Jump to content

சாமானியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    535
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by சாமானியன்

  1. சில கல்யாண வீடுகள் கோயில்களில் சிலது மண்டபங்களில் நிறைய பேருடன் சிலது ஆபிஸில ரெண்டு சாட்சியோட மாத்திரம் மற்றவை எங்க கோட்டை கிழிக்கிறது என்பதனை அவரவருக்கு விட்டு விட்டு எங்கட கோடுகளைப் பற்றி நாம் எப்ப தான் கவலைப் படப் போறம் போகேக்குள்ள ஒண்டும் கொண்டு போகப் போறதில்லை நீங்க கிட்டடியில திரைப் படம் ஏதும் பார்த்து என்ஜோய் பண்ணினனீங்களே ??
  2. ஏன் , இருந்தாப் போல இலங்கையில இப்ப நல்ல மருத்துவ வசதி வந்திட்டுதோ? நீ தானேயப்பா கொஞ்ச நாளைக்கு முன்னர் சொன்னனீ சகோதரன் நாட்டை விட்டு ஓடேல்லை , வைத்தியம் பாக்கத் தான் ஆள் போயிருக்கெண்டு....🤫
  3. இந்த “டை” அடிச்சு வயதை மறைத்ததனால் எனக்கு வந்திருக்கக் கூடிய ஒரு பிரச்சினை கதையொன்றை “பெட் குளோஸ்” ( Bet Close) அல்லது “சொல்லி விடவா” என்ற தலைப்பின் கீழ் எழுதிக் கொண்டிருக்கிறேன். வெளியிடுவதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கவில்லை இன்னும் …..
  4. ஒரு தடவை தாய்லாந்து போயிருந்த நேரம் - குடும்பமாக தான் - இந்த தாய் மசாஜ் எண்டால் என்னவென்று பாக்க வேணும் எண்டு ஒரு இடத்துக்கு போயாச்சு . மசாஜ் பண்ணிற அவளவை கொஞ்சப்ப பேர் நிக்கினம் . எனக்கும் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது தான் . மனுசி கேட்டுது ஆம்பிளையள் இல்லையோ மசாஜ் பண்ண எண்டு ஒரு தடியன் ஒருத்தனை கூட்டிக் கொண்டு வந்து விட்டாங்கள் அவன் என்ர கழுத்தையும் கையையும் உடைக்காமல் விட்டதது பூர்வ ஜென்ம புண்ணியமன்றி வேறன்று ..
  5. எனது கல்லூரியை சேர்ந்த இளவல் என்ற பெருமிதத்துடன்இ இந்த நிகழ்வினை களவாசிகளுடன் நானும் பாராட்டுகின்றேன். இந்த சமயம் நினைவுக்கு வரும் வேறு விடயமும் ஒன்று உண்டு. வட்டத்துக்கு வெளியேயே சிந்திக்க வேண்டியத்தின் தேவையும் விளைவுகளும் என்பது பற்றியது. சுவீடன் தலைநரம் ஸ்டோக்ஹோல்ம் . அங்கே உலகளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு Stockholm Junior Water Prize என்று சர்வதேச போட்டி வருடாந்தம் நடைபெறும் . சில வருடங்களுக்கு முன்னர் எனது புதல்வியார் இந்த போட்டிக்கு அவுஸ்திரேலியாவை பிரதிநித்துவப்படுத்தி கலந்து கொண்டிருந்தார். அந்த வருடத்து போட்டியில் தெரிவு செய்யப்பட கண்டுபிடிப்பு பலரையும் பரவசப்படுத்தியதொன்று. மாசடைந்துள்ள நீர் மாதிரியில் கலந்துள்ள மாசுக்களை கண்டறிவது மிகவும் சவாலானதும் செலவு கூடியதுமான ஒரு விடயம். வசதி குறைந்த நாடுகளில் உபகரணங்கள், ஆய்வுக்கூடங்கள் எல்லாமே எப்படி இருக்கும் என்பது தெரிந்த விடயம் . மாசடைந்திருக்கும் நீர் மாதிரி ஒன்றின் நிற ஒளிப்படம் ஒன்று எடுத்து, அதிலுள்ள வேவேறுவகையான நிற ஒளித்துகள்களின் எண்ணிக்கையை (pixels) கணக்கிடுவதன் மூலம் அதில் கலந்திருக்கக் கூடிய மாசுக்களை கண்டறிவதும், அதன் மூலம் அந்த நீர் மாதிரி பாவனைக்குகந்த தன்மையில் இருக்கிறதா இல்லையா என்பதனையும் நிறுவியதுமான கண்டுபிடிப்பு அது . சாதாரண இரசாயன முறையில் அமைந்த ஆய்வுகூட வசதிகளின் தேவை இங்கே இல்லாமல் போகின்றது . இளவல்களுக்கு வட்டங்கள் சதுரங்களுக்கு வெளியே பார்ப்பதற்கான பயிற்சிகளை சிறு வயதில் இருந்தே கொடுத்து வருவது நன்மை பயற்கப்பாலது…..
  6. மோகன் அங்கால போய் இரண்டு நாள் ஆகேல்லை , இங்கால பொடியன் மாருகள் எல்லாம் திரைப்பட நடிகையைப் பற்றி பதிவு போடத் தொடங்கீட்டாங்கள் ...😡
  7. அடடா அப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்குதெண்டு இப்பதானே தெரியுது ... அதுதானே சொல்லிச் சென்றிருக்கிறார்கள் கவிஞன் கண்டால் தான் கவிதை எண்டு....
  8. என்ன ஒரு இருநூறு முன்னூறு நட்பு அழைப்புகளாவது வந்திருக்கும் இதுவரை விதம்விதமான கவர்ச்சிகரமான படங்களுடன். சாமனியன் அசையவில்லையே எந்த விதமான கருணையும் காட்டாமல் டெலீட் பொத்தானை ஒரு அழுத்து தான் ....😡🤠
  9. வணக்கங்களும் அஞ்சலிகளும்…. அம்மாவையும் குடும்பத்தினரையும் ஓரளவு அறிவேன். பக்கத்து ஊர், மற்றும் எனது சகோதரனும் அம்மாவின் மகன்மாரில் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள்;ஒன்றாக பலகாலம் கடமை புரிந்தவர்கள். அம்மா உங்களினதும் உங்கள் குடும்பத்தினரதும் பங்களிப்புகளுக்கு சிரம் சாய்த்து நன்றி சொல்லிக் கொள்கின்றோம். படைப்பில் இருந்தவை எதுவுமே நிரந்தரமாக மறைவதில்லை என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான் . எதோ ஒரு நேரத்தில் எதோ ஒரு வடிவில் உங்கள் நினைவுகளின் நிஜங்களை காண்பீர்கள் அம்மா. அதுவரை எங்கிருந்தாலும் நலமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் அம்மா…
  10. இந்த வருடம் 2022 மே 18 இல் மனதிற்கு இதமான விடயங்கள் பல சென்ற வருடம் முள்ளியில் வாழைத்தண்டில் மண்சட்டி வைத்து கற்பூரம் ஏத்தி அஞ்சலிக்கு ஆயத்தம் செய்ய சப்பாத்துக் காலால் தட்டி உடைத்தான் ஆமிக்காரன் இந்த வருடம் காலிமுகத் திடலில் காலிரண்டும் இல்லாத ஆமிக்காரனும் வந்திருந்து முள்ளிக் கஞ்சி வாங்கி அருந்தியது மனதை தொட்டு சென்றது 2009 இல் கஞ்சி இன்று போல் தடிப்பாக இருக்கவில்லை என்று முள்ளியில் தமிழர் பட்ட அவலத்தை சிங்கள சகோதர்கள் பகிர்ந்து கொண்டார்கள் காலிமுகத்திடலில்.. அவலங்களுக்கு பொறுப்பு கண்டடைதலும் வேண்டும் என்ற அவர்களின் கூற்று மண்ணின் கீழே துயில்வோரின் காதுகளில் வீழ்ந்திருக்கவும் கூடும் விளங்கா மொழியில் என்றாலுமே விளங்கியிருக்கக் கூடும் புத்தம் சரணம் கச்சாமி இயேசு இரட்சிப்பார் அல்லாஹ்வின் அருளால் அமைதி பெறட்டும் ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும் என்று இலங்கை மக்கள் அங்கே ஒன்றாக நின்றது வரப்போகும் நன்மைகளுக்கு கட்டியம் கூறுவதாக அமையட்டும் .. - மெல்பேணில் துண்டுப்பிரசுரம் கிழித்தெறிந்த சகோதரனுக்கு இது சமர்ப்பணம்
  11. மே 18 நினைவேந்தல் நாளில் விடுதலை ... விடுதலை வேறு செய்திகள் எதனையாவது சுமந்து வருகிறதா ...
