Gari

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,352
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by Gari

 1. மொழி புரியாவிட்டாலும், எம்மை அறியாமலே தாளம் போட வைக்கும் மிக இனிமையான பாடல்
 2. கொஞ்சம் பொறுங்கள் தேர்தல் நெருங்கிவர உலகத்தமிழர் பத்திரிகையும் ,அமைப்பும் கதைக்கு கருப்பொருளை சொல்லுவாங்கள் ,அதிலை கொஞ்சத்தை பொறுக்கி கதை வசனத்தை தொடரலாம் .
 3. நல்ல முயற்சி ,பாராட்டுகள் . லாசப்பலில் 15 வருட நிறைவை கொண்டாடிய புங்குடுதீவைச் சார்ந்த தொழிலதிபர் 10,000 euro நன்கொடை வழங்கியதாக அறிந்தேன் .பாராட்டுக்கள் .
 4. கரி ஆனந்தசங்கரி பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி – அவர்மீது வாரா வாரம் சேறு அடித்து வந்த உலகத்தமிழர் ஏட்டுக்கு – அதன் ஆசிரியருக்கு – ரூச் பார்க் மக்கள் பெரிய பட்டை நாமம் போட்டுள்ளார்கள். ஏதோ தன்னைப் பெரிய அரசியல் ஞானி போல நினைத்துக் கொண்டு “இனப்படுகொலையை ஏற்காதவரை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா?” என்ற கேள்வி எழுப்பி ஆனந்தசங்கரி அவரது தந்தையாரி்ன் வார்ப்பு என்ற கருத்துப்பட இரண்டு பேரது புகைப் படங்களையும் முன்பக்கத்தில் சென்றவாரம் உலகத்தமிழர் ஏடு பிரசுரித்திருந்தது. உலகத்தமிழர் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி. உலகத்தமிழரின் கேள்விக்குத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் உரக்கவும் தமிழ்வாக்காளர்கள் பதில் அளித்துள்ளார்கள். ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் மக்கள் 1,400 வாக்குகளை கரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாகப் போட்டு மகத்தான வெற்றியை ஈட்டிக் கொடு்த்துள்ளார்கள். இதில் 95 விழுக்காடு வாக்குகள் தமிழர்களது வாக்குகள். அவருக்கு எதிராகப் போட்டிபோட்ட அஸ்வானிக்கு 600 வாக்குகள் மட்டும் கிடைத்தது. இதில் 98 விழுக்காடு வாக்குகள் அவரது இனத்தவர்களும் இந்தியர்களும் போட்ட வாக்குகள். எஞ்சிய 2 விழுக்காடு வாக்குகள் தமிழர்களது வாக்குகளாக இருக்கலாம். கரி ஆனந்தசங்கரியை பொதுவாழ்வில் இருந்து அப்புறப்படுத்துங்கள் என்ற முழக்கத்தோடு பல முகமூடிகளை அணிந்து கொண்டு புறப்பட்டவர்களை இன்று மக்கள் பொதுவாழ்வில் இருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். உலகத்தமிழர் சேர்த்த சுமார் 300 லிபரல் உறுப்பினர்களில் அஸ்வானிக்கு இருபது தமிழர் கூட வாக்களிக்கவில்லை. அவருக்கு விழுந்த வாக்குகள் அவரது சமூகத்தைச் சார்ந்தவர்களும் ஏனை இந்திய சமூகத்தினரும் போட்ட வாக்குகள ஆகும். மாலை 5.00 மணி அளவிலேயே கரி ஆனந்தசங்கரிதான் வெல்வார் என்று அங்கு திரண்டிருந்த வெள்ளம் போல் தமிழர் கூட்டம் பறைசாற்றியது. Vote Gary என எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான ரி சேட் அணிந்த தொண்டர்கள் பம்பரமாகச் சுற்றித் திரிந்தார்கள். நூற்றுக்கணக்கான விளம்பர அட்டைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நடந்த இடத்தில் அஸ்வானிக்கு வாக்குச் சாவடி இருக்கும் அங்கே உலகத்தமிழர் கொண்டுவந்து இறக்கிய தமிழ்வாக்காளர்கள் அலை மோதுவார்கள் என எதிர்பார்த்தால் அங்கு சாவடியே இல்லை. உலகத்தமிழர் ஏட்டின் ஆசிரியர் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலால்படை புடைசூழ, தாரைgary-winning-team தப்பட்டை முழங்க வந்திறங்கியிருப்பார் என்று பார்த்தால் அருமையான இன்னொருவரோடு தனி மரமாக நின்று கொண்டிருந்தார். பார்க்கப் பரிதாபமாக இருந்தது. குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்து அயலூர் நண்ணினும் நண்ணுவர் என்ற பழம் பாடல் நினைவுக்கு வந்தது. குஞ்சரம் என்றால் யானை. குடை நிழலில் இருந்து கொண்டு யானை மேல் அமர்ந்து பவனி வந்தோர் அவற்றை இழந்து கால் நடையாக அயலூருக்குச் செல்ல நேர்ந்தாலும் நேரலாம் என்பது பொருள். இதற்கு முற்றிலும் மாறாக கரி ஆனந்தசங்கரியின் வாக்குச் சாவடிப் பக்கம் தமிழ்மக்கள் கடல் அலையெனத் திரண்டிருந்தார்கள். இளையோர், முதியோர், தொண்டர்கள், ஆதரவாளர்கள், வாக்காளர் என நீக்கமற நிறைந்திருந்தார்கள். தொண்டர்கள் மட்டும் சுமார் 1000 பேர் நின்றிருந்தார்கasavaniள். திரும்பிய பக்கம் எல்லாம் நீக்கமற VOTE FOR GARY