Search the Community

Showing results for tags 'கவிதை'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 37 results

  1. மறதி ஒரு தூக்கமாத்திரை அது எங்கெங்கும் இலவசமாக வழங்கப்படுகிறது அது நமக்கு நடந்தவை எதுவும் நமக்கு நடந்தவை அல்ல என்று நம்ப வைக்கிறது துரோகத்திற்கும் அவமானத்திற்கும் நம்மைப் பழக்கப்படுத்துகிறது நினைவுகள் இனி படிக்கப்பதற்கான கதைகளே என அது நம்பத் தொடங்குகிறது … பிறகு அவை இன்னும் ஒரு முறை எதிர்காலம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன -மனிஷபுத்திரன் http://www.ilankathir.com/?p=4695
  2. I just can't control myself I can't be with no one else It seems like I'm addicted to The way you like to touch me I don't think they understand Why love at your command From the words you speak so deep Our bodies read I have to have you I love you............... You're perfect A manifestation of my dreams Body feel About a million different things எங்கேயோ சுட்டது....
  3. இன்று எவ்வளவு களைப்பாகத் திரும்பி வந்திருக்கிறேன் என்றால் இந்த வரிகளின் மீது என் கடவாய் எச்சில் வழிகிறது இதன் வாக்கியங்களின் அர்த்தங்களின்மீது நான் தூங்கி வழிகிறேன் பிரகாசமாக எரியும் ஒரு விளக்கின் கீழ் நான் நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கிறேன் இன்று எனக்கு அளிக்கப்பட்ட உணவை நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறேன் அன்பே இன்று நான் எவ்வளவு களைத்திருக்கிறேன் என்றால் உனது இந்த முத்தத்தை இன்று மட்டும் வேறு யாருக்காவது கொடுத்துவிடு என்று கேட்கும் அளவுக்கு -மனுஷ்ய புத்திரன் http://www.ilankathir.com/?p=3567
  4. ஊருக்கு ஏற்றார்ப்போல் பேசி... உறவுகளுக்காக நடித்து...... வேலைக்கு ஏற்றார்ப்போல் ஆடி... வேண்டிய மட்டும் பொய் வார்த்தைகள் கூறி... நாட்களை நகர்த்துகிறேன் நான்.... என்னுடைய சுயத்தை இழந்தபடி.... http://www.ilankathir.com/?p=2622
  5. மரணமே நெருங்காதே கண்ணீர் மழையால் உம்மை தொழுகிறேன் மரணமே நெருங்காதே கிடைத்தற்கரிய பரிசாய் எனக்கும் கிடைத்தான்....என்னை நனைத்தான் என்னுள் நனைந்தான் கடந்த கால நினைவுகளை காயங்களாக கொண்டவனின் காயம் போக்க காதல் செய்ய வரம் கிட்டியது என் பேறு தொலைவில் இருந்தாலும் காதலால் தீண்டுகிறான் தேன் துளியாய் அவன் நினைவுகள் தித்திக்க வார்த்தைகள் தெவிட்டுகிறதே அவன் அன்பை வருணிக்க..... அன்னாகரீனா, நாஸ்தென்காவை காதலிகளாக கொண்டவன் என்னையும் காதலியாக ஏற்றான் அவன் அன்பிற்கும் மட்டுமல்ல அறிவிற்கும் நிகரில்லா என்னை ஆயுள் வரை அவனோடு பயணிக்க எதற்காக தேர்ந்தெடுத்தான் என்னில் எதை வியந்தான்....? உள்ளூர் அரசியலே தெரியாத என்னிடம் உலக அரசியல் பேசும் அவனிடம் எப்படி அறிவிக்க எனது மடமையை ஐக் மாதவ், தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் பற்றி வியந்து உரைப்பவன் ஜானகிராமன், மு.வ பற்றியும் கூற தவறவில்லை அன்பை பரிமாறும் காதலர்கள் மத்தியில் ஏடுகளை பரிமாறி எழுத்தறிவித்தான்.... இப்படி ஒருவன் என் வாழ்வில் நுழைந்தது ஆச்சரியமான ஒன்று தான் கானல் நீரில் மட்டுமே கரைந்த என்னை கானத்திலே, காற்றிலே, மழையிலே கரைய வைத்தான் சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும் காதலோடு கடைசி வரை வாழ துடிக்கிறது மனம்... கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன் மரணமே என்னை நெருங்காதே....... -தமிழ்மதி http://www.ilankathir.com/?p=2871
