Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8172
 • Joined

 • Days Won

  37

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. On 12/1/2021 at 00:47, உடையார் said:

  நீண்ட காலத்தின் பின் நல்ல செய்முறையுடன், நன்றி பகிர்வுக்கு, மாவுடன் தயிரும் கலந்து பிசைந்தால் நல்ல சுவையாக வரும்

  அடுத்த தடவை செய்து பார்க்கிறேன்.

  14 minutes ago, ஈழப்பிரியன் said:

  எனக்கு மிகவும் பிடித்தது.சாப்பாட்டுடன் கரடுமுரடான ஏதாவது ஒன்று சாப்பிடுவது வழமை.அதில் முறுக்கு பகோடா மிக்சர் அல்லது அப்பளம் ஏதாவதொன்று அனேகமாக இருக்கும்.

  இனிமேல் இதெல்லாம் சாத்தியமில்லை.
  பார்ப்போம்.

  ஏன் அண்ணா சாத்தியம் இல்லை. கட்டிய பற்கள்என்றாலும் உண்ணலாம் தானே.

 2.  

  17 hours ago, பெருமாள் said:

  பிரச்சனையை கொடுத்த்தே NHS கொரனோ  டெஸ்ட் பண்ணும் கூட்டம் காய்ஸ்ச்சல்  தொடங்கும்போதே டெஸ்ட் பண்ணுகிறார்கள் ஆனால் ரிசல்ட் ஒருகிழமைக்கு  பின்பே பாஸிட்டிஇவ்  என்று அனுப்புகிறார்கள் அந்த ஒருகிழமைக்குள்  பனடோலை  போட்ட வண்ணம் அப்பாவியாய் திரிந்து நோயை பரப்பி உள்ளனர் பலர் ..

  மிச்சம் லைபிறரிக்கு பக்கத்தில் செய்கின்றனர். இரண்டு நாளில் மகளுக்கு வந்துவிட்டது நெகரிவ் என்று.

 3. 16 hours ago, குமாரசாமி said:

  என்ன கோதாரிக்கு?   😎

  மற்றவர்கள் போடுவதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருக்குமல்லோ😃

  17 hours ago, பெருமாள் said:

  தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?

  ஒழுங்கக்காகத் தைத்ததனால் நான் வெளியே செல்லும்போது அவற்றையே உபயோகிப்பேன்.

 4. 4 minutes ago, பெருமாள் said:

  உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் இல்லை வருபவர்கள் மாஸ்க் இல்லை என்று சொல்லி நீங்கள்  போடாமல் விட்டால் உங்களுக்கு  தொற்று பரவாது என்று யார் சொன்னது ? COSTCO வில் 16 பென்ஸ் விக்கும் மாஸ்க் தமிழ்க்கடைகளில் ஒரு பவுனுக்கு விக்கினம் கண்ணாடியும் மாஸ்க்கும் கட்டாயம் கண்ணாடி தடுப்பு முழுமையான பாதுகாப்பு கிடையாது அப்படி கண்ணாடி தடுப்புகளை கொண்ட டெஸ்கோ எக்பிரசில் வேலை செய்த பல தமிழர்களுக்கு பரவி உள்ளது கவனம் ஆக இருங்கள் இன்னும் ஒரு மூன்று மாதம்தானே .

  நான் விதவிதமா தைத்தே வைத்துள்ளேன். 😀

  12 minutes ago, கிருபன் said:

  கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பிரெசெண்ட் கொடுக்க இந்த கெட்டப்பில் போனபோது 7 வயது மருமகள் திறந்த கதவை அடித்துச் சாத்திவிட்டா! ஆனால் பயந்து அழவில்லை!🙂

  கெட்டிக்கார மருமகள் அதிர்ச்சியை வெளியே காட்டேல்ல 😃நிறைய படங்கள் பாத்திருப்பா போல🤣

 5. Just now, goshan_che said:

  ஓம், தாக்கம் ஆளாளுக்கு மாறுப்படுகிறது. பலர் asymptotic எனும் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்களாம்.

  உங்கள் போஸ்ட் ஓபிசுக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் serve பண்ண மாட்டோம் என திருப்பி அனுப்ப முடியாதா?