என்ற அட்டைகள், ரி சேட்டுக்கள் கண்ணில் பட்டுத் தெறித்தன. VOTE FOR ASHWANI என்ற அங்கியை அணிந்த ஒரு தமிழரையும் நான் காணவில்லை! பாவம் அந்த மனிதர். உலகத்தமிழரின் ஆதரவாளர்கள் சில நூறு வாக்குகளை ஆவது போடுவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார். அப்படி எதிர்பார்த்து உலகத்தமிழர் ஏட்டில் ஒரு முழுப்பக்க விளம்பரம் கூடக் கொடுத்திருந்தார். அடே எங்கப்பா! அவர்கள் ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாட்டென்ன? ஓடிய ஓட்டம் என்ன? எழுதிய மொட்டைக் கடிதங்கள் என்ன? தமிழ் சமூக ஆர்வலர்கள், ரூச் பார்க் மக்கள், கரி ஆனந்தசங்கரிக்கு எதிரான கன்னை எனப் பல மொட்டைக் கடிதங்கள் வெளிவந்தன. பாவம் எல்லாமே வீண்! எல்லாமே பாழ்! அனைத்துமே கோவிந்தா! ஒரு தமிழன் தேர்தலுக்கு நிற்கும் போது அவருக்கு எதிராக இன்னொரு இனத்தைச் சார்ந்த ஒருவரை உலகத்தமிழர் ஆதரித்தால் மக்கள் ஒப்புக் கொள்வார்களா? ஏற்றுக் கொள்வார்களா? மக்கள் அப்படி என்ன மாங்காய் மடையர்களா உலகத்தமிழர் எதைச் சொன்னாலும் தலையாட்டுவதற்கு? ஒரு காலம் இருந்தது, 90 விழுக்காடு மக்கள் ஒரே அணியில் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்றார்கள். அந்த நிலைமை இன்றில்லை. உலகத்தமிழர் எல்லோரையும் பகைத்துக் கொண்டுள்ளது. தொண்டர்களில் பாதிக்கு மேல் அவர்களோடு இல்லை. இருக்கிற தொண்டர்களையும் மொட்டைக் கடிதங்கள் போடப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் நள்ளிரவில் ஊர் உறங்கிய பின்னர். அதே சமயம் தங்களது பிள்ளைகளைப் பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். கண்டனக் கூட்டம், ஆர்ப்பாட்டம் எதிலும் ஈடுபட விட மாட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் திருமலையில் சம்பந்தர், யாழ்ப்பாணத்தில் மாவை, சுரேஷ் ஆகியோரைத் தோற்கடிக்கப்படுவதற்கு என்றே ஒரு கட்சி தொடங்கப்பட்டது. அதன் பெயர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி. கைவசம் பொன்னம்பலம் குடும்பத்குக்குச் சொந்தமான அகில இலங்கை காங்கிரஸ் கட்சியால் பலனில்லை – அதற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நன்கு அறிந்து கொண்டதால் இந்த ததேமமு உருவாக்கப்பட்டது. அதற்குப் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தூண்டுதலும் பக்கபலமும் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓரங்கட்டிவிட்டு இந்த அமைப்புக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தமிழ்மக்களின் தலைவராக முடிசூட்ட திட்டமிட்டன என்று கூடச் சொல்லலாம். அவருக்குப் பரிவட்டம் கட்டி, காளாஞ்சி கொடுத்து பப்பாளி மரத்தில் ஏற்றிவிட்டன. அரசியலுக்குப் புதியவரான கஜேந்திரகுமார் அந்தவலையில் சிக்குண்டார். dfdafasd கனடாவில் உலகத்தமிழர் ஏடும் சிரிஆர் வானொலியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இரவு பகல் விழுந்து விழுந்து ஆதரித்தன. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தையும் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தையும் முற்றாகப் பிடித்துவிட்டதாகப் படம் காட்டின. திருமலை ததேமமு வேட்பாளர்கள் சம்பந்தரின் கோட்டையான திருமலையைப் பிடித்துவிட்டதாகக் காற்றலையில் வந்து முழங்கினார்கள். தேர்தல் நிதியும் சேர்த்து அனுப்பப்பட்டது. முடிவு? அந்தக் கட்சி நாலாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. குறைந்தபட்ச 5 விழுக்காடு வாக்குகள் கிடைக்காததால் முதல் சுற்றிலேயே வெளியேறியது. கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி எல்லோரும் கட்டுக்காசை இழந்தார்கள். ஆனால் அந்தத் தோல்வியில் இருந்து பாடம் எதையும் உலகத்தமிழர் வட்டாரம் படிக்கவில்லை. தொடர்ந்து மலட்டு அரசியல் – தேர்தல் புறக்கணிப்பு – நடத்தும் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தது. ததேகூ இன் தலைவர் இரா சம்பந்தனை, எம்.ஏ. சுமந்திரனை துரோகிகள் எனத் தூற்றி எழுதும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டது. ஆனால் இரா சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ரொறன்ரோ வரும் போது மட்டும் அவர்களைப் பின்வாசலால் சென்று சந்தித்துப் பேசுவார்கள். என்ன பேசினார்கள் என்று தெரியாது ஆனால் சந்தித்துப் பேசினார்கள். ஆடி அமாவாசை பார்த்து அருமையாக உலகத்தமிழர் ஆசிரியருக்கு ஞானம் வருவதும் உண்டு. “அண்ணை, எங்களிலும் பிழை இருக்கிறது நாங்களும் பிழைவிட்டு விட்டோம். நடந்ததை மறந்து விட்டுத் தொடர்ந்து எழுதுங்கள்” என்பார். அனால் அது கொஞ்ச நாட்களுக்குத்தான். வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிவிடும். உண்மை என்னவென்றால் இவர்கள் சுயமாகச் சிந்திப்பதில்லை. நோர்வே, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இன்னமும் தங்களைப் புலிகள் என்று சொல்லிக் கொள்வோர் இடும் கட்டளைப் படி நடக்கிறார்கள். இவர்களது பரமார்த்த குரு தமிழ்நெட் நடத்தும் ஜெயச்சந்திரன். சேரமான் என்ற புனைபெயரில் எழுதுபவர். தன்னை தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் வாரிசு என்று நினைப்பவர். சேரமான் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் – அது எந்தத் தேர்தல் என்றாலும் சரி – என்ற கருத்தியலின் தத்துவாசிரியர். மாகாணசபைத் தேர்தல் என்பது தமிழர்களது தாயகக் கனவை மறக்கடித்து மாகாணசபைக்குள் முடக்கிவிடும் சதிப்பின்னல் என மனதார நம்புபவர். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் தனது அரசியல் மரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளது என்பதை ஸ்பெய்னில் பிரபல்யம் வாய்ந்த எருமைச் சண்டையோடு உவமித்தவர். “ததேமமு மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்த முடிவை உற்று நோக்கும் பொழுது அதில் ஆழப் பொதிந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையின் அர்த்தபரிமாணத்தை நாம் கண்டுகொள்ள முடியும். தலைவர் பிரபாகரன் அவர்களிடம் பூகோள அரசியல் பாடம் கற்ற மாணாக்கன் என்ற வகையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதற்கு கஜேந்திரகுமார் எடுத்துள்ள முடிவு தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஓர் நகர்வாக அமைந்துள்ளது எனக்கூறின் மிகையில்லை” என மார்தட்டியவர். (http://thisaikaddi.com/?p=22509) கஜேந்திரகுமார் சொன்னது போல மாகாணசபையைத் ததேகூ புறக்கணித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? டக்லஸ் தேவானந்தா முதலமைச்சராக வந்திருப்பார். மகிந்த இராஜபக்சே அவரை வடக்கின் முடிசூடா மன்னன் எனப் பிரகடனப்படுத்தியிருப்பார். முன்னரே பசில் இராஜபக்சே அவரை யாழ்ப்பாணத்தின் இளவரசர் என்று பிரகடனப்படுத்தியிருந்தார். இப்படித்தான் 1994 இல் பொதுத் தேர்தலைப் புறக்கணித்ததால் 10,744 வாக்குகள் பெற்ற இபிடிபி கட்சிக்கு 9 இருக்கைகள் கிடைத்தன. இதுவே இபிடிபி கட்சியின் அரசியல் நுழைவுக்கு வழி சமைத்துக் கொடுத்தது. அத்திவாரமாக அமைந்தது. பரமார்த்தகுருவின் இலட்சணங்கள் இவை என்றால் சீடர்கள் எப்படி உருப்படுவார்கள்? இதே உலகத்தமிழர் வட்டாரம் 2013 ஆம் ஆண்டு கனடிய தமிழர் பேரவையின் ஆதரவில் fetnaநடந்த பெட்னா மாநாட்டைக் குழப்பினார்கள். யூலை 5 கரும்புலிகள் நினைவு நாள் என்றார்கள். பெட்னா யூலை 4, 5, இல் தான் கடந்த இரண்டு தசாப்பந்தங்களுக்கு மேலாக விழா நடத்தி வருகிறது. இருந்தும் அந்த விழா நடைபெறக் கூடாது, அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என இரவு பகல் போராடினார்கள். ஆனால் மக்கள் புறக்கணிகச் சொன்னவர்களைப் புறக்கணித்தார்கள். விழா சிறப்பாக நடந்தேறியது. இவற்றைப் பார்க்கும் போது உலகத்தமிழர் வட்டாரம் இந்தப் பிறப்பில் திருந்த மாட்டாது போல் தெரிகிறது. தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் எனத் தொடர்ந்து வாதாடுவார்கள் போல் தெரிகிறது. மே 18, 2009 க்குப் பிறகு உலகத்தமிழர் வட்டாரம் என்ன செய்திருக்க வேண்டும்? விடுதலைப் போராட்டம் தோல்வியுற்றதற்கான காரண காரியங்களை மக்களுக்கு விளக்கி இருக்க வேண்டும். உலகத்தமிழர் ஏடு உட்பட இயக்கச் சொத்துக்களை ஒரு அறக்கட்டளையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியிருப்புக்கு உதவி sothu-goldஇருக்க வேண்டும். கால் இழந்த, கை இழந்த போராளிகளுக்கு இயன்றமட்டும் உதவியிருக்க வேண்டும். ஒரு நூறு (மொத்தம் 89,000) கைம்பெண்களின் வாழ்வாதாரங்களை ஆவது மீள் கட்டியெழுப்ப உதவி செய்திருக்க வேண்டும். இதில் எதையுமே இவர்கள் செய்யவில்லை. கேட்டால் “நாங்கள் இப்போது