Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியானி

கருத்துக்கள நிர்வாகம்
  • Content Count

    2,367
  • Joined

  • Days Won

    12

நியானி last won the day on October 22

நியானி had the most liked content!

Community Reputation

971 பிரகாசம்

About நியானி

  • Rank
    நிர்வாகம்

Profile Information

  • Gender
    Not Telling
  • Location
    இணையவெளி
  • Interests
    தமிழ், தமிழர்

Recent Profile Visitors

  1. யாப்பாணச் சாமி எனும் சிறுகதையில் பாலியல்ரீதியிலான வசைச்சொற்கள் காணப்பட்டமையால் நீக்கப்பட்டுள்ளது.
  2. தீபாவளி பற்றி சீமான் எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் சமூகப் பொறுப்புடனும், கருத்துக்களத்தின் தரத்தினை பேணும் வகையிலும் பொறுப்பானவர்களாக இருத்தல்வேண்டும்.
  3. தமிழ்நாட்டு அரசியல் காணொளிகள் எனும் திரியில் அரசியல் கட்சி சார் பரப்புரை காணொளிகள் நீக்கப்பட்டு திரியும் பூட்டப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  4. வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு.. எனும் திரியிலிருந்து கருத்தாடலின் திசையைத் திருப்பும் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
  5. தொடர்ச்சியாக ஒரு அரசியல் கட்சி சார்ந்த பரப்புரை காணொளிகளை பதிந்து வருவதாலும், ஏற்கனவே இணைக்கப்பட்ட காணொளிகளை மீண்டும் இணைப்பதாலும், தம் நம்பிக்கைகளுக்கு மாறான கருத்துக்களை வைப்பவர்களை பண்பற்ற முறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சிப்பதாலும், யாழ் களம் கருத்தாடல் களம் என்பதை உணராமல் திரியில் இருந்து ஒதுங்குமாறு கோரிக்கை வைப்பதனாலும் நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரி நிரந்தரமாகப் பூட்டப்படுகின்றது. இனி வருங்காலத்தில் அரசியல் கட்சி சார்ந்த பிரச்சாரப் பதிவுகளையும், பரப்புரைக் காணொளிகளையும் புதிய திரிகள் திறந்து பதிவதனையும் கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும். தொடர்பான களவிதிகள
  6. தற்போது கருத்துக்கள உறவுகள் ஆறு விருப்புப் புள்ளிகள் வழங்கலாம்.
  7. நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கக்கூடிய பகுதியில் நடைபெறும் கருத்தாடல்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவர்களால் வழங்கப்படும் விருப்புப் புள்ளிகளின் எண்ணிக்கையை பொதுவில் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், அக் கருத்துக்களை நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கமுடியும். மேலும், கருத்துக்கள மாற்றங்கள் பற்றிய கருத்தாடல் நிர்வாகப் பகுதியில் நடந்துகொண்டிருக்கின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
  8. மேதகு திரைப்பட முன்னோட்டம் எனும் திரியில் இருந்து வெளி அமைப்பு ஒன்றுக்கு நிதிசேர்க்க உதவும் நோக்கில் இணைக்கப்பட்ட முகநூல் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இத்தகைய வெளி அமைப்புக்களுக்கு பணமீட்ட உதவும் பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  9. குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு எனும் திரியில் இணைக்கப்படும் தமிழக அரசியல் பற்றிய காணொளிகளின் நம்பகத்தன்மை சந்தேகமாக உள்ளதால் திரி பூட்டப்பட்டுள்ளது.
  10. நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 இல் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. யாழ் களம் ஆக்கபூர்வமான வகையிலும் பண்புடனும் கருத்தாடுவதற்கான தளம். களவிதிகளை மீறும் சீண்டல் கருத்துக்களை தொடர்ந்தும் வைப்பது ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழிவகுக்காது. எனவே இத்தகைய கருத்துக்களை பதிவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். சக உறுப்பினர்கள் சீண்டும் கருத்துக்களை வைத்தால் முறைப்பாட்டு முறை மூலம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.
  11. சிரிப்போம் சிறப்போம் பகுதியில் சக கள உறுப்பினரை நையாண்டி செய்யும் வகையில் திறக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. இப்படியான அப்ப்பட்டமான களவிதிகளை மீறும் பதிவுகளை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.
  12. நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரியில் இருந்து கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான பல கருத்துக்கள் நீக்கப்பட்டு மீண்டும் கருத்தாடலுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. கள உறுப்பினர்கள் வெறும் கட்சிப் பிரச்சாரத்திற்காக அளவுக்கதிகமான காணொளிகளை இணைப்பதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.
  13. நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 எனும் திரியில் கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளமையால் அவற்றினை பரிசீலித்து மட்டுறுத்தும்வரை திரி தற்காலிகமாக பூட்டப்படுகின்றது.
  14. தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் எனும் திரியில் ஆங்கிலத்தில் பதியப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. களவிதிகளின்படி கருத்துக்கள் தமிழில் மாத்திரமே பதியப்படவேண்டும்.
  15. முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர் எனும் திரியில் சக கருத்தாளர்களை பணத்திற்காக கருத்து எழுதுபவர்கள் என்ற அவதூறான கருத்துக்களும் அதன் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. யாழ் களம் ஆக்கபூர்வமான விவாதங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது. எனவே, கருத்தாளர்களைப் பற்றிய ஊகங்களைத் தவிர்த்து பண்புடன் கருத்தாடல்களைத் தொடருங்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.