• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சாமானியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  330
 • Joined

 • Last visited

 • Days Won

  1

சாமானியன் last won the day on April 23 2019

சாமானியன் had the most liked content!

Community Reputation

128 Excellent

About சாமானியன்

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

1,570 profile views
 1. புலம் பெயர் வாழ்வு தமிழரின் குடும்ப நலன்களில் எத்தகைய தாக்கத்தை கொண்டு வருகிறது என்பது தொடர்பாக உவாவுக்கும் உவாவின் தந்தையாருக்கும் பொது வெளியில் இடம்பெற்ற தொடர்பாடல்களை மன நல ரீதியில் அணுக முயற்சித்த எனது பதிவுகளை , உவவைப் பற்றி இங்கே யாழில் கதைக்க முடியாது என்று நிர்வாகம் தூக்கி விட்டது . இப்ப ரூல்ஸ் மாத்தி விட்டினமோ தெரியவில்லை , பதிவு போடிறவை எதுக்கும் கொஞ்சம் அவதானமாக இருங்கோ ..
 2. போன் ஐந்து மணித்தியாலம் விலாண்டினால் மண்டை சிதறும் …. அம்மானுடன் ஐந்து நிமிடம் கும்மி அடித்தாலே மோட்சம் கிட்ட வரும் !!!! இப்ப கப்பல் ஓடுற தமிழன் எப்ப செக்கு இழுக்கப் போறான் ..
 3. மன்னிக்க வேண்டும் Justin , உங்களின் கருத்துடன் ஓத்த்துப் போக முடியவில்லை . ராஜரத்தினம் இருந்தார் , தனியே கொடுத்தார் , சேர்ந்ததா இல்லையா என்ற கேள்விக்கே அங்கே இடமில்லை , இந்த தொகை ( மிக சிறியது அல்ல ) , பல பேர் சேர்ந்து கொடுத்திருந்திருக்க தான் முடியும் . அவர்கள் எல்லோருக்கும் பணம் சேர்ந்ததா இல்லையா என்பது பற்றி எந்த கவலையும் இல்லை என்று நீங்கள் கூற வரவில்லை என்றே நம்புகின்றேன் . 2009 வைகாசி மாதமும் இவ்வாறே பெருமெடுப்பில் நடந்ததும் , அதன் பின் என்ன நடந்தது / நடக்காமல் விட்டது என்பதும் ???? பாதிக்கப் பட்ட ஒருவன் என்ற முறையில் கேள்வி எழுப்பும் தார்மீக உரிமைகளுமா இல்லாமல் போயிற்று இந்த களவாணிக் கூட்டத்தின் மனப்பான்மையில் !!!!
 4. முன்பு தவிபு களுடன் அரசு பேச்ச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரம். திருகோணமலையில் அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன் . தவிபு உறுப்பினர் ஒருவர், எதோ இயக்க அதிர்ஷ்ட லாப சீட்டு இழுப்பு என்று சொல்லி , இயக்க இலச்சினைகளுடன் கூடிய கட்டு ஒன்றை கொடுத்து எல்லோருக்கும் கொடுத்து விடுமாறு கேட்டிருந்தார் . அலுவலக சிற்றூழியரிடம் கொடுத்து ( ம்ம் … இப்ப இருக்கும்இந்த ஊரில் எங்கே அந்த வசதிகள் , மனம் ஏங்குதே ...) விருப்பமானவர்களுக்கு குடுத்து பணத்தை சேர்த்து தருமாறு சொல்லியிருந்தேன் . அதற்கு இரண்டு நாட்களின் பின் பேச்சவார்த்தை முறிவடைந்து , தவிபு திருகோணமலையை விட்டு வெளியேற , 90% இற்கு மேற்பட்ட ஊர்சனமும் அவர்களுடன் இடம்பெயர்ந்து , எஞ்சியிருந்தவர்களுடன் ஆமிக்காரன் ஊழித் தாண்டவம் ஆடி , அதிலேயும் எஞ்சிய ஒருவனாக, பல கிழமைகள் கழித்து அலுவலகம் போனால் , அந்த சிற்றூழியரும் தப்பி பிழைத்து அலுவலகம் வந்திருந்தார் . ticket இற்கு என்ன நடந்தது என்று கேட்டேன் . " வலு பத்திரமாக வீட்டு கூரைக்குள்ளே செருகி வைத்திருக்கிறேன் ஐயா " என்கிறார் அவர் . "நீங்கள் வருவீர்களோ என்று தெரியாததால் கொண்டுவரவில்லை , நாளை கொண்டுவந்து தருகிறேன் , ஒரு 90 ரூபாய் காசும் இருக்குது " என்றும் தொடர்ந்தார் அவர் . எனக்கோ ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு சொன்னேன் அவரிடம் " இங்க பாருங்கோ , இரண்டு வேலை செய்யுங்கோ , வீட்டை போனவுடனும் அந்த டிக்கெட் கட்டையை எடுத்து , கிழித்து அடுப்பில போட்டு எரித்து விடுங்கோ , அந்த கலெக்சன் 90 ரூபாவையும் உங்கட ஊர் கோயில் உண்டியலில் போட்டு விடுங்கோ " என்று . சுமந்திரன் ஏன் மறந்து போனார் எண்டால் அவர் அந்த 210 மில்லியனையும் கோயில் உண்டியலில் போட்டிருப்பார் .. ( சுபம் )
 5. இதுவரை நாங்கள் ஏன் நாறினோம் , இன்று வரை ஏன் நாறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விளக்கமும் , இனிமேலும் ஏன் நாறிக் கொண்டிருக்கப் போகிறோம் என்பதற்கு கட்டியமும் , இந்த மிக சாதாரண பதிலில் அப்பிடியே பொதிந்து போய் இருக்கு , வாழ்க வளர்க……..
 6. போர்க் காலங்களில் ( இது வரை தப்பியிருக்கும்) இரண்டு பக்கங்களையும் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப் பட்ட கொலைகளை விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்ப்பதற்காக கருணாவினால் சிங்கள அனுசரணையுடன் நடத்தப் படும் நாடகத்தின் முதல் கட்டம் அரங்கேறியிருக்கிறது . அநேக பார்வையாளர்கள் நாடகத்தில் பங்கு கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படும் இயல்பினதாக அமைத்திருக்கிறது இந்த நாடகம் ( இப்போதைக்கு அனந்தி ) .. பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று .. (வழமை போலவே) ...
 7. எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என்பது தெரிகிறது .. முன்பு கொல்லப்பட்ட இராணுவத்தினர் தொடர்பாக நடவடிக்கை பொருத்தமற்றது ; அது போலவே முன்னர் கொல்லப்பட்ட போராளிகள் ( அவர்கள் எப்படிக் கொல்லப் பட்டிருந்தாலும் ) நடவடிக்கை தேவையில்லை . தனியொரு மனிதனாக போராட்டத்தை தோற்கடித்த கருணா, இப்ப தனியொரு மனிதனாக சிங்களத்தை மின்சாரக் கதிரையில் இருந்து பிணை எடுக்கிறார் . கருணாவிற்கு சிங்களம் கோயில் கட்டினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை ...
 8. ஆளுமைகளின் பங்களிப்பு …… எமது வாழ்க்கையில் சிறு வயதில் இருந்தே பலவகையான ஆளுமைகள் தங்களின் செல்வாக்கை பலவிதங்களிலும் செலுத்தி எங்களின் சொந்த ஆளுமை வடிவமைப்பை ஆக்குவித்திருந்திருப்பார்கள். பெற்றோர் , உடன் பிறந்தோர் , நண்பர்கள் , ஆசிரியர்கள் , ஊரார் , முன்னர் இருந்த பிரபலங்கள், சம கால பிரபலங்கள் என்று ஒரு நீண்ட நிரல் . யாழ் திண்ணை வாசிகள் தங்களின் ஆளுமை வளர்ச்சியில் மற்றையவர்கள் செல்வாக்கும் பங்களிப்பும் எவ்வாறு இருந்தது என்பதனை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மீட்டலாகவும், மற்றயவர்களுக்கு உதவியாகவும் சுவாரசியமாகவும் இருக்கக்கூடுமே. தொடக்கமாக எனது தந்தையாரின் பங்களிப்பைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு. குழப்படி செய்து பிடி பட்டால் அம்மா பிரம்பை தூக்கி விடுவா. வளவைச் சுற்றி ஓட்டம் காட்டி அவாவை களைக்கப் பண்ணி தப்பி விடுவேன். ஒரு தடவை எதோ ஒரு குளப்படிக்கு அப்பாவிடம் மாட்டுப்பட்ட நேரம் , கையில் தடியுடன் கிட்ட வருமாறு அவர் பணிக்க , அம்மாவுடன் ஓட்டப் போட்டி செய்து வென்ற நேரங்களின் ஞாபகத்தில் , அப்பாவுடனும் ஓட்டப் போட்டியை தொடங்க, முதல் சுற்று முடிய முன்னரே பரிதாபமாக தோற்று, பிடிபட்டு பிரப்பம் தடி முறிவடைவதில் அன்றைய பாடம் படித்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று பின்னாளில் பாடசாலையில் புத்தகங்களில் அறிவதற்கு முன்னரே நடைமுறையிலும் , இடம், பொருள் மற்றும் ஏவல் அறிந்து தான் தாக்குதல் மற்றும் தற்பாதுகாப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையை யும் அவர் வெகு அனாயாசமாக வகையில் அன்று எனது மனதினுள் செலுத்தியிருந்தார். (பிரம்படி தழும்புகளுக்கு அம்மா எண்ணெய் பூசி தடவி விட்டது ஒரு உபகதை), 94ம் ஆண்டில் இலங்கையை விட்டு புலம்பெயரும் வரை , அந்த பாடம் எத்தனையோ தடவைகளில் மிக மிக இக்கட்டான தருணங்களில் எல்லாம் உயிரைக் காப்பாற்றி இருக்கின்றது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ……… (தொடரும்.)
 9. எமது கலாச்சாரம் என்று அலட்டிக்கொள்ளும் பையன் & கோ , தயவு செய்து எவை எவை எல்லாம் தமிழ் கலாசாரத்திற்குள் வருகிறது என்று பட்டியலிட்டு சொன்னால் , பிறழ்கிறவர்கள் தம்மை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிட்டுமே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று யாரோ வேலை வெட்டி இல்லாத எவரோ சொல்லி சென்றதை சிறிய வயதில் படித்த ஞாபகம் . புலம் பெயர்ந்த இடத்து இளவல்களைப் பார்த்து தமிழ் அப்பிராணிகள் கெட்டுப் போகிறார்கள் என்ற அறிவியலின் கூற்று புல்லரிக்க வைக்கின்றது . கூடவே , 15 வயது தமிழ் நாட்டு பெண் ஒருத்தி , தனது தாயின் மூன்றாவது திருமணத்திற்க்கு பகிரங்கமாக தனது வாழ்த்துச் செய்தியினை இணைய தளங்களில் தெரிவித்திருப்பதும் மனதின் ஒரு மூலையில் வந்து போகிறது ….
 10. பிள்ளைகளின் திருமணம் பெற்றோரின் ஆன்மாவில் ஒன்றியதொன்று. காலம் எவ்வளவு சென்றாலும் அதன் பசுமை அப்படியே இருக்கும். வாழ்த்துக்கள் . பிள்ளைகளுக்கு அண்மையாகத் தான் வசிக்கிறீர்கள் என நினைக்கிறேன் .
 11. நன்றி குமாரசாமி அவர்களே குறிப்பிற்கு . இது ஏன் முன்பே தோன்றாமல் போயிற்று , ஆரிய செல்வாக்கில் எமது பாரம்பரியத்தில் வந்த மாற்றங்கள் .. சிலவற்றை மாற்ற முடியாமல் தான் இருக்கு இன்னமும் . அந்த சடங்கினை நிறைவேற்றிய போது உயிரே போன மாதிரி இருந்தது வேறு கதை , என்னுடன் சேர்த்து முழு மண்டபத்தையும் உணர்ச்சி வசப் பட வைத்த நேரம் அது .. இப்படித்தானே எனது மனைவியின் பெற்றோருக்கும் இருந்திருக்கும் எனவும் நினைத்துக் கொண்டேன் .
 12. அவுஸ்திரேலியா நல்லதொரு நாடு என்று உங்கள் ஆழ்மனதில் பதிந்திருந்தது, தன் பாட்டிற்கு வெளியே வந்திருக்கு போல , இதற்கு ஏன் கவலைப் படுவான் ..
