யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,175
 • Joined

 • Last visited

 • Days Won

  12

Sasi_varnam last won the day on January 5 2016

Sasi_varnam had the most liked content!

Community Reputation

789 பிரகாசம்

About Sasi_varnam

 • Rank
  Advanced Member
 • Birthday October 18

Profile Information

 • Gender
  Male
 • Location
  Toronto
 • Interests
  இசை, ஓவியம், அமைதி
 1. நன்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு கு.சா அண்ணா. நான் மேலே எழுதிய விடயத்தில் "பையனின் சமூகம்" என்ற அந்த விடயம் பெரிதாக அலட்டிக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. நாம் அனைவரும் தமிழர் அது ஒன்று தான் நிஜம். அவர்கள் தங்கள் உற்றாரினதும் , ஊராரினதும் சூடு சொல்லுக்குத்தான் பயப்படுகிறார்கள் போல தெரிகிறது. அதனையும் விட முக்கியமான விடயம் மகளின் வயது இன்னும் 18ஐ கூட தாண்டவில்லை என்ற பயமும், என்ன ஆகும், ஏதாகும் என்ற கவலையும் தான் மேலோங்கி நிட்கிறது.
 2. அன்புள்ள அப்பா, அம்மா ... இந்தா ஒரு அவஸ்தை , . எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு உறவினர் வீட்டில் ஒரு துன்பகரமான சம்பவம். நிகழ்வு அவர்களின் குடும்ப வாழ்க்கையை சூறாவளியாய் சுழட்டி அடிக்கிறது. என்னிடம் துன்பத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்... என்ன செய்யலாம் என்றும் ஆலோசனை கேட்டு இருக்கிறார். நானும் எனது யாழ்களத்து சொந்தங்கள் உங்களிடம் இதை பகிறுகின்றேன். உங்கள் அனுபவங்கள், மன முதிர்வுகளினூடாக வெளிப்படும் கருத்துகளில் நல்லவற்றை அவரிடம் பரிந்துரைக்க நினைக்கின்றேன். உறவு யாழ்ப்பாணத்தில்தான் வாசிக்கின்றார். 2 மகள்கள். மூத்தவள் வயது 22, இளையவளுக்கு இன்னும் மூன்று மாதங்களில் 18 வயது ஆகும். உறவு சுமாரான ஒரு தொழிலில் வாழ்க்கையை செவ்வனே கொண்டு நடத்துகின்றார். அவரின் மனைவி காலை, மாலை, இரவு, கோயில் , பூசை, அர்ச்சனை , விரதம், இதுவே அவரின் நாளாந்த வாழ்வு. ஒட்டு மொத்தத்தில் சூது வஞ்சகம் தெரியாத, மற்றவர் சோலி சுரட்டுக்கு போகாத பெற்றார்கள் இந்த இருவரும். அப்போ, அப்போ நானும் உதவிக்கு தேவை படும் பொழுது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கொஞ்ச பண உதவிகள் செய்வதுண்டு. சரி சம்பவத்துக்கு வருவோம். இரண்டாவது மகள் (<18) கடந்த ஒரு வருடமாக ஒரு பையனுடன் காதல். படிப்பில் கவனம் குறைந்து O /L பரீட்சசையில் பெரியபடியாக நல்ல புள்ளிகள் எடுக்காத நிலை. குறிப்பிட்ட பையன் இன்னும் 20 வயதையும் தாண்டவில்லை. படிப்பிலும் நாட்டமில்லை. தவிர பையன் வேற்று மதத்தையும், சமூகத்தையும் சார்ந்தவராம். (இதை இங்கே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும் - நான் மேலே சொன்ன சூறாவளிக்கு இதுவும் ஒரு காரணம்) அரசல் புரசலாக இந்த விவரம் தெரிய வர