யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Gari

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,350
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Gari last won the day on June 18 2013

Gari had the most liked content!

Community Reputation

173 Excellent

About Gari

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  CANADA
 • Interests
  அரசியல் ,மக்கள்சேவை .

Recent Profile Visitors

1,343 profile views
 1. பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வின் நேர்காணலில் தனக்கு 50 கோடிவரை மகிந்த பேரம்பேசியதாக சொல்லியிருந்தார் ,அப்படியாயின் வியாழேந்திரனிடம் பேரம் பேசாமலா இருந்திருப்பார்கள் ?? வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரானவுடன் பல லட்சங்கள் பெறுமதியான வீடு கட்டியதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் .முகநூலில் படங்களும் பகிரப்பட்டது .
 2. இன்று கிழக்கு மாகாண சனத்தொகையில் 40%தமிழர்கள் ,இந்தநிலையில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சினால் யாருக்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் ? கிழக்கு பறிபோனதற்கு காரணமே தமிழர்கள் ?இதில் வடக்கு தமிழர்களாலா அல்லது கிழக்கு தமிழர்களாலா என்ற விவாதத்துக்குள் போக விரும்பவில்லை . வியாழேந்திரன் வாயாலே வடைசுடுவதில் வல்லவர் ,அவரது குறிக்கோள் குறிக்கியகாலத்தில் பதவி ,பணம் சம்பாதிப்பதுதான் ,போராட்டகாலத்தில் இவரது குடும்பத்தை ஊரில் இருந்து புலிகள் வெளியேற்றியவர்கள் .இவர் மட்டக்கிளப்பு பல்கலை கழகத்தில் கல்விகற்ற காலத்தில் எந்த ஒரு போராட்ட்ங்களிலும் கலந்த கொள்ளாதவர் ,முதலில் தமிழரசு கட்சியில் போட்டியிட விண்ணப்பித்து அது கிடைக்காத நிலையில் PLOT ஊடாக தேர்தலில் நின்று வென்றார் .புதிய அரசியலமைப்பில் தொகுதிவாரியாக தேர்தல் பிரேரிக்கப்பட்ட போது வியாழேந்திரனுக்கு தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வெல்லக்கூடிய தொகுதி தேவையென தமிழரசு கட்சி தலைவர்களுடன் முரண்பட தொடங்கினார் .கடந்தவருடம் UNP யில் சேர முயன்று முடியவில்லை . மக்கள் பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள் என்று சொல்லும் வியாழேந்திரன் பதவிக்கு வருமுன் இதை பற்றி யோசனை செய்ததுண்டா ?2016இல் கனடாTNA தலைவர் தாயகம் சென்றபோது வியாழேந்திரன் தன்னையும் கனடாவுக்கு அழையுங்கள் என்று கேட்டதற்றகிணங்க கனடாTNA அவரை கனடா அழைத்து பல்வேறு அமைப்புகளுக்கு அறிமுகம் செய்தது ,இதன் பலனாக கனடா தமிழர் பேரவை 2016இல் நடைபவணிமூலம்பால்பண்ணை அமைக்க நிதிதிரட்டியது ,அனால் இதற்கு தேவையான காணியை இதுவரையில் வியாழேந்திரனால் பெறமுடியவில்லை .அனால் தற்போது திரு .ச .குகதாசன் அவர்களினால் மட்டக்கிளப்பு பால்பண்ணைகாண காணி அடையாளம் காணப்பட்டுஅமைச்சரின் அனுமதிக்காக மத்திய காணி அமைச்சுக்கு மட்டக்கிளப்பு அரசாங்க அதிபர் அனுப்பியுள்ளார் .இதே போல் தென்னைமரவடி பண்ணைக்கு 20 ஏக்கர் காணி பெறப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது . இதே ஜனாதிபதியிடம் நல்லிணக்க அமைச்சு இருந்தபோது சிவஞான சோதி செயலாளராக இருந்தவர் ,அப்பொழுது வியாழேந்திரன் ஜனாதிபதியுடன் கதைத்து ஏன் உதவிகளை பெறமுடியவில்லை ?கைதிகளின் விடுதலை பற்றி வியாழேந்திரனின் பேச்சு ?
 3. முகாமைத்துவ உதவியாளர்கள் (கிழக்கு மாகாணம்) வழக்கு - CA W 27/2014 கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான பதவிக்கு விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த தமிழர்களையும் பதவிக்கு நியமனம் செய்யாத நிலையில் அரசாங்கத்தின் கோட்பாட்டு கொள்கை காரணமாக கருதப்படவில்லை. பின்னர், அரசு மனுதாரர்களுக்கு நியமனங்களை வழங்க ஒப்புக்கொண்டது.