  12. இன்னுமொன்று- பிரசுர விநியோகிப்பிற்கு முன்னர் அவர்கள் அஞ்சலி செலுத்தி முள்ளி கஞ்சியும் குடித்திருப்பார்கள் என்பது அடிப்படை எடுகோளும் அனுமானமும் ஆகி நிற்கின்றது .... பெரும்பான்மை தமிழர் கோகோத்தாவை ஆதரிப்பது போல ...............
  13. முள்ளி நினைவேந்தலில் காத்தான்குடி பிரசுரம் விநியோகிப்பது பற்றி எமது உண்மையான அபிப்பிராயங்கள் என்ன ?? சிந்தனையை தூண்டும் ஒரு பகுதி ...... பிரசுரம் தர வரும் போது முசுலிம் ஊர்காவலினர் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்ததனங்கள் பற்றிய விபரங்களையும் கூடவே கொண்டு வந்து விநியோகித்தால் , இரண்டு பிரசுரங்களையும் ஒன்றாகக் பெற்றுக்கொள்ளுதல் கொளகை அடிப்படையில் எனக்கு சம்மதமே ....
  14. ஒரு நாளாவது இலங்கைத் தீவின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற உந்த ஆளின் ஆசை நிறைவேறும் போல தான் இருக்கு. பக்சர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை பிரதமமந்திரி; பின் கொட்ட ராஜினாமா செய்ததும் சட்டப்படி ஜனதிபதி. முன்பு மைனாவிடம் இழந்த சொர்க்கத்தை அண்ணன் நந்தாவிடம் பெறப் போகுது போல ஆள் .... முழு இலங்கையிலும் ஆகக் கெட்ட பரதேசி எண்டால் உந்த ஆள் தான் .....
  15. இப்ப கன ஆக்களை வயது வித்தியாசம் இல்லாமல் வாட்ஸாப் பேய் பிடிச்சிருக்கு. ( நான் உட்பட). கொரோனாப் பூச்சியோட தொடங்கினது இப்ப வேற லெவலுக்கு போய் நிக்குது . அண்டைக்கு ஒரு நாள் மொபைல் போனை மறந்து போய் விட்டிட்டு ஆஃபீஸ் போய் விட்டேன். அண்டைக்கு பின்னேரம் வீட்டை திரும்புவதற்கு முன்னர் ஆஃபீசில செய்த்து முடித்த வேலைகளை திரும்பி பார்க்க எனக்கே மலைப்பாக இருந்த்துது. ஒழிக வாட்ஸாப்!!! இனி கிழமைக்கு ஒரு நாளெண்டாலும் போனை வீட்டில மறந்து விட்டிட்டு வாறதெண்டு இருக்கிறன் …. (போன் லயிட் மின்னுது ஏதோ புது மெசேஜ் போலஇ பொறுங்கோ என்னெண்டு பாப்பம்…)...
  16. அப்ப என்ன செய்ய வேணும் எண்டு சொல்லிறீங்கள் மக்காள் .. "கோ ஹோம் ஜூலி" எண்டு ஆர்ப்பாட்டம் செய்வமோ ..??
  17. கூகிள் தற்போது2,800 டாலர் வரை மதிப்புள்ள தனது பங்குகளை இருபதாகப் பிரித்து ஒரு பங்கு ஏறத்தாழ 140 டாலருக்கு சந்தையில் விடப் போகிறார்கள் - வாங்கிக் கொள்ளலாமே ....
