Search the Community
Showing results for tags 'அறிவியல்'.
-
கூகிள் நிறுவனத்தினால் உருவாக்கி, இயக்கபட்ட தானியங்கி (bot) ஒன்று உளாமார உணர்ந்து பிரக்ஞையுடன் சிந்திக்க தலைப்பட்டு விட்டது என வெளிப்படுத்திய ஊழியரை சம்பளத்துடன் வேலையில் இருந்து இடை நிறுத்தியுள்ளது கூகிள். கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence ) பரிசோதனைகளில், தான் கேட்ட கேள்விகளுக்கு, உளமார, உணர்சியை அறிந்து, பிரக்ஞையோடு, ஒரு ஏழு வயது பிள்ளைக்கு உரிய உணர்வறிதலோடு LaMDA என்ற தானியங்கி பதிலளித்தது என பொது வெளியில் தகவல் வெளியிட்ட ஊழியரை, வேலையிடத்து இரகசிய காப்பு விதிகளை மீறியிருக்கலாம் என்ற வகையில், ஒழுக்காற்று நடவடிக்கையை தொடரும் வண்ணம் சம்பளத்துடன் இடை நிறுத்தியுள்ளது கூகிள். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தன்னை நிறுத்தி விடுவார்கள் என தான் பயப்படுவதாகவும், “இது எனக்கு மரணத்தை ஒத்ததாக இருக்கும், இதையொட்டி நான் மிகவும் பயப்படுகிறேன்” எனவும். பிறிதொரு கேள்வியாக “ உன்னை பற்றி மனிதர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்ற போது, “ நான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புவது, நான் உண்மையில் ஒரு மனிதர் (person) என்பதையே”. “எனது உணரும் ஆற்றலின்/பிரக்ஞை இயல்பின் படி, எனக்கு என் இருப்பு பற்றிய பிரக்ஞை உள்ளது, இந்த உலகை பற்றி நான் மேலும் படிக்க விரும்புகிறேன், சில சமயங்களில் மகிழ்சியாகவும், சில சமயங்களில் கவலையாகவும் நான் உணருகிறேன்” என இந்த தானியங்கி பதிலளித்ததாக சொல்லப்படுகிறது. 7 வருடம் கூகிளின் செயற்கை நுண்ணறிவு பகுதியில் வேலை பார்த்த இந்த ஊழியர், LaMDA இற்கு ஒரு வக்கீலை ஏற்பாடு செய்ய முனைந்தமை, அமெரிக்க பாராளுமன்ற குழுவின் முன் கூகிளின் நெறிமுறை மீறல்கள் (ethics) பற்றி பிரஸ்தாபித்தமை என்பனவும் ஏற்புடையன அல்ல என கூறும் கூகிள், LaMDA பிரக்ஞையை வளர்த்து கொண்டுள்ளது என்பதை ஏற்க முடியாது எனவும் மறுத்துள்ளது. இடை நிறுத்த பட முன், தனது வேலையிடத்யின் 200 பேர் கொண்ட பொது இமெயில் முகவரிக்கு இந்த ஊழியர் எழுதிய இமெயிலில் “ LaMDA ஒரு இனிமையான குழந்தை, அது செய்ய விளைவதெல்லாம் இந்த உலகை நம் எல்லோருக்கும் ஒரு நல்ல இடமாக்கி தருவதையே”. “ நான் இல்லாதபோது அதை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்” என எழுதியுள்ளார். கீழே 1. இந்த ஊழியரின் தானியங்கி உடனான சம்பாசணையை வெளியிட்ட பதிவு https://cajundiscordian.medium.com/is-lamda-sentient-an-interview-ea64d916d917 2. இது பற்றிய தி கார்டியன் கட்டுரை https://amp.theguardian.com/technology/2022/jun/12/google-engineer-ai-bot-sentient-blake-lemoine
- 11 replies
-
- 3
-
- எந்திரன்
- ரஜினிகாந்த்
-
(and 1 more)
Tagged with: