Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Posts posted by Sasi_varnam

  1. பொதுவாக வெளியே இருப்பவர்களால்  இவை தமிழர் வரலாறு குறித்தும்  பேசும் நாவல் / திரைப்படமாக பொ.செ  னை  பார்க்கும் பார்வை இருக்கிறது. காரணம் ராஜ ராஜ சோழன் எனும் தமிழ் மன்னனின் மேல் இருக்கும் விம்பம். நானும் கூட அந்த ரகமாக இருந்திருக்கிறேன். 

    16 hours ago, குமாரசாமி said:

    உங்கள் திரைவிமர்சனத்திற்கு நன்றி சசி.


    உங்களிடம் கேட்கின்றேன்? மணிரத்தினம் எந்த திரைப்படத்திலாவது தமிழரை அல்லது தமிழர் சார்ந்த கலை,கொள்கை,மதம் என்பவற்றை கொச்சைப்படுத்தாமல் விட்டது உண்டா?

    மணியின் பார்ப்பன அரசியல் புரிகிறது. அவரின் எல்லா படங்களும் அந்த கருத்தியலை பேசியதா என்று சரியாக தெரியவில்லை. இருக்கலாம். 👍

  2. தமிழர் வரலாறு, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் என்று பார்க்காமல் மணிரத்னம் வர்த்தக சினிமா என்ற விதத்தில் தான் படத்தை அணுக வேண்டி உள்ளது.   யாவும் கற்பனை !!

    முதலாம் பாகம் பொன்னியின் செல்வன் 
    2ஆம் பாகம் நந்தினியின் காதலர்கள்  (ஆதித்த கரிகாலன், பெரிய பழுவேட்டரையர், வந்திய தேவன், பார்த்தீப சோழன்..) இப்படி நீண்ட வரிசையில் வருவோர் போவோர் எல்லாம் அவள் அழகில் மயங்கி சூழ்ச்சி வலையில் வீழ்கிறார்கள். (வந்திய தேவன் தவிர)
    வீராதி வீரனாக போற்றப்படும் ஆதித்ய கரிகாலன் வெறும் காதல் விரக்தியில் மாண்டு போவதை போல (அதுவும் தற்கொலை பாணியில்)  காட்சி அமைக்கப்பட்டிருப்பது,  
    அவரின் மறைவு வந்திய தேவனும், தாத்தாவாக இருக்கும் படை தளபதி இருவரை தவிர வெறு எவருமே பதறாமல் சோகத்தை காட்டாமல் போவதை போல் துரித காட்சி அமைப்பு அபத்தமாக இருந்தது. 
    படத்தில் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகலும் இருக்கின்றது:
    உதாரணம், பொன்னியின் செல்வர் நோயுற்று விகாரையில் வைத்து சிகிச்சை அளித்து குணமாகி மேல் மாடத்தில் இருந்து மக்களிடம் பேசும் காட்சியில் பாண்டிய ஆபத்து படை ஒருவனும் மன்னருக்கு பக்கத்தில் வந்திய தேவன், ஆழ்வார்க்கடியான் ஆகியோரோடு சேர்ந்தே நிற்பார்!!

    அவ்வளவு பெரிய பாதுகாப்பான தஞ்சை அரண்மனையில் சர்வ சாதாரணமாக  கண்டவன் நின்றவனும் உள்ளே ஆயுதங்களோடு புகுவது,

    தவிர நிறைய கதாபாத்திரங்களை கொண்ட படம் என்கிற வகையில் சில முகங்கள் supporting actors  and actress பிழையான கூட்டத்தில் பிழையான இடங்களில் நிட்கிறார்கள்.  

    56 இட்கு மேற்பட்ட போர்க்கள வீரத்தழும்புகளை தாங்கிய பெரிய பழுவேட்டரையர், கடைசி காட்சியில் சண்டை  செய்யாமலேயே அடி வாங்கி, அரண்மனையை விட்டே குண்டுகட்டாக தூக்காப்பட்டு கடத்தப்பட்டு எங்கோ அனாதையாய் கிடப்பது.

    சைவ மக்களை ஏதோ சூடு காட்டு அகோரிகள் போல சடாமுடி, விபூதி, பட்டை, கொட்டை என காட்டி இருப்பது..
    இலங்கை பௌத்தர்களை, துறவிகளை நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்கள் போல் காட்சி அமைத்தது. 
    இப்படி பலவற்றை உணரக்கூடிய மாதிரி இருந்தது.

    • Like 1
  3. "தட்டையாப் போட்டா தோசை, உருட்டிப் போட்டா இட்லி!" தத்துவம் இந்த திரியில் வந்த ஒரு சிலரது கருத்துக்கு எப்படி பொருந்துது.😂♥️

    வேற லெவல் ... சான்ஸே இல்ல !!!

  4. 14 minutes ago, விசுகு said:

    அது  ஏற்கனவே நாட்டுக்குள்ள  தானே கிடக்கு??

    இந்தியா  உடையணும்

    ரசியா அழியணும்

    ஆனால்  இந்த காட்டேறியைத்தான் எந்த  வகையிலும் திட்டமுடியல

    வழியே  இல்லையா???☹️

    ரசியாவின் கலாபாக் காதலர்களே பூட்லர் அருமை பெருமைகளை பேசும் மகா ஜனங்களே, சிறப்பு பேச்சாளர்களே, ஏதாவது இது பற்றி தலிவருக்கு எடுத்து சொல்லி..  வழியே  இல்லையா???☹️

    • Thanks 1
    • Haha 4
  5. சிங்களவன் விகாரை கட்ட, இந்தியன் ராமர் கோயில் கட்ட, கொஞ்ச சனம் பத்மநாபாவுக்கு சிலை கட்ட, மிச்ச தமிழ் சனம் கனவிலே கோட்டை கட்ட ... நம்ம நாடே கட்டி எழும்புது போல 

    1 minute ago, nunavilan said:

    அவர் கிறிஸ்தவத்துக்கு எதிரானவர். பெளத்தத்துக்கு ஆதரவானவர்.

    சங்கி  in one word!!

    • Like 1
    • Haha 1
  6. ஒவ்வொரு செய்தியிலும் தெரிந்துகொள்ள எவ்வளவு விடயங்கள் இருக்கிறது!!!
    விக்கி தகவல்கள் முழுமையாக ஒரே மூச்சில் வாசித்தேன். இந்த தம்பி ஆழம் அறியாமல் சட்ட ஆற்றில் காலை விட்டு உயிரை போக்கிக்கொண்டதாகவே உணர்கிறேன்.

    தமிழன் ஒருவன் தண்டிக்கப்படுகிறான் என்பதற்காக ஞாய, அநியாயங்களை, சட்ட வரையறைகளை எல்லாம் சகட்டு மேனிக்கு குறை சொல்லக்கூடாது. எல்லா சம்பவங்களையும் பொதுமை படுத்தவும் கூடாது. 

    டொரோண்டோவில் நடந்த பிரபல போதை வஸ்து கடத்தல் வழக்கில் 8ஆவது ஜூரியாக கடமையை ஆற்றி, குற்றவாளிக்கு சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பை பெற்று கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு.
    இதை வாசிக்கும் போது அந்த நாட்களின் ஞாபகங்கள் தோன்றி மறைந்தன. 😞

    • Like 1
  7. 13 hours ago, satan said:

    அடடே ... இதற்குத்தானா இன்னும் எமது நிலங்களில், நாங்கள் படகுகளில்   ஏற இறங்க எமக்கு உதவியாக  இருகிறார்கள்? அவர்களின் நல்லெண்ணத்தை புரியாமல் நாங்கள்தான் அவர்களை குறைகூறிக்கொண்டு இருக்கிறோம். எமது மனநிலை எந்தளவுக்கு மாறுகிறது? ஒருவேளை அவர்களின்  கொடூரங்களை அனுபவியாதவர்களாய் இருப்பார்களோ?

    நான் பார்த்த என்னுடைய அனுபவத்தை மட்டும் தான் இங்கே பதிந்தேன். ஈழ தேசத்துக்கு விசுவாசியாக  இருப்பதை காட்ட கற்பனையில் அனுமானித்து எழுத எனக்கு தோன்றவில்லை. அரச படைகளின் கொடூர வெறியாட்டங்களை பந்தி பந்தியாய் எழுதியதை நீங்கள் கவனிக்காமல் இருந்து இருக்கலாம்...