  6. நீ பயனற்றுப் போகையில் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுகிறாய் உன்மீதான மனக்குறைகள் நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன உன்னைப் பற்றிய புகார்கள் என்றென்றைக்குமாக ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன நீ பயனற்றுப்போகும்போது வேலியில் பூத்துக்கிடக்கும் ஒரு கொடிபோல ஆகிவிடுகிறாய் உனக்கு யாரும் நீரூற்றுவதில்லை உனது மலர்களுக்காக யாரும் காத்திருப்பதில்லை ஆனாலும் நீ ஒரு செடியாகவோ மலராகவோ இருக்கத்தான் செய்கிறாய் உன் மேல் திணிக்கப்பட்ட குற்ற உணர்வுகளை இறக்கி வைப்பதற்கு உனக்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் வரப்போவதில்லை நீ செய்யத் தவறிய ஒவ்வொன்றிற்கும் பதிலளிக்கும் கடமையிலிருந்து நீ விடுவிக்கப்பட இதைவிட்டால் உனக்கும் வேறொரு தருணம் வரப்போவதில்லை நீ பயனற்றுப் போகும்போது நீ நிபந்தனைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாய் நிபந்தனையற்று மன்னிக்கப்படுகிறாய் உனது ஆரோக்கியம் உன்னை ஒரு பணயப் பொருளாக்குகிறது உனது திறன்கள் உன்னைப் புதிய பொறிகளில் சிக்க வைக்கின்றன உனது சாத்தியங்கள் உண்மையில் உனக்கான எல்லா சாத்தியங்களையும் மூடி விடுகிறது நான் நலமற்றுப் போகையில் இந்தப் படுக்கை முழுக்க என்னுடையதாகிவிடுகிறது நான் அதன் பரப்பளவை முழுமையாகப் பயன்படுத்துகிறேன் அதன் தனிமைக்குள் முழுமையாக என்னை ஒப்புக் கொடுக்கிறேன் அது ஒரு தீவு போல இருக்கிறது அல்லது வனாந்திரத்தின் சின்னக் குகைபோல இருக்கிறது என் காலடி ஓசைகளை அதில் நானே கேட்கிறேன் எனக்குக் கிழமைகள் இல்லாமல் போகிறது தேதிகள் இல்லாமல் போகிறது மணிகளோ பகல்களோ இரவுகளோகூட இல்லாமல் போகும்போது அப்போது இந்த உலகம் முற்றிலும் வேறொன்றாக மாறிவிடுகிறது அது நாம் இதுவரை வாழ்ந்த உலகம்போலவே இல்லை அது ஒரு துறவியின் உலர்ந்த மான் தோல்போல உள்ளது அப்போது நான் கட்டவேண்டிய ஒரு பில் பற்றி நினைக்கிறேன் உடனே அதை மறந்து போகிறேன் ஒரு அன்பை ஒரு விரோதத்தை நினைக்கிறேன் உடனே மறந்து போகிறேன் ஒரு நோய்ப்படுக்கை ஒரு புனிதரின் மடிபோல உள்ளது நான் அதன் பயனின்மையை வணங்குகிறேன் நீ பயனற்றுப் போகும்போது கண்ணீர் சிந்த வேண்டியதில்லை ஏதோ ஒன்று வீணாகிவிட்டது என்று பயப்பட வேண்டியதில்லை பயனற்றுப் போகாவிட்டால் பிறகு எப்படி ஒரு சிசுவைப்போல மறுபடி பிறந்து இந்த உலகத்திற்குள் வர முடியும்? -மனுஷ்ய புத்திரன் http://www.ilankathir.com/?p=3572
  7. நான் கொடுக்கும் துண்டித்த அழைப்புகளை கண்டிக்கும் உன் கோபத்தின் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு...... சண்டையிட்டு சரணடையும் சலனமற்ற உன் அன்பின் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு.... மடிகணினியோடு மல்லுக்கட்டி போராடி என்னோடு அரட்டை அடிக்கும் உன் சேட்டைகள் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு.... கோபத்தினை மறைத்த தருணங்களில் இம் என்ற ஒற்றை சொல்லோடு உரையாடும் பித்தனே உன் பித்தத்தின் மீதும் கொள்ளை பிரியம் ... அன்றாடம் நான் கேட்கும் கேள்விகளுக்கு சில்லரிக்கும் புன்னகையோடு சம்மந்தமில்லா விடையளிக்கும் உன் சலிப்புகள் மீதும் கொள்ளை பிரியமே..... பேசிக்கொண்டிருக்கும் போதே சொல்லாமலே தூங்கிடும் உன் தூக்கத்தின் மீதும் கொள்ளை பிரியமே..... காதருகே கண்ணீர் சிந்தி பேசும் போது கிண்டல் செய்யும் உன் கேலித்தனத்தின் மீது அத்துணை பிரியமடா எனக்கு..... ஆயிரம் வேலைகளுக்கு இடையிலும் அன்போடு கணபொழுது மட்டும் பேசும் உன் பிரியத்தின் மீது பிரியமே............. நான் கொடுத்த வலியால் பிரிவை மட்டும் விட்டுக்கொடுக்காமல் வித்தைக்காட்டும் வில்லனே பிரியமே உன்மீது........ என் பிழைகளை பொறுத்துக்கொண்டு விறைத்து நின்று முறைத்து பேசும் வித்தகனே உன்னை நேசிக்கிறேன்............. ஆயிரம் ஆசைகள் ஆயிரம் கனவுகள் கொண்டு அன்பே உன்னை காண நேரும் பொன்னாள் மீது பொன்னான நேசமுண்டு....... -தமிழ்மதி http://www.ilankathir.com/?p=2867
  8. நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை ஒரு நியாயத்தின் மறுபக்கம் நமது நியாயங்களை மறுதலித்துவிடும் ஒரு கண்ணீரின் மறுபக்கம் நமது கண்ணீரை அர்த்தமற்றதாக்கிவிடும் ஒரு மனிதனின் மறுபக்கம் அவனை நிரந்தரமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது நான் மறுபக்கத்தைப் பார்க்க விரும்பவில்லை நாம் மறுபக்கத்தைப் பார்க்கும்போது நம் கைகள் கட்டப்பட்டுவிடுகின்றன நமது இதயம் கனத்து விடுகிறது நமது அம்புகள் முனை முறிந்துபோய் விடுகின்றன நமது எல்லா வழிமுறைகளும் பயனற்றதாகிவிடுகின்றன நான் ஒரு மறுபக்கத்திற்குள் நுழையும்போது ஒரு இருண்ட அறைக்குள் நுழைகிறேன் நான் ஒரு மறுபக்கத்தை தொடும்போது இருளில் வழுவழுப்பான எதையோ தொடுகிறேன் நான் ஒரு மறுபக்கத்தின் மூச்சுக்காற்றை உணரும்போது எனது சுவாசம் ஒரு கணம் நின்றுவிடுகிறது நான் ஒரு மறுபக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது நான் அவ்வளவு நஞ்சாகிவிடுகிறேன் யாருமற்ற அறையில் திடீரென நிலைக்கண்னாடியில் ஒரு பிம்பம் விழுகிறது நீங்கள் நிலை குலைந்து போகிறீர்கள் உங்களுடைய மறுபக்கம் நீங்கள் அங்கே இல்லாதபோது விழும் உங்கள் நிழல் உங்களால் அதை வழி நடத்த முடியாது உங்களிடமிருந்து அதைத் துண்டிக்கவும் முடியாது நீங்கள் அதை ஒரு துணியால் மூடுகிறீர்கள் ஒரு காகிதத்தால் மூடுகிறீர்கள் ஒரு கோப்பை மதுவால் மூடுகிறீர்கள் அதிகாரத்தால், பணத்தால், அன்பால், வன்மத்தால் மூடுகிறீர்கள் அதுவோ உங்கள் மண்டியிடுதலுக்காக காத்திருக்கிறது உங்கள் நிர்வாணத்திற்காக காத்திருக்கிறது உங்கள் சாவுக்காக காத்திருக்கிறது நான் ஒரு மறுபக்கத்தைப் பார்க்க நேரும்போது மேலும் புரிந்துகொள்பவனாக இருக்கிறேன் மேலும் விட்டுக் கொடுப்பவனாக இருக்கிறேன் மேலும் என் இயல்புகளை மாற்றிக்கொள்கிறேன் மேலும் நான் என் சொற்களை இழக்கிறேன் எந்த ஒன்றிலும் மறுபக்கத்தைக் காண்பது அது இன்னொரு பாதியைப் பூர்த்தி செய்வதல்ல ஒரு பாதியை அழிப்பது அது அறியாத ஒன்றை அறிவதல்ல அறிந்த ஒன்றை இழப்பது அது ஒரு முழு நிலவிற்குக் கீழ் நடப்பதல்ல ஒரு உடைந்த நிலவிற்குக் கீழ் கண்ணீர் சிந்துவது அது நள்ளிரவில் ஒரு பூனையின் குழந்தைஅழுகுரல் அல்ல உண்மையிலேயே ஒரு குழந்தையின் அழு குரல் ஒரு உண்மையின் மறுபக்கத்திலிருந்து இன்றைய நம் பொய்கள் அனைத்தும் பிறக்கின்றன ஒரு காதலின் மறுபக்கத்திலிருந்து இன்றைய நம் பாசாங்குகள் அனைத்தும் நிகழ்கின்றன ஒரு புத்திசாலித்தனத்தின் மறுபக்கத்திலிருந்து இன்றைய நம் வீழ்ச்சியின் பாதைகள் தொடங்கின ஒரு கருணையின் மறுபக்கத்திலிருந்து இன்று நாம் கொலைக்களம் நோக்கி நடந்துகொண்டிருக்கிறோம் எங்கேனும் இருக்கக்கூடும் மறுபக்கம் இல்லாத ஒரு சுவர் நாம் அதைத் தாண்டிச்செல்ல வேண்டியதில்லை மறுபக்கம் இல்லாத ஒரு அன்பு நாம் அதை சந்தேகிக்க வேண்டியதில்லை மறுபக்கம் இல்லாத ஒரு ரகசியம் நாம் அதற்கு அஞ்ச வேண்டியதில்லை மறுபக்கம் இல்லாத ஒரு காகிதம் நாம் இந்த வரிகளை அதன் இன்னொரு பக்கம் நோக்கி செலுத்த வேண்டியதில்லை -மனுஷ்ய புத்திரன் http://www.ilankathir.com/?p=3570
