Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. அமெரிக்கா, ரஷியா , சீனா வரிசையில் இணையும் இந்திய விண்ணியல் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்
  2. சிறப்பு !! நம்மட ஆட்கள் 19 வயது யுவதியை கூட்டி கொண்டு ஓடிய 54 வயது குடும்பஸ்த்தரை ஆணுறுப்பு சிதைய செய்து கொன்று குடும்ப கெளரவம் காப்பாற்றுவதில் பிஸி 🙊
  3. தூவானம் பட விமர்சனத்திற்கு நன்றிகள் பிரபா. ஆனாலும் ஈழப்பிரியன் அண்ணாவை அங்கிள் என்று விளித்தமைக்கு சிறிய கண்டனம். ... Just for Fun. 🙂
  4. சட்டத்தில் சிக்கல் இல்லை, சட்டம் மீறப்படவில்லை, சமூகத்துக்கு இது தவறாக படுகிறது காரணம் இரு குடும்பத்தின் "கெளரவம்" சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் மட்டுமே ஒரு கொலையும், கொலை முயற்சியும் நடந்தேறி இருக்கிறது. கொலை வெறியர்கள் கைது செய்யப்பட்டுய விசாரணை, தண்டனை என்று காலம் உருண்டோடும். இதுவும் கூட ஒருவகை கௌரவ பிரச்சினைதான். தமிழ் தாலிபானுகள் செய்யவேண்டிய பல நற்காரியங்களை புறந்தள்ளி விட்டு இதை கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை சற்றே மாற்றி யோசித்துப்பார்த்தால், பெண் வயது 52, பையனின் வயது 19, இருவருக்கும் காதல் மலர்ந்து ஓடியும் போய்விட்டார்கள். வஞ்சகமாக வீட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டு, உறவினர்களால் அக்கம் பக்கத்தவர்களால் அந்த பெண் குரூரமாக பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறாள், பையனும் நையப்புடைக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்படுகிறான். உங்கள் மனதில் அந்த பெண் குறித்த விண்பமும், இப்போது கொலை செய்யப்பட்ட அந்த ஆணின் கதியும் ஒரே விதமாக தெரிகிறதா? அதே கோபம் இப்பவும் வருகிறதா? அந்த பெண்ணின் கொலையை சமூகத்தால் கொடுக்கப்பட்ட சரியான நீதியாக தண்டனையாக எடுத்துக்கொள்வீர்களா?
  5. ஒவ்வொரு நாளும் சிரத்தையோடு இந்த பதிவுகளை இங்கே ஏற்றிவந்த ஏராளன் மற்றும் ஊக்கப்படுத்தி பதிவுகள் இட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். 🙏
  6. என்னத்த சொல்ல... புளோரிடா கேப் கார்னிவல் (கென்னடி விண்வெளி மையம்) போனவர்கள் இப்படி பேச மாட்டார்கள். 🤐
  7. ஒரு கை தேர்ந்த பக்கா அரசியல் ரவுடி கையில அணு ஆயுத ஸ்விட்சை வச்சு கொண்டு மூடன் என்ன செய்வானோ என்று உலகம் தவிக்க இங்க இந்திய சினிமா பைத்தியங்களை விட ஒரு ஆடி மேல போல போய் அண்ணனுக்கு ஜே!! ... தலைவனுக்கு ஜே!! போட்டு கொண்டு இருக்கீனம். 🤐
  8. எட்டு பக்க கருத்தியல் சமாவையும் , இடைக்கிடை புஷ்வாண வெடி சத்தங்களையும் முழுமையாக வாசித்தாயிற்று!! 👍
  9. Mr.Kapithan, உதுக்குள்ள நீங்க வாய விட்டு வேண்டிக்கட்டாம வெளியில இருந்து புலம்பெயர்ஸ் postmortem றிப்போட்டுகள வாசிக்களாமே!! நீங்கள் சொன்னதை ஞாபகம் ஊட்டினேன் அவ்வளவே. 😂
  10. எனக்கென்னமோ இனி வரும் காலங்களில் சின்ன சண்டியன் புட்டினே தொடர்ந்தும் இருந்திருக்கலாம் என்று அனைவரும் நினைக்கும் அளவிற்கு பிரிகோசனை ஆராயவேண்டி வருமோ என்னமோ 🤐
  11. நல்ல அவதானிப்பு. கருத்துலக ஆசான் சைத்தான்கே பச்சியை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி!!!