 4. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு இந்த வைத்தியசாலை சிற்றூழியர் நியமனங்கள் எப்படி நடைபெற்றது என்ற விபரம் தெரியாமல் பிரதேச வாதம் பேசுகின்றார் ,திருகோணமலையை சார்ந்த 50 இளைஞர்களுக்கு ஒரே தடவையில் பல் வேறு வைத்தியசாலைகளில் ஆகஸ்ட் மாதம் நியமனம் வழங்கப்பட்டது.
 5. கிழக்கின் அடுத்த முதலமைச்சர் தமிழர்( TNA ).
 6. கருத்துக்களை எழுதுகின்றவர்களுக்கு எது உண்மை /பொய் என்று பகுத்தறியும் தகுதி இருக்கவேண்டும் .அல்லது ஆராய்ந்து உறுதிப்படுத்தி கருத்துக்களை முன்வைக்க வேண்டும் .முகப்புத்தகத்தில் உலவிய படங்கள் சுமந்திரனின் மனைவி,மகள் ஆகியோரது படங்கள் .கருத்துக்களை கருத்துக்களால் எழுத துணிவில்லாத வர்கள்தான் இப்படியான கேவலமான விடயங்களை அரங்கேற்றுவார்கள் .நாளைக்கு உங்களுடைய மனைவி பிள்ளைகளுக்கு இப்படி ??? 2010இல் தேர்தலில் TNA வென்றதன் பின்புதான் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .தேர்தலுக்கு முன்னமே தங்களுக்கு சந்தர்ப்பம் தரவில்லை என்று TNA யில் இருந்து வெளியேறி விட்டார்களே .வரலாறு முக்கியம் வாத்தியாரே .
 7. வணக்கம் ஜெயபாலன் , உங்களுடைய ஆதங்கம் புரிகின்றது ,தற்போதைய சூழ்நிலையில் சுமந்திரன் ராஜினாமா செய்வதென்ற பேச்சுக்கு இடமில்லை .
 8. தந்தையாரின் பிரிவால் வாடும் அர்ஜூனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
 9. தென்னைமரவடி மக்களின் பிரச்சனைகள் ,எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய பல கட்டுரைகள் யாழ் இணையத்திலும் வந்தன ,அப்போதெல்லாம் வேடிக்கை பார்த்தநீங்கள் எதாவது செய்திருக்கலாமே ?குரைக்கின்றதுகள் எப்பொழுதும் குரைத்துக்கொண்டுதான் இருக்கும் கடிக்காது .இதை நாங்கள் தான் முன்னெடுக்கின்றோம் அந்த மக்கள் 1984இல் பாதிக்கப்பட்டதில் இருந்து எங்களால் முடிந்ததை செய்துகொண்டுதான் இருக்கின்றோம் .அந்த மக்களும் எங்களிடம் தான் உரிமையோடு உதவிகளை கேட்க்கின்றார்கள் . இவர்கள் சேகரித்த நிதிகளை பட்டியல் இடுங்கள் ,சும்மா வாயால் வடை சுடாமல் உருப்படியாக ஏதாவதை செய்ய முயறசியுங்கள் .கேள்விச் செவியன் ஊரை கெடுத்த மாதிரித்தான் உங்களது கருத்து .
 10. தென்னைமரவடி தமிழர்கள் பாரம்பரியமாக இருந்த பழமையான கிராமம் ,1984இல் இவர்கள் துரத்தப்படட பின்பு இவர்களின் வயல்களை சிங்களவர்கள் பயன்படுத்தியவர்கள் .தற்போது மீளவும் பலர் திரும்பவும் எடுத்து விவசாயம் செய்கின்றார்கள் .சில சிங்களவர்களுக்கும் காணிகள் இருக்கின்றன .ஆனால் இக்கிராம மக்கள் மீளவும் குடியமராமல் போனால் வட கிழக்கு இணைப்பே தற்போது இல்லாவிடடாலும் எதிர்காலத்தில் சிக்கலுக்குள்ளாகலாம் .இதை கருத்தில் கொண்டுதான் அந்த மக்களுக்கு தொழில் வழங்குவதட்காக 10 ஏக்கரில் பண்ணை அமைக்க முடிவெடுத்தோம் .இது வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படுமானால் கனடாவில் உள்ள வேறு சில அமைப்புக்கள் , சில முதலீட் டாலர்களை கொண்டு கடல்தொழில் சார்ந்த திட்டங்களை செய்யமுடியும் என்று சொல்லியுள்ளார்கள் . தற்போது 82 குடும்பங்கள் திரும்ப குடியேறியுள்ளார்கள் .பலர் முல்லைத்தீவில் இருக்கின்றார்கள் .தாங்கள் வந்து குடியேறினால் தங்களுக்கு வீடும் ,தொழில் வாய்ப்புகளையும் செய்து தர கோரினார்கள் ,வீட்டு வசதியை சம்பந்தன் ஐயா புனர் வாழ்வு அமைச்சு ,வீடமைப்பு அமைச்சுகளுக்கு ஊடாக செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் .வேலை வழங்குவதட்காக இந்த பண்ணையை அமைக்க உத்தேசித்தோம் .இதட்குரிய உத்தேச மதிப்பீடு 100000.00கனேடிய டொலர்கள் .இதில் கனேடிய தமிழர் பேரவை (CTC )50000.00டொலர்களையும் ,திருகோணமலை நலன்புரிச்சங்கம் (TWA )25000.00டொலர்களையும்கனடா தமிழ் தேசிய கூட் டமைப்பு (TNA )25000.00டொலர்களையும் சேகரிப்பதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் .
