Jump to content

Search the Community

Showing results for tags 'அக்கம் பக்கம்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s Test
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's சிறப்பு ஆவணம்
  • ஈழப்போரில் தமிழரால் பயன்படுத்தப்பட்டவை's ஆவணக்கட்டுகள்

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. உடற்பயிற்சியின்போது ஏற்படும் மாரடைப்பு-மரணமும் அதைத் தவிர்த்தலும் ================================ கடந்த மாத இறுதியில் நிகழ்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமன்றி ஏனைய பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதற்கு அவரது பிரபலம் மற்றும் சமூக சேவைகள் மட்டுமே காரணமல்ல. அவர் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அடையாளமாக இருந்த ஒருவர். அவர்களது நண்பர்களால் “உடற்பயிற்சி வெறியர்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒருவர். அத்தோடு 2017 இல் பெங்களூரில் உள்ள Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research Institute அறிமுகப்படுத்திய “Prevent Premature Heart Attack” initiative இன் தூதுவராக (Ambassador) ஆக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உடற்பயிற்சி செய்யும்போது அல்லது விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடும்போது ஒருவருக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஏற்படுவதும் இறப்பதுவும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 2,269 ஆண்களும் 136 பெண்களும் உடற்பயிற்சி செய்யும்போது இதய அடைப்பு (Cardiac Arrest) இனால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுள் கணிசமானவர்கள் உரியநேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைக்காது இறந்தும் போகிறார்கள். ஆனால் பிரபலங்கள் பாதிக்கப்படும்போது மட்டும் ஊடகங்களும் நாமும் பேசிவிட்டு அதனை மறந்து விடுகிறோம். அண்மைக் காலங்களில் தெற்காசிய ஆண்களில் சிலர் பாட்மிண்டன், கால்ப்பந்து போன்ற விளையாட்டுகளின்போதும் கடும் உடற் பயிற்சியின்போதும் இதய அடைப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் துரதிஸ்டவசமாக இறந்தும் போயிருக்கிறார்கள். இவ்வாறு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பலர் மாரடைப்பால் பாதிக்கப்படும் நிலையில் எங்களில் பலருக்கு உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால் உயிரோடாவது இருக்கலாமோ என்ற எண்ணம் எழக்கூடும். ஆனால், உடற்பயிற்சி செய்யும்போது ஏன் மாரடைப்பு வருகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொண்டால் எதை நாம் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்ற தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? +++++++++++++++++++++++ இப்போதெல்லாம் இள வயதிலிருந்தே பலரும் தமது உடல் ஆரோக்கியம் பேணுவதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே எமது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும், இதயநோய் எதுவுமே எம்மை அண்டாது என்று நாங்கள் நினைத்துவிடக் கூடாது. எங்கள் பரம்பரையில் (தந்தை, தாய் வழியில்) இளவயது மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், எங்களுக்கும் மாரடைப்பு வருவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளது. இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற நீரிழிவு நோய், உடற்பருமன், மனவழுத்தம் என்பனவும் எமக்கு இதயநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றன. இவை ஒருபுறம் இருக்க, வயது ஏறும்போது எமது நாடிக் குழாய்கள் படிப்படியாக தடிப்படைகின்றன. இதைவிட, எமது குருதியில் HDL எனப்படும் நல்ல கொழுப்பு குறைந்து LHL எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதும் நாடிக் குழாயில் விரைவாக அடைப்பு ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கும். இவ்வாறு இதயத்திற்கு செல்லும் முடியுரு நாடிக் குழாயின் உட்சுவர் தடிப்படைந்து பின்னர் இதயத்திற்கான இரத்த ஓட்டம் தடைப்படும்போது