Athi30

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  17
 • Joined

 • Last visited

Community Reputation

25 Neutral

About Athi30

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Interests
  கவிதை , கதை , வாசிப்பு

Recent Profile Visitors

1,480 profile views
 1. உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு! நன்றி
 2. மப்பும் மந்தாரமான வானம் , மழை மேகங்கள் கருக்கட்டி கதிரவனை மறைக்க, பேறு கால தாய் போல் வீங்கிப்பெருத்திருக்கும் முகில்கள் எப்போதும் மீண்டும் மழை உடைத்துக் கொண்டு கொட்டலாம் என்கின்ற நிலைமை..... இடைக்கிடை மேகங்கள் மோதி காதைக்கிழிக்கும் இடியும் மின்னலுமான காலநிலை .... கடந்த கிழமை தொடக்கம் பெய்த மழையில் நிரம்பிய குளத்துக்குள் இருந்து தவளைகள் போடும் சத்தம் எரிச்சலை தந்து கொண்டிருந்தது....... வீதியால் செல்லும் மாட்டு வண்டியில் கொழுவியிருக்கும் அரிக்கன் விளக்கு வெளிச்சம் தவிர வேறோன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை.... A9 கண்டி வீதி ஆள் அரவாரமற்று அமைதியாய் கிடந்தது..... தனித்திருக்கும் யாரையும் பயம் கொள்ளச்செய்யும் கும்மிருட்டு மணி பின்னேரம் ஆறைத் தாண்டி இருக்காது ஆனாலும் இருட்டுக்கட்டி கிடந்தது மாங்குளம் எனும் சிறு நகரம்! நகரமா அல்லது கிராமமா? இன்னும் தெளிவில்லா ஊர் அது! கண்டி வீதியில் வன்னியின் மத்தியில் ஒட்டுசுட்டான் ,மல்லாவி ,கிளி நொச்சி ஓமந்தை என வன்னியின் நான்கு முக்கிய நகர்களுக்கு மத்தியில் பரந்து விரிந்து அமைதியாய் கிடக்கும் ஊர் மாங்குளம்.... இந்த நிலத்திற்க்காக உயிர்கொடுத்த பிள்ளைகள் ஏராளம்.... கந்தகம் ஏற்றி வெடித்த மாங்குளம் மண்ணின் மைந்தன் போர்கின் சிரித்த முகம் மாங்குளம் சந்தியை கடக்கும் ஒவ்வொரு தடவையும் வந்துபோகும்... எத்தனை துனிச்சல்…. தன்னலமில்லா உயிர்க்கொடை... எத்தனை உயர்ந்த உள்ளங்களோடு வாழ்ந்திருந்தோம்! அந்த புனிதங்களின் மகத்துவம் எத்தனை பேருக்கு அப்போது புரிந்தது என்று தெரியவில்லை! இபோது புரியும்போது அவர்கள் இல்லை! எல்லா நினைவுகளையும் தன்னில் தாங்கிய படி காலத்தை வென்று அமைதியாய் கிடக்கிறது மாங்குளம்! 95ம் ஆண்டு யாழ்ப்பாணதில் இருந்து சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எனும் பெரும் அழிவு துரத்த பாதுகாப்பு தேடி வந்தோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடைக்கலம் கொடுத்த வன்னிப்பெரு நிலம்!! எப்போதும் நினைத்துப்பார்துண்டு யாழ்ப்பாணம் நோக்கி வன்னி மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை வந்திருந்தால நாங்கள் இவர்களைப்போல் அவர்களை அன்போடு அரவனைத்திருப்போமா என! எத்தனை உயர்ந்த மனதோடு மனம் கோணாமல் அரவனைத்து பாதுகாத்தார்கள்! மாங்குளமும் இடம்பெயர்ந்து வந்தோரால் நிரம்பிவழிந்தது. புதிய புதிய கடைகள் , வைத்திய நிலையங்கள் , குடியிருப்புக்கள் என ஒரு சிறு நகரமாய் உருக்கொள்ளத் தொடங்கியிருந்த காலம் அது. கண்டி வீதியும் ஒலுமடு வீதியும் சந்திக்கும் சந்தியில் பழைய மின்சாரசபை வளவு முன்னொரு காலத்தில் இந்திய இராணுவமுகாமாக இருந்த இடம் இப்போது தமிழீழ பொருன்மிய மேம்பாட்டுக்கழகத்தின் வாகன திருத்துமிடமாக மாறி இருந்தது. இது தான் எனது முதல் வேலைத்தளம். அந்த வளவை மூடி கிளைபரப்பி வளர்ந்திருக்கும் வாகை மரம் அதன் கீழ் ஒரு அறையுடன் கூடிய சிறிய அலுவலகம் வாயிற்காப்பாளருக்கென வாசலில் சிறு தகரத்தால் செய்யப்பட்ட கொட்டில் மோட்டார் சைக்கிள் திருத்தும் கொட்டகை விமானத்தாக்குதலால் இடிந்து கிடக்கும் அயல் வீடு , யாழ்ப்பாணத்தில் இருந்து கடைசி நாள் இடப்பெயர்வின் போது கிளாலிக் கடற்கரையில் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் , திருத்தம் செய்யவென வந்த இயக்க வாகனங்கள், முல்லைத்தீவில் இயக்கத்தால் கைப்பற்றபட்ட பெரிய ட்றக் , ஓமந்தை விவசாயி ஒருவரின் ட்றாக்க்டர் என அந்த வளவு வாகனங்களால் நிரம்பிக்கிடந்தது! இங்கே தான் உதயன் எனக்கு அறிமுகமானான்... அவன் ஒரு டீசல் எஞ்சின் மெக்கானிக்.... எனக்கு தரப்பட்ட பணி அந்த திருத்த பட்டறையை நிர்வகிக்கும் தொழில்... கணக்கு வழக்கு பார்ப்பதில ஆரம்பித்து மெக்கானிக்மாருக்கு சாவி எடுத்துக்கொடுக்கும் எடுபிடி வேலை தொடக்கம் சாப்பாடு எடுத்துவரும் வேலை வரை செய்ய வேண்டும்..... சொகுசாக வீடு , கோயிலடி , வாசிகாகசாலை அரட்டல் , விளையாட்டு மைதானம் என சொகுசாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த எங்களுக்கு இது புது ஒரு அனுபவம்...தீடிரென வாழ்க்கையை மறுவளமாக புரட்டிப்போட்டது போன்ற நிலைமை... இடப்பெயர்வால் எல்லாமே விட்டுப்போக குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலைமை.... இடம்பெயரும் போது எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு வராததால் வேலை எடுப்பதென்பது வன்னியில் முயற் கொம்பு.... எந்த வேலைக்கு இன்ரவியூவுக்கு போனாலும் குறைந்தது நூறு பேராவது இன்ரவியூக்கு வருவாங்கள் இதில ஒன்டுமே இல்லாத நாங்கள் எங்க எடுபடுறது! ஏலவல் சோதனை எழுதி றிசல்ட் இன்னும் வரவில்லை மனதுக்குள் கம்பஸ் கிடைக்கும் என்ட ஒரு நம்பிக்கை இருந்திச்சு... இதுக்குள்ள இயக்கத்தின்ட கடைகளிளோ அல்லது ஒபிசுகளிளோ வேலை செய்தா கம்பஸ் கிடைச்சாலும் வன்னியைவிட்டு வெளியில போக ஏலாது எண்டு எல்லோரும் பயப்படுத்தினாங்கள்..... அவங்கள் சொல்லுறதும் சரி போலத்தான் இருந்திச்சு! எதுக்கு வம்பு சோதனை மறுமொழி வரும் வரைக்கும் ஏதாவது பள்ளிக்கூடம் அல்லது ரியூட்டறியில மட்டுமே வேலைக்கு போறதென்டு முடிவா இருந்தன். அக்காலத்தில் வன்னியில் இருந்த ஒரே ஒரு புளுக்கொலர் வேலையான ஆசிரியர் தொழில் தான் அதுதான் எல்லோரினதும் முதன்மை விருப்பத்தேர்வாக இருந்தது! அதைவிடவும் பெருமையான வேலையென்டா NGO வேலை... அது வேற லெவல்... அதெல்லாம் நாங்க கனவிலையும் நினைச்சு பாக்க இயலாது. பெரும்பாலும் அனேகமானவை வோக்கின் இன்டவியூக்கள்... நேரடியா நேர்முகத்தெரிவு அன்று போய் கலந்து கொள்ளவேண்டியதுதான்.... போய் வாசலில இறங்கேகயே முடிவு அனேகமாக தெரியும்... சங்க கடைக்கும் இன்டவியூக்கும் தான் சனம் அதிகம் கூடும்.... எத்தனை நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றாலும் இறுதியில் நிராகரிக்கப்பட என்ன செய்வது என்று தெரியாத திரிசங்கு நிலை..... ஈழநாதம் பேப்பரில வாற ஆட்கள் தேவை விளம்பரங்கள் ஒன்டும் தவறவிடுறதில்லை. ரியூட்டறி ஆசிரியர் தேவையில் இருந்து பள்ளிக்கூட ஆசிரியர் தேவை வரை விண்ணப்பித்தும் ஒரு வேலையும் கிடைக்காத வெறுப்பில் வன்னி முழுக்க வேலை தேடி அலைந்து கொண்டிருந்தேன்.... குடும்ப நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது.... அம்மாவின் நகைகள் ஒவ்வொன்றாய் விற்று முடித்துவிட ... மூன்று வேளை உணவு இரண்டு வேளையாய் குறைந்தது..... வறுமை எங்கள் கொட்டிலுக்குள் தாண்டவமாடிக்கொண்டிருந்தது… எப்படியாயினும் வேலை எடுத்தே ஆகவேண்டிய நிலை…. தம்பி உப்பிடி இருந்து ஓன்டும் செய்யேலாது ஏதாவது கடையில அல்லது சங்கத்தில வேலைக்கு சேர்... வேலையாவது