Search the Community

Showing results for tags 'அரசியல் தீர்வு'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • தமிழகச் செய்திகள்
  • அயலகச் செய்திகள்
  • அரசியல் அலசல்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • இலக்கியமும் இசையும்
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
  • கவிதைக் களம்
  • கதைக் களம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • சமூகவலை உலகம்
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கருவிகள் வளாகம்
  • தகவல் வலை உலகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • சுற்றமும் சூழலும்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • வாணிப உலகம்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • Newsbot - Public club's Topics
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணணி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
 • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
 • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

 • Start

  End


Last Updated

 • Start

  End


Filter by number of...

Joined

 • Start

  End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 6 results

 1. அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மூன்று பிரிவுகளாக பிரிந்து தமிழினத்தை பந்தாடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிக்கப்பட்டது. அதற்கமைய அதற்கான நகர்வுகளையும் கூட்டமைப்பு முன்னெடுத்திருந்தது. எனினும் அந்த நகர்வில் தொய்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இரண்டு கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்தபோது, அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கான செயற்பாடுகள் தொடச்சியாக முன்னெடுக்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் செயற்பாடு காரணமாக அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்டு, புதிய அரசு உருவாக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது, அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ஒருபக்கம், பிரதமர் ஒரு பக்கம், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பக்கமென மூன்று பிரிவுகளாக எமது இனத்தை பந்தாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக சிந்திக்க வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது. http://thinakkural.lk/article/32287
 2. கந்தப்பளை கோர்ட்லோஜ் முனுசாமி ஆலயம் முன்னால் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான எழுத்துமூல கோரிக்கையினை தான் முன்வைத்ததாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் கோவில் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொல்பொருள் திணைக்களம் எந்தவித அகழ்வு பணிகளையும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்து இன்று திருகோணமலை மேல் நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாரியம்மன் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரான கோகிலரமணி அம்மையாரால் திருகோணமலை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவிடப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/220838/கோர்ட்லோஜ்-முனுசாமி-ஆலயம்-முன்னால்-புத்த-விகாரை-அமைக்க-இடமில்லை
 3. சர்வதேச இராஜதந்திரிகளூடாக அரசாங்கதத்திற்கு கால அவகாசத்தினை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (21) நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆட்சியில் இருக்கக் கூடிய இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 14 பேரோடே இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நாட்டில் அரசியல் குழப்பம் வரும்போது எமது அரசியல் தலைவர்களும் சட்டத்தரணிகளும் இரவு பகலாக நீதிமன்றத்திலே போராடி தற்போதுள்ள பிரதமரின் பதிவியை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர். இந் நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது கொழும்பில் உள்ள அத்தனை இராஜதந்திரிகளையும் அழைத்து நான்கரை வருடங்களாக நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய போதிலும் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வில் இருந்து அத்தனை விடயங்களிலும் எம்மை ஏமாற்றியிருக்கின்றது. இன்னும் மூன்று மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்குப்போக இருக்கின்றார்கள். இந் நிலையில் நாங்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியாது இருக்கிறது. எனவே ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் எமது மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்காது விட்டால் நாம் எமது ஆதரவை நீக்கிக்கொள்ளவுள்ளோம் என்கின்ற செய்தியை சொல்ல வேண்டும். இந் நிலையில் அவர்களுக்கும் அடுத்த ஜனாதிபதியாக யாரைக்கொண்டு வருவது என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. அது தற்போதைய ரணிலா அல்லது மகிந்த தரப்பில் உள்ள ஒருவரை கொண்டு வருவதா என்ற நிலை அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு உள்ளது. ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மையினரின் வாக்கே தீர்மானிக்கும் சக்தியாகும். சர்வதேசமும் தமக்கு தேவையாக உள்ள தற்போதைய அரசை தக்க வைக்க வேண்டும் என்பதால் இந்த அரசாங்கத்தினை வைத்து தீர்க்க கூடிய பிரச்சினைகளை தீர்க்கும். இன்று தொல்லியல் திணைக்களம் வடக்கு, கிழக்கில் எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை இடங்களையும் சின்னங்களையும் வைத்துள்ளது. இந்த திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசிற்கு கீழ்தான் உள்ளார். இவ்வாறு இருக்கையில் இற்றைவரை இந்த அமைச்சருக்கு இவ்வாறான விடயங்களில் தலையிடுவதை நிறுத்த முடியாமல்தான் உள்ளது. ஆகவே தற்போதுள்ள ஒரு சந்தர்ப்பம் சர்வதேச இராஜதந்திரிகளை அழைத்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்தியை வழங்கி செய்ய வைக்ககூடிய விடயங்களை செயற்படுத்த வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் யார் வர வேண்டும் என்று நினைக்கின்றனரோ நாமும் அவர்களை வர வைப்போம் என்பதனை நினைவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார். http://www.thinakaran.lk/2019/07/22/உள்நாடு/37482/சர்வதேசத்தினூடாக-கால-அவகாசம்-வழங்கி-அரசுக்கு-அழுத்தம்-கொடுக்க-வேண்டும்
 4. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவரும் இதனை தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைஅரசாங்கத்தை அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரிட்டனின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/60694
 5. இரண்டு ஆண்டுகால அவகாசத்தில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேட்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இதன்போது எமது மக்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு விடயங்கள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி செயட்பாடுகள் குறித்து பிரதமருக்கு தெளிவுபடுத்தினேன் என அவர் இதன் போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60621 பிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழப்புடன் இருக்க வேண்டும் - தயாசிறி தேர்தல்கள் நெருங்குவதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று மீண்டும் அந்த மக்களின் பொய் வாக்குறுதியையே வழங்கியுள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அத்துடன் இந்த வாக்குறுதிகளுக்கு ஏமாறாமல் தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டடு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/60614
 6. தமிழ் மக்களின் வாக்குகளாலேயே நான் இத்தனை வருடகாலம் பாராளுமன்றத்திற்குத் தேர்வாகி சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான எனது கௌரவத்தை வெளிப்படுத்துவதுடன், நாமனைவரும் இன,மத பேதமின்றி ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்று சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அருண் பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகத்தினால் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலைக்கான காணி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுதலும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் அப்பாடசாலைக்கு வழங்கப்படும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/60374