பல முறை இது குறித்து குடும்பத்தில் விவாதங்கள், இது தொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன. கண்காணிப்புகள் , தடைகள் என்பதையும் தாண்டி இருவரின் காவிய காதல் தொடர்புகள் தொடந்து உள்ளன. பையன் 2, 3 கைத்தொலைபேசியை பல சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒருவகையில் இந்த பிள்ளையிடம் கொடுத்து அதன் மூலம் அன்றாடம் கதைத்து, பேசி "டெக்ஸ்ட்டித்து" வந்துள்ளான். தகப்பன் கஷ்டப்பட்டு வேலை வேலை என்று திரிய , தாயும் பக்தி மார்க்கத்தில் திரிய வீட்டில் தேவையான கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் காதலும் வரம்பு மீறி வளர்ந்திருக்கிறது. மூத்தமகளும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் , எதுவுமே காதில் எடுக்காத பட்சத்தில் ஒரேயடியாக தங்கையுடன் கதைப்பதையும் கூட தவிர்த்து விட்டாள். பெரியப்பாமார், சித்திமார், மாமாமார் , அப்பம்மா இப்படி நீண்ட பட்டியல் அவளுக்கு எத்தனையோ நல்ல புத்திமதிகளை எடுத்து சொல்லியும் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் 3 கைத்தொலைபேசிகளும் பறிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அடி, உதை கொடுக்கப்பட்டு, கொழும்புக்கும் ஊரு கடத்தப்பட்டு... ஆவண எல்லாம் செய்யப்பட்டு ... இந்த காதல் மட்டும் அகோரமாக வளர்ந்த நிலையில் ... ஓரிரு கிழமைக்கு முன்னர் இந்த பிள்ளை வீட்டை விட்டு உடுத்த உடுப்போடு திரும்பியும் பார்க்காமல் அந்த பையனோடு ஓடியே போய்விட்டாள்!!! இது நடந்தது யாழ்ப்பாணத்தில். கையிலே அடையாள அட்டை கூட இல்லாமல் ... எல்லா இடத்தில தேடியும் 6,7 நாட்களாக பிள்ளை இன்னும் அகப்படவில்லை. போலீசிலும் முறைப்பாடு செய்து , கொஞ்ச பணத்தையும் செலவு செய்து ஒரு மாதிரியாக இருவரையும் பிடித்து விட்டார்கள். பையனுக்கு 18 வயதுக்கு மேல் என்ற படியால் அவனை ஒன்றுமே செய்யாது வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். பிள்ளையை ஒரு சிறுவர் சீர்திருத்த அமைப்பு ஒன்றில் கொண்டு போய் விட்டு இருக்கிறார்கள். அதுவும் அரச பாதுகாப்பான ஒரு அமைப்பு என்றும் கேள்வி. சரி நடந்தது என்ன..... இந்த பிள்ளை அங்கும் கூட ஒரு கை தொலைபேசியை களவாக எடுத்துச்சென்று அந்த பையனுடன் தொடர்பை ஏற்படுத்தி கச்சிதமான ஒரு திட்டம் வகுத்து மூன்றே நாளில் அந்த இடத்துக்கும் டாட்டா காட்டி விட்டு ஓடி போய் இருக்கிறாள்.!!! ஏற்கனவே நடைப்பிணம் போல் இருந்த குடும்பம் இன்றைய நிலையில் தவிடு பொடியாக இருப்பதை போல சூழ்நிலை. நடந்த சம்பவங்களை என்னால் கட்பனை செய்துகூடவும் பார்க்கமுடியாமல் இருந்தது. அந்த பிள்ளையின் முகத்தில் இன்னுமே அந்த பருவத்துக்கான கலை வரவில்லை. மாறாக ஒரு பதின்ம வயது பிள்ளையை போலத்தான் இருப்பாள். சரியாக தேனீர் கூட வைக்க தெரியாதாம் என்று வேறு கதை. இப்போது