Jump to content

நியானி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Posts

  2777
 • Joined

 • Days Won

  13

Everything posted by நியானி

 1. நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இணைக்கப்பட்ட யூடியூப் காணொளிப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. களவிதி: காணொளிகளை இணைக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகக் கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும்
 2. ஈழ அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்) திரியில் களவிதிகளை மீறும் பதிவுகள் காணப்பட்டதால் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
 3. வணக்கம், யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 41 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும். _______________________________________________________________________________________ யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. எஸ்கியூஸ் மீ மூருகா ( putthan) இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல.. ( ராசவன்னியன்) வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......! ( suvy) யாழ் எனும் திமிர். (valavan) பார்வை ஒன்றே போதுமே.......! (suvy) அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள் (மெசொபொத்தேமியா சுமேரியர்) 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..! (ராசவன்னியன்) நினைவுகள் நிழல்கள் (theeya) இலைச் சருகுகள். (நிலாமதி) சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles) (ஈழப்பிரியன்) இயற்கையுணவே!எமக்கு வலிமை! (பசுவூர்க்கோபி) அந்த மனிதன் (மெசொபொத்தேமியா சுமேரியர்) மன வைராக்கியம் (நிலாமதி) ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே (நிலாமதி) இரை .......! ( suvy) மனிதாபிமானப் பன்னாடை (புங்கையூரன்) மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் (ரஞ்சித்) சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?! (nedukkalapoovan) நேற்று என் கனவில் கடல் வந்தது (நிழலி) புட்டினும் புதுமாத்தளனும் (goshan_che) நானும் அந்த போதைவஸ்துகாரனும் (colomban) முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும் ( nochchi) இரத்த சரித்திரம் (அக்னியஷ்த்ரா) நானும் மனம் திருந்திய யூதாசும் (colomban) கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு ( nedukkalapoovan) கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம். (தமிழ் சிறி) எங்கே போகிறது எம்திருநாடு! (பசுவூர்க்கோபி) பெரும்பேறு (சுப.சோமசுந்தரம்) உனக்குமட்டுமா?உலகம். (பசுவூர்க்கோபி) படிச்சாலும் படி மருத்துவராய் படி ( uthayakumar) இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்.. ( alvayan) பரNaகோர்ட்... (putthan) கவிதையைப் பிரித்த ஐபிஎல் ( karu) முள்ளி வாய்க்கால் முதல் (காவலூரான்) ரயில் மற்றும் 104 பயணிகள்.. (நிழலி) ராஜ புத்ரா ....நா (putthan) பேரினவாதத்தின் பிரலாபம். ( karu) பிரசவ வலி - குறுங்கதை (goshan_che) அன்று போல் என்தீவு வேண்டும்! (பசுவூர்க்கோபி) எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள் ( பகிடி) நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை! (பசுவூர்க்கோபி) குறிப்பு: யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
 4. எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை! எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டு திரியும் பூட்டப்படுகின்றது.
 5. வணக்கம், யாழ் கள உறுப்பினர்கள் பலரும் யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. இதுவரை " யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 20 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. எஸ்கியூஸ் மீ மூருகா ( putthan) இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல.. ( ராசவன்னியன்) வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......! ( suvy) யாழ் எனும் திமிர். (valavan) பார்வை ஒன்றே போதுமே.......! (suvy) அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள் (மெசொபொத்தேமியா சுமேரியர்) 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..! (ராசவன்னியன்) நினைவுகள் நிழல்கள் (theeya) இலைச் சருகுகள். (நிலாமதி) சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles) (ஈழப்பிரியன்) இயற்கையுணவே!எமக்கு வலிமை! (பசுவூர்க்கோபி) அந்த மனிதன் (மெசொபொத்தேமியா சுமேரியர்) மன வைராக்கியம் (நிலாமதி) ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே (நிலாமதி) இரை .......! ( suvy) மனிதாபிமானப் பன்னாடை (புங்கையூரன்) மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் (ரஞ்சித்) சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?! (nedukkalapoovan) நேற்று என் கனவில் கடல் வந்தது (நிழலி) புட்டினும் புதுமாத்தளனும் (goshan_che) குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
 6. வணக்கம், யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதிக்கான இணைப்பு கருத்துக்களம் பகுதியின் மேற்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதியப்படும் ஆக்கங்கள் அதிக பார்வைக்கு செல்லும் வாய்ப்புள்ளது. பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள பல யாழ் கள உறுப்பினர்கள் உள்ளனர். ஆயினும், ஆக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. எனவே, காலந்தாழ்த்தாது ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை " யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. எஸ்கியூஸ் மீ மூருகா ( putthan) இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல.. ( ராசவன்னியன்) வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......! ( suvy) யாழ் எனும் திமிர். (valavan) பார்வை ஒன்றே போதுமே.......! (suvy) அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள் (மெசொபொத்தேமியா சுமேரியர்) 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..! (ராசவன்னியன்) நினைவுகள் நிழல்கள் (theeya) குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
 7. வணக்கம், யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 24 இனை சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 24 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். நன்றி
 8. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2022 அன்று யாழ் இணையம் 23 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 24 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 24 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 24 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
 9. உலகில் புற்றுநோய் இல்லாத ஒரே நாடு பிஜி. எனும் திரி இணைத்தவரின் வேண்டுகோளின்படி நீக்கப்பட்டுள்ளது.
