Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சாமானியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  421
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by சாமானியன்

 1. வியந்து போனேன் , நித்திரை கொண்டு எழும்பமுன் வித்தின் டொன்ட்டி பார் அவர்சில தீர்ற ஒரு விஷயத்திற்கா இந்த அலப்பறை எண்டு ..... ஆனாலும் மீசைக்கார நண்பா உனக்கு குறும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்.. பாத்து வாசியடா மேனே .....
 2. அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான். அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே , செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........
 3. ?? .... ??? எல்லாரும் கொண்டாடுவூம் முருகாவின் பெயரைச் சொல்லி ........ ஒரு சின்ன கேப் கிடைச்சால் காணுமே இடைக்குளால ஓடி வுடுவீங்களே ....
 4. மரணதண்டனை கைதிகளெல்லாம் பொதுமன்னிப்பில் சிம்பிளாக விடுவிக்கப்படும் நேரங்களில் நானா வெளியே வருவது புதினமல்ல.. ஆயினும் வாப்பா அந்த பெண்பிள்ளையின் பாவம் ஒன்னிய சும்மா விடாது ........ பாத்துக்கோ
 5. எங்கே அடித்தாலும் நாய் ஒருகாலைத் தான் தூக்கிக் கொண்டு ஓடுமாம் , இலங்கை எண்டால் என்ன நெதர்லாந்து எண்டால் என்ன கனடா எண்டால் என்ன , அது நாயின் பழக்கம் மாத்த ஏலுமோ
 6. பல்கலையில் படிக்கும்போது (பேராதனை) நானும் ஒருநாள் இப்பிடித்தான் நண்பனனின் ஆக்கினையில் இழு இழு எண்டு இழுத்து கடும் இருமலை விட வேறு ஒண்டும் வராமல் போகுது சனி என்று விட்டது தான், பிறகு கிட்டவும் விடேல்லை. இடையில கொஞ்ச நாள் ஒளிச்சு சிகரெட் பிடிச்சு மனுஷியிட்டையும் மகள் மாரிட்டயும் ஒண்டாக பிடி பட்டு அதுவும் அம்பேல் -- இப்ப 100% நல்ல பொடியன் ....
 7. அடி ஆத்தி இம்புட்டு வெவகாரமாவா பயாஸ்கோப்பு கண்ணாடி வெச்சு ஒவ்வொரு எழுத்தா கண்ணுக்குள்ள எண்ணெய் விட்டு பாப்பாக .. யக்கோவ் , வயசு போன நேரத்தில கையில மெல்லிய நடுக்கம் ரெண்டு வாட்டி பிரஸ் பண்ணிப்பூடிச்சு , மன்னிச்சுக்கோ அக்கா ... முட்டை சாதாரணமா இருவது ரூவா தான் , அக்காவுக்கு மொத்தமா எடுத்தால் குறைக்கச்சொல்லி ரெகமெண்ட்ஸ் பண்ணிப்பூடலாம் ... எங்கே, மகளுடன் போன பயணம் பற்றிய பதிவிற்கு பிறகு இப்பதான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. கொரோனாப் பூச்சி தொல்லைகள் இல்லை என்று நம்புகிறேன் …