திரும்பவும் போலீஸ் அவர்கள் இருவரையும் தேடுகிறார்கள். குடும்பம் கண்ணீரில் தள்ளாடுகிறது. நானும் எனக்கு தெரிந்த சில ஆறுதல்களை அறிவுரைகளை சொல்லி இருக்கிறேன். தவிர; இதுபோன்று பல நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் நிகழ்வதாகவும் தகவல். கைத்தொலைபேசி பாவனையும் இதற்கு முக்கிய ஒரு காரணம் என்றும் கேள்விப்படுகிறேன். சரி நீங்கள் என்னதான் அந்த குடும்பத்துக்கு சொல்ல நினைப்பீர்கள் ? இப்படியான கலாச்சார சீரழிவுகளை எப்படித்தான் தடுக்கலாம் ... கேட்க ஆவலாக இருக்கிறேன்.
 3. அப்பொத்துக்கரி (டச்சு ) ஆஸ்பத்திரி கந்தோர் லாச்சி (டச்சு) அருதாப்பில் (டச்சு) சப்பாத்து (போர்த்துகீசு) பெரக்கதொரு - (வக்கீல்) ஒசக்க (முஸ்லீம்) பணிய (முஸ்லீம்) ஜாதீ (முஸ்லீம்) (B )போக்கு கான் சட்டி /முட்டி பொஸ்தகம் பெருநாள் (முஸ்லீம்) மொடக்கு தலையிடி (யாழ்ப்பாணம்) / தலைவலி (மலையகம்/இந்தியா) மாடு இடிக்கும் (யாழ்ப்பாணம் ) / மாடு முட்டும் (மலையகம் /இந்தியா) போட்டு வாறன் (யாழ்ப்பாணம்) / போயிட்டு வாரேன் (மலையகம் /இந்தியா) பெய்த்து வாரேன் (முஸ்லீம்) சொல்லி (தமிழ் ) / செல்லி (முஸ்லீம்) பொட்ட சான்ஸ் (முஸ்லீம்) - அதிஸ்டவசம் ஊருபளாய் (முஸ்லீம்) - வெட்டிப்பேச்சு / கிசுகிசு கிச்சி கொளுத்துறான் (முஸ்லீம்) - கூச்சம் காட்டுறான் ஹராங்குட்டி (முஸ்லீம்) - கேவலம்கெட்டது ஜுவால் (முஸ்லீம்) - கோபம் குருட்டான் வாக்கில (முஸ்லீம்) - எதிர்பாராவிதம் தாய்புள்ள (முஸ்லீம்) - சொந்தங்கள் மொந்து பாரு (முஸ்லீம்) - முகர்ந்து பார் ஆணம் (முஸ்லீம்) - குழம்பு கந்தூரி (முஸ்லீம்) - விருந்து ஆத்தள் (முஸ்லீம் / சிங்களம்) - அம்பானாக்கி (முஸ்லீம்/ சிங்களம்) - முறையாக
 4. போக்கிலி பொருக்கி சீளம்பாய் அம்மாவான விளங்கேல்ல புண்ணாக்கு நெடுகிலும் பெட்டையள் டக்கெண்டு காணும் விடாய் (மாதவிடாய் ???) பண்ணாடை சுவாத்தியம் புக்கை எடுபட்டவன் போக்கிலி அவையள் /இவையள் உங்கண்ட /எங்கண்ட தொலைக்கோ போட்டு வாறன் வாருமன் /போமன் /இருமன் சுழட்டுறான் வீழ்தீட்டன் மடக்கிட்டான் சொறி சேட்டை கழிசடை காவாலி புறுபுறுக்குறான் கொதியன் கெதியா பெரிய எண்ணம்
 5. இது போல கீழே உள்ள சொற்களும் நான் யாழ்ப்பாணம் சென்ற பின்னர் கற்றுக்கொண்ட சொல்லாடல்கள். பேந்து - பிறகு சவம் - கேவலம் சவத்தை - கேவலத்தை பனி பிடிச்சிட்டுது - சரக்கு - விசர் - விசுக்கோத்து - வாச்சுது - சேர்ந்தது வலசு - சோடாமூடி - அடிசரக்கு - விபச்சாரி கம்பி - தன்னின சேர்க்கை சிங்கன் - மாதா - ஏமாற்று பேர்வழி பேய்க்காய் - கெட்டிக்காரன் வம்பில பிறந்தது - ? விண்ணானம் - வெள்ளி பார்க்குது -
 6. இது தான் கால காலமாக இங்கே நடக்கிறது ... எவ்வளவு தான் அனுபவ அடிப்படையிலோ , அல்லது கள நிலவர உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலோ யதார்த்தத்தை சொன்னாலும் புரியாது. அந்த பக்குவ நிலை இன்னும் வரவில்லை... வளரவில்லை.
