Sasi_varnam

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,132
 • Joined

 • Last visited

 • Days Won

  12

Everything posted by Sasi_varnam

 1. அருகிலிருந்த சோபாவில்... அமர்ந்தான். சியாமளாவும் அவன் அணைப்பில் இருந்து நாணத்தோடு விலகிக்கொண்டு, வெங்கடேஸ் நான் இன்னிக்கி உங்களுக்கு பிடித்த செட்டி நாட்டு மீன் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் எல்லாம் செய்து வைத்திருக்கிறேன் இன்னைக்கி எங்கயும் போக வேண்டாமே.. உங்ககூட நிறைய பேசணும் என்று சிணுங்கினாள்.
 2. அலைபாயும் தன் மனதை நினைக்க நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. ஒருபுறம் புதிதாய் திருமணம் செய்து முற்றும் புரிந்து கொள்ள முடியா கணவன் வெங்கடேஸ், மறுபுறம் திருமணமாகி பிளாட்டுக்கு குடியேறி வந்த தினத்தில் இருந்து தன் மேல் அன்பை அள்ளிப்பொழியும் ரங்கராஜன் அங்கிள், பள்ளியில் மூன்றே மாதங்கள் அவசர அவசரமாய் காதலித்த கோபி, இவர்கள் மூவர் நினைப்பில் சியாமளா மனது அள்ளாடியது.
 3. தொடரியில் இது வரை ... ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது.. வீதியில் வேகமாக வந்த கார் ஒன்று... அங்கு தேங்கி நின்ற, சேற்று தண்ணீரை... வயதான மூதாட்டி மேல் அடித்து விட்டு போகும் போது... அதைப் பார்த்த இரு இளைஞர்கள்.. சிகரெட் பிடித்தார்கள். "ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம்" "செய்திகள் வாசிப்பது சுவாமிநாதன்" என்று சத்தமாக வானொலி ஒலித்தது. மழை இன்னும் விட்டபாடில்லை மெல்லிய இருளும் படர ஆரம்பித்தது. தெருவிளக்கு மின்னி மின்னி... மறைய சியாமளா மீண்டும் வீட்டிற்குள் வந்தாள். ஆனால் வீட்டின் உள்ளே கருப்பு நிறத்தில் ஒரு உருவம் தெரிவது போல உணர்ந்தாள். வீதியில் கண்ட வயதான மூதாட்டி மனதுக்குள் .. மனதுக்குள்... காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது இனி எப்ப ஆட்டு எலும்பை நச் என்று கடிப்பது என நினைத்தவாறு 21 வயதான சியாமளாவை ஏக்கத்துடன் பக்கத்துக்கு வீட்டு ரிட்டையர்டு அங்கிள் ரங்கராஜன் கண்களால் கைது செய்தார். தொடர்ந்தும் மழை மழை பெய்ததை ... வெறுத்த ரங்கராஜன் அங்கிள், சியாமளா... வீட்டிற்கு போக... ஆயத்தம் பண்ணியபோது...
 4. பக்கத்துக்கு வீட்டு ரிட்டையர்டு அங்கிள் ரங்கராஜன் கண்களால் கைது செய்தார். தொடர்ந்தும் மழை
 5. தெரிவது போல உணர்ந்தாள். வீதியில் கண்ட வயதான மூதாட்டி மனதுக்குள் ..
 6. ம்ம்ம் டொரோண்டோவில் நாளை "ப்ரைட் வீக்" அதற்கு முத்தாய்ப்பாய் சகாறா அக்காவின் இந்த குறுங்கதை. இன்று பச்சைக்கு தட்டுப்பாடு நாளை
 7. சிகரெட் பிடித்தார்கள். "ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம்"
 8. சரி தொடர்ந்தும் நித்திரை கொண்டு இருக்க முடியாது, இப்படி ஏதாவது ஒன்றை ஆரம்பித்தால் தான் ஊரு சனத்தை அடிக்கடி இங்கே காணலாம்... இதோ ஒரு போட்டி மாதிரி ஒன்று உங்கள் தமிழ் வார்த்தை, வசன ஜாலத்தை வெளிக்கொண்டு வருவதற்கு, ஒருவர் ஒரு தமிழ் வசனத்தை ஆரம்பித்து, அதை முடிக்காமல் இடைநடுவில் தொங்கவிட.. அடுத்து வருபவர், அந்த வசனத்தை பொருள் பட முடித்து வைத்து, புதிதாக ஒரு வசனத்தை ஆரம்பித்து இடை நடுவில் தொங்கவிட...அடுத்து வருபவர் முடித்து வைத்து, தொங்க விட....இப்படியே "தொடரி" இது ஒரு தொடர் கதையாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. சுவராஸ்யமாகவும், துணுக்காகவும், தொடரலாம். உதாரணமாக... ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது... (தமிழினி தொடங்கிய வசனம் முற்றுப்பெறாமல் இடையில் நிற்க ) வீதியில் வேகமாக வந்த கார் ஒன்று... அங்கு தேங்கி நின்ற, சேற்று தண்ணீரை... வயதான மூதாட்டி மேல் அடித்து விட்டு போகும் போது... அதைப் பார்த்த இரு இளைஞர்கள்... (தமிழ்சிறி வசனத்திற்கு முடித்து ...மீள புதிதாக ஒன்றை ஆரம்பித்து அது இடையில் நிற்க) சிகரெட் பிடித்தார்கள். "ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம்".. (சசி அதை முடித்து வைத்து புதிதாக ஒரு வசனத்தை ஆரம்பித்து தொங்கவிட) ... நாயர் கடை ரேடியோ அலறியது... இப்படியும் போகலாம்.. எழுதுபவர்கள், தொங்கி நிற்கும் வசனத்தை பூரணப்படுத்தி, புதிய வசனத்தை சிறிதாக எழுதினால் எப்படி இருக்கும்? உங்கள் கருத்தை அறிய ஆவல்... ஏனென்றால் ஒருவர் கோர்வையாக எழுதிய வசனத்தை இன்னும் ஒருவர் நிறைவுக்கு கொண்டு வருவது அவரது கற்பனையை சுருக்கும். சிறிதாக எழுதிய வார்த்தைகளுக்கு பல வடிவங்களை கொடுக்கலாம். தொடர்ந்தும் எழுத வசதியாக இருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை மெருகேற்றி சுவாரஸ்யமாக கொண்டு போவது உங்கள் கையில்...
 9. தனியார்மய கம்பனிகள் , கார்ப்பரேட் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் இவற்றுக்கெல்லாம் "ombudsman office " இது ஒரு சிம்மசொப்பன வார்த்தை. ஒரு நுகர்வாளனாக, வாடிக்கையாளராக உங்கள் பிரச்சினைகளை சம்பத்தப்பட்ட நிறுவனங்கள் கவனம் எடுக்காதவறினால் அல்லது நீங்கள் அநீதியான முறையில் நடத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தாலோ, அல்லது உங்கள் முறைப்பாடுகள் சரியாக தீர்க்கப்படாவிட்டாலோ நீங்கள் அடுத்த கட்டமாக அணுகவேண்டிய நிர்வாக அமைப்பு தான் இந்த "ombudsman office". பொதுவாக நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் "ombudsman office" ஐ அணுகுவதை சற்றும் விரும்ப மாட்டார்கள். தீர்க்கப்படாத பிணக்குகளை கூட அலறி அடித்துக்கொண்டு தீர்த்து தருவார்கள். இப்படி தீர்க்கப்பட்ட கதைகள் ஏராளம். காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள், விமான சேவைகள், அணைத்து அரச சேவைகள்...
 10. ரதி உந்த பிஞ்ச செருப்பால அடிப்பது கொஞ்சம் ஓவரா தெரியல்லியா...
 11. விவரம் அறிந்தவர்கள் படங்களிலே தலைவரோடு இருப்பவர்கள், மற்றும் போராளிகளின் பெயர்களையும் எழுதினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
 12. பாஞ்ச் அண்ணாவின் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
 13. அவரை வெளியே எடுப்பதற்கான சட்ட உதவிகள் குறித்து பண உதவிகள் எதுவும் கோரப்படுகின்றனவா?
 14. ம்ம்ம் நிவாரணப் பொருட்களை கொண்டுபோய் யாரிண்டையோ வீட்டு குசினிக்கு பதுக்க வெளிக்கிட்டு இருக்கிறாங்கள் , ஆபரேஷன் சக்ஸஸ் புள்ளு .. பட் த ஹெலிகப்பட்டரு டைட்டு...
 15. அனாதரவாக்கப்பட்டு அடையாளமின்றி அழிக்கப்பட மக்களுக்கும் கொண்ட கொள்கை தளரவிடாது போராடி ஆஃகு தீயாகிய எங்கள் காவல் தெய்வங்கள் அனைத்துக்கும் கண்ணீர் அஞ்சலிகள்... 8 வருடங்களுக்கு முன்னர்... இதேமாதிரியான ஒரு நாளில் டொரோண்டோ நகர வீதிகளில் நாளும் பொழுதுமாய், நடைப்பிணமாய் , மனசு பேதலிக்க, கையாலாகாதவராய், அனைத்தும் இழந்து, நிர்கதியாய் தொலைந்து போனோமே...
 16. அபலைப் பெண்களை வைத்து காசு பார்க்கும் கயவர்கள் தப்பிவிடுவார்கள் ... அவர்கள் எதிர் நோக்கும் வாழ்க்கை போராட்டத்தை புகைப்படங்கள் காட்டி நிட்கிறது. இவர்களின் படங்களை போட்டு விளம்பரம் தேடும் பத்திரிகையாளர்கள் சிந்திப்பார்களா?
 17. ஐயோ கடவுளே.... "வல்வையின் 50 ஆவது இந்திரவிழா" தலைப்பை பார்த்து நான் கூட வல்வை அக்காவுக்கு 50 வயது பிறந்த நாள் விழாவைப்பற்றிய திரி என்றல்லவா நினைத்தேன்...
 18. சம்மந்தரோ,சுமத்திரனோ எமது மக்களுக்காக எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை. ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை என்டதையும் ஏற்க வேண்டும். என்ன ரதி; முன்னுக்குப்பின் முரணாக அல்லவா எழுதுகிறீர்கள்! அவர்கள் எதையும் செய்ததில்லை,இனி மேல் செய்யப் போறதும் இல்லை... ஆனால் அவர்களை விட்டால் வேற ஒருத்தரும் இல்லை... முதலில் அவர்களை விட்டால் வேறு ஒருத்தரும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து மீள் வருவோம். அவர்களை காவாந்து பண்ணும் வேலையை விட்டொழிப்போம். தாயகத்தில் உள்ள புதியவர்கள், இளையவர்கள் தமிழ் அரசியலுக்குள் பிரவேசிப்பதை ஆதரிப்போம்.
 19. அன்பின் தமிழ் சிறி அண்ணா, இம்மாதிரியான அரிதான புகைப்படங்களை தேடி இணைக்கும் உங்கள் முயற்சிக்கு, கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு, தமிழ் வம்சத்தின் ஒரே வெளிச்சம், தமிழினத்தின் மொத்த குறியீடு ... எம் தலைவர் அவர்களின் புகைப்படங்களை பார்க்கும் போது மனதில் அறியாமலேயே ஒரு பூரிப்பு, பெருமிதம் வந்து போகின்றது. அவர் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பதே வரம்.
 20. அழகான எழுத்து உங்கள் உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கிறது நிழலி. 2009 பின்னரான எனது பயணங்களில், வவுனியா தாண்டியதுடன் வரும் காடுகளையும் , கிராமங்களையும் கடக்கும் போது இதே உணர்வு தான் ஏற்பட்டது நிழலி. நெஞ்சிலே அமிலம் கரையும்... மூச்சு கூட தொண்டையில் அடைக்கும்... என்ன மயிருக்கு இன்னும் உயிர் வாழுகிறோம் என்று கூட நினைப்பு வரும்... அதே யாழ்ப்பாணத்தில் இருக்கும் சொந்தங்கள், அயலவர்கள் இப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதை போல இருப்பதை பார்க்க... எண்ணத்தை சொல்ல.
 21. யோவ் யாருய்யா சொன்னா.... சிறுபிள்ளை வெளாண்மை வீடு வந்து சேராதுன்னு " இது அடி வயிறு வரைக்குமில்லையா வந்திருக்குது ...
 22. உங்கள் மனதில் இருக்கும் வலியை நீங்கள் ஆசுவாசப்படுத்த "....மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....." நெத்தியடி புத்தன்... தொடரட்டும் இந்த "கருக்களால் நிறைந்த கிறுக்கல் "
 23. நாள் தவறாமல் பல பலனுள்ள இணைப்புக்களை இணைக்கும் நவீனனுக்கு வாழ்த்துக்கள். மேலும் பச்சை பச்சையாய் ...என் வாய்க்கு வந்தபடி உங்களை வாழ்த்தி தள்ளலாம்.. பாவம் என்று விட்டு விடுகிறேன்... Keep it up Brother