Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நியானி

கருத்துக்கள நிர்வாகம்
 • Posts

  2,528
 • Joined

 • Days Won

  12

நியானி last won the day on October 22 2020

நியானி had the most liked content!

Profile Information

 • Gender
  Not Telling
 • Location
  இணையவெளி
 • Interests
  தமிழ், தமிழர்

நியானி's Achievements

Veteran

Veteran (13/14)

 • Dedicated Rare
 • Very Popular Rare
 • Conversation Starter
 • First Post
 • Collaborator

Recent Badges

1.1k

Reputation

 1. மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் எனும் திரியில் இருந்து அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் திரியின் தலைப்புடன் ஒட்டி கருத்தாடல் புரியவேண்டும். சக கள உறவுகளின் அடையாளங்கள், தொழில் பற்றிய ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் முழுமையாக நீக்கப்படும்.
 2. யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்துக்கள், தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. களவிதி: சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். துரோகி, பச்சோந்தி, பன்னாடை, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான, அருவருப்பான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
 3. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து எனும் திரியில் இருந்து தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் தலைப்புக்கு உட்பட்டு கருத்தாடலைப் புரியவேண்டும்.
 4. "பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" எனும் திரியில் இருந்து அநாவசிய அரட்டைத்தனமான கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.
 5. மெய்யெனப் படுவது பகுதியில் இணைக்கப்பட்ட மூலமில்லாத தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது. எதுவித விஞ்ஞான அடிப்படையுமற்ற தகவல்களை கருத்துக்களத்தில் இணைப்பதை கள உறுபினர்கள் தவிர்க்கவேண்டும். மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம். எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
 6. எப்படி டார்லிங்' (Kohomada Sudu) text - பலர் வைத்தியசாலையில் எனும் திரி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து செய்தி திரட்டி பகுதிக்கு நகர்த்தபட்டுள்ளது. ஊர்ப்புதினம் பகுதியானது முக்கியமான தாயகச் செய்திகளை நம்பகத்தன்மையான இணையத்தளங்களில் இருந்து இணைப்பதற்கான பகுதி என்பதனை தலைப்புக்களை தொடங்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். யாழ் களம் சுய ஆக்கங்களை ஊக்குவிக்கின்றது. எனினும், மஞ்சள் பத்திரிகை பதிவுகள் போன்றவற்றைத் தவிர்த்து கருத்துக்களத்தின் தரத்தினை பேணும், கருத்தாடலை ஊக்குவிக்கும் ஆக்கங்களையே விரும்புகின்றது.
 7. என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து எனும் திரியில் இருந்து காணொளி ஒன்றும் அரட்டைக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. திரிகளில் அநாவசியமான அரட்டைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
 8. தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது எனும் திரியில் சக கள உறுப்பினர்கள் மீதான பண்பற்ற சொல்லாடல்கள், ஊகங்கள், தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறாமல் ஆரோக்கியமான கருத்தாடலைத் தொடருங்கள்.
 9. தமிழ் ஈழக் காற்றே - புலம்பெயர் தமிழர்களின் வலியை பதிவு செய்த வைரமுத்து.! எனும் திரியில் இருந்து அநாவசியமான கருத்துக்களும் அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