  9. இப்போது கார்த்திகை மாதம்! கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி எம் கண்ணீரில் வறண்டு போன தேசத்திற்கு மழை பொழிந்து காலப் பெரு வெளியில் தமிழர் தம் வாழ்விற்காய் கல்லறையுள் துயில் கொள்ளும் ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை நினைவு கூர்ந்து குளிர்விக்கும் நன் நாள் இது! அடிமைத்தளையுள் சிக்கி தமிழன் உணர்வை தொலைத்து வம்சம் தனை இழந்து வாழ்வை பறி கொடுத்து வந்தேறு குடி என சிங்களரால் வழங்கப்படும் நாமத்தை பெற்று வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து உலகறியா இனமாக ஈழத் தமிழன் உருமாறிச் சிதைந்திடுவான் என இறுமாப்போடு எமை அழிக்க வந்தோர்க்கு தமிழர் தம் வீரம் உணர்த்தி துயில் கொள்ளும் குழந்தைகளை நினைவு கூறும் நன் நாள் இது! பேசும் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் எங்கே என அடி முடி தேடிய தமிழர் தலை முறைக்கு நும் அருகே இருக்கிறார்கள் காவல் தெய்வங்கள்- உமை(க்) காக்க வந்த தெய்வங்களாய் கல்லறையினுள் துயில்கிறார்கள் என சேதி சொல்லி எமை நிமிர்ந்து நிற்கச் செய்த மழைக் கால மாவீரர் மாதமிது! வீழும் தமிழர் இனம்; தமைக் காக்க வழி தெரியாது தம் எதிர் கால வாழ்வை தொலைத்து சாகும் தமிழர் இனம் என இனவழிப்பு நடனம் ஆடிய இனவாதப் பேய்களுக்கு ஆளப் பிறந்தவர்கள் தமிழர்கள் என உணர்த்த ஒரு தானைத் தலைவனை தந்ததும் இந்த மாதம் தான்! கல்லறையை அழித்தோம்; கருமமே கண் எனவாகி தமிழர் தம் உணர்வுகளை நீறாக்கி பொசுக்கி விட்டோம்; போரில் பின்னடையை வைத்தோம்; ஊரில் இருந்த உணர்வுள்ள மனிதர்களையும் உருத் தெரியாதோர் ஊடாக உருவம் அழித்தோம் - என இறுமாப்பு கொண்டு நிற்கும் இனவாத சித்தாந்தப் பேய்களுக்கு மக்கள் தம் மனதில் இன்றும் இவர்கள் இருக்கிறார்கள் எனும் உண்மை தெரியாது போய் விட்டதே!! நீங்கள் வாழும் தெய்வங்கள்! எம் வாசல் வந்த பகையை அழித்து எமை காத்து நின்ற நடமாடும் செல்வங்கள்! கண் முன்னே தரிசித்தோம்! பகை கண்டு அஞ்சற்க எனச் சொல்லி நின்றவர்கள்! என மண் முன்னே நிற்கையிலும் மன்னவனின் மொழியினை மனதில் நிறுத்தி தாயகம் ஒன்றே கனவெனக் கொண்டு - இன்று வேரென எம்மோடு தொடரும் பெரு விருட்சங்கள் நீவிர்! கார்த்திகைப் பூவும் கதிரவன் ஒளியும் பார்த்திருக்கப் புலியானோர் சேதிகளும் உம் பாதம் தொடர்ந்தனவே! வார்த்தைகள் கொண்டு உமை எப்படிப் பாடி கவிப் பா ஆக்கிடலாம் என எண்ணினாலும் தமிழில் ஏதும் சிக்கலையே எம் தேவரீரே! நும் நினைவுகள் எம் மனக் கனவுகள்! கல்லறையை அழித்தோம் என கூப்பாடு போடுவோர் மனக் கல்லறையை திறந்து பார்க்கா இனத்துவேச மனிதர்களுக்கு இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறோம் யாம் என சேதி உரைத்து நிற்கிறீர்களே! உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும் எனும் உணர்வோடு நாமும் நடக்கிறோம்! http://www.thamilnattu.com/2011/11/blog-post_03.html