பழகுவாய்.... என தெரிந்த உறவினர்கள் நச்சரிக்க தொடங்கினர்.... முருகண்டி ஆலயத்துக்கு அருகில் ஒரு கிருஸ்தவ பாதிருயார் நடாத்தும் தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது அங்கு போய் வேலை கேட்டுப்பார் என எங்கள் கொட்டிலுக்கு பக்கத்து கொட்டிலில் தங்கியிருந்த இளவாலையில் இருந்து இடம் பெயர்ந்திருந்த அலோசியஷ் அண்ணர் சொன்னார்.... அந்த பாதிரியார் நல்லவராம் போய் கதைத்துப்பார் தம்பி! ஏதாவது உதவிசெய்வார்...... மருமகன் போன கிழமை அங்க போய் கதைச்சு தான் வேலை எடுத்தவன் என்றார் அலோசியஸ் அண்ணர்! அவரின் பேச்சு நம்பிக்கையை தந்தது! மனதுக்குள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருந்தது. அடுத்த நாள் விடிய வேளைக்கு எழும்பி வாய்க்காலில் குளித்துவிட்டு அம்மா ஊத்திய பிளேன் ரீயை குடித்துவிட்டு, சைக்கிளை எடுத்தேன்.... இஞ்ச ஒருக்கா நில்லு தம்பி...என்டு அம்மா என்னை போகாமல் தடுத்தார்... என்னனை… நல்ல விசயத்து போகேக்க பிறத்தால கூப்பிட்டுக்கொண்டு... என்று அம்மாவை கடிந்தேன்…. இந்தா இதைக்கொண்டு போய் அடைவு வைச்சுட்டு மத்தியானத்துக்கு அரிசி வாங்கிகொண்டு வா! எண்டு ஏதோ ஒன்றை என் கையில் திணித்தாள். நான் உதிலை இரண்டு மாங்காயை புடுங்கி கறிவைக்கிறன்... நேற்று இரவும் சின்னவன் சாப்பிட சோறு இருக்கேல்ல... எத்தினை நாளைக்கு சாப்பிடாம கிடக்கிறது... அம்மா நிறுத்தாமல் புலம்பினாள்! என்னனை உது... அம்மாவின் பழைய கை லேஞ்சியால் கட்டப்பட்டிருந்த சரையை அவிழ்த்துப்பார்த்தேன் அம்மாவின் தாலி மின்னியது.... உங்களுக்கு என்ன விசரே பிடிச்சுருக்கு ... கொண்டு போய் உள்ளுக்கு வையுங்கோ என சத்தமாக கத்திவிட்டு அம்மாவின் கையில் தாலியை திணித்துவிட்டு அம்மாவின் பதிலுக்கு காத்திராமல் விறுக்கென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு முருகண்டி நோக்கி பயணமானேன்! நிச்சயமாய் தெரியும் அம்மா இப்போது அழத்தொடங்கியிருப்பாள்! மனது வலித்தது! எப்படியாவது இண்டைக்கு வேலைகி டைக்க வேணும் எண்டு அண்ணா சிலை அருகில் இருந்த கோவிலில் கும்பிட்டுவிட்டு சைக்கிளை மிதித்தேன்! கட்டாயம் எப்பிடியும் இது கிடைக்கும்.. கிடைச்சா முதல் மாத சம்பளத்தில முருகண்டியானுக்கு ஒரு தேங்காய் உடைப்பன் என்கின்ற நேத்திக்கடனோட முருகண்டி நோக்கி சைக்கிள் பறந்தது! அம்பலபெருமாள் சந்திதாண்டி அக்கராயன் ஆஸ்பத்திரிக்குன் கிட்ட வரேக்க மணியண்ணை அக்கராயன் குளத்துக்கு குளிக்க போய்க்கொண்டிருந்தார்.... எங்க விடியவே கிளப்பிடாய் எனக்கேட்டார்... மணியன்னை வேற லெவல் இவ்வளவு நேர்மையான ஆளை யாரும் வாழ்க்கையில கண்டிருக்க முடியாது. மனைவியை சிறுவயதில் இழந்து தனி மரமாய் இரு பிள்ளைகளோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்.... மனதில் இருந்ததை மணி அண்ணையிடம் கொட்டினேன்….. எனக்கு கண்கள் பனித்தன! பயப்படாத உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் , நான் வீட்டுக்கு அரிசி வாங்கி குடுக்கிறன் நீ ஆறுதலாய் கவலைப்படாமா போட்டுவா! என தெய்வம் போல் வார்த்தைகளை உதிர்த்தார் மணி அண்ணை! அவருக்கும் எனக்கும் எந்தப் சம்பந்தமும் கிடையாது அவர் வன்னியில் ஒரு மூலையிலும் நான் யாழ்ப்பாணத்தின் இன்னோர் மூலையிலும் நேற்றுவரை வளர்ந்தவர்கள்! இடப்பெயர்வு எம்மை இணைத்தது .... ஒரு சில நாள் பழகினாலும் உடன் பிறந்த சகோதரன் போல் உறவு எடுத்துக்கொளவார்! நல்ல மனம் படைத்த உயர்ந்த மனிதர்! அவருக்கு நன்றி சொன்னால் பிடிக்காது! உங்கட யாழ்ப்பாணத்து பழக்கத்தை இஞ்ச