 8. எம்மவரை சுயநிறைவடையச் செய்வதே எம்முன்னால் உள்ளதும் இப்போதைக்கு செய்யக்கூடியதுமான செயல் . இதில் புலம் பெயர்ந்தோரின் பங்களிக்கும் பலமும் புலத்தில் இருப்போரின் அர்ப்பணிப்பும் ஒன்று சேர உண்மையில் அதிசயங்கள் சாத்தியப்படும் . இந்த செயல்முறையில் ஏராளனின் அர்ப்பணிப்பு மிகுந்த மனநிறைவைத் தருகிறது . இதற்கு சமாந்தரமாக செயல்திட்டமொன்றில் கடந்த ஒரு வருட காலமாமாக பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபாட்டுக்கொண்டிருப்பவன் எனற அடிப்படையில் இந்த செயல்திட்டங்களை என்னால் நன்கு உணர முடிகிறது. உதாரணமாக இலங்கை ரூபா 70 ,௦௦௦ இல் 50 கோழிக்குஞ்சுகள் + கூடு + 4-5 மாதங்களுக்கு பராமரிப்பு என்று ஆரம்பித்துக் கொடுத்தால் , 4-5 மாதங்களின் பின்னர் 80% வினைத்திறனில் ( அதாவது ஒரு நாளைக்கு 4௦ முட்டை என்ற அடிப்படையில் ) ஒரு நாளுக்கு 8,௦௦௦ ரூபாவும் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாவும் வரும்படியாகக் கிடைக்கும் . பராமரிப்புச் செலவு மாதம் 5 தொடக்கம் 8 ஆயிரம் வரை வர , நிகர வரவாக 15 ஆயிரத்திற்கு மேல் வரும் . வறுமைக்கு கோட்டிற்கு மிக கீழே இருக்கும் 25 குடும்பங்களிற்கு இந்த செயல்திட்டத்தை கடந்த சில மாதங்களில் அமுல் படுத்தியிருக்கிறோம் . பாடசாலை வகுப்பு நண்பன் ஒருவன் ஊரில் இருந்து செயல்பாடுகளை நிர்வகித்து வருவது இதில் உள்ள மிகவும் முக்கியமான விடயம் அன்பர் ஏராளன் செய்வது போல . வாழ்த்துக்கள் ஏராளன்..
 9. அப்படிக் கேட்டவன் ஒரு சீனப் பயல்... // இப்பிடியான கேள்விகள் அரிது ?? // நான் அவுஸ்திரேலியாவில் சிவில் கட்டுமானத்துறையில் 18 வருடமாக வேலை செய்கிறேன். நான் சேரும் பொது ஏறக்குறைய 300 வேலையாட்கள் , நான் தான் முதலாவது இலங்கையன். இடையில் ஒரு சமயம் ஒரு மூத்த அலுவலர் என்னிடம் எனது பூர்விக்க இடம் எது என்று கேட்டார் , ஸ்ரீலங்கா என்று சொன்னேன். உடனேயேயும் அவர் நீ தமிழனா அல்லது சிங்களவனா என்று கேட்டார். நான் சொன்னேன் அதை அறிந்து உங்களுக்கு ஆகப் போவது என்ன என்று. 10 வருடங்கள் கழித்து அவர் இளைப்பாறும் வரை அவருடன் எனக்கு சுமூகமான உறவு இருக்கவில்லை. ..
 10. அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற என் மனைவி ஆசிரியராக புரூனேயில் ஆசிரியராக தொழில் புரிந்த சமயம் மாணவன் ஒருவன் அவரிடம் கேட்டான் "நீங்க எந்த நாட்டவர்" என்று. அந்த நேரம் மனைவியிடம் இரட்டை பிரசாவுரிமை கூட இருக்கவில்லை . "நான் ஓர் அவுஸ்திரேலிய பிரசை" என்று அவர் சொல்ல அவன் , அவன் சற்றே கேலியாக "நான் அதை கேட்கவில்லை , நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்" என்று தான் கேட்டேன் என்கிறான் . பிறந்ததில் இருந்து வத்தளையில் வசித்து வந்த எனது தம்பி முறையானனவன் – அவனுக்கு தமிழ் சரியாக பேசவும் வராது – 83இல் அடிவாங்கி ஊர் வந்து , பின் இயக்கத்தில் சேர்ந்து உயர்ந்து உள்வீட்டு சண்டையில் காணாமல் ஆக்கப்பட்டு அவனின் தாயார் இன்றும் கண்ணீருடன் அவன் வருவான் என்று பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிலைமை என் மனமுருக்கும் . நிலவரங்களின் நிர்வாணத்தன்மையை உணர்ந்து கொள்ளுதலே இங்கே முக்கியம்; மேலே சுற்றியிருப்பது பட்டு சேலையா , நைலோன் உடுப்பா என்பது இரண்டாம் பட்சமே …