  10. எப்போதாவது ஒரு நாள் நீ வந்து போகும் தருணங்களில் உன்னைப் பக்குவப்படுத்தி கட்டி வைத்து, என்னுள்ளே திணித்துக் கொள்ள முடியாத காதலனாக நான். மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான். அவள் பற்றிய மொழிகளினை விட, அவளின் ஒவ்வோர் அசைவுகளிலும் தான் நான் என்னைப் பறி கொடுத்திருக்கிறேன். அவள் ஒரு அபிநயக்காரி. உடல் பசியெடுக்கும் நாட்டியத்தில் தன்னை உள்ளிழுத்து நர்த்தனம் புரிந்து, என் மனதை ஆட வைக்கும் ஆடலரசி. ஆரணி எனும் பெயரினைக் கேட்டாலே அவனியில் என் மனம் இருப்புக் கொள்ளாது, பூமியின் மேல் கற்பனா ஓட்டத்தில் பறந்து செல்ல வைக்கும். என் உடலின் காந்த உணர்வினைத் தூண்டக் கூடிய சக்தி மிக்க பெண் அவள். ஆரணியின் அவஸ்தைகளால் என் உடல் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆலோசனைக்காகப் பலரினை நாடினேன். எனினும் தீர்வில்லாத் தமிழர் வாழ்வு போல என் வாழ்வும் இருப்பதால் இனியும் ஆராய்ச்சி வேண்டாம் என நிறுத்தி விட்டேன். ஒரு நாள் என் வீட்டின் உள் அறையில், ’களவடாப்பட்ட பரம்பரையின் வரலாற்று நூலொன்றினைப் படித்தவாறு கண்ணயர்ந்து விட்டேன். என் அறைக்கு வெளியே என் தங்கையின் தோழிகள். ஆடியும், பாடியும், மெல்லிய குரல்களில் தம் சம கால வாழ்வின் நிகழ்வுகளை சிரித்தபடி பகிர்ந்தும், பரவசரமாய்ப் பேசியபடியும் இருந்தார்கள். அடடா...கல கலவெனச் சிரிப்பேற்றி என் ஆரணியும் அவர்களோடு பேசிச் சிரிக்கும் சத்தமும் கேட்டது. ’அவஸ்தையில் துடிக்கும் எனக்கு, என் வீட்டு வாசலுக்கு அவஸ்தையினைச் சுகமாக்கும் ஒரு அரும்பு மலர் கோலமிடும் தன் கைகளால் என் உடலில் இன்பக் கீறலிட வந்திருப்பதாக உணர்ந்தேன். மெதுவாய் அவளின் மெல்லிய விரல் ஒற்றை வரி எழுத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும் கவிதை போல என்னைத் தழுவி மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியது. கையில் ஒரு பாற் குடம் கொண்டு, மெய்யில் இரு குடம் கொண்ட மேனகையாய் என் ஆரணி என்னருகே! இடையினைக் கொடி என்று பலர் சொன்னாலும், அதன் பின்னே இதம் தரும் வீணையின் இரு குடங்கள் மெல்லிதாய் இருத்தல் தானே ஆண்களின் மனதிற்கு இளகிடச் செய்திடும் மருத்துவம் என்பதனை அவளை முதன் முதல் பார்க்கையில் உணர்ந்தேன். இடையின் மீது பிரம்மன் மெல்லிய வளைவு கொண்ட சித்திரம் வரைந்திருப்பதனால் என் உடல் அவள் இடையினைத் தாண்ட மறுத்தது. ஆனாலும் ஆரணி என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே; இடையினைத் தாண்டி, இதம் தரும் கோபுரக் கலசத்தில் பார்வை பதித்து, சங்காய் இருந்து, ஸ்வரச் சுருதி மீட்ட வைத்து அவள் அன்பில் நான் என் தலை வைக்கும் அலாரம் ஒலிக்கச் செய்யும் கழுத்தை கடந்து சென்று, கொவ்வைப் பழம் போல சிவந்திருந்து, என் கொடும் நோய்க்கு நீரூற்றி மனதில் எச்சில் மூலம் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய உறிஞ்சி மகிழும் உஷ்ணக் கருவியான வாயில் நிலை கொள்ள வேண்டும் எனும் உணர்வைத் தந்தது. ஆனாலும் என் மனம் இடையினைத் தாண்ட மறுத்தது. ‘என்ன நீரூ.... பக்கத்தில் உன் அவஸ்தைக்கு பழமாக நான் இருக்கின்றேன் - நீயோ கிறக்கத்தில் வைத்த கண் வாங்காது என் மேனியில் விழி நிறுத்தி கிளு கிளுப்பல்லவா தருகிறாய்’ இப்படிக் கவிதை கலந்து பேசுகையில் என் உள்ளம் கடலலை போன்ற இன்ப அலைகள் கலந்து வந்த அவள் பேச்சில் கனிந்து போயிருந்தது. எல்லாப் பெண்கள் மொழியும் மென்மையானது என்பதற்கப்பால், நிதானமாக, எவ்வேளையிலும் பதட்டமின்றி வார்த்தைகளை வரிசையாகப் பேசி கவிதை கலந்த பேச்சால் மயக்கக் கூடியவர்கள் பெண்கள் எனும் உண்மையினை