• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,287
 • Joined

 • Last visited

 • Days Won

  12

Sasi_varnam last won the day on January 5 2016

Sasi_varnam had the most liked content!

Community Reputation

858 பிரகாசம்

1 Follower

About Sasi_varnam

 • Rank
  Advanced Member
 • Birthday October 18

Profile Information

 • Gender
  Male
 • Location
  Toronto
 • Interests
  இசை, ஓவியம், அமைதி

Recent Profile Visitors

3,642 profile views
 1. நிழலி உங்களுடைய பட விமர்சனம் வாசித்துவிட்டு நேற்று இரவு சில்லு கருப்பட்டி படம் பார்த்தேன். ஆபீசில் என்னுடன் வேலை பார்க்கும் தமிழக நண்பரும் கூட நல்லதொரு படம் என கூறியும் இருந்தார். நாலு குட்டி கதைகளும் கவிதையாக படமாக்கப்பட்டு இருக்கிறது. அதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் மனசுக்குள் வந்து குந்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு கதையும் முடிய மனசு லேசாக ஆனதை போல் இருக்கிறது. குறிப்பாக அந்த நாலு பெண் கதாபாத்திரங்களும் மிக அருமை. ஆண் கதாபாத்திரங்களும் அப்படியே. அந்த ஷேர் ஆட்டோவில் வரும் பெண்ணை போல எங்காவது ஒரு பெண்ணை சந்திக்க மாட்டமா என்று மனசு ஏங்குகிறது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் இந்த படத்தில்... மனிதர்களை மனிதர்களாக காட்டி உள்ளார்கள். வில்லத்தனம் கிடையாது, முழுக்க முழுக்க சராசரி மன உணர்வுகளை படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள். ஆகமொத்தத்தில் ரம்மியமானதொரு திரைப்படம். கருத்து எழுதி பார்க்கும் ஆவலை கூட்டிய அனைவருக்கும் நன்றி.
 2. நேற்றைய புதிய மாணவன், நாளை பழைய மாணவன் ஆகிறான். பழைய மாணவன் தன் பங்குக்கு, தான் அனுபவித்ததை "மரபாக" நினைத்துக்கொண்டு அதே சுழட்சியில் சிக்குகிறான். இது தனி மனித ஒழுக்கம் போல ஒவ்வொருவரு மாணவ மாணவியும் சிந்தித்து, உணர்ந்து மனம் மாறினாலேயே தீர்க்கப்படலாம். போலீஸ் மூலம் தண்டனை கொடுத்து மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது கேள்விக்குறியே? பள்ளிப் படிப்பில் கூட "பகிடி வதை" பற்றிய உளவியல் தாக்கங்கள், சம்பவங்கள், பற்றிய கருத்தாடல்கள், அறிவூட்டல்கள் நிகழ்த்தப்பட வேண்டும். கல்வி முறை, சமூக கருத்தாடல்கள், புரிதல் இல்லாமை போன்ற வெற்றிடங்கள் இன்னும் நிரவப்படாமல் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவங்கள் ஒரு சான்று.
 3. நீங்கள் இணைத்த படங்களில் எல்லோரது cell போனிலும் பாட்டரி ஒரேமாதிரி 18% 19% என்று காட்டுகிறதே !!! இது எதேட்சயான நிகழ்வா இல்லை....
 4. ராகிங் செய்யுறன் என்ற போர்வையில் தங்களது காம வக்கிரபுத்திகளை காட்டும் இந்த போக்கிலிகளை கட்டி வச்சு உதைக்கவேணும்.
 5. மாங்குயில், ரதி, நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது என்று நினைப்பது அறியாமை. தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும். இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள்.
 6. 5 நிமிஷம் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில், அட.... 3 நிமிஷம் நாம் சுவாசிக்கும் சுவாசத்தை உற்றுநோக்க திரணியற்ற சராசரி மனிதன் புத்தனை கோழை , அறிவற்றவன் என்று பேசுவது வெறும் பேச்சு. இப்படியான வரிகள் நீங்கள் சிங்களவரை எதிரிகளாக பார்ப்பதால் தான் வருகிறது என்பது என்னுடைய கணிப்பு.
 7. மிக்க மகிழ்ச்சி தமிழினி, எல்லா பெற்றோரையும் போல இன்ஜினியரிங் , ரோபோடிக்ஸ், மெடிக்கல் சயன்ஸ், ஐ .பீ ஸ்கூல் என்று பறைசாற்றல் இல்லாது இசை, நாட்டியம், நாடகம் என்னும் பாதையில் மகளை தயார் செய்வதற்கு ஒரு பச்சை .