  அப்படி அனுப்ப முடியாது. ஆனால் போடவேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனாலும் சிலர் சும்மாவே தனக்கு மூச்சுப் பிரச்சனை. போடத் தேவை இல்லை என்று சொல்லுவார்.

  2 minutes ago, nedukkalapoovan said:

  அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

  நீங்கள் போட்டாச்சா ?? நெடுக்ஸ்

 6. Just now, goshan_che said:

  கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா?

  அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர். என் தங்கைக்கு கனடாவில் இரண்டுநாள் காய்ச்சல் வந்து மூன்றாம் நாள் கொரோனா என்று ஐந்தாம் நாள் ஆள் எழுந்துவிட்டாள். என் தம்பி வேலை செய்யும் இடத்திலும் 18 பேருக்கு வந்து தம்பி மூலம் மனைவிக்கு வந்துவிட்டது. அவர்களையும் கடுமையாகத் தாக்கவில்லை. இரண்டு மூன்றுநாளில் எழுந்துவிட்டனர். என் நண்பியின் கணவர் போலீசில் இருந்தவர்.மூன்று வாரங்களாகிறது. மாறிவிட்டதுதான் என்றாலும் எழுந்து இன்னும் நடக்க முடியவில்லை. தன் உடல் அமைப்பையே முற்றாக மாற்றிவிட்டது என்கிறார் இன்று கதைக்கும்போது.

 7. 23 hours ago, கிருபன் said:

  கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

  ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

   

  கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

 8. எங்களுக்கு போஸ்ட் office திறந்துதானிருக்கு. அடிக்கடி கைகழுவப் போகவும் முடியாது. sanitizer gel தான் அடிக்கடி போட்டுக்கொண்டு வேலை செய்கிறேன். காசு, பார்சல்கள், கடிதங்கள், bills என்று எல்லாமே தொடத்தான் வேண்டும். கண்ணாடியின் உள்ளே என்பதனால் வேலை செய்யும்போது முகக் கவசம் அணியவேண்டியது இல்லை என்பது நின்மதி. 

 9. 15 hours ago, Justin said:

  கடஞ்சா, இணைப்பிற்கு நன்றி.

  ஆனால் பேராசிரியர் சதாசிவத்தின் "சுமேரிய மொழி திராவிட மொழி" என்ற எடுகோளையல்லவே நான் கேட்டது? 

  கீழடி ஆய்வில் எப்படி சுமேரியர்களோடு தொடர்பு காட்டப் பட்டிருக்கிறது என்றே கேட்டேன். ஏதாவது இருக்கிறதா?

  ஏழாம் கட்ட ஆய்வு இப்பதான் நடக்கிறது. எப்படியும் பத்தாம் கட்ட ஆய்வு வரும்வரை பொறுத்திருங்கள். ஏனெனில் அதன்பின்தான் நீங்கள் நம்பும் அறிஞர்கள் வாய்விட்டுச் சொல்வார்கள். 

  16 minutes ago, சுவைப்பிரியன் said:

  இங்கை ஒருத்தர் தமிழ் பாடசாலை திறக்க வேணும் என்டு ஒற்றைக் காலில் நின்டு திறந்தார்.ஆனால் அவர் தம் பிள்ளைகளுடன் கதைப்பது இங்கைத்தையான் மொழியில்.

  அவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம்????😀

 10. 16 hours ago, கிருபன் said:

  தமிழ் மொழி ஸ்கொலர்ஷிப் என்று ஓடுப்பட்டுத் திரியும் தாயகப் பகுதிகளில்கூட வளரக் கஷ்டப்படுகின்றது எனவும் ஆண்டு ஐந்தில் இருக்கும் பல பிள்ளைகளின் வாசிக்கும் திறன் மிகவும் குறைவு எனவும் அண்மையில் வாசித்த ஆய்வுக்கட்டுரை (பொதுவெளியில் இன்னமும் வரவில்லை) வரைபில் பார்த்தேன். அந்த நீண்ட ஆய்வுக் கட்டுரை வெளிவந்தபின்னர் யாழில் பதிகின்றேன்.