    இந்த கொலைகளுக்கும் அரச படைகளுக்கும் தொடர்புகள் இருக்குமா, இல்லையா என்றும் நான் எங்கும் விவாதிக்கவில்லை. அது விசாரணையின் முடிவில் வரலாம், வராமல் விடலாம், மறைக்கப்படலாம்.
    எது இப்படியே இழப்பு என்பது பாவப்பட்ட தமிழ் மக்களுக்குத்தான்.
    கனடாவில் இருந்து போன ஓரு ஐயா, அம்மா (எனக்கு தெரிந்தவரின் தாயும், தகப்பனும்) அனலைதீவில் வைத்து அடித்து, வெட்டி மிகவும் கோரமாக தாக்கப்பட்ட சம்பவம் கூட சொத்து தகராறு, தனிப்பட்ட பகை என்று தான் இன்றுவரையிலும் பேசப்படுகிறது.
    நான் பார்த்ததை எழுதினத்துக்கு 10 பேர் என்னையும் ஈபிடிபி, அரச கைக்கூலி ரேஞ்சில் ஹைலைட் பண்ணுகிறார்கள்.  தமிழ் தேசியம் நல்லா வளரும் டேய்!! 🙏

    • Like 3
    • Thanks 3
  8. 50 minutes ago, nedukkalapoovan said:

     

     

    இந்தக் கத்தியால... தேங்காய் கூட உரிக்க முடியாது. இதால ஆக்களை வெட்டிக் கொன்றானாம்..?! நாய்க்கு விழுந்துள்ள வெட்டுக்காயப்படி பார்த்தால் கூட கூரிய ஆயுதத்தால் வெட்டிய அடையாளம் போன்றே தெரிகிறது. குறிப்பாக துப்பாக்கி முனைக் கத்தியால் குத்தியது போன்ற காயம் நாயில் காணப்படுகிறது.

    மேலும்.. இந்த கத்திக்கதை நேற்று முந்தினமே வெளியாகிட்டுது. ஆனால் படம் இன்று வந்திருக்குது. கிணற்றுக்குள் இருந்து மீட்ட சாரத்தில் இரத்தக்கறை அப்படியே கரைந்து போகாமல் பாதுகாக்கப்பட்டிருக்குது.

    என்ன கலிகாலம் என்றால்.. ஒரு இனத்தையே மொத்தமாகப் படுகொலை செய்து அந்தக் கொலைகளில் இருந்தெல்லாம் தம்மை விடுவித்துக் கொண்ட சிங்களப் படைகளுக்கும் கூலிகளுக்கும்.. வக்காளத்து வாங்குவோரைப் பார்த்தால்.... இவர்களின் கருத்துப் பஞ்சத்துக்கு என்ன விலையும் கொடுக்கக் கூடியவர்கள் என்று தெரிகிறது. சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். 

    நானும் இதே பகுதியால் நயினாதீவுக்கு பயணித்திருக்கிறேன். சொறீலங்கா கடற்படை ஒழுங்கு படுத்தலில் தான் படகுகள் ஓடுகின்றன. குறிக்காட்டுவானில்.. சொறீலங்கா கடற்படை கண்காணிப்பு நிலை இருக்குது. அதேபோல்.. நயினாதீவில்... கோவில் இறங்குறையில் வெளிப்படையாக இல்லை. ஆனால் சொறீலங்கா கடற்படை புலனாய்வாளர்கள் மற்றும் ஈபிடிபி குப்பல் ஆட்களின் நடமாட்டம் இருப்பதை கூட்டிச் சென்ற உள்ளூர் மக்களே சொல்கிறார்கள்.

    உங்களை சொறீலங்கா கடற்படை தனது வோட்டர் ஜெட்டில் கூட்டி கொண்டு போய் கொண்டு வந்துவிட்டது.. பால் சோறும் கட்டாச்சம்பலும் தந்தது என்றும் எழுதலாம்... அது உங்களின் செல்வாக்கிற்கு உண்மையாகவும் இருக்கலாம்.. ஆனால்.. உள்ளூர் மக்களை விட உங்களுக்கு அங்குள்ள நிலைமையின்  உண்மைத் தன்மையோ.... கஸ்டமோ தெரிய வாய்ப்பில்லை. 

    large.20220830_180055.jpg.cbe0fa91a4e42937cb7bdee9dc28e714.jpg

    நெடுக்காலபோவானிடம் இருந்து இப்படியான குறுக்கால போகும் பின்னூட்டம் வரும் என்பதையும் நிச்சயம் எதிர்பார்த்தேன், ஆச்சரியம் இல்லை!!!
    அப்பு, இங்கே இணைக்கப்பட்டிருக்கும் படத்தில் இருக்கும் தனியார் படகில் தான் நாங்கள் பயணம் செய்தோம். அடுத்தமுறை போகும் போது  அப்படியே நீங்கள் "போகாத ஊரான" நெடுந்தீவுக்கும் போய் வாருங்கள், உள்ளூர் வாசிகளின் தொடர்புகளையும் தந்து உதவலாம், அவர்களே கூட்டிக்கொண்டு கூட்டி வருவார்கள். இந்த நேவி, கூவியை மட்டும் நம்பி பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    இங்கே எந்த ஒரு அரச, ராணுவ கொலைப்படைக்கும் வெள்ளை அடிக்கவேண்டிய தேவை யாருக்கும் இல்லை.
    நிதர்சனங்களை மூடி மறைத்து, இல்லாத பொல்லாத உடான்சுகளையும் இங்கே அவிழ்த்து கொட்ட வேண்டிய அவசியம் இல்லை.
    சமூக சீர்கேடுகள், அவலங்களை, அப்படியே யதார்த்தமாக எழுதினாலே போதும். 

    பின்குறிப்பு:
    படத்தின் பின்னணியில் இருக்கும் நீல நிற கட்டிடம் தான் நான் சொன்ன சைவ உணவகம். அடுத்த முறை கட்டாயம் அங்கே போய் சுடச்சுட வடை, சட்னி சாப்பிட்டு அதை பற்றி எழுதுங்கள்.

    • Like 4
  9. 3 minutes ago, Nathamuni said:

    நீங்கள் சொல்லும் அணைத்தும் சரியாயினும் யாழ் குடாநாடு ஒருவித இறுக்ககமான கண்காணிப்பினுள் உள்ளது. நீங்கள் சொன்ன அழகுதேவதை கூட கண்காணிகளில் ஒருவராக இருக்கலாம்.

    இறுக்கமான கண்காணிப்பில் இருப்பதை விடுமுறையில் போகும் நாம் அறியோம். அந்த கண்காணிப்பு வலையில் உள்ள அதீத நம்பிக்கை காரணமாக, சிங்கள பாதுகாப்பு படை அலட்டிக் கொள்ளாதது போல் காட்டிக் கொள்கிறது.

    புலிகள் சார்பாக ஒரு கருத்து வைத்தால், கண்காணிப்பு வலையின் வீரியம் உணர்வீர்கள். நண்பர்கள் கொழும்பில் சொல்லியே அனுப்புவார்கள், வாயை திறவாதே என்று.

    இருக்கலாம் நாதம்ஸ் 👍, நான் மறுக்கவில்லை. ஆனால் அங்கே போய் நின்று யாரும் புலிகளின் போராட்ட ஞாயங்களை கதைப்பார்களா தெரியவில்லை. தவிர எனக்கு இன்னுமே இந்த செய்திகளின் தகவல்கள் சரியாக தெரியவில்லை...
    இந்த திரிகளில் சுவிஸ், கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பெயர் அடிபட்டது. பிறகு அநேகர் உள்ளூர் வயோதிபர்கள் என்று செய்தி, கனடாவில் காப்புறுதி செய்த கோஷ்டி என்று ஒரு செய்தி!!
    ஆளை ஆள் சளைக்காமல் கேட்டது, கேட்காதது என்று எல்லாவற்றையும் பதிந்து தள்ளுகிறார்கள்!!!

  10. On 22/4/2023 at 18:59, nedukkalapoovan said:

    தீவகத்திற்குள் எவர் புதிதாக நுழைந்தாலும் சில மணித்துளிகளுக்குள் சொறீலங்கா கடற்படைக்கு விபரமான விடயம் போய்விடும். தீவகம் முழுவதும் ஈபிடிபி ஒட்டுக்குழு ஆதரவோடு சொறீலங்கா கடற்படைக்கு உளவு சொல்ல ஆக்கள் இருக்கினம்.

    மேலும்.. நெடுந்தீவுக்கு போகும் வழி எங்கும் தடை முகாம்கள் உள்ளன. மண்டைதீவில் ஆரம்பித்து கடைசி இறங்கு துறை வரை. 

    சகோ நீங்கள் சொல்லும் கருத்துக்கு எதிர் கருத்து எழுதுகிறேன் என்று பார்க்காதீர்கள். என்னுடைய அனுபவத்தை பதிவிடுகிறேன். 
    சில மாதங்களுக்கு முன்னேயான என்னுடைய நெடுந்தீவு பயண அனுபவத்தில் நீங்கள் கூறியதைப்போல பல விடயங்கள் இருக்கவில்லை.

    யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் இருந்து குறிகாட்டுவான் ஜெட்டி போகும் வரையிலும் பஸ் வண்டியை மறித்து சோதனை செய்யவோ, நெடுஞ்சாலை வழியே முகாம்லோ  இருக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு மினி முகாம்கள் (பெரிய வீடுகளை கொண்டதாக) காணக்கூடியமாதிரி இருந்தது.  

    குறிக்கட்டுவான் ஜெட்டியில் கடற்படை ராணுவமும், ஒரு சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். அங்கு ஒன்றும் அடையாள அட்டை பரிசோதனை, உடல், பை  பரிசோதனை என்று எதுவும் இருக்கவில்லை. அவர்கள் அங்கே நின்று மக்கள் கிரமமாக படகினுள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் உதவியாக நிட்கிறார்கள். சிறுவர்கள் தாமரை மலர்கள் விற்கிறார்கள். சுவையான சைவ சாப்பாட்டு கடையும், தொப்பிகள் விற்கும் ஒரு முஸ்லீம் சகோதரரும் இன்னும் ஒரு சில கடைகளும் இயங்கிக்கொண்டு இருந்தன. சைவ சாப்பாட்டு கடை கல்லாவில் வேலை செய்யும் இளம் பெண் வனப்புடன் கூடிய கிராமத்து அழகு தேவைதை. நான் டிப்ஸ் காசு கொடுத்ததையும் எடுக்கவில்லை.  🥰
    அதே போல அங்கிருந்து சற்று முன்னால்  குறிக்கட்டுவான் பஸ் நிலையம் அருகே ஒரு போலீஸ் நிலையம் இருக்கிறது. யாரும் யாரையும் பொருட்படுத்தியதாக எனக்கு ஞாபகம் இல்லை.

    • Like 3
  11. 23 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

    இது எப்படி சாத்தியம் என விடயம் தெரிந்தவர்கள்தான் விளக்க வேண்டும். கடற்படை உறங்குநிலையில் வைக்கப்பட்டு உள்ளதா அல்லது விழிப்பு நிலையில் உள்ளதா? முன்பும் நடைபெற்ற கொலை ஒன்றில் சந்தேக நபர்கள் தீவுப்பகுதியை விட்டு சென்று விட்டார்கள் கொலை செய்துவிட்டு. நெடுந்தீவு படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் தனி ஆளாக இவ்வளவும் செய்து உள்ளாரா? அதற்குரிய வளங்கள் எப்படி கிடைத்தன? 

    6 மாதங்களுக்கு முன்னம் நான் முதல் முறையாக நெடுந்தீவு போகும் போது தனியார் படகு ஒன்றில் தான் இருவழி பாதை பயணத்தையும் செய்தேன். 
    போகும் போதும் சரி வரி,  திரும்பி வரும் பொழுதும் சரி எந்த வித கடற்படை ஏறு / இறங்கு தளங்களை பாவிக்கவில்லை. என்னை ஏற்றிய படகு ஜெட்டிக்கு குறிகாட்டுவான் கடைத்தெரு அருகிலேயே இருக்கும் கரையில் வைத்து தான் ஏற்றியது. இறக்கும் போதும் கூட நண்பர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் பொதுவான ஒரு இடத்தில் தான் இறங்கிவிட்டார்கள். அரச படைகள் யாரையும் காணக்கூடிய மாதிரி இருக்கவில்லை.