  12. எக்ஸ்டரா பிட் எண்டாலும் பலருக்கு சந்தோசம் தரும் பிட்டு தானே சகோ...🤭
  13. பெரியவாள் நிறைய பேர் அதிபர் புட்டின் மேல் அளவற்ற மதிப்பு, நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் பக்கம் இருந்து காய் நகர்தல் நடக்கும், நமக்கும் தேனும் பாலும் ஓடும் என்ற கற்பனையில் இருந்துவிட்டோம். ஆனாலும் சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து போன உக்ரேயின் மேல் ரசியா காட்டும் பச்சாதாபத்தை பார்க்கும் போது அந்த நம்பிக்கை கேள்விக்குறியாக என் கண்முன்னே விசுவரூபமாய் நிட்கிறது ஐயா!!
  14. நானும் இப்படி ஒரு விடயத்தை ரசியாவிலும், சைனாவிலும் யாராவது முன்னெடுப்பார்கள் என்ற ஏக்கத்தோடு இருக்கிறேன்.
  15. இவரின் பக்தன் இல்லை ஆனால் இவரது பகுத்தறிவு கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவதாக உணர்வதால், உங்கள் அளவு வசிப்பது/கேட்பது கடந்து (ஒரு சொற்ப படிகள் கடந்து) அதன் அனுபவத்தை ரசிக்கத் துணிந்தவன். ரசித்தவன். 🙏
  16. இறுதிப் போரில் மரணித்த போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம்.💐 🙏
  17. ரஞ்சித்தின் கருத்து முழுமையாக வாசித்தீர்களா? அல்லது எழுதப்பட்ட உக்ரேனின் மீதான காட்டமான பல பல கருத்துக்களை வாசிக்காமல் போய் விட்டீர்களா? "ஒன்று, இந்த ஆக்கிரமிப்புப் போரினை எம்மீதான சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டு, எமக்கு ஏற்பட்ட அவலங்களூடாக இன்று உக்ரேன் மக்கள் அனுபவிக்கும் அவலங்களை உணர்ந்துகொண்டு, இந்த ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை விமர்சிப்போர். மற்றைய பிரிவினர், இந்த ஆக்கிரமிப்புப் போரை நியாயமானது என்று நிறுவுவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் முன்னாள் செயற்பாடுகளை கொண்டுவந்து நிறுத்தி, அன்று அவர்கள் செய்ததையே இன்று புட்டின் செய்கிறார். ஆகவே, அது தவறில்லையென்றால், இதுவும் தவறில்லை என்று வாதிடுகிறார்கள்"
  18. மனதை திறந்து சொல்கிறேன் இந்த ரசிய, உக்ரைன் போரின் பின்னர் யாழ் கள உரையாடல்கள், திரிகள், பின்னூட்டங்கள், கேலிகள், மீம்ஸ் இவையெல்லாம் பார்க்க பார்க்க நான் வாஞ்சையோடு பல வருடம் கருத்தாடிய உறவுகள் மீதும் கூட என் பார்வையை மாற்றச்செய்துள்ளது, உண்மையில் சொன்னால் பலரோடு அந்நியப்பட்டது போலவும் உணர்கிறேன். சொந்த மண்ணில் பேரவலம் வந்தபோது வீழ்த்தப்பட்டவர்களுக்காக தோளோடு தோல் நின்று, உறுதுணையாய் பலம் தந்து கருத்தாடிய உறவுகள் மேற்குலக எதிர்ப்பு என்ற மாயையில்; வீழ்ந்து கிடப்போரை, மண்ணை நேசிப்பவனை நக்கல், நையாண்டி செய்து பரவசம் காணுகிறார்கள். யாழ் களம் இனிவரும் காலங்களில் தொடரும் என்ற நம்பிக்கையும் சற்றே கேள்விக்குறியாகவே .. 😧
  19. புட்டின் அம்மா அப்பா கல்லறையில்; ஒரு மூதாட்டி காகிதத்தில் எழுதி வைத்த நோட்டுக் குறிப்பை நீங்கள் ஓவர் சென்டிமென்டாய் அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. அந்த கல்லறைகள் ஒன்றும் ஈழதேச விடுதலைக்காய் இளம் வயதில் தம் உயிரை துச்சமாய் மதித்து மண்ணுக்காய், மக்களுக்காய் உயிர்க்கொடை தந்தவர்கள் உறைவிடம் போல நினைக்காதீர்கள். 🙏
  20. தங்கால்லையில் அமைந்திருந்த மகிந்தராஜபக்ஷே சகோதரர்களின் மாளிகையின் முன்னே இருந்த அவர்களின் பெற்றோர்கள் நினைவு தூபியும் இடித்து அடித்து நொறுக்கப்பட்டதே. யாரால் ? எதற்கு? ஆயிரக்கணக்கான அப்பாவி ரசிய மக்களின் அழிவுக்கு காரணமானவன் புட்டின், அவனை விமர்சிக்க துப்பு இல்லை. அவனை தூக்கி தலையில் வைத்து கொண்டாடும் அசட்டுத்தனங்கள்!! இப்போ நான் எழுதிய பதிவுக்கு முத்திரிக்காய் மாதிரி 2 பேர் வந்து கருத்து எழுதுவார்கள், அப்போ அமெரிக்க புஷ், ஒபாமா செய்தேதெல்லாம் என்ன? அதற்க்கு நீங்கள் என்ன எதிர்வினை செய்தீர்கள்? What do I tell you 🤣
  21. ஆச்சரியமாக இருக்கிறது ஜஸ்டின். சுரேஸ் ஸ்ரீஸ்காந்தா கூட இது சார்ந்த குற்ற வழக்கில் தான் (புலிகளுக்கு ஆயுத கொள்வனவு செய்வது) தொடர்பாக கைது செய்யப்பட்டு சில வருடங்கள் சிறையில் இருந்தார். நாங்கள் எல்லாரும் கூட அவரின் விடுதலைக்காக நிறைய செயல்பாடுகளை செய்திருந்தோம். The 32-year-old, who earned university degrees in Waterloo, Ont., was arrested in 2006 along with Piratheepan Nadarajah, of Brampton, Ont., and freed on bail three years later before his extradition to the U.S. in 2012. While in Canada, Sriskandarajah helped research and acquire aviation equipment, submarine and warship design software, night vision equipment and communications technology for the Tamil Tigers.
  22. முக்கியமான குற்றவாளியாக கருத்தப்பட்ட சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா இப்பொழுது ஒரு பல்துறை வழக்கறிஞர். https://suresh.law/#services https://en.wikipedia.org/wiki/Suresh_Sriskandarajah Suresh Sriskandarajah is a Canadian citizen who pleaded guilty to U.S. charges of conspiring to provide material support to the Tamil Tigers, a Sri Lankan terrorist organization. He was sentenced to two years in U.S. prison.[1][2] Sriskandarajah was born in Sri Lanka. In 1989 his family fled to Montreal to avoid the violent civil war taking place in the northern part of the country. In 2004 Sriskandarajah used Hotmail, a US company, to communicate regarding the Tamil Tigers. Sriskandarajah was arrested in 2006 by Canadian authorities at the request of US authorities. He was released on bail pending his extradition challenges which was heard by the Supreme Court of Canada in 2012. Shortly after being extradited to USA, Sriskandarajah pleaded guilty and was sentenced to 2 years in prison.[3] Both the Sri Lankan and Indian governments each sent a diplomatic note to ask U.S. to abandon the prosecution against Sriskandarajah “in light of his publicly recognized efforts to secure a lasting, peaceful reconciliation for the Tamil people” wrote Judge Raymond Dearie of the U.S. District Court. “Given the history of Sri Lanka’s prolonged and bitter conflict, the request is indeed an extraordinary initiative that evidences Suresh’s legitimate and admirable work to secure a lasting and just resolution of the tragic conflict.” [4] The civil war in Sri Lanka came to a bloody end when the Tamil Tigers were defeated in 2009 along with a heavy civilian casualty.[5]
  23. ஒரு வருசத்துக்கு மேல் நடந்து வரும் இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகள் தொகை ?????. காயமடைந்தவர்கள் சுமார் ??,000, அகதி ஆகி நாட்டை விட்டு வெளியேறியோர் 8.1 மில்லியன் (விட அதிகம்). இதற்கெல்லாம் களங்காத இதயங்கள்; கொடியை தூக்கி காட்டிய பிரச்சினையில் இரண்டு பேர் தள்ளு முள்ளுபட வெகுண்டெழுந்து குரல் கொடுப்பது சற்றே வேடிக்கையாய் உள்ளது. 🤔 பி.கு ஒவொரு இணையதளமும் இறந்தவர்கள் குறித்த வித்தியாசமான தகவல்களை வழங்கி உள்ளன The FSB's reported calculation of almost 110,000 casualties by February is still far lower than numbers this week in previously leaked US documents, which estimated Russian losses at between 189,500 and 223,000 casualties, with 35,500-43,000 men killed in action. https://www.bbc.com/news/world-europe-65260672
  24. இலங்கை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நாங்களும் இப்படி சிங்கக்கொடியை இழுத்து பறிச்சி இருக்கிறம், அவங்களும் புலிக்கொடியை பிடுங்கி வீசி இருக்காங்கள். யுத்தம் நடக்கும் நாட்டு மக்களுக்கிடையில் இதெல்லாம் நடக்கும். சும்மா கண்ணீர் விட்டு, பந்தலிலே பாவக்கா ரக ஒப்பாரி வைக்க கூடாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.