எங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சியும் இதயமும் +++++++++++++++++++++ அடுத்து நாம் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம். காதலின் சின்னமாக இதயத்தை நாங்கள் கருதினாலும் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் இரத்தத்தை தேவைக்கேற்ப அனுப்புவதுதான் இதயத்தின் பிரதான தொழில் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். இவ்வாறு இதயம் உடலுறுப்புகளுக்கு குருதியைச் செலுத்த இதயத் தசைகள் தொடர்ச்சியாக சுருங்கி விரிய வேண்டும். அப்போதுதான் இதயம் தொடர்ச்சியாக குருதியை நாடிக் குழாய்களூடாக தொடர்ந்து செலுத்த முடியும். அதற்கு இதயத் தசைகளுக்கு போதுமான குருதியும் ஒட்சிசனும் வழங்கப்பட வேண்டும். இந்த வேலையச் செய்பவைதான் Coronary Artery எனப்படும் முடியுரு நாடிக் குழாய்களாகும். நாம் விளையாடும்போது அல்லது கடும் உடற்பயிற்சி செய்யும்போது எமது கை, கால்களுக்கு அதிக இரத்தம், ஒட்சிசன் விநியோகம் தேவைப்படும். இதனால் இதயமும் வேகமாக விரிந்து சுருங்கி அதிக குருதியை உடலுறுப்புகளுக்கு அனுப்ப முற்படும். இங்கு நாங்கள் இதயம் தொழிற்படும் முறையில் ஒரு முக்கிய அம்சத்தையும் கவனிக்க வேண்டும். இதயம் குருதி வழங்கும் வேலையைச் செய்யும்போது அதிகமாக இயங்கும் உடலுறுப்புக்கு அதிக குருதியை செலுத்துவதற்கு இதயத் தசைகளுக்கு தேவைப்படும் குருதியானது ஒப்பீட்டளவில் குறைவாகவே கிடைக்கும். இதயவறைகள் சுருங்கி விரியும் நேரம் ஒப்பீட்டளவில் குறைய, முடியுரு நாடிக் குருதி ஓட்டம் இதய விரிதலின்போது மட்டுமே நடைபெறுவதால் சில நேரங்களில் இதயத் தசைகளுக்கு தேவையான அளவு குருதி தற்காலிகமாக கிடைக்காமல் போகலாம். நெஞ்சுவலி (Angina) ++++++++++++++++ நாம் முன்பு குறிப்பிட்டது போல இதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிக் குழாய்களின் உட்சுவர் தடிப்படைந்து குருதி செல்லும் பாதை கணிசமான அளவு சுருங்கி இருக்குமானால் (குழாயின் விட்டத்தின் அளவில் 50 -70% க்கும் அதிகமான அளவு அடைபட்டுப் போதல்) அதனூடாக வழமையைவிட குறைவான அளவு குருதியே செலுத்தப்படும். இதனால் வேகமாக இயங்க முற்படும் இதயச் தசைகளுக்கு குறிப்பிட்ட உடற்பயிற்சி நேரத்தில் போதிய ஒட்சிசனும் குருதியும் கிடைக்காமல் போய்விடும். அப்போது எமது இதயப்பகுதியில் தற்காலிக வலியேற்படும். இதனை Angina என்று மருத்துவர்கள் சொல்வார்கள். சிலவேளைகளில் சுருக்கென்று ஏற்படும் இந்த வலி இதயத்தில் இருந்து தோள்பட்டை வரை செல்லலாம். இது (Angina) இதயவறைக்குரிய முடியுரு நாடியூடான குருதி ஓட்டக் குறைவால் ஏற்படும் ஒரு தற்காலிக பாதிப்பு. ஓய்வெடுத்தால் வலி குறைந்துவிடும். இது உண்மையில் எமது Coronary Artery எனப்படும் முடியுரு நாடிக் குழாய் சுவர்கள் தடிப்படைந்து இருப்பதைக் காட்டும் எச்சரிக்கை மணியாகும். இவ்வாறு மார்பில் வலி வந்தால் அதை உதாசீனம் செய்யாது உடனடியாக மருத்துவரிடம் காட்டி அதற்குரிய சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும். மாரடைப்பு (Heart Attack) ++++++++++++++++++++ மேலே கூறியதுபோல எங்கள் உடல் அபாய எச்சரிக்கை செய்தும் நாங்கள் வலி சரியாகி விட்டதுதானே என்று உதாசீனம் செய்தால், சில மாதங்கள் செல்லும்போது இதயத் தசைகளுக்கான நாடிக் குழாயில் உட்புறம் மேலும் தடிப்படைந்து குருதி செல்லும் பாதை முற்றாகத் தடைப்படலாம். இவ்வாறு குருதி ஓட்டம் முடியுரு நாடியின் கிளைகளில் ஒன்றில் அடைப்படுமானால் அதனால் இதயவறையின் ஒருபகுதித் தசைநார்கள் இறந்து போவதுதான் மாரடைப்பு எனப்படுகிறது. இது உடற்பயிற்சியின்போது அல்லது ஏனைய நேரங்களில்கூட ஏற்படலாம். இதன்போது எமது நெஞ்சுப் பகுதியில் தாங்க முடியாத அளவும் வலியேற்படலாம். சிலநேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும். இந்த வலி நடுநெஞ்சில் ஏற்பட்டு பின்னர் மெல்ல நகர்ந்து இடது கை, தோள்பட்டை, மற்றும் முதுகுப் பகுதியிலும் பரவலாம். இதயச் செயலிழப்பு (Cardiac Arrest) +++++++++++++++++++++++++++ அதேபோல விளையாட்டில் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் ஒருவருக்கு