மனதில் நிலை நிறுத்தி வைத்ததனை அவள் அன்று உடைத்தெறிந்தாள். ஏதேதோ உளறினாள். வாயில் என் எச்சில் தனை உள்ளிழுத்து வனவாசம் செய்திருந்த என் நோய்க்கு தன் உமிழ் நீர் மூலம் குளிர் நீர் பாய்ச்சினாள். ’உன்னைப் போல் ஒருவனிடம் என் வாழ்க்கையினை ஒப்படைப்பது எத்தனை இன்பம் தெரியுமா நிரூ’ என கலவிக் கவி சொன்னாள். மெல்லிதாய் சிணுங்கல்கள் செய்து, என் மேனியில் சூடேற்றி விட்டு, நான் தவிக்கும் வேளையில் அணைப்பு மருந்திட்டு அன்பைச் சொரிந்தாள். நான் அவள் இடையில் கட்டியிருந்த ஒட்டியாணம் அவிழ்த்து, உடையினைக் கழற்றத் துடித்த வேளையில் உணர்ச்சியின் மூலம் ’ஷாக்’ அடிக்க வைத்தாள். ‘இப்போதைக்கு இது போதும், முப்பாலும் என்னிடத்தே குடிக்கும் தப்பான எண்ணம் வேண்டாமே, முதலில் கழுத்தில் முடிச்சொன்று போடடா கள்வா பின்னர் என் உடலில் உயிர் குடிக்க வரம் தருகிறேன் என் காதலா’ என கவியுரைத்தாள். அவள் மேனிக்குள் நுழைவதற்குத் தயாராய் இருந்த என் கைக்கு கடிவாளம் போட்டாள். ’இதெல்லாம் அதுக்குப் பிறகு என்றாள். அடடா....என்ன இப்படித் திரி தூண்டி என் உடலை எரிய விட்டு விட்டு; என்னைத் தவிக்க வைக்கிறாளே இவள், எரியாதிருக்கும் திரிக்கு, எண்ணெய் ஊற்றி விட்டு, மேலும் எண்ணெய் வேண்டும் பொழுதில் தன்னைத் தரமால் செல்லுதல் தவறென்று உணராதவளாய் இருக்கிறாளே இவள்!! வாசலில் என் தங்கை ஷெல்லிகா என்னை அழைத்த சத்தம் கேட்டு மெதுவாய் என் அறையை விட்டு நகர்ந்தேன். வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு. வெளியே வீட்டில் அம்மா, அப்பா யாருமே இல்லை. அவளும், என் தங்கையின் தோழிகளும் நானும் தான். அவள் இடையில் ஒட்டியாணம் கட்டி வந்து என் மனதை மீண்டும் அவ் இடத்தில் ஒட்ட வைத்தாள். கண்களால் என்னை எடுத்துக் கொள்ளடா என்பது போலப் பார்வை பார்த்தாள், கண்களால் என் கண்களைத் திசை திருப்பி தன் உடலின் ஒரு குவியப் புள்ளி மீது நிலைக்கச் செய்தாள். இவ்வளவு நேரமும் நான் அவளைக் கரைத்துக் குடித்து என் தேகத் தீயைத் தணிக்க முயற்சி செய்தது எப்படி அவளுக்குத் தெரியும் எனும் ஏக்கத்தில் நான் இருந்தேன். இதற்கு அர்த்தம் கற்பிக்கும் வண்ணம், ‘வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது, உள் மனம் பேசாமல் உண்மை சொல்லாது’ எனும் பாடல் வரிகள் அப்போது தான் சந்தித்தவேளை பட இறுவட்டிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ’கண்களால் குறிப்புரைத்தாள் அவள் குறிப்பறிந்து காரியம் முடிக்க முடியாத சூழ் நிலை(க்) கைதியாய் நான்! இடையில் இன்பத் தீப்பற்ற வைத்து உயிரில் இன்பத் தேன் சிந்த வைக்கிறாயே ஏன்? ’’இப்போதே கேட்டு விட வேண்டும் போல இருந்தது ஆனாலும் இன்ப அவஸ்தையில் நெளிவதும் ஓர் இன்பம் என்பதால் வார்த்தைகளை விழுங்கி விட்டு, அடுத்து நிலை கொள்ளப் போகும் அவள் பார்வைக்காய் காத்திருந்தேன் நான்!! ‘யான் நோக்கும் காலை நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்’: திருக்குறள் 1094 இது என்னுடைய வலையில் பிரசுரமாகிய என் படைப்பின் மீள் பிரசுரம்: http://www.thamilnattu.com/2011/08/blog-post_22.html