மக்களிடம் நிதி சேகரிப்பதில்லை” எனக் கூறிக் கைவிரித்தார்கள். உலகத்தமிழர் வட்டாரம் எதிரியாகப் பார்ப்பது கரி ஆனந்தசங்கரியை அல்ல. அவர்கள் பார்ப்பது கனடிய தமிழர் பேரவை என்ற அமைப்பை. கனடா மக்கள் அவை கதபே யோடு ஒரு நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறது. இரண்டும் கனடிய மையநீரோட்ட அரசியல் களத்தில் செயல்படுகின்றன. இதனால் நான் பெரிதா நீ பெரிதா என்ற போட்டி. மற்றது கதபே குருவை மிஞ்சிய சீடனாகிவிட்டது என்ற அழுக்காறு. கதபே உலகத்தமிழர் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது. FACT அமைப்புத்தான் அதன் முன்னோடி. யாரோ சில லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னார்கள் என்று சொல்லி அதனை முடக்கிவிட்டுக் கனடிய தமிழர் பேரவை தொடக்கப்பட்டது. மிகுந்த ஆரவாரத்தோடு தொடக்கப்பட்ட கதபே எண்ணி எட்டுமாதங்களில் அதன் அலுவலகம் மூடப்பெற்றது. அதன் பின் அது மரணப்படுக்கையில் விழுந்தது. டன்ரன் துரைராசா அவர்கள் கனடா வந்த பின்னர்தான் அது உயிர் பெற்றது. இன்று பல நூறு உறுப்பினர்களையும் தொண்டர்களையும் குறைந்தது இரண்டு முழுநேர ஊழியர்களையும் பெரிய அலுவலகத்தையும் கொண்டு செயற்பட்டு வருகிறது. மக்கள் அவையும் கனடிய தமிழர் பேரவையும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயல்பட்டால் என்ன? தனித்தனியாக இருந்தாலும் எதிரியைத் தாக்கும் போதாவது ஒன்று சேர்ந்து தாக்கினால் என்ன? லெனின் ஒருமுறை சொன்னார் “தனித்தனியாக அணிவகுத்து வாருங்கள் ஆனால் (எதிரியை) ஒன்றாகத் தாக்குங்கள் (March separately but strike jointly). கரி ஆனந்தசங்கரி இனப்படுகொலையை ஆதரிக்கவில்லை எனச் சொல்லி அவருக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு கேவலமான பரப்புரை உலகத்தமிழர் ஏட்டினால் மேற்கொள்ளப்பட்டது அதனை மறுத்து அவ்வப்போது எழுதியுள்ளேன். தேர்தல் காலத்தில் இந்தப் புரளி மீண்டும் மீண்டும் கிளப்பப்பட்டது. கனடிய தமிழர் பேரவை சென்ற சனவரி 2014 இல் நடந்த பொங்கல் விழா தொடர்பாக கனடிய தமிழர்களின் “குரல்” என்ற நினைவு மலரை வெளியிட்டிருந்தது. அதில் கரி ஆனந்தசங்கரி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையின் தலைப்பு “March 2014: Time for the UN to take decisive action on Sri Lanka” (“மார்ச் 2014: அய்நா அவை சிறீலங்கா மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது” )என்பதே அந்தக் கட்டுரையின் தலைப்பு. சட்ட நுணுக்கத்தோடு எழுதிய அந்தக் கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார்: இந்த ஆண்டு அய்.நா சபை சரியான வழியில் நடந்தால் – அது போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றி விசாரிக்க ஒரு பன்னாட்டு, சுயாதீனமான விசாரணைக் குழுவை அமைப்பதற்கான கதவைத் திறக்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு அய்.நா. வல்லுநர் குழு ஒரு முடிவுக்கு வந்தது. சிறீலங்காவில் போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அதற்கான சான்றுகள் நிரூபிக்கப்பட வேண்டும் எனக் கூறியது. பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு அப்பால் அவர்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. தமிழருக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான இன அழிப்பு காரணமாக எதிர்காலம் இருண்டுபோய் உள்ளது. இத்தகைய தாக்குதல்கள் இலங்கைத் தீவிலுள்ள தமிழ்மக்களது அடிப்படை அடையாளங்களான மொழி மற்றும் பண்பாட்டுக்கு எதிரானவை. தமிழர்களின் பாரம்பரிய நிலத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பன்னாட்டு சமூகம் சிறீலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆராய முன்வரவேண்டும். இனப்படுகொலை ஆகட்டும், போர்க் குற்றங்கள் அல்லது மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகட்டும் அவை உண்மை அறியும் பணிப்பாணை கொடுக்கப்பட்ட ஒரு செவ்வையான பன்னாட்டு சுயாதீனமான விசாரணை குழு இல்லாமல் நிரூபிக்க முடியாது. பன்னாட்டு சமூகம், குறிப்பாக அமெரிக்கா, அய்க்கிய இராச்சியம், அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளது ஆதரவை மனித உரிமை அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டதால் அய்.