பின்னிரவில் ஏகாந்தமாய் அமரும் சந்தர்ப்பங்களில், மெல்லிய விளக்கொளியில் பழைய பாடல்களை கேட்பதுண்டு.. !
வார இறுதியான நேற்றிரவு, அப்படி கேட்ட பாடல்களில் கீழ்க்கண்ட பாடல்களை ரசிக்க முடிந்தது..!
மிக்ககுறைந்த இசைக்கருவிகளோடு சிரத்தையாய் பழைய பாடல்களை இசைத்து, நம் மனக்கண் முன்னே ரசித்த அக்கால படத்தின் பிம்பங்களை நிழலாடவிட்டுள்ளனர் இந்த குழுவினர்..
** பழைய பாடல்களை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்பதிவு, பொறுமையாக ரசிக்கவும்..
"தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா..?"
"எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே மேரி மாதா...!"