Search the Community
Showing results for tags 'உக்ரேனை எரிக்கும் புட்டின்'.
-
இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு. ரஸ்ஸியா: ராணுவ ரீதியிலான உதவிகள் : புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இலங்கைக்கு பெருமளவு உதவிகளை ரஸ்ஸியா செய்துவந்திருக்கிறது. ஆயுதங்கள் , வெடிமருந்துகள், ராணுவ வாகனங்கள், விமானப்படைக்கான மிகையொலி விமானங்கள், அன்டனோவ் துருப்புக்காவி மற்றும் பொருட்களையேற்றும் சரக்கு விமானங்கள், தாக்குதல் மற்றும் துருப்புக்காவி உலங்குவானூர்திகள், பிரதான யுத்தத் தாங்கிகள், துருப்புக்காவி வாகனங்கள், நீண்டதூர ஆட்டிலெறிகள் என்று ஒரு பாரிய ராணுவ உபகரண உதவிகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது. மேலும் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் களமுனைப் பயிற்சிகள் என்றும், யுத்த தந்திரோபாயங்கள், களமுனை நகர்வு ஆலோசனைகள் என்றும் யுத்தத்துடன் நேரடியாகச் சமபந்தப்பட்ட ஆலோசனைகளையும், உக்திகளையும் தொடர்ச்சியாக வழங்கியிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்திற்காக ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்ட பல ராணூவத் தளபாடங்களையும், ஆயுதங்களையும் தனது விற்பனைக்குப் பிந்திய சேவைகள், உதிரிப்பாக விற்பனை, பழுதுபார்த்தல்கள் ஆகிய யுத்தத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சேவைகளை ரஸ்ஸியா வழங்கியிருக்கிறது. அத்துடன், ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டு, பிற நாடுகளில் பாவிக்கப்பட்டு, இலங்கைக்கு இரண்டாம் தரமாக வழங்கப்பட்ட பல ராணுவ உபகரணங்களுக்கான தொடர்ச்சியான உதிரிப்பாக , மேம்படுத்தல் சேவைகளையும் ரஸ்ஸியா தொடர்ச்சியாக வழங்கியே வந்திருக்கிறது. இலங்கை ராணூவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான தொடர்ச்சியான வழங்கல்களும், சேவைகளும் ரஸ்ஸியாவினால் குறைந்தது 30 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ரஸ்ஸியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ராணுவத் தளபாட, ஆயுதத் தொகுதியின் சில உதராணங்களைப் பார்க்கலாம், 1. மிகோயன் குரேவிச் - மிக் - 27 மிகையொலி தாக்குதல் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் 2. எம் ஐ 24 தாக்குதல் மற்றும் எம் ஐ 17 துருப்புக்காவி உலங்குவானூர்திகள் 3. டி - 54 மற்றும் டி - 55 பிரதான யுத்தத் தாங்கிகள் 4. பி டி ஆர் - 80 ரக துருப்புக்காவி வாகனங்கள் 5. கெபார்ட் ரக கடற்படைக் கப்பல் ( ஆமெரிக டாலர் 160 மில்லியன்களுக்கு 2017 இல் ரஸ்ஸியாவினால் விற்கப்பட்டது) அரசியல் ராஜதந்திர ரீதியிலான் உதவிகள்: இலங்கைக்கெதிராக ஐ நா வில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களிலும் இலங்கைக்கு ஆதரவாகவே ரஸ்ஸியா இதுவரையில் வாக்களித்து வந்திருக்கிறது. அதிலும் முக்கியமாக 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இனப்போரில் இலங்கையரசால் செய்யப்பட்ட போர்க்குற்றங்களையும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையும் விசாரிப்பதெனும் தீர்மானங்களுக்கெதிராக ரஸ்ஸியா கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, இலங்கையின் இறையாண்மை, பாதுகாப்புக் குறித்து தான் அதிக கவனம் கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாகவே தெரிவித்து வந்தது. இதே காலப்பகுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றிற்கான முயற்சிகளை கனடா, மெக்சிக்கோ, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்தபோது, அதனைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ரஸ்ஸியா இறங்கியதுடன், இவ்விவகாரம் இலங்கையின் உள்நாட்டு விடயம் என்றும், பயங்கரவாதிகளுக்கெதிரான போர் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற இலங்கைக்கெதிரான அனைத்து தீர்மானங்கள், நடவடிக்கைகளிலும் தனியாகவோ, சீனாவுடன் சேர்ந்தோ ரஸ்ஸியா தனது வீட்டொ அதிகாரத்தினைப் பாவித்து தடுத்தே வந்திருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக, உக்ரேனுக்கும் ரஸ்ஸியாவுக்கும் இடையிலான பிணக்கில், ரஸ்ஸியாவை ஆதரித்து நிற்கும் இலங்கை, ரஸ்ஸியாவின் நடவடிக்கைகளை நியாயபடுத்தியிருப்பதுடன், ரஸ்ஸியா தனது பாதுகாப்பிற்காக எடுக்கும் நடவடிக்கையென்று உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் சார்ந்த உதவிகள்: ரஸ்ஸியா இலங்கையுடன் பல்லாண்டுகளாக பொருளாதார உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையின் மொத்தத் தேயிலை ஏற்றுமதியில் ரஸ்ஸியாவுக்கு 17 முதல் 20 வீதமான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, இதன் மொத்தப் பெறுமதி 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ரஸ்ஸியாவின் தேயிலைச் சந்தையில் 30 வீதமான விற்பனையினை இலங்கையின் தேயிலையே பெற்றுக்கொள்கிறது.2016 இல் மட்டும் குறைந்தது 58,000 ரஸ்ஸிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருக்கின்றனர். இவ்வெண்ணிக்கை பின்வந்த ஆண்டுகளில் கணிசமாகக் கூடிக்கொண்டே செல்கிறது.
- 477 replies
-
- 10
-
-
-
- உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு
- உக்ரேனியர்கள் படுகொலை
- (and 1 more)