 11. காலையில் அலுவலகத்திற்கு புறப்பட ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது இளையவள் கீழே இறங்கி வந்தாள் . கண்ணெல்லாம் சிவந்து போயிருந்தது . நித்திரைக் கலக்கம் என நினைத்துக் கொண்டு “என்னம்மா இரவிரவா முழித்து படித்துக் கொண்டிருந்தனீரோ " எட்டு மணித்தியால நித்திரை வரக்கூடிய மாதிரி உமது Schedule ஐ அமைத்துக் கொள்ளும் என எத்தனை தரம் அம்மா சொல்லியிருக்கிறேன்” என்று சற்றே கவலையுடனும் வாஞ்சையுடனும் சொன்னேன் . “இல்லையப்பா " நாங்கள் நேற்று ஜெய் பீம் பாத்தது, இரவெல்லாம் நித்திரை வரவேயில்லை, மனதை மிகவும் குழப்பி விட்டதப்பா, இந்த காலத்திலும் எமது மொழி பேசுபவர்களிடையே இப்படி நடக்கிறது என்று நினைக்க வெட்கமாக இருக்கிறது” என்றாள். தொடர்ந்து "எல்லைக்கிராமங்களில், நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன்னிறைவு அடையச் செய்யும் வேலைத்திட்டங்களின் பயனாளிகளை எவ்வாறு தெரிவு செய்கின்றிர்கள்” என்றும் வினவினாள். வேறொன்றுமில்லை , அம்பாறை சிங்கள தமிழ் எல்லைக்கிராமங்களில் வாழும் வறுமைக்கோட்டிட்கு மிக கீழே வாழும் குடும்பங்களுக்கு சுய தன்னிறைவு அடையச் செய்யும் வேலைத்திட்டங்களில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் . ஆதரவு மிகக் குறைத்த அவர்கட்கு நிரந்தர வருமானத்தை ஈட்டக்கூடிய சிறு வேலைத்திட்டங்களை அடையாளம் கண்டு, நிதி உதவியுடன் அமைத்துக் கொடுத்தல், அவர்களின் பிள்ளைகளின் கல்வி நிலைப்பாட்டை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்த ஆவன செய்தல் என்று எனது ஒய்வு நேரங்களின் ( அப்பிடி ஒன்று இருக்கிறதா என்ன!! ) பெரும்பகுதி போய்க்கொண்டிருக்கிறது. அந்த செயல் திட்டங்களிற்கு தானும் நிதி உதவி அளிக்க விரும்புவதாக சொன்னாள். ஜெய் பீம் பட குழுவிற்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்ப இருக்கிறேன் …
 12. வேறொன்றுமில்லிங்க.... உள்ளூர் பொறிமுறைக்காக உளுந்தும் கூடவே எலிப்புழுக்கையும் காயுது ..
 13. அவுக இலங்கைத் தமிழரை முழங்காலிலில முட்டி போட வெச்சாங்க.. இவுக மொத்த ஆளுங்களுக்கும் சாயா குடுத்தாங்க... கேம் இன்னும் நடந்துக்கினு தான் இருக்கு....
 14. துரைரத்தினம் எம்பி எழுபதுகளில் மகாவலி வந்து ஓடக்கரைக்குள்ளாலையும் ஓடும் என்று பருத்தித்துறையில் வைத்து சொன்ன நேரம் பொதுசனத்திடம் இருந்தது அவருக்கு கிடைத்திருந்த கரகோஷம் ஏனோ ஞாபகத்தில் வந்து செல்கின்றது .......