காட்டாமல் மனிசருக்கு மனிசர் உண்மையா இருக்க பழகுங்கோ எண்டு பேசுவார்! மணி அண்ணையின்ட கையை என்ட இரண்டு கையாலேயும் பிடித்தேன் ... நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை கதைத்தால் அழுதுவிடுவேன் என புரிந்தது! மணி அண்ணைக்கு அது புரிந்திருக்கும் .. அவர் சிரிப்பில் இருந்து புரிந்து கொண்டேன்.... அதற்க்கு மேல் நிற்க்காமல் சைக்கிளை மிதிக்க தொடங்கினேன்.... காலை ஒன்பது மணி இருக்கும் அலோசியஷ் அண்ணை சொன்ன இடத்தை போய் சேர்ந்தேன்! வாசலில் வெள்ளை நிற கையஸ் வாகனம் ஒன்று நீல நிறத்தில் அரசசார்பற்ற அந்த நிறுவனத்தின் இலச்சனை பொறித்தபடி எங்கேயோ புறப்படுவதற்க்கு தயாராக்கி கொண்டிருந்தது! மனதுக்குள் தேவாரத்தை முனுமுனுத்தபடி…. பாதரை சந்திக்கலாமோ.... வாசலில் நின்ற நடுத்தர வயது மதிக்க தக்க ஒருவரிடம் கேட்டேன்! என்ன அலுவல்?.. என்றார் பதிலுக்கு... வேலை அலுவலா வந்திருக்கிறேன் என்றேன்! பவ்வியமாக... அக்கா ஏதாவது வேலைக்கு பேபரில விளம்பரம் குடுத்தனீங்களோ என வாசலிலே நின்றபடியே உள்ளுக்குள் இருக்கும் ஓர் யுவதியை நோக்கி கூவினான்! பதிலுக்கு அறைக்குள் இருந்து யுவதி உதுகளுக்கு வேற வேலையில்லை….. விடிஞ்சா பொழுதுபட்டா எத்தனை பேர் வேலை தாங்கோ என்டு வருகுதுகள்! என ஒருமையில் பதிலளித்தார் அந்த யுவதி! வாசலில நிக்கிற செக்கி ஐயாக்கு எத்தனை தரம் சொன்னனான் எல்லாரையும் உள்ளுக்க விட வேண்டாம் என்டு என்று அந்த யுவதி கத்திக்கொண்டே வெளியே வந்தார்! என்ன வேணும் என்றார் இறுக்கமாக! பாதரை சந்திக்க வந்திருக்கிறேன் என்றேன்.... பாதர் இப்ப அவசரமா வவுனியா போறார் பிறகு வாங்கோ என்றார்! சொல்லும்போதே பாதர் இன்னொரு அறைக்குள் இருந்து வெளியே வந்தார்! என்ன பிரச்சனை தம்பி என நேரடியாகவே என்னைக்கேட்டார்... பாதர் ஏதாவது வேலை இருந்தா தாங்கோ? குடும்ப நிலைமையை சொல்ல மனது தடுத்தது. என்ன படிச்சிருக்கிறீர்? ஏலவல் சோதனை எடுத்துட்டு றிசல்ட்டுக்கு வெயிட் பண்ணுறன். என்றேன்... தம்பி இஞ்ச கம்பஸ் படிச்ச பெடியளே வேலை இல்லாம திரியிறாங்கள்..... உம்மட தகுதிக்கு இப்ப இஞ்ச ஒண்டும் இல்லை ... நான் அவசரமா இப்ப போக வேனும் எண்டு சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் வாகனத்தில் ஏறினார்.... எனக்கு தலைசுற்றியது.... விழுந்துவிடுவேன் போல இருந்தது.... ஓவெனக் கதறலாம் போல் இருந்தது! வாசலில் நின்ற யுவதி ஏளனமாய் பார்த்தாள்.. இதைத்தானே நானும் சொன்னனான் என்று சொல்லிவிட்டு சிரித்தாள்... அவமானமாய் இருந்தது! அவளைப்பார்க்கால் வெளியேறினேன்!!! அவள் வாசலில் நின்ற செக்கிறுட்டி ஐயாவோடு சண்டை இட்டுக்கொண்டிருந்தாள்.... என்னை உள்ளே விட்ட பாவத்திற்க்கு அந்த வயோதிப ஐயா பேச்சுவாங்கிக்கொண்டிருந்தார்.... கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது!! வீட்டுக்கு திரும்ப செல்ல மனம் தடுத்தது முருகண்டி பிள்ளையார் கோயிலில் நோக்கி சைக்கிளை மிதித்தேன்... இக்கால முருகண்டி போல் அல்லாது வழிப்போக்கர் இளைப்பாறவென சிறு சிறு குடில்களும் திண்ணையும் முருகண்டிப்பிள்ளையார் கோயிலின் பின் வீதியில் அக்காலத்தில் அமைந்திருக்கும். அந்த திண்ணையில் சைக்கிளை சாத்திவிட்டு ஓரமாய் சார்ந்து கண்களை மூடி மனதுக்குள் அழுதேன்.. என்ன செய்வதென்று தெரியவில்லை .... எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை..... விதியை நொந்துவிட்டு... கோயிலிக்கு அருகில் இருந்த பெரிய தண்ணீர் தொட்டியில் முகத்தை கழுவிட்டு நிமிர்ந்தபோது எதிரே இருந்த பெரிய கட்டவுட்டில் தீலிபன் அண்ணா சிரித்தபடி நின்றார்... மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்கமுடியுமா? எனும் அவரின் வாசகம் ஏதோ ஒன்றை எனக்கு சொல்லுவது போல் இருந்தது. பயணம் தொடரும்.... https://sarinikar.blogspot.com/2020/01/blog-post_28.html?_sm_au_=iHVrqWVq605kFFWNBJ3vvK7RJCBJt
