Search the Community
Showing results for tags 'உங்கள் அனுபவப்பாடம்'.
-
கள உறவுகளுக்கு வணக்கம், நம் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், பெரியோர் என்று பலரிடமிருந்து எண்ணற்ற நற்சிந்தனைகளை, வாழ்வியல் தத்துவங்களை, கோட்பாடுகளைக் கேட்டிருப்போம், கற்றிருப்போம். அவை பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக இருந்திருக்கும். யோகரோ, இயேசுவோ, புத்தரோ, லெனினோ, பெர்னாட் ஷாவோ, தந்தை பெரியாரோ, ஓஷோவோ, டேல் கார்னகியோ யாராக இருந்தாலும் அவர்களின் சுய சிந்தனையில், கண்ணோட்டத்தில் அவரவருக்குச் சரியெனப்பட்டதைத் தத்துவங்களாக, நற்சிந்தனை மொழிகளாக உலகிற்கு எடுத்துரைத்தார்கள். எனினும், இந்தத் திரியின் நோக்கம் பிற ஞானிகள், அறிஞர் கூறிய நற்சிந்தனைகளை, தத்துவங்களை எல்லாம் தாண்டி கள உறவுகளான நமது சுய சிந்தனையில் உதித்த நல்ல சிந்தனைகளை இங்கு ஏனைய கள உறவுகளுடனும், வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள ஓர் சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்துவதாகும். அனுபவசாலிகளான மூத்தோர், அறிவார்ந்த இளையோர், நாத்திகர், பகுத்தறிவாளர், ஆன்மீகவாதிகள், மதங்களின் நெறியில் செல்வோர் எனப் பரந்துபட்ட கள உறவுகள் நிறைந்த இந்த யாழ் இணையத்தில் அவர்கள் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளக் கூடிய பல நல்ல சிந்தனைகள், வாழ்வியல் தத்துவங்கள் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். 💧💦🌧 அந்த வகையில், உங்கள் நாளாந்த வாழ்வில் உங்களுக்குத் தோன்றும் நல்ல சிந்தனைகளை, தத்துவங்களை இங்கு பகிருமாறு கள உறவுகளுக்கு எனது தாழ்மையான வேண்டுகோளை வைக்கிறேன். நீங்கள் இங்கு பகிர்பவை, 🌱உங்கள் சுய சிந்தனையில் தோன்றியவை 🌾உங்கள் சுய அனுபவத்தில், உங்கள் வாழ்வில் பரிசோதித்ததில், பயிற்சி செய்ததில் அவை மிகவும் உண்மையானவையே என நீங்கள் உணர்ந்தவை ⭐️நேர்மறையான வார்த்தைகளில் பிறருக்குப் புத்துணர்வும், தெளிவையும் தர வல்லவை ஆக இருக்குமாறு அமையத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். இது உங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட பார்வை; எனவே என்னளவில் அவை சரியென்றால் அவற்றை உள்வாங்கிக்கொள்வேன். என் அறிவுக்கு முரண்பட்டால் எதிர் விவாதம் வைக்காமல் கடந்து செல்வேன். ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்களை மட்டுமே பரிமாறும் திரியாக இது அமைய வேண்டும் என்பதே என் அவா. ஏனெனில் நாத்திகருக்குள்ளும் நல்ல நேர்மறை எண்ணங்கள் பல உண்டு என்பதையும், அந்த எண்ணங்கள் ஏனைய கொள்கை உள்ளோருக்கும் பயன்படலாம் என்பதை நான் உறுதியாக நம்புபவன். முரண்பாடுகள் உண்டென்ற தெளிவுடன் வீண் முரண்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது ஆரோக்கியமானது என்பது என் எண்ணம். இந்த நேர்மறையான சிந்தனைப் பரிமாற்றத்தினால் நாமெல்லாம் ஒன்று கூடி ஒவ்வொருவரினதும் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் கற்று தெளிவை நோக்கி முன்னேறலாம் என்பது என் நம்பிக்கை.🌱🌿🍀🌴🌳 உங்கள் நற்சிந்தனைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் ஒரு வரியிலோ, பந்தியிலோ, ஏன் ஒரு சில பக்கங்களில் கூட அமையலாம். அது உங்கள் சுதந்திரம். குளியலறையில் கூட சட்டென நல்ல சிந்தனைத் துணுக்கு உதிக்கலாம்!🌱🌾 எனவே உங்கள் சிந்தையில் உதித்த, உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்ட நல்ல சிந்தனைகளை, உங்கள் தத்துவங்களை இத்திரியில் ஞானச் சுடராக ஏற்றுங்கள்!🔥 அவை கூட்டாக நம் அனைவருக்கும் ஞான ஒளியைத் தரட்டும்!☀️ நன்றி 😊 (குறிப்பு: நற்சிந்தனைகளின் செறிவை நோக்கமாகக் கொண்டு, தேவையற்ற பின்னூட்டங்களை என்னளவில் நான் இட மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் உங்கள் சுதந்திரம்.)
- 50 replies
-
- 15
-
-
-
- கூடிக் கற்றுத் தெளிவோம்
- உங்கள் நற்சிந்தனை
- (and 2 more)