Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  8,098
 • Joined

 • Last visited

 • Days Won

  36

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. தமிழனைப் போல் பேராசை கொண்டவன்,தேசத்தின் பால் ஆசை அற்றவன், சுயநலம் மிக்கவன் உலகின் எந்த இனத்திலும் இருக்க முடியாது. ஆனாலும் கிட்டத்தட்ட 3 இலட்சம் மணமக்கள் வாழும் பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டிருந்தபோது கிட்டத்தட்ட 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தான் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அந்த வருடம் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர் கலந்து கொண்டனர். மிகுதி 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதற்காக அவர்களுக்கு எந்த உணர்வுமே இல்லை எனக் கூற முடியுமா. எந்த நாட்டிலும் விடுதலைக்கான முன்னெடுப்புக்களை சிலரே செய்ய விடுதலை எல்லோருக்குமானதே. இக்காலகட்டத்தில் பத்தாயிரம் என்பதே பெரிய தொகை தான் சசி.

 2. [size=5]GTV, தீபம் இரண்டும் எந்தத் தேசிய ஊடகம் என்று ஒருக்காச் சொல்லுங்கோ சாத்திரி. உங்களைப் போல் எல்லோருமே வீட்டில் இருந்து தீபம் ஏற்றலாம்.அடத்த வருடம் சிலவேளை ஏற்றலாம் ஏற்றாமல் விடலாம்.அதன் பின் ஏற்றவே தேவை இல்லை.அதற்க்கு அடுத்த வருடம் மாவீரர் நாளா எந்த நாட்டினது என்று தமிழர்கள் கேட்கும் நிலை வரும். அது மனித இயல்பு என்று விட்டு விடலாமா சாத்திரி????? [/size]

 3. [size=5]ரதி நான் நேரில் நின்று பார்த்ததைத் தான் எழுதினேன்.எனக்குப் பொய் சொல்ல வேண்டிய தேவையோ அல்லது ஒருவருக்காகப் பிரச்சாரம் செய்யும் தேவையோ இல்லை. கதிரைகள் மட்டும் 10,000 போட்டனர். நான் மண்டபத்தின் மேற் பகுதியில் உள்ள அறையில் வேலை செய்தேன். 11.30 க்கு நிகழ்வுகள் ஆரம்பித்தபோது அரைவாசி இருக்கைகள் கூட நிறையவில்லை.எனக்கு மக்கள் வர மாட்டார்களோ என்ற பயம் கூட வந்துவிட்டது. மலர் வணக்கம் ஆரம்பித்த பொது பார்த்தால் மண்டபம் முழுதும் நிரம்பியிருந்தது இருபக்கமும் வரிசையிலும் மக்கள் நின்றார்கள்.தமிழரசு போட்டுள்ள படங்களில் நீங்கள் அதைப் பாத்திருக்கலாம்.

  எந்த மாவீரர் நிகழ்வு நடந்தாலும் முதலில் மீடியா தான் செய்திகளைப் போடும். இரவு 12 மணிச் செய்தியைப் பார்த்தால் மாவீரர் நிகழ்வு பற்றிய எதுவும் இல்லை பிறகு காட்டிய நிகழ்வில் முருகதாசன் திடலில் நடைபெற்ற நிகழ்வை பின்பக்கத்தில் இருந்து ஆட்களின் எண்ணிக்கை தெரியாதவாறு காட்டினார்கள். அவ்வளவு சனம் அங்கே வந்திருந்தால் ஏன் GTV ஆட்களைக் கிட்டக் காட்டவில்லை. நாவூறு பட்டுவிடும் என்றா???? எனது நண்பர். ஆனால் அவர் முருகதாசன் திடலுக்குப் போனார். அவர் வாயால் 2000 இக்கு உள்ளே தான் அங்கு மக்கள் வந்ததாகக் கூறினார். நான் பொய் சொல்லலாம் ஆனால் அங்கு போனவர் பொய் சொல்ல மாட்டாரே.