  11. மெல்லிதாய் மேலெழும்பி நாள் தோறும் புலர்ந்து மறையும் வலையுலக நாழிகைகள் நடுவே தொலைந்து போகின்றன எங்களின் உணர்வலைகள்! நிரூபனின் நாற்று ஆண்கள் மட்டும் தான் அதிகம் எழுதலாம் என்பதும் அவர்கள் மட்டும் தான் தம் உணர்வுகளை உச்சுக் கொட்டலாம் என்று கூறுவதும் யார் இங்கு இயற்றி வைத்த சட்டமோ தெரியவில்லை! எங்களுக்குள்ளும் சாதாரண மனிதர்களைப் போன்ற மன உணர்விருக்கும், எம் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து எழுதிட இணையம் வாய்ப்புத் தந்தது- ஆனால் எம் இடையே உள்ள பச்சோந்திகளும், நரிகளும் காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்; காம சுகம் தேடும் மோகத்தில் அலைந்து காறி உமிழ நினைக்கிறார்கள்! நாளைய பெண்களின் விடுதலை நம் உளத்தில் தோன்றும் இன்றைய வாழ்வின் சிந்தனை மனதில் எழும் இன்ப உணர்வுகள் இவை யாவும் எழுதினாலும், எமக்கான பட்டம் வேசை! சமையல் குறிப்போடு சங்கதிகள் பல சொல்லின் எமக்கான பெயர் சக்களத்தி! காதலைப் பற்றி பெண் கவிதை பாடினால் அவளைப் பின் தொடர்ந்து வந்து காமத்திற்காய் சுகம் தேடி அலைந்து இம்சையை கூட்டுகின்றன இதயமற்ற நெஞ்சங்கள்! முதலில் எம்மைப் பின் தொடர்ந்து அழகிய கருத்துச் சொல்கிறார்கள் சிலர் மெதுவாய் மை பூசும் வார்த்தை பேசி எம் மின்னஞ்சல் எடுத்து அதில் அன்பெனும் களிம்பு தடவி சகோதரனாய் உறவாடி, சற்றே நாம் நிலை தளர்ந்து ஒரு பொதுவான விடயத்தை வெளியில் பதிவாக்கிச் சொல்லியதும், உனக்கும் அனுபவமோ என கேட்டு காயம் செய்கின்றன காட்டுப் பன்னிகள்! நிரூபனின் நாற்று மூன்று நாள் பதிவெழுதவில்லை எனில் உனக்கு பீரியட்ஸ் வந்தால் பதிவுலகிற்கும் பீரியட்ஸோ என பிளிறுகின்றன சிலம்போசை எழுப்பும் நயவஞ்சகப் புல்லுருவிகள்! பெண்கள் இத்தகைய வரையறைக்குள் வாழ வேண்டும் என்பதில் மட்டும் கருமமே கருத்தாய் உள்ள சீழ் கட்டிய செத்து விட்ட உக்கி உலர்ந்த மனங் கொண்ட கீழ்த் தரமான ஆண்களோ, வெளி உலகின் பார்வைக்கு முக்காடு போட்டு நடந்து, உள் உலகில் எம் மெயில் பெட்டி தேடி மின்னஞ்சல் ஊடே அந்தரங்கம் விசாரித்து அற்ப சுகம் காண்கிறார்கள்!! இன்பமெனும் வார்த்தை எம் பதிவுகளில் வந்தால் உனக்கும் அனுபவமோ என ஆளைக் கொல்லும் சுனாமியாய் பொங்குகிறார்கள்! உடலுறவு எனும் வார்த்தையை கையாண்டால் உனக்கும் விருப்பம் இருந்தால் வெளியே சொல்லென உணர்ச்சி பொங்க(ப்) பேசுகிறது இந்தச் சமூகம்! நிரூபனின் நாற்று நாம் எது எழுதினாலும் ஒரு அளவீடு கொண்டு எம் மனங்களை மட்டும் அளக்கத் துடிக்கும் ஆணாதிக்கவாதிகளால் காற்றில் பறந்து தொலைகின்றன எம் கற்பனைச் சிதறல்கள்! பெண் ஒரு வரம்பினுள் வாழ வேண்டும் என(க்) கூப்பாடு போட்டு வெளியே சமூக காவலர்களாய் நடிக்கும் சிறிய மனங்களின் நரகச் செயல்களால் நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம் எழுத்துக் கிறுக்கல்கள்! ஆணாதிக்கம் என்றால் வெளியே நல்லவர் போல் நடித்து பெண் பதிப்புக்களை நல்லவராய் விமர்சித்து பின் அவள் மெயில் பெட்டியூடே அந்தரங்கம் கிளறுவது தான் என்பது என்னைப் போல் எத்தனை அப்பாவிப் பெண்களுக்குப் புரியுமோ? எதிர்காலம் தொலைக்கப்பட்டு எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும் நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும் பெண்களின் உணர்வுகளில் எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ! ஐயகோ ஆணாதிக்கமே காலாச்சாரம் கட்டி(க்) காக்கத் துணியும் காவல் போலிசுகளே! இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கையினை சீரழித்து(ச்) சுகம் காண்பீர்!! பண்டைய நாகரிக மரபில் திளைத்து படித்து பட்டம் பெற்றும் பெண்ணுக்கான வரம்பு இது என நிர்ணயம் செய்யும் இன்றைய ஆணாதிக்கவாதிகள் இருக்கும் வரை