  18. பங்கு வர்த்தகத்தில் இதுவரை ஒரு $50,000 அளவில் தொலைத்து விட்டிருக்கும் கனடாவில் இருக்கும் நண்பன் ஒருவனின் சிபாரிசின் பேரில் தான் இதில் இறங்கியிருக்கிறேன், ஏதேனும் பிழைத்தால் மச்சான் என்னிட்ட வரப்படாது என்ற அவனின் நிபந்தனையுடன். அவன் இப்ப வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகள் வாங்கின விலையை விட 50% எண்டாலும் இப்ப கூடி இருக்கெண்டு சொன்னது கொசுறு செய்தி. நிகழ்தகவு மிகவும் குறைவாக இருக்கக் கூடிய சம்பவம் ஒன்றும் சத்தமில்லாமல் நடந்திருக்கிறது நேற்றிரவு. எனது Debit Card இன் காலாவதி திகதி 30 செப்டம்பர் 2021 என்பதனை நேற்று இந்த திகதியை இன்புட் பண்ணும் போது தான் பார்த்தேன். புதிய கார்டு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் தபாலில் வந்தும் அதை எங்கேயோ வைத்ததும் ஞாபகம் வந்தது. இரவு 12 மணி வரை இருக்கிற கார்டை பாவிக்கலாம் என்று நான் யோசித்தது தான் எனது ஒரு மணி நேர உழைப்பை compromise பண்ணி , ஊர்க்காவின் பயணம் கடினமான கல் முள் பாதையில் தான் என்ற பழைய கவிதையை மீண்டும் பிரமிக்க வைத்ததோ.. இன்று புதிய கார்டு உடன் (இப்ப அதை எங்கே வைத்தது என்று தேட வேண்டும்) மீண்டும் முயற்சி செய்ய, வளைவின் பின் பாதை நல்ல பாதையாக இருக்கிறதா என்று தெரிந்து விடும்….
  19. கிரிப்டொ கொயின் வாங்குவதற்கான முதலாவது நடவடிக்கையில் கடந்த 1 மணி நேரமாக ( இங்க இப்ப இரவு 11:59 - Brisbane Time ) ஈடுபட்டு 12 பாஸ்வேர்ட் எல்லாம் எழுதி எடுத்து திருப்பி என்டர் பண்ணி ஒரு 1750 டாலரை பதிந்து (with my debit card details) Payment Authorise பண்ண எனது வங்கிக்கு connect பண்ணி One Time Password உம் என்டெர் பண்ணி அழுத்திவிட்டு கணக்கு சரி பார்க்கப்படுகிறது திரையை மூடாதே என்ற எச்சரிக்கையை திரில்லோட பார்த்துக் கொண்டிருக்க -- டொட் டொடைங் ..Your Payment is not approved , use a different card or contact your bank எண்டு வருகுது .. முன்பு கெட்ட பாடல் ஒன்று தூரத்தில் ஒலிக்குமாப் போல இருப்பது ஒருவேளை பிரமை தானோ .. ஊர்காவிற்கு செல்லும் பாதைகள் கடினம் தான் கல்லும் முள்ளும் னிறைந்தன என்றாலும் என் பாதங்கள் தொடர்ந்து நடக்கும் .😕
  20. தமிழ் கிரிப்டோ கரன்சி தொடங்குகிறார்கள். ஒரு 1500 டாலரை விட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறேன் ....😜 coin என்று சொல்ல வேண்டுமோ ..
  21. எனது SUPER Fund இல் இருக்கும் மிகுதி சென்ற நாணய வருடத்தில் ஏறத்தாழ $40 ,௦௦௦ வருமானமாக ஈட்டியிருக்கிறத்து , ஏறத்தாழ 10 % RETURN . கோவிட் காலத்தில் என்ன நடக்கின்றது என்று நிதானிக்க முன்னரே எல்லாம் நடந்து கொண்டு போகின்றது . சில வருடங்களுக்கு முன்னர் ஒருதடவை 3% நட்டம் வந்திருந்தது . நண்பனின் மகன் சிட்னியில் 10 மாதங்களுக்கு முன்னர் $1.1 மில்லியன் க்கு வாங்கிய வீட்டினை சில வாரங்களுக்கு முன்னர் $1.52 மில்லியனுக்கு விற்றிருக்கிறான். மனக்குரங்குக்கு சரியான தீனி ....