  முருகதாசன் திடலில் போடப்பட்டிருந்த கொட்டகையைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே எவ்வளவு ஆட்டலை அது கொள்ளும் என்று. எமக்காக உயிர் நீத்த ஒருவரின் பெயரால் அத்திடலை அழைத்துக்கொண்டு அவருக்கு களங்கம் விளைவிக்கிறோம் பொய்யும் புனைவுகளும் கூறி என்பதே என் ஆதங்கம் . யாரும் எதுவும் கூறி யாழில் ஏன் நாம் சண்டை போடுவான். காலம் காட்டும் எல்லாவற்றையும் பொறுத்திருப்போம் வண்டு. உங்களுக்கு எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறவும் முடியாது. எனக்கு GTV பற்றி உங்களிலும் தெரியக்கூடிய அளவு என் நண்பர்கள் அங்கு வேலை செய்கின்றனர். [/size]

 4. [size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size="4"]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [size=4]மக்கள் விளக்கேற்றும் நேரத்தில்[/size] [size=4]கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம்.[/size] [size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size] [size=4]ஆனாலும் முன்பு இருந்த[/size] [size=4]ஒரு[/size] [size=4]கர்வம் எல்லோர் முகங்களிலும் இல்லாமலிருந்ததையும்[/size] [size=4]கவனிக்கக் கூடியதாக இருந்தது.[/size]

  [size=4]GTV தொலைக்காட்சி தொடர்ந்து ஒரு வாரகாலமாக excel மண்டபத்துக்கு எதிரான விளம்பரங்களைத் தொடர்ந்தும் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், சங்கீதன் என்பவர் தொடர்ந்து மூன்று நாட்களாக GTV வந்து மக்களிடம் முருகதாசன் திடலில் நடைபெறும் நிகழ்வுக்கு வருமாறு உருக்கமான வேண்டுகோளைமக்களிடம் விடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் யார் சரி என்பதற்கும்மேலாக ஓரிடத்திற் கூடவேண்டும் என்னும் மக்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. கடந்த சில வருடங்கள் மாவீரர் நாளில் கலந்துகொள்ளாது ஒதுங்கி இருந்தவர்கள் கூட இங்கு வந்திருந்தமையைக் காணக்கூடியதாகவும் இருந்தது. நிகழ்வுகள் யாவும் பிரித்தானிய நேரம் 5.30 க்கு நிறைவுக்கு வந்து மக்கள் கலையத்தொடங்கிய பின்னரும் பலர் வேலையை முடித்துக்கொண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்தபடி இருந்தனர். யாரென்றாலும் மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]

  • Like 1
 5. அன்பு நரகாசுரன் என்னும் மன்னன் இருந்தான் என நான் இதுவரை கேக்விப்பட்டதில்லை.நரகாசுரனின் கதை வாய்வழியாகக் கடத்தப்பட்ட கதை எனவே இத்தனை நாள் எண்ணி இருந்தேன்.ஏதாவது நூல்கள் ஆதாரமாக உள்ளனவா?

 6. [size=5]இங்கு நமக்கு ஆரியர் யார் திராவிடர் யார் பிராமணர் யார் என்பதில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. ஆரியர் நிட்சயமாக வெள்ளை நிறைத்தவரே. திராவிடர் கறுப்பானவர்கள். மற்றைய இனங்களுடன் ஒப்பிடும்போது ஆரிய இனம் திராவிட இனத்துடன் கலந்தமை குறைவே. எத்தனை அடக்குமுறைகளை எமக்காக வைத்தவர்கள்.எம் பெண்களை விட்டா வைத்திருப்பர். ஆரியார் பால் ஈர்க்கப்பட்ட பல பெண்கள் அவர்கள் போல் அழகான அறிவான குழந்தை பெருக்கொள்ளும் ஆவலில் கணவன் இருக்கவே களவில் ஈடுபட்டு ஆரியருக்குக் குழந்தை பெற்றதாக சரித்திரம் உண்டு. அப்படிப் பிறந்தவர்கள் வெள்ளை நிறமாகவோ அன்றி கருப்பாகவோ கூட இருக்கலாம்.

  இன்னொன்று - பிரித்தானியர் காலத்திலும் தற்போது இலங்கை அரசுடனும் எப்படி எம்மவர் கூசா தூக்கித் திரிகின்றார்களோ அப்படி ஆரியப் பிராமணர்களுக்கு தம் சுய இலாபத்திற்காக தாமே அடிமையாகி அவர்களுக்குப் [/size][size=5]பணி செய்து அவர்களும் பாவம் பிழைத்துப் போகட்டும் என பார்ப்பனியத்தைப் போதித்து தம்முடன் அவர்களை வைத்துக் கொண்டனர். அவர்களும் தம்மையும் பிராமணராக எண்ணி புரோகிதம் கற்று அவர் பரம்பரை கருப்பாக இருந்தாலும் பிராமணர்களாக வாழ்கின்றனர்.