எம் உணர்வுகள் வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!! பிற் சேர்க்கை: வலையுலகில் இந்த வருடத்தின் நடுப் பகுதியில் காலாச்சார காவலர்களால் விரட்டியடிக்கபட்டு, தற்போது, சைபர் கிரைம் வழக்கினை அக் கலாச்சாரக் காவலர்களுக்கெதிராகத் தொடுத்துச் சென்னையில் தானும் ஒரு புதுமைப் பெண் என்பதை நிரூபிக்கும் முகமாய், வலைப் பதிவு மூலமாக நண்பராகிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரபல பதிவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற, முகம் தெரியாத அந்தச் சகோதரிக்கு என் இக் கவிதை சமர்ப்பணம்! **************************************************************************** http://www.thamilnat...og-post_06.html
  12. பாம்பு !! உடைப்பெடுத்த ஆற்றைப் போல் பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன் என் முன்னே ஆடியது வரிகள் எல்லாம் அதன் தோலாக தோலெல்லாம் அதன் வரிகளாக நெளிந்து நெளிந்து சீறிக் கொண்டே ஆர்ப்பரித்தது இதிகாசங்கள் தம்மை ஏமாற்றிய தவிப்பு ஒரு கண்ணில், ஆயிரம் ஆயிரம் ஆண்டு கடந்தும் மனிதன் மீது மாறா வெஞ்சினம் அதன் மறு கண்ணில் தனக்கும் மனிசனுக்குமான தீர்க்க முடியா கணக்கை பாம்பு சொல்லியது ஒவ்வொரு வரியிலும் மனிதன் பெயர் வரும்போது வெறுப்புடன் துப்பியது பாம்பின் கால்கள் எல்லாம் நியாயம் கேட்டு வரலாறு முழுதும் நடந்து நடந்தே அழிந்து போனதாம்... அதன் காதுகள் மனிதனின் பம்மாத்து வாக்குறுதிகளால் அறுந்து விழுந்ததாம் ஏவாளுக்கு கனி கொடுத்ததெனும் பொய் பழி தீர்க்க அது ஒவ்வொரு மாதத்திலும் தோலுரித்து தவம் புரியுமாம் வருடத்துக்கு ஒரு முறை இயேசுவின் உயிர்தெழு ராத்திரியில் மண்டி இட்டு அவரின் காம இச்சைக்கான பாவத்துக்காக சிலுவை சுமக்குமாம் தேவர்களுக்காக தன்னை மத்தாக்கி கடைந்த பெருங் கள்வன் சிவனின் உடலெங்கும் இருந்த விசத்தை தன் பல்லில் தேக்கிய துயர் தீர்க்க இரவில் மட்டுமெ கலவி கொண்டு இரத்தினக் கல்லெடுத்து வழிபடுமாம் கண்கொத்தி பாம்பாய் மாறி கண்களை கொய்து சிவன் எனும் அற்பனுக்கு அபிசேகம் செய்யுமாம் நாகமென்று, சாரை என்று புடையன் என்று, கண்கொத்தி என்று கட்டு விரியன் என்று கண்ணாடி விரியன் என்று மண்ணுணி என்று கொம்பேறி மூக்கன் என்று சுருட்டை என்று பச்சை என்று ஆயிரம் பேர் சொல்லி அழைக்கினும் .... தன்னை பாவத்தின் சாபமாய் சாபத்தின் பலனாய் பலனில் வரும் துயராய் துயரில் வரும் வெறுப்பாய் ஈற்றில் வெறுப்பில் வரும் வழிபாட்டாய் மட்டுமே மனிதன் வழிபடுகின்றானாம் பல இரவு கடந்தும் தூங்காத என் இரவு ஒன்றில் வந்த பாம்பு தன் கதையை சொல்லி புலம்பிற்று **************** என் முடிவுறா இராக் காலத்தின் இறுதியில் அடிக்கடி ஒரு பாம்பு வரும் செதில் உதிர்த்து விடம் கொண்டு படம் காட்டி ஒரு பெரு நாகம் கனவில் பீறிட்டு எழும் என் கனவுகளின் மேல் ஊர்ந்து போகும் உணர்வுகளில் விடம் தடவும் நினைவுகளில் தங்கி முழு உடல் அனைத்தையும் நுனி வால் தாங்கி படம் பிடித்து ஆடும் இறுதியில் தனக்கும் மனிசனுக்கும் இடையிலான தீர்க்காத கணக்கை விடம் கொண்டு தாக்கி சொல்லிச் செல்லும் ****************** அடுத்த நாள் காலை நான் ஆலகால நஞ்சுண்டவனாய் விழித்தெழுவேன் :நிழலி: ஆகஸ்ட் 21 அதி காலை 00:25 (5 கிளாஸ் வொட்கா) இன்று வல்வை சாகராவின் கவிதையிலும் சடை விரித்த பாம்பு பற்றிய ஒரு பதிவை பார்த்த பின் "ஏன் மனிசனுக்கு பாம்பென்றால் பயம்" என நினைத்த பின் வன்த ஒரு கவிதை