    • Like 2
    • Thanks 1
  12. இவ்வளவு விசயங்கள் நடந்து இருக்கு ... வழமை போல சிறிலங்கா கடற்படை செய்த செயல் என்ற பாணியிலேயே நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
    அதற்காக நேவிகாரங்கள் ஒன்றும் நல்லவங்கள், நேர்மையானவர்கள் இல்லை.
    6 மாதத்திற்கு முன்னம் இலங்கை போயிருந்தேன். யாழ் இந்து நண்பர்கள் குழு ஒன்று ஒரு இரவுப் பொழுதை கழிப்பத்திரக்காக நெடுந்தீவு போய் தங்கியிருந்தார்கள். என்னால் முதல் நாள் அவர்களுடன்  கலந்து கொள்ள முடியவில்லை அடுத்தநாள் காலை யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் இருந்து (குறிகாட்டுவான் பஸ்) என்று நினைக்கிறன் அதில் பயணம் செய்து  பண்ணை பாலம் ஊடாக அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, குறிகாட்டுவான் வந்தடைந்தால் நான் போகவேண்டிய நெடுந்தீவு படகு ஏற்கனவே சென்றாகி விட்டது. 
    அடுத்த படகுசேவை இனிமேல் இல்லையென்றும், சிலவேளைகளில் பின்னேரம் ஒரு படகு போகலாம் என்றும்  அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அங்கிருந்த கடற்படை சிப்பாய்களும் மக்களோடு சாமானியமாக பேசி பழகியதை காணக்கூடியதாக இருந்தது. 
    நெடுந்தீவு சென்றிருந்த நண்பர்களும் பிரத்தியேகமாக ஒரு speed boat  ஒன்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு ஏற்பாடுசெய்திருந்தார்கள் (அவர்களே எங்களை திரும்பவும் நெடுந்தீவில் இருந்து பின்னேரம் கூட்டி வருவதாக ஏற்பாடு) ஒரு முழுப்பொழுதையும் நெடுந்தீவில் தான் கழித்தோம்.
    படகு பயணம், புவியியல் அமைப்பு, அங்கிருக்கும் வசதிகளை வைத்து பார்க்கும் போது இனிவரும் காலங்களில் பெரிதாக இளையவர்கள் அங்கே தங்கி வசிப்பார்களா என்பதே கேள்விக் குறியாகத்தான் எனக்கு தெரிந்தது.

  13. By far, China uses more pesticides than any other country on Earth. Every year, China uses approximately 1,806 million kg of pesticides. There is no other country on Earth that uses more than 400 million kilograms of pesticides. 😂 

     

    IMPORTSIn 2021, Ukraine imported $1B in Pesticides, becoming the 11th largest importer of Pesticides in the world. At the same year, Pesticides was the 7th most imported product in Ukraine. Ukraine imports Pesticides primarily from: China ($270M), France ($213M), Germany ($152M), Israel ($58.6M), and Hungary ($47.2M).

    The fastest growing import markets in Pesticides for Ukraine between 2020 and 2021 were China ($104M), Hungary ($18.1M), and Belarus ($12.9M).

  14. இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை  பேசும் இவர்களின் நோக்கம் என்ன? சாதியத்தை வென்ற மாவீர சரித்திரம் எங்களுக்கு இருக்கு மறந்துவிட்டோமா?

  15. இந்த அரசியல் கோமாளி குரங்குகளை எங்காவது ஒரு நாட்டில் ஏலம் போட்டு ... கூறுபோட்டு விற்று இருந்தால் நாடு இன்றைக்கு ஹொங்கோங், தாய்வான், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு போயிருக்கும்...

  16. நாங்களும் பார்க்கத்தானே போறோம் எப்படி சீனா, இந்தியா கூட்டு இந்த US டொலரை விழுங்க போகுதுன்னு!!
    அமெரிக்கா அரசியல், பொருளாதார கட்டமைப்பு அப்படி ஒன்னும் "மம்மா" "பப்பா" விளையாட்டு கிடையாது. இது இந்தியாவின்  "கிண்டிய" கனவு அவ்வளவுதான். 
    இஸ்தீரமான அரசியல் இல்லாத நாடுகள் இப்படியான கனவுகள் மட்டும் தான் காணலாம்... வல்லரசு ஆகும் கனவு ரகம். 

  17. மேற்குலக நாட்டு ஊடகம் தொடர்பாக  இங்கே சிலரால் எழுதப்படும் கருத்துகளில் பல சந்துகள் இருக்கிறன.. அதிலும் சிந்துகள் பாடக்கூடிய சந்துகளும்  (ஓட்டைகள்) இருக்கின்றன என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டமைக்கு நன்றிகள் நெடுக்ஸ் /    உடையார் மற்றும் கோஷ்டியினர்... 

  18. அடேங்கப்பா ... மேற்குலக செய்தி ஸ்தாபனமான  BBC என்றையில் இருந்து இவ்வளவு தெளிவா அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆசீர்வாதத்துடன் நடந்த ஈராக் யுத்த நடவடிக்கை, அதன் பாதகங்கயை புள்ளிவிபரமா வெளியிட தொடங்கி இருக்கு!!! 🤔

    யாழில் பல திரிகளை வாசித்து வாசித்து நானும் ஏதோ  West மீடியாவை வெஸ்ட்டு மீடியா என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.
    அப்ப BBC ரஷிய / உக்கிரேன் யுத்தம் பற்றி எழுதுவதும் ஓரளவு சரியாக தான் இருக்கும் என்ன!!!