  அதற்காக கன்னங் கரேல் என உள்ளவர் மட்டுமே திராவிடர் மற்றவர் எல்லோரும் ஆரியர் என எண்ணுவதும் தவறு.

  ஒரு இனம் 500 ஆண்டுகளுக்கு அதிகமாக ஓரிடத்தில் வாழ்ந்தால் அவ்விடத்தின் தன்மைக்கேற்ப, காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப மற்றமடைவர் என்பது ஆய்வாளர் கூற்று. ஆனால் ஆபிரிக்க இனமும் ஆரியரோ எனக் கேட்டு விடாதீர்கள். இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.கருப்பாக இருப்பார். நான் அவரை சுத்தத் தமிழர் என்றே இத்தனை நாட்களாக எண்ணியிருந்தேன். ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவருடன் கதைக்கும்போது தனது பாட்டன் ஒல்லாந்த இனத்தவர் என்றும் பாட்டி தமிழர் என்றும் கூறினார். இப்படி எமக்குத் தெரியாமல் எத்தனையோ கலப்புகள் எம்மிடையே உண்டு.

  முக்கியமான விடயம் என்னவெனில் நான் எப்போதும் ஆரியருக்கோ அன்றி சிங்களவர்களுக்கோ அல்லது பிராமணர்களுக்கோ கூட எதிரானவள் இல்லை. அவர்களின் கொள்கைகளுக்கு பிராமணியத்துக்கு எதிரானவளே. எம் திறமை கண்டு எமது விடுதலைப் போராட்டத்தை, தலைவர் பிரபாகரனை அழித்தொழிக்க அனைத்து நாடுகளும் எப்படிக் கங்கணம் கட்டிச் செயற்ப்பட்டார்களோ அதுபோன்றே தமிழரின் திறமைகளில் மிரண்டு போன ஆரியர்கள் எம்மை வளர விடக்கூடாது எனக் கங்கணம் கட்டி நாம் போகுமிடம் எல்லாம் எம்மைத் துரத்தி, எழ முயன்ற வேளையில் எல்லாம் எம்மை அமத்தி இருத்திவிட்டார்கள். நாமும் மதியூகமாக எமது திறமைகளை வளர்த்துக் கொள்ளாது தமிழன் எதற்கும் துணிந்தவன் எதிரியை ஓட ஓட விரட்டுபவன் போர் போர் எனக் கூறி அழிவின் மேல் அழிவுகளைச் சந்தித்தோமே தவிர தூர நோக்கோடு செயற்படவில்லை. அதன் பலன் தமிழன் நாடற்றவன் என்னும் சிறப்பு. வேறென்ன சொல்ல ???[/size]

 7. நன்றி சுண்டல் நந்தன் துளசி. நான் தெரியாததை தெரியாது எண்டு சொல்ல வெட்கப்பட மாட்டேன். எனக்குக் கணினி பற்றிய அறிவு குறைவெண்டு சொல்லுறதைவிட அதில் நாட்டம் இல்லை என்று சொல்லலாம். துளசி சொல்லுற திரி எண்டது என்ன எண்டு விளங்கவே இல்லை. ஆராவது விளங்கப்படுத்துங்கோ தயவுசெய்து.ஒரு வாரமா நானாகக் கண்டுபிடிப்பம் எண்டு முயலுறன் முடியுதில்லை. எழுத வேணும் நினைக்கிற இடத்திலை எழுத முடியவில்லை.அவ்வையின் இந்தப் பாடல்தான் எனக்குத் துணிவு தந்தது.

  வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்

  தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம் பெரிதும்

  வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்

  எல்லோர்க்கும் ஒவ்வொன்று எழிது.

 8. நன்றி நிலாமதி. பெண்களுக்கு இருக்கும் துணிவு தனி தான். நான் என்னை அடையாளம் காட்டாமல் எழுதுவோம் என்றிருந்தேன். ஆனால் இவை பயப்பிடீனம் எண்டதாலை சொல்லுறன் நான் ஒரு பெண். தமிழருக்கும் சுமேரியருக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கு.அதனால்த்தான் அந்தப் பெயரை வைத்தேன்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.