மாரடைப்பினால் இதய மின்னியக்கத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் அல்லது பாரிய மாரடைப்பினால் குருதிச் சுற்றோட்டம் சடுதியாக முற்றாகத் தடைப்படலாம். இதையே மருத்துவர்கள் இதயச் செயலிழப்பு (Cardiac Arrest) என்று சொல்கிறார்கள். இவ்வாறு Cardiac Arrest ஏற்படுபவர்களுக்கு பொதுவாக ஒரு மாதத்திற்கு முன்னரே சில அறிகுறிகள் வ(Angina pain) தெரிய வாய்ப்பிருக்கிறது என்று வைத்திய நிபுணர்கள் சொல்கிறார்கள். நெஞ்சு வலி, மயங்கி விழுதல், இதயம் வேகமாகத் துடித்தல் போன்ற அறிகுறிகள் இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை. இவ்வாறு ஒருவருக்கு மாரடைப்போ இதயச் செயலிழப்போ ஏற்பட்டால் அவருக்கு உடனடியாக முதலுதவி (CPR) செய்வதுடன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றி விடமுடியும். இதயச் செயலிழப்பு ஏற்பட்டவருக்கு செயற்கை சுவாசத்தோடு Automated External Defibrillator (AED) யை பயன்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படலாம். பாதுகாப்பான உடற்பயிற்சி/ விளையாட்டுச் செயற்பாடுகள் ================================ உடல் உழைப்புக் குறைவடைந்தது மட்டுமில்லாமல் எமது வீட்டு வேலைகளையும் இலகுவாக செய்யப் பல உபகரணங்கள் வந்துவிட்ட சூழலில் எம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க தொடர்ச்சியான உடற்பயிற்சி அவசியமானது என்பதற்கு மறுபேச்சு இல்லை. அதேநேரம் உடற்பயிற்சியை எப்படிச் செய்வது என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது உடற்பயிற்சிக்கும் அதிக சக்தி தேவைப்படும் விளையாட்டுகளுக்கும் பொருந்தும். எங்களில் சிலர் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை விரும்புவோம். எங்களில் சிலர் பாட்மிண்டன், வேறுசிலர் கால்பந்து, மற்றும் சிலர் நீண்ட தூரம் வேகமாக நடத்தல், நீண்டதூரம் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓடுதல் என்று வேறு வேறு விடயங்களை தமது உடற்பயிற்சித் தெரிவாகத் தெரிவு செய்வார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த விளையாட்டை அல்லது உடற்பயிற்சி முறை தெரிவு செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் அதனை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமானது. தொடர்ச்சியான உடற்பயிற்சி +++++++++++++++++++++++ நாம் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது அதிக தசை அசைவுகள் தேவைப்படும் விளையாட்டுகளை தொடர்ச்சியின்றி எப்போதாவது செய்வது, (உதாரணம்: மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும்) அதுவும் நீண்ட நேரம் செய்வது உங்கள் இதயத்திற்கு ஆபத்தாகலாம். மாறாக உங்களுக்கு பொருத்தமான நேர அட்டவணைப்படி தொடர்ச்சியான முறையில் செய்தல் வேண்டும். உதாரணமாக திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் ஒரு மணிநேரம் பாட்மிண்டன் விளையாடுதல். உடற்பயிற்சியின்போது போதுமான நீராகாரம் அருந்துதல் +++++++++++++++++++++++++++++++ நாம் தொடர்ந்து கடும் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது விளையாடும்போது எமது உடலிலிருந்து அதிக நீர் இழக்கப்படும். அதை நாங்கள் மீள சரி செய்யாவிட்டால் எமது இரத்தம் செறிவு அதிகமானதாக மாறும். இதனால் உயர் குருதி அழுத்தப் பிரச்சனை ஏற்படுவதுடன் நாளடைவில் நாடிக் குழாய்களின் உட்சுவர்களில் படிந்து குருதிச் சுற்றோட்டம் தடைப்படலாம். இதனால் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படலாம். அதனால் உடற் பயிற்சியின்போது போதுமான அளவு நீர் அல்லது ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் அருந்துங்கள். உடற்பயிற்சி முடிந்தபின்னரும் நிறைய நீர் அருந்துவது நல்லது. குறுகிய நேர ஓய்வுகள் +++++++++++++++++++ உடற்பயிற்சி செய்யும்போது இடைக்கிடையே போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் இதயத் துடிப்பு மிகவும் அதிகரிக்குமாக இருந்தால் உடனடியாக ஓய்வு நிலைக்குச் சென்று இதயத்திற்கு ஓய்வு கொடுத்து இதயத்துடிப்பு சாதாரண நிலைக்கு வந்த பின்னர் மீண்டும் தொடருங்கள். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. Warm up and Cool Down +++++++++++++++++++ பாட்மிண்டன், கால்பந்து, கூடைப்பந்து போன்ற அதிக சக்தி விரயமாகும் விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடுபவர்களாக இருந்தால் கட்டாயம் முதல் பத்து நிமிடங்கள் உடலைத் தயாராக்கும் (Warm-up) பயிற்சிகளைச் செய்துவிட்டே விளையாடத் தொடங்குங்கள். அதேபோல விளையாடி முடியும்போதும் மீண்டும் பத்து நிமிடங்கள் உடலைத் தளர்வாக்கும் (Cooling Down) பயிற்சிகளைச் செய்யுங்கள். நீண்ட இடைவேளையின் பின்னர் மீள ஆரம்பித்தல் +++++++++++++++++++++++++++++++ தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்த சிலர் மருத்துவ காரணங்களுக்காகவோ கடும் குளிர்காலம் போன்ற வேறு காரணங்களுக்காகவோ நீண்ட நாட்கள் உடற்பயிற்சியை இடைநிறுத்தி இருக்கலாம் (உதாரணம் சைக்கிள் ஓடுதல்). அப்படியானவர்கள் உடற்பயிற்சியை மீள ஆரம்பிக்கும்போது கொஞ்சம் அவதானம் தேவை. எடுத்த எடுப்பிலேயே நீண்டநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடாது படிப்படியாக நேரத்தையும் பயிற்சியின் வேகத்தையும் மீள அதிகரியுங்கள். முதலுதவி பயிற்சியும் வசதிகளும் +++++++++++++++++++++++++++ நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் உறுப்பினராக இருப்பவர் என்றால் அங்கு முறையாக முதலுதவிப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் அல்லது தொண்டர்கள் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் அந்த உடற் பயிற்சிக் கூடத்தில் Automated External Defibrillator (AED) தொழிற்படு நிலையில் இருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்திருங்கள். நீங்கள் ஒரு குழுவாக இயங்குபவர் என்றால் உங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள சில உறுப்பினர்கள் முதலுதவிப் பயிற்சி (CPR) பெற்றிருப்பதும் நல்லது. எனக்குத் தெரிந்த சிலர் வேறு வேறு நாடுகளில் பாட்மிண்டன் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர்களின் நண்பர்களால் உரிய நேரத்தில் முதலுதவி கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உடற்பயிற்சி செய்வதன்மூலம் நாம் எமது இதயத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அதேநேரம் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடற்பயிற்சி செய்வதன்மூலம் எமது இதயத்தையும் பாதுகாத்து எமது நீண்ட ஆயுளையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். விசேட நன்றி: மருத்துவ துறைசார் தகவல்களைத் தந்துதவிய நண்பர் Dr. தெய்வகுமார் https://m.facebook.com/story.php?story_fbid=442587123915712&id=101881847986243&m_entstream_source=timeline&__tn__=*s*s-R https://www.facebook.com/101881847986243/posts/442587123915712/?d=n
  2. பாலியல் புகார்களும் பாரத தேசமும் +++++++++++++++++++++++++++++ இன்று சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் பாடசாலையில் கற்பித்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர்மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். விசாரணைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் இதனை பிராமணர்களுக்கு எதிரான, பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒன்றாக மாற்றுவதில் பலர் முனைப்பாக இருக்கிறார்கள். இதேபோல 2018ம் ஆண்டு இந்தியாவில் கவிஞர் வைரமுத்து உட்பட பல பிரமுகர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது கேரளா மாநிலத்தின் ONV Cultural Academy யினால் விருதுக்கு வைரமுத்து தெரிவான நிலையில்அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் பேசப்படுகிறது. இவ்வாறு பெண்கள் தம்மீது நடாத்தப்பட்ட பாலியல் தாக்குதலைத் துணிந்து பகிரங்கப்படுத்த உறுதுணையாக இருந்தது 2006 இல் அமெரிக்க கறுப்பினத்தவரான Tarana Burke என்பவர் ஆரம்பித்த Me Too movementதான். இந்த கட்டமைப்பின் #metoo hashtag 2017 இல் வைரல் ஆனதைத் தொடர்ந்து உலக அளவில் பெண்கள் தமக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிரங்கப்படுத்தத் தொடங்கினர். உண்மையில் ஒரு பாலியல் குற்றவாளிதான் இந்த கட்டமைப்புப் பிரபலமாகவும் ஏனைய பல நாடுகளிலும் இதுபோன்ற அமைப்புகள் தோன்றுவதற்கும் காரணியாக இருந்துள்ளார். Harvey Weinstein (வயது 69) என்ற ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர்தான் அவர். 