நா. மனித உரிமை ஆணையரின் அலுவலகம் (Office of the High Commissioner for Human Rights (OHCHR) 3 வல்லுநர்கள் அடங்கிய பன்னாட்டு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. இந்த ஆணைக் குழு தனது பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இப்போது பந்து தமிழ்மக்கள் பக்கம் இருக்கிறது. இந்த விசாரணைக் குழுவின் முன் நிலத்தில் இருப்பவர்களும் புலத்தில் இருப்பவர்களும் போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற குற்றங்களை நிரூபிக்க வலுவான சாட்சியங்களை பதிவு செய்தல் வேண்டும். இதுதான் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு முன்னுள்ள முக்கிய பணியாகும். நடந்து முடிந்த கரி ஆனந்தசங்கரியின் லிபரல் கட்சி வேட்பாளர் நியமனத் தேர்தல் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. அவையாவன: Gari-ekuruvi-SKP (161)-L(1) கனடிய தமிழ் சமூக மட்டத்தில் இருந்த பரந்து பட்ட ஆதரவு. அறிவுப் பிழைப்பாளர்கள், வணிகர்கள், முதியோர், இளையோர் போன்றோரது ஆதரவு. (2) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்வரும் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் – கல்வி, தொழில், நிதிவசதி, பொதுத் தொண்டு, சமூக ஈடுபாடு. (3) அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பரந்துபட்ட ஆதரவு. இகுருவி இணையதளம் அவரைத் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தது. (4) தொண்டர் பலம். (5) திட்டமிட்டு நன்கு நெறிப் படுத்தப்பட்ட தேர்தல் பரப்புரை. (6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களது வலுவான பரிந்துரை. வெற்றிபெற வேண்டும் என்ற வாழ்த்துக்கள். (7) லிபரல் கட்சியோடும் அதன் தலைவரோடும் வைத்திருக்கின்ற நெருக்கமான உறவு. (7) உலகத்தமிழர் ஏடு எழுதிய தலையங்கம், விசர்த்தனமான விமர்சனங்கள், மொட்டைப் பிரசுரங்கள் ஆகியவை ஏற்படுத்திய எதிர்மறை விளைவு. வேறு காரணங்களும் இருக்கலாம். இந்த நியமனத் தேர்தலோடு கதை முடிந்துவிடவில்லை. நியமனத் தேர்தலில் வெற்றி பெற 1,400 வாக்குகள் போதுமானதாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் 25,000 வாக்குகளுக்குக் குறையாது பெற வேண்டும். தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் மேல் இருக்கிறது. ஒரு தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்றால் அவர் போட்டியிடும் கட்சிக்கு மக்கள் ஆதரவும் கட்சியின் தலைவருக்கு மக்களிடை செல்வாக்கும் இருக்க வேண்டும். ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதி புதிதென்றாலும் மறுசீர் அமைக்கப்படாத ஸ்காபரோ ரூச் றிவர் தொகுதி 2011 வரை லிபரல் கட்சியின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. இவற்றின் அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கரி ஆனந்தசங்கரியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக இருக்கிறது. http://ekuruvi.com/category/canada
 5. ஒரு தமிழனை எதிர்த்து ஒரு பஞ்சாபிக்கு குடை பிடிப்பதற்குப் பெயர் தமிழ்த் தேசியமா ? August 18, 2014 - சிறப்பு செய்தி/ கட்டுரைகள், பிந்திய செய்திகள் - no comments 545957_246268072214812_1319295816_nஇந்த வார உலகத்தமிழர் ஏட்டில் கரி ஆனந்தசங்கரியை பழித்தும் தூற்றியும் ஒரு நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது. வழக்கம் போல் அதை எழுதியவர் யார் என்று போடவில்லை. ஆனால் அவர் யாராக இருக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். இதுவும் உலகத்தமிழர் ஏடு வெளியிடுகிற மொட்டைக் கடிதங்களில் ஒன்று. இதிலும் கரி ஆனந்தசங்கரியை அவரது தந்தையார் வி. ஆனந்தசங்கரியோடு ஒப்பு நோக்கி இழிவாக எழுதப்பட்டுள்ளது. தந்தையின் அரசியலை கனடாவில் உள்ள மகனின் தலையில் போடுவது என்னவித நியாயம் என்று கேட்ட பின்னரும் அவர் மீதான வசை தொடர்கிறது. அதில் ஒரு இடத்தில் கரி ஆனந்தசங்கரியை ஆதரித்து வெளிவந்த அறிக்கை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 50 பேர்களது படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் உ.