Jump to content

pri

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  42
 • Joined

 • Last visited

 • Days Won

  1

pri last won the day on December 22 2019

pri had the most liked content!

Profile Information

 • Gender
  Male
 • Location
  canada
 • Interests
  எதையாவது வாசிப்பது எப்போதாவது எழுதுவது

Recent Profile Visitors

1038 profile views

pri's Achievements

Contributor

Contributor (5/14)

 • Conversation Starter
 • First Post
 • Collaborator
 • Week One Done
 • One Month Later

Recent Badges

83

Reputation

 1. நன்றி சுவைப்பிரியன் . நன்றி nige.
 2. வேதவனம் ஒழுங்கை பருத்தித்துறையில் இருந்தது. இருந்தும் என்ன? பருத்தித்துறை நகரத்தில் இறங்கி வேதவனம் ஒழுங்கைக்கு போகிற வழியை யாரிடமாவது விசாரித்தால் அவர்கள் விழி பிதுங்குவார்கள். அப்படி ஒரு ஒழுங்கை இங்கே இல்லை என்று வேண்டுமானால் சத்தியம் கூட செய்வார்கள். அந்தளவுக்குத்தான் அது பிரபலமானது. கல்லடி ஒழுங்கை என்றும் சங்கக்கடைக்கு முன்னால் இருக்கிற ஒழுங்கை என்றும் அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்றபடி சொல்வதுண்டு. தபால்காரன் மாத்திரம் வாங்குகிற சம்பளத்திற்கு நாணயமாக சரியான பெயரை மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருந்தார். அவரின் கடமை விசுவாசத்தால் கடிதங்கள் எந்த பொல்லாப்பும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தது. அப்பேர்ப்பட்ட வீதியில் இடப்பக்கத்தில் மூன்றாவதாக எங்கள் வீடு இருந்தது. ஐந்தாவதாக சீதாராம் வீடு இருந்தது. சீதாராமும் நானும் ஒரே வயதுக்காரர். வேறு வேறு பாடசாலையில் படித்துகொண்டிருந்தோம். தானும் தன்பாடும் என இருந்த சீதாராம் எந்த குழப்படிக்கும் போகாத நல்ல பிள்ளை. சீதாராமுக்கு கண்ணன் என்பது வீட்டுப்பெயர். போதாக்குறைக்கு ரேமன் என்ற இன்னுமொரு புது பெயரும் வந்து சேர்ந்தது. அதற்கு பிறகு ஆள் ஊரில் இல்லை. அது இயக்க பெயர். அலாப்பினாலும் சண்டைக்கு வராத ஒரு ஆள் குறைந்து போனதில் கூட விளையாடிய பலருக்கு கவலை. இன்னும் சிலருக்கு பெரிய ஆச்சரியம். இயக்கத்துக்கு போன பிறகு சீதாராம் பல வருடங்களாக ஊருக்கு வந்ததில்லை. பெரும்பாலான நாட்கள் இந்தியாவும் இயக்க வேலையுமென கழிந்து போயிற்று. இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி மற்றைய எல்லா இயக்கத்தையும் வீட்டுக்கு அனுப்பிய பிறகு யாழ்பாண வீதிகளிலும் பஜிரோக்கள் ஓடியது. அப்படி ஓடிய பஜிரோ ஒன்றில் பானு முன் சீட்டில் இருந்தார். மஞ்சளுக்கும் வெள்ளைக்கும் இடையில் ஒர் நிறத்தில் சாரதி இருக்கையில் ஒருவர் இருந்தார். அவரை ரேமன் என்று சொன்னார்கள். அந்த காலத்தில் மீண்டும் ஒரு முறை ஒழுங்கைக்கு வந்து போனதாக அறிந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கும் வந்து எல்லோர் சுக துக்கங்களையும் விசாரித்து போயிருந்தான். சின்ன வயதில குண்டு விளையாடுகிற போது என்னோடு சண்டை