Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1642
 • Joined

 • Last visited

 • Days Won

  12

Everything posted by Sasi_varnam

 1. தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினம் இன்று. 10.01.1924 - 06.01.2010 தமிழர் வீரத்தின், தியாகத்தின் இலக்கணத்தை விதைத்தவரே உம்மை வணங்குகின்றோம். வீர வணக்கங்கள் ஐயா. https://imgur.com/3EFbTT1
 2. அதி சிறப்பான பதிவுகள் நன்னிச்சோழன்
 3. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான திரு. பீற்றர் இளஞ்செழியன், மர்ம குழு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தார். கடந்த 11.12.2021 அன்று மாலை முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற இச் சம்பவத்தில் முகத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தாடை எலும்பு முறிந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக இவரது குடும்பத்தினர் முல்லைத்தீவு போலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். https://www.thamizharkural.site/பீற்றர்-இளஞ்செழியன்-மீது/
 4. மிகவும் துயரமான செய்தி இ இந்த இழப்பை தாங்கும் வலிமையை விசுகு அண்ணா குடும்பத்திற்கு கொடுக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
 5. உயிருள்ளவரை மறவோம் உம்மை.. கண்மணிகளே வீரவணக்கம்
 6. வாட்சப்பில் வரும் எல்லா செய்தி, படங்கள், கருத்துகளையும் யாழில் பதிந்தால் சர்வர் தாங்காது. பழைய பட சர்வர் சுந்தரம் ரீல்ஸ் போல இங்கே நம்ம "சர்வர் அந்துறும்"
 7. சுமந்திரனின் உரை இங்கே உள்ளது. ஆகா மொத்தத்தில் நிகழ்ச்சியின் கேள்வி பதில் நெருங்கும் போது தான் இந்த குழப்பங்கள் உருவாகி உள்ளது. அங்கே நிகழ்ச்சியை எதிர்த்தவர்கள் நடந்து கொண்டவிதம் குறித்து எனக்கும் கேள்விகள், கருத்துகள் இருக்கின்றது. ஆனாலும், இதை ஒன்றும் ஜனநாயக விரோத செயலாக பார்க்கமுடியாது. அதே நேரம் மார்தட்டி பாராட்டவும் முடியாது. வெறுமனே எதிர்ப்பை மட்டுமே பார்க்கும் எமக்கு இந்த நிகழ்வுகளின் புற, அக சூழ்நிலைகள் காய்நகர்த்தல்கள் பற்றிய தெளிவும் இல்லை. புலம்பெயர் தமிழர்களோ அல்லது தாயக தமிழர்களோ கூர்ந்து உங்கள் செயல்களை கண்காணிக்கிறார்கள், பொறுப்புகூறல்கள் உங்களுக்கு அவசியமானதாகிவிட்டது என்ற விடயங்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளதாகவே நான் பார்க்கிறேன்.
 8. இந்த வெள்ளநீர் வடிந்தோடி தேங்கி இருக்கும் இப்போதைய இடம் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய ஏரியாக இருந்த இடமாம். அதை மண்போட்டு நிரவித்தான் இந்த சிற்றூர் அமைக்கப்பட்டது.
 9. வாழ்த்துக்கள் ஏராளன், தேவையான பொழுது என்னுடைய பங்களிப்பும் நிச்சையம் உண்டு.
 10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார் ஜி
 11. ம்ம்ம்.. அப்டியே யாழ்களப் பக்கம் வந்தால்.. கூடவே ஒரு கொஞ்ச "அட்வைஸர்ஸ்" எடுத்திருக்கலாம்.