 3. முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர். அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள். அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன. தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள். இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள். விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன். வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன். புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார். அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது. அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர். ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது. பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி. தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார். தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது. நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார். வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது. முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது. இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும். மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும். ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார். தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள். ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள். ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம். -ஈழம் ரஞ்சன்-
  அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் " அண்ணா !இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் !பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ் அன்ரனி படையணியை திறம்பட கோலோச்சிய பல சாதனைகளின் சரித்திர நாயகனே !உன்னுடைய நிதானமான பேச்சும், மற்றவர்களிடையே அன்பாக பம்பலாக நீ பழகும் விதமும் இன்றும் என் மனத்திரையில் அண்ணா !இரட்டைவாய்க்கால் என உச்சரிக்க முடியவில்லை எம்மால் சிங்களத்தின் சீரழிந்த செயலால் உன்னை இழந்து ஆண்டுகள் தான் ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய்.....அழகாய் பூத்திடும் எம் தமிழீழம் அதில் மொட்டாக மலர்ந்திடும் உன் திருமுகம்!அன்றும் இன்றும் என்றும் உன் தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா !ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் ! நினைவுபகிர்வு மார்ஷல் வன்னி http://www.pathivu.com/?p=113072
 4. கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க., அண்ணாத்த கூலா சொன்னார் "நீயும் இத தான பண்ண"
 5. உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல @ குமாரசாமி
 6. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
 7. உங்கள் வருகைக்கு நன்றி @வல்வை சாகரா இத்தனை இழப்பிற்க்குபின்னும் இன்னும் நிமிர்த்த முடியா நாய் வாலாகத்தானே எம் இனம் இருக்கிறது. எதிரியின் வீரத்தால் வீழ்ந்திருந்தால் நாங்கள் மனமாறி போயிருக்கலாம். எங்கள் கதை அதுவல்லவே.....
