Search the Community
Showing results for tags 'ஆசிரியர்களாக முஸ்லீம் காடையர்கள்'.
Found 1 result
-
மாணவியை கடத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய ஆசிரியர்களால் கிழக்கில் பதற்றம்!
போல் posted a topic in ஊர்ப் புதினம்
மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவி ஒருவரை அதேபாடசாலையில் கல்p கற்றுக்கொடுக்கும் முஸ்லீம் ஆசிரியர்கள் இருவரால் கடத்தப்பட்டு குறித்த மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க மறுத்துவரும் சம்பவம் கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் கல்விகற்கும் மாணவியான கிருஸ்னகுமார் கௌரிதேவி எனும் மாணவியை அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் இருவர் குறித்த மாணவிக்கு பலவந்தமாக குறான் கற்பித்துள்ளனர். அதன் பின்னர் 29.12.2018 அன்று பின்நேர வகுப்பிற்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவியை முஸ்லிம் ஆசிரியர்கள் இருவரும் காத்தான்குடிக்கு கூட்டிச்சென்று குறான் கற்பித்துள்ளனர் பின்னர் 03.01.2019 அன்று வீட்டில் இருந்து மாணவி காணாமல் போய் உள்ளார். மாணவி காணாமல் போன விடயம் குறித்து ஏறாவூர் பொலீசில் பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அதன் பின் மாணவி பரிதாவுடன் புகைப்படம் எடுத்து பெற்றோருக்கு அனுப்பி உள்ளார். அதன் பின்பு பெற்றோருடன் தொர்பு கொண்டு நான் குறான் படிக்கன் என்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார். தற்போது அந்த மாணவி காத்தான்குடியில் இருப்பதா அறிந்து பெற்றோர் காத்தான்குடி பொலீசில் முறையிட்டு உள்ளனர். அதன் பின்னர் நாளை (07.01.2019) காலை காத்தான்குடி பொலீஸ்நிலையம் வரும்படியும் மாணவியை பெற்றோருக்கு காட்டமுடியும் ஆனால் ஒப்படைக்க முடியாது என மாணவியை கடத்திய முஸ்லிம் ஆசிரியர்கள் சர்பாக கூறப்பட்டுள்ளதால் குறித்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை நம்பி பெற்றோர் பிள்ளைகளை பாடசாலை அனுப்பும் போது ஆசிரியர்கள் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டி கணனி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் செயற்பாடானது இலங்கை சட்டதிட்டங்களுக்கு முரணானது என்றும் இவ்வாறான ஆசிரியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். களுவண்கேனி பிரதேசத்தில் ஒரு தமிழ் ஆசிரியர் உட்பட சுமார் 6 தமிழ் மாணவிகள் இவ்வாறு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பல தமிழ் குடும்பங்களை இலக்குவைத்து இவ்வாறான மதமாற்றம் இடம்பெறுவதாகவும் இதனை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மதவாதிகள் சிலர் ஒரு செயற்றிட்டமாக செய்து வருவதுடன் மதம் மாறும் குடும்பம் ஒன்றிற்கு பத்து இலட்சம் வரை வழங்குவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது குறித்த மதம் மாற்றும் செயற்பாடுகளை பாடசாலைகளிலும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளமையானது கிழக்கு மாகாண நிர்வாகத்தில் முஸ்லீம்களின் ஆதிக்கம் எந்தவகையில் அதிகரித்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளேன தமிழ் ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/111954