தமிழருக்கு அவர்கள் கரி ஆனந்தசங்கரிக்கு கடமைப் பட்டவர்கள் என்றும் முகம் முறிக்க முடியாத நிலையில்தான் தங்கள் படங்களை பிரசுரிக்க சம்மதித்ததாக கரடி விடுகிறது. அதில் காணப்படுவர்கள் வாய்க்குள் விரல் வைத்தால் கடிக்கத் தெிரியாத பாப்பாக்களா? பேராசிரியர் சந்திரகாந்தன், வண.எஸ்.ஜே.இமானுவல் அடிகளார், மருத்துவர் வி.சாந்தகுமார், வழக்கறிஞர் நாதன் சிறிதரன், வைரமுத்து சொர்ணலிங்கம் போன்றோர் எல்லாம் சொந்த புத்தியில்லாதவர்களா? கரி ஆனந்தசங்கரிக்கு இவர்கள் எந்தவிதத்தில் கடமைப்பட்டவர்கள்? இதில் வைரமுத்து சொர்ணலிங்கம் போராட்டத்துக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த ஒருவர். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். உண்மை என்னவென்றால் அவர்களது கூடாரம் காலியாகிறது. இது எனக்குக் கவலை அளித்தாலும் இந்த உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். கரி ஆனந்த சங்கரிக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் தமிழீழச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இன்னாள் கனடா தமிழ்க் கல்லூரியின் தலைவருமான வி.எஸ். துரைராசா அவர்களும் ஒருவர். இவர், தந்தை செல்வநாயகம் காலத்தில் இருந்து அரசியலில் இருந்து வருகிறார். சாவகச்சேரி வி.என். நவரத்தினம் நா.உறுப்பினராக இருந்த காலத்தில் அவரது வலது கை போல் பார்க்கப்பட்டவர். இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) இல் துணைத் தலைவராக இருக்கிறார். மறுவாழ்வு அமைப்பிலும் இருக்கிறார். குறைந்தது ஒரு நாலு சகாப்தம் அரசியலிலும் சமூகத் தொண்டிலும் இருந்து வருகிறார். இவரது படத்தைப் பார்த்துவிட்டு அரண்டு போன உ.தமிழர் “தலைவர்” ஒருவர் தொலைபேசியில் அவரை அழைத்து “அங்கிள் என்ன இப்படி செய்துவிட்டீர்கள்” என்று ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார். இவர்கள் யாரையும் சுயமாகச் சிந்திக்க விட மாட்டார்கள். அவர்கள் கீறின கோட்டை யாரும் தாண்டக் கூடாது. கரியை ஆதரித்து 50 பேர் அறிக்கை விட்டால் உ.தமிழரும் அஷ்வானி பாரத்வாஜை ஆதரித்து ஒரு 100 பேரது படங்களைப் போட்டு ஆதரவு தெரிவிக்கலாம்தானே? யார் மறித்தார்கள்? இவர்களது அகராதியின் படி இவர்கள் சொல்வதை கைகட்டி வாய்பொத்திக் கேட்டு நடப்பவர்கள்தான் தேசியவாதிகள். மற்றவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள். தேசியத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள். கரி ஆனந்தசங்கரி இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஏற்கவில்லையாம். அவர் மட்டுமல்ல நவநீதம் பிள்ளை, பான் கீ மூன், அய்.நா. நிபுணர் குழு, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, மன்னிப்புச் சபை, மனித உரிமைக் காப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புக்கள் இந்தக் கணம் வரை அப்படிச் சொல்லவில்லை. 2009 இல் மட்டுமல்ல 1983 இல் நடந்ததும் இனப்படுகொலைதான். நாடுமுழுதும் வாழ்ந்த தமிழ்மக்கள் தேடித் தேடித் தாக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். அவர்களது சொத்துக்கள் கொள்கையடிக்கப்பட்டன. ஆனால் அதனைப் படுகொலை என்று ஒத்துக்கொள்ள இன்றுவரை உலகம் மறுத்து வருகிறது. ஆனால் இப்போது அதற்கான ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அய்.நா மனித உரிமை ஆணையர் அலுவலகம் நியமித்துள்ள 3 பேர் அடங்கிய நிபுணர் குழு 22-02-2002 தொடக்கம் 15-11-2009 வரை நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் (related cirmes) பற்றி விசாரணை செய்து வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான வலுவான சாட்சியங்களை நாங்கள் அந்தக் குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். காரணம் இனப்படுகொலையை எண்பிப்பது கடினமான காரியம். சுடான் தொடர்பாக அய்.நா. பாதுகாப்பு சபை நியமித்த விசாரணைக் குழு சுடானில் இனப்படுகொலை நடைபெறவில்லை, அரசு குறிப்பிட்ட ஒரு இனக் குழுவை இலக்கு வைத்துத் தாக்கவில்லை என்று கூறித் தீர்ப்பளித்துவிட்டது. எனவே கரி மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டு ஒரு நொண்டிச் சாட்டு. அவரை உ.