 10. செய்தி திரட்டி பகுதியில் அநாகரீகமான தலைப்புடன் இணைக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. பதிவுகளை இணைப்பவர்கள் கருத்துக்களத்தை குப்பைத்தொட்டியாகக் கருதாமல் பொறுப்புணர்வுடன் இணைத்தல்வேண்டும்.
 11. 7. விருப்புப் புள்ளிகள் யாழ் கருத்துக்களத்தில் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்குவிக்கவும் "கருத்துக்கள உறவுகள்" குழுமத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் இடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தினந்தோறும் கள உறுப்பினர்களின் தங்க, வெள்ளி, வெண்கல முன்னணி நிலைகள் அதிகூடிய விருப்புப் புள்ளிகளின் அடிப்படையில் தானியங்கியால் தீர்மானிக்கப்படுகின்றது. விருப்புப் புள்ளி வகைகள் (Reaction Types) Like(+1 புள்ளி) Thanks (+1 புள்ளி) Haha (+1 புள்ளி) Confused(0 புள்ளி) Sad (0 புள்ளி) மதிப்பு நிலைகள் (Reputation Levels) Neutral (50 புள்ளிகளுக்கு கீழ்) Good (50 - 100 புள்ளிகள்) Excellent (100 - 250 புள்ளிகள்) ஒளி (250 - 500 புள்ளிகள்) பிரகாசம் (500 - 1000 புள்ளிகள்) நட்சத்திரம் (1000 புள்ளிகளுக்கு மேல்) விருப்புப் புள்ளிகள் தொடர்பான விதிகள்: கள உறுப்பினர் ஒருவர் குறித்த 24 மணிநேர இடைவெளியில் அதிக பட்சமாக 8 விருப்புப் புள்ளிகள் மாத்திரமே வழங்க முடியும். விருப்புப் புள்ளிகள் வழங்கியவரின் பெயர் புள்ளிகளின் அருகே காண்பிக்கப்படும். சக கள உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தவும், தரமான பதிவுகளுக்கும் விருப்புப் புள்ளிகள் இடுவது விரும்பப்படுகின்றது. கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது. கள உறுப்பினர்கள் குழுவாகச் சேர்ந்து தமக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது. கள உறுப்பினர் ஒருவர் தனது பதிவுகளுக்கு வேறு பயனர் பெயரில் உள்நுழைந்து விருப்புப் புள்ளிகள் வழங்குதல் கூடாது. கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அல்லது பிற கள உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்குவதற்காக பல உறுப்பினர்கள் பெயர்களில் கருத்துக்களத்தில் இணைவது கூடாது. கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் "கருத்துக்கள பார்வையாளர்கள்" குழுமத்திற்கு நகர்த்தப்படுவதனால், அவர்கள் கருத்துக்கள் பதியும்வரை விருப்புப் புள்ளிகள் இடும் வசதி நீக்கப்படும்.