2017 இல் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் நியூயோர்க்கில் வெளியாகும் முக்கியமான இரண்டு பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் இவர்மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட அடிப்படையாக அமைந்தன. இந்த விசாரணைகள் ஆரம்பித்த பின்னர், 80 க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். அவற்றுள் இரண்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 2020ல் 23 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறார். அடுத்தவர், பிரபலமான நகைச்சுவை நடிகரான Bill Cosby (வயது 83). 2005ல் இவர் மீது புகார் வந்தாலும் போதுமான நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை என வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்பு 2014ல் ஒரு நிகழ்ச்சியில் இன்னொரு நகைச்சுவை நடிகரான Hannibal Buress, Bill Cosby யின் பாலியல் நடத்தைகள் தொடர்பாக விபரித்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 60 பெண்கள் வெளிவந்து 1965ல் இருந்து 2008 வரை தங்களுக்கு நேர்ந்தவற்றை பகிர்ந்து கொண்டனர். இந்த வழக்குகள் நடைபெறும் காலத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பல விருதுகள் மீளப் பெறப்பட்டடோடு அவர் இப்போது 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். கனடாவிலும் என்ற ஒன்டாரியோ conservative கட்சியின் மாகாண முதல்வர் தேர்தலில் போட்டியிட இருந்த Patrick Brown என்ற பிரபல அரசியல்வாதி குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும் 2018 இல் போட்டியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது. அதேபோல CBC வானொலியில் பிரபல தொகுப்பாளராக இருந்த Jian Ghomeshi யும் இதே போன்ற குற்றச்சாட்டினால் தனது வேலையை இழக்க நேரிட்டது. இவ்வாறு 2017 இல் அமெரிக்காவில் சூடுபிடித்த இந்த Me Too இயக்கம் சினிமாத் துறைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், நிறுவன உயர் அதிகாரிகள், ஊடகத்துறை பிரபலங்கள் கல்லூரி பேராசிரியர்கள், ஒலிம்பிக் பயிற்சியாளர்கள் என 201 பெருந்தலைகளை வீழ்த்தியது. பலர் சிறை சென்றார்கள். எல்லாரும் பதவி இழந்தார்கள். அந்தப் பதவிகளில் 62% ஆனவை மீள நிரப்பப்பட்டுள்ள நிலையில் 44% வீதமான பதவிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் Me Too இயக்கம் சூடுபிடித்தபோது இந்தியாவிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல பெண்களும் சமூக ஊடகங்களினூடாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினர். இதில் 34 பிரபலமான பெண்கள் உட்பட பல பெண்கள் தம்மை வெவ்வேறு காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தொடர்பான பொதுவெளியில் பேச முன்வந்தனர். தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி கொடுத்த புகாரும் சமூகவலைதளத்தில் வெளிப்படையாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் அதிகம் பேசப்பட்டன. அவரைத் தொடர்ந்து வேறு பல பெண்களும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பல பெண்கள் சின்மயிக்கு ஆதரவாக நின்றபோதும் சில பிரபலமான பெண்களே சின்மயியை விமர்சித்தனர். அமெரிக்காவில் நடந்தற்கு மாறாக இந்தியாவில் ஒரு ஆண் மீது பாலியல் தொந்தரவுக் குற்றம் சுமத்தியமைக்காக, வழக்குத் தொடுத்தவரான சின்மயி தனது துறையில் இயங்க முடியாதபடி செய்யப்பட்டார். அவர் பிறந்த சாதியை அடிப்படையாகக் கொண்டு, திராவிடத் தமிழரை அவமானப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட பார்ப்பனர்களின் சதி, இதன் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது போன்ற