 10. யாழ்கள கருத்தாடல்கள் விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன. விதிமுறைகளை உள்வாங்கிக் கருத்துக்கள் வைப்பதும், களவிதிகளை மீறும் கருத்துக்களை உடனுக்குடன் முறைப்பாட்டு (Report) முறை மூலம் அறியத்தருவதும் கருத்துக்களத்தின் தரத்தைப் பேண உதவும். மட்டுறுத்துனர்கள் சகல கருத்துக்களையும் பார்த்து மட்டுறுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமில்லை. அதனால் களவிதிகளை மீறும் சில கருத்துக்கள் கருத்துக்களத்தில் காணப்படலாம். இவற்றினை அகற்ற கள உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும், கள உறுப்பினர்களில் சிலர் கருத்துக்கள விதிமுறைகளை சட்டைசெய்யாதும், விதிமுறைகளை மீறும் வகையில் தந்திரமாக வளைத்தும் கருத்துக்கள் வைப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகளும், எ.கா. நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையில் விடப்படுவது, எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். மேலே உள்ள கருத்துக்கள் தொடர்பான சில விதிகள்: கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். தனிநபர்களையும் அமைப்புக்களையும் தாக்கும், திட்டித் தூற்றும், புண்படுத்தும், குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்கள்/பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், உயிரோடு இருக்கும்/மறைந்த சமூகத் தலைவர்களையும், கட்சித் தலைவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும், அவதூறான சொற்களால் இகழ்தலும், இழிவுபடுத்தும் காணொளிகளும், மீமி படங்களும், அசைபடங்களும், போலியாக உருவாக்கப்பட்ட படங்களும், சமூகவலை இணைப்புக்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். யாழ்கள விதிகள்:
 11. வணக்கம், யாழ் இணையம் 23 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் இக் கொரோனா நெருக்கடிக் காலத்திலும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 54 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும். _______________________________________________________________________________________ யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. லொக்டவுண் (Kavallur Kanmani) பரிசு. (suvy) முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... (கிருபன்) மாஸ்க் எடுத்தாச்சே (putthan) தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும் (தனிக்காட்டு ராஜா) யாழ் எனும் கைத்தடி.. (valavan) நான் என்ன மதம்? (விவசாயி விக்) பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. (தமிழ் சிறி) பயணம்??? (விசுகு) மனித மா கொண்டாடியது மாட்டு பொங்கல்! (விவசாயி விக்) கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன் (uthayakumar) சுதந்திரம் எம் சுவாசம். (suvy) அன்புள்ள அம்மா.... (குமாரசாமி) நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...! (shanthy) இயற்கையே மாறிப்போச்சு..! (பசுவூர்க்கோபி) ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் (நிழலி) பாவத்தின் சம்பளம் (அக்னியஷ்த்ரா) நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி?? (விசுகு) வெண்பனித்தூறல்..! (பசுவூர்க்கோபி) கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! பகுதி 2, பகுதி 3, இறுதிப் பகுதி (புங்கையூரன்) கவலையில்லாத மனிதன் (சுப.சோமசுந்தரம்) காவலூர்க் கனவுகள் (Kavallur Kanmani) நாமும் நம் பழக்க வழக்கங்களும். (யாயினி) அறம் என்பது என்னவென்றால்... (நிழலி) ஊர் வம்பும் கைபேசியும்..! (பசுவூர்க்கோபி) செப்சிஸும் அம்மாவின் இழப்பும் (nedukkalapoovan) காதுகளும் கதவுகளும்! (தோழி) பெண்மை எனும் நல் மனையாள் . (நிலாமதி) சமூகமும் ஓட்டமும் (விசுகு) இனி இளவேனில் காலம் (நிழலி) போர் + ஆட்டம் (போராட்டம்) (தனிக்காட்டு ராஜா,) மொழி ஆதிக்கம்..! (பசுவூர்க்கோபி) காற்றாய் நீயும் மாறிவிடு (மெசொபொத்தேமியா சுமேரியர்) விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................???? (விசுகு) அசரீரி..! (பசுவூர்க்கோபி) அண்ணா அறிவாலயம். (ஈழப்பிரியன்) எழு எல்லாம் இயலும் (பசுவூர்க்கோபி) என் கொறோனா அனுபவம் (மெசொபொத்தேமியா