 12. வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகள் உலகநாடுகள் அனைத்திலும் வழங்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸானது திரிபடைந்து நெருக்கடிகளைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும், தடுப்பூசிகள் பற்றிய முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் யாழ் கருத்துக்களம் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2021 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம். குறிப்பு: 01-01-2021 முதல் 26-12-2021 வரையான தரவுகளின் அடிப்படையில் இப்பட்டியல் உள்ளது. 2021 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் பார்வைகள் கொண்டவை யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021 தரைப்புலிகளின் படிமங்கள்(LTTE Land Tigers Images) யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம் கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம் தமிழீழப் படிமங்கள்(Tamil Eelam Images) முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான் ‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு - கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா இவற்றுடன் களம் தொடர்பான பின்வரும் திரியும் அதிக பார்வைகளைக் கொண்டிருந்தது. களத்தில் உள்நுழையும் முறையில் மாற்றம் 2021 இல் ஆரம்பிக்கப்பட்ட திரிகளில் அதிகம் கருத்துக்கள் பதியப்பட்டவை யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021 தரைப்புலிகளின் படிமங்கள்(LTTE Land Tigers Images) சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம் கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான் பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம் ‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல் குறிப்பு: கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய நாற்சந்தியில் உள்ள திரி ஒன்று இப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. 2021 இல் இணைந்து அதிகம் கருத்துக்கள் பதிந்த உறவுகள் (முதல் ஐவர் மட்டும்) நன்னிச் சோழன் 20,956 sivarathan1 142 தமிழகன் 108 Aruvadai Nilavu 36 ஆ.சாமி 29 குறிப்பு: இவ்வாண்டு புதிய உறுப்பினர்களாக இணைந்தவர்கள் பலர் கருத்துக்கள் மிகவும் குறைவாகவே பதிந்துள்ளமையால் முதல் ஐவர் மட்டும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. 2021 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்ற உறவுகள் குமாரசாமி 3,108 தமிழ் சிறி 2,320 suvy 2,054 goshan_che 1,791 கிருபன் 1,721 புரட்சிகர தமிழ்தேசியன் 1,090 உடையார் 1,052 பெருமாள் 992 ரஞ்சித் 974 அன்புத்தம்பி 970 2021 இல் அதிகம் விருப்பப் புள்ளிகள் வழங்கிய உறவுகள் தமிழ் சிறி 2,346 suvy 2,073 ஈழப்பிரியன் 1,658 குமாரசாமி 1,566 விசுகு 1,378 பெருமாள் 1,342 nunavilan 1,239 உடையார் 1,236 புரட்சிகர தமிழ்தேசியன் 1,123 பையன்26 1,054 நன்றி யாழ் நிர்வாகம்
 13. மெய்யெனப்படுவது பகுதியில் காணொளிகளின் தொகுப்பாக இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது. மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம். பரபரப்பைத் தூண்டும் எதுவித உண்மைத்தன்மையும் இல்லாத சாமியார்களின் வழிபாடுகள் பற்றிய விடயங்களை கருத்துக்களத்தை குப்பைத்தொட்டியாக கருதி இணைக்கவேண்டாம். தொடர்புடைய களவிதி: எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். தீவிர நம்பிக்கையை ஊக்கப்படுத்தாமல் பொழுதுபோக்காக அமையும் பதிவுகளுக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
 14. சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம் எனும் திரியில் சக கள உறுப்பினர்களை சீண்டும் ஆரோக்கியமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காத கள உறுப்பினர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
 15. புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன் எனும் திரியில் சக கள உறுப்பினரை பண்பற்ற முறையில் சுட்டும் சொல்லாடல் உள்ள கருத்தும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. தொடர்பான களவிதிகள்: சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.
 16. இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி எனும் திரியில் கருத்து ஒன்றில் இணைக்கப்பட்ட மலினமான மீமி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அதையொட்டிய கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. நிர்வாக உறுப்பினர்கள் சகல கருத்துக்களையும் கவனிப்பதில்லை. எனவே, களவிதிகளுக்கு முரணானதாகக் காணப்படுபவற்றை முறைப்பாட்டு (report) முறைமூலம் நிர்வாகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தினால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும்.
 17. வணக்கம், யாழ் கருத்துக்களமானது ஆரோக்கியமான கருத்தாடலையே விரும்புகின்றது. எனினும் அண்மைக்காலமாக கருத்துக்களத்தில் திரிகளில் பல அநாவசியமான கருத்தாடல்கள் உருவாகி அவை தனிமனித தாக்குதல்களாகவும், நையாண்டிகளாகவும் மாறி வருவதை அவதானித்துள்ளோம். பலதடவைகள் அறிவுறுத்தியும், நிர்வாகத்தின் அறிவித்தல்களை சட்டைசெய்யாதோர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முக்கியமாக கல்வி, தொழில், உடற்தோற்றம், சமூகநிலை போன்றவற்றை சுட்டி இழிவுபடுத்துவதும், நையாண்டிகள் செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. இதனைக் கவனத்தில்கொண்டு, அநாவசிய உரையாடல்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் ஈடுபடுமாறு கள உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புடைய விதிகளில் சில: சக கருத்தாளரின் தனியுரிமைகளை மீறும் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது. சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும். சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடற்தோற்றம், கல்வி, சமூகநிலை, பால்நிலை, இன்ன பிற நிலைகளைச் சுட்டி பண்பற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், நையாண்டி செய்வதும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும். கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நன்றி
 18. எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! எனும் திரியிலிருந்து சக உறுப்பினர்களை சீண்டும் வகையில் பதியப்பட்ட கருத்துக்களும், பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. தலைப்புக்கு சம்பந்தமில்லாத அநாவசிய உரையாடல்களை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.
