கொசுக் கடியிலிருந்து தப்பிக்க உதவும் கொசு வலை, போன நுாற்றாண்டு தொழில் நுட்பம். அதில் புதிய நுட்பத்தை சேர்க்கலாம் என்கின்றனர், பிரிட்டனைச் சேர்ந்த லிவர்பூல் மருத்துவக் கல்லுாரி விஞ்ஞானிகள்.
இந்த எளிய தொழில் நுட்பத்தின் மூலம், கொசுக்களை மட்டுமல்ல, இரவில் தொந்தரவு செய்யும் பூச்சிகளையும் கொல்ல முடியும் என்பதை சோதனைகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொசு வலைகளை கொசுக்கள் எப்படி அணுகு கின்றன என்பதை, 'வீடியோ கேமரா'க்களை வைத்து, பல மணி நேரம் லிவர்பூல் விஞ்ஞானிகள ஆராய்ந்தனர். அதில் தெரிய வந்த ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? உள்ளே உறங்கும் மனிதர்களை கடிக்க, வலையின் பக்கவாட்டில் முட்டி மோதும் கொசு