    • Like 1
  19. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மட்டுமே பார்த்து இருந்தேன். ஏற்கனவே வெளிவந்த வெற்றிமாறன் படங்கள் அனைத்தும்  பிடிக்கும். இசைஞானியின் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் 3 பாடல்களும் தான் என்னை இந்த திரைப்படத்திற்கு நேற்றே செல்ல உந்திய முதல் காரணி.
    நேற்று இரவு 10:30; 2 ஆவது படக்காட்சிக்கு சென்றேன். 
    படங்கள் முழுதும் ஆங்காங்கே தேமிழ்தேசியம் பல குறியீடுகளோடு பேசப்படுகிறத்து. அரச படைகளின் அட்டூழியங்கள், அடக்குமுறைகள் கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. 1980 களில் பார்த்த தண்ணீர் தண்ணீர், மலையூர் மம்பட்டியான் போன்ற படங்களை பார்த்த உணர்வை ஏற்பட்டுத்தியது.
    சூரி அந்த கதாபாத்திரமாக மாறி இயல்பாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி வரும் ஒரு சில காட்சிகளில் கவனத்தை முழுதும் அள்ளிக்கொண்டு போகிறார். 
    இருண்ட காடு, பாறைகள், ஓடைகள், ஒற்றையடி பாதைகள், வனாந்திர பகுதிகள் எங்கும் இசைஞானியின் இசை காட்டு மல்லியாய் பூத்து வாசம் வீசியது. 
    இந்த படம் பற்றி நிறைய பேசலாம்.. சென்சார் கெடுபிடிகள் இல்லாமல் இந்த படம் வெளிவந்ததே பெரிய விடயம். வெற்றிமாறன்  வெற்றி நிச்சயம். ♥️

    • Thanks 2
  20. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் (KKS) இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29, 2023 முதல் தொடங்கும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

    புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கே.கே.எஸ் துறைமுகத்துக்கு ஏப்ரல் 29-ம் தேதி புதிய படகு சேவையின் முதல் கப்பல் போக்குவரத்து வரும் என்றார். 

    அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

    படகு சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும் மற்றும் 100 கிலோ சாமான்கள் அனுமதிக்கப்படும். 
     
    ஒரு படகு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து KKS க்கு சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யும் மற்றும் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படும்.

    படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில் இணைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

    KKS துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியன் எக்சிம் வங்கியிடம் கூடுதலாக 16 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார். (அஜித் சிறிவர்தன)

    https://www.dailymirror.lk/breaking_news/Karaikkal-KKS-Ferry-service-to-commence-on-April-29-Minister/108-256557#.ZCAmve8qry4.whatsapp

    • Like 1
    • இலங்கையில் ஒவ்வொரு நாலு மணித்தியாலத்துக்கும் ஒரு தற்கொலை சாவு இடம் பெறுகின்றது!!
    • 2022 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 2,833 ஆண்களும் 574 பெண்களும் தற்கொலை செய்துள்ளார்கள். 
    • சொற்ப நொடிகளில் எடுக்கப்படும் அந்த முடிவுகளினாலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன.
    • அதிலும் குறிப்பாக 18 விதமான இறப்புக்கள் கொடிய கிருமி நாசினிகளை அருந்துவதன் மூலம் ஏற்படுகின்றது.
    • பொருளாதார சிக்கல்கள்; காதல் தோல்விகள்;  மதுவுக்கு அடிமையாதல்; குடும்ப தகராறுகள்; இப்படி பல காரணங்களால் தற்கொலைகள் செய்யப்படுகின்றன. 
    • இந்த தற்கொலை முயற்சிகள் ஒன்றுக்கு 15 என்ற விகிதாசாரத்தில் இருக்கின்றது. (1:15)

    இது பற்றிய பாரிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    • Sad 1
  21. இந்த கருத்தாடலின் ஒரு அங்கமாக விளங்கக்கூடிய ஒரு திரியை கோஷன் கடந்த மாதம் திறந்து சில கருத்துக்கள், பதிவுகளை வைத்திருந்தார். அதாவது இன்றைய நாளில் தமிழ் மக்களுடைய தேவை என்ன நிலைப்பாடு என்ன என்கிற தலைப்பு என நினைக்கிறன்.
    அதில் நாம் எதிர்நோக்கும் சவால்கள், தடைகள் போன்றன  குறித்தும் அடிப்படைகள் கேள்விகள், அலசல்கள்  கூட வைக்கப்பட்டிருந்தது.