 19. ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட லண்டனில் வாழும் யாழ் தமிழர் கப்பம் கேட்டாரா? எனும் திரி நீக்கப்பட்டுள்ளது. யாழ் களம் கள உறுப்பினர்கள் சுயமாக ஆக்கங்களை, செய்திகள் பற்றிய அலசல்களை எழுத எப்போதும் ஊக்குவிக்கின்றது. எனினும் இவை கருத்துக்களத்தில் பொருத்தமான பிரிவுகளில் பதியப்படவேண்டும். ஊர்ப் புதினம் பகுதி தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகளுக்கான பகுதி. புதிய தலைப்புக்களைத் திறப்பதற்கான இயல்நிலை (default) பகுதி அல்ல. இப்பகுதியிலும், பிற செய்திக்கான பகுதிகளிலும் முகநூல் சுவரில் எழுதுவது போன்று கருத்துக்களை புதிய திரிகளைத் திறந்து பதிவது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். மேலும், புதிய செய்திகளுக்கான திரிகள் நம்பத்தன்மையான ஊடகங்களில் உள்ள செய்தியை மாத்திரமே முதல் பதிவாகக்கொண்டிருக்கவேண்டும். அதனையொட்டிய கருத்துக்கள் இருந்தால், அவற்றினை செய்தியை முழுமையாக இணைத்த பின்னர் கருத்தாகவே பதியலாம். இந்நடைமுறை தமிழகச் செய்திகள், உலக நடப்பு போன்ற செய்திப் பிரிவுகளிலும் கடைப்பிடிக்கவேண்டும். செய்தி பற்றிய கருத்துக்கான அல்லது அலசலுக்கான மூலச் செய்தி பிறமொழியில் (எ.கா. ஆங்கிலம்) இருந்தால், மூலச் செய்தி முழுமையாக யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கப்பட்டு, அது பற்றிய கருத்தினையும் தமிழில் அப்பகுதியிலேயே வைத்து கருத்தாடலைத் தொடரலாம். செய்திகள் பற்றிய பத்திக் குறிப்புக்கள் போன்ற நீண்ட கருத்துக்கள், ஆய்வுகள், அலசல்கள் நிகழ்வும் அகழ்வும் பகுதியில் மாத்திரமே பதியப்படவேண்டும். இவையெல்லாம் களவிதிகளிலும், ஒவ்வொரு கருத்துக்கள பிரிவுகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், முகநூலையும், யூடியூப் காணொளிகளையும் இணைப்பது பற்றி விதிகள் தெளிவாக உள்ளன. காணொளிகளின் உள்ளடக்கங்களைக் குறிப்பிடாமலும், வெளியிணைப்புக்களை மாத்திரம் காட்டும் பதிவுகளும், செம்பாலை (செய்திக்களம்) பகுதியில் உள்ள பிரிவுகளில் இணைக்கப்பட்டால் அவை நீக்கப்படும். இவை கள உறுப்பினர்களின் சுயமான காணொளிகளாக இருக்கும்பட்சத்தில் மாத்திரமே அனுமதிக்கப்படும். எனவே, புதிய திரிகளை திறக்க்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும்.
 20. மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் எனும் திரியில் இருந்து அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் திரியின் தலைப்புடன் ஒட்டி கருத்தாடல் புரியவேண்டும். சக கள உறவுகளின் அடையாளங்கள், தொழில் பற்றிய ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் முழுமையாக நீக்கப்படும்.
 21. யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்துக்கள், தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. களவிதி: சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். துரோகி, பச்சோந்தி, பன்னாடை, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான, அருவருப்பான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
 22. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து எனும் திரியில் இருந்து தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் தலைப்புக்கு உட்பட்டு கருத்தாடலைப் புரியவேண்டும்.
 23. "பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" எனும் திரியில் இருந்து அநாவசிய அரட்டைத்தனமான கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.
 24. மெய்யெனப் படுவது பகுதியில் இணைக்கப்பட்ட மூலமில்லாத தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது. எதுவித விஞ்ஞான அடிப்படையுமற்ற தகவல்களை கருத்துக்களத்தில் இணைப்பதை கள உறுபினர்கள் தவிர்க்கவேண்டும். மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம். எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
 25. எப்படி டார்லிங்' (Kohomada Sudu) text - பலர் வைத்தியசாலையில் எனும் திரி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து செய்தி திரட்டி பகுதிக்கு நகர்த்தபட்டுள்ளது. ஊர்ப்புதினம் பகுதியானது முக்கியமான தாயகச் செய்திகளை நம்பகத்தன்மையான இணையத்தளங்களில் இருந்து இணைப்பதற்கான பகுதி என்பதனை தலைப்புக்களை தொடங்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். யாழ் களம் சுய ஆக்கங்களை ஊக்குவிக்கின்றது. எனினும், மஞ்சள் பத்திரிகை பதிவுகள் போன்றவற்றைத் தவிர்த்து கருத்துக்களத்தின் தரத்தினை பேணும், கருத்தாடலை ஊக்குவிக்கும் ஆக்கங்களையே விரும்புகின்றது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.