போட்டதை பற்றி சொல்லி இப்போது நான் என்ன செய்கிறேன் என கேட்டறிந்ததாக அம்மா சொன்னார். எனக்கு சந்திக்க வாய்ப்பு கிட்ட வில்லை. சேவல் கூவ அன்றைய பொழுதும் தப்பாமல் விடிந்தது. இரத்தனப்பாவின் ஆடுகள் இலைகுழைகளை தேடி கூட்டமாக நடைபோட்டன. போகிற வழியில் ஆடொன்று எங்கள் படலையை தலையால் தள்ள குட்டி ஆடு உள்ளே நுளைந்தது. முற்றத்தில் மல்லிகை மரமொன்று இருந்தாக வேண்டும் என்ற அம்மாவின் கனவையும் சேர்த்தே அது கவ்வியது. படலையின் கொழுக்கியை போடமறந்தவருக்கு அர்ச்சனை பாடியபடி அம்மா ஆட்டுகுட்டியை வெளியே துரத்தினபடி இருந்தார். அதுவும் எல்லா சாகசங்களையும் செய்து உள்ளேயே சுத்தித்சுத்தி ஓடியது. அப்போதுதான் அந்த ஓவென்ற அழுகுரல் குட்டி ஒழுங்கையை நிறைத்தது. அவரவர் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார்கள். அது சீதாராம் வீடாக இருந்தது. சினைப்பர் தாக்குதலில் சீதாராம் இறந்த செய்தியை காவிய இரண்டு இளைஞர்கள் வந்திருந்தார்கள். கோபத்திற்கும் துக்கத்துக்கும் இடையில் ஏதேனும் ஒரு வடிவம் இருப்பின் அது அவர்கள் முகத்தில் தெரிந்தது. அவர்கள் என்னதான் செய்வது? ஒரு கோழையை போல அழவும் முடியாது . பிள்ளையை இழந்து கத்துகிற குடும்பத்தின் வலியில் கலக்காமல் கல்லாகவும் இருக்க முடியாது. அந்த சங்கடம் அவர்கள் அசைவில் தெரிந்தது. சின்ன வயது முதல் மரணம் எல்லோரையும் கலங்க வைத்தது. சிலர் இராணுவம் பாடையில் போவர் என திட்டினார்கள். சிலர் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துகொள்வார் என ஆறுதல் சொன்னார்கள். இப்படியாக அன்றைய பகல்பொழுது இருண்டே கிடந்தது. பின்னர் வந்த நாளொன்றில் வீதியின் தலைப்பில் பெயர் பலகை ஒன்றிருந்தது. அது ரேமன் வீதி என்று சொன்னது. எங்கள் ஊரின் எல்லா வீதிகளுக்கும் சொல்ல ஒரு பெயரும் கனத்த நினைவுகளை சுமந்த சில கதைகளும் அதைக் காவி பல ஆயிரம் மைல்கள் தாண்டி வாழ்கிற மனிதர் கூட்டமும் இருப்பர்.
 3. நன்றி கவி அண்ணா . நீங்கள் சாண்டோ மணியம் என்பது மணியம் மாஸ்டரோ தெரியவில்லை . எனக்கே ஐம்பதை தாண்டிவிட்டது . கட்டாயம் ஐம்பதை தாண்டிஇருக்கும் .
 4. இந்தியாவுக்கு போகேலாமா மாட்டுப்பட்ட பெரிய கூட்டம் இருக்குது போல . சில விசயங்களை இப்ப நினைக்க சிரிப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கும் . நன்றி maruthankery ,உங்கள் நினைவுகளையும் பகிர்ந்தமைக்கு .
 5. நன்றி nige . நன்றி கிருபன் . எங்களை பயிற்சிக்கு சேர்த்தாலும் எங்கள் வயதும் உடம்பும் அதட்கு சரிப்பட்டு வராது என்பது துரை அண்ணாவுக்கு தெரியும் . ஐயாயிரம் தரம் இருந்து எழும்ப சொன்னதெல்லாம் எங்களை வராமல் பண்ணுவதட்கே . நன்றி suvy . எங்களுக்கு தலைமயிரோட சாகசம் செய்ய முடியாது . கொஞ்சம் வளந்தாலும் தேடி அடிக்க ஒரு வாத்தியார் இருந்தார் .