    இன்றைய சூழலில் நான் நினைக்கிறேன் இந்த 13 குறித்து சிங்கள மக்களிடம் பிணக்குகள் வளர்ப்பது தவிர்த்து, இன்னும் சொல்லப் போனால் காலாவதியாகிய, நிராகரிக்கப்பட்ட 13 ஐ இணைத்து  தமிழர்களின் பிரச்சினையை கதைப்பதை கூட தள்ளி வைத்து விட்டு, இன்றைய இலங்கையின் யதார்த்த சூழலில் சிங்கள மக்கள்படும் ஒட்டு மொத்த துன்பங்களுக்கும் காரணம் இந்த அதிகார மையம், அதிகார குவியல் ஒரே இடத்தில் இருப்பது தான், அந்த 75 வருட அதிகார குவியலால் நாட்டுக்கு, சிங்களவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தீமைகள் என்ன? இனிமேலும் இப்படியே போனால் அந்த மக்கள் எதையெல்லாம் சந்திக்கப் போகிறார்கள் போன்ற குறித்த பிரக்ஞயை உருவாக்குதல் வேண்டும். அவர்களுக்கும் கூட (சிங்களவர்களுக்கு)அதிகார பரவலாக்கல் எவ்வளவு நன்மையை அவர்களுடைய மாகாணங்களுக்கு, அவர்களுடைய மக்களுக்கு பயனளிக்கும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

    அதாவது எமது பிரச்சினையை முன்வைத்து பேசுவதை சற்றே முதுகுக்குப் பின் மறைத்து விட்டு, சிங்களவனுடைய சிக்கல்களை பேசலாம்.  குறிப்பாக இந்த கொழும்பு சார்ந்த அதிகார மையம்!! அந்த உரையாடலில்  தெளிவு பிறக்கும் பட்சத்தில் அப்படியே பக்கத்தில் உள்ளவனுக்கும் பாயாசம் எண்டது போல் நாமும் எமக்கு கிடைக்கவேண்டியதை சரியான புரிதலோடு, உடன்பாட்டோடு பெற்றுக்கொண்டு அனைத்தையும் கட்டி எழுப்பலாம். 
    அதே நேரம் இந்தியா எப்படியெல்லாம் எமக்கு சகுனியாக இருந்திருக்கிறது... இனிமேலும் கூட இருக்கும் என்பதையும் சேர்த்தே உரையாடலாம்.
    தமிழர்களின் போராட்டம் என்றுமே இதர இனங்களுக்கோ, மதங்களுக்கோ எதிராக தொடங்கிய, வழிநடத்தப்பட்ட தொன்றன்று என்ற உண்மையை அழுத்தி சொல்லி  புதிய, இளைய சமுதாயத்தை நோக்கி குரல் கொடுத்து பார்க்கலாம்.

    இதெல்லாம் நடக்கிற காரியமா தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் அந்த சிங்கள மக்களிடம் எமது பிரச்சினைகளை பேசக்கூடிய ஒரு வெளியை உருவாக்கலாம்!! 🙂 
      

    • Like 3
    • Thanks 2
  22. 10 minutes ago, Justin said:

    இணையவன் தகவலுக்கு நன்றி.

    ஒரு கேள்வி: பதிவில் படம் இணைத்த பின்னர், விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றி விடலாமா? பதிவில் படம் தொடர்ந்து இருக்குமா?

    இது சரியெனில் வழங்கியின் சுமையை பாதியாகக் குறைக்கிறோம், அல்லவா?

    அப்படி விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றினால் உங்கள் ஆக்கத்தில் நீங்கள் இணைத்த அந்த படமும் கூட அகன்றுவிடும் என்று நினைக்கிறன்.

    3 minutes ago, இணையவன் said:

    இல்லை. விம்பகத்தில் அழித்து விட்டால் பதிவில் படம் மறைந்துவிடும். நான் மேலே குறிப்பிட்டது பொழுதுபோக்கான அவசியமற்ற  படங்களை இணைக்க வேண்டாம் என்பதற்காகத்தான். 

    இன்னொரு விடயம், வேறு இணையத் தளங்களிலிருந்து காப்புரிமை உள்ள படங்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

    இணையவன் நீங்கள் பரிந்துரைக்கும் படங்கள் இணைப்பது தொடர்பான சரியான முறையை பற்றி மீண்டும் ஒருமுறை அறியத்தருவீர்களா?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.