  என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உள்ள சிறுவர்களுக்கு ஆங்கில அறிவுடன், ஆளுமைகளை வளர்க்கும் soft skills சொல்லிக்கொடுக்கப்பட்டால்தான் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் உண்டாகும். 

  புலம்பெயர் நாடுகளில் இலங்கையில் இருந்து தமிழ் ஆசிரியர்களை வரவழைத்தால் மாத்திரமே தமிழ் அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கலாம். மற்றும்படி தமிழ்ப் பாடசாலைகள் பரதம், வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள் மட்டும்தான் அடுத்தடுத்த தலைமுறைகளில் பழகும்.

   

  தமிழ் கற்ற பிள்ளைகளில் பலர் இங்கும் தமிழைக் கற்பிக்கின்றார்கள். பலர் நாம் கதைப்பதுபோலவே தமிழைக் கதைக்கின்றனர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ் AL எடுக்கின்றனர். ஆனாலும் எம்மிடமுள்ள சொல்லறிவு அவர்களுக்குப் போதாது. அதேபோலத்தான் காலை பயிலும் மாணவர்களின் நிலையும். சுரத்தட்டு பயில்வோர் மட்டும் அதிகளவில் ஓரளவுக்குப் புலமையுடன் காணப்படுகின்றனர். வாய்ப்பாட்டு மற்றும் வயலின், வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிப்போர் முற்றுமுழுதாக அதுபற்றித் தெரிந்தவர்கள் என்று கூற முடியாது. அவர்களின் ஆசிரியர் எதை சொல்லிக்கொடுத்தாரோ அவற்றை மட்டுமேதான் தம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் தன்மைதான் இருக்கும்.

   

 11. 15 hours ago, goshan_che said:

  தமிழ் மொழி அகராதி அமைப்பு ஒன்று இருக்கிறதா? எனக்கு தெரிய இல்லை. 

  அறத்தமிழ், க்ரியா போன்ற அகராதிகள் உண்டு ஆனால் ஆங்கிலத்தில் கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் செய்வது போல ஒவ்வொரு வருடமும் புதிய சொற்களுக்கு அங்கிகாரம் கொடுக்கும் நடைமுறை இல்லை.

  ஆகவே அவரவர் தம் விருப்பபடி புதிய சொற்களை உருவாக்கிறனர். 

  தமிழை முதுகலை பாடமாக படிக்க கூடிய ஒரு பல்கலைகழகத்தை மையமாக வைத்து,  உலக தமிழாய்ந்த நிபுணர்கள் 20 பேரை கூட்டி, உள்ள அகராதிகள் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பெரும் அகராதியை வெளியிட்டு, வருடாந்தம் புதுபிக்கும் படி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

   

  ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் உள்ள அறிஞர்கள் கூடி இலத்திரனியல் சாதனங்களுக்கான சொற்களை உருவாக்கினார்கள். ஆனாலும் அவை எல்லாம் பயன்பாட்டில் உள்ளன என்று சொல்ல முடியாது. பின்னர் புலிகள் காலத்தில் ஈழத்திலும் பல புதிய சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகதத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர்  அறிவரசன் ஐயா தான் அச்சொற்களைக் கொடுத்தார். அவர் தற்போது இறந்துவிட்டார். புலம்பெயர் நாடுகளில் எங்கள் பாடநூல்களில்கூட அவரே பல புதிய சொற்களை உருவாக்கிச் சேர்த்தார். ஆனாலும் பல பொருட்களுக்கு இன்னமும் தமிழ்ச் சொற்கள் இல்லை என்பது பெருங் குறை. பல தமிழ் அறிஞர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஒன்றுசேர்ந்து தமிழுக்கு எதுவும் செய்யத்தான் அவர்களுக்கு முடியவில்லை.

  பல்கலைக்கழகங்களுக்கு இருக்கை அமைக்கிறேன் பேர்வழி என்று இங்கு கொஞ்சப்பேர் சேர்ந்து கோடிக்கணக்கான பணத்தை விரயமாக ஓடித்த திரிகிறார்கள். அந்தப் பணத்தை அறிஞர்களுக்கு ஊதியமாகக் கொடுத்து தமிழை அடுத்த நிலைக்குக்கொண்டுசெல்ல யாருமே முனையவில்லை.