தமிழர் வட்டாரம எதிர்ப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு. அதனை பிறிதொரு தருணத்தில் எழுதுவேன். நண்பர்களை எப்படிப் பகைவர்கள் ஆக்குவது பற்றி யாராவது பாடம் படிக்க நினைத்தால் உ. தமிழர் குழாத்தை அவர்கள் அணுக வேண்டும். ஒரேயொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான இராதிகா சிற்சபைஈசனை பகைத்துக் கொண்டார்கள். தங்களது தாளத்துக்கு அவர் ஆட மறுத்ததுதான் அதற்கான காரணம். வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரையும அணைத்துப் போக வேண்டிய உ.தமிழர் தமிழ்மக்களை பிளவு படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைப் புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு மற்றவர்கள் தமிழ்மக்களைப் பிரிக்கிறார்கள் எனப் புலம்புகிறார்கள். கோயில் வெளி வீதியில் சங்கிலி அறுக்கும் கள்ளனும் “கள்ளனைப் பிடி கள்ளனைப் பிடி” என்ற சொல்லிக் கொண்டுதான் ஓடிமறைவான். இந்த உத்தி தமிழ்மக்கள் மத்தியில் அது எடுபடாது. தேசியத் தலைவர் தமிழ்த் தேசியத்துக்கு உழைத்த – உயிர்விட்ட – பலருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்துக் கவுரவித்தார். ஆனால் இவர்கள் துரோகப்பட்டம் சூட்டி இழிவு படுத்துகிறார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரா புலிகளின் சட்ட ஆலோசகராக கடைசிவரை இருந்தவர். இடைக்கால தன்னாட்சி அதிகார சபை (ISGA) என்ற வி.புலிகளின் அரசியல் திட்டத்தை உருவாக்கியவர். ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்தை முதலில் எதிர்த்தார்கள். பின்னர் தேர்தலில் கலந்து கொண்டார்கள். அடுத்த கட்டமாக அந்த அமைப்பைக் கைப்பற்ற முயற்சி செய்தார்கள். அதில் தோல்வி கண்டார்கள். உடனே நாகதஅ (ஜனநாயக அணி) என்ற போட்டி அமைப்பை தோற்றுவித்தார்கள். நாகதஅ புறக்கணித்தார்கள். பின்னர் இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி சொல்லாமல் கொள்ளாமல் அதில் இருந்து வெளியேறினார்கள். வெளியேறி ருத்ராவுக்கு நாக்கூசாது துரோகிப் பட்டம் கட்டினார்கள். அதில் உ.தமிழர் ஏட்டுக்குப் பாரிய பங்குண்டு. இப்படித்தான் 2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க மெத்தப் பாடுபட்டார்கள். சிரிஆர் வானொலி இரவு பகல் தவில் அடித்தது. திருமலையில் சம்பந்தனை, யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை தோற்கடிக்க சூறாவளிப் பரப்புரை செய்தார்கள். புதிதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பணம் சேர்த்து அனுப்பினார்கள். தேர்தல் முடிவு வந்தபோது அந்தக் கட்சி கட்டுக்காசை இழந்தது. ஒருவர்கூட கரைசேரவில்லை. எல்லோரும் கூண்டோடு கைலாசம் போனார்கள். இதுதான் தங்களைத் தாங்களே தேசியவாதிகள் என்று சொல்பவர்களின் சோக வரலாறு. நான் தெரியாமல்தான் கேட்கிறேன். ஒரு தமிழனை எதிர்த்து ஒரு பஞ்சாபிக்கு குடை பிடிப்பதற்குப் பெயர் தமிழ்த் தேசியமா? அந்தப் பஞ்சாபிக்கு ஆதரவாக உ. தமிழர் தொண்டர்களை மொட்டைப் பிரசுரங்களோடு வீடு வீடாக ஏற வைப்பதற்குப் பெயர் தமிழ்த் தேசியமா? இன்னும் ஒரு உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மே 18, 2009 க்குப் பிறகு இந்த அமைப்பு தாயக மக்களை அம்போ என்று கைவிட்டு விட்டது. வாழ்வாதாரங்களை இழந்த மக்கள், கணவன்மார்களை இழந்த கைம்பெண்கள், கால் கை இழந்த போராளிக்கு ஒரு டொலரைத் தன்னும் உ.தமிழர் கொடுத்து உதவவில்லை. உதவி கேட்டவர்களுக்கு “நாங்கள் இப்போது மக்களிடம் பணம் சேர்ப்பதில்லை” என கையை விரித்துவிட்டார்கள். முடிவாக இவர்களுக்காக ஒருபிரார்த்தனை செய்வோம். பரமண்டலத்தில் இருக்கும் அனைத்து பரமபிதாக்களும் இவர்களை மன்னித்து அருள்வார்களாக! - வேலுப்பிள்ளை தங்கவேலு http://ekuruvi.com/nakkeran-canada-aug-18-2014/ekuruviTamilNe
 6. கனடாவில் உ .த வும் ,மக்கள் அவையும் மக்களுக்கு நல்லது செய்ய எவரையும் விடமாட்டாங்கள் /தாங்களும் செய்யமாட்டாங்கள் .ஹரியின் வெற்றி இவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லும் . மீண்டும் இரவு நல்ல செய்தியுடன் சந்திக்கின்றேன் .
 7. இதில் போலித் தமிழ்த் தேசியம் பேசுகின்ற கனடா உலகத்தமிழர் ,மக்கள் அவையை சேர்ந்த பரதேசிகள் இந்திக்காரனுக்கு முழு வீச்சாக களத்தில் இறங்கி வேலை செய்கின்றார்கள் .
 8. இன்று நடைபெற இருக்கும் தேர்தலில் இருவர் தான் போட்டி ,மற்றவர்கள் விலகி விட்டார்கள் . பஞ்சாபியான அஸ்வானிக்கும் ,தமிழரான ஹரிக்கும் தான் நேரடிப்போட்டி .