 11. இனக் கலவரத்தை தொடர்ந்து 1984ம் ஆண்டு பண்டைய தமிழ் கிராமமான தென்னமரவாடி அழிக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் முற்றுமுழுதாக இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. பல தசாப்தங்களாக இடப்பெயர்ந்திருந்த இக் கிராமத்தவர் தமது பூர்விக நிலங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு 2010 ஆண்டுதான் அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வந்த சில குடும்பங்களும், தென்னமரவாடி பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்த காரணத்தால், அங்கு மீளக் குடியேறுவதிலும், அதனை மீளக் கட்டுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். “பல தசாப்தகால இடம்பெயர்வின்பின் மீளக் குடியேறி, தம் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப இக் குடும்பத்தினர் பெரும் ஆர்வம் காட்டினாலும், பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.” என்றார் தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான புஷ்பராஜா. “பொருளாதார வாய்ப்புகள், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் இதர சேவைகள் இல்லாத காரணத்தால் கிராமத்திற்கு திரும்பிய குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் திண்டாடுகின்றன.” 2017 தமிழ்க் கனடியன் நடைபவனி மூலம் சேகரிக்கப்படும் தொகை முழுவதும் சுயதன்னிறைவு கொண்டதாகவும் பயிர்ச் செய்கை மற்றும் கால்நடைகளை கொண்டிருப்பதாயும் அமையும் 10 ஏக்கர் அளவிலமைந்த பண்ணை ஒன்றினை தென்னமரவாடியில் உருவாக்க வழி வகுக்கும். அப் பண்ணை தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் நிர்வாகிக்கப்படும். நிலையான இந்தப் பண்ணைத் திட்டமானது, வேலைவாய்ப்புக்களையும், இதே கிராமத்திற்கே திரும்பத்திரும்ப முதலிடக்கூடியதாய் அமையும் வருமானங்களை ஈட்டும் வழிகைளையும் உருவாக்குவது மட்டுமல்ல, இளம் வயதினர் இந்தப் பகுதியை நோக்கி வரத்தக்கவிதமாகவும், ஒரு துடிப்பான சமூகத்தை மீண்டும் கட்டமைக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார் 9 வது தமிழ் கனடியப் நடைபவனியின் இணைத் தலைவரான திரு. பிரகல் திரு. “கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்க் கனடியன் நடைபவனி கனடாவிலும், மற்றும் தாயகத்திற்கும் தேவையான பல திட்டங்களை ஆதரிக்கும்வகையில் நிதிசேகரிப்பை செய்து காட்டியிருக்கிறது, ‘Canadian Heart and Stroke Foundation’, ‘Center for Addiction and Mental Health’, ‘சம்பூர் வீடமைப்பு’ என்பன அத்திட்டங்களில் சிலவாகும்.”என்றார் கனடிய தமிழர் பேரவையின் தலைவரான டாக்டர் வி. சாந்தகுமார். “இத்தகைய வெற்றிகரமான முன்னெடுப்புகள் மூலம், தாயகத்தின் வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றொரு பயனுள்ள திட்டத்திற்கு கனடாவில் உள்ள தமிழர்கள் இன்னுமொருமுறை பங்களிக்கிறார்கள் என்று நம்புகிறோம்.” நிகழ்வு: 9 வது ‘தமிழ்க் கனடியன் வருடாந்த நடைபவனி’ 2017 திகதி: செப்டெம்பர் 10, ஞாயிற்றுக் கிழமை இடம்: தொம்ஸன் பார்க், (Brimley Rd. / Lawrence Ave.) ஸ்காபரோ நேரம்: காலை 8:30 (பதிவுகள்); காலை 9:30 (நடைபவனி ஆரம்பம்) மேலதிக விபரங்களுக்கும், உறுதிமொழிப்படிவத்தை பெறுவதற்கும் 416-240-0078 என்ற இலக்கத்தை அழைக்கவும். ஊடக விசாரணைகளுக்கு: பிரகல் திரு (416) 727 3430 http://www.tamilcnn.lk/archives/662888.html
 12. சுன்னாகம் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக ,இந்த பேட்டியில் இவர்கள் இருவரும் பகிரங்கமாக முதலமைச்சர் விக்கியை குற்றம் சொல்கின்றார்கள் ,இவருக்கு யார் விசாரணை குழுவை நியமிப்பது ?