 7. கருத்து எழுதுவதற்கு முதல் போதையில் இருந்து வெளியே வாங்க பாஸ். இதெல்லாம் கண்ணுக்கு தெரியவேணுமோ அதை எல்லாம் தாண்டி ...பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு என்று எழுதினீர்கள் பாருங்கள் அங்கே தெரிகிறது உங்கள் "இண்டெர்லேக்ட்" தராதரம்...
 8. லெப்பை ஒருவர் துவா கேட்டு ஓதி, கிண்ணம் ஒன்றில் தண்ணீரை தந்து அதில் ஒரு ஆணியையும் போட்டு மருந்தாக குடிக்கச்சொல்லுவார். எங்கள் வீட்டில் இது தான் முதல் மருந்து... 7ஆம் நம்பர் வீட்டில் இருந்த எங்களுக்கு, 4 ஆம் வீட்டில் இருந்த லெப்பை தான் ஆசான் , மருத்துவன் , நல்வழிகாட்டி எப்படி எல்லாமே .
 9. சும்மா சும்மா நம்மவர்கள் "அரேபிசத்தை" இஸ்லாமாக காட்ட முனைபவர் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதை பார்க்க கவலையாக உள்ளது. நானும் இஸ்லாம் மதத்து மக்களோடு பின்னிப்பிணைந்து, பள்ளி சென்று, அவர்கள் வீட்டில் படுத்து உருண்டு, ஒரே தட்டில் சாப்பிட்டு , அவர்கள் பெண் பிள்ளைகளோடு ஒரே கட்டிலில் தூங்கி எழும்பியவன் தான் (சின்ன வயதில்) . குரானை ஓரளவுக்கு வாசிக்கும் தேர்ச்சியும் , ஸலவாத்து , கிராத் , துவா , ஹதீஸ் இப்படி எல்லாவற்றையும் சின்ன வயதில் கற்றவன் தான். அன்றைய முஸ்லீம்கள் தமிழில் ஆர்வம் கொண்டவர்கள், கோயில் திருவிழாவுக்கு வருபவர்கள், வில்லுப்பாட்டும் பார்த்து ரசிப்பவர்கள், காவடி ஆட்டத்திற்கு கைதட்டுபவர்கள், எங்கள் வீட்டு சமையல் கட்டில் அவர்கள் வீட்டு கறியை வைத்து சமைப்பவர்கள்... அவர்கள் வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் எங்கள் வீட்டில் வந்து குளிப்பவர்கள்... எம்மை போலவே அழகாக உடை அணிந்தவர்கள் ... தேவரின் திருவருள் படத்தையும், பழைய தசாவதாரம் படத்தையும் 5 முறை பார்த்து கைதட்டியவர்கள், வெசாக் கூடு தங்கள் வீட்டிலும் கட்டி அழகு பார்த்தவர்கள்... என்ன கொஞ்ச கொஞ்சமாக சவூதிக்கும், குவைத்துக்கும் வேலைக்கு போன பணிப்பெண்கள் திரும்பி வரும் பொழுது முக்காடையும் , முழு நீல மக்க்ஷி ஆடையும் அறிமுகப்படுத்தி....காலப்போக்கில் எதோ முழுமையாக அரேபியனை போல ஹிஜாப் ,நிக்காப், பர்தா, அபாயா அணிவது வரையிலும் வந்து நிக்கிறது. இது இஸ்லாம் அல்ல.... இது "அரேபிஷம்" எனும் விஷம். இது ஒரு குறிப்பிட்ட தேசத்து மக்களின் ஆடை!! அரேபியர்களை எதோ மேல்சாதி காரன் என்றும், தாங்கள் எதோ அவர்களை விட குறைந்தவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் கொஞ்ச கொஞ்சமாக தங்களை மாற்றிக்கொண்டு "படம் காட்ட" நினைத்த மக்களின் மடைமை இன்று அவர்களை அதி தீவிர மதவாதிகளாய் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. ஆகா மொத்தத்தில் அன்றைய நாட்களில், இலங்கை முஸ்லீம்கள் இயல்பாக இப்படி இருந்ததில்லை... ஆகையினால் சொல்கிறேன் ... இஸ்லாத்தில் இல்லாத கண்றாவியை கடன் வாங்கி "படம் காட்டுபவர்களுக்கு" யாரும் கவலை கொள்ள தேவை இல்லை. எது எப்படியோ... தமிழன் சந்து பொந்தெல்லாம் புகுந்து தான் நடுநிலைவாதி என்பதை நிலை நாட்டுவான்... தன் இனம் நாடு ரோட்டில் தவிப்பது கண்ணுக்கு தெரியாமல்... யா அல்லாஹ் நான் என்னத்தை செல்ல!!!
