொன்னியள். அவ தன்னை மாட்டி விட்டாலும் எண்டு இந்தப் பக்கமே வரேல்லை  😀

  7 hours ago, colomban said:

  மிக்க மகிழ்ச்சி குணமடைந்து வந்தது

  நன்றி கொழும்பான்

  6 hours ago, உடையார் said:

  பாவம் எம் கள உறவு & குடும்பம், இப்படியெல்லாம் திட்டுவாங்கி எங்களுக்கு தகவல்களை தந்தவருக்கு நன்றி. நாங்கள் எவ்வளவு கவலைப்பட்டிருப்போம் சுமேயை காணவில்லையென்று. 😢

  இல்லை கனாடவில் இருந்து மட்டுறுத்தினரின் மனைவி😎

  அது ரதியாக்கும் 😃

  6 hours ago, மல்லிகை வாசம் said:

  சுமே அக்கா விரைவில் பூரண நலமடைய வாழ்த்துக்கள். 💐 கண்டதில் மகிழ்ச்சி. 😊

  நன்றி மல்லிகை வாசம்

  5 hours ago, Eppothum Thamizhan said:

  சுமேயை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. 

  நன்றி எப்போதும் தமிழா

  4 hours ago, நந்தன் said:

  மகிழ்ச்சி 

  நன்றி நந்தன்

 19. மஞ்சள் காமாளை என்று சொல்லியபிறகு மூன்று நாளின் பின் கட்டில் இல்லை என்று கூறி என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை கூப்பிட்டு இரத்தம் எடுத்தார்கள். மூன்றுவாரங்களாக ஒரே பத்தியச் சாப்பாடுதான். புதிய வேலை வீட்டிலிருந்து 10 நிமிடப்பயணம். எதற்கு வீட்டிலேயே சும்மா இருக்கவேண்டும். அதுபோக வேறு யாரையும் வேலைக்கு எடுத்தால் வேறு வேலை தேடவேண்டும் என எண்ணியபடி வைத்தியரிடம் வேலை செய்யலாமா என்று கேட்க, கடினமான வேலை இல்லை என்றால் செய்யலாம். அதுவும் இரண்டு நாட்கள் தான் என்கிறீர்கள் என்கிறார்.

  அன்று மாலை வீட்டில் இருக்கும்போது தொலைபேசி இலக்கம் மறைத்தபடி( No Caller ID ) ஓர் போன் வருகிறது. நான் போனை எடுக்கவில்லை. பின்னர் புதிய இலக்கத்துடன் ஒரு அழைப்பு. யார் என்று பார்த்தால் யாழ்கள உறவு. என்ன அக்கா. இலக்கம் தெரிந்தால்த்தான் எடுப்பியளோ என்று கேட்கிறார். வேலைக்குப் போன அன்று கொஞ்சம் சனம் அதிகம். தொடர்ந்துதொலைபேசி அழைப்புக்களால் வந்த டென்ஷன் என்று இருக்க ஒரு போன் வருகிறது இலக்கம் மறைத்தபடி. எடுக்காமல் விடுவோம் என்று நினைக்க அடுத்தநாள் தமிழ்ப்பள்ளி. அது தொடர்பாகவும் சிலர் இப்படி இலக்கத்தை மறைத்து போன் செய்வது. எனவே எடுப்போம் என்று எண்ணி எடுத்தால் ஒரு பெண் குரல். நீங்கள் நிவேதாவோ என்று கேட்டதாகத்தான் நினைவு. ஏனெனில் அந்த போனை எடுத்த உடனேயே எனக்கு ஒரு கஸ்டமர் வந்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து போன் கதைக்காக கூடாது. எனவே அவசரமாக நீங்கள் யார் கதைக்கிறீர்கள்? "என்னைத் தெரியேல்லையோ " என்று கேட்க சினம் வருகிறது. இலக்கம் இல்லாமல் எடுத்ததுமல்லாமல் என்னைத்தெரியுதோ என்றால் ..... "நான் வேலையில நிக்கிறன். ஆர் கதைக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ பிறகு எடுக்கிறன்" என்று சொல்ல போன் கட் ஆகிட்டுது. ஆராய் இருக்கும் என்று மண்டையைப் போட்டு உடைச்சும் விளங்கவே இல்லை. யாழில் உங்களைத் தேடீனம் என்று ஒரு உறவு மெசெஞ்சரில் செய்தி அனுப்பத்தான் வந்து பார்த்தால் யார் என்று புரிந்தது.

  மருத்துவமனை எனக்குத் தந்த மருத்துவ அறிக்கையில் "இவரின் நோய்க்குக் காரணம் இவர் அருந்திய மூலிகைத் தேநீர். இவர் தன்னைத் தானே நோயாளி ஆக்கிக்கொண்டார்" என்று இருக்க மனிசன் முதல் வேலையா நான் அரைச்சு வச்சிருந்த அத்தனை மூலிகைப் பொடிகளையும் குப்பையில் கொட்டிவிட்டார். எனக்கு வைத்தியர்கள் தந்த அறிக்கையில் நம்பிக்கை இல்லாமல் தலைமை வைத்தியரை தொடர்புகொள்கிறேன். மருந்து என்றால் எல்லாமே அளவுடன் இருக்க வேண்டும். எல்லாம் எல்லோருக்கும் ஏற்புடையதாகி விடாது. மூலிகை வைத்தியமும் இப்பிடி இப்பிடிச் செய்யவேண்டும் என்று இருக்க ஆளாளுக்கு You Tube இல் போடுவதைப் பாத்து நீங்களே வைத்தியம் செய்ய வெளிக்கிட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் தான் வரும் என்கிறார்.

  • Like 7
  • Haha 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.