Jump to content

சாமானியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    535
  • Joined

  • Last visited

  • Days Won

    1

சாமானியன் last won the day on April 23 2019

சாமானியன் had the most liked content!

Recent Profile Visitors

3710 profile views

சாமானியன்'s Achievements

Rising Star

Rising Star (9/14)

  • Posting Machine Rare
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter

Recent Badges

280

Reputation

  1. 2009 இல் அவர்கள் அனுப்ப முயற்சித்த கப்பல் இன்னமும் நங்கூரம் எடுபடாமலே இருக்கு ....
  2. கனடா ஒரு சாத்தியமான தெரிவாக இருக்கக் கூடும், அவரது உறவினர்கள் நண்பர்கள் எவராவது ஏற்கெனவே அங்கே இருந்தால் ..... இந்தியாவின் கனடாவிற்கான கடல் கடந்த பயங்கரவாதமும் சாத்தியமான முன்னிலை அனுபவங்களையும் விபரங்களையும் பெறுவதற்கு கனடா ஆவலாக இருக்கும். அமெரிக்காவும் மூடிய கதவின் பின்னாலிருந்து இதனை ஆதரிக்கும். அவர்களுக்கெல்லாம் இஃதொரு கோல்டன் ஒப்பேர்ச்சுனிடி ....
  3. குழுமத்தில் இருக்கும் அனைவரையும் விட மிஸ்டர் பீன் , வெகு கெட்டிக்காரர் என்பது ஒரு வெளிப்படையான பாக்ட் 🙂
  4. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை. பொருளாதார ரீதியான தீர்வே உள்ளது. அறிவியல் தீர்வை தேட வேண்டும். அதனைவிடுத்து சில அரசியல் குழுக்கள் பழைய அரசியல் தீர்வுகளை கூறி பிரசித்தமடைய முயற்சிப்பது கவலைக்குரியதாகும். "2022ஆம் ஆண்டு முழுவதும் பொருளாதாரம் சரிந்தது. 2022 ஆம்ஆண்டை விட 2023இல் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இது தற்செயலாக நடந்ததல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது." நுட்பமான கொள்கை --கடன் வாங்கிக் கல்யாணம் 😀
  5. இதிலென்ன சூக்குமம் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் ஊழல் நதியில் நீந்தி விளையாடும் அரசுகள் இருக்கும் இடத்தில் தம் காலை நனைப்பதை விரும்புவது இயற்கை. சிலகோடி அன்பளிப்பில், சாதாரணமக்களின் பலநூற்றுக்கணக்கான கோடி சொத்துக்களை உறிஞ்சுவது மிக மிக இலகு.. வேறொன்றில்லை ........
  6. நாம் நிறைவானவர்கள் எனும் சுதந்திர மனப்பான்மையை வைத்திராத இலங்கைத் தமிழர் எவரேனும் இருப்பர் என்று நான் கருதவில்லை . எழுநூறு ரௌடிகளுடன் இங்கே வந்து, அடாத்தாக இன்னமும் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகுது.. ஆடும்வரை ஆடுங்க ........
  7. கவுரவ குத்தியருக்கு இதிலொரு சந்தோஷய. இவ்வளவு நாளும் சர்வதேசம் வந்தால் தானும் சிலவேளை போகவேண்டி வருமோ எண்டு ஜோஜனா ஈந்திருக்கும் .. இனியென்ன ஏகேடி க்கு மந்திரிக்க என்ன செய்யலாம் எண்டு வியூகம் போட வாண்டியது தானே ....
  8. உங்களுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன் கப்பித்தான். சிலநாட்களுக்கு முன்னரேதான் அவதானித்த விடயம் என்பதால் மறந்திருக்கவும் சந்தர்ப்பம் இல்லை. இன்னுமொரு சுவாரசியமான விடயம் - "துப்பினால் 250 ரூபாய் தண்டம்"- என்றும் மெட்ரோ நிலையங்களில் ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டி வைத்திருக்கிறார்கள். எவராவது மெட்ரோ நிலையங்களில் துப்பி நான் காணவில்லை. முந்தைய வருட(2022) இறுதியில் பாரிஸ் மெட்ரோவை பல நாட்கள் உபயோகித்திருந்தேன். டெல்லி, பாரிஸ் மெட்ரோ இரண்டிலுமே அறிவித்தல் மொழியை விட வித்தியாசம் வேறேதும் கண்டிலேன்.
  9. கடந்த சில வாரங்களை இந்தியாவில் விடுமுறையில் செலவிட்டிருந்தேன். டெல்லி மெட்ரோ அடிக்கடி பயன்படுத்தியிருந்தேன். உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது. எதிர்பாராத விடயம் ஒன்றையும் அவதானித்தேன். இரயில் வந்து நின்றததும் பயணிகள் வாசலருகே ஏறுவதற்காக அமைதியாக வரிசையில் காத்து நின்றனர். இறங்குபவர்களை வாசலின் ஒருபக்கமாக இறங்க விட்டு இவர்கள் ஒவ்வொருவராக உள்ளே ஏறிக்கொண்டிருந்தனர். யப்பானியசத்தை டில்லியில் கண்ட நேரம் அது. இந்தியா வெகு விரைவாக வயதுக்கு வந்து கொண்டிருக்கிறது .
  10. இயர் எண்டு ஹாலிடே ட்ரிப் உடன் கிளைம் பண்றத்துக்கு ஆஃபீஸியலாக சமுனான்சலாகே ஏதாவது சேர்க்க வாணும் தானே மக்கே.. பெரிய சீரியஸா எடுக்க வாணாம் தானே ..
  11. நகர்வலம் ….. எனது முகத்தில் அப்படி என்னதான் வித்தியாசமாக இருக்கின்றதோ நானறியேன். இதனை பற்றி கதை வரும் நேரங்களில் மேடம் வெகு தெளிவாக சொல்வார் " ஏமாளி என்று முகத்தில அப்பிடியே எழுதி ஒட்டி வைச்சிருக்கு , கண்ணை நல்லா துடைச்சிட்டு , ஆடியில வடிவா பாருங்க , தெரியும் " எண்டு .. வேறொன்றுமில்லை, நீலம் தான் என் நிறம் என்று வானம் பல நாட்களுக்கு பிறகு சற்றே ஞாபகப்படுத்த , காலையில் எழுந்து அண்டை அயல் இடங்களில் சனி காலை என்னதான் நடக்கின்றது என பார்த்து விடலாம் என கிளம்பினேன் . நடந்து கொண்டிருக்கையில் - நடை பாதை நடப்பதற்கே - எனும் மாநகராட்சியின் அறிவித்தலுக்கு விருந்தாளி நாமாவது மதிப்பு கொடுப்பேமே என்று - நண்பர் ஒருவர் வாட்(செ)ப்பினார். என்ன செய்து கொண்டிருக்கிறேன் என வினாவினார் . நகர்வலம் பற்றி சொன்னேன். அவர் சென்னையில் பலகாலமாக இருக்கும் நண்பரொருவர் . " இன்றைய பத்திரிகைகள் பார்த்தாயா " - நண்பர் . "இல்லையே , ஏன் , என்ன விடயம் " - இது நான் " இல்லை , சென்னை வெள்ளத்தில் நாய்கள் பல செத்து மிதக்கின்றன என்று போட்டிருக்கிறார்கள் , காரணம் தெரியுமோ " - என்று கேட்டார் நண்பர் . " இல்லையே , தெரியவில்லையே " -நான் " நடந்து போய்க்கொண்டிருக்கிறேன் என்று சொல்கின்றாயே , கண்ணை விரித்து ஏதாவது வித்தியாசமாக தெரிகின்றதா என்று பார்த்துச் சொல் " என்றார் நண்பர் . கண்ணை விரித்தேன் , கண்ணாடியைக் கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து சுற்று முற்றும் பார்த்தேன் . " ஆட்டோ வேணுங்களா சார் " - இடையில் பூஜை வேளையில் கரடி தொல்லை வேறு. "இல்லையப்பா , இது வேறு பார்வை " என்று முதல் சொல்லை அவருக்கும் மீதியை எனக்குமாக சொல்லிக் கொண்டு , மீண்டும் மீண்டும் பார்த்தேன் . கண்ணில் பட்டு வித்தியாசமான காட்சிகள் சில உண்மையிலேயும் மனத்தில் உறைத்தன. மின் கம்பங்களும் , தந்திக் கம்பங்களும் . அவற்றின் மீது சகட்டு மேனிக்கு மேலேயும் , கீழேயும் , குறுக்காகவும் , நெடுக்கிலும், பந்து பந்து போன்ற சுருள்களாக கம்பிகள் , வயர்கள் , பல வித நிறங்களில். நடைபாதையை குறுக்கறுத்து வெட்டி நிரப்பப்படாத கிடங்குகளுக்குள் அந்த கம்பிகள் போவதும் வருவதுமான , நமது ஊரில் ( அதாங்க அவுஸ்திரேலியா) காணக்கிடைக்காத காட்சிகள் கண் முன்னே விரிந்து நின்றன. நண்பனிடம் கண்ட காட்சிகளை பற்றி சொன்னேன் . ' சென்னை வாசி ஆவதற்குரிய ஐம்பது வீத தகுதியை நீ அடைந்து விட்டாய் மகனே " என்ற நண்பர் தொடர்ந்தார் . " அவற்றின் பக்கத்தில் போகாதே , போனாலும் தொட்டு விடாதே , எல்லாவற்றையும் விட மேலானது மழை காலங்களின் வெள்ளச் சாலைகளில் உல்லாச நடை தவிர்ப்பது" என்றார் நண்பர் . இப்போதெல்லாம் மின்சக்தி காவு கம்பிகளை நிலத்தின் கீழ் மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இணைப்புகள் கொடுக்கும் இடங்களில் வரும் பொருத்துக்களை உரிய