 12. 2 hours ago, Kadancha said:

  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, சித்தாந்தங்கள், கொள்கைகளை  கடந்து, இது சாத்தியமா என்றால், இல்லை என்பதே யதார்த்த நிலை.

  உ.ம். ஆக புலத்தில் இருப்பவர்கள் பெரும்பகுதி தமது பெரும்பகுதி பொருளாதார வளத்துடன் அங்கெ திரும்பி சென்றாலும் இது சாத்தியமா?

  பொருளாதாரத்தை வெளிநாடுகளுக்கு மூடிவிட்டு, 25 - 30 % பொருளாதாரம் இழந்தும்,  உளநாட்டில் மட்டும் பொருளாதாரத்தை நடத்தும் நிலையில், அதி உச்ச பொருளாதார பாதுகாப்பில் இதுவரையில் இருப்பது அமெரிக்கா மாத்திரமே.  

  1.4 பில்லியன் சீனர்கள், இப்பொது வாங்கும்திறன் சமநிலையில் அமெரிக்காவை விஞ்சியும், ஆங்கிலம் இல்லாமல் மண்டரினை மட்டும் கொண்டு  முன்னேற முடியாமல் இருக்கிறது. 

  ஆனால், ஜப்பான் இல் ஓரளவு இது சாத்தியம், அதாவது ஜாப்பனீஸ் மொழியை மட்டும் கொண்டு முன்னேறுவது. ஏனெனில், ஜப்பான் அப்படியான ஓர் பொருளாதார கட்டமைப்பை ஆக்கி வைத்து இருக்கிறது. ஆனால், முன்பு இருந்த (1990 இல்  , ஜப்பான் இன் மத்திய வங்கியால் மறைமுகமாக உருவாக்கப்பட்ட பெருளாதார   மந்த நிலை)  முடியும் என்ற உறுதியான நிலை இல்லை.

  இதன் அடிப்படை, வளங்களை கையகப்படுத்துவதில் உள்ள திறனும் (பொதுவாக மேற்கு வன்முறை மூலமாகவும் , ஆனால் சீன இப்பொது  சமநிலை போட்டியாளர் இப்பொது),  உற்பத்தி திறனும் (இப்போது சீனா மற்றவர்களின் அறிவு, உழைப்பு  மூலதனத்தை எந்தவித்தமாக பெற்றேனும், அமெரிக்காவும் இதற்கு சளைத்தது அல்ல), சந்தை உருவாக்குதல் மற்றும் படுத்துதல் திறனும்.   

  எமது சொந்த தேசமும், அரசும் இருந்தாலும் இதுவே இப்போதைய யதார்த்தம். ஆனால், ஒப்பீட்டளவில் முன்னேறுவது இலகுவாகவும் (மற்ற எந்தவொரு சமூக தடைகளை கருத்தில் எடுக்காமல், உ.ம். சாதி), ஒரு சிறு பகுதி  தமிழை மட்டும் கொண்டு வளம் பெறும் முயற்சிக்கான பொருளாதார இடம் உருவாக்க முனையலாம்.

  சீனர்கள் தம் நாட்டுக்கு பார்சல் அனுப்பப் கொண்டுவருவார்கள். அதில் ஒரு ஆங்கிலச் சொல் கூட இருப்பதில்லை. இதில் எந்த நாடு என்று இல்லையே என்றால் நீ அனுப்பு. அது போகும் என்பர். அவர்களுக்கு விளங்கும் என்பர். நான் ஆங்கிலத்தில் அவர்கள் நாட்டின் பெயரை எழுதிவிட்டு பையில் போடுவேன். அத்தனை நம்பிக்கை தம் மொழிமேல்.

 13.  