 10. “நாகவிகரையில்பூசை நடந்ததாம்ரூபவாகினி சொல்லிற்று..இனி என்ன?“காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும்! சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும்! புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும்! சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா? எழலாம். வெசாக் கால வெளிச்சக் கூட்டை எங்கே கட்டுவார்? ஏன் இடமாயில்லை? வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம்,முனியப்பர் கோவில்முன்றலிலும் கட்டலாம்,பெருமாள் கோவில் தேரிலும்பிள்ளையார் கோவில்மதிலிலும் கட்டலாம்!எவர் போய் ஏனென்று கேட்பீர்?முற்ற வெளியில்“தினகரன் விழாவும்”காசிப்பிள்ளை அரங்கில்களியாட்ட விழாவும் நடைபெறலாம்!நாகவிகாரையிலிருந்துநயினாதீவுக்குபாதயத்திரை போகும்!பிரித் ஓதும் சத்தம்செம்மணி தாண்டிவந்துகாதில் விழும்!ஆரியகுளத்துதாமரைப் பூவிற்குஅடித்தது யோகம்!பீக்குளாத்து பூக்களும்பூசைக்கு போகும்!நல்லூர் மணி துருப்பிடித்துப்போக நாகவிகாரை மணியசையும்! ஒரு மெழுகுவர்த்திக்காக புனித யாகப்பர் காத்துக்கிடக்க ஆரியகுளத்தில் ஆயிரம் விளக்குகள் சுடரும்! எம்மினத்தின் இளைய தலைமுறையே, கண் திறக்காது கிடகின்றாய். பகைவன் உன் வேரையும் விழுதையும் வெட்டி மொட்டை மரமாக்கி விட்டான்! -தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை https://www.thaarakam.com/2019/05/02/கவிஞர்-புதுவை-இரத்தினதுர/
 11. கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம் கொழும்பான் ...இந்த தலையங்கம் நீங்கலாக கொடுத்ததோ என்னை கேட்டால் அப்படி ஒன்றும் "மிக மோசமான இனவாத பிரசுரம்" போல தெரியவில்லை. எங்கள் இனத்து பெண் பிள்ளைகளை கடத்திச்சென்று .. கட்டாய , மிரட்டல் பாணியில் கல்யாணம் செய்து.., மிகவும் நயவஞ்சகமான முறையில் தற்கொலை குண்டுதாரியாய் மாற்றி.. குடும்பத்தையும் ,நாட்டையும் சின்னாபின்னமாக்கி .... இதை எப்படியாம் எழுதுவீர்கள்...
 12. முஸ்லீம்களுக்கு "ஹலால்" பண்டங்கள் போல தமிழர்களும் "அரோஹரா" என்ற ஒரு புது கப்ஸாவை உருவாக்கி நம் வியாபாரங்களை ஊக்குவிக்கலாம். "அரோஹரா வெங்காயம் " "அரோஹரா கருப்பட்டி" "அரோஹரா மண்ணெண்ணெய் " ஆகா... கேட்கவே வாய் மணக்கிறது..
 13. பறக்காத கிளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் முயற்சி
 14. உண்மையில் அப்படி ஒரு நிலை ஈழத்தில் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். "மகாத்மா" காந்தியின் வார்த்தைகளை போலல்லாது செயல் வடிவில் நிறைய விடயங்களை செய்து காட்டியவர்கள் அவர்கள். தியாகம் உங்களுக்கு "வார்த்தை" .... அவர்களுக்கு அது "வாழ்க்கை"