 6. ஞாபகங்கள் ஒரு வகையில் விசித்திரமானவை. அண்மையில் நடந்த சம்பவமொன்று மறந்து போகிறது.கடைத்தெருவில் சந்திக்கிற மனிதர் ஒருவர் என்னை ஞாபகமிருக்கிறதா என கேட்கிறபோது அசடு வழியவேண்டிவருகிறது. எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கும். பெயர் நினைவுக்கு வராமல் அடம் பிடிக்கும். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் இப்போதும் அச்சொட்டாக ஞாபகத்தில் இருக்கிறது. பல நூறு மனிதர்களையும் சில ஆயிரம் சம்பவங்களையும் கடந்திருப்போம். சிலது ஒட்டிக்கொள்கிறது. சிலது தொலைந்து போகிறது. எது தொலையும் எது தங்கிநிற்கும் என்பதற்கு ஏதேனும் எளிய சூத்திரம் இருக்கிறதோ தெரியாது. இது இன்னும் மறையாமல் எங்கையோ ஓரமாக ஒட்டிக்கொண்டிருகிற இரண்டு பள்ளிகால கனவுகள் பற்றியது. சின்ன வயதில் நண்பர் கூட்டம் ஒன்று இருந்தது. பொதுவாக எல்லோருக்கும் இருந்திருக்க கூடும். அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை போகிற போக்கில் பயணிப்பார்கள். ஏறினாலும் இறங்கினாலும் பெரிதாக அதலட்டிக்கொள்வது கிடையாது. நாளையை பற்றி யோசித்து இருக்கிற பொழுதை சிதைக்க தெரியாதவர்கள். முடிந்தவரை அந்த அந்த பொழுதுகளுக்கு வஞ்சகம் செய்யாதவர்கள். சின்ன சின்ன பகிடிக்கும் வாய் கிழிய சிரிப்பார்கள். கப்பல் கவிண்டாலும் கணக்கில் எடுக்க மாட்டார்கள். அவர்களோடு கூடி இருக்கிறபோது சந்தோசங்கள் தானாக வந்து சேரும். முன்பெல்லாம் ஊருக்குள் வீரசாகசங்கள் நடப்பதுண்டு. ஓடாமல் நிக்கிற லொறியை இடுப்பில் கட்டி இழுப்பது, ஓடுகிற ட்ரக்டரை நெஞ்சில் ஏற்றுவது செங்கட்டியை கையால் உடைப்பது என அது பலவகைப்படும்.அவ்வப்போது ஆணழகன் போட்டியும் நடந்தேறும். எண்ணெய் பூசிய ஜம்பவான்களின் தசைகள் மேடையேறி தனித்தனியே நடனமாடும். இவைகளை பார்த்த எங்கள் நண்பர் ஒருவருக்கும் பயில்வான் ஆகிற ஆசை வந்து தொலைத்தது. அப்போதெல்லாம் பருத்தித்துறையில் பயில்வானாக மாற இரண்டு வழிகள் மட்டுமே இருந்தது. அதற்கு மேலும் இருந்திருக்க கூடும். ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்காததால் எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சோதி அண்ணாவின் கராட்டி வகுப்புகள் வீரபாகுவின் கட்டடத்தில் மேல் தளத்தில் நடக்கும். பச்சை முட்டையை வெறும் வயித்தில் குடித்த பிறகு சோதி அண்ணாவிடம் கராட்டி பழகுவது ஒரு வழி. சாண்டோ துரைரத்தினம் வீட்டில் பொடி பில்டிங் (body building) நடக்கும். இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்த கடலையை அவிக்காமல் சாப்பிட்ட பிறகு சாண்டோ அண்ணா வீட்டில் பாரம் தூக்குவது மற்றைய வழி. முட்டை விலை கட்டுபடியாகாது என்பது தெரிந்தது. பிறகு யோசிக்க என்ன இருக்கிறது. சண்டோ வீட்டுக்கு போவதென நண்பர்கள் ஒருமனதாக முடிவுக்கு வந்தார்கள். கூட்டமாக சவனாய்க்கு போனோம். சாண்டோ துரைரத்தினம் வீட்டு கதவை தட்டனோம். பயில்வான் ஆகிற ஆசையை சொன்னோம். எங்களை பார்த்த சாண்டோவுக்கு சிரிப்பு வந்தது. முதலில் போய் படிக்கிற வேலையை பாருங்கள் பிறகு பயில்வான் ஆகலாம் என்றார். நாங்கள் விடுவதாக இல்லை. அதிஸ்டம் சொல்லிகொண்டா வருகிறது? அப்படிதான் சாண்டோவின் இரண்டாவது மகன் ஹரி அறைக்குள் இருந்து எட்டி