 15. பங்கு வர்த்தகத்தில் இதுவரை ஒரு $50,000 அளவில் தொலைத்து விட்டிருக்கும் கனடாவில் இருக்கும் நண்பன் ஒருவனின் சிபாரிசின் பேரில் தான் இதில் இறங்கியிருக்கிறேன், ஏதேனும் பிழைத்தால் மச்சான் என்னிட்ட வரப்படாது என்ற அவனின் நிபந்தனையுடன். அவன் இப்ப வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகள் வாங்கின விலையை விட 50% எண்டாலும் இப்ப கூடி இருக்கெண்டு சொன்னது கொசுறு செய்தி. நிகழ்தகவு மிகவும் குறைவாக இருக்கக் கூடிய சம்பவம் ஒன்றும் சத்தமில்லாமல் நடந்திருக்கிறது நேற்றிரவு. எனது Debit Card இன் காலாவதி திகதி 30 செப்டம்பர் 2021 என்பதனை நேற்று இந்த திகதியை இன்புட் பண்ணும் போது தான் பார்த்தேன். புதிய கார்டு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் தபாலில் வந்தும் அதை எங்கேயோ வைத்ததும் ஞாபகம் வந்தது. இரவு 12 மணி வரை இருக்கிற கார்டை பாவிக்கலாம் என்று நான் யோசித்தது தான் எனது ஒரு மணி நேர உழைப்பை compromise பண்ணி , ஊர்க்காவின் பயணம் கடினமான கல் முள் பாதையில் தான் என்ற பழைய கவிதையை மீண்டும் பிரமிக்க வைத்ததோ.. இன்று புதிய கார்டு உடன் (இப்ப அதை எங்கே வைத்தது என்று தேட வேண்டும்) மீண்டும் முயற்சி செய்ய, வளைவின் பின் பாதை நல்ல பாதையாக இருக்கிறதா என்று தெரிந்து விடும்….
 16. கிரிப்டொ கொயின் வாங்குவதற்கான முதலாவது நடவடிக்கையில் கடந்த 1 மணி நேரமாக ( இங்க இப்ப இரவு 11:59 - Brisbane Time ) ஈடுபட்டு 12 பாஸ்வேர்ட் எல்லாம் எழுதி எடுத்து திருப்பி என்டர் பண்ணி ஒரு 1750 டாலரை பதிந்து (with my debit card details) Payment Authorise பண்ண எனது வங்கிக்கு connect பண்ணி One Time Password உம் என்டெர் பண்ணி அழுத்திவிட்டு கணக்கு சரி பார்க்கப்படுகிறது திரையை மூடாதே என்ற எச்சரிக்கையை திரில்லோட பார்த்துக் கொண்டிருக்க -- டொட் டொடைங் ..Your Payment is not approved , use a different card or contact your bank எண்டு வருகுது .. முன்பு கெட்ட பாடல் ஒன்று தூரத்தில் ஒலிக்குமாப் போல இருப்பது ஒருவேளை பிரமை தானோ .. ஊர்காவிற்கு செல்லும் பாதைகள் கடினம் தான் கல்லும் முள்ளும் னிறைந்தன என்றாலும் என் பாதங்கள் தொடர்ந்து நடக்கும் .
 17. தமிழ் கிரிப்டோ கரன்சி தொடங்குகிறார்கள். ஒரு 1500 டாலரை விட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறேன் .... coin என்று சொல்ல வேண்டுமோ ..