  1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

  இலங்கையை பொறுத்தவரையில் ஆங்கிலக்கல்வியே சிறந்தது வெளிநாடு சென்றாவது தொழில் புரிய,/ அங்கு வாழ பிறருடன் உரையாட தமிழ் இனத்தவர் அல்லாதவர்களுடன் கொழும்பில் இருக்கும் தமிழர்களே தமிழில் பெரிதாக பேசமாட்டார்கள் நான் கண்டது 

   

  ஆங்கிலமொழியில் கற்றால் மட்டும்தான் அது சாத்தியமா??? ஆங்கிலத்தைத் தனியாக வெளியே படித்தால்  போதாதா???

 14. 34 minutes ago, goshan_che said:

  ஆங்கிலம் கற்பதை நான் சொல்லவில்லை. ஆங்கில மொழி மூலம் கற்பதை, medium of instruction ஆக ஆங்கிலம் இருப்பதை சொன்னேன்.

  அவர்கள் குறைவாக மதிப்பிட்டால் எனது மாத சம்பளத்தில் 10% இழந்து விடுவேன் அல்லவா அதனால்🤦‍♂️.

  எனது பிள்ளை ஆங்கில மொழி மூலம் கற்கும் போது அதையே செய்யும் இன்னொரு பெற்றாரை அதை செய்யாதே என சொல்லும் தார்மீக உரிமை இல்லை என்பதால். 

  அந்த பிள்ளைக்கு தமிழ் தெரியும். ஆனால் பள்ளி படிப்பை ஆங்கிலம் மூலம் படிக்கிறது. 

  பிரித்தானியாவில் வாழும் பிள்ளை ஆங்கிலத்தில் பயில்வது தவிர்க்க முடியாதது. ஆனால் ஆங்கிலக் கல்விமூலம் தான் அங்கிருப்பவர் வாழ்வை வளப்படுத்த முடியும் என்னும் கருத்தை நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் போலல்லவா உங்கள் கருத்து இருக்கிறது.

 15. 16 hours ago, goshan_che said:

  நாடில்லாத போது மொழியும், கலையும், பண்பாடும் அறுக்கப்பட்டமரம் தள்ளாடுவது போன்று நிற்கும் என்பது மிக சரியான பார்வை. நாடு கூட தேவையில்லை ஒரு அங்கீகரிக்க பட்ட பாரம்பரிய வாழிடமே போதுமாயிருக்கும். Welsh, Scottish Gaelic ஐ அந்த அந்த நாட்டு அரசுகள் செய்வதை போல நிலை நிறுத்த முடியும்.

  எனக்கு மட்டில் நகரமும் இல்லை, கிராமமும் இல்லை என்ற இடத்தில் ஏற்பட்ட அனுபவம் - மிக வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தில் ஒரு பிள்ளையை மிகவும் கஸ்டபட்டு ஆங்கில மூலம் படிபிக்கிறார்கள். ஆங்கிலத்தில் “கதைத்து பழக” என நாம் போய் நின்ற சமயம் அந்த பிள்ளையும் வந்து போகும்.

  அந்த பிள்ளை ஆங்கிலத்தில் கதைக்கும் போது அந்த பெற்றாரின் முகத்தில் எழுந்த பெருமிதத்தை பார்த்த பின், எனது எதிர் மறையான கருத்தை சொல்ல கூட திராணியற்று அப்படியே விட்டு விட்டேன்.

  இப்பொதும் பெரும்பாலானோர் தமிழ் மீடியத்தில்தான் படிக்கிறார்கள்.

  ஆனால் எமது காலம் போலல்லாது இப்போ ஆங்கிலத்திலும், இண்டர் நேசனல் ஸ்கூலிலும் கூட படிக்கலாம்.  இந்த பள்ளிகளின் பெருக்கம் மிக விரைவாக பட்டினசபை உள்ள ஊர்களுக்கும் பரவுகிறது. யாழ் நகரத்தில் இருந்து 10 கிமிகுள் உள்ள ஒரு பட்டினசபை உள்ள ஊரில் 2 சர்வதேச பள்ளிகளை கண்டேன்.

  நாம் படிக்கும் போது ஷேக்ஸ்பியரின் மகன் என்றாலும் தமிழ் அல்லது சிங்களத்தில்தான் படிக்க முடியும். கொழும்பில் மட்டும் விச்செளி, ரோயல் இன்ஸ்டிடுயூட், இப்படி சில இருந்தன.