பார்த்தான். ஹாட்லியில் ஒன்றாக படிக்கிற கதையை சொல்லி எங்களுக்கும் பழக்கிவிடும்படி அப்பாவிடம் சிபார்சு செய்தான் . வேறு வழியில்லாமல் சாண்டோவுக்கு எங்களையும் ஆட்டத்தில் சேர்க்கவேண்டியதாயிற்று. அடுத்த நாள் பின்னேரம் ரியுசனில் பாதிநேரம் இருந்தோம் மிகுதி நேரம் சாண்டோவின் வீட்டில் பயில்வான் பயிற்சியில் இருந்தோம். முதல் நாள் பயிற்சி ஆரம்பமானது. கால்களும் கைகளும் இறுகிய பிறகுதான் பாரம் தூக்கமுடியுமென சொன்னார். முதலில் ஐயாயிரம் தரம் இருந்து எழும்ப சொன்னார். இலக்கங்களில் கொஞ்சம் திருகுதாளங்கள் செய்து பார்த்தோம். அப்படியிருந்தும் யாராலும் ஆயிரம் இலக்கத்தை கூட தாண்ட முடியவில்லை. சரி நாளைக்கு வந்து ஐயாயிரம் தரம் இருந்து எழும்பிய பிறகு பயிற்சியை தொடங்கலாம் என திருப்பி அனுப்பி வைத்தார். அதற்கு பிறகு சாண்டோ வீட்டுக்கு மட்டுமல்ல சவனாய்க்கு போவதையே நிறுத்திகொண்டோம். இப்படியாக பயில்வான் கனவு ஒரே நாளில் கலைந்தது. இன்னுமொரு சம்பவம். எண்பத்து மூன்றின் கடைசி அல்லது எண்பத்து நான்கின் தொடக்கமாக இருக்க வேண்டும். வயதும் பக்குவமும் கொஞ்சம் கூடியிருந்தது. நாட்டின் நிலமைகள் வேறு திசையில் பயணிக்க தொடங்கியிருந்தது. பெரும்பாலான எங்கள் வயதுக்காரின் எண்ணங்களில் பெரும் மாற்றம் தொற்றிக்கொண்டது. சிரிப்புகள் குறைந்து போனது. சீரியஸ் பேச்சுகள் வந்து சேர்ந்தது. ஜனநாயகமா அல்லது மாக்சீசமா ஈழத்தின் ஆட்சி என்பதுவரை அது நீண்டிருந்தது. அது ஒரு வழமையான சனிக்கிழமை. (CME) சிம்ஈயில் பகல் நேர வகுப்புகள் இருக்கும். புத்தகமும் கையுமாக வீட்டில் இருந்து புறப்பட்டேன். இனி புத்தகமும் நானும் வீடு திரும்பப்போவதில்லை என்பது தெரியும். யாருக்கும் அது பற்றி மூச்சுவிடவில்லை. இந்தியாவிற்கு பயிற்சிக்கு போவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிவாகியிருந்தது. வெயில் மறையாத பின்நேர பொழுதொன்றில் மணற்காடு கடற்கரையை சென்றடைந்தோம். மீனவர் வாடியொன்றை ஒதுக்கியிருந்தார்கள். ஓட்டியும் வள்ளமும் வந்து சேரும்வரை அங்கு இருக்கும்படி சொல்லப்பட்டிருந்தது. கூட இருக்கிற மற்றையவர்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள். நாட்டை விட்டு போவது பற்றிய எந்த பதட்டமும் இருக்கவில்லை. யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வந்தது பற்றிய சின்ன உறுத்தல் மட்டும் உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்தது. அப்பாவின் சைக்கிளை வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் இடைநடுவில் போட்டு விட்டு வந்ததை சொல்லி ஒருவர் வருத்தப்பட்டார். திருநாவுக்கரசு மாஸ்டர் வகுப்பில் அரைவாசி பேரை காணாமல் தலையில் கைவைக்கபோகிறார் என சொல்லி இன்னுமொருவர் சிரிக்க வைத்தார். நேரங்கள் நகர்ந்தது. வானம் இருட்ட தொடங்கியிருந்தது. காற்று கொஞ்சம் பாலமாக வீசியது. அது மணலை காவிவந்து விசிறி எறிந்தது. அலைகள் ஆளுயர எழுந்து இறங்கியது. இடியும் மின்னலும் அந்த இரவை வெருட்டியது. சோவென பெய்த மழை நிலமையை இன்னும் மோசமாக்கியது. இதுதான் கடலோர வாழ்கையாக இருக்ககூடும் என எங்களுக்குள் பேசிகொண்டோம். உண்மை அதுவல்ல. அதுவொரு பேய் காற்றும் கடல்கொந்தழிப்புமான அசாதாரணமான இரவு என்பது பின்னர் தெரிந்தது. வள்ளம் இன்றைக்கு புறப்படுவதற்கு சாத்தியமில்லை என்பதை பக்கத்து வாடி மீனவர்கள் சொல்லிப்போனார்கள். அவர்கள் காச்சிய கஞ்சியை கொண்டு வந்து தந்தார்கள் . மணல் கஞ்சிக்குள் வந்து விழுவதை தடுப்பதுவும் நனையாமல் நிப்பதுவும் பெரும் சிரமமாக இருந்தது. நித்திரை இல்லாத ஒரு முழு கடற்கரை இரவை முதன் முதலில் பார்க்க கிடைத்தது. படிக்க போன பிள்ளைகள் வீடுவந்து சேராததால் பருத்தித்துறையில் சில வீடுகள் அல்லோகல்லோலப்பட்டது . இரவு முழுக்க தேடியும் எந்த சேதியும் இல்லை. அப்போதெல்லாம் படிக்க போனவர் வீடு திரும்பவல்லையென்றால் இயக்கத்தில் ஒரு இலக்கம் கூடியிருக்கும். கொஞ்சம் மினகட்டால் எந்த இயக்கம் என்ற துப்பு மட்டும் வேண்டுமானால் கிடைக்கும். வள்ளம் போகாமல் வாடியில் தங்கியிருக்கிற செய்தி எப்படியோ காலையில் ஊருக்குள் கசிந்தது. பெரியவர்கள் மணற்காட்டுக்கு படையெடுத்தார்கள். கடல் கடந்த பயிற்சி கைநழுவி போனது. இப்படியாக இந்திய கனவு கைநழுவி போனது. https://marumoli.com/?p=14326+
 7. இலங்கையில் ஜேபி (justice of peace) என்று பதவி ஒன்று இருக்கிறது. சுத்த தமிழில் சமாதான நீதிவான் என்று சொல்வார்கள். கையொப்பம் போடுவது அவர்களின் வேலை. சில ஜேபிகள் காசு பார்க்காமல் கையெழுத்து போடுவார்கள். "இப்ப சரியான பிசி " பிறகு வரும்படி சொல்லி படம் காட்ட மாட்டார்கள். அவர்களை பொதுவாக நல்ல ஜேபி என்று சொல்வதுண்டு. ஜேபியாக என்ன படிக்க வேண்டும் என்பது மட்டும் இன்றைவரைக்கும் யாருக்கும் தெரியாத பரம இரகசியம். எங்கள் ஊரில் ஒரு ஜேபி இருந்தார். பகலில் பாடசாலையில் வேலை செய்வார். பின்னேரத்தில் ஜேபி வேலை பார்ப்பார். இருட்ட முன்னம் போனால் எல்லா படிவத்தையும் படித்து பார்த்து தேவையான இடத்தில் சீலை குத்தி முத்து போன்ற எழுத்தில் கையொப்பம் வைப்பார். கொஞ்சம் நேரம் செல்ல போனால் காட்டுகிற இடத்தில் கையொப்பம் போட்டு வேறு ஒரிடத்தில் சீலை குத்துவார். மற்றும்படி அவர் அருமையான நல்ல ஜேபி. நான் முதன்முதலாக கடவுச்சீட்டு எடுப்தற்கு அவரிடம் கையொப்பம் வாங்கியிருக்கிறேன். என்னைபோல பலருக்கு அவரின் கையொப்பத்தை நம்பி பாஸ்போர்ட் தந்திருக்கிறார்கள். இன்னுமொரு வகை ஜேபி இருக்கிறார்கள். மொரட்டுவ பஸ் வெள்ளவத்தைக்கு வந்து சேர்கிறபோது பெரும்பாலும் பஸ் முழுக்க ஆட்கள் இருப்பார்கள். பெரிய மனசு படைத்த கண்டக்டர் ஒரு காலையும் இரண்டு கைகளையும் பஸ்சுக்குள் திணிக்க என்னை போன்றவர்களுக்கும் வசதி செய்து தருவார்.ஒருமாதிரி ஏறி ஒற்றை காலில் தொங்கி மெஜஸ்டிக் சிட்டியில் இறங்கி ஒரு குட்டி நடை போட்டால் பம்பலபிட்டி கடற்கரை தெரியும். அதற்கு பக்கத்தில் காலாவதி திகதி முடிந்த பழைய கட்டடம் ஒன்று இருந்தது. அதுவே அப்போது பாஸ்போர்ட் ஒப்பீஸ்சாகவும் இருந்தது.அந்த பகுதியில் போகிறபோது கொஞ்சம் தலையை திருப்பினாலும் பின்னால் மந்திரவாதி போல ஒருவர் வந்து நிப்பார். ஜேபி சைன் வேணுமா என்று கேட்பார். ஐம்பது ரூபாய்க்கு ஜேபி சைன் சுடச்சுட கிடைக்கும். அவர்கள் உண்மையான ஜேபியா அல்லது கள்ள ஜேபியா என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். ஜேபி பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான். இதற்கு மேல் ஒரு அங்குலமும் நான் அறியேன். கிறிஸ்துவுக்கு பின் வந்த காலமொன்றில் மகிந்த குடும்பமாக அரசை ஆண்டார் . புத்த மதம் அரசமதம் என்பதால் சிலசமயங்களில் அவருக்கு அகிம்சை மற்றும் காருண்யம் பற்றிய ஞாபகம் வருவதுண்டு. அப்போதெல்லாம் அவருடைய சீருடை அணிந்த படைவீரர்கள் கொலை போன்ற சிறு பாவங்கள் செய்ய மாட்டார்கள். வெள்ளை வானும் சீருடைய அணியாத அவருடைய மற்றைய படையினரும் அந்த குறையை நிவர்த்தி செய்தார்கள். இப்படியாக புத்தமதத்தின் மகிமையை உலகறிய செய்த பெருமைக்காக இப்போதும் அவரை சிலர் தலையில் வைத்து கொண்டாடுவதுண்டு. அந்த காலத்தில் நான் கொழும்பில் இருந்தேன். அப்போதெல்லாம் காந்தி லொட்ச்சில் இடியப்பமும் சொதியையும் சப்பிட்டு நெல்சன் பிளேசில் பொழுதை போக்குவது வாழ்வின் பெரும் பேறாக இருந்தது.வெள்ளவத்தையில் இருந்த பழைய வீடுகள் வானுயர்ந்த தொடர் மாடி மனைகளாக புது வடிவம் எடுத்தது. சுவிசிலும் யுகே(uk) இலும் இருந்த நம்மவரின் ஆசையில் அது பெரும் வியாபாரமாக மாறியது. பேராதனையிலும் மொரட்டுவவிலும் படித்த இன்ஜினியர்கள் சிலர் புதிதாக குட்டி முதளாளிகளாக மாறினார்கள். நானும் சிலகாலம் குட்டி முதளாளியாக உருமாறியிருந்தேன். இங்கிலாந்தில் படிப்பை முடித்த மயந்த திசாநாயக்க அமைச்சர் ஆகிற கனவில் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார். மயந்த திசானாயக்க காமினி திசாநாயக்கவின் கடைசி மகன். அமைச்சராக இருந்த நவீன் திசாநாயக்கவின் தம்பி. இப்படி நீண்ட பட்டியல் இருந்தாலும் அரசனின் முதுகை சொறிவதை தவிர அமைச்சர் ஆக வேறு வழி கிடையாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. அரசன் காலில் போய் கிடந்தார். அரசர் அவரை வெள்ளவத்தையின் ஆளுங்கட்சி அமைப்பாளராக்கி அடுத்து வருகிற தேர்தலில் வென்று எம்பி (mp) ஆகி வரும்படி சொல்லி அனுப்பி வைத்தார். தேர்தலில் வெல்கிற சூக்குமம் எந்த புத்தகதிலும் இல்லாததால் மனுசன் திண்டாடிதான்போனார். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. பல வருடங்களாக பழம் திண்டு கொட்டை போட்ட வெள்ளவத்தை விதனையார் மயந்த திசானாயக்கவுக்கு ஆலோசனை சொன்னார். அதன் பிரகாரம் விதானையாரே புதிய அமைப்பாளரை சந்திக்கிற கூட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தார். கொள்ளுபிட்டியில் இருந்த அமைப்பாளரின் மாளிகையில் அந்த சந்திப்பு நடந்தது. வரவேற்பறையில் பெரிய சோபாவில் அவர் இருந்தார். பக்கத்தில் வெள்ளைநிற அலசேசன் நாய் அவரது காலை நக்கி தன் விசுவசத்தை காட்டியபடி இருந்தது. மற்றைய பக்கத்தில் விதானையார் கட்டிய கையோடும் குனிந்த முதுகோடும் முடிந்த வரை தன் மரியாதையை காட்டியபடி நின்றார். அவர்களுக்கு முன்னால் நாங்கள் பத்து பேர் வரை அமர்ந்திருந்தோம். எல்லோரும் வெள்ளவத்தையில் வியாபாரம் செய்பவர்கள். அரிசி வியாபாரம் செய்பவர் , எண்ணெய் கடை வைத்திருப்பவர் கட்டடம் கட்டுபவர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அமைப்பாளர் பேசினார். வருகிற தேர்தலில் தான் வெல்ல உதவவேண்டும் என்றார் . அதற்கு பிறகு வெள்ளவத்தையில் பாலும் தேனும் ஒடுமென்றார். கொழும்பில் தமிழருக்கு ஒரு தூசியும் விழாமல் பார்பதாகவும் சொன்னார்.பேசி முடிந்த பிறகு விதானையாரை திரும்பி பார்த்து சொன்னதெல்லாம் சரியா என மெதுவாக கேட்டார். விதானையார் அவரது காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். பிறகு எங்களை பார்த்து,எங்கள் எல்லோரையும் ஜேபி ஆக்குவதாகவும் வருகிற தேர்தலில் தான் வெல்வதற்கு உதவிசெய்யும் படியும் சொல்லி அனுப்பி வைத்தார். இரண்டு கிழமைக்கு பிற்பாடு ஒரு கடிதம் வந்திருந்தது. நான் ஜேபி ஆகியிருப்பதாகவும் பொருத்தமான திகதி ஒன்றில் சத்தியபிரமானம் செய்யும்படியும் எழுதப்பட்டிருந்தது. ஜேபி ஆன வெட்கம் கெட்ட கதையை எப்படி சொல்வது? கையொப்பம் போடாமலே ஜேபி ஒருவர் பிளேன் ஏறி கரை சேர்ந்தார். இன்னுமொரு நல்ல ஜேபி யை இலங்கை திருநாடு இழந்து போனது.
 8. நன்றாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் .
 9. நன்றி suvy நன்றி கிருபன் . சில நல்ல பழக்கங்களை குடும்பங்களில் சம்பிரதாயங்களாக கடத்தி இருக்கிறார்கள் . கடவுள் மறுப்பின் பெயரில் அவற்றையும் சேர்த்தே சிதைக்கிறோமோ என்கிற நெருடல் இருக்கிறது . அவ்வளவுதான் .
 10. கருத்துக்கும் ஊக்கப்படுத்துவதட்கும் நன்றி .
 11. அப்பா வீட்டில் சட்ட திட்டம் போடுவது குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய் மேசையில் போய் குந்த வேண்டும். இலங்கை வானொலியில் பின்னேர செய்தி முடிகிறபோது பெரும்பாலும் பகலை இரவு முழுவதுமாக விழுங்யிருக்கும். அதற்கு பிறகு விளையாட முடியாது. முகம் கழுவி சாமி கும்பிட்ட பிறகு புத்தகத்தோடு மேசைக்கு போக வேண்டும். இரவு சாப்பாடுவரை புத்தகத்தோடு இருக்கவேண்டும். என் பள்ளி காலங்கள் முழுவதும் இது வழக்கத்தில் இருந்தது. படிக்கிற காலத்தில் இது நிறைய உதவியதாக என்னளவிலான எண்ணம். இங்கு கனடாவில் சமர் காலத்தில் இரவு ஒன்பது மணிக்கும் வெயில் எறிக்கிறது. வின்ரரில் நாலு மணிக்கே இருட்டி விடுகிறது. இதனால் என் பிள்ளைகளுக்கு நடைமுறை படுத்த முடியாமல் போய்விட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்கிற இந்த நாட்களாவது செய்து பார்போமென்றால் புது சிக்கல் வருகிறது. சின்னவளுக்கு ஆறு மணிக்கு வயித்து குத்து வருகிறது. அல்லது சொல்லி வைத்தால் போல் சரியாக ஆறு மணியாகிறபோது ஏதாவது ஒரு வருத்தம் வந்து சேர்வதாக சொல்கிறாள். இப்படியாக இதை அமுல் படுத்துவதில் இப்போதும் தோற்றே போகிறேன். வயதும் வகுப்பும் சரியாக நினைவில்லை.அப்போது சித்தாந்தம் ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்தேன். அது சமயமும் சடங்கும் பொய்யென்றது. கடவுள் மறுப்பும் கலந்திருந்தது. சரியென பட்டது. சாமி கும்பிடுவதை நிறுத்திகொண்டேன். அப்பாவின் சின்ன வயது பழக்கமொன்று முதன் முதலாக கைவிட்டு போனது. பொன்னரின் ஒரு பனை கள்ளுக்கு ஊருக்குள் வாடிக்கையாளர் வட்டம் ஒன்று இருந்தது. அப்பாவும் ஆனந்தன அண்ணாவும் சில விடுமுறை நாட்களில் அங்கு போவதுண்டு. அங்கிருந்து வந்ததும் சேர்ந்து காட்ஸ் விளையாடுவோம்.304 இல் சரியாக கம்மாரசு அடிப்பது எப்போதும் திரில். கொஞ்சம் பிந்தினாலும் முந்தினாலும் ஆட்டம் கவிழும். கொஞசமும் அசர முடியாது. வைத்து கொண்டு துரும்பால் வெட்டுவதில் ஆனந்தன் அண்ணா கில்லாடி. கண்டு பிடித்தால் பொன்னரின் கள்ளு செய்த வேலையென்று தப்பித்துக் கொள்வார். அரசியலும் ஆனந்தன் அண்ணாவின் பகிடியுமென அந்த இரவுகள் குதூகலம் நிறைந்தவை. இன்றைக்கும் சின்ன வயது ஞாபகங்களில் தொலையாமல் இருப்பவை. இரவுகள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை. மகாபொல காசு கைக்கு வருகிற பேராதனை இரவுகள் பெரும்பாலும் நீளும். சிலருக்கு லியோன்ஸ் ஸ்பெசலோடு அது முடிந்துவிடும். படிப்பு செலவுக்கு அரசாங்கம் தருகிற காசை சாப்பாட்டுக்கு செலவழிக்க கூச்சபடுகிறவர் ஈரிகமவில் இருக்கிற பாருக்கு போகலாம். எப்போதும் பிசியாக இருக்கிற அந்த குட்டி பாரில் ராஜா என்கிற தனி ஆளே எல்லாமாக இருப்பான்.மேசையை துடைப்பது தேவைப்படுவதை கொண்டு வந்து தருவது திரும்ப திரும்ப ஒன்றையே பேசுபவர் கதைகளை கேட்டது இப்படியாக பம்பரமாக தனியொருவன் சுழன்றபடி இயங்குவான். ராஜாவின் புண்ணியத்தில் இருப்பதற்கு மூலையில் ஒரு மேசை கிடைக்கும். பிறகு ஒரு போத்திலும் சில கிளாசும் கொஞ்ச கடலையும் வந்து சேரும். கொஞ்சம் நேரம் செல்ல அரசியலும் இன்ன பிறவும் பேச்சில் கலக்கும். இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வை காணும்வரை அந்த மேசையில் யாரும் ஓயமாட்டார்கள். நல்ல வேளையாக பக்கத்து மேசையில் இருப்பர்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பதால் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை . அப்படி ஏதேனும் சிக்கல் வந்தால் ராஜா ஓடி வருவான். கம்பஸ் கட்டிய என்று சமாளித்து பஸ் ஏத்தி விடுவான். அக்பருக்கு வந்து சேர இரவு பன்னிரண்டு மணியை தாண்டி இருக்கும். ரூமுக்குள் கச்சேரி தொடங்கும். ரேடியோவில் சினிமா பாடல் அதிரும். சிவமணிகள் மேசையில் திறமையை காட்டுவார்கள். மற்றவர்கள் sp யாகவும் ஜெசுதாசாகவும் மாறுவார்கள். அந்த இரவு முடிகிற நேரம் யாருக்கும் தெரியாது. இப்போது அப்பா இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா தெரியாது. இரவுகள் முந்தியும் பிந்தியுமென்றாலும் இன்னும் வருகிறது. https://marumoli.com/?p=10946+
 12. நல்ல கதை . தொடக்கம் முதல் முடிவு வரை எழுத்துக்களோடு பயணிக்க முடிகிறது .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.