  22. வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பார்த்திருத்தும் மனித புத்தியின் சபலம் மாறுவதில்லை என்பது தான் விசித்திரம்.. ராஜ் ராஜரத்தினத்தை தெரியாத இலங்கைத் தமிழர் இருக்க முடியாது . சிறையில் இருந்து வெளியே வர இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் நிலையில் "UNEVEN JUSTICE" என்று புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார் . வசதி எண்டால் வாசித்துப் பாருங்கோ .. Raj Rajaratnam releases book titled ‘Uneven Justice’ | Daily FT https://www.ft.lk/front-page/Raj-Rajaratnam-releases-book-titled-Uneven-Justice/44-723285?fbclid=IwAR2UbivxVngPpA3aSaTdrBcPrcusXKchhQFOA5ILWjn5dLVsv9DEG1vUUXY#.YUpqIGxk1IZ.gmail
  23. நேற்று ஒரு தொகுதி கலவைக் கீரை வாங்கி ( baby Spinach, Rocket etc ) , சிறிது இஞ்சி, உள்ளி, வெங்காயம், பிஞ்சுமிளகாய் , மிளகு சின்னசீரகம் என்பன சேர்த்து நல்ல விழுதாக மிக்சியில் இட்டு அரைத்து, ஏற்கெனவே பதமாக புளித்து பொங்கியிருந்த தோசைமாவுடன் கலந்து சுட்ட, சுட சுட தோசையுடன் பிஞ்சு கத்திரிக்காயில் வைத்த தோசைக்கறியுடன் விள்ளல் விள்ளலாக வாயில் வைத்து உமிழ் நீருடன் சேர்த்து மெதுவாக அரைத்து உணவுக்குழாயில் தள்ளிய நேரம் நேற்றிரவு தோன்றியதிற்கு பெயர் தான் சொர்க்கம் என்பதோ ....💖
  24. பார்வைகள் “Me Too” Movement அவுஸ்திரேலியாவை சுற்றி வளைத்து பிரதம மந்திரி இலிருந்து பாதுகாப்பு அமைச்சர் , Attorney General , பிரபல உதை பந்தாட்ட வீரர்கள், கடை நிலை அலுவலக ஊழியர்கள் என்று வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருக்கக் கூடியவர்களின் இருப்பினை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறது. பெண் உரிமை என்று வாய் கிழியக் கத்தி கொண்டிருக்கும் நாம் உண்மையில் நடை முறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்…? எனது அனுபவங்களின் தொகுப்பாக சில பதிவுகள் ………… பார்வை 1 கொஞ்ச நாட்களாகவே எனது கண் பார்வை சரியில்லை என்று ஒரு ஃபீலிங். இரவு நேரங்களில் டிரைவ் பண்ணும் போது முன்னாலிருக்கும் ரோடு மங்கலாக தெரிவது போல ஒரு பிரமை . போன கிழமை நிலைமை மேலும் மோசமாயிற்று. இரவு டிரைவ் பண்ணும் பொது முன்பு மங்கலாயிருந்த தெருக்களெல்லாம் இப்ப கறுப்பாகத் தெரியத் தொடங்கிற்று.