 18. ஆரம்பத்தில் இனப்பெருக்கத்துக்கான உறவுமுறை தெரிவு கட்டுப்பாடுகளற்று இருந்தது. பின்பு பொது மனித முன்னேற்றம் கருதி நாகரீக வளர்ச்சியின் படியில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்ட வருகிறது. உதாரணமாக நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய முடியாது. தனி மனித உரிமை தானே என்று சொல்லி யாரவது நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ளலாமா. உதாரணமாக தாய் மகனை மணம் புரிதல். இங்கே நான் சட்டத்தை பற்றி கதைக்கவில்லை. மாற்றங்களே மனித வரலாற்றில் மாறாதிருப்பவை எனினும் காட்டு வாழ்க்கைக்கு திரும்பிப் போகாமலிருப்பது நலம் எனவே தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் இருக்கும் புறநடைகளை கொண்டாட வேண்டியதில்லை என்பது எனது அபிப்பிராயம் ...
 19. எனது SUPER Fund இல் இருக்கும் மிகுதி சென்ற நாணய வருடத்தில் ஏறத்தாழ $40 ,௦௦௦ வருமானமாக ஈட்டியிருக்கிறத்து , ஏறத்தாழ 10 % RETURN . கோவிட் காலத்தில் என்ன நடக்கின்றது என்று நிதானிக்க முன்னரே எல்லாம் நடந்து கொண்டு போகின்றது . சில வருடங்களுக்கு முன்னர் ஒருதடவை 3% நட்டம் வந்திருந்தது . நண்பனின் மகன் சிட்னியில் 10 மாதங்களுக்கு முன்னர் $1.1 மில்லியன் க்கு வாங்கிய வீட்டினை சில வாரங்களுக்கு முன்னர் $1.52 மில்லியனுக்கு விற்றிருக்கிறான். மனக்குரங்குக்கு சரியான தீனி ....
 20. வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பார்த்திருத்தும் மனித புத்தியின் சபலம் மாறுவதில்லை என்பது தான் விசித்திரம்.. ராஜ் ராஜரத்தினத்தை தெரியாத இலங்கைத் தமிழர் இருக்க முடியாது . சிறையில் இருந்து வெளியே வர இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் நிலையில் "UNEVEN JUSTICE" என்று புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார் . வசதி எண்டால் வாசித்துப் பாருங்கோ .. Raj Rajaratnam releases book titled ‘Uneven Justice’ | Daily FT https://www.ft.lk/front-page/Raj-Rajaratnam-releases-book-titled-Uneven-Justice/44-723285?fbclid=IwAR2UbivxVngPpA3aSaTdrBcPrcusXKchhQFOA5ILWjn5dLVsv9DEG1vUUXY#.YUpqIGxk1IZ.gmail
 21. பள்ளிவாயலுக்கு பணிய நீன் போயி நின்னு பள்ளிவாயலும் LGBT friendly ஏன்னு செல்லியிருந்தீன்னாக்க எல்லோரும் நல்லா வாழணும் அப்பிடீங்கிறத்துக்கு நல்ல பலாய் கெடைச்சஇருந்திருக்கும். மட்டுறுத்துனர் அப்பிடீன்னு செல பேத்து இருக்கங்கக்ன்னு அங்கினைக்குள்ள பேசிக்கினாங்க ...
 22. "ஆயிரம் நாட்கள்" - காணாமல் போனவர்களின் உறவுகளின் உணர்வுகளை மிக கேவலமாக எள்ளி நகையாடும் பதிவொன்றை இது போல இது வரை கண்டதில்லை. தெய்வம் தான் நின்று கொல்லும், கொரோனா இரு கிழமையில் கொல்லும் பெரிய மனிசா ...
 23. இப்போதெல்லாம் மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதுவும், சகிப்புத் தன்மை என்றால் மில்லி கிராம் என்ன விலை என்று கேட்பதுவும், மற்றையோருக்கு படிப்பித்தே தீருவேன் என்று கடும் போக்கில் இருப்பதுவும் யாழ் களத்தில் மட்டுமன்றி ஏனைய "ஏனப்பு" தொடக்கம் அனைத்து குழுக்களிலுமே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. மூன்றாம் நான்காம் ஐந்தாம் அலைகளுக்கும் இதுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று அறிந்தவர்கள் சொல்லக் கூடும் ..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.