விதத்தில் பலராலும் எதிர்பிரச்சாம் செய்யப்பட்டு பிராமணர் அல்லாத தமிழ் சமூகமும் தூண்டிவிடப்பட்டது.. வைரமுத்து மீது 2019 மார்ச் மாதம் சின்மயி வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து அதே வருடம் டிசெம்பர் மாதம், “எனக்காகக் குரல் கொடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக் கவலை?” என்று அவர் அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, சில வருடங்களுக்கு முன்னர் பிராமணரல்லாத வைரமுத்து மீது பிராமணப் பெண்ணொருவர் குற்றச்சாட்டை முன்வைத்தபோது வைரமுத்துவுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, சின்மயியை அவரின் சாதியையும், அவர் சார்ந்த துறையையும் முன்னிலைப்படுத்தி அவர் மீது சேறு பூசும் வேலையைத்தான் அதிகம் பேர் செய்தார்கள். இன்று பத்ம சேஷாத்திரி பள்ளி விடயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பிராமணர் என்பதை அடிப்படையாகக் கொண்டு மறுபக்கம் நின்றுகொண்டு பள்ளி மீது ஒட்டு மொத்தமாக பழி சுமத்துவதுவதுடன் சாதியையும் இழுக்கும் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அங்கு பலர் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவ்வாறான பாலியல் அத்துமீறல்களும் அசிங்கங்களும் பல பள்ளிக்கூடங்களிலும் தொடர்ந்து நடக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் நடக்கின்றன. இது வெளியே தெரிய வந்தது அவ்வளவுதான். களை எடுக்க வேண்டியது எல்லோரையும்தான். ஆனால் இப்படியான சம்பவங்களுக்குள் சாதி, மதம் சேர்ப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே. இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், தற்போது குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபாலன் உடனைடியாகவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். ஆனால் வைரமுத்துவோ எந்தவிதமான பிரச்சனையும் அற்ற வகையில் இயங்குவதுடன், வருடா வருடம் கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். வருடா வருடம் ஏதாவது விருது வாங்கிவிடும் வைரமுத்துவிற்கு இம்முறையும் ONV Cultural Academy யால் சிறந்த கவிஞர் விருது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவித்தல் வந்ததுமே தற்போதைய தமிழக முதல்வர் கையால் வைரமுத்து வாழ்த்தும் பெற்றார். ஆனாலும் மலையாளக் கலைஞர்கள் பலரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ONV Cultural Academy வைரமுத்துவுக்கு விருது கொடுப்பதை மீள்பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு வைரமுத்து குற்றமற்றவரா? விருதுக்குத் தகுதியானவரா? என்பதை விவாதிப்பதல்ல எனது நோக்கம். இந்தியா போன்ற நாட்டில் ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதில் உள்ள அடிப்படைத் தடைகளை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். இந்தியாவில் சட்ட ஆட்சி இருப்பது உண்மையெனில் இன்று ராஜகோபாலன் விசாரிக்கப்படுவது போலவே இதுவரை குற்றம் சாட்டப்பட்ட அனைத்துப் பிரபலங்களும் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டியவர்களும் சாட்சிகளும் மிரட்டப்படாத சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அரசின் மீதும் நீதித்துறை மீதும் நம்பிக்கை வரும். அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சட்ட நுணுக்கங்களுக்கு முகங்கொடுத்து வழக்கினைக் கையாண்டால் நியாயம் கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகம். ஆனால் இந்தியாவில் ஒரு சம்பவத்திற்குப் பூசப்படும் சாதி, கட்சி, பின்பற்றும் சமயம், மொழி எனப் பல சாயங்களைத் தாண்டியும், ஆணாதிக்கச் சமூகம், ஆணாதிக்கத்தை ஆராதிக்கும் பெண்கள் கூட்டம், அரசியல், பண செல்வாக்குகள் என்பவற்றையும் தாண்டித்தான் ஒரு பெண் நியாயத்திற்காகப் போராடும் சூழல்தான் இன்றும் இருக்கிறது. நன்றி: Rajesh Kumar - இவரது பக்கத்திலிருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன. https://www.facebook.com/101881847986243/posts/337493987758360/?d=n
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.