 12. எம் இளம்தலைமுறையின் ஆகச்சிறந்த படைப்பு. வரிகளை உள்வாங்கிக்கொள்வோம்.. மக்களிடையே கொண்டுசெல்வோம்.. படையொன் ஆல்பம் கூடிய சீக்கிரம் வெளிவரும் 14 பாடல்கள் கொண்ட இந்த இசை வெளியீட்டில் அனைத்தும் நம் போராட்டம் பற்றி பேசக்கூடியவையாக அமைத்துள்ளார்கள். பாடியவர்கள்ளே எழுதிய படைப்பு இரத்தி ஆதித்தன் மற்றும் எம்.சி சாய் காக்கை வன்னியன் காட்டி தந்தவன் திராவிட பலி தீர்க்க வந்தவன் ஆரியனுக்கு கொடி பிடித்தவன் திராவிட அடிவருடி இங்க நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் ஒருவன்
 13. 13ம் சீர்த்திருத்த சட்டம் கைவிடப்பட்டு, சமஸ்டி முறையிலான தீர்வு நோக்கியே நம்மவர்கள் பிரயாணிப்பார்கள் என எதிர்பார்ப்போம், அதுவே காலத்தின் தேவையும் கூட. இவ்வளவு இழப்பிட்கு பின்னரும் ஓட்டை சிரட்டையை கையில் ஏந்துவது உகந்ததல்ல.
 14. 16/11/1978 இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு நேர்காணல். தேம்ஸ் டெலிவிஷன்ஸ் ஜொனாதன் டிம்பிள்பி, இந்திய அரசியல் மற்றும் அவர் பிரதமராக இருந்தபோது பத்திரிகைகள் மீதான ஒடுக்குமுறை குறித்து திருமதி காந்தியிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்டார். திருமதி காந்தி எவ்வளவு லாவகமாக அவரின் பேட்டி காண்பவரின் குறுக்கு விசாரணை போன்ற கேள்விகளை கையாள்கிறார் பாருங்கள். Indira Gandhi Interview | TV Eye | 1978 https://youtu.be/q8aETK5pQR4
 15. ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்? எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் "இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை
 16. கமலா, கல்யாணி, வசந்தா வந்தாளாம் 3 னும் 3 பொண்ணுங்க ஒருத்தி BA ஆம் ஒருத்தி MA ஆம் ரெண்டையும் சேர்த்தாக்கா வருவது BAMA வாம் ஒரு தட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு அந்த 3க்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை
 17. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் தேசிக்காய், மிஞ்சி மிஞ்சு போனால் ஒரு விலாங்காய்... நீங்க முயல்குட்டி, குதிரை குட்டி என்று போறீங்களே... விஷயம் பெருஸ்..சா.. இருக்குமோ.
 18. ஓட்டம் ஓட்டம் என்று சொல்கிறீர்கள் சைக்கிள் ஓட்டம் எப்படி ? கொஞ்ச ஊர் பொடியன்கள் 4 , 5 பேர் செட் ஆகி சமர் நேரம் 10 கிலோமீட்டர் சைக்கிள் ஓடுவோம்... என்ன ஆளாளுக்கு கையில 4 பியர் கானையும் கொண்டல்லே வாறாங்கள்.
 19. ஓ ... அவசரமாக பார்க்கும் போது அதன் அமைப்பு, நிறம் இவற்றை வைத்து Trafalgar square என நினைத்துவிட்டேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி. இணையவன் பாரிஸ் என்று அறிந்தும் கொண்டேன்
 20. நல்லதொரு பதிவு இனியவன், பாராட்டுக்கள் !!! எப்படியோ தவறி இப்பொழுதுதான் கண்ணில் பட்டது. முழுவதுமாக இனிமேல் தான் வாசிக்கவேண்டும். நானும் லீக் தரத்தில் சொக்கர், கிரிக்கெட், வொலி பால் என்று 3ம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக ஓடுவது இன்னமும் சிக்கலை தான் இருக்கிறது. சீக்கிரமே மூச்சு இரைக்கிறது. ஸ்டெமினா காணாது என நினைக்கிறன். உங்கள் உடல் வாகில் தெரிகிறது; உங்கள் தொடர்ச்சியான பயிற்சி, கட்டுப்படுத்திய உணவு பழக்கவழக்கங்கள். அது சரி... நீங்கள் பியர், கியர் குடிப்பதில்லையா??? படங்களின் பின்னணியில் ட(f )பால்கர் ஸ்குயார் தெரிகிறது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.