 8. தமிழினி, மகள் படிக்கும் இசைக்கல்லூரியின் பெயர் என்ன? எந்த வகையான இசை திறமையை அவர் பயிலுகிறார்? என்னுடைய மகனையும் அப்படியான ஒன்றில் தான் சேர்ப்பதற்காக யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
 9. (Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள். பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார். இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார். இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்" Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது. வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.
 10. தமிழில் எவ்வளவு செல்லமாக "குஞ்சா மணி" என்று பெயர் இருக்க சும்மா போய் அதை "மர்ம உறுப்பு ", "மறைந்த பருப்பு" என்று சொல்வதை எல்லாம் நான் வன்மையாக கண்டிக்கிறேன்
 11. விசுகு அண்ணா , இங்கே இவ்வளவு கருத்துக்களை பதித்தவர்கள் பெரும்பாலும் அதை தானே செய்து இருக்குறீர்கள். புலிகளின் மரியாதையை இழக்கவும் தமிழ்மக்கள் புலிகளை வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த நன்மையுமில்லை. நீங்களே இதை சர்வ சாதாரணமாக இந்த திரியில் செய்து தானே இருக்குறீர்கள்... காத்திரமான அரசியல் ஆராய்வுகளாக, கண்ணோட்டங்களாக இருக்கும் பட்சத்தில் தவறில்லை ...ஆனால் இங்கேய எடுத்தவுடன் "முத்திரை "குத்துவதை தான் கேள்வி கேட்கிறோம்.
 12. ஈழத்து தமிழர்கள் நாங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சொற்பதத்தை தயாராக வைத்திருப்போம், அடுத்தவனை பேசவிடாமல், அடுத்தவனை சிந்திக்க விடாமல், தேவைக்கேற்ப தூக்கி அடிப்போம்... கைக்கூலி , சமூக விரோதி, காவடித்தூக்கி , செம்பு தூக்கி, ஒட்டுக்குழு, முட்டையில் மயிரை புடுங்கு, சொட்டையில எண்ணெய்யை தடவு.. இதில் மட்டுமே நாங்கள் கைதேர்ந்த கில்லாடிகள்
 13. மீரா ...அவர்கள் கைக்கூலிகள் என்பது உங்கள் அனுமானமா ? அல்லது ஏதாவது நம்பக்கூடிய ஆதாரங்கள் , உரையாடல் , நடவடிக்கைகள் எதுவும் இருக்கிறதா? அப்படி எதுவும் இருந்தால் நீங்கள் எழுதியதில் தவறில்லை. உண்மையை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லை, அப்படி எதுவுமே இன்னும் இல்லை, என்றால் அது இப்போதைக்கு வெறும் கற்பனை, அல்லது ஊகம் மட்டுமே. எங்களை விட அவர்களுக்கு தகுதிகள் அதிகம், அனைத்தும் துறந்து போராடியவர்கள், சிறையில் கிடந்தது சின்னாபின்னப்பட்டவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரால் வளர்க்கப்பட்டு, வழிகாட்டப்பட்டவர்கள். (பலர் வழி மாறி எமக்கு எதிராக திரும்பியவர்களும் இருக்கிறார்கள்) ஆனாலும் எல்லோரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியா? இந்த மன நிலை எமக்கு ஒரு மாற்று அரசியல் சக்தியை வளர விடாமல் முலையோடு கிள்ளி எரியும் செயலாக கூட இருக்கலாம் அல்லவா? பரந்த நோக்கோடு சில காரியங்களை பார்ப்பது கூட காலத்தின் தேவை தான். அவர்கள் ஜனநாயக அரசியலுக்கு தானே வருகிறார்கள்.
 14. பிரி ...இதுதான் நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. வாசிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள். போனஸாக இடைக்கிடை உங்கள் "மைண்ட் வாய்ஸ்". தொடர்ந்தும் எழுதுங்கள். ஆவலோடு காத்திருக்கிறோம்.
 15. கோஷன் ....நான் நினைக்கிறன் இதுவரையிலும் யாரும் இவ்வளவு நுணுக்கமாக படங்களையும் அதற்கான குறிப்புகளையும் பதிவு செய்திருப்பார்கள் என்று... நான் கூட அங்கோர்வாட் பற்றிய சுற்றுலா விவரணம் ஒன்றை பார்த்தேன்...அதில் கூட இவ்வளவு குறிப்புகள் கிடைக்கவில்லை. அருமை சகோதரம்.