Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,132
 • Joined

 • Last visited

 • Days Won

  12

Everything posted by Sasi_varnam

 1. நல் முயற்சி, என் பள்ளிக்கூட நாட்கள் கண்முன் வந்து போனது உண்மை. இதோ என் மனத்தில் பட்ட சில கருத்துக்களை பகிர்கின்றேன். கதை களம் பற்றிய சிறு வர்ணனைகள் இருந்தால் இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும். (ஊர், கிராமம், சந்தி, பெட்டிக்கடை, இயக்க நோடீஸ், மதில், சங்கக்கடை, மதகு, கோயில் மண்டபம், வெளிவீதி, கிணற்றடி, மூலகுடா, நந்தினி அக்கா, சொக்கலிங்கத்தார், பவழம் ஆச்சி, சின்னப்பொடி, சைக்கிள் கடை, பொட்ட நாய்... கதையை சிறுக சிறுக சொல்லலாம். (3 - 4) பந்தியாக இருந்தால் கதையை பல கோணங்களில் யோசித்து திருப்பங்கள் கொண்டு வரலாம். சிறு சம்பாஷனைகள் , உரையாடல்கள் எமக்கே உரிய வட்டார/ பிராந்திய மொழி சார்ந்து இருத்தல். மற்றும் படி எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குங்கள். உங்கள் அபிமான வாசகன் சசி வர்ணம்
 2. திடுக்கென்றுதான் ஆகி விட்டது கேட்ட நிமிடமே பல அற்புதங்களை மனதில் நிகழ்த்தும் அருமையான பாடல். படம் : பண்ணையாரும் பத்மினியும் பாடியவர்கள் ,: சந்தியா, பல்ராம், அனு,S.P.B. சரண் ( இதில் சந்தியா சுசீலாவின் மருமகள். பூக்கொடியின் புன்னகை என்று பாடி இருவர் திரைப்படத்தில் அறிமுகம். அச்சு அசலாய் பி.சுசீலாவின் குரலாய்த்தான் ஒலிக்கும் இந்த பாடல். பாடல் எழுதியவர்: வாலி இசை அமைத்தவர் : ஜஸ்டின் பிரபாகர் என்ற புது இசை அமைப்பாளர் அற்புதமான இசையைக் கேட்கும்போது ஏற்படும் உணர்வை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது அது ஒரு பைத்தியக்காரனின் கனவு போல. இந்தப் பாடல் பல சாகசங்களை நிகழ்த்துகிறது, குறிப்பாக இதில்வரும் பெண்ணின் குரலைத்தேடி எங்கயோ ஒரு புள்ளியாய் தேய்ந்து தொலைந்துவிட வேண்டும் போலிருக்கிறது. Simple ... yet exquisite musical composition. நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன். http://www.youtube.com/watch?v=Di1VXmmLkv8 .
 3. அவர் இருக்கும் போது அவரை கௌரவப்படுத்த தவறிய குற்றச்சாட்டு புலம்பெயர் வாழ் எமக்கு உண்டு. எப்பேர் பட்ட ஒரு பொக்கிஷத்தை இழந்தோம்... அவரின் இறுதி ஊர்வலாமே அனைத்துக்கும் சாட்சி
 4. அங்கே மழை பெய்கிறது! எங்கோ ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள் புரண்டு படுக்கின்றன அப்பிணங்களைத் தீண்டுகிறது நிலத்தில் இறங்கிய மழையின் நீர்க்கால் ஒன்று புதையுடல்கள் துயில் கலைந்தனபோல் உடல் முறித்து எழ முயல்கின்றன அவற்றின் உதடுகளில் இன்னும் பதியப்படாத சொற்களும் உலக மனசாட்சியின் மீது வாள்செருகும் வினாக்களும் தொற்றியிருக்கின்றன தாம் சவமாகும் முன்பே புதைபட்டதைத் தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம் கூறியிருக்கின்றன அவை தாம் இறக்கவில்லை தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன மழைத்துளியிடம் எமது மைந்தர்கள் மீது இதே குளுமையுடனும் கருணையுடனும் பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன ! -- மகுடேசுவரன்
 5. பாலு மகேந்திரா... தமிழ் சினிமாவின் வீடு!- இயக்குநர் ராம் எங்கள் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும். சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. 'வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கிய போது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் 'வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான். அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீடு மட்டுமல்ல... பல உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஜாம்பவான்கள், இயக்குநர்கள், மாபெரும் நடிகர்கள், நடிகைகளின் வீடு. மொத்தத்தில் அது தமிழ் சினிமாவின் வீடு. அங்கே இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கலிங்க பாகவதர் மகன் வந்த போது, தனது தந்தையின் போட்டோ ஹாலில் மாட்டியிருப்பதைப் பார்த்து கண் கலங்கினார். அந்த வீட்டுக்கு அணில்களும் பூனைக் குட்டிகளும் அனுதினமும் வரும். அவற்றுக்குத் தினமும் உணவு வைக்கும் அவர், 'இன்று முதல் இல்லை’ என்கிற செய்தியை அவற்றுக்கு யார் சொல்லுவார்? இனிமேல் என் மனம் கனக்கும்போது, யாரிடம்போய் நான் அழ முடியும்? நான் இந்தியில் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷியிடம் வேலை பார்த்தேன். அதன்பின் தனியாகப் படத்தை டைரக்ஷன் செய்ய இறங்கினேன். நான் பாலு மகேந்திரா சாரின் கேமராவுக்கு அடிமை. அதனால் என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அவரை அணுகினேன். அப்போது 'அது ஒரு கனாக் காலம்’ படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். கவிஞர் நா.முத்துக்குமார் அறிமுகத்தோடு டைரக்டரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது என் கையில் சுத்தமாக பணமில்லை. முகத்தைக் கணித்து மனதைப் படிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. என் முகத்தைப் பார்த்தவுடன் ''சாப்பிட்டியா...?'' என்று அக்கறையாகக் கேட்டவர், உடனே தன் கையால் பிரெட்டும் சிக்கனும் வைத்து சாப்பிடக் கொடுத்தார். இன்னொரு நாள் அலுவலகத்துக்குப் போனேன். அப்போதும் என்னைக் கணித்தவர் உடனே தனது பர்ஸிலிருந்த 1,000 ரூபாயை எடுத்தார். 'இந்தா எனக்கு 500, உனக்கு 500 ஓகே-வா?’ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் சட்டைப் பையில் பணத்தைத் திணித்தார். நான் அவரது அன்பில் கரைந்து போனேன். அதன்பின், 'அது ஒரு கனாக் காலம்’ படத்தில் சில நாள் உதவியாளராக வேலை பார்த்தேன். பிறகு நான் 'கற்றது தமிழ்’ இயக்கும்வரை அவரோடுதான் இருந்தேன். இப்போது குடியிருக்கும் சாலிகிராமம் வீடுகூட அவராக விரும்பி வாங்கியது இல்லை. அவரிடம் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தவர் சண்டை போட்டுப் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த வீடு. சொந்த ஊரைவிட்டு ஓடிவந்து திரிந்த முருகன் என்பவரை அழைத்து வந்து வீட்டில் சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து, இப்போது தனது தயாரிப்பு நிர்வாகி பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திக்கு தெரியாமல் திண்டாடிய பாஸ்கரன் என்பவரை வளர்த்து வந்தார். கோவையில் குடும்பத்தோடு என் மகள் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன். அதற்கு நீங்கள் வரவேண்டும்...’ என்று கேட்டேன். 'பேத்தி பிறந்தநாளுக்கு தாத்தா வராமல் இருப்பேனா...’ என்று உரிமையாகச் சொன்னதோடு, கோவைக்கும் தேடிவந்து என் உறவினர்கள் மத்தியில் எனக்கு சிறப்புத் தேடித் தந்தார். என் வீட்டுக்கு வந்தபோது என் மகளை அவரே தனது கேமராவால் குழந்தை மாதிரி விதவிதமாய் ரசித்து ரசித்து போட்டோ எடுத்துக் கொடுத்தார். அவர் எடுத்த போட்டோதான் இப்போதும் என் வீட்டை அலங்கரிக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடந்த முதல் நாள் இயக்குநருக்குக் கடுமையான காய்ச்சல். அதைப் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் யார் சொல்லியும் கேட்காமல் 3 மணி நேரம் நின்றார். கடந்த 11-ம் தேதி அன்று எப்போதும் போல் அலுவலகம் வந்திருக்கிறார். அன்று தன்னுடைய மாணவர்களோடு இணைந்து அவரது சினிமா பட்டறையில் அவர் இயக்கிய முதல் படமான 'அழியாத கோலங்கள்’ படம்தான் அவர் கண்கள் பார்த்த கடைசி படம். திரைப்படத்தைப் பார்த்து முடித்தவர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்பு இயல்புக்கு வந்தவர், தன் மாணவர்களிடம், ''சினிமா கலைஞன் சினிமாவில் தன்னுடைய பலம் உச்சத்தில் இருக்கும்போதே மரணித்துப் போக வேண்டும்'' என்று உருக்கமாகச் சொன்னார். 12-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கிறார். அதிகாலை 5 மணிக்கு அகிலா அம்மா எழுப்பியிருக்கிறார். சுயநினைவில்லாமல் இருந்த இயக்குநரைப் பார்த்துப் பதறிப்போய் வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார். டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் 13-ம் தேதி காலை 11-30 மணிக்கு உயிர் பிரிந்து விட்டது. சினிமாவை சுவாசித்த ஒரு திரைக் கலைஞனின் உடல் அவரது சினிமா பட்டறையிலேயே கிடத்தப்பட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு சினிமாவை நேசித்தார் என்பதற்குச் சான்று. தமிழ் சினிமாவுக்கு சினிமா மொழியை சொல்லிக் கொடுத்தவர் இன்று பேசா மௌனத்தோடு நிரந்தர உறக்கத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என் கண்களை மறைக்கிறது கண்ணீர் திரை.
 6. பாலு மகேந்திரா... தமிழ் சினிமாவின் வீடு!- இயக்குநர் ராம் எங்கள் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும்.சினிமாவைத் தாண்டி பணம் பற்றியோ, வீடு பற்றியோ என்றைக்குமே அவர் யோசித்ததே இல்லை. 'வீடு’ படத்துக்காக ஒரு இடம் வாங்கிய போது தானாகவே ஒரு வீடு முளைத்தது. கதைப்படி பாதி கட்டிமுடிக்கப்பட்ட வீடு வெகுகாலம் பாதியிலேயே நின்று, பிறகுதான் முழுமை பெற்றது. அந்த வீட்டில் அவர் மாட்டிய புகைப்படம் 'வீடு’ படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் படத்தைத்தான். அங்கே வருகின்ற எல்லோரிடமும் அந்த வீடு சொக்கலிங்க பாகவதர் வீடு என்று சொன்னார். அந்த வீடு பாகவதர் வீடு மட்டுமல்ல... பல உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஜாம்பவான்கள், இயக்குநர்கள், மாபெரும் நடிகர்கள், நடிகைகளின் வீடு. மொத்தத்தில் அது தமிழ் சினிமாவின் வீடு. அங்கே இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கலிங்க பாகவதர் மகன் வந்த போது, தனது தந்தையின் போட்டோ ஹாலில் மாட்டியிருப்பதைப் பார்த்து கண் கலங்கினார். அந்த வீட்டுக்கு அணில்களும் பூனைக் குட்டிகளும் அனுதினமும் வரும். அவற்றுக்குத் தினமும் உணவு வைக்கும் அவர், 'இன்று முதல் இல்லை’ என்கிற செய்தியை அவற்றுக்கு யார் சொல்லுவார்? இனிமேல் என் மனம் கனக்கும்போது, யாரிடம்போய் நான் அழ முடியும்? நான் இந்தியில் டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷியிடம் வேலை பார்த்தேன். அதன்பின் தனியாகப் படத்தை டைரக்ஷன் செய்ய இறங்கினேன். நான் பாலு மகேந்திரா சாரின் கேமராவுக்கு அடிமை. அதனால் என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அவரை அணுகினேன். அப்போது 'அது ஒரு கனாக் காலம்’ படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். கவிஞர் நா.முத்துக்குமார் அறிமுகத்தோடு டைரக்டரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது என் கையில் சுத்தமாக பணமில்லை. முகத்தைக் கணித்து மனதைப் படிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. என் முகத்தைப் பார்த்தவுடன் ''சாப்பிட்டியா...?'' என்று அக்கறையாகக் கேட்டவர், உடனே தன் கையால் பிரெட்டும் சிக்கனும் வைத்து சாப்பிடக் கொடுத்தார். இன்னொரு நாள் அலுவலகத்துக்குப் போனேன். அப்போதும் என்னைக் கணித்தவர் உடனே தனது பர்ஸிலிருந்த 1,000 ரூபாயை எடுத்தார். 'இந்தா எனக்கு 500, உனக்கு 500 ஓகே-வா?’ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் சட்டைப் பையில் பணத்தைத் திணித்தார். நான் அவரது அன்பில் கரைந்து போனேன். அதன்பின், 'அது ஒரு கனாக் காலம்’ படத்தில் சில நாள் உதவியாளராக வேலை பார்த்தேன். பிறகு நான் 'கற்றது தமிழ்’ இயக்கும்வரை அவரோடுதான் இருந்தேன். இப்போது குடியிருக்கும் சாலிகிராமம் வீடுகூட அவராக விரும்பி வாங்கியது இல்லை. அவரிடம் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தவர் சண்டை போட்டுப் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த வீடு. சொந்த ஊரைவிட்டு ஓடிவந்து திரிந்த முருகன் என்பவரை அழைத்து வந்து வீட்டில் சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து, இப்போது தனது தயாரிப்பு நிர்வாகி பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். திக்கு தெரியாமல் திண்டாடிய பாஸ்கரன் என்பவரை வளர்த்து வந்தார். கோவையில் குடும்பத்தோடு என் மகள் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன். அதற்கு நீங்கள் வரவேண்டும்...’ என்று கேட்டேன். 'பேத்தி பிறந்தநாளுக்கு தாத்தா வராமல் இருப்பேனா...’ என்று உரிமையாகச் சொன்னதோடு, கோவைக்கும் தேடிவந்து என் உறவினர்கள் மத்தியில் எனக்கு சிறப்புத் தேடித் தந்தார். என் வீட்டுக்கு வந்தபோது என் மகளை அவரே தனது கேமராவால் குழந்தை மாதிரி விதவிதமாய் ரசித்து ரசித்து போட்டோ எடுத்துக் கொடுத்தார். அவர் எடுத்த போட்டோதான் இப்போதும் என் வீட்டை அலங்கரிக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடந்த முதல் நாள் இயக்குநருக்குக் கடுமையான காய்ச்சல். அதைப் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் யார் சொல்லியும் கேட்காமல் 3 மணி நேரம் நின்றார். கடந்த 11-ம் தேதி அன்று எப்போதும் போல் அலுவலகம் வந்திருக்கிறார். அன்று தன்னுடைய மாணவர்களோடு இணைந்து அவரது சினிமா பட்டறையில் அவர் இயக்கிய முதல் படமான 'அழியாத கோலங்கள்’ படம்தான் அவர் கண்கள் பார்த்த கடைசி படம். திரைப்படத்தைப் பார்த்து முடித்தவர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின்பு இயல்புக்கு வந்தவர், தன் மாணவர்களிடம், ''சினிமா கலைஞன் சினிமாவில் தன்னுடைய பலம் உச்சத்தில் இருக்கும்போதே மரணித்துப் போக வேண்டும்'' என்று உருக்கமாகச் சொன்னார். 12-ம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கிறார். அதிகாலை 5 மணிக்கு அகிலா அம்மா எழுப்பியிருக்கிறார். சுயநினைவில்லாமல் இருந்த இயக்குநரைப் பார்த்துப் பதறிப்போய் வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார். டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் 13-ம் தேதி காலை 11-30 மணிக்கு உயிர் பிரிந்து விட்டது. சினிமாவை சுவாசித்த ஒரு திரைக் கலைஞனின் உடல் அவரது சினிமா பட்டறையிலேயே கிடத்தப்பட்டிருப்பது அவர் எந்த அளவுக்கு சினிமாவை நேசித்தார் என்பதற்குச் சான்று. தமிழ் சினிமாவுக்கு சினிமா மொழியை சொல்லிக் கொடுத்தவர் இன்று பேசா மௌனத்தோடு நிரந்தர உறக்கத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என் கண்களை மறைக்கிறது கண்ணீர் திரை.
 7. இவரின் மறைவு மனதை வாட்டிக்கொண்டு இருக்கிறது. என்னை அறியாமல், நேரம் போனதே தெரியாமல் அவரின் பேட்டிகள், அவரின் படங்களின் சில பகுதிகளை youtube இல் - தட்டிக்கொண்டு இருக்கிறேன். சிறுவயதில் என்னை பாதித்த ஒரு படம் மூன்றாம் பிறை!! கமலும் ஸ்ரீதேவியும் ஒன்றாக சேரவில்லயே, கமல் கடைசியில் என்ன ஆனார்... என நினைத்து பல இரவுகள் ஏக்கத்துடன், பெருமூச்சுடன் தூங்கச்சென்றுள்ளேன். இதோ ஒரு காட்சி … கமல் சமையல் செய்துக்கொண்டு இருப்பார், ஸ்ரீதேவி கமலிடம் சுப்ரமணிக்கு (நாய் குட்டி) பொட்டு வைக்க ink bottle கேட்பார். ஸ்ரீதேவி தானாகவே ink bottle எடுக்க try பண்ணி, எல்லாத்தையும் போட்டு உடைப்பார். கமல் கடுப்பாகி திட்டி தீர்த்து விடுவார். சமயலும் சரிவராமல் தீய்ந்து போய் விட, கமல் திட்டோ திட்டு என்று திட்டி விட்டு, கடைக்கு சாப்பாடு வாங்க போய் விடுவார். கமல் வீட்டுக்கு வரும் நேரம் ஸ்ரீதேவி அங்கே இருக்க மாட்டார். அவரும் கோவத்தில் எங்கோ போய் இருப்பார். கமல் வீட்டை விட்டு வெளியே வந்து ஸ்ரீதேவியை தேடி தெருவில் நடப்பார், லேசான மழை தூறல் ... காடு, மேடு,எல்லா இடமும் தேடுவார். ஒளிப்பதிவு, படப்பிடிப்பு, location... இன்னும் ஒரு உலகத்திட்கு அழைத்து செல்லும்...அப்போது இசைஞானி அவர்களின் background score (BGM) காட்சிக்கு ஏட்ப, மனதை மிகவும் உருக்க வைக்கும் வயலின் வர்ணஜாலமாய் ஒலிக்கும் (1.02.00 -1.04.02). கமல் நடந்து வரும் போது எதேத்சையாய் ஒரு தெருப் பிள்ளையார் சிலையை பார்த்து கண் கலங்கி, மண்டியிட்டு தீபம் ஏற்றுவார் .. background music எதுவுமே இல்லாத ஒரு நிஷப்தம் .. total silence. கமல் தன் கண்களால் பல உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார் (ஏக்கம், சோகம், ஆற்றாமை,..) திரும்பவும் கமல் எழுந்து நடக்க இசை அவரை பின் தொடர... கண்ணீர் மட்டுமே என்னில் மிச்சம் .. உன்னத கலஞர்கள் பாலு மகேந்திரா, இசை ஞானி, கமல் சேர்ந்து அணு அணுவாய் செதுக்கிய கலை படைப்பு, இன்றும் கூட தொட முடியாத தூரத்தில் படமாக அல்ல பாடமாக இருக்கின்றது. இப்போது பாலு மகேந்திரா கூறிய வரிகளை நினைத்துப்பார்க்கிறேன்.. "எனது படங்களில் வரும் பிரக்ஞைப்பூர்வமான மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனதுஅர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசைகொண்டு அவர் கலைத்ததில்லை. That is my Raja !!! எவ்வளவு உண்மை ... https://www.youtube.com/watch?v=DZZlCfpa6ks
 8. கண்ணீர் அஞ்சலிகள் .. உன்னதக் கலைஞ்சர், இவரின் படைப்புகள் பல தசாப்தங்களுக்கு பேசப்படும். எங்களுக்காக குரல் கொடுத்தவர்... எங்களில் ஒருவர்.
 9. வணக்கம் தமிழ்சூரியன் அண்ணா, உங்கள் இசை அமைப்பில் தாயாகத்து எழுட்சிப் பாடல்களின் வாசனையும், உணர்வும் ஒருங்கே இருக்கின்றது. இதுவே ஒரு வெற்றி. என் மனத்தில் தோன்றும் சில கருத்துக்களை பதிகின்றேன். * இசைக் கோர்வையில் பயன்படுத்தி இருக்கும் வாத்தியக்கருவிகள் - குறிப்பாக வீணை, ஃப்லூட், நாதஸ்வரம், தபேலா சிறப்பாக இருக்கின்றது. * acoustic sounds மேலும் அழகு தரும் என நினைகின்றேன், அதட்கு அதிக நேரமும், பணமும் தேவை. * பாடகரின் குரலில் உணர்வு வெளிப்பாடு expression அருமை, ஒரு சில இடங்களில் குரலில் சாடையான பிசுரல் (1.23 - 1.28, 4.16 - 4.25) தென்பட்டது, சிலவேளைகளில் என்னுடைய computer speaker ஆகவும் இருக்கலாம். * பாடல் ஆரம்பிக்கும் போது வரும் ஆலாபனையோடு சேர்ந்த வரிகளில் (0.00 - 0.36) clarity கொஞ்சம் குறைவு. மற்றும்படி உங்கள் படைப்புக்கு ஒரு பச்சை certificate * அது சரி அந்த அறுசுவை வடை முறுக்கு video காட்சிக்கு பின்னர் வரும் (4.08) அழகு தேவதை யாரோ? * மீராபரதி என் பால்ய சினேகிதர்.
 10. வணக்கம் காவியன் இனி நீங்களும் தொடரலாம் காவியம் ...
 11. வணக்கம் சகோதரங்களே, மாவீரர் தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நாடகத்தின் ஒலி வடிவம். எழுத்து ஆக்கம் என் நண்பன், இளங்கோ மற்றும் நான். பின்னணி இசை கோர்வை - என் முதல் முயற்சி . பலவகையான இசை கோர்வைகளை இணைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் முயற்சி செய்தேன். உங்கள் காதுகளையும் எட்டவெனும் என்ற நோக்கில் இணைக்கின்றேன். இன் நாடகத்தில் ஒலி, ஒளி இரண்டும் கலந்து செய்துள்ளோம். இதை எழுதும் பொது தான் ஐ.நா அறிக்கை வெளிவந்தது அதனை அப்படியே இந்நாடகத்தில் உள்வாங்கி இசை வடிவம் கொடுத்தேன். உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வளப்படுத்தும் என நினைக்கின்றேன்.. மன்னிக்கவும் ... கோர்ப்பை இணக்க முடியாமல் உள்ளது. (file size - cannot attach file) நிர்வாகத்தின் உதவி தேவை..
 12. உண்மை தான் அர்ஜுன் அண்ணா, ஒவ்வொரு முறையும் இந்த சின்ன சின்ன கோவில்களை பார்க்கும் பொழுது ஒரு சமூக சிந்தனையோ அல்லது ஆன்மீகமோ குறித்து கவலை படாமல், ஒரு சிறு கைத்தொழில் தொடங்கும் பாவனையிலேயே நிறைய தெய்வ ஸ்தலங்கள் முளைக்கின்றன என எண்ணிக் கொள்வேன். என் மனைவி கத்தோலிக்க முறையில் வளர்ந்தவர் ஆனாலும் கோவில், விரதம் , நல்ல நாள் , பெருநாள் எல்லாம் விபரமாக கடைப்பிடிப்பார். நிறைய தடவைகள் அவரை நான் கோவிலுக்கு கூட்டிப்போக மனுசி கோவில் வாசல்ல நிண்டு, தாறு மாறாக குவிந்து கிடக்கும் செருப்பு, சப்பாத்துக்களை எடுத்து அடுக்கிக் கொண்டு இருப்பா. அவளுக்கு எல்லாம் நீட்டா, ஒர்கனைஸ்டா இருக்கவேணும். என்னட்ட அடிக்கடி கேட்க்கும் கேள்வி ஏனப்பா உங்கண்ட ஆட்கள் சப்பாத்துக்களை இப்படி வீசி எறிந்து விட்டு கோவிலுக்குள் போறார்கள் என்று தான்...
 13. தமிழரசு அண்ணா வாழ்த்துக்கள் .. இது ஒரு நிறைவான மைல் கல் தொடர்ச்சியாக எழுதுங்கள்
 14. நிர்வாகத்தினர் கவனத்திற்கு, மரத்தால் விழுந்தவரை எருமை மாடு ஏறி உலக்குவது போல சாக்கிளியின் sorry சாத்திரியின் கிசுகிசு உள்ளது. தயவு செய்து தணிக்கை செய்யவும்.
 15. என் நண்பன் ஒருவன் அனுப்பிய இணையதள முகவரி புகைப் படங்கள் அழகாக இருக்கின்றன. http://www.album2000.com/special/7865.html
 16. என்ன அர்ஜுன் ... நெல்சன் மாண்டேலா படத்தை profile-லில்- மாட்டிக்கொண்டு அடிமை மனநிலையில் கருத்து இடுகிறீர்களே. உங்களுடைய நல்ல கருத்துகளும் கூட எடுபடாமல் போவது இதனால் போலும்.. just my openion.. take it easy அண்ணா
 17. தனிமையில் இருந்து ஆழமாக யோசித்தால் ஏண்டா இந்த உலகத்தில் இருக்கிறோம் என்றும் தோன்றும் ...
 18. "தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே..." இந்த பாடலில் வரும் வயலின் இசை என் உயிரை பிசைந்து செல்லும் ... என் வாழ்வில் நான் சந்தித்த போராளிகள் முகங்கள் கணமாய், வெறுமையாய், மனதை பேதலிக்க வைக்கும்....
 19. நன்றி நிழலி, ஆத்தா..... நா பாசாயிட்டேனுன்னு கத்தனும் போல இருக்கு ஆனா முடியலையே ஆபீஸ் மனேஜர் உர்ர்ன்னு இருக்காரே ..
 20. மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரின் அன்பான வரவேற்புக்கும் பிரத்யோகமாக எழுதிய வரிகளுக்கும் நன்றிகள் பல.
 21. உண்மை தான் நண்பரே, மனதிலே தமிழை சுமக்கும் எனக்கு பெயரிலே தமிழ் சுமக்க தெரிய வில்லை ... பொருத்தருள்க. உங்கள் அனைவரின் அன்பான வரவேற்புக்கு நன்றிகள் பல.
 22. உங்கள் அனைவரிற்கும் அன்பு வணக்கங்கள், சசி_வர்ணம் இவன். தமிழ் ஆர்வம் கொண்டவன், தேசியம் பற்றிய சிந்தனை கொண்டவன், இசையை நேசிப்பவன், இணைய தளத்தில் சந்தித்து காதலித்து திருமணம் புறிந்தவன்.. ஆதலினால் 3 அழகிய குழந்தைகளுக்கு தகப்பன். சுமார் 5 ஆண்டுகளாக யாழ் களத்தில் உங்கள் அற்புத கருத்துகளையும் , சிலர் அதி மேதாவி திரிப்புகளையும் வாசித்து வருபவன். உங்கள் கருத்து வளையில் எதோ ஒரு வகையில் என்றோ இணைந்தவன். என்றென்றும் தமிழுடன்.. சசி_வர்ணம்