 13. ஊரில் இருந்து பெண்ணெடுப்பது / ஆணெடுப்பது மிகவும் நல்ல விடயம். அப்படி செய்யும் போது இவர்களுக்கு நாம் உதவி செய்து இவர்களை தூக்கி விடுகின்றோம் என்ற மனப்பான்மையை / உயர்வு நவிற்சியை அவர்களுடன் தொடர்பாடும் போது மறந்தும் போய் மனதில் வைக்காதீர்கள் . அவர்களை (புலம் பெயர்ந்த ) உள்ளூரில் கொண்டிருந்தால் என்ன மாதிரி நடத்துவீர்களோ அந்த மாதிரி சமமாக நடத்துங்கள் . எனக்கு தெரிந்த சில குடும்பங்களில் இந்த விடயத்தினால் பெரும் பிரச்சினைகளும் பிரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன ( தமிழ் , சிங்கள குடும்பங்கள் இரண்டிலுமே ) ...
 14. எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் - செவ்வாய் வெள்ளி தப்பாமல் கோயிலுக்கு போவதில் இருந்து, பஜனை செய்வது , உணவு முறை , உடை என்று நாங்கள் பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்ளும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தான் . இடையே ஒரு வருடம் வேறொரு நாட்டிற்கு மேற்படிப்புக்கு சென்று வந்தவன் , வரும் போது காதில் கடுக்கனுடன் வந்து இறங்கினான். தகப்பன் பஜனைக்கு போக கூப்பிட வரவில்லை என்றான் . இவ்வள்வு காலமும் வந்தனீ தானே என தகப்பன் கேட்க , இவ்வளவு காலமும் அறியாமல் இருந்து விட்டேன் என்றான் மகன். தகப்பன் இன்றைக்கும் தனியாகத் தான் கோயில் பஜனை போய் வருகிறார் . எங்களின் கற்றுக் கொடுக்கும் தன்மை மற்றையவர்களின் நடவடிக்கைகளை பரிகசிப்பதில் ஆரம்பித்து , பின்னாளில் அதற்கே பலியாக வேண்டிய மாதிரி அமைந்து விடுகிறது . பிள்ளைகளுக்கு பகுத்தறியக் கற்றுக் கொடுத்தல் நன்மை பயக்கும் . மற்றையவரின் பாரம்பரியங்களையும் கனம் பண்ணுவதற்கு பழக்கினால், எம்முடைய பாரம்பரியங்களையும் அவர்கள் கனம் பண்ணுவார்கள் . எங்களுடைய Reception இல் ஆட்டம் போடுவோம் , அது ஓகே , மற்றயவர்களின் மணச்சடங்குளில் நடை பெறுவானவற்றை கூட்டமாக இருந்து பரிகசிப்போம் எனும் வரிகளை வாசிக்கும் போது மனம் எனோ இலேசாக வலிக்கின்றது ..எங்களின் பாரம்பரியம் ..ம் ..ம்ம்
 15. நமது மொழியும் இனமும் மிக மிக பழைமையானவற்றுள் ஒன்று . நீங்கள் எமது பாரம்பரிய முறைமை என்று சொல்லும் விடயங்கள் நடைமுறைக்கு வரமுதல் ( என்ன ஒரு 1000 அல்லது 2000 ஆண்டுகாலம் முன்னர் ) இருந்த நடை முறைகளும் எமது பாரம்பரியமாக இருந்து தான் போயின . சமகாலங்களில் எம்மவரிடையேயே நடந்தேறிய புலம்பெயர்வு கனதி மிக்கது .. மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வந்து சேர்க்கும் தன்மையது .. அண்மையில் எமது மூத்த புதல்வியின் திருமணத்தின் போது, கன்னிகாதானம் எனும் நடைமுறையை செய்வதில் எமது இளைய புதல்விக்கு உடன்பாடில்லை . அப்படி எனின் மணமகனை தானம் செய்வதாகவும் ஒரு சடங்கு தேவையில்லையா என்பது அவளின் வாதம் ; புது தலை முறை - புதிய சிந்தனைகள் - வளர்ச்சியின் படிகள் .. நல்லவை எடுப்போம் , அல்லவை தவிர்ப்போம் , வளர்ச்சி காண்போம் ...