இதென்னடா கொடுமை சரவணா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஹை பீம் ஐ தட்டி விட்டால் வீதி நன்கு தெரிந்தது. அத்துடன் எதிரே வந்த கார்க்காரனின் ஆட்சேப ஹார்ன் சத்தமும் கூடவே வந்தது. இருந்தால் போல் பொறி தட்டியது. வாகனத்தை நிற்பாட்டி விட்டு முன்னுக்கு ஹெட் லைட் ஐ போய்ப் பார்த்தல், சுத்தம் - இரண்டும் செத்துப் போய் இருந்தன . டொயோட்டா காரன் இப்ப இரண்டு வருடமாக முன்னும் பின்னமும் புது மொடலுக்கு மாத்தவில்லையோ என்று கேட்ட படி. அலுவலகத்தில் புதிதாக சேர்பவர்கள் முதல் தரம் எனது வாகனத்தைப் பார்க்கும் போது “என்ன ஒரு வருடம் இருக்குமா வாங்கி” என்று தான் கேட்பார்கள். ஏழு , எட்டு வருடம் என்று சொன்னால் நான் எதோ பகிடி விடுகிறேன் என்று அப்பால் போய் விடுவார்கள். இப்பிடி இருக்கும் போது அலுவலகம் தரும் வெஹிகிள் அலவன்ஸை திரும்பவும் கொண்டு போய் டொயோட்டா காரனிடம் கொட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை தானே. சொல்ல வந்த விஷயமே வேறு. எனது கார் ஓடும் 34 வருட கால அனுபவத்தில் -பழைய பியட் ஒன்றுடன் 1987 இல் திருகோணமலையில் தொடங்கியது- ஹெட் லைட் பல்பு பியூஸ் ஆகி மாற்ற வேண்டிய தேவை வந்தது இது தான் முதல் தரம். ஹெட் லைட் அப்பிடியே செட் ஆக மாற்ற வேண்டுமாக்கும் என நினைத்துக் கொண்டே டொயோட்டா சேவை காரனுக்கு அடிக்க , அவன் மாடல் நம்பரை கேட்டு விட்டு தங்களிடம் ரீபிளேஸ்மென்ட் பல்பு ஸ்டாக் இல் இல்லை என்றும் “சூப்பர் சீப் ஆட்டோ” போன்ற கடைகளில் இருக்கும் என்றும் சொன்னான் . அதனை வாங்கி வந்தால் போட்டுத் தருவானா என்று கேட்க, சில வினாடிகள் மௌனத்தின் பின்னர் “ ஓம் செய்யலாம், ஆனால் வாங்கிற இடத்திலேயேயே அவர்கள் போட்டும் தருவார்கள், இங்கே கொண்டு வந்தால் நாங்கள் சேவை சார்ஜ் எடுப்போம்” என்றான் . சோ “சூப்பர் சீப் ஆட்டோ “இற்கு போனேன். கவுண்டர் பெண்மணியிடம் கேட்க , இன்னொரு பெண்மணியிடம் என்னை அனுப்பி வைத்தா ள் , சிறு பெண்ணொருத்தி ,வயது இருபதுகளில் தான் இருக்கும் , பல்கலை மாணவியாக பகுதி நேர வேலை செய்பவராக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். கார் சமாச்சாரங்களில் அனுபவம் உடையவர்கள் யாரிடமாவது கூட்டிச் செல்வாள் என நினைத்துக் கொண்டேன். அந்த பெண்மணி என்னை ஒரு கம்ப்யூட்டர் திரைக்கு அழைத்துச் சென்று எனது வாகன மாடல் போன்ற விபரங்களை கேட்டு கம்ப்யூட்டருக்குள் அவற்றை தட்டி அனுப்பி இரண்டு விதமான பல்புகள் இருக்கின்றன என்று 30 செகண்ட்ஸ் நேரத்தில் சொல்கிறாள். இதே அலுவலை எனது கம்ப்யூட்டர் இல் 10 நிமிடங்களுக்கு மேலாக செலவழித்தது கண்டுபிடித்தது எனது ஞாபகத்திற்கு வந்தது. மூன்றாவதாக ஒரு LED பல்பும் இருந்தது. 