சுமேரியர்) படம் சொல்லும் வரிகள்-1, படம்சொல்லும் வரிகள்-2, பசுவூர்க்கோபியின் படம் சொல்லும் வரிகள்-03 (பசுவூர்க்கோபி) இன்னொரு அம்மா (நிலாமதி) இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம். (தமிழ் சிறி) அப்புவிட அப்புவும், பேரனும்.! (பசுவூர்க்கோபி) ஆண்டகைக்கு அஞ்சலி.! (பசுவூர்க்கோபி) ஐம்பதில் ஆசை (இணையவன்) பார்வைகள் (சாமானியன்) நாங்களும் அரசியல் அலசுவோமல்ல (putthan) தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை) (தமிழ் சிறி) சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக! (பசுவூர்க்கோபி) புத்தாண்டுகள்! (பசுவூர்க்கோபி) வெண்பனித்தூறல்!(எனது கவிதை வீடியோ) (பசுவூர்க்கோபி) எனது நாத்திகம் ( சுப.சோமசுந்தரம்) எங்கள் ஊர் சூப்பர் உணவுகள் (இணையவன்) மேநாள்..! (பசுவூர்க்கோபி) வளர்ந்து வா மகனே ! (சுப.சோமசுந்தரம்) குறிப்பு: யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
 12. சீமான் என்ற ஒரு தனி நபர் தமிழினத்திற்கே ஆபத்து! - சுப. உதயகுமார் எனும் திரி நீக்கப்பட்டுள்ளது. தமிழக கட்சிகளின் குழாயடி சண்டைகளுக்கு யாழ் கருத்துக்களத்தை பாவித்தல் தவிர்க்கப்படவேண்டும். மேலும், பதிவுக்கான மூலமும் கொடுக்கப்படவில்லை. தொடர்புடைய களவிதிகள்: அரசியல் கட்சிசார் பதிவுகள் அரசியல் கட்சிசார் பதிவுகள் தொடர்பான விதிகள்: யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களை, அவர்கள் நம்பும்/ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தளம் என்பதால், அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்றவை எழுத்தில், படங்களில், காணொளிகளில், சமூகவலை இணைப்புக்களில் பதிதல் முற்றாகத் தவிர்க்கப்படல்வேண்டும். அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளங்களில் இருந்தோ, சமூகவலை தளங்களில் இருந்தோ கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தூண்டும் அரசியல் கட்சிகளைப் பற்றிய காத்திரமான விமர்சனங்கள், அவதானிப்புக்கள், கருத்துக்கள் பதியப்படலாம். மூலம் யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகள், பதிவுகள், ஆக்கங்கள் வேறு இடத்திலிருந்து பெறப்பட்டதாயின், பதிவுகளின் அடியில் நேரடி மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும். அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும். அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும். நேரடி மூல இணைப்பு பதிவுகளை உறுதிப்படுத்த கட்டாயம் கொடுக்கப்படல் வேண்டும்.
 13. சீமான் - ஒரு பார்வை எனும் திரி தமிழும் நயமும் பகுதியில் இருந்து செய்தி திரட்டி பகுதிக்கு நகர்த்தப்பட்டு திரியும் மூடப்பட்டுள்ளது.
 14. என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு எனும் திரி யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் இருந்து சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
 15. சில கட்சிசார் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் சம்பந்தமாக செய்திகளையும், காணொளிகளையும், பிற பதிவுகளையும் இணைப்பவர்கள் களவிதிகளைக் கடைபிடித்தல் வேண்டும். 11. அரசியல் கட்சிசார் பதிவுகள் அரசியல் கட்சிசார் பதிவுகள் தொடர்பான விதிகள்: யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களை, அவர்கள் நம்பும்/ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தளம் என்பதால், அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்றவை எழுத்தில், படங்களில், காணொளிகளில், சமூகவலை இணைப்புக்களில் பதிதல் முற்றாகத் தவிர்க்கப்படல்வேண்டும். அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளங்களில் இருந்தோ, சமூகவலை தளங்களில் இருந்தோ கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தூண்டும் அரசியல் கட்சிகளைப் பற்றிய காத்திரமான விமர்சனங்கள், அவதானிப்புக்கள், கருத்துக்கள் பதியப்படலாம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.