 9. ஹரி ஆனந்தசங்கரிக்கு உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தலைவர்களின் ஆதரவு பெருகி வருகின்ற நிலையில், இரா சம்பந்தன் அவர்களின் முக்கியத்துவம் பெறும் ஆதரவு அறிக்கை August 18, 2014 - எம் தாயக மக்களின் உயர்ச்சிக்கும், சுதந்திரமான வாழ்விற்கும் உலக அரங்கில் போராடும் எமது புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் பலர் திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர் . US Tamil Political Action Council (USTPAC) இன் தலைவர்: DR. காருண்யன் அருளானந்தம்,USTPAC இன் முன்னாள் தலைவர்: DR. எலியாஸ் ஜெயராஜா, Globel Tamil Forum தலைவர்: DR. S.J. இமானுவேல், Australian Tamil Congress (ATC) தலைவர்: DR. ராஜ் ராஜேஸ்வரன். என்று தொடருகின்ற புலம் பெயர் அமைப்புக்களின் தலைவர்களுடன் இன்று ஈழத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் வெளியிட்டுள்ள ஆதரவு அறிக்கை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது, மதிப்புக்குரிய திரு இரா சம்பந்தன் அவர்களின் முழு அறிக்கை பின்வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் கனடாவாழ் தமிழ்மக்களுக்கு விடுக்கும் முக்கிய செய்தி எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ றூச் பார்க் தொகுதியில் கனடா லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரைத் தெரிவு செய்யும் நியமனத் தேர்தலில் திரு ஹரி ஆனந்தசங்கரி போடியிடுகின்றார், இவர் ஒரு நீண்டகால மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞரும் என்பதுடன், இலங்கையில் உள்ள தமிழ்மக்களது நலன்களுக்காகத் தன்னலமற்ற பணி ஆற்றியிருக்கிறார் . குறிப்பாக ஹரி ஆனந்தசங்கரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒரு பயனுடைய களம் என ஒரு சில செயற்பாட்டாளர்கள் மட்டுமே எண்ணியிருந்த காலம் முதல் எமது மக்களின் உரிமைகளுக்காக மனித உரிமைப் பேரவையின் நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஈடுபாட்டுடன் வாதாடி வந்திருக்கிறார் என்பதை நாங்கள் நினைவு கூருகிறோம், அந்த முயற்சியில் ஈடுபட அவர் மேலும் பலரை ஊக்குவித்தும் வந்துள்ளார். இந்த முயற்சியின் காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஹரி இலங்கையில் சனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளோடு மிக நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக எமது போராட்டத்தின் மூலோபாயங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் அவர் பங்கு கொண்டு வந்திருக்கிறார். அவரது அனுபவம் மற்றும் அறிவுரை இரண்டினாலும் நாங்கள் பாரிய அளவில் பயன் அடைந்துள்ளோம். உலகளாவிய அளவில் எமது மக்கள் சார்பாகப் பொறுப்போடு வாதாடக் கூடியவர்கள் தேவைப்படும் இந்த நேரத்தில் ஹரி கனடிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவது மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும். ஹரி அவர்களைப் எந்தத் தயக்கமும் இன்றி நான் பரிந்துரை செய்கின்றேன். அவர் கனடிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்துக் கனடியர்களுக்கும் அவர் பணிபுரிவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்தத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற அவருக்கு ஆதரவு அளிக்குமாறு எமது மக்களை அன்போடு வேண்டிக் கொள்வதுடன் அவர் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெருவித்துக் கொள்ளுகின்றேன். அவரது ஆதரவு அறிக்கையை பார்வையிட இதில் அழுத்தவும் இரா. சம்பந்தன் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. http://ekuruvi.com/sampanthan-mp-gary-anandasangary-2014/ekuruviTamilNews
 10. முகடு முற்றிலும் ஓர் இளைய தலைமுறைக்கான ஓர் சஞ்சிகை .
 11. சுமோவை அவர் எழுத்தாளராக பார்க்கவில்லை என்று ஆதங்கப்பட்டிருந்தா ?அதுதான் கேட்டேன் . 2009மே 18 இற்கு பிறகு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை
 12. புத்தக பதிப்பு சம்பந்தமாக நீண்ட நாட்களுக்கு நுண்பு யாரையோ குற்றம் சொன்னமாதிரி ?
 13. பாட்டை கேட்டிருந்தால் யார் என்று புரிந்திருக்கும் .
 14. இனிதே நடந்த சுமேயின் புத்தக வெளியீட்டுக்கு பிந்திய வாழ்த்துக்கள் இவரையும் கூப்பிட்டிருக்கலாமே
 15. வாக்காளராக பதிந்த ஒவொருவரையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்களிக்கச் செய்ய வேண்டும் .இதில்தான் எங்கள் வெற்றி தங்கியுள்ளது .நானும் அந்த இடத்தில் ஒத்துழைப்பு வழங்குவேன் . தமிழ் நாட்டிலை நெடுமாறன் ஐயா மார்வாடிகளை திரத்துவதற்கு முயற்சிகிறார் ,இங்கு பரதேசிகள் மார்வாடிக்கு ஒத்துழைப்பு ,இந்த கபடதாரிகள் ஒழிந்தால் தான் மக்கள் சுயமாக சிந்திப்பார்கள் .
 16. Scarborough Rouge Park தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளருக்கான உள்ளக தேர்தல் 20ம் திகதி புதன்கிழமை நடைபெற உள்ளது .தற்போதய நிலவரப்படி கரி ஆனந்தசங்கரி வெல்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளது .இது வரை 5300 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளர்கள் .தற்போதைய கள நிலவரப்படி சேர்ந்துள்ள உறுப்பினர்களில் 55வீதமானவர்கள் கரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக உள்ளார்கள் .இரு தமிழர் உட்பட நான்கு பேர் போட்டி போடுகின்றனர் .
 17. இது நுற்றுக்கு நுறுவீதம் உண்மை .ஈழத்தில் இருந்து அவுஸ் சென்ற நீங்கள் கூட தமிழருக்கு எதிராகத் தானே சிந்திக்கின்றீர்கள் . இது தான் கால சக்கர சுழற்சியின் சதி......
 18. வணக்கம் நிவேதிதா! உங்கள் வரவு நல்வரவாகட்டும் .
 19. http://www.yarl.com/forum3/index.php?showtopic=135771&hl=