 8. அட நம்மட பள்ளிகூட வாசலிலயும் சந்திரா அண்ணை (அவருக்கு என்ன பெயரோ தெரியாது சந்திரா ஐஸ்கிறீம் விற்றாதால் சந்திரா அண்ணன் ஆனார்) ஐஸ்பழம் வித்தவர். அது ஒரு காலம். நினைவூட்டியமைக்கு நன்றி
 9. ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை ...... நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை ...... அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை ...... யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது ...... மொருநாளே நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் ...... குறமாதை நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி ...... லுடையோனே தேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு ...... பெருமாளே.
 10. உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தோழர்களே! தோழிகளே!
 11. சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ நின்றாய்! சாதியென்றும் மதமென்றும் தற்பெருமைகள் பேசி உனக்கு நீயே மகுடங்கள் சூடிக்கொண்டாய்! தலையனை சுகமே பெரிதென நீ கிடந்தாய். கடவாய் வழிய படுத்திருத்தல் சொர்க்கமென நீ கிடந்தாய், அர்சுனர்களின் ஆட்டம் உனக்கு சினத்தை தந்தது! அர்ச்சுனன் வீரம் கண்டு உலமே வியந்து நின்றது. உனக்கு மட்டும் முற்றத்து மல்லிக்கையின் மகத்துவங்கள் புரியவேயில்லை! வாழ்வியலின் அர்த்தம் புரியட்டும் என்று கல்விதாயை வரமாய் கொடுத்தேன். நீ போதை தலைக்கேறி மதம் கொண்டு திரிந்தாய்! பிரிவுகள் பல சொன்னாய் அடிமையாய் கிடப்பதே சுகமென கிடந்தாய்! மெத்தப்படித்த செருக்கு உனக்கு! கடவுளே வந்தாலும் திருத்தமுடியாதென யாரோ சொன்னது. நந்திக்கடல் அலையின் ஓசையிலும் எனக்கு நன்றாய் கேட்டது. உன்னைக் காப்பாற்ற முடியா விரக்தியில் நானும் அர்ச்சுனர்களும் நந்திக் கடலில் இறங்கி, தூர நடந்தோம்... பெரிய அலையொன்று எங்களை விழுங்கியது. அர்ச்சுனர் கூட்டம் அமிழும் நிலையிலும் தாகத்திற்க்கு தமிழீழம் கேட்டது! கொடுத்துவிடலாம் என ஒரு கணம் நினைத்தேன்! திரும்பிப் பார்த்தேன்.. நந்திக்கடலின் ஆர்பரிப்பில், தப்பிய தறுதலையொன்று தலையாட்டியாய் மாறி நின்றது! இன்னொன்று செத்த பிணங்களை புணர்ந்து கொண்டது! இன்னொன்று வெள்ளைவேட்டிக் கனவில் நாயாய் நக்கிநின்றது! நாசமாய் போகெட்டும் இந்தக் குடியென மனமார திட்டிவிட்டு நந்திக்கடலில் நானும் இறந்தே போனேன்!