6000K ரகம் 50% வெளிச்சம் கூட. அதை பற்றி கேட்டேன் , இருக்கின்றது, ஆனால் அது Off-Road பாவனைக்கு மட்டும் தான் அலவ்டு , Town ஓட்டத்திற்கு தர மாட்டோம் என்று தெளிவாக சொன்னாள். அந்த பல்புகளை பொருத்தி விடும் சேவையும் இருக்கா என கேட்டேன் . “ஆம் பத்து டாலர் சேவைக் கூலி” என்று பதில் வந்தது. “நல்லது , பொருத்துபவனை அழைத்துக் கொண்டு போய் இந்த பல்புகள் சரியாக பொருந்துகின்றதா என சரி பார்த்து விடலாமா” என கேட்டேன். “பிரச்சனை இல்லை செய்து விடலாம்” என்று பதில் வந்தது . அந்த இரண்டு செட் பல்புகளையும் எடுத்துக் கொண்டு வாகனம் நிற்பாட்டி இருக்கும் இடத்தை காட்டுமாறு சொல்லிக் கொண்டு முன்னே போனாள். பொருத்துபவனுக்கு அறிவித்திருப்பாளாக்கும் என உள்ளுக்குள்ளே நினைத்து கொண்டாலும் எதற்கும் உறுதி செய்து கொள்வோம் என்று பொருத்துபவன் அங்கே வருவான் தானே என்று கேட்டும் ( whether HE will come over there ) வைத்தேன். நிமிர்ந்து பார்த்து மெல்லிய புன்சிரிப்புடன் ஓம் என்றாள். வாகனத்தை நெருங்கியதும் Bonnet ஐ திறக்கச் சொன்னாள். கைக்கு கையுறையை மாட்டினாள். ஹெட் லைட் இன் பின் புறமாக கையை கொடுத்து வெகு இலாவகமாக சுட்டுப் போயிருந்த பல்பை கழற்றி எடுத்தாள். கையில் வைத்திருந்த இரண்டு வகைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தாள். அதில் ஒன்று தான் பொருந்தும் என்றாள். எல்லாம் ஒரு நிமிடத்துக்குள்ளேயே நடந்து முடிந்திருக்கும். நான் பேச்சிழந்து போய் அவள் செய்வதை பார்த்து கொண்டிருந்தேன். என் உள்ளேயிருந்து ஒரு குரல் எங்கேயேடா உனது “அவன்” என்று என்னை பரிகாசம் செய்து கொண்டிருந்தது, அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை தான். அடுத்த 10 செகண்ட்ஸ் இல் பல்பை மாத்தி விட்டு நிமிர்ந்தாள். மற்ற பக்கமும் மாத்த வேண்டும் என்றேன். இரண்டுக்குமென்றால் 15 டாலர் வரும் என்றாள். மௌனமாக தலையாட்டினேன். உள்ளுக்குள் ஒரேயடியாக வெட்கித்துப் போய் நின்றிருந்தேன். நான் இரண்டு வளர்ந்த பெண்பிள்ளைகளின் தகப்பன். இருவரும் மருத்துவ துறையில். வீட்டில் ஆண், பெண் சமத்துவம் பற்றி அடிக்கடி மனம் திறந்த உரையாடல்கள் இடம்பெறும் . தங்கள் அப்பா ஆண் பெண் சமத்துவம் பற்றி மிக நல்ல புரிந்துணர்வு கொண்டிருக்கிறார் என அவர்கள் முழுமையாக நம்புபவர்கள். அந்த பெண்ணுக்கு அந்த பல்புகளை மாற்றும் தத்துவம் இருக்கும் என்று யோசிக்கக் கூட இடம் கொடுத்திராத எனது ஆண் உயர்ச்சி மனப்பான்மை தடுத்துக் கொண்டிருந்த வெட்கக் கேடான விஷயத்தைப் பற்றி இளைய மகளுடன் கதைத்தேன் . “இதைத் தானே அப்பா நாங்களும் சொல்கிறோம் , எங்களையும் சமயங்களில் சில தூக்கி பறிக்கிற விடயங்களை நீங்கள் செய்ய விடுவதில்லை தானே; அதனுடைய நீட்சி தான் அப்பா இது.” “கவலைப்படாதீர்கள் எல்லாம் போக போக சரியாகி விடும். ரோம் கூட ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டதல்ல என்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்” என்று ஆறுதல் மொழியும் வந்தது…. பார்வை 2 வேறொரு சமயம் …..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.