   

  யாழ்ப்பாணத்தில் கூட பலர் நான்கு வயதிலிருந்தே பிள்ளைகளை ஆங்கிலக் கல்விக்காக பணம்செலவளித்து அனுப்புகின்றனர்.அவர்கள் ஆங்கிலம் கற்பது தவறேயல்ல. ஆனால் தமிழைக் கற்காது ஆங்கிலத்தை மட்டும் கற்பது தவறானதே. வருங் காலங்களில் தமிழ்நாட்டுத்தமிழர் போல் எம்மினத்தவர் நிலையம் ஆகப்போகின்றது.
  எனக்கு ஒன்று புரியவில்லை அந்தப் பிள்ளை ஆங்கிலம் கதைத்ததும் பெற்றோர் முகத்தில் பூரிப்பு ஏற்பட்டதும் தவறல்ல. ஆனால் அதன்பின் தமிழ் தெரிவது எத்தனை அவசியமானது என்று நீங்கள் ஏன் கூறவில்லை????? அல்லது கூறவிடாது தடுத்தது உங்களை அவர்கள் குறைவாக மதிப்பிட்டுவிடுவார்கள் என்பதா ???? 

  17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

  நீங்கள் சொல்வது உன்மைதான் அது நகர்புறங்களில் மட்டும் ஆனால் கிராமங்களில் தமிழே தவழ்கிறது  மம்பி , டாடி என்ற சொல்லுக்கு உயிர்ப்பு வெள்ளைக்காரனுக்கு இருக்கலாம் ஆனால் அம்மா ,அப்பா என்ற சொல்லுக்கு  தமிழில் உயிர்ப்பு இருக்கிறது என நான் உணர்கிறேன் என்னை என் மகள் அப்பா என அழைக்கும் போது .

  இங்கே ஆங்கிலம் பிள்ளைகள் பேசும் போது பெற்றோர்கள் சந்தோசமடைகின்றனர் நம் மொழி மெதுவாக அழிவது தெரியாமல் இருந்தாலும் தமிழர்களுக்கென நாடு இல்லாத போது , கலை கலாச்சாரமெல்லாம் சொல்லும் அளவுக்கு நின்று கொண்டிருக்கும் அறுக்கப்பட்டமரம் தள்ளாடுவது போன்று .

  இந்த புலம் பெயர்ந்தவர்கள் இணையத்தில் அதிகம் மெனக்கெடுகிறார்கள் பிள்ளைகளை ஊருக்கு அழைப்பை ஏற்படுத்தி ஆச்சி , அப்பச்சி , அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா ஆகீயோரிடம் பேச வைத்தாலே தமிழ் அவர்கள் வாயில் நுழைந்துவிடும் .

  எமக்கென்றொரு நாடு இல்லை என்பதும் ஒரு முக்கியமான காரணமாகத்தான் இருக்கின்றது

 16. 17 hours ago, nige said:

  அம்மை, அப்பன் அன்னை, பிதா என்பவை காலப்போக்கில் அம்மா அப்பா என்று ஆகியிருக்கலாம். 

  அம்மை அப்பன்  நாயன்மார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாக இருக்கலாம். மாதா பிதா என்பன வடசொல். தமிழ் அல்ல.

  17 hours ago, Justin said:

  சுமே எழுதிய "வரலாற்றை மறந்த தமிழர்" வாசிக்கவில்லைப் போல!😊

  தமிழில் இருந்து தான் எபிரேயத்திற்கு அப்பா, அம்மா எல்லாம் போனது என்று தமிழ் ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் அனேகமாக ஆர்வலர்கள் மட்டுமே!

  இத்தனை காலம் ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஐந்தாம் கட்ட கீழடி ஆய்வு முடிவடைந்தபின் கூறியிருக்கின்றனரே. சில விடயங்கள் நிரூபணமாக்க காலம் எடுக்கலாம். ஆனால்  ஒட்டுமொத்தமாக அதை மூடி மறைக்க முடியாது.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.