 12. வயல் வரப்பில் நடந்த வாழ்வும் நிலவொலியில் நடந்த மகிழ்வும் எம்மை பிரிந்து எத்தனை வருடங்கள்? உறவுகள் ஒவ்வொன்றாய் வற்றி காய்ந்து கிடக்கிறது எங்கள் விழுதெறிந்த கொடியின் வாய்க்கால், ஆலமரமும் வைரவர் கோவிலும் கோல உடையும் கூத்துமாய் கிடந்த வாழ்வை வேரறுத்து வீசி எறிந்து விட்டனர். தொன்மைக்குடிகளின் தொண்டையில் சுருக்கிட்டு லாலா நாட்டு இராசாக்களின் வம்சம் சந்தோசிக்கிறது. இந்த மண்ணின் புழுதிபடிந்த சொந்தமக்களை வந்த குடியின் வம்சம் வறுத்தெடுக்கிறது. இரவு வந்தேறி ஊரைவளைத்து , அதிகாலையனதும் குரல்வளை நெரித்து கொண்டேகிய மரநாய்களுக்கு அஞ்சி குஞ்சுகளை தூரமரங்களுக்கு துரத்தினோம். குண்டதிர்வில் குடல் கிழிந்தன போக எஞ்சியனவும் எங்கொங்கோ போயிறங்கின தாய்மடியின் சூடு இன்னும் அகலாச்சந்ததியே! புலம் பெயர்ந்து போன பிள்ளைகளே!! ஆணிவேரை நீங்கள் அறுத்தவரல்லர். நாங்கள்தான் உம்மை அனுப்பி வைத்தோம் நீங்கள் சிறகெடுக்க விருப்பமற்றிருந்தீர்கள் நாங்கள்தான் தாலி விற்று தாய்க்காணி ஈடுவைத்து , போவீரென உமை உலுப்பி போகவைத்தோம். "அன்னைமடிவிட்டு அகலேன்" என நீங்கள் அடம் பிடித்த போதும் "சொன்ன கதைகேள் மகனே" என துரத்தி வைத்தவர் நாங்கள் தான் கையசைத்து படலை தாண்டிய போது கண்ணீர் வடித்தீர்! விருப்பமிலையம்மா போக என விம்மினீர்! அந்தரித்து போவோமென அறிந்தும் நீங்களாவது வாழட்டுமென்றுதான் அனுப்பினோம். நீங்கள் போனபின்பும் ஊர்கள் எரிந்தன! உறவுகள் பிரிந்தன! மண்கொள்ளையாய் மரணங்கள் நிகழ்ந்தன. எமனுடனான யுத்தம் இன்னும் தொடர்கிறது. எம்மைக் காக்கவும் எமக்காக போரிடவும் இந்திரஜித்துக்கள் பிறக்கின்றனர் அபிமன்யூக்கள் அவதரிக்கின்றனர் கொல்லவருவோரை கொல்வோம் என சடாயுவின் சந்ததி சத்தியம் செய்துள்ளது. அர்ச்சுனன் அவதரித்துள்ளான் எதுவரினும் தளரேனென பீஷ்மன் காலத்தை கடந்தும் காத்திருக்கின்றான் இழந்தனைத்தும் எமக்காகுமெனும் நம்பிக்கையில் இன்றெம் நாட்க்கள் புலம்பெயர்ந்து போன பிள்ளைகளே! நலம் பெறுவீர் பணிவிழும் தேசமோ! பாலைவனமோ! எங்குள்ளீரென்றும் எமக்குதெரியாது. கனிதரும்மரமாய் காய்த்துள்ளீரோ? காய்ந்து கிடக்கின்றீரோ! யாதுமறியோம் யாம். எனினும் , உமக்கொரு கடணுன்டென மட்டும் உரைத்தல் நம் கடன்! இது உம் தாய்மடி இங்கு பெறும் வெற்றி உமதே தோல்விவரினும் அதுவும் உம் தோள்களுக்கே எங்கெங்கு சிறகெடுத்து பறக்கினும் திரும்பும்கூடு இங்குள்ள மரத்திலென தெரிக தாயின் சுகத்திற்கு ஈடேது. விடுதலைக்காய் வெந்துகொண்டிருக்கின்றோம் எதிரி எல்லாவழிகளையும் அடைத்துள்ளான்! மூச்சுத்திணறுகிறது. வாழும் நாடுகளி நின்றவாறு வல்லமை தாரீர். ஆயிரம் கரம் கொண்டு எம்மை அணைப்பீர்!!!