முறையில் மேற்கொள்ளாமையால் , மழை நேரம் நீர் அந்த பொருத்துகளினுள் உட்புகுந்து மின்கசிவு ஏற்படுகின்றது. மின்கசிவின் வீரியம் அந்த புள்ளியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும் . அந்த வரையறைக்குள் பிரவேசிக்கும் ஆட்களுக்கு ஏற்படும் அனுபவத்தைக் கொண்டு அந்த மின்கசிவை கண்டு கொள்கிறார்கள் . வாயில்லா சீவன்களின் செத்து மிதத்தலை கொண்டும் இதனை அறிந்து கொள்கின்றார்கள் , என்று சொல்லி முடித்தார் நண்பர். வேர்த்து விறு விறுத்துப் போனேன் . "சரியப்பா, கவனமாக இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு , வீடு திரும்புவோம் என்று பக்கத்து சந்தியை நோக்கி நடந்து வீதியை கடப்பதற்காக நின்றேன். "சார் , ஒரு நிமிடம் , இங்கே வருகிறீர்களா " மோட்டார் சைக்கிளில் இருந்தபடி ஆபிஸர் மாதிரி மதிக்கக் கூடிய ஒருவர் என்னை அழைத்தார். சந்தி நோக்கி , கடப்பதற்காக பச்சை விளக்கை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்திருப்பார் போல தெரிந்தது. ‘குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்த மின்கம்பிகளை படம் எடுத்ததை பார்த்திருப்பாரோ. இவற்றையெல்லாம் படம் எடுக்கக் கூடாதோ ஒருவேளை’ என்றெல்லாம் யோசித்தபடி அவரை நெருங்கினேன். " ஷார்ட்டா சொல்லிடறேன் , நான் ஒரு டயபடிக் பேஷண்ட் சார் , காலையிலே நாஸ்தா பண்ணல இன்னும் , பர்ஸை வேற வீட்டில விட்டிட்டு வந்திட்டேன், ஏதாவது ஹெல்ப் பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும்" என்றாரே பார்க்கலாம் வாட்டசாட்டமாக இருந்த அந்த ஆபீசர் என்று நான் நினைத்த ஆசாமி. சிறுவயதில் அம்புலிமாமா ஒழுங்காக வாசிப்பேன் . தன் முயற்சியில் சற்றும் தளராத .. என்று தொடங்கும் வரிகளில் எனக்கு அலாதிப் பிரியம் . அதில் ‘எள்ளி நகைத்தது ' என்றும் ஒரு வார்த்தைத் தொடர் வரும் . எனக்கு இப்போது கேட்கத் தொடங்கியது. எள்ளிய நகைப்பல்லஅது ; கெக்கட்டம் விட்டு வரும் சிரிப்பு. மெது மெதுவே ஆரம்பித்து , படிப்படியாக உரப்பு கூடி , எனது மனத்திரையெங்கும் மிகுந்த சத்தத்துடன் எதிரொலித்தது அந்த சிரிப்பு . என்ன , பழக்கமான சிரிப்பாக இருக்கிறதே என்று குனிந்து பார்த்தால் , " கண்ணாடியை கழட்டி, நல்லா துடைச்சு , மீண்டும் போட்டிட்டு, பக்கத்தில இருக்கிற வெள்ளத்திலே உங்கட முகத்தைப் பாருங்க சார் , அங்கே ஏமாளி , அசடு அப்பிடீன்னு எதாவது வார்த்தைகள் உங்கட நெத்தியில எழுதி ஒட்டியிருக்கா எண்டு பாருங்க சார்” எண்டு சொல்லிக் கொண்டே அடக்க இயலாமல் பலத்த சத்தமாக கெக்கட்டம் விட்டு சிரித்துக் கொண்டிருந்தார் மேடம் ... பொற்கரையோன், 2 டிசம்பர் 2023
  12. இது தமிழ் டயஸ்பொறாவின் சத்தித்திட்டமல்லாமல் வேறல்ல ..😉 ஐ நா மாநாட்டிற்கு அத்தியுத்தமம் சாணாத்திபதி சென்றிருக்கும் இவ்வேளையில், அவரையும் சிங்கள பவுத்த ஸ்ரீலங்காவையும் வசதியீனத்திற்கு உட்படுத்த, தமிழ் டயஸ்போரா, பணம் கொடுத்து, சிங்கள கடையாரையும், சிங்கள பொலிஸாரையும் விலைக்கு வாங்கி, இதனை செய்த்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை . 😜 Hail Pillaiyaan ( for providing this idea )
  13. இதில் ஈடுபடும் ஆணோ , பெண்ணோ, தத்தமது சட்டபூர்வமான துணைகளும் இப்பிடி குருவி சுடப்போனால் கெம்பி எழுவினம் . தேன் பூசி எழுதப்படும் மனோவியல் என்று மறைக்கப்படும் சால்ஜாப்புகள் எல்லாம் அங்கே பல்லிளித்து அடிபட்டுப்போகும் . போங்கய்யா, போய் புருஷன் பெண்சாதிக்கு உண்மையாய் இருந்து சீவியுங்கப்பா ....
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.