-
Posts
8231 -
Joined
-
Last visited
-
Days Won
37
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
-
மீன் பற்றிஸ் - Fish Patties
-
5
-
-
ஆழ்ந்த வருத்தங்கள்
-
நல்லதொரு செயல் அண்ணா. இருக்கும்போதே அவர்களை மகிழ்வாக்குவது எத்தனை உயர்வானது। அவர்கள் இல்லாதபோது எது செய்தும் பயனில்லை.
-
1
-
-
மரக்கறி சமோசா - Veg Samosa
-
1
-
-
21 minutes ago, குமாரசாமி said:
எரியல்,பொரியல் எண்ணைச்சாப்பாடெல்லோ அதுதான் பிரச்சனை எண்டு நினைக்கிறன். இனி அவருக்கு வீட்டிலையும் வலு கவனமாய் இருப்பினம் எல்லோ?
ஓம் ஓம் நான் அதை யோசிக்கேல்லை
-
49 minutes ago, குமாரசாமி said:
என்ன மேடம்? ஆட்டைக்கடிச்சு மாட்டைகடிச்சு எண்ட மாதிரி கடைசியிலை முறுக்கிலை வந்து விழுந்துட்டியள்?
வித்தியாசமாய் ஏதும் புது சாப்பாடு செய்யுங்கோ அப்பதான் சனமும் வந்து பாக்கும். பருப்பும் சோறும் போடாத வரைக்கும் சந்தோசம்...
பொங்கல் என்றபடியால் இதைப் போட்டது. வரும் வரும் நல்லதுகள்.
-
On 12/1/2021 at 00:47, உடையார் said:
நீண்ட காலத்தின் பின் நல்ல செய்முறையுடன், நன்றி பகிர்வுக்கு, மாவுடன் தயிரும் கலந்து பிசைந்தால் நல்ல சுவையாக வரும்
அடுத்த தடவை செய்து பார்க்கிறேன்.
14 minutes ago, ஈழப்பிரியன் said:எனக்கு மிகவும் பிடித்தது.சாப்பாட்டுடன் கரடுமுரடான ஏதாவது ஒன்று சாப்பிடுவது வழமை.அதில் முறுக்கு பகோடா மிக்சர் அல்லது அப்பளம் ஏதாவதொன்று அனேகமாக இருக்கும்.
இனிமேல் இதெல்லாம் சாத்தியமில்லை.
பார்ப்போம்.ஏன் அண்ணா சாத்தியம் இல்லை. கட்டிய பற்கள்என்றாலும் உண்ணலாம் தானே.
-
உழுந்து முறுக்கு - Ulunthu Murukku
-
2
-
-
Gobi 65 - மொறுமொறு பூக்கோவாச் சிற்றுண்டி
-
2
-
-
இந்தியாவில பார்க்கிறதுபோல் இருக்கு
-
1
-
-
17 hours ago, பெருமாள் said:
பிரச்சனையை கொடுத்த்தே NHS கொரனோ டெஸ்ட் பண்ணும் கூட்டம் காய்ஸ்ச்சல் தொடங்கும்போதே டெஸ்ட் பண்ணுகிறார்கள் ஆனால் ரிசல்ட் ஒருகிழமைக்கு பின்பே பாஸிட்டிஇவ் என்று அனுப்புகிறார்கள் அந்த ஒருகிழமைக்குள் பனடோலை போட்ட வண்ணம் அப்பாவியாய் திரிந்து நோயை பரப்பி உள்ளனர் பலர் ..
மிச்சம் லைபிறரிக்கு பக்கத்தில் செய்கின்றனர். இரண்டு நாளில் மகளுக்கு வந்துவிட்டது நெகரிவ் என்று.
-
16 hours ago, குமாரசாமி said:
என்ன கோதாரிக்கு?
மற்றவர்கள் போடுவதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருக்குமல்லோ
17 hours ago, பெருமாள் said:தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?
ஒழுங்கக்காகத் தைத்ததனால் நான் வெளியே செல்லும்போது அவற்றையே உபயோகிப்பேன்.
-
4 minutes ago, பெருமாள் said:
உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் இல்லை வருபவர்கள் மாஸ்க் இல்லை என்று சொல்லி நீங்கள் போடாமல் விட்டால் உங்களுக்கு தொற்று பரவாது என்று யார் சொன்னது ? COSTCO வில் 16 பென்ஸ் விக்கும் மாஸ்க் தமிழ்க்கடைகளில் ஒரு பவுனுக்கு விக்கினம் கண்ணாடியும் மாஸ்க்கும் கட்டாயம் கண்ணாடி தடுப்பு முழுமையான பாதுகாப்பு கிடையாது அப்படி கண்ணாடி தடுப்புகளை கொண்ட டெஸ்கோ எக்பிரசில் வேலை செய்த பல தமிழர்களுக்கு பரவி உள்ளது கவனம் ஆக இருங்கள் இன்னும் ஒரு மூன்று மாதம்தானே .
நான் விதவிதமா தைத்தே வைத்துள்ளேன்.
12 minutes ago, கிருபன் said:கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பிரெசெண்ட் கொடுக்க இந்த கெட்டப்பில் போனபோது 7 வயது மருமகள் திறந்த கதவை அடித்துச் சாத்திவிட்டா! ஆனால் பயந்து அழவில்லை!
கெட்டிக்கார மருமகள் அதிர்ச்சியை வெளியே காட்டேல்ல
நிறைய படங்கள் பாத்திருப்பா போல
-
Just now, goshan_che said:
ஓம், தாக்கம் ஆளாளுக்கு மாறுப்படுகிறது. பலர் asymptotic எனும் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்களாம்.
உங்கள் போஸ்ட் ஓபிசுக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் serve பண்ண மாட்டோம் என திருப்பி அனுப்ப முடியாதா?
அப்படி அனுப்ப முடியாது. ஆனால் போடவேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனாலும் சிலர் சும்மாவே தனக்கு மூச்சுப் பிரச்சனை. போடத் தேவை இல்லை என்று சொல்லுவார்.
2 minutes ago, nedukkalapoovan said:அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை.
நீங்கள் போட்டாச்சா ?? நெடுக்ஸ்
-
On 2/1/2021 at 18:12, nige said:
உங்களை திரும்ப பார்ப்பதில் மகிழ்ச்சி. லட்டு அருமை...நன்றி
நன்றி சகோதரி
-
Just now, goshan_che said:
கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா?
அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர். என் தங்கைக்கு கனடாவில் இரண்டுநாள் காய்ச்சல் வந்து மூன்றாம் நாள் கொரோனா என்று ஐந்தாம் நாள் ஆள் எழுந்துவிட்டாள். என் தம்பி வேலை செய்யும் இடத்திலும் 18 பேருக்கு வந்து தம்பி மூலம் மனைவிக்கு வந்துவிட்டது. அவர்களையும் கடுமையாகத் தாக்கவில்லை. இரண்டு மூன்றுநாளில் எழுந்துவிட்டனர். என் நண்பியின் கணவர் போலீசில் இருந்தவர்.மூன்று வாரங்களாகிறது. மாறிவிட்டதுதான் என்றாலும் எழுந்து இன்னும் நடக்க முடியவில்லை. தன் உடல் அமைப்பையே முற்றாக மாற்றிவிட்டது என்கிறார் இன்று கதைக்கும்போது.
-
23 hours ago, கிருபன் said:
கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்
ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்
கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம்
-
எங்களுக்கு போஸ்ட் office திறந்துதானிருக்கு. அடிக்கடி கைகழுவப் போகவும் முடியாது. sanitizer gel தான் அடிக்கடி போட்டுக்கொண்டு வேலை செய்கிறேன். காசு, பார்சல்கள், கடிதங்கள், bills என்று எல்லாமே தொடத்தான் வேண்டும். கண்ணாடியின் உள்ளே என்பதனால் வேலை செய்யும்போது முகக் கவசம் அணியவேண்டியது இல்லை என்பது நின்மதி.
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
2 minutes ago, குமாரசாமி said:
தொடங்கியாச்சே...?
நேரம் வரும்போது அப்பப்ப செய்யலாம் என்று இருக்கிறன்
-
பனங்கட்டியில் பூந்திலட்டு - Healthy Laddu
-
15 hours ago, Justin said:
கடஞ்சா, இணைப்பிற்கு நன்றி.
ஆனால் பேராசிரியர் சதாசிவத்தின் "சுமேரிய மொழி திராவிட மொழி" என்ற எடுகோளையல்லவே நான் கேட்டது?
கீழடி ஆய்வில் எப்படி சுமேரியர்களோடு தொடர்பு காட்டப் பட்டிருக்கிறது என்றே கேட்டேன். ஏதாவது இருக்கிறதா?
ஏழாம் கட்ட ஆய்வு இப்பதான் நடக்கிறது. எப்படியும் பத்தாம் கட்ட ஆய்வு வரும்வரை பொறுத்திருங்கள். ஏனெனில் அதன்பின்தான் நீங்கள் நம்பும் அறிஞர்கள் வாய்விட்டுச் சொல்வார்கள்.
16 minutes ago, சுவைப்பிரியன் said:இங்கை ஒருத்தர் தமிழ் பாடசாலை திறக்க வேணும் என்டு ஒற்றைக் காலில் நின்டு திறந்தார்.ஆனால் அவர் தம் பிள்ளைகளுடன் கதைப்பது இங்கைத்தையான் மொழியில்.
அவரிடம் நீங்கள் கேட்டிருக்கலாம்????
-
16 hours ago, கிருபன் said:
தமிழ் மொழி ஸ்கொலர்ஷிப் என்று ஓடுப்பட்டுத் திரியும் தாயகப் பகுதிகளில்கூட வளரக் கஷ்டப்படுகின்றது எனவும் ஆண்டு ஐந்தில் இருக்கும் பல பிள்ளைகளின் வாசிக்கும் திறன் மிகவும் குறைவு எனவும் அண்மையில் வாசித்த ஆய்வுக்கட்டுரை (பொதுவெளியில் இன்னமும் வரவில்லை) வரைபில் பார்த்தேன். அந்த நீண்ட ஆய்வுக் கட்டுரை வெளிவந்தபின்னர் யாழில் பதிகின்றேன்.
என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உள்ள சிறுவர்களுக்கு ஆங்கில அறிவுடன், ஆளுமைகளை வளர்க்கும் soft skills சொல்லிக்கொடுக்கப்பட்டால்தான் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் உண்டாகும்.
புலம்பெயர் நாடுகளில் இலங்கையில் இருந்து தமிழ் ஆசிரியர்களை வரவழைத்தால் மாத்திரமே தமிழ் அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கலாம். மற்றும்படி தமிழ்ப் பாடசாலைகள் பரதம், வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள் மட்டும்தான் அடுத்தடுத்த தலைமுறைகளில் பழகும்.
தமிழ் கற்ற பிள்ளைகளில் பலர் இங்கும் தமிழைக் கற்பிக்கின்றார்கள். பலர் நாம் கதைப்பதுபோலவே தமிழைக் கதைக்கின்றனர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ் AL எடுக்கின்றனர். ஆனாலும் எம்மிடமுள்ள சொல்லறிவு அவர்களுக்குப் போதாது. அதேபோலத்தான் காலை பயிலும் மாணவர்களின் நிலையும். சுரத்தட்டு பயில்வோர் மட்டும் அதிகளவில் ஓரளவுக்குப் புலமையுடன் காணப்படுகின்றனர். வாய்ப்பாட்டு மற்றும் வயலின், வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிப்போர் முற்றுமுழுதாக அதுபற்றித் தெரிந்தவர்கள் என்று கூற முடியாது. அவர்களின் ஆசிரியர் எதை சொல்லிக்கொடுத்தாரோ அவற்றை மட்டுமேதான் தம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் தன்மைதான் இருக்கும்.
-
15 hours ago, goshan_che said:
தமிழ் மொழி அகராதி அமைப்பு ஒன்று இருக்கிறதா? எனக்கு தெரிய இல்லை.
அறத்தமிழ், க்ரியா போன்ற அகராதிகள் உண்டு ஆனால் ஆங்கிலத்தில் கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் செய்வது போல ஒவ்வொரு வருடமும் புதிய சொற்களுக்கு அங்கிகாரம் கொடுக்கும் நடைமுறை இல்லை.
ஆகவே அவரவர் தம் விருப்பபடி புதிய சொற்களை உருவாக்கிறனர்.
தமிழை முதுகலை பாடமாக படிக்க கூடிய ஒரு பல்கலைகழகத்தை மையமாக வைத்து, உலக தமிழாய்ந்த நிபுணர்கள் 20 பேரை கூட்டி, உள்ள அகராதிகள் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பெரும் அகராதியை வெளியிட்டு, வருடாந்தம் புதுபிக்கும் படி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் உள்ள அறிஞர்கள் கூடி இலத்திரனியல் சாதனங்களுக்கான சொற்களை உருவாக்கினார்கள். ஆனாலும் அவை எல்லாம் பயன்பாட்டில் உள்ளன என்று சொல்ல முடியாது. பின்னர் புலிகள் காலத்தில் ஈழத்திலும் பல புதிய சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகதத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் ஐயா தான் அச்சொற்களைக் கொடுத்தார். அவர் தற்போது இறந்துவிட்டார். புலம்பெயர் நாடுகளில் எங்கள் பாடநூல்களில்கூட அவரே பல புதிய சொற்களை உருவாக்கிச் சேர்த்தார். ஆனாலும் பல பொருட்களுக்கு இன்னமும் தமிழ்ச் சொற்கள் இல்லை என்பது பெருங் குறை. பல தமிழ் அறிஞர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஒன்றுசேர்ந்து தமிழுக்கு எதுவும் செய்யத்தான் அவர்களுக்கு முடியவில்லை.
பல்கலைக்கழகங்களுக்கு இருக்கை அமைக்கிறேன் பேர்வழி என்று இங்கு கொஞ்சப்பேர் சேர்ந்து கோடிக்கணக்கான பணத்தை விரயமாக ஓடித்த திரிகிறார்கள். அந்தப் பணத்தை அறிஞர்களுக்கு ஊதியமாகக் கொடுத்து தமிழை அடுத்த நிலைக்குக்கொண்டுசெல்ல யாருமே முனையவில்லை.
நிவேதாவின் சமையல்
in நாவூற வாயூற
Posted
